Advertisement

ஒ….!!!!  மை சின்ரெல்லா – அத்தியாயம்.2

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அங்கிருந்து  தலைதெறிக்க ஓடிய மூன்று பெண்களும் மறுபடியும்…….கல்லூரி வளாகத்திற்குள் பூனைபோல் பதுங்கிப் பதுங்கி வந்தனர்…..உள்ளே நுழைந்ததும்…..எங்கே அவள் மறைந்து நின்றிருந்தாலோ அந்த இடத்திற்கு வேகமாக சென்று பார்த்த ஷிவானி யின்  கண்களி ல் அந்தக் கடிதம் சிக்கவில்லை…..தன் அருகில் வந்த தோழிகளைப் பார்த்து பரிதாபமாக இதழ் பிதுக்கியவள் இங்கே எங்கேயும் அது இல்ல…….. யாராவது அதை எடுத்திருப்பார்களோ….?? பாவமாக கேட்க……

எப்போதும் தங்களை வசீகரிக்கும் அவர்களின் அப்பாவி தோழியின் பிள்ளை முகம் சுருங்குவது தாளாமல்……ஷிவு அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகி இருக்காது இங்க பாரு வேலை செய்றவங்கள தவிர வேறு யாருமே இல்லை….. அனேகமா காத்துல உள்ள இல்லைனா  வெளியே அடிச்சிட்டு போய் இருக்கும்……ஷிவானியின் கையைத் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திய நிஷா…….

ஷிவு நீ இங்க கார்டன் ஏரியால தேடு நாங்க உள்ள கிளாஸ் ரூம் பக்கம் போயிருக்கான்னு பார்க்கிறோம்…… சொல்லிவிட்டு ஆளுக்கொரு பக்கம் அந்தக் காகிதத்தை தேடிப்போக……

தன் தலைவிதியை நொந்தபடி தானும் அங்கு பரந்துவிரிந்த புல்தரையில் எங்காவது அவள் விட்டுச் சென்ற கடிதம் கிடைக்கிறதா என்று தீவிரமாக தேட ஆரம்பித்தாள்…… லேசாக தூரல் வேறு விழ  ஆரம்பிக்க அதையும் பொருட்படுத்தாது அங்கே செடிகொடிகளின் அருகில் கிடந்த அனைத்து தாள்களையும் எடுத்து பிரித்து பார்த்தும் அவள் விட்டுச் சென்ற அந்தக் கடிதம் மட்டும் கிடைக்கவே இல்லை…..

ஒரு மணி நேரத்திற்கும் மேல் சிரத்தையோடு கிட்டத்தட்ட புல் தரையில் முட்டி போட்டு அமர்ந்த  வாக்கில்…… தேடிக் கொண்டு இருந்த அவளின் கண் களுக்கு முன்பு ஸ்சூ அணிந்த இரண்டு கால்கள்  தென்பட…… ஷிவானி யின் உள் முதலில் தோன்றியது பயம்தான் , அதற்கு காரணம் எங்கே அந்த புதியவன் மறுபடியும் வந்து விட்டானோ  என்ற எண்ணம் தோன்றி அவளை திகிலடைய செய்தது……

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட முழுதாக அவன் முகத்தையும் கண்களையும் அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை……ஆனாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவன் கண்களில் ஒளியும் உதடுகளில் வித்தியாசமான சிரிப்பும் ஷிவானியை வளமாகவே தாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்…..

அந்தக் கண்கள் அது காட்டும் பாவனை  இப்போதும் அது மனதில் தோன்றிய நொடி அவளறியாத…… ஒரு வித நடுக்கம் உடலில் ஓடி மறைய தன் கண்களை இறுக மூடிதிறந்தவள்……எது எப்படி இருந்தாலும் மீண்டும் ஒருமுறை அவனைப் பார்க்க மட்டும் கூடவே கூடாது என்கிற பிரார்த்தனையை மனதில் வைத்தாள்…….

அப்போது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் யாரை இவ்வுலகத்தில் மிகவும் அதிகமாக நேசிக்கிறோமோ…. அவர் மூலமாகவே அவன் மீண்டும் தன் வாழ்க்கையில் வரப் போவதை…… நாம் அறியாத பல புதிர்கள் நிறைந்த சுவாரஸ்யமான விளையாட்டு தானே வாழ்க்கை…….

