Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.7

ஏய் ஷிவு  கண்டிப்பா நாம  இதை செய்து தான் ஆக வேண்டுமா…?? அளவுக்கதிகமான மிரட்சி கண்களில் தெரிய….. கொஞ்சம் அதிகமாகவே  நடுங்கிய கைகளை மற்ற இருவருக்கும் தெரியாமல் மறைக்கும்……பொருட்டு ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டிக்கொண்டு  பயத்தை வெளிக்காட்டாமல் கேட்ட நிலாவை……அது வரை தான் செய்து கொண்டிருந்த மிக முக்கியமான வேலையை விட்டுவிட்டு  இப்போது தன் பார்வையைத் திருப்பி பார்த்த ஷிவானி அவள் கேள்வியால் தனக்கு வந்த கோபத்தில் பல்லைக் கடித்தாள்……

ஏண்டி  குரங்கே  கிட்டத்தட்ட நாலு நாளா நான் சொல்லும் அனைத்து கதையையும்  கேட்டு சரி சரின்னு…… தலையை ஆட்டிவிட்டு இப்ப வந்து இதை செய்ய வேண்டுமா   ன்னு கேள்வி கேட்கிறாயே உனக்கு அறிவு இருக்கா…….

என்னதான்  வாய் நிலாவை    பல வார்த்தைகள் கொண்டு வசை பாடினாலும்  ஷிவானியின் கண்களோ…..தங்கள் முன்பு சற்று தூரத்தில் மிகப்பெரும் பிரம்மாண்டமாய்…….அவள் வசிக்கும் வீட்டை விட கிட்டத்தட்ட 30 மடங்கிற்கும் அதிகமாய்…… ஒரு அரண்மனையின்  வனப்பை பெற்றிருக்கும் அந்த இரவு நேரத்தில்கூட வானத்தின் விடிவெள்ளியாய் ஒரு தனித்துவத்தோடு ஜொலி ஜொலிக்கும்…..அந்த ஆடம்பர பங்களாவை நோட்டம் விட தவறவில்லை…….

அவளின்  கோபத்திற்கும் காரணம் இருந்தது அன்று முழுவதும்…… அவள் தாங்கள் செய்யப்போகும் காரியத்தைப் பற்றி எடுத்துக் கூறிய போது எல்லாம்….. என்னமோ  தெளிவாக புரிந்து கொண்டது போல் தலையை நான்கு திசையிலும் ஆமாடி மாறி அசைத்து சம்மதம் சொல்லி விட்டு……

இப்போது வந்து தயங்கும் நிலாவின் மண்டையில் கல்லை தூக்கி போடலாமா என்னும்  அளவிற்கு ஷிவானிக்கு கோபம் வந்தது என்றால்…….அடுத்த கேள்வியைக் கேட்ட நிஷாவின்  குரல்வளையை பிடிக்கும் ஆத்திரமும் அவளுக்கு வந்தது…..

அதுக்கில்ல டி ஷிவு  நாம இப்படி எல்லாம் செய்வதை  யாராவது பார்த்த நம்ம மூணு பேரும்   இங்க ஏதோ திருட தான் வந்திருக்கும் அப்படினு யாராவது  தப்பா நினைச்சு போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டா……. எப்போது விட்டாலும்   அங்கிருந்து ஒரு வினாடியில் ஓடி மறைந்து விடும் முனைப்போடு…… ஆனாலும் முடியாத தன் நிலையை நொந்து கொண்டே நிஷா தன் மனதில் நினைக்கும்  அதிமுக்கிய கேள்வியை எழுப்ப……

இப்போது  பேச்சோடு தலையையும் திருப்பி நிஷாவைப்…… ஆராய்தலாய்  பார்த்த ஷிவானி அப்படி மட்டும் போலீஸ் வந்தா என்னடி….??

எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே தெரியாது சார்…… இதோ இந்தப் பொண்ணு தான் எங்களை  கட்டாயப்படுத்தி வரமாட்டோம் ன்னு சொன்னவங்களை நாங்க கதறக் கதற தரதரவென இழுத்து வந்தா அப்படின்னு  சொல்லிட்டு போயிடுங்க…….ஷிவானி ஒரு ஆராயும் பார்வையோடு சொல்ல……. அவளின் பார்வையை கணக்கெடுக்க மறந்து போய்……

இது உண்மையில் சிறந்த ஐடியாவாக தோன்றிவிட அவளின் தோழிகள்  இருவரும் தங்கள்…… மூளை பகுதியில் விரல்கள் தட்டி ஷிவானியை போலீசில் மாட்டி விடுவதை பற்றி   தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்க……

அடுத்த நிமிடம் ஒரே நேரத்தில் இருவர் தலையிலும்   நச்சென்று விழுந்த கொட்டில் உச்சந்தலை அதிர……ஸ்…ஆ… என்று அலறிக்கொண்டே    திரும்பிப் பார்த்த இருவரையும் கண்டு…… சினிமா வில்லனைப் போல் பயங்கரமாக கரு விழி உருட்டி  முறைத்தாள் அவர்களின் அன்புத் தோழி ஷிவானி……

என்னடி என்ன போலீஸ் கிட்ட போட்டுக் கொடுக்க பிளான்  பண்றீங்களா ரெண்டு பேரும் கொன்னுடுவேன் ஜாக்கிரதை……அவளின் பயங்கரமான மிரட்டல் அதுவரை இருந்த பயத்தை கூட  அவர்கள் இருவரையும் வீட்டு ஓட வைக்க……

ஷிவு  நீ சாதாரணமா  சொன்னா கூட நாங்க கேட்போமோ  என்னவோ இந்த மாதிரி இன்னொரு தடவ மிரட்ட மட்டும் முயற்சி பண்ணாதடி…… பயங்கர காமெடியா இருக்கெ   குட்டி பாப்பா அவளைக் கிண்டல் செய்து சிரித்தவர்களை கண்டு அலுத்துப்போன ஷிவானி…….என்னை பார்த்தாள்   உங்க ரெண்டு பேருக்கும் கோமாளி மாதிரி தெரியுது இல்லையா….. தன் இதழ் பிதுக்கி அவள் பாவமாய் கேட்க…..

 அச்சச்சோ…!!  ஷிவு அப்படி இல்லடா  நீ எவ்ளோ பெரிய டம்மி பீஸா இருந்தாலும் உன்னோடு திக் பிரண்ட்ஸ்….. நாங்க  போய் உன்னை அப்படி நினைப்போமா…?? சொல்லு ஆறுதல் சொல்வது போலவே பேசி அவள்  காலை மீண்டும் ஒருமுறை நிஷா வாரிவிட……..அவர்களின் கேலியும் கிண்டலும் இப்போது உண்மையாகவே ஷிவானிக்கு  அழுகை வர பார்த்தது……

மூக்கை உறிஞ்சி கண்களைக் கசக்கி தன் முகத்தையே   ஷிவானி பலகோணமாக மாற்ற……அவளின் இந்த அவதாரத்தை பார்க்க முடியாமல்   வழக்கம்போல் பணிந்துதான் போயினர் தோழிகள் இருவரும்…..ஓகே ஓகே சரண்டர் என இருவரும் கைகளை தூக்கி அவளிடம் மன்னிப்பு வேண்ட…..  அவர்களின் செய்கையில் இப்போது அழுத பிள்ளை சிரித்தது…….

சரி ஷிவு இந்த ஜோக் எல்லாம் விட்டுத்தள்ளு இப்போ நான் கேட்கிறேன் அதுக்கு சரியா பதில் சொல்லணும்….. உண்மையாவே இந்த பங்களா உள்ள  போய் அன்னைக்கு உங்க அத்தை கிட்ட வம்பு செஞ்ச அந்த ஆள பாக்க தான் போறியா…..?? நிஷா தீவிரமாய் கேட்க. அதைவிட தீவிரமாய் ஆமாம் என்ற தோணியில் ஆடியது ஷிவானியின் தலை…….

ஆனால் ஏன்…?? நீ சொன்னதெல்லாம் சரிதான்  அன்னைக்கு பூர்ணிமா அத்தை கூட அவரைப் பார்த்து…….அந்த மனிதரை  நம்ம பின்தொடர்ந்து வந்து. இந்த வீட்டைக் கண்டு பிடித்ததும்……..

