Advertisement

ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.19 

சென்னையைத் அடுத்த சில மைல்கள் தொலைவில்  மிக கம்பீரமாய் அமைந்திருந்த அந்தப் பெரிய மாளிகையில் காலைவேளையில் அமைதிக்கு மாறாக…. பெரும் பரபரப்பில் சுறுசுறுப்பாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது உள்ளே ஒரு பெண்ணின்  குரல் உயர்ந்து கேட்க அதற்கு கட்டுப்பட்டு அங்கிருந்த வேலையாட்கள் பம்பரமாய் சுற்றி சுழன்று மீண்டும் அந்த மாளிகையை புது மெருகோடு பளபளக்கச் செய்யும் விதமாக நாலாபுறங்களிலும் சுத்தத்தையும் தூய்மையும் கொண்டு வர முயன்ற படி வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்……..

சமையலறைல் அந்த  காலை வேளையிலேயே பலகாரங்களும் இனிப்பு வகைகளும்  வெகு ஜோராய் நெய் வாசத்தோடு தயாராகிக் கொண்டிருந்தது…… வேலையாட்கள் அனைவரையும்  தன் மனைவி சற்று நொடி கூட நிற்க விடாமல் விரட்டி வேலை வாங்கும் அழகையும் இந்த வயதிலும் முகத்தில் புன்னகையும் சாந்தமும் நிறைந்திருக்க அழகின் வடிவமாய் தெரிந்த தன் மனையாளை பார்வையால் வருடியபடி அமர்ந்திருந்தார்.  அந்த வீட்டின் குடும்ப தலைவரான ஆவுடையார்…..

எப்போதும் அமைதியும் சாத்தியமும் குடிகொண்டிருக்கும் தன் தர்ம பத்தினியின் முகத்தில்  இன்று பொங்கி எழும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் என்ன காரணம் என்று கூடவா அவரால் புரிந்துகொள்ள முடியாது…. அதை உணர்ந்த வரையில் அவருக்கு  அதில் சந்தோஷத்தோடு சிறிது பொறாமை போன்ற ஏதோ ஒன்றும் சேர்ந்து இருந்தது……..

 மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து இன்று திரும்பிவரும் தன் செல்ல சிறிய மகன் சூரிய பிரகாஷின் வருகைக்காக  இத்தனை அதகளம் செய்யும் தன் மனைவியின் ஆர்ப்பாட்டத்தை கண்டுவர் சற்று கடுப்பாகி இருக்க தன் மீதான மனைவியின் பாசத்தை எப்போதும் பங்கு போடும்   சிறிய மகனின் மீது அவருக்கு பொறாமை இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்……..

தன் இல்லத்தரசியை மட்டுமே பார்வையில் பதித்து உலகம் மறந்து அமர்ந்திருந்த ஆவுடையாரின்  செவிகளில் மாடிப்படியிலிருந்து குதித்தோடும் மானின் வேகத்தோடு துள்ளிவரும் இருகால்களின் தங்கக் சலங்கைகள்  எழுப்பிய ஓசை வில அடுத்த நொடி அதுவரை சிந்தித்த அனைத்தும் மொத்தமாய் மறந்துபோக ஆவலுடன் படிக்கட்டை பார்த்தவர் கண்களை ஏமாற்றாமல்   தரையில் பாதம் படுகிறதா இல்லையா என்று சந்தேகிக்கத் தோன்றும் துள்ளல் நடையோடு வந்து அவர் முன்பு காட்சி கொடுத்தாள் அந்த வீட்டின் செல்ல இளவரசி  ஆவுடையார் அன்னபூரணி தம்பதியரின் கடைசி வாரிசு சௌந்தர்யலக்ஷ்மி…..

அப்பா என்ற ஆரவாரமான அவளின் ஒற்றை  அழைப்பு அவரின் உள்ளத்தை உருக வைக்க….. இருகரம் நீட்டி அம்மாடி என்று அழைத்தவரின்  கைகளுக்குள் புகுந்து அருகில் அமர்ந்து தோள்களில் கிளையாய் கொஞ்சிய மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்  ஆவுடையார்…….

