Advertisement

ஒ….!!!!  மை சின்ரெல்லா – அத்தியாயம்.3

காலையில்  நேரம் கடந்து தூங்கி விட்டு பிறகு பதறி அடித்து  அரக்கப் பரக்க எழுந்து தயாராகி டைனிங் ஹாலுக்கு….. வந்த ஷிவானி அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த… பூர்ணிமாவை கண்டு  குட் மார்னிங் அத்தை மா……. ஒரு புன்னகையோடு கூடிய காலை வணக்கத்தை தெரிவித்து விட்டு அவர் எதிரில் அமர……

குட் மார்னிங் டா   தானும் பதில் வணக்கம் சொன்னவர்……. அவள் அவசரம் அவசரம் என்று புலம்ப   காலை உணவை மருமகளுக்கு உண்ண கொடுத்தவாறே…….. நான் தினமும் உனக்கு சொல்லி பார்த்து விட்டேன் நீ கேட்பது போல் தெரியவில்லை…. தினமும்  காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால்…? இந்த மாதிரி நின்றுகொண்டே திணறியபடி சாப்பிட்டு விட்டு கிளம்பும் அவசரம் வராது இல்லையா….?……   

காலை உணவை  ஒழுங்கா சாப்பிடாவிட்டால்  உடம்புக்கு எப்படி சக்தி கிடைக்கும் ஷிவானி……. எப்போதும் போல் செல்லமாக அவர்  அவளை அதட்ட….. ஓகே அத்தை மா இனிமே அஞ்சு மணிக்கெல்லாம் உங்க ஷிவானி எழுந்து உங்களுக்கு காபி கொடுப்பாள்  பாருங்க…… தோசையை பித்து வாய் முழுக்க அடைத்துக்கொண்டே ஷிவானி ஜம்பமாக ஒரு அறிக்கையை வெளியிட…….

போதும் போதும் இதுவரை  காலையில் நீ எடுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சபதங்களை நான் கேட்டு விட்டேன்….. அதனால இப்படி சாப்பிடும் போது பேசாமல் ஒழுங்கா சாப்பிட்டுட்டு காலேஜுக்கு கிளம்பு….. அவள் தலையில் செல்லமாக ஒரு அடி வைத்து சொன்னவர்….. மதியத்திற்கு மேல் தான் அவர்களின் கடை ஆரம்பிக்கும் என்பதனால் ஆசுவாசமாக அமர்ந்து அன்றைய நாளிதழை படிக்க ஆரம்பித்தார்…….

பூர்ணிமா சொன்னதை மறுக்க  மனமற்று உணவை அமர்ந்து அமைதியாக சாப்பிட  ஆரம்பித்தவளுக்கு….. நேற்று சிவகாமி சொன்னது சட்டென்று  முலையில் உதயமாக அப்படி என்ன விஷயமாக இருக்கும்..? அதுவும் அத்தையை பத்தி  அவங்களுக்கு ஏதாவது தீர்க்க முடியாத பிரச்சனையோ..?…….

பூர்ணிமாவுக்கு  ஒன்று என தோன்றியவுடன் உள்ளத்தில் உண்டான கலக்கத்தோடு….. ஷிவானி இப்போது தன் எதிரில் அமர்ந்திருந்த  அத்தையை ஓரக்கண்ணால் பார்க்க……

பூர்ணிமாவோ  அவள் சந்தேகம் சரிதான்  என்பதுபோல் தன்….. கையிலிருந்த நாளிதழை தவறவிட்டு  கவனத்தை வேறு எங்கோ பதித்து…… ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்……. அவரின் வெறித்த  தோற்றமும் கவலையான முகமும் ஷிவானியை கலவரப்படுத்த……

கடவுளே என்னோட  அத்தைக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது….. அப்படி ஏதாவது ஒரு துன்பம்  என்றால் அதை எனக்குக் கொடுத்துடுங்க அவங்கள எப்பவும்……. சந்தோஷமா வைச்சுக்கோங்க ப்ளீஸ் கடவுளே……சிறு குழந்தை போல் ஒரு வேண்டுதலை உடனடியாக  அந்த கடவுளுக்கு வைத்தவள்…..அறிந்திருக்க மாட்டாள்…… அவள் அன்புக்குரிய அத்தையின் வருத்தத்திற்கு காரணமே தான்தான் என்பதை……

