Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.20.2 

அன்று  அந்த பெரிய வீட்டில் முன்பு வரிசையாய் நின்றிருந்த கார்களில் அடுத்தடுத்து அந்த வீட்டைச் சேர்ந்தவர்களின் உடமைகள் வேலைக்காரர்களால் அழகாக அடுக்கப்பட…… இன்னும் பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் தண்ணீர் என்று அனைத்தையும் சரியாக எடுத்து  வைத்து விட்டதா என்று அன்னபூரணி பார்த்துக் கொண்டிருக்க….. அவர் அருகே வந்த பூர்ணிமா பெரியம்மா எல்லாமே எடுத்து வச்சாச்சு நான் ஒரு தடவை அனைத்தையும் பார்த்து விட்டேன் நீங்க இப்போ கெளம்பலாம் ஐயா உங்களை கூப்பிட்டாங்க என்று பணிவோடு சொல்ல அவளின்  கன்னத்தை லேசாக தட்டி புன்னகைத்வர்……

நம்  வீடு தேடி வந்த விருந்தாளிகளை நாமதான் நன்றாக கவனித்து அனுப்ப வேண்டும்   பூர்ணிமா அதுவும் இவங்க நம்ம நாட்டை தேடி வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்…. உன்னை  பத்தி எனக்கு தெரியும் நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நீ புத்திசாலி நீயே பார்த்து பக்குவமாய் நடந்து கொள்வாய் இருந்தாலும்  அவர்களோடு உனக்கு ஏதாவது சங்கடம் இருந்தால் அதை தயங்காமல் என்னிடம் நீ சொல்ல வேண்டும்…… கண்டிப்பு போல் அவளுக்கு ஆறுதலாய் பேசிவிட்டு தானும் நின்றிருந்த கார்களில் ஏறி கொள்ள…..

கிட்டத்தட்ட அங்கு நின்றிருந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து கிளம்பியவுடன் கடைசியாய்  பெரிதாய் நின்றிருந்த அந்தக் காரை சற்று……. பயத்தோடு பார்த்தபடி விழித்துக் கொண்டு நின்ற பூர்ணிமாவின் செவியோரம் சட்டென்று சூடான மூச்சுக் காற்று பட அதன் உணர்வில் திகைத்து திரும்பியவளின் மிக அருகில் நின்றிருந்த சூரிய பிரகாஷின்  கண்கள் அவளை துளைத்து எடுத்தது…..

அவன் சூடான மூச்சு அவளுள்  ஒரு நொடியில் ஏற்படுத்திய படபடப்போடு பூர்ணிமா அவன் கண்களை  நோக்க….. அவளை தீர்க்கமாய் உற்றுப் பார்த்தவனின் இதழ்களில் தோன்றியது ஒரு இளக்காரமான கேலி சிரிப்பு….. அது சொன்ன செய்தி உன்னால் என்னிடமிருந்து ஓடவோ ஒளியவோ   முடியாது பெண்ணே நீ எங்கு சென்றாலும் உன் கடைசி புகலிடம் நானாகத்தான் இருப்பேன்…. என்ற உறுதிமொழி அந்தக் கண்களில் தோன்றி மறைந்ததோ அடிவயிற்றில் பனிக்கட்டியின் கூர்முனை ஒன்று அழுந்த  சொருகியது போல் வலி கொடுக்கும் அவஸ்தைகளை உணர்வில்…..இன்னும் நான் கேட்டு நகர்ந்து தப்பி ஓட அவள் கால்கள் பரபர தாலும் அவனிடமிருந்து ஒரு சிறு நெல் முனை அளவு கூட அவள் விலகி விடாதவாறு பலமான சங்கிலிகள் கொண்டு அவளை  அவன் பிணைத்திருக்கும் சதி வலையை நினைத்து பூர்ணிமா விற்கு திகைப்பாக இருந்தது…….

