Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா அத்தியாயம்.20 

அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அறையில் பிரின்சிபால் மற்றும்  சில ஆசிரியர்களும் சற்று பதட்டமாய் அமர்ந்திருக்க….. அங்கு நடுநாயகமாய் போடப்பட்டிருந்த  பெரிய மேதையின் பின்புறம் அமர்ந்திருந்த ஆவுடையார் மிகுந்த கோபத்தில் இருப்பது அவர் உடல் அசைவில் தெரிந்தது…. தன் எதிரில் எதைப் பற்றியும் கவலையின்றி சூழ்நிலையின் தாக்கம் என்பதே  இல்லாமல் அலட்சியமாய் நின்றிருந்த சூரிய பிரகாஷை முறைத்துப் பார்த்தவர்…. மேசைக்கு வலது புறம் ஒரு பக்க கன்னம் சற்று வீங்கிய நிலையில் இன்னும் கூட கண்ணீர் வழியும் கண்களோடு நின்றிருந்த பெண்ணையும்  பார்த்தவருக்கு தன் மகன் செய்திருக்கும் காரியத்தின் தன்மையை நினைத்து இன்னும் இன்னும் கோபமே அதிகரித்தது…….

அது எப்படிப்பட்ட குற்றமாக  இருந்தாலும் ஒரு பெண்ணை கைநீட்ட   அவனுக்கு துணிவு எப்படி வந்தது என்று அவருக்கு ஆதங்கமாக இருந்தது….. பெண்களை மதித்து பெண்பிள்ளைகளை போற்றி வளர்க்கும் அவர் பரம்பரையில் பிறந்த அவர் மகன் இன்று ஒரு பெண்ணை கைநீட்டி அடித்து இருக்கிறான் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை…….நினைத்த வார்த்தைகளையே   சூரியபிரகாஷ் பார்த்து கேட்டவர் நீ செய்திருப்பது பெரிய தப்பு சூர்யா உனக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு பொண்ணை அடித்ததற்கு நீ விளக்கம் தந்தே ஆகவேண்டும் உன் இந்த வரம்பு மீறிய செயலுக்கு தண்டனையும் உண்டு என்று அழுத்தம் திருத்தமாகக் கூற…….

தன்னைப் பார்த்து கத்திய தகப்பனின் கொதிப்பிற்கு சற்றும் குறையாத கொந்தளிப்பு இருந்தது மகனிடம்…… அப்பா என்ன நடந்துச்சுன்னு தெரியாம இவளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள் எவ்வளவு தைரியம் இருந்தா  ஆஃப்டர் ஆல் ஒரு ஏழை பொண்ணு எனக்கு லவ் லெட்டர் தர முயற்சி பண்ணி இருப்பா….. அதுவும் அந்த லெட்டர்ல இவ்வளவு கேவலமா எழுதி இருந்துச்சுன்னு நீங்க படிச்சு பார்க்கல பாக்க அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு  அவ்வளவு மோசமான வார்த்தைகளை ஒரு ஆம்பளைக்கு லெட்டர் எழுதிய பெண் எவ்வளவு கேடுகெட்ட ஒருத்தியா இருப்பாள்….. அப்படிப்பட்டவளை அடித்ததில் ஒரு தப்பும் இருக்கிறதா எனக்கு தெரியல நான் யார்கிட்டயும் செய்யாத தவறுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்…… 

தகப்பனை விட தன் வார்த்தைகளில் அழுத்தம் அதிகம் கொடுத்ததோடு  சூரிய பிரகாஷ் பார்வை தந்தையை விட்டு தன் எதிரில் அழுது மாய்மாலம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீதே நிலைத்திருந்தது….. அவளைப் பார்க்கப் பார்க்க ஏனோ அவனுக்கு பெரும் ஆத்திரமும் வெறியும் உள்ளுக்குள் எழுந்து ஆர்ப்பாட்டம் செய்ய…..அவள் கையைப் பற்றி தன் புறம் இழுத்து இன்னும் நான்கு  அறை விட மாட்டோமா என்னும் ஆவேசம் அவனுள் தோன்றி சூரியபிரகாஷிர்கே ஆச்சரியத்தை கொடுத்தது…….