அன்று கல்லூரிக்குள் நுழைய விசித்திரமான வகையில் சிறிது சந்தோஷமாகவும் பெருமளவு  பயமாகவும் ஒரு கலவையான உணர்வோடு ஷிவானி தயங்கி நிற்க…… வாசலில் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நிற்கும் தங்கள் தோழியை கண்ட நண்பிகள்  அவள் அருகில் வந்து…. ஹாய் ஷிவு இங்கே என்ன பண்ணிட்டு இருக்க உள்ளே வரவில்லை…? கேள்வியாக நிறுத்த….. அவர்கள் இருவரையும் பரிதாபமாகப் பார்த்தவள் அந்த லெட்டரை  நினைத்தால் பயமா இருக்குடி….. என்று தன் கவலையை வெளியிட…..

ஓ…ஹோ….ஷிவு நேற்று நடந்த விஷயம்  அது . சாதாரண ஒரு பேப்பர் காக இவ்வளவு யோசிக்க வேண்டாம்…. புரியுதா அது நிச்சயமா யாருடைய கையிலும்  கிடைச்சிருக்காது….. அதை பற்றி டோட்டலா மறந்துட்டு…… யுகேந்திரன் கிட்ட மறுபடியும் பேசி அவனிடம்  உன் லவ் பத்தி எப்படி சொல்றதுன்னு யோசி…..

ஆனா இப்போ அது எல்லாத்தையும் விட்டுட்டு சந்தோஷமா காலேஜுக்கு வா…..சொன்னதோடு இருவரும்  அவள் கைகளை தங்கள் கையோடு கோர்த்து பிடித்து உள்ளுக்குள் அழைத்துச் சென்றனர்…. தோழிகளின் அருகாமையில் தானும் தன் பயம்  முற்றிலும் நீங்கி வெகு இயல்பாக அந்தக் கடிதத்தை மறந்து கல்லூரிக்குள் நுழைந்தாள்…… ஷிவானி

உணவு இடைவேளை வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வகுப்புகள்…. மற்றும்   தோழிகளின் அரட்டை கும்மாளம் என்று மகிழ்ச்சியாகவே சென்றது…….

மதியத்திற்கு மேல் அன்று  எந்த வகுப்பும் இல்லாமல் போக…. வெட்டியாய் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தோழிகள் மூவரில் முன் வந்து நின்ற ஆபீஸ் வேலை ஆள்…… நிலா   நிஷா உங்க ரெண்டு பேரையும் உங்க டிபார்ட்மென்ட் ஹச் ஓ டி பாக்கணும்னு சொன்னாரு… என்று விட்டு போக…… அவர் அழைத்ததின் காரணம் தெரியாவிட்டாலும்….சரி ஷிவானி நீயும் வரியா போய் என்னன்னு கேட்டுட்டு வந்து விடலாம்……என்றபடி அவர்கள்  எழுந்துகொள்ள……

இல்ல நிலா  நீங்க ரெண்டு பேர் போங்க நான் கொஞ்ச நேரம் லைப்ரரியில் புக் படிச்சிட்டு உங்களுக்காக….. கேண்டீன்ல வெயிட் பண்றேன்  சொன்னதோடு தன் கல்லூரி பையை எடுத்து கழுத்து வழியாக மாட்டிக் கொண்டு……அங்கே கல்லூரியின் சற்று ஒதுக்குப் புறமாக இருந்த  பழமையான கட்டிடமான நூலகத்திற்குள் நுழைந்தாள்…….

பாட புத்தகங்கள் தவிர்த்து ஒரு ஆங்கில நாவலோடு அமர்ந்து படிக்க ஆரம்பித்தவள்  நேரம் செல்ல செல்ல……தான் வந்தபோது அங்கே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ஒரு சிலரும்….. அங்கிருந்து சென்றதோ  தான் மட்டும் தனிமையில் இருப்பதோ சற்றும் உணராமல் நாவலில் மூழ்கிவிட….. சிறிது நேரம் கழித்து…..