தன் முன்பு வந்து  நின்ற அந்த ஆணின் கால்களை பார்த்த வினாடியில் அத்தனையும் அவள் மனதில் ஓடி மறைய…..ஒரு வித எச்சரிக்கையோடு விழி உயர்த்தி பார்த்தவளின் கண்களில்….. முகத்தில் சிரிப்போடு அவளைப் பார்த்தபடி நிற்கும் யுகேந்திரன் தெரிந்தான்……

இத்தனை நாள் தூரத்தில் இருந்தே அவள் பார்த்து பார்த்து மகிழ்ந்த அவளின் யுகேந்திரன் இன்று இத்தனை அருகில்….!!  இப்போது மீண்டும் ஒரு சிலை பாவம் அவளிடம்…..தன்னைப் பார்த்தும் அசைவில்லாமல் அமர்ந்திருக்கும் ஷிவானியை கண்டு  அழகாய் இதழ் பிரித்து புன்னகைத்தவன்…….

தானும் இப்போது  ஒற்றைக் கால் மடக்கி அவள் அருகில் அமர்ந்து……. ஹலோ ஏங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அதுவும் இந்த மழை நேரத்துல இங்க வேற  யாருமே இல்ல…?? . அவள் முகத்தின் முன்பு அவன் கை தட்டி கேட்க……

அதில் தன்னுணர்வு வரப் பெற்றவள் அவனைப் பார்த்து  ஹீ… ஹீ என வழிசலாய் சிரித்தபடி ஒன்னும் இல்ல…… சும்மா கொஞ்சம் முக்கியமான ஒரு பேப்பர் அது தொலைஞ்சு போச்சு…… அதுதான் தேடிக்கிட்டு இருக்கேன் படபடக்கும் மனதை உள்ளுக்குள் அடக்கி வெளியே  அமைதியாக சொன்னாள் ஷிவானி….

ஒ… அப்போ  நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் சொன்னதோடு….. அது எப்படி இருக்கும் என்று கேட்டுவிட்டு அவளோடு மிக சாதாரணமாக அவனும் தேட ஆரம்பிக்க…….அவளுக்குத்தான் யுகேந்திரனின்  அருகில் சிறிது மூச்சு முட்டும் உணர்வு எழுந்து அவளை அலைக்கழித்தது……

அதன் பிறகு  தேடுவது போல் பாவனை செய்தாலும்…. தன் ஓரவிழிகளால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானிக்கு , இப்போது   யுகேந்தர் அவளைப் பார்த்தது போல் அருகில் நெருங்கி வருவது விழ‌‌…..

ஐயோ கடவுளே இவன்  எதுக்கு என்கிட்ட இவ்வளவு நெருங்கி வர்றான் , மனதின் ஆர்ப்பரிப்பு க்கு….. எதிர்புறம் சிறிதும் அசைவில்லாமல் அமர்ந்த படியே அவள் இருக்க…… தன் மூச்சுக் காற்று அவள் கண்ணத்தில் படும் அளவிற்கு நெருங்கியவன்…… ஷிவானியின் தோளில் அமர்ந்து இருந்த அந்த சிறிய வண்டினை அவள் மேலிருந்து மிக மென்மையாக தட்டி விட்டு……அதில்  ஷிவானி அவனை நிமிர்ந்து பார்க்க…..

அது ஒன்னும் இல்லை  ஒரு சின்னப் வண்டு உங்ககிட்ட சொன்னா… நீங்க பயப்படுவிங்க  ன்னு. நினைத்துதான் நானே அதை தள்ளி விட்டேன்……. சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டவன் இப்போ ரொம்ப டைம் ஆயிடுச்சு மழை வேறு அதிகமா வர மாதிரி இருக்கு…… அதனால வீட்டுக்கு போங்க நாளைக்கு வந்து தேடிக்கலாம்…….

அவன் வார்த்தையை மறுக்கக் கூட தோன்றாமல் தானும் எழுந்து கொண்டவள்…. அமைதியாக நான்கடி  எடுத்துவைத்தவள் திடீரென்று………. நினைவு வந்தது போல் சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்து…… யுகேந்தர் என்று உரக்கக் அழைத்தாள்……

அதில்  திரும்பியவன் அவளை  கேள்வியாக பார்க்க… என் பெயர் என்று ஆரம்பிக்க….. ஷிவானி   அவளுக்கு முன்பாகவே அவன் கூறியிருந்தான்……. என்னை தெரியுமா உங்களுக்கு…??  ஆச்சரியத்தோடு அவள் கேட்க…..