 முன்பின் பார்த்திராத பெண்ணை அடித்து துன்புறுத்த விலையும் அளவிற்கு அவன்  ஒன்றும் அத்தனை மோசமானவன் இல்லை அப்படி இருந்தும் எதற்காக இப்படி ஒரு வெறி அவள் மீது தனக்கு ஏற்பட வேண்டும்……யோசித்த வரையில் முதல் பார்வையில் தனக்கு அப்பாவி போல் தெரிந்த அவள் கொடுத்த கடிதமும் அதிலிருந்த வார்த்தைகளும் தான் அவள் மீதான தன் எண்ணத்தை மாற்றி…..அளவுக்கு அதிகமான வெறுப்பை அந்தப் பெண்ணின் மீது விதைத்திருக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது……ஆனால் அதற்காக  கூட ஒரு பெண்ணை இத்தனை அதிகமாய் அவன் வெறுக்க காரணம் இல்லையே அவளை அலட்சியப்படுத்தி விட்டு அவன் தன் வழி சென்றிருக்க முடியுமே…..

ஏனோ தன் எதிரில் நிற்பவளின்  அந்த கோர முகம் அவனுக்கு சகித்துக் கொள்ள முடியாததாக தோன்றிவிட்டது அவளை திருத்தும் பொருட்டு அவன் எதைச் செய்யவும் தயாராக இருந்தது அவனுக்கு தன் மனதுக்கு குறித்து  புரிபடாத உணர்வை உண்டு செய்தது……

மகனின் அலட்சியமான வார்த்தைகள் இன்னுமின்னும் ஆவுடையாருக்கு கோபத்தை அதிகப்படுத்த அவனைப் பார்வையால் எரித்தவர்….. அழுது கொண்டிருந்த பெண்ணிடம் திரும்பி இங்க பாருமா உன்னை அவன் அடித்தது தவறு…. அதுக்காக அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு நீ விரும்புகிறாயோ அதை செய்ய நான் கடமை பட்டு இருக்கேன் சொல்லுமா என்ன நடந்ததுன்னு சொல்லு…… ஆவுடையாரின் கேள்விக்கு மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த பூர்ணிமா மிகவும் முயன்று திக்கி தினரி  தன் வாய் திறந்து பேச முயன்றபோது இரண்டு மூன்று மாணவர்களை பிடித்து இழுத்தபடி உள்நுழைந்த விளையாட்டு ஆசிரியர்…… 

சார் நடந்தத பிரச்சனைக்கு  என்ன காரணம்னு நான் சொல்கிறேன்  சார் இந்தப் பசங்க தான் ராகிங் அப்படிங்கற பேர்ல ரொம்ப மோசமான கடிதங்களை எழுதி இங்க வந்த ஜூனியர் பொண்ணுங்க கிட்ட கொடுத்து சீனியர் பசங்களுக்கும் ஏன் ப்ரொஃபஸர்  கூட குடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்காங்க…….

இந்தப் பொண்ணுக்கு அதுல என்ன எழுதி இருந்துச்சு கூட தெரியாது சீனியர் பசங்க சொன்னதை செய்வதற்காகத்தான் சூர்யா சார் கிட்ட அந்த பேப்பர இந்தப் பொண்ணு கொடுத்து இருக்கு…… நடந்த சம்பவத்தின் நுனியை பிடித்து தெளிவாய் விளக்கிய விளையாட்டு ஆசிரியரின் பேச்சு அதுவரை அலட்சியமாய் நின்றிருந்த  சூரியபிரகாஷிர்க்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது முதல் முறை தான் செய்து விட்ட தவறை எண்ணி உதடு கடித்தவன் இப்போது மீண்டும் நிமிர்ந்து பூர்ணிமாவை பார்க்க……அதே நேரம் வரை எவரையும் காணாது தலை கவிழ்ந்தபடி இருந்த பூர்ணிமாவின் கண்கள் இப்போது நிமிர்ந்து சூரியபிரகாஷ் பார்த்தது அந்த ஈரம் படிந்த  விழிகள் சொன்ன செய்தி என்னவோ……