அதைவிட அவன் பார்வையின் மொழி அது உணர்த்தும் செய்தி  நீ என்னிடம் இருந்து விலகி போக முயன்றதை நான் தெரிந்துகொண்டேன் என்னும் அறிவிப்பு உன்னால் என்னை நீங்க முடியாது என்று சொல்லாமல் சொல்லும் இருமாப்பு  என்று அவளை ஒரு பொம்மை போல் தன் கைகளில் ஆட்டுவித்தான் அந்த வித்தகன்…….. அன்று கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு. அதே இரவில் அவன் பார்வையில் அந்த  ஏதோவொன்றை கண்ட நிமிடத்தில் இருந்து…..கிட்டத்தட்ட சூரியபிரகாஷின் விழி வட்டத்துக்குள் விழுந்து விடாத அளவிற்கு வெகு ஜாக்கிரதையாய் பூர்ணிமா அந்தப் பெரிய வீட்டில் நடந்து கொள்ள…..

ஆனால் அதற்கு அவசியமே இல்லாது போல் அந்த ஒரு வாரமும் அவனும் கூட அவளை கண்டுகொள்ளாமல் தான் இருந்தான்….. அவன் கண்களில் தான் பார்த்த மின்னல் தன்னுடைய கற்பனை யோ  என்னும் அளவிற்கு தன் பயம் தணிந்து பூர்ணிமா மீண்டும் இலகுவாய் நடமாட……

அடுத்து வந்த நாட்களில் மூன்று வருடம் கழித்து நாடு திரும்பிய மகனின் நலனுக்காக அன்னபூரணி வேண்டிக்கொண்ட  வேண்டுதலை நிறைவேற்ற பூர்வீக கிராமம் செல்ல பேச்சுவார்த்தை நடந்த போது…..அதைப்பற்றிய எவ்வித சிந்தனையும் இன்றி தன் வேலையில் மூழ்கி இருந்த பூர்ணிமாவை அடிக்கண்ணால் நோட்டமிட்ட சூரியபிரகாஷிர்க்கு  ஒரு பயங்கர சொல்லில் அறியா கோபம் அவன் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து அவளை ஏதாவது துன்புறுத்த சொல்லி அவனை ஊக்குவித்துக் கொண்டே இருந்தது….. 

அதற்கு காரணம் தன்னுடைய சிந்தையில் புதிதாய் நுழைந்து அவனை அவதிக்குள்ளாக்கும் அந்தப் பூர்ணிமாவின் நினைவை முற்றிலும் வெறுத்தான்  சூரியபிரகாஷ்….போயும் போயும் அவன் வீட்டில் வேலை செய்யும் ஒரு ஏழை பெண்ணின் பின்னால் தன் மனம் செல்லும் வழி அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை……..

இத்தனை வருடத்தில் அவன் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் மனமானது இன்று    கும்மாளமிட்டு அவள் பின்னால் ஓட முயலும் போது அதை எப்படி அடக்குவது என்று தெரியாமல் விழித்தான்….. அவள்  புறமே திரும்பாமல் கடந்த ஒரு வாரமாய் முயன்று தன்னை கட்டுப்படுத்தி வர…….இதோ அதில் வெற்றியும் கண்டு விட்டதாய் எண்ணி  நிம்மதியாக இருந்தவனை வெகுவாக பாதித்தது மீண்டும் தன் கண் எதிரில் வந்த பூர்ணிமாவின் உருவமும் அவனை சற்றும் கண்டுகொள்ளாத அவள் அலட்சியமும்……..

இத்தனை நாட்களில் தான் தான் அவளை காண விரும்பாமல் ஒதுங்கி இருக்கிறோம் என்னும் அவன் மாயையை உடைத்து அவன் இருக்கும் திசைப் பக்கம் கூட வராமல் ஒதுங்கியிருக்கும் அவளின் செயல் தன்னை வெகுவாய் அவமானப்படுத்தி விட்டதாக அவன் உணர்ந்தான்…… அது எப்படி என்னை ஒதுக்க நீ நினைக்கலாம் என்ற பெரும் கோபம் அந்த நிமிடம் அவன் சிந்தையை  ஆட்கொள்ள தன்னை விட்டு நீங்க முயன்ற பூர்ணிமா விற்கு தண்டனையாக தன்னுடனே அவளை நிறுத்திக்கொள்ள அவன் முடிவெடுத்தான்……. அந்த நேரம் அவன் ஒன்றை உணரவில்லை அவளை விட்டு விலகி இருக்க நினைக்கும் தான் தான் அவள் தன்னை விட்டு சற்று விலகி போனாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் அல்லாடுவது என்று அவன் அறியாமல் போனது யார் பிழை…….