நம்ம காலேஜ் ஓட  சூப்பர் கிளாசிக் டான்ஸர  யாருக்குத்தான் தெரியாது மிஸ் ஷிவானி என்றவன்…… ஜாக்கிரதையா வீட்டுக்குப் போங்க என்று விட்டு  மீண்டும் ஒரு அழகான புன்னகையோடு அவளிடம் விடை பெற்று சென்று விட்டான்……அவன் தன் கண்ணை விட்டு மறையும் வரை அமைதியாக இருந்தவள்……அவன் சென்ற அடுத்த நொடியில்……  

ஐ….யா அவனுக்கு என்ன தெரிஞ்சிருக்கு ,  தரையில் விழுந்த ரப்பர் பந்தாய் மாறி குதித்து மனதிற்குள் ஆர்ப்பரித்தவள்……..கால்கள் தரையில் படாமல் குதித்தபடி தன் தோழிகளிடம்  யுகேந்திரன் உடனான நிமிடங்களை வெகுவான பூரிப்போடு பகிர்ந்தவாறு…….. அவர்கள் அங்கு எதற்கு வந்தார்களோ அந்த காரணத்தையே முற்றிலுமாக மறந்து விட்டு…..கல்லூரியில் இருந்து வெளியேறினர் தோழிகள் மூவரும்…….

ஆனால் அந்த  வளாகத்தில் மீண்டும் ஷிவானி உள்ளே நுழைந்ததில் இருந்து……. நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் மிகக் கூரிய பார்வை  கொண்ட இருவிழிகள்…… கவனித்து தனக்குள் குறித்து கொண்டதை அறியாத அறியாமையோடு…….யுகேந்தர் உடனான தன் உரையாடல்களை மனதிற்குள் நினைத்தபடி மகிழ்ச்சியாகவே ஷிவானி தன் வீட்டுக்குக் கிளம்பினாள்……

அந்த காபி ஷாப்பிற்கு நுழையும்போதே ஷிவானியின்  மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது…….. அந்தக் இடம்….. பெரும்பாலும் மற்ற தேநீர் விடுதிகள் போல் சுற்றிலும் கண்ணாடி கதவுகள் ஏசி என்று முழுக்க முழுக்க இயந்திர தன்மையாக இல்லாமல்……

சுற்றிலும் நிறைய மரங்கள் வளர்ந்து இருக்க அதன் நடுவில் குடைகள் போன்ற அமைப்போடு சிறுசிறு அலங்கார விளக்குகள் எரிய மிகவும் இயற்கையான எழிலான…….. அந்தத் தேனீர் விடுதியை அவளுக்கு மிகவும் பிடிக்கும்…….

அதற்கு அந்த இடத்தின் இயற்கை அமைப்பு ஒரு காரணம் என்றால் இரண்டாவது காரணம் அவளின் அத்தை   அந்த இடத்தின் உரிமையாளர் பூர்ணிமா தான்….. தாய் தந்தையோ உடன் பிறந்தவர்களோ இல்லாத அவளுக்கு……. அன்னைக்கு அன்னையாய் உலகின் அனைத்துமாய்  இருந்து……கடந்த 15 வருடங்களாக அவளின் ஒவ்வொரு தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் அன்னைக்கு நிகரான அத்தை பூர்ணிமாவை ஷிவானிக்கு மற்ற எதையும் விட மிக மிக மிக பிடிக்கும்……. பூர்ணிமாவை  பற்றிய நினைப்பில் கனிந்த முகத்தோடு ஷிவானி உள்ளே செல்ல…….

அந்த அழகான இடம் முழுவதும் வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்க நிற்க நேரமில்லாமல்…… பூர்ணிமாவும் அவரின் தோழியும்  அந்தக் விடுதியின் மற்றொரு உரிமையாளருமான சிவகாமியும் சுற்றி சுழன்று தங்கள் கடமையை பார்த்தபடி இருக்க….. தானும் சத்தமில்லாமல் உள்ளே சென்றவள் உடையை மாற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தாள்…….

அங்கும் இங்கும் நடமாடும் வாக்கில் எதிர்ப்படும்போது…….. இவளைக் கண்ட பூர்ணிமாவின் முகத்தில் ஷிவானி காண  பிரத்தியேக புன்னகை கனிவோடு ஒளிர்ந்தது……தானும் அவரைக் கண்டு ஒற்றைக் கண் சிமிட்டி தன் தெற்றுப் பற்கள் தெரிய சிரித்தவள்…….