ஒருவருக்கொருவர் பார்த்த விழி பார்த்தபடி நின்று இருக்க இப்போ உனக்கு என்ன நடந்தது என்று புரிந்திருக்கும்  இதற்கு தான் எப்பவும் ஒரு விஷயத்தை நாம் செய்வதற்கு முன்னால் தீர விசாரித்து செயல்பட வேண்டும் என பெரியவங்க சொல்வது….. என்ன படிச்சு என்ன பிரயோஜனம்  சூர்யா. நீ நடந்து கொண்டது எனை ரொம்பவே தலை குனிய செய்துவிட்டது என்று சூர்ய பிரகாஷிடம் கர்ஜித்த ஆவுடையார் இப்போது பூர்ணிமாவின் திரும்பி நீ செய்யாத தவறுக்கு   உன்னை காயப்படுத்தியதற்கு தண்டனையா அவனை நீ உன் கையால் திருப்பி அடித்து விடு….. உத்தரவாக கூறிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்த தந்தையின் வார்த்தை சூரியபிரகாஷ் அதிர்ச்சிய  வைக்க ஆவேசமாய் நிமிர்ந்து தன் தகப்பனை பார்த்து பேசப் போக…..

அது நேரம் வரை ஒரு வார்த்தையும் பேசாது அமைதியாக  இருந்த பூர்ணிமா இப்போது வாய் திறந்து பேச ஆரம்பித்தாள்……சீனியர்ஸ் சொன்னதை செய்ய வேண்டிய கட்டாயத்தால்   நான் இவங்க கிட்ட அந்த லெட்டர் கொடுக்க வேண்டியதா போச்சு….. அதனாலதான் தெரியாமல் இவங்க என்ன அடிச்சுட்டாங்க அதையே நான் திருப்பி செஞ்சா சரியா இருக்காது சார் அவங்க தெரியாமல் செய்த தவறை  நான் மன்னித்து விட்டேன்…….ஆவுடையாரின் பக்கம் திரும்பி பேசிய பூர்ணிமா இப்போது தன் எதிரில் நின்றிருந்த சூரிய பிரகாஷ் புறம் திரும்பி அவன் விழிகளை அழுத்தமாய் நோக்கி……

ஏழையாய் இருந்தாலும் பணக்காரர்களாக இருந்தாலும் தன்மானம் என்பது  எல்லாருக்கும் சமமானது சார் அதனால அவங்களோட பொருளாதாரத்தை வச்சு யாரையும் தாழ்வா மதிப்பிடாதீர்கள்…… அது உங்கள் தகுதியைத் தான் தாழ்த்தி விடும்  கண்கள் நேர்மையில் ஜொலிக்க தன்னிலையில் பெருமை கொள்ளும் தலை நிமிர்வோடு அவன் கண்களைப் பார்த்து உரைத்த அந்த சிறு பெண்ணின் துணிச்சலும் தெளிவான சிந்தையில் அவள் உரைத்த வார்த்தைகளும்……. அந்த தானென்ற  தலைக்கனம் பிடித்த ஆறடிக்கு மேல் உயரம் கொண்ட ஆண்மகனின் உள்ளத்தில் குத்தீட்டியாய் சென்று சொருகி நிற்க பிரமிப்பையும் தாண்டிய பெயர் அறிய உணர்வில் அவளை அவன் பார்த்திருக்க……. 

வார்த்தைகளற்ற மௌனத்தில் ஒற்றைத் தலை அசைவில் அனுமதி பெற்று வெளியேறிய பெண்னவளின்  தனித்தன்மை அவனை ஏதோ ஒர் வகையில் பலமாய் தாக்க….. தன் நிற்கும் நிலை மறந்து நின்றவனின் ஒரு சிறு பெண் தன்னை எதிர்த்துப் பேசி விட்டால் என்ற கோபத்தையும் தாண்டி ஏனோ  இதழ்களில் ஒரு வசீகர புன்னகை உதயமாகி அவன் உதட்டோடு மறைந்து போனது…….