அம்மா ஃபாரின்ல இருந்து என்னோட பிரெண்ட்ஸ் வர்றாங்க….. அதில் இரண்டு  பெண்களும் அடக்கம் அவங்க கூட இருந்து அவங்களுக்கு தேவையானதை பார்த்து உதவி  செய்ய பூர்ணிமா எங்க கூடவே இந்த ட்ரிப் முழுவதும் இருக்கணும் அப்போதுதான்…. அந்தப் பெண்கள் இரண்டு பேரும் கஷ்டப்படாம இந்த பயணத்தை என்ஜாய் பண்ண முடியும்……அழுத்தமாய் அவளைப் பார்த்துக் கொண்டே அவன் பேச அதற்கென்ன சூர்யா உன்னுடைய தோழிகள் வெளிநாட்டை  சேர்ந்தவர்கள் அவர்கள் மொழி புரிந்து அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள பூர்ணிமா தான் சரியாக இருப்பாள்…. அன்னபூரணியும் அனுமதி வழங்கி விட ஆவுடையார் சற்று கூர்மையாக மகனைப் பார்த்தாரே தவிர மறுத்து ஒன்றும் கூறவில்லை……..சூரிய பிரகாஷ் பேச ஆரம்பித்த போது தனக்கென்ன  என்று இருந்த பூர்ணிமா அடுத்தடுத்து அவன் கூறிய வார்த்தைகளில் செய்துகொண்டிருந்த வேலையை மறந்து அசையாது நின்று விட்டாள்……

அவளின் ஸ்தம்பித்த நிலையை பார்த்து முறைத்து  விட்டுப்போன சூரியபிரகாஷ்…. இப்போதும் தன் கண்முன்னால் அதே நிலையில் நிற்கும் பூர்ணிமாவின் திகைப்பான  முகத்தைத் பார்த்தபடி அவளை இன்னும் சற்று நெருங்கி நகர முயன்றவளின் தாவணி முனையை தன் வலது கையால் பிடித்து இழுத்தவன்……என்ன இதுக்கே இப்படி சிலை மாதிரி நின்னா எப்படி இனி வரும் நாட்களில்  இன்னும் எவ்வளவு அதிர்ச்சி உனக்கு காத்துகிட்டு இருக்கு….. பி ரெடி பேபி என்று விட்டு அவன் விலகிச் செல்ல…..பயத்தில் வெகுவாய் துடித்த மனதோடு கடைசியாய் நின்றிருந்த சூரியபிரகாஷ் காரில் பின்புறமாய் பூர்ணிமா ஏற செல்ல…….

 ஏற்கனவே நான்கு பேர் அந்த  வெளிநாட்டினர் ஜோடிகளாக அங்கே அமர்ந்து இருக்க வேறு வழியின்றி பெரும் தயக்கத்திற்கு மத்தியில் சூரியபிரகாஷ் அருகில்  இருந்த இருக்கையில் பூர்ணிமா சென்று அமர்ந்தாள்……அவள் அமர்ந்த வினாடியே அவள் மீது முழுதாய் அப்பி படர்ந்து விடுவதுபோல் நெருங்கிய சூர்ய பிரகாஷின் செயல் அமர்ந்திருந்த இருக்கையோடு பூர்ணிமாவை அழுத்தமாய் பதியசெய்ய……தன் உடலை குறுக்கிக்கொண்டு நடுங்கும் மனதோடு  அவனை பார்க்கவும் பயந்துபோய் கண்களை மூடிக்கொண்ட அந்த அழகிய சிறு பெண்ணின் துடிக்கும் இதழ்களை பார்த்துக்கொண்டே மிக நெருங்கி அவளுக்கு சீட் பெல்ட்டை சரியாக அணிவித்து விட்டு விலகி வாகனத்தை உயிர்ப்பிக்க………சற்று நேரம் சென்றும் எந்த அசைவும் இல்லாமல் போக லேசாய் விழி திறந்தவளின் கண்ணில் பட்டது  உல்லாசமாய் விசிலடித்துக் கொண்டே காரை கிளப்பிய சூரியபிரகாஷின் புன்னகை ததும்பும் முகம்…….ஏனென்று தெரியாமல் தன் கட்டுப்பாட்டையும் மீறி முகமும் சூடாகி சிவப்பது போல் தோன்ற வேகமாய் முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள் பூர்ணிமா அவன் விசில் சத்தம் இப்போது பாடலாய் மாறி அவள் செவிகளை நிறைத்து……..