சட்டென்று கேட்ட… டோம்….. என்ற சத்தத்தில் பதறிப்போய் தலை நிமிர்ந்து சுற்றுப்புறத்தை  பார்த்த ஷிவானிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை……. ஏனென்றால் அந்தப் பெரிய நூலகத்திற்குள்  அவளைத் தவிர யாருமே இன்றி வெறிச்சோடி இருக்க…. எப்போதும் கம்ப்யூட்டரில் அமர்ந்து இருக்கும் லைப்ரரியன் கூட அந்த நேரம்  அவள் கண்களுக்குத் தென்படவில்லை…… இதில் அந்த வளாகத்தின் ஜன்னல் கதவுகள் வேறு மூடப்பட்டிருக்க என்னவென்று புரியாமல்…… ஷிவானி பார்த்துக்கொண்டிருக்கும்போதே…….

மின்சாரமும் போய்….. அந்த இடமே மொத்தமாய் இருளில் மூழ்கி   அவளுக்கு ஒரு பயங்கர திகில் உணர்வை உண்டாக்க……. இதில் மீண்டும்…. தோம்… பூம்….. என்று ஏதோ ஒரு  விளங்கிக் கொள்ள முடியாத சத்தமும் கேட்க……ஏற்கனவே மிகுந்த பய உணர்வு கொண்ட ஷிவானி அடுத்த நொடி அங்கிருந்து வாசலை நோக்கி ஓட ஆரம்பித்தாள்…….

கண்களுக்கு ஒன்றும் புலப்படாத அந்த இருளில் எழுந்து ஓட முயன்று.  ஒன்றும் முடியாமல் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த…….மேசையில் கால்கள் தட்டி தரையில் விழுந்து கைகளில் அடிப்பட்டு விட….. வலியோடு அந்த சூழ்நிலையின் அழுத்தமும்  சேர்ந்துகொள்ள அழ ஆரம்பித்தவளுக்கு……. எப்படியாவது அங்கிருந்து வெளியே போய்விட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது……..

முயன்று எழுந்து அங்கிருந்த நாற்காலிகளை மெதுவாக பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தவளின்….. செவிகளில் இப்போது விழுந்து…. அவளை   அச்சத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று உடல் பதற வைத்தது…… யாரோ ஓர் ஆணின் அழுத்தமான காலடிகள் அவளை நெருங்கி வரும் ஓசை……

இதற்குமேல் முடியாது என்ற நிலையில் உதவிக் கேட்டு சத்தமாக அலர போனவளின் வாயை  மொத்தமாய் மூடி இறுக பூட்டிய…‌‌….பலம் பொருந்திய அகலமான ஒரு முரட்டுக் கரம் அவள் முகத்தை மொத்தமாய் மறைக்க….  அத்தோடு அவள் பிடரியிலும் ஒரு ஆணின் மூச்சுக்காற்று…… புசுபுசுவென்று சூட்டோடு பட………

அதிர்ச்சியில் மூச்சை  தானாக உள்ளிழுத்தவளுக்கு  அதன் பிறகு என்ன முயன்றும்….. குருவியாய் வாயைத் திறந்து திறந்து முடியும் கூட   ஓசை மட்டும் அவள் தொண்டைக் குழியிலிருந்து எழவே இல்லை எதைக்கொண்டோ….. குரல்வளையை   ஏதோ இறுக்கிப் பிடித்தது போல் ஒரு உணர்வு……

சுவற்றோடு சுவராய் பல்லி  போல் ஒட்டிக்கொண்டு உடல் மொத்தமும் நடுநடுங்க ஷிவானி நிற்க……..அவள் பின்னால் நின்ற உருவமோ இப்போது அவளின் முதுகோடு பின்புறமாக   படிந்து……ஷிவானி யின் காதுக்கு அருகில் மிக நெருங்கி. தன் உதடுகள் கொண்டு அவள் செவி உரச……

திடும் திடும் என்று அலறும் இதயத்தோடு ஸ்தம்பித்துப் போய்   நின்றவளிடம்‌…… உனக்கு உன்னோட அந்த காதல் கடிதம் திரும்ப வேணுமா…? அது வேண்டும் என்றால்  நீயே என்னிடம் வா…..!!!!!! ஒவ்வொரு சொல்லாய் உச்சரிக்கும் போதே அந்த உருவத்தின் மற்றொரு கை……. அவள் அணிந்திருந்த  சட்டையை தாண்டி ஷிவனியின் வெற்று இடையில் ஊர்ந்து வயிற்றில் அழுத்தமாக பதிய……

அந்த அமானுஷ்யமான குரலும் அந்தக் கரங்களின்  அத்துமீறலும் அவளை வெகு பலமாய் தாக்க அந்த நாளில் உச்சபட்ச நடுக்கம்……. உடலை  ஆட்கொள்ள அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடி தரையில் மயங்கி சரிந்தாள் ஷிவானி……..