இரவின் விண்மீன்கள் வைரமாய் வானவீதியில் ஜொலித்து கண்களை பறிக்க….. நடுநாயகமாய் உதித்தெழுந்த வெள்ளை நிலா பார்ப்பவர் மனதை குளிர வைக்க என்றும்  இவைகளை நிமிர்ந்து பார்க்கவும் எண்ணமின்றி எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையில் செயல்படும் சூரியபிரகாஷ்….. இன்று தன் எண்ணங்களையும் வேலைகளையும் ஒதுக்கி வைத்து வானத்தின் நிலவையே அசைவின்றி பார்த்துக் கொண்டிருந்தான்…… திடீரென்று நிலவின் வெண்மை மறைந்து அங்கே ஒரு சிகப்பு நிற பாவாடையில் மறைவில் மெல்லிய  கொலுசு அணிந்த வெண்மையான பாதம் இரண்டு தோன்றி அவனை திடுக்கிட செய்ய…..

அவன்  பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் கால்கள் மறைந்து பாலில் உருளும் கருந்திராட்சைகள் போன்று மனதைப் பறிக்கும் இரு அழகிய விழிகள் தோன்றி அவனை தீர்க்கமாய் பார்த்து வைத்த….. அவனின் பிரம்மிப்பு உச்சம் தொட்டது  அந்த விழிகளின் சொந்தக்காரியின் முகத்தை அவன் சிந்தையில் முழுவதும் கொண்டுவர முயன்ற நொடி நிலவில் தோன்றிய விழிகள் மறந்து…….சொல்ல முடியாத தவிப்பில் துடித்த இரண்டு செவ்விதழ்கள் தோன்றி அவனை மொத்தமாய் நிலைகுலையச் செய்தது…….

ஓ மை காட் எனக்கு என்னதான் ஆச்சு சொல்லப் போனால் அந்தப் பெண்ணின் முழு உருவம் அவன் மனக்கண்ணில் நிச்சயம் இல்லை….. ஆனாலும் அவளின் கண்களும் உதடுகளும் நிமிடத்துக்கு நூறுமுறை அவனுள் தோன்றி அவனை இம்சை படுத்த சூரியபிரகாஷ் தன் தலையை இரண்டு கைகளாலும் தாங்கியபடி வான வீதியில் இருந்து பார்வையை விலக்க….. இப்போது அவனை சோதிக்க என்றே அவன் பார்வையில் விழுந்து மறைந்தது வெள்ளை நிற தாவணியின் முந்தானை பகுதி……மாளிகையின் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் மறைந்த அந்த கொலுசின் மெல்லிய ஓசையும்  தாவணியின் நிறமும் அவனை எதையும் யோசிக்காத அளவுக்கு சூரியபிரகாஷின் சிந்தையை முழுவதுமாய் தன் வசப்படுத்த…… நிற்கும் இடம் மறந்து எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த தாவணியை தொட்டு விடும் வேகத்தில் படிக்கட்டில் தாவி ஏறிக் கொண்டிருந்தான் சூரிய பிரகாஷ்………

அவனை மீறி ஏதோ ஒன்று அவனை செலுத்திக் கொண்டிருக்க படிக்கட்டை தொடர்ந்து மாடிப்படி ஏறியவனின் பார்வையில் அங்கே காய வைத்திருந்த துணிகளைத் தவிர வேறு ஒன்றும் வித்தியாசமாய் படாமல்  போக……தவிப்பா அல்லது எதிர்பார்ப்பார் ஏதோ ஒன்று மிகுதியில் அவன் நாலாபுறமும் பார்வையை செலுத்த…… எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில் ச்சே…. என்றதோடு விரல்களை மடக்கி கைகளை சுவற்றில் சற்று பலமாக குத்தி கொண்டவன்…… சூர்யா உனக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சு எங்கேயோ காலேஜ்ல பார்த்த ஒருத்தி  எப்படி இங்கே உன் வீட்டில் அதுவும் மொட்டை மாடியில் வருவாள் என்று நீ நினைத்தாய்…?? சுத்த பைத்தியக்காரத்தனம் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு கீழே இறங்க முற்பட்டபோது கண்ணாடி வளையல்களின் ஓசை மீண்டும் அவன் கால்களை கட்டிப் போட இம்முறை பார்வையை திருப்பிய அவன் கண்களில் விழுந்தால் அவள்…………

