Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.4

நேரம் இரவு 12 மணியை தொட்டிருக்க அந்த அழகிய சிறு வீட்டின்‌…..மாடி அறையில் தன் படுக்கையில் வெகு  அமைதி போல் படுத்திருந்த ஷிவானியின் மூளையோ அவளின் புற அமைதிக்கு….. முற்றிலும் . எதிராக அதீத உஷ்ணத்தில் நெருப்பிலிட்ட சுடுநீராய் கொதித்துக் கொண்டிருக்க……உள்ளமோ

எண்ணிலடங்கா கேள்விகளும் அதற்கு ஒன்றிற்குக் கூட விடைகாண முடியாத தன்  கையாலாகாத நிலையும் அவளை மிகவும் சோர்வுறச் செய்ய…….. இன்றைய நாள் தன் வாழ்வில் மிகவும் மோசமான ஒன்று என

ஷிவானி   நினைத்துக்கொண்டாள் . ஒரு வகையில் அது உண்மையும் கூட…….

என்ன தான்   அழகான விடியல் போல் அன்றைய நாள் தெரிந்தாலும்  அடுக்கடுக்காய் இன்று அவளுக்கு தான் எத்தனை அதிர்ச்சிகளும் கஷ்டங்களும்…… இந்த நினைவு தோன்றியவுடன்…… அதற்கு மேல் படுக்கையில் கிடக்க முடியாமல் எழுந்து அமர்ந்தவளின் காலில் சுரீரென்று ஏற்பட்ட வலியில்….. ஒரு நொடி துடித்துப் போனவள்…..தன் பாதத்தை முழுவதுமாய் மறைத்து கட்டப்பட்டு இருந்த அந்தத் துணி சுருளை  மென்மையாய் வருடிவிட்டு தன் வலியை போக்க முயன்றாள்……..

கைகள் அதன் வழியில் தானாய்  செயல்பட மனமோ மீண்டும் ஒரு முறை அவள் மனதின்  கட்டுப்பாட்டையும் மீறி……அந்த நாளின் மிக மோசமாய் அமைந்த .  அவளின் அந்தி பொழுதில்…… நடந்த நிகழ்வை காட்சிப்படுத்திப் பார்க்க ஆரம்பித்தது…….

ஏற்கனவே மதியம் தனக்கு ஏற்பட்ட பெரும் திகில் அனுபவத்தில் மிகுந்த குழப்பத்தில் இருந்த ஷிவானி…….. தங்களின்  தேனீர் விடுதி அமைந்திருக்கும் தெருவின் அடுத்த வீதியில் அவள் அத்தை பூர்ணிமாவை அதுவும் கண்களில் கண்ணீரோடு   கண்டது பெரும் அதிர்ச்சி என்றால்……. அவர் கையைப் பிடித்து இழுத்தபடி ஷிவானி யால் அந்த ஆடவனின் முகம் காண முடியவில்லை என்றாலும்…….

அவனின் நடவடிக்கைகளே சொன்னது பூர்ணிமாவை அவன் எதற்கோ  கட்டாயப்படுத்த முயல்கிறான் என்று……. கிட்டத்தட்ட அவரை இழுத்து அங்கு நின்றிருந்த காரின் உள்ளே  தள்ள அவன் முயன்றதை……. அனுமானித்தவளுக்கு அங்கமெல்லாம் தீப்பற்றியது போல் ஒரு எரிச்சல் சடுதியில் தோன்றி உடலெங்கும்  பரவ…….

அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் எங்கோ ஓடி மறைய‌‌…..‌அவளும் வீதியில் ஓடிக்கொண்டிருந்தாள்  தன் அத்தை பூர்ணிமாவை எவனோ ஒரு கயவனிடம் இருந்து காக்கும் பொருட்டு…வேகமாய் செயல்பட்டவள்……சட்டென்று நின்றாள்…..‌

ஏதோ ஒன்று அவளின் பின்னால் புயலின்  வேகத்தில்….. பெரும் இரைச்சலோடு தன்னை நெருங்கி வருவது போல்  உள்ளுணர்வு உண்டாக…… அதில் அனிச்சை செயலாய் திரும்பிப் பார்த்தவளின்  கண்கள் தன் முழு விட்டு தீர்க்கும்……அகலமாய் விரிய‌ சுவாசம் தடைப்பட….. கண்கள்  கண்ட காட்சியில் விளைவாய் தோன்றிய பெரும் பீதியில் சில நொடி ஸ்தம்பித்து நின்று விட்டாள் ஷிவானி……

அங்கே…சரியாக அவளுக்கு  நேரெதிர் புறமாய்….. அசுர தனமாய்  சுற்றி அடிக்கும் சூறாவளியை போல் நொடிக்கு நொடி அதிகரித்த  வேகத்தோடு….. இடித்து தள்ளினால்…??!! 100 அடிக்கும் அதிகமான தூரத்திற்கு அவளை    தூக்கி எறிந்து விட்டு என்கிற உறுதியோடு அந்தக் கார்…… தன்னை நோக்கி வருவதை அழுத்தம் திருத்தமாய் அவள் புத்தி எடுத்துரைக்க…..