ஹோ என்ற பெரும் இரைச்சலோடு மலையில் இருந்து கொட்டும்  அருவி நீரை விழிகள் அகல மகிழ்ச்சியாய் பார்த்த அந்த இரு வெளிநாட்டு பெண்களுடன்  சேர்ந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த பூர்ணிமாவின் மனதிலும் அதேபோன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சல்……பிறந்தவுடன் தாயை இழந்து தன் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த பூர்ணிமா விற்கு அந்த கிராமம்தான் பூர்வீகம் . சிறுவயது முதலே அன்னையை கொன்றுவிட்டு பிறந்தவள் என்ற அவப் பேரோடு வலம் வந்த சிறுவயது பூர்ணிமா உடன்  விளையாடக்கூட தங்கள் பிள்ளைகளை அனுப்ப அந்த கிராமத்து மக்களுக்கு மனமில்லை……

ஒரே அரவணைப்பாய் உடன்  வளர்ந்த சகோதரனும் சில வருடங்களில் படிப்பிற்காக மெட்ராஸ்   சென்று விட தன் அன்னையின் பெற்றவர்களின் சுடுசொல்லிலும்…..அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களின்  பேச்சிலும் விழுந்து அவதிப்பட்ட படி வளர்ந்த பூர்ணிமா விற்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற வார்த்தைகளை செவிவழிக் கூட கேட்டதாக ஞாபகம் இல்லை…….. இதில் சென்ற வருடத்தில் அவளின்  பாட்டனாரும் இறந்துபோக அதற்கு மேல் இவளை வளர்க்க மனம் இல்லை என்று அவளின் தாய் வழி பாட்டி கூறி விட….. வேறு வழியின்றி மெட்ராசுக்கு தந்தை அழைத்து வர சற்று நிம்மதியாக மூச்சு விட்டபடி வாழ்க்கையிலே ஒரு புதுவித எதிர்பார்ப்போடு தொடங்கியிருந்த பூர்ணிமாவின் மனதிற்கு   இங்கு வந்த இரண்டு நாட்களில் மீண்டும் பழைய நினைவுகளும் அந்த மக்களின் பழைய வெறுப்பான பேச்சுகளும் மிகவும் துன்பத்தை கொடுக்க………அதை ஆறுதல் படுத்துவது போல் அந்த வெள்ளை நிற நுரையோடு புத்துணர்ச்சியின் பிறப்பிடமாய் குதித்து ஓடும் நீர்நிலையை கண்டு சற்று மனபாரம் குறைந்திருக்க…… 

வெகு காலத்திற்குப் பிறகு சிரிப்பில் உதடுகள் மலர உற்சாக  போதை கண்களில் பிரதிபலிக்க அந்த வெளிநாட்டு பெண்களோடு சேர்ந்து சரிக்குச் சரியாய் தானும் நீரில் நனைந்து விளையாடி தன்  விடுதலையை கொண்டாடிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா……அங்கே சற்றுத்தள்ளி ஆண்களுக்கான பகுதியில் தன் நண்பர்களோடு குளித்துக்கொண்டிருந்த சூரியபிரகாஷ் இன் பார்வை நொடிக்கொரு முறை தன் பக்கம் பட்டு விலகுவதை அவள் அறியவில்லை…….

இத்தனை கச்சிதமாய் ஒரு பெண் சிலையை செதுக்கி அதற்கு உயிர் கொடுத்து அவனைக் கொல்லும் நோக்கோடு அந்த பிரம்மன் அனுப்பி வைத்த பெண்ணவளின்  அங்க வளைவுகளில் விழுந்து பயணப்பட்ட ஒவ்வொரு துளியையும்….. தன் கண்களால் பருகி அவன் தாகம் தீர்க்க முனைந்த சூரியபிரகாஷ் உள்ளமெல்லாம் பீறிட்டுக்கொண்டு மோகம் என்னும் இன்ப ரசம் பொங்கி வழிய….. நீர் ஓடி விளையாடும் அவள் உடல் பாகத்தில் தன் கைகள் கொண்டு பயணப்பட துடித்தது அந்த ஆயிரம் ஆசைகள் கொண்ட  ஆண்மகனின் இளம் நெஞ்சம்…….