அவருக்கு நிகராய் பம்பரமாய் சுழல ஆரம்பித்தாள்……பிற்பகல் பொழுதில் அந்தச் சிறுபெண்ணின் துள்ளலான உற்சாகமான பேச்சை கேட்கவும்… அவளோடு உரையாடவும் அங்கு பெரும் கூட்டமே காத்திருந்தது…….

ஹாய் மை டியர்  ஹீரோஸ் எப்படி இருக்கீங்க கூவியபடி  அந்த வயதானவர்கள் பத்து பதினைந்து பேர் சுற்றி அமர்ந்திருந்த……. இடத்திற்கு அவர்கள் எப்பொழுதும் வாடிக்கையாக விரும்பும் உணவு வகைகளை பரிமாறியபடி……. அவர்கள் ஒவ்வொருவரின் நலனையும் விசாரித்து கேலி பேசி உற்சாகமாக உரையாடி என்று…… அந்த சூழலையே  அழகோவியமாய் மாற்றிக் கொண்டிருந்தாள் ஷிவானி…..

அவளோடு பேச அவள் பேசுவதைக் கேட்க என்று அந்த வயோதிக மனிதர்களின் முகத்தில் தெரிந்த ஆவலை……  ரசித்தபடி தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு……தன் அண்ணன் மகளை நினைத்து மிகுந்த நிம்மதியும் பெருமையையும் ஒருங்கே எழுந்தது…….

தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் மூலம் திருமணத்தை வெறுத்து ஒற்றை  மரமாய் நின்ற…… அவளுக்கு பாதுகாப்பு ஆதரவோடு அன்பும் அளித்த அண்ணன் குடும்பமே வாழ்வதற்கான உந்துதல் சக்தியை  வழங்கியது……

அதுவும் கூட  ராணுவத்தில் இருந்த அண்ணன் இறந்து போய் அந்தத் துக்கம் தாங்காது ஒரு சில ஆண்டுகளில் அண்ணியும்……அவளையும்  சிறு கைக்குழந்தையாய் இருந்த ஷிவானியும் தனிமையில் விட்டுவிட்டு மாண்டு போன போது……உயிரை கொள்ளும் வேதனை நிறைந்த  அனைத்து துக்கங்களையும் கடந்து அவர் வாழ்வதற்கு உந்துதலையும் மனதிற்கு உறுதியும் தந்தவள் ஷிவானி……

அவர் அடிக்கடி நினைப்பதுண்டு கடவுள் தந்த அற்புதக் குழந்தைகளில் அவளும் ஒருத்தி என்று…..எப்போதும் குறும்பும் கலகலப்பு மாய் அடுத்தவர் மனம் மகிழும் விதத்தில்  எந்நேரமும் சிரித்த படி திரியும் மருமகளை கண்டு அகம் நிறைந்த உணர்வோடு…….

சமீபகாலமாக தன்னை சூழ்ந்திருக்கும் எந்நேரமும் அவர் மனதைக் குழப்பும் ,  விடாது துரத்தும்….. பிரச்சினையில் இருந்து விலகி மனம் சற்று அமைதி அடைவது போல் தோன்ற…… அவளின் உற்சாகத்தை தன்னகத்தே வாங்கி தானும் நிம்மதி அடைய முயற்சித்தார்…… ஷிவானியின் அன்பு அத்தை  பூர்ணிமா…….

இரவு பத்து மணி அனைத்து வாடிக்கையாளர்களும் சென்றிருக்க பெண்கள் மூவரும் ஓய்வாக அமர்ந்து அன்றைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை விவாதித்தபடி இருக்க……ஏய் ஷிவு என்னடி உன் காலேஜ் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு…?? ரெண்டு அரியர்  வச்சிருக்கியே அதை எப்போ கிளியர் பண்ண போற…. இல்லை இப்படியே வெட்டியா சுத்திக்கிட்டு போறியா…..

எப்போதும் அவளை வம்பிழுப்பதை  முதல் கடமையாய் வைத்திருக்கும் சிவகாமி இன்றும் அதே வேலையைச் செய்ய……இவர்கள் இருவரைப் பற்றி நன்கு தெரிந்த பூர்ணிமா அவர்களுக்கு நடுவில் போக முயற்சிக்காமல்  சுவாரஸ்யத்தோடு பார்த்தபடி இருந்தார்…….