இனி வரும்  நிமிடத்தில் தன் உயிர் தன்னிடம் இருக்கப்போவது இல்லை…..என்கிற  நிலை சந்தேகத்திற்கு இடமற்று ஷிவானி க்கு புரிந்து விட……..

மிதமிஞ்சிய பயந்தால் உண்டான பொம்மை   நிலையில்…… அசையக் கூட தோன்றாமல் ஷிவானி   பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவளை சமீபித்த  அந்த வாகனம் நொடி நேரத்தில்…….. அவளை உரசும் அளவிற்கு நெருங்கி  பின்பு பக்கவாட்டில் கடந்து செல்ல…….

அப்படி அந்தக் கார் அவளைத் தாண்டி சென்றும்  கூட….. அதன் அரக்கத்தனமான வேகத்தால்…. நிலையாக  நிற்க முடியாமல் தடுமாறி தள்ளிப் போய் தரையில் விழுந்த ஷிவானிக்கு….. தான்  உயிரோடு இருக்கிறோம் என்பதையே நம்ப சில நிமிட நேரம் தேவைப்பட்டது……படபடவென்று பயத்தோடு  நிமிடத்திற்கு நூறு முறை துடித்த இதயத்தில்…… இரண்டு கைகளையும் வைத்து அழுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றும்  முடியாமல் துவண்டு போனவளின் உள்ளத்தில்……..

நிச்சயம் ஒரு மனிதனால் இத்தனை வேகத்தில் தான்  செலுத்தும் வாகனத்தை வினாடியில் அதுவும் இத்தனை நேர்த்தியாக  திசை மாற்ற முடியுமா…??!! என்ற கேள்வி தன்னிச்சையாய் அவளுள்  எழுந்தது……. உள்ளத்தில் குளிர் பரப்ப…… தான் விழுந்த இடத்தில் அசைவின்றி  விழுந்தபடியே கிடந்தாள் ஷிவானி ………

அந்தத் தெருவில் அக்கம் பக்கம் இருந்த ஓரிருவர் நிமிடங்களில் நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ந்து  பின்பு சுதாரித்து…… அப்போதுதான் அவள் அருகில் வந்து அவளுக்கு உதவி செய்ய…… அவர்களின் கை பிடித்து மெதுவாய் எழுந்து நிற்க  முயன்றவளின் பாதத்தில்……

உயிரையே சுண்டி விட்டது போல்  ஒரு தாளமுடியாத வலி ஊடுருவி அவளை  துடிக்கச் செய்ய……ஸ்..அம்…மா…. என்று கத்தியபடி  ஷிவானி மறுபடியும் தரையில் அமர்ந்து விட…..

அச்சச்சோ என்னம்மா கால்களை   அசைக்க முடியலையா….. என்று பரிவோடு கேட்ட அந்தப் பெண்மணிக்கு வலியால் தோன்றிய  கண்ணீர் விழிகளோடு ஆம் என்று பதில் அளித்த ஷிவானியை…….. அடுத்து வந்த நேரங்களில் அங்கு அருகில் இருந்த மருத்துவமனையில் அவர்  அனுமதிக்க…….

அவள் பயந்தது போல் எலும்பு முறிவு  என்று அவளை கலவரப்படுத்தாமல்…… தசை மோசமாய் பிசகி கொண்டது என்று கூறிவிட்டு அவளுக்கு சிகிச்சையை ஆரம்பிக்க……..

வலி அதிகமாக இருந்தாலும் காலில் அதிக பாதிப்பு இல்லை என்பதால்…… ஷிவானியின் மனது சற்று அமைதி பட.  அதுவரை அவள் மறந்திருந்த‌‌…..பூர்ணிமாவை பற்றிய நினைவு இப்போது தோன்றியது……. அதே தெருவில் நின்றிருந்த  அத்தைக்கு அந்தக் கார்……..தன்னை இடிக்க வந்ததும் அவளின் அலறல் சத்தமும் நிச்சயம் கேட்டிருக்கும் என்கிறபோது……..