அத்தைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் அதைத் தெரிந்து கொள்வதற்காக  அவர் கிட்ட பேச…… நாம் முயற்சி பண்ண இந்த நாலு நாளும் அவரை பாக்க முடியல ஓகே………

ஆனா அதுக்காக  நாம இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து இந்த ராத்திரி நேரத்தில   இதை செய்து தான் ஆகனுமா……நீ செய்யப் போவது எத்தனை முட்டாள்தனமான காரியம் என்பதை தயவுசெய்து  புரிந்து கொள்ளேன் என்ற மன்றாடல் நிஷாவின் குரலில் இருந்ததோ……???

தன் தோழியின் அக்கறையும் அன்பும் புரிந்தாலும்  பூர்ணிமா மீதான கண்மூடித்தனமான அன்பு அவள் மூளையை முழுதாய் மழுங்கச் செய்து இருக்க  தான் எடுத்த முடிவு தான் சரி என்று நினைத்தவளின் பதிலும் விளக்கமும் வேறு மாதிரி இருந்தது…….

புத்தி நிலை மாறும்போது வாழ்க்கையும் தடம் மாறி விடுகிறது…..சில நிமிட பிசகு நாம் அதற்குக் கொடுக்கும் விலையோ மிக அதிகம்……

நிஷூ நீ சொல்றது ரொம்பவே சரிதான் நாம அந்த ஆள் வெளியே வரும்போது….. அதற்காக பல நாட்கள் காத்திருந்து அவரை   பார்த்து பேசலாம்……ஆனால் இந்த நான்கு நாட்களுக்கு உள்ளாகவே அத்தை கிட்ட ரொம்பவே மாற்றம் ராத்திரியெல்லாம் யார் கூடவோ  போன்ல சண்டை போடுறாங்க…….

அப்புறம் தூங்குவதே இல்லை  இதுல அடிக்கடி அழுகை வேற அவங்க படுற இவ்வளவு கஷ்டத்தையும் பார்த்துக்கிட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும் சொல்லு…….எனக்கு இந்த உலகத்தில் இருக்க ஒரே சொந்தம் அவங்க மட்டும் தான்…..

இன்னைக்கு நான் அந்த ஆளை  பார்த்து பேசி ஆகணும்……. அவங்க  தனி மனுஷி இல்ல நான் எப்பவும் பக்கபலமா அவங்க கூட இருக்கேன்னு அந்த ஆளுக்கு புரிய வைக்கணும்……

ஆனா இது எல்லாம் என்னோட தனிப்பட்ட பிரச்சனை…..இதுல நான்  உங்க ரெண்டு பேரையும் மாட்டி விட முயற்சி செய்வது பெரிய தப்பு…..

எனக்கு புரியுது நிஷு….. நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க நான் இதை தனியாகவே சமாளித்துக் கொள்வேன்…… ஒரு வார்த்தையில்  தங்களை அன்னிய படுத்திவிட்ட தோழியை முறைத்துப் பார்த்த நிஷாவும் நிலாவும்…..

போடி பைத்தியம் முட்டாள் மாதிரி பேசுற பாத்தியா….. உன்னை தனியா எப்படியோ போ என்று  விடுவதற்காக நாங்கள் உன் கூடவே எந்த நேரமும் இருக்கோம்……அவள் தோளைப் பிடித்து உலுக்கி கேட்டவர்கள்….

சரி இது தான் உன்னுடைய முடிவு என்றால் கிளம்பு……இன்னைக்கு அந்த மனுஷனை ஒரு வழி செய்யாம விடக்கூடாது….. பூர்ணிமா அத்தைக்கு துணையா நீ மட்டும் இல்லை நாங்களும் இருக்கோம் என்று அவருக்கு காட்டுவோம்…… நீ தப்பே செய்தாலும்  நாங்க எப்பவும் உன் கூடவே இருப்போம்…….

உறுதியாய் சொன்ன அவர்கள் இருவரையும் தன்னோடு…… சேர்த்து அணைத்துக் கொண்ட  ஷிவானிக்கு மனதில் எப்போதும் தோன்றும் எண்ணம் அப்போதும் தோன்றியது……

தன் என்றைக்கும் தனித்து இல்லை  என்னதான் அநியாயமாக அவளின் பெற்றோரை அவளிடம்  இருந்து அந்த இறைவன்…. பறித்துக் கொண்டாலும்…..