அவனைக் கண்ட சிலமணி நேரங்களில் அவன் சிந்தையை மொத்தமாய் திருடிக்கொண்ட வசியக்காரி…… அங்கே அவன் வீட்டின் மொட்டை மாடியில் கொடியில் காய்ந்த துணிகளை சேகரித்துக்கொண்டிருந்தாள்   அவள் எப்படி இங்கே தன்னிடத்தில் என்ற யோசனையில் அனைத்தும் மறந்து அவள் முழு உருவத்தையும் தன் மனதில் பதியும் தீவிரத்தோடு சூரியபிரகாஷ் பார்க்க…… அப்போது பூர்ணிமா என்ற அவன் அன்னையின் குரல்   ஒலிக்க கீழிருந்து கேட்க…… இதோ வந்துட்டேன் பெரியம்மா என்ற வார்த்தையோடு தான் சேகரித்த துணிகளை எடுத்துக்கொண்டு தன் எதிரில் நிற்பவனை உணர்வில்லாத பார்வையில் கடந்து படிக்கட்டில் இறங்கி போனாள்  பூர்ணிமா……

இவனின் அதிர்ச்சிக்கும் கேள்விக்கும் சற்று கூட சம்பந்தம் இன்று  அவளிடம் அமைதியும் நிதானமும்……. பார்த்த நொடியிலிருந்து தன்னை பல வாராய் பாடுபடுத்தும் அவளை பற்றிய புரியாத உணர்வு உள்ளத்தில் இருந்தாலும் அதைவிட   தன்னை படு அலட்சியமாய் கண்டுகொள்ளாமல் கடந்துபோன அவள்மீது ஏனோ சிறு கோபமும் மூளைக்குள் முளைக்க…..

   இப்போது தானும் மிகுந்த நிதானமாய் இறங்கி வரவேற்பறைக்கு போக  அவள் சமையல் அறையில் புகுந்து கொள்வது அவன் பார்வையில் விழுந்தது…….குட்டி ஆரியனை வைத்து  விளையாடிக் கொண்டிருந்த சௌந்தர்யாவின் அருகில் சென்று அமர்ந்து….. தன் அண்ணன் மகனை கைகளில் வாங்கி தூக்கிப் போட்டு விளையாடிக் அவனுக்கு சிரிப்பு மூட்டிய  சூரியபிரகாஷ் தங்கையை ஒரு விழியில் கவனித்தான்……

ஏய்  சௌந்தர்யா யாரது யாரோ புதுசா ஒரு பொண்ணு நம்ம வீட்டில் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு அலட்சியமாய் வினவுவது போல் கேட்க…… யாரை அண்ணா கேட்கிறாய் பூர்ணிமா வையா  அவள் சுந்தரம்பிள்ளை அவரின் மகள் என்று விட்டு மீண்டும் தன் மருமகனோடு சௌந்தர்யா விளையாட்டை ஆரம்பிக்க…… சுந்தரம் அவர்கள் வீட்டின் விசுவாசமான வேலையால் கிட்டத்தட்ட தந்தையின் வலதுகரம் போன்றவர் அவரின் மகளா  இந்தப் பெண்……அது என்ன இத்தனை வருஷமா நாம இந்த பெண்னை பார்த்ததே இல்லையே சென்று சூரியபிரகாஷ் மீண்டும் கேள்வி எழுப்ப……

ஐயோ அண்ணா என்னை  கொஞ்ச நேரம் நிம்மதியா விளையாட விடுகிறாயா நீ…. பள்ளிப்படிப்பை கிராமத்திலேயே முடிச்சுட்டு இப்போ கல்லூரிக்காக அவங்க ஊர்ல இருந்து இங்கு வந்து நம்ம காலேஜ்ல   சேர்ந்திருக்கு காலேஜ் நேரம் போக மீதி நேரம் அம்மாவுக்கு உதவியா இங்க இருந்து ஏதாவது வேலை செய்வாள்…..எனக்கும் நல்ல ஃப்ரெண்ட் ரொம்பவே நல்ல பொண்ணு போதுமா இன்னும் உனக்கு வேற ஏதாவது விஷயம் வேண்டுமா……சௌந்தர்யா சற்று கடுப்பாக  கேட்க அவன் நினைவு எங்கே அவளிடம் இருந்தது டைனிங் டேபிளில் சமைத்த உணவுப் பாத்திரங்களை கொண்டு வந்து வைத்தபடி பரபரப்பாக இருந்த பூர்ணிமாவின் மீதே அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது…….