அன்னைக்கு நிகரான தன்னலமற்ற அன்பை அவள் மீது கொண்ட பூர்ணிமா ஏன்…  தன்னை காக்க வரவில்லை…??!! என்று பெரும் வினா பூதாகாரமாக தோன்றி அவளை கலவரப்படுத்த……. அதுவரை லைப்ரரியில் நடந்த அந்த நிகழ்வோ  அவளை சாகடிக்கும் முடிவோடு வந்த அந்த வாகனமுமோ கூட உண்டாக்க முடியாத….. மிகக் கோரமான மனக்காயத்தை அத்தை பூர்ணிமா தனக்காக வரவில்லை என்கிற நினைவு ஒன்றே அவளுக்கு கொடுத்துவிட…..

கலங்கிப் போய் தவித்து நின்றாள்  தன் அத்தை பூர்ணிமாவை தவிர வேறு எந்த உறவுகளோ  சொந்தங்களோ இல்லாத அவரன்றி ஒன்றும் அறியாத அந்த சிறு பெண்……..

ஷிவானி… அம்மாடி  என்ன ஆச்சு உனக்கு..??!! ஆட்டோவில் இருந்து காலில் போட்டிருக்கும் கட்டோடு இறங்கிய…. அண்ணன் மகளை கண்ட நொடியில்…!!  பதறிப் போய் தன் அருகில் வந்த பூர்ணிமாவை.‌……இப்போது தன்னைப் பார்த்து இப்படி துடிக்கும் அவளின் அத்தையா……சிறிது நேரத்திற்கு முன்பு நடுவீதியில் தன் காயம்பட்டு விழுந்திருந்தபோதும்…. தன்னை கண்டுகொள்ளாமல் விட்டு  சென்று இருப்பார்கள்………

நிச்சயம் இருக்காது…….. அவரைக் காணும் நொடி வரை எதை எதையோ யோசித்து அலைச்சல் உற்ற  மனம் இப்போது அமைதி என்னும் ஆழ் கடலில் மிதக்க…. தன் பார்வையை மொத்தமும் அவர் முகத்தில் பதித்து பார்த்திருந்தாள்  ஷிவானி…..

விழி  எடுக்காமல் கூர்ந்த பார்வையால் தன்னை  அளக்கும் ஷிவானியின் எண்ண ஓட்டத்தை உணராமல்….. அல்லது அந்த நேரத்தில் உணர்ந்துகொள்ளும் பொறுமையின்றி…….

என்ன ஆச்சுடா…??  எப்படி விழுந்த..??  என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்ட படி ஷிவானியின்  வலது காலை எடுத்து தன் மடியில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த…… பூர்ணிமா அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக……. இப்போது  தானே தலை நிமிர்ந்து சிறியவளின் கண்களுக்குள் தன் ஆழ்ந்த பார்வையை செலுத்த……‌‌

அங்கே  இதுவரை ஒருமுறை கூட ,  தன் குட்டி இளவரசியின் கண்களில் அவர் கண்டிடாத   கலவையான, மிகவும் கனமான உணர்வுகளை கண்டு…… குழம்பிப்போய்  ஷிவானியையே சில நிமிடங்கள் பார்த்திருந்தவர்….. என்ன நினைத்தாரோ…??  அல்லது இனிவரும் காலத்தில் அவல நிலை அவரின் உள்ளுணர்வுக்கு புரிந்ததோ…..??!!…….

 சட்டென்று எழுந்து ஒரு வேகத்தோடு   அவரின் பிரியமான மருமகளை……. தன் மார்போடு  சேர்த்து அணைத்துக் கொண்டவர் அவளின் பட்டான கூந்தலை மென்மையாக கோதி விட்டு.  தனக்கே தெரியாத ஷிவானியின் மனக் குழப்பம் தீர………தன்னால் முடிந்த ஆறுதலை அளிக்க……ஏனென்றே  தெரியாமல் அந்த நிமிடம் தன் உள்ளத்தில் தோன்றிய வார்த்தைகளை சற்றும் மாறாமல் அவர் உதடுகள் தானாக உச்சரித்தது…….

ஷிவானி  மா வேணாண்டா எதைப்பற்றியும் அதிகம் யோசிக்காதே….. இந்த உலகத்தில் எந்த துன்பமானாலும்   அது யாரால் தோன்றினாலும்……. எந்த நிலையிலும் அந்தத் துன்பம் என்னை தாண்டி உன்னை அடைவதற்கு  நான் ஒருபோதும் விடமாட்டேன் கண்ணம்மா…….