சூரிய பிரகாஷிற்க்கு இது போன்ற  உணர்வுகள் முற்றிலும் புதியவை இதுவரை அவன் எத்தனையோ இளம் அழகிகளை அரைகுறை ஆடை அணிந்த பெண்களை  தன் வாழ்நாளில் ஏராளமாய் கண்டு கடந்து வந்திருந்த போதும் அந்த எவரிடமும் தோன்றாத இந்த அதீத உணர்வு இந்தப் பூர்ணிமா விடம்  மட்டும் தோன்றும் விந்தை அவன் அறியாத புதிர்…….. அவளைக் காணும் போதெல்லாம் ஒழுக்கம் நாகரீகம் மென்மை என்ற சொற்கள் எல்லாம் அவன் அகராதியில் இருந்து மறைந்து போக…… ஆதிக்கம் மூர்க்கம்   மோகம் என்ற அதீத உணர்ச்சிகளை தூண்டும் வாக்கியங்கள் எல்லாம் அவன் மூளையில் முட்டி மோத……

தன்னை விட்டு தள்ளி போகும் அவளின் தளிர்க் கரங்களை வலிக்கும்படி  அழுத்தி பிடித்து தன் புறம் வேகமாக இழுத்து தன் பாறையாய் இறுகிய உடலோடு பஞ்சுப் மேகங்களை  சேர்த்துக்கட்டி பட்டு நூல் கொண்டு தைத்தது போல் மென்மையான அவள் பெண்ணுடல் அழுத்தமாய் மோத….,

நீண்ட கருமையாய் அடர்ந்த  அவள் கூந்தலுக்குள் விரல் நுழைத்து இருக்கி பிடித்து…… தன் முகத்தோடு அந்தப் பிறை நிலா முகத்தை சேர்த்து அவன் பிடித்ததால் வலியில்  சுருங்கும் கண்களில் மென் முத்தம் ஆரம்பித்து சுளித்த தேன் தெறிக்கும் செவ்விய அதரங்களை தன் முரட்டு உதடுகளால் கவ்வி பற்களால் கடித்து…… நாவால் அவள் வாயின்  சுவையை அறிந்து உயிர்குடிக்கும் இதழ் முத்தத்தில் மூச்சுத்திணறி தவிக்கும் பெண்ணவளை சற்று இளைப்பாற விட்டு……. அவள் கழுத்துப்பகுதியில் ஊர்ந்து இறங்கி அவள் வாசத்தை சுவாசமாய் தன் உயிரில் நிரப்பிக்கொண்டு  நெஞ்சினும் மஞ்சத்தில் இளைப்பாரி. இடை என்னும் கொடியில் ஊஞ்சலாடி….. உடலென்னும் இன்பக் கடலில் மூழ்கித் திளைக்க ஆண் அவனின் அங்கமெல்லாம் ஆவல் கொண்டு துடிக்கும் துடிப்பை கட்டுப்படுத்தி தன்னிலையில் நிற்கவே சூரியபிரகாஷிர்க்கு பெரும் போராட்டமாக  இருந்தது……..

இதில்  ஏதோ அவள் தான்  தன்னை அவள் புறமாய் வளைக்க முயல்வதாக  அவள் மீதே தன் குற்றம் மறைக்க சூரியபிரகாஷின்  மனம் குற்றம் சாட்ட….. அவளை விட்டு ஒதுங்கி போனாலும் ஒழிய நினைத்தாலும் நொடிக்கு நூறு மடங்கு வேகத்தில் மீண்டும் பூர்ணிமாவின் அருகிலேயே சென்று நிற்கும் தன் மனதின் வேகத்தை அடக்க  முடியாமல் தவிக்கும் அவனின் தவிப்பு இன்று அந்த அருவி நீரில் நனையும் அல்லி மலரை கண்டு சற்று அதிகமாகவே இருந்தது……….