ஷிவானி ஏய் ஷிவானி யாரோ தன் கன்னத்தில் தட்டி தன்னைப் பிடித்து உலுக்கி அழைப்பது போல் தோன்ற…….பிரிக்கமுடியாமல் அழுத்தம் இமைகளை முயன்று திறந்து பார்த்தவளின்  முன்பு அவள் தோழிகளோடு இன்னும் சில மாணவர்களும் இருக்க……. ஒரு நிமிடம் தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் விழித்தவள்…..

மறுநிமிடம் நடந்தவை அனைத்தும் நினைவிற்கு வந்து விட அவசரமாய் எழுந்து அமர்ந்தவள்….. தன் அருகில் அமர்ந்திருந்த தோழியை  பாய்ந்து சென்று கட்டிப்பிடித்து அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டு……. நிஷா நிஷா என்னை காப்பாத்து இங்கு யாரோ , இங்கே யாரோ  இருக்காங்க…….. என்கி..ட்ட எ…ன்கிட்ட….. அதுக்கு மேலே சொல்ல முடியாமல் அவளுக்கு குரல் தேம்ப ஆரம்பிக்க……

அவள்  சொல்வது ஒன்றும் புரியவில்லை என்றாலும் தோழி  எதைப் பார்த்தோ மிகவும் பயந்து இருக்கிறாள்…… என்பதை உணர்ந்து  தானும் பதிலுக்கு அவளை அனைத்து முதுகை வருடி விட்டு….. அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல்   சமாதானப்படுத்தி….

தங்கள் தோழியின்  வித்தியாசமாக பார்க்கும் மற்ற மாணவ மாணவிகளின் பார்வையில்  இருந்து….. விளக்கும் பொருட்டு ஷிவானியை அழைத்துக் கொண்டு கல்லூரியை விட்டு  வெளியேறினர்……. அவளின் தோழிகள் இருவரும்…….

அவர்கள் வழக்கமாக செல்லும் அந்த பழமையான பெரிய சிவன் கோவிலின் உள்ளே சென்று சிவனை  வணங்கிவிட்டு…….மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து இருந்த அந்தக் கருங்கல் மண்டபத்தின்  ஒரு பகுதியில் ஒதுக்குப்புறமாக அமர்ந்தனர்…….இவ்வளவு நேரத்திற்கு கூட தங்கள் கை யை சிறிதும் விடாமல் இறுக்கிப் பிடித்தபடி  தவிப்போடு அமர்ந்திருக்கும்……தோழியை அரவணைப்பாய் பார்த்து நிஷா…….

ஷிவு  இங்க என்னை  பாரு ஷிவானியை நேராக தன்னை  பார்க்க வைத்து அவள் கண்களுக்குள் தன்  பார்வையை கலக்க விட்டாள்….. என்ன ஆச்சு…??  ‌‌ பரிவான அந்த இரு வார்த்தைகளே போதுமானதாய்  இருக்க……. மடை திறந்த வெள்ளம் போல் அங்கே நூலகத்தில்  தனக்கு நடந்த அந்த அமானுஷ்யமான சம்பவத்தை ஒரு வரி விடாது சொல்லி முடித்தாள்  ஷிவானி…….

நிஷா அது யாராக இருக்கும்…??!!!  எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி அந்தக் குரல் இப்பக்கூட காதுக்குள் கேட்கிற மாதிரி  இருக்கு…… அது ஏதாவது பேய் பிசாசாக இருக்குமோ….??!!!! பயம் , அதிர்ச்சி , நடுக்கம் இன்னும் பலவாறான உணர்வுகளில் ஆட்பட்டு பெரும் திகிலோடு ஷிவானி கேட்க…..