தன் நெஞ்சில் புதைந்திருந்த மருமகளின்   முகத்தை பற்றி அவள் விழிகளை ஊடுருவி பார்த்தபடி…….  பூர்ணிமா இதைக் கூற தன்னலமற்ற இவ்வுலகில் எவராலுமே ஈடு செய்ய முடியா அவர் அன்பில் நெகிழ்ந்து போய் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் மறந்து போக…….அது எனக்குத் தெரியும் என் விதமாய் தலையசைத்த ஷிவானி இப்போது மீண்டும் பூர்ணிமாவை தானும் அணைத்துக் கொள்ள…….

அந்த அன்பான இரு பெண்களின் அழகிய பாச நிகழ்வை…… அங்கிருந்த ஒரு சில பிரமித்துப் போய் புன்னகையோடு  பார்க்க….. ஆனால் அவர்களை விட்டு சற்றுத் தொலைவில்… சிறிது நேரத்திற்கு முன்பு ஷிவானியை இடிக்க முயன்ற அந்த வாகனம் நின்றிருக்க….. அதன் உள்ளே அமர்ந்திருந்த……. அந்த அவனின் கண்களோ அந்தப் பாச காட்சியை முற்றிலும் வெறுக்கும் .  அதைவிட மோசமாக ஒரு அருவருக்கத்தக்க பாவனையை சிந்தியது……

உன்னை நேசிக்கும்,  உனக்காக எதையும் செய்யும் ,  உன்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் ,  உன் அன்பான அழகான , உனக்கு சொந்தமில்லா  உறவுகளை உன்னை விட்டு மொத்தமாய். பிரித்து உன்னை என் காலடி மண்ணாய்  நான் மிதிக்க வில்லை என்றால் நான்………..இல்லையடி பெண்ணே

கவர்ச்சியான மீசைக்கு  அடியில் பதுங்கியிருந்த வடிவான அவனின்  உதடுகள் ஆவேசத்தோடு சூளுரைத்த வார்த்தை எரிமலையின் கொதி  அமிலமாய் வெளிவந்தது………

அதன் பிறகு மிகுந்த ஜாக்கிரதையோடு ஷிவானியை  வீட்டிற்கு அழைத்து வந்த பூர்ணிமா…….. அவளுக்கு   தானே உணவு ஊட்டி உடை மாற்ற உதவி செய்து…… அவள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை கொடுத்து……. படுக்கையில் அமர வைத்தவர்   ஒரு பரிவான புன்னகையோடு நெற்றியில் முத்தமிட்டு விலகி செல்ல…….

அவர் சென்று  கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலே…… கடந்தும்  ஒரு பொட்டு கூட கண்களை மூட முடியாமல் அடுக்கடுக்காய் பல நினைவுகள் வந்து அலைக்கழிக்க கட்டிலில் எழுந்து  அமர்ந்திருந்த ஷிவானியின் நெஞ்சுக்குள்….. ஏனோ இன்று முழுவதும் தனக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ  ஒரு சங்கிலித் தொடரான…… ஒற்றுமை இருப்பது போல் மிக உறுதியாய் தோன்றியது…….. அத்தோடு வெகு நிச்சயமாய் பூர்ணிமா அவளிடம் இருந்து ஏதோ ஒரு தீவிர ரகசியத்தை மறைக்க முயலும் உண்மையும்……..

இருக்கட்டும் இருக்கட்டும்….எப்படியும் நேற்று நடந்த நிகழ்வின்  அனைத்து உண்மைகளையும்‌……அத்தை என்னிடமிருந்து மறைக்கும் ரகசியத்தையும்  நான் கண்டுபிடித்தே தீருவேன் என்கிற உறுதியோடு மருந்தின் வீரியத்தில்…… உறங்க ஆரம்பித்த ஷிவானி ஒன்றை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள்……..

இனி வரும் நாட்களில் அவள் படப்போகும் இன்னல்களும் ,  அனுபவிக்கப்போகும் துன்பங்களும்…… இன்றைய நாளின் அதிர்ச்சியை   ஒன்றுமில்லாமல் செய்து விடும் என்கிற மோசமான உண்மையை…….. அறியாத அறியாமையோடு உறங்கும்…..

அவளைப் பார்த்திருந்த  காலத்திற்கு மட்டுமே தெரிந்தது…… இதுதான் அந்த சிறு பெண்   நிம்மதியாக உறங்கும் கடைசி இரவு என்று…….

                            சின்ரெல்லா வருவாள்………..

Advertisement