அன்று பெரிய வீட்டில் வேலை முடிந்து இரவு தன் இருப்பிடம் வந்த  பூர்ணிமாவின் மனதில் கோப நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது……பணம் இருந்து விட்டால் இந்த மனிதர்களுக்கு மனிதத் தன்மை என்பது இல்லாமல் போய்விடுகிறது பணக்காரர்களை பற்றிய அவள் எண்ணம் எப்போதும் இதுவாகத் தான் இருக்கும்….. ஆனால் தன் தந்தை வேலை செய்யும்  அந்த வீட்டினரின் பழக்க வழக்கங்கள் சமீப காலத்தில் நேரடியாய் பார்க்க நேர்ந்தபோது தன் முடிவை சற்று மாற்றிக் கொண்டிருந்த அவள் புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல் மீண்டும் அவள் எண்ணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது இன்று அவர்கள் வீட்டின் வாரிசான சூரியபிரகாஷ் செய்கைகள்……. 

சற்றும் விசாரிக்காமல் ஒரு பெண்ணை கைநீட்டி அடிக்க  துணிந்த அவனின் திமிரை வெறுத்தாலும்…… அறியாது அவசரத்தில் செய்த பிழை என்று பூர்ணிமா அந்த நிகழ்வை அப்போதே மறக்க  முயல…… ஆனால் இன்று இரவு உணவு வேலையில் அவர் நடந்து கொண்ட விதம் அவளின் அவன் மீதான வெறுப்பை பலமாய் விசிறி விட்டது….. வேலையாட்கள் இருவர் விடுப்பில் சென்று இருப்பதால் காய்ந்த துணிகளை எடுத்துக் கொடுப்பது  சமையல்கட்டில் உதவுவது என்று இன்று அவளுக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம் இருக்க…..தன் கடமையை செய்து விட்டு ஒதுங்கி நிற்பவர்களை சற்று நேரம் கூட அமைதியாய் இருக்க விடாமல் பம்பரமாய் சுற்ற வைத்து வேண்டுமென்றே உணவில் உப்பில்லை என்றவன் பிறகு வேண்டுமென்றே குவளையைக் கவிழ்த்து  விட்டு அவளைத் தரையை துடைக்கும் படி செய்து…..இன்னும் இன்னும் அவன் அவளை வேலை வாங்க…….

 ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்த பூர்ணிமாவின் விழிகளை சந்திப்பதற்காக வே காத்துக்கொண்டு இருந்தானோ  என்னவோ…..அவள் விழிகள் அவன் கண்களை பார்த்த நொடியில் அதில் தோன்றி மறைந்த மின்னலின் வெளிச்சம் அவளின் இளம் நெஞ்சை படுபயங்கரமாக பதற வைத்தது….. ஏனோ அவன் பார்வையும் அவனையும்  பார்ப்பதற்கே ஒரு திகில் உள்ளமெல்லாம் பரவ…. சில நொடிகளுக்கு மேல் அவன் கண்களை நேர்கோட்டில் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தவள் தலை வலிப்பதாக பொய் கூறி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று  இதோ தன் அறையில் வந்து அடைந்து கொண்டாள்……

ஏனோ சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து  அதன் வாய்க்குள் தலையை கொடுக்கப் போவது போல் ஒரு பயங்கர பயமானது உள்ளம் முழுவதும் நிரம்பி அவளை மூச்சுத்திணற வைக்க…… அவனைப்பற்றி   யோசிக்கக் கூடாது என்பதையும் மீறி அவள் மனக் கட்டுப்பாட்டை தகர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சூரியபிரகாஷின் கண்களும் அதில் தோன்றி மறைந்த மின்னலும் அவளை இரவு முழுவதும் தூங்க விடாமல் மிரட்டிக் கொண்டிருந்தது…….

                          

Advertisement