குளித்து முடித்து கால்களுக்கு இடையில் ஓடும் நீரில் நின்றபடி சுற்றுப்புறம் மறந்து விழிகளால் அந்த மது மலரை  பருகிக் கொண்டு நிற்கும் சூரிய பிரகாஷின் பார்வையை சற்றும் அறியாமல்…. மனதில் பொங்கும் நீர்வீழ்ச்சியின் புத்துணர்வோடு நீரிலிருந்து வெளிவந்த பூர்ணிமா அவனைக் கடந்து செல்ல…… அவள்    விலகிச் செல்வதை தாளமுடியாமல் என்றும் பூர்ணிமா அவனை விட்டு போய்விடக்கூடாது என்கிற அதிகப்படியான உணர்வுகளின் உச்சக்கட்டத்தில் தன் கட்டுப்பாட்டையும் மீறி அவனே உணராமல் தன் வலது காலால் அவள் முழங்காலுக்குக் கீழ் தட்டியவனின்  முறையில்லா செயலில்….. தன் நிலைப்பாடு இழந்து தண்ணீரில் விழுந்த பூர்ணிமாவை தாங்கி பிடிக்கவும் ஸ்மரணை இல்லாது சூரியபிரகாஷ் பார்த்துக் கொண்டு நிற்க….. அவன் கண்முன்னால் நீரில் அடித்து சென்ற பூர்ணிமா சற்று ஆழமான பகுதியில் விழுந்து காணாமல் போக…..அப்போதும் கூட தன் நிலையில் மாற்றம் இன்றி அவள் மூழ்கும் நிலையை  பார்த்தபடி நின்றான் சூரியபிரகாஷ்……

ஓ மை காட் சூர்யா  ப்ளீஸ் கோ மேன் ஹெல்ப் ஹேர்….என்று அவன் தோழி சத்தமாய் குரல் கொடுத்து  சூரிய பிரகாஷின் தோல்களில் பலமாய் குத்த அதில் தன்னுணர்வு பெற்றவன் பதறியடித்துக்கொண்டு அவன் நண்பர்கள் குதிக்கும் முன்னால்  அவள் விழுந்த இடத்தில் குதித்து பதட்டத்தோடு தன் உயிரையே தேடுவது போல் தவிப்போடு தேடியவன் கைகளில் அவன் உயிரானவள் சிக்கவே இல்லை……. 

ஐயோ… ஐயோ என்று அலறிய மனதோடு என்ன காரியம் செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்வோடு…. சுவாசிக்கவும் மறந்து அவளை காப்பது ஒன்றே குறிக்கோளாய் ஆழத்தில் அமிழ்ந்து வெகுநேரம் தேடியவன் கைகளில் பெண்ணவளின் முந்தானை கிடைக்க பெரும் ஆவேசத்தோடு அவளைப் பற்றி இழுத்து பூர்ணிமாவை சுற்றியிருந்த கொடிகளை அறுத்து விட்டு அவளோடு நீரில் இருந்து பாய்ந்து வெளிவந்தது அவளை பத்திரமாய் தரையில் கிடத்தி அவசர அவசரமாய் அவளுக்கு முதல் உதவிகள் செய்து ஒரு வழியாய் அவள் உடலில் சற்று அசைவு உண்டாக அதில் .  மிக மெதுவாய் பூர்ணிமா விழி திறக்க அவள் பார்வையில் விழுந்தது……

பயத்தில் முகம் வெளிறி கலங்கிய கண்களோடு தான் இதுவரை கண்டிராத சூரியபிரகாஷின்  அவள் மீதான காதல் பொங்கித் ததும்பும் முகம்தான் . தான் காண்பதை நம்ப முடியாத பெரும் வியப்போடு பூர்ணிமா அவனை பார்க்க…….  அவள் நலத்தை உறுதி செய்வது போல் தன் இரு கரங்கள் நடுங்க அவள் முகம் முழுவதும் வருடி கொடுத்தபடி அவள் கண்களுக்குள் பார்த்தவனின்    அதுவரை இருந்த இயக்கம் நின்று போக விழிகள் சொருக தானும் மயங்கி அவள் அருகிலே விழுந்தான் சூரிய பிரகாஷ்…….

உணர்விழந்து தன் மடியில் விழுந்தவனை அனிச்சை செயலாய் வாரி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கூக்குரலிட்டு உதவி கேட்டு கத்த ஆரம்பித்தாள் பூர்ணிமா…….தன் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளும் உறுதியோடு  அவனை இறுக்கிக் கொண்டன பெண்ணவளின் மென்கரங்கள்…….

                                       சின்ரெல்லா வருவாள்…….. 

Advertisement