அதற்கு பதிலாய் அன்பின் பிரவாகமாய் பல சொந்தங்களை தனக்கு வழங்கி இருக்கிறான்……மனதிற்குள் நினைத்தவள் மானசீகமாய் இறைவனுக்கு தன் நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவித்தாள்………

அங்கே நட்பின் இலக்கணமாய் ஒன்றுபட்ட  தோழிகள் மூவருக்கும் தெரியாது…..இதன் பிறகு அவர்கள்….. இணைந்து  ஒன்றாய் சிரிக்கும் நாள் என்ற ஒன்று இனி இல்லை என்று…….

தங்கள் வாழ்க்கையில் துன்பம் நிறைந்த காலகட்டத்தில்…..அடி எடுத்து  வைக்கப் போகிறோம் என்பதை அறியாமல் மூவரும் அந்த மாளிகைக்குள் தங்களின் வலது கால் வைத்து  நுழைந்தனர்…….இனி விதியின் சுவாரஸ்யமான விளையாட்டு ஆரம்பம்……

***********************************

நடப்பது கனவா நினைவா என்று ஒன்றும் புரியாத ஒரு மோசமான……. மந்த நிலையில் நிலாவும் நிஷாவும் தங்களின் 4 கண்களையும் மீண்டும் மீண்டும் கசக்கி கொண்டு உத்து உத்து பார்த்தாலும் அவர்கள் காணும் காட்சி மாறுவதாகவோ மறைவதாகவோ  இல்லை……

எப்படி, எப்படி….. இப்படி நடக்கும் அதுவும் தங்களின் இணைப்பிரியா….. ஆருயிர்த்  தோழியின் பிள்ளை குணமும் நல்ல மனதும்…… இத்தனை வித்தியாசப்பட்டு போகுமா…?? அதுவும்  இவ்வளவு குறுகிய காலத்தில் நிகழும் என்று இதற்கு முன்பு யாரேனும்….. சொல்லியிருந்தால் கூட அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள்……

ஆனால் அனைத்தும் தங்களின் கண்முன்னால் காட்சிகளாய் நடந்தேறும் போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே……குழம்பிய குட்டையாய் நடக்கும் நிகழ்வின்  நம்பக தன்மையை புரிந்து கொள்ள முயன்ற அவர்கள் இருவரின் அருகில் மூன்றாவதாய் யாரோ நிற்பதாய் தோன்ற……

திரும்பிப் பார்த்து அவர்களின் அருகில் நின்று அவர்களைப் போலவே….. பல்வேறு நம்ப முடியா உணர்வுகளை கண்களில் பிரதிபலித்தபடி…… எதிரில் பார்த்து நின்றிருந்தவன் யுகேந்தர்……

இப்போது மூவரின் கண்களும் ஒரே கோட்டில் சந்தித்துக் கொண்டது……. அவன் கண்களின்  கேள்விக்கு இருவரும் தங்களுக்கும் தெரியவில்லை என்று இடவலமாய் தலையசைக்க……..

அப்படி என்னதான் நடந்து விட்டது…..??!!!  அதற்கு பதில் அவர்கள் எதிரில் காணக்கிடைத்த காட்சியில் இருந்தது…..

அங்கே சமீபத்தில் அந்தக் கல்லூரியின் சூழலையே…..முற்றிலுமாய் மாற்றிவிட்ட . எப்போதும் கூச்சல் கும்மாளம் சந்தோஷ ஆர்ப்பரிப்பு என்று…… சுற்றும் புதிதாய் வந்த அந்த திமிர் பிடித்த பணக்கார கும்பல் என்று பலரால்…… அன்போடு அழைக்கப்படும் அந்த  படையின் ஐவர் கொண்ட குழுவில் முதன்மையானவனும்……

திமிரின்  மொத்த உருவமுமான ஆரியனின் கை வளைவில்….. அவன்  தேக்கு மர தேகத்தின் மீது சுற்றிய தளிர் கொடியாய்  அவன் பலம் பொருந்திய கைகளின் பிடிமானத்தில் வேகு பாந்தமாய் பொருந்தி  அமைதியாய் நடந்து வந்தாள் ஷிவானி……

காண்பவர் கண்களுக்கு நல்ல காதல் காட்சியாய் தோன்றிய…. அந்த மாயையை உடைக்கும் விதமாய்  அவளின் கண்கள் மட்டும் சொல்லான துயரத்தோடு கலங்கி இருந்ததை….. பாவம் சரியாய் கண்டு கொள்பவர்கள் தான் அங்கு யாரும் இல்லை……

                            சின்ரெல்லா வருவாள்……..

Advertisement