ஹலோ mrs தர்மராஜ் கொஞ்சம் பார்த்து பேசுங்க…. உங்க பையன் அந்த போண்டா  இருக்கானே அவன் கூட தான் 5 ஆரியர் வெச்சிருக்கான்……எப்பவும் தின்னுக்கிட்டே இருக்க வேலையை  விட்டுட்டு கொஞ்சமா படிச்சு அதையெல்லாம் முதல்ல கிளியர் பண்ண சொல்லுங்க…… அத விட்டுட்டு என் கிட்ட மோது நீங்க…. எங்க அத்தை கிட்ட சொல்லி உங்களது வேலையில் இருந்து  தூக்கிடுவேன்….

கையை துப்பாக்கி சுடுவது போல் வைத்து தன்னை மிரட்டும் ஷிவானியின் விரல்களைப் பற்றி அவளை இழுத்து அருகில்  போட்டு முதுகில் விளையாட்டாய் மோத்தியவர்….. வாய் வாய்….. எப்போதும் பேசிக்கொண்டே சிரிச்சுகிட்டே இருக்க இந்த வாய் இருக்கே…. இதை தைக்க எவனாவது ஒருத்தன் கண்டிப்பா வருவான் பாரு…… அவன் நில்லுனா நின்னு உட்காருன்னா  உட்கார்ந்து அவனது விரல் அசைவுக்கு பொம்மை மாதிரி நீ ஆட போற பாரு……

விளையாட்டாய் தான் சொன்ன வார்த்தைகள் ஷிவானியின் வாழ்க்கையில் வினையாகி போகும் என்று…..அந்த அன்பான பெண்மணி கனவு கூட கண்டிருக்க மாட்டார்………

ஐயோ அத்தமா  இங்க பாருங்க உங்க அன்புத் தோழி என் முதுகுல எப்படி அடிக்கிறாங்க ன்னு   என்ன காப்பாத்துங்க ப்ளீஸ்…… ஏதோ சிவகாமி அவளை கொலை செய்ய முயல்வது போல் ஷிவானி அலறி நடிக்க…… உங்க ரெண்டு பேருக்கும் வேற என்ன வேலை…? போலியான சலிப்போடு  சொன்ன பூர்ணிமா…. சரி சரி அட்டகாசம பண்ணது போதும்….. உனக்கு பிடிச்ச கேக் நான் எடுத்து வச்சிருக்கேன் அதைப் போய் கொண்டு வரேன்……. சொல்லிவிட்டு பூர்ணிமா எழுந்து உள்ளே போக…….

அதுவரை ஷிவானியோடு  வம்பு வளர்த்துக் கொண்டிருந்த சிவகாமி…..இப்போது அதை விட்டுவிட்டு பூர்ணிமா உள்ளே போய் விட்டாரா என்பதை ஒரு முறை கவனித்துவிட்டு இவள் புறம் திரும்பியவர்…… ஷிவானி உங்க அத்தை பத்தி உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்…. அவர்  முகத்தின் தீவிரத்தை பார்த்தவள்….

என்ன சிவா மா சொல்லுங்க  அத்தை பற்றிய பேச்சு என்றவுடன் ஷிவானி  தன் விளையாட்டு தனங்கள் விட்டு மிக கவனமாக கேட்க……

இப்போ அதைப்பற்றி  பேச முடியாது நீ நாளைக்கு வீட்டுக்கு வா அங்க பேசலாம்….. நான் உன்கிட்ட சொல்ல போற விஷயத்தை….

அதை  உன்கிட்ட சொல்லவே கூடாது என பூர்ணிமா என்ன வான் பண்ணி வெச்சிருக்கா……சொல்லிக் கொண்டே போனவர் உள்ளிருந்து பூர்ணிமா வருவதைப் பார்த்துவிட்டு….. அமைதியாக இருக்கும்படி இவளுக்கு சைகை செய்தவர்  வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தார்…….

அத்தை பற்றிய விஷயம் அது என்னவாக இருக்கும் என்று சஞ்சலத்தில் மூழ்கி அமைதியாகி போனாள்   ஷிவானி……

நாளை விடியல்  யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ  அது யாருக்கு தெரியும்……..

                               சின்ரெல்லா வருவாள்……….

Advertisement