சீ போடி பைத்தியம்…. அப்டிலாம் எதுவும் இல்லை யாரோ உன்னை டீஸ் பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க….. பிளான் பண்ணி உன்னை  பயமுறுத்த ட்ரை பண்ணி இருக்காங்க யாரோ…… நிஷா ஆணித்தரமாக சொல்ல அப்போதும் தன்னை….. நம்பாமல் பார்க்கும் தோழியின் கைகளைப் பிடித்து அழுத்திக் கொண்டவள்……

நம்பு டி . எங்க ரெண்டு பேரையும்  ஹெச் ஓ டி கூப்பிடுறாரு ன்னு வந்து அந்த ஆள் சொல்லிட்டு போனா இல்ல….?? நாங்க போய் பார்த்த போது அவருடைய ரூம் காலியா இருந்துச்சு…… இருந்து கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தும் கூட யாருமே வரல.. சரின்னு  அப்போது அங்கு வந்த பியூன் கிட்ட கேட்கும்போது…..

தயாளன் சார் இன்னைக்கு மதியமே காலேஜ் விட்டு  போய் விட்டார் என்று சொன்னான்……. சொல்லிவிட்டு நிஷா ஷிவானியின் முகத்தைப் பார்க்க….. இப்போது அவள் முகத்தில் ஒரு தெளிவு வந்திருக்க… அப்படின்னா…?? என்று அவள்  நிறுத்த…..

அதேதான் யாரோ எங்க கிட்ட இருந்து உன்னை தனியாக பிரித்து  லைப்ரேரிக்கு வர வைத்து உன்ன நல்லா பயமுறுத்த ட்ரை பண்ணி இருக்காங்க……. அது தெரியாமல் நீயும் பேய் பிசாசுன்னு லூசு மாதிரி பேசுற…. என்று நிஷா சலித்து கொள்ள……

சரிதான் நிஷா   ஆனா நான் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா…? என்னை இவ்வளவு கஷ்டப்படுத்திய  அது யார் என்று கண்டுபிடித்து அந்த அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது….. என்று சூளுரைத்த  ஷிவானிக்கு ஆமோதிப்பாய் தோழிகள் இருவரும் தலையசைத்தனர்…….

அவர்களின் காபி ஷாப் இருக்கும் அந்த சாலையில் பஸ்சில் இருந்து இறங்கி ஷிவானி பொறுமையாக நடந்து….. வலது புறம்  இருந்த ஒரு குறுக்கு சாலையை அவள் கடந்து செல்ல முற்பட்டபோது…… அங்கே சற்று தொலைவில் திடீரென்று அவள் கண்களில்  விழுந்த அந்தக் காட்சியில்…….. அவள் அப்படியே உறைந்து அசைவுகள் மறந்து நின்றாள்….அதற்கு காரணம்…….

அவள் அத்தை பூர்ணிமா கண்களில் வழியும் கண்ணீரோடும் யாரிடமோ   கெஞ்சிக் கொண்டு நிற்க அவருக்கு அருகில்….. முகம் தெரியாதபடி இவளுக்கு முதுகு காட்டி சற்று உயரமாய் வாட்டசாட்டமாய்  ஒரு ஆண் நின்றிருக்க…….

பூர்ணிமாவின் அழுகையும் அவர் கையை அந்த ஆடவன் பிடித்திருந்த தோற்றமும் ‌‌. அவன் ஏதோ தன் அத்தையிடம்….. வலுக்கட்டாயமாக நடக்க முயல்வதுபோல் ஷிவானிக்கு தோன்றிவிட அடுத்த நிமிடம் தன்…. அத்தையை பாதுகாக்க அவர்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்  ஷிவானி……..

அவள் ஓட ஆரம்பித்த சரியாக  அதே வினாடியில் அதுவரை அங்கே சாலையின் மறுபுறத்தில்….. சற்று ஒதுங்கி  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த… அந்த விலை உயர்ந்த கார்…. நொடியில் உயிர் பெற்று  இப்போது அவளை இடித்து தள்ளும் முடிவோடு நொடிக்கு நொடி வேகமெடுத்து ஷிவானியை நெருங்கிக் கொண்டிருந்தது……..

கட்டங்கள் போட்டு விளையாடும் சதுரங்கமாய்  மாறிப்போன வாழ்க்கையில்….. யாரை யார் வீழ்ந்து…??!!   யார் வெல்வது…??!!!

                                சின்ரெல்லா வருவாள்………..

Advertisement