எங்கோ திருச்சியை தாண்டிய சிறு கிராமத்தில் பிறந்து உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு அன்றைய மெட்ராசுக்கு குடிபெயர்ந்த அவரின் தந்தை அரங்கநாதனின்…… தன்னிகரில்லா உழைப்பில்  சேர்த்த அனைத்து செல்வத்தையும் கொண்டு….. பல கனவுகளோடு அரங்கநாதன் தன் நண்பனுடன் சேர்ந்து உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யம்……சிறுகச்சிறுக வேர்பிடித்து இன்று ஆலமரமாய் வளர்ந்து இருக்கும் அவர் குடும்ப நிறுவனமான ஏ எஸ்  கல்வி நிறுவனம் சென்னையிலும் இன்னும் தமிழகத்தில் பல ஊர்களிலும் தன் கிளைகளைப் பரப்பி பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்திவரும் மிகப்பெரிய கல்வி நிறுவனமான….. ஏ எஸ் கல்வி குழுமத்தை முழுக்க லாப நோக்கு அல்லாமல் சேவை மனப்பான்மையோடு திறன்பட  நிர்வாகிக்கும் ஆவுடையாருக்கு அவரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் மட்டுமே உலகம்……

முதல் மகன் சற்று அமைதியானவன்  தந்தையின் முடிவிற்கு கட்டுப்பட்டு  செயல்பட்டு தகப்பனை பெருமைப்படுத்தும்   பிள்ளையான ஆனந்தனுக்கு திருமணமாகி மூன்று வயதில் அவர்கள் பரம்பரையில் அடுத்த வாரிசாக ஆரியன்  இருக்க……இரண்டாவது மகன் சூர்யா பிரகாஷ் பெயருக்கு ஏற்றதுபோல் சற்று முன் கோபக்காரன் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல்  தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தில் பிடிவாதமாக செயல்படுபவன்…….

இளங்கலை கல்வி படிப்பை தங்கள் கல்லூரியில் படித்துவிட்டு முதுநிலைப் படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று முடிவாகக் கூறி தன் ஆசையை தந்தையோடு சிறிது சண்டையும் போட்டு நிறைவேற்றிக் கொண்ட மகா காரியக்காரன்……அடுத்தவள் சௌந்தர்ய லட்சுமீ எதைப்பற்றியும் தீவிரமான எண்ணங்களும் சிந்தனைகளும் இன்றி  அந்த அரண்மனையை தன் ஒவ்வொரு சிரிப்பாலும் செயலாலும் அழகாக்கி தன் சிறகை விரித்து பறக்கும் அவர்கள் வீட்டின் அழகிய பட்டாம்பூச்சி……ஆவுடையாருக்கு உடன் பிறந்த சகோதரிகள் என்று யாரும் இல்லாமல் போக சௌந்தர்ய லட்சுமி அவர்களின் உயிராகி போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை…….

அது நேரம்வரை வீட்டின் வேலைகளில் பரபரப்பாய் வேலை ஆட்களை ஏவி கொண்டிருந்த அன்னபூரணிக்கு மகளும் தந்தையும் கொஞ்சிக்  கொண்டிருந்த காட்சி கண்ணில் பட்டு இப்போது அவருக்கு பொறாமையை தூண்டிவிட்டதோ….

சௌந்தர்யா என்று சற்று அதட்டல் போல் அழைத்தவர்  ஏண்டி அண்ணன் வெளிநாட்டில் படித்துவிட்டு திரும்பி வீட்டுக்கு வர்றான்  அதுக்காக அம்மாக்கு கூடமாட சேர்ந்து உதவி செய்வோம் என்று கொஞ்சமாவது உனக்கு தோணுதா….. எப்போ  பாரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே கொஞ்சல் தான் இங்க மத்தவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதா இல்லையா….என் பிள்ளையைப் பற்றி யாருமே கவலைப் படுவது இல்லை போலியாக சலித்துக் கொண்ட தன் மனைவியை  கண்டு கடகடவென்று சிரித்தவர்……

ஏண்டி அதுதான் நீ காலையில் இருந்து இந்த வீட்டையே தலைகீழாக புரட்டி எடுக்கிறாயே அது பத்தாதா…. இதுல உன் கூட சேர்ந்து என் மகளும் நாட்டியம் ஆடுமா…..  அவ பாவம்டி சின்ன குழந்தை அவளை எதுக்கு வேலை செய்ய வைத்து கஷ்டப்படுத்த நினைக்கிறே உன் சீமந்த புத்திரன் என்ன போருக்கு போயி சண்டை போட்டு வெற்றி வாகை சூடிய திரும்ப வருகிறான் அவனை ஆரத்தி எடுத்து கொண்டாடி வரவேற்க ……

என்று ஆவுடையார் மனைவியை நக்கல் பேச  சரியா சொன்னிங்க அப்பா இந்த சின்ன அண்ணனுக்கு  அறிவே இல்ல படிக்க நம்ம காலேஜி விடவா அந்த வெளிநாட்டில் நல்லா சொல்லித் தர  போறாங்க வெறும் வெட்டி பந்தாவுக்காக இந்த அண்ணன் இப்படி எல்லாம் செய்யிது அது தெரியாமல் இந்த அம்மா அவனை  தலையில தூக்கி வச்சு கொண்டாடுது இதில் நானும் கால்ல சுடுதண்ணி கொட்டின மாதிரி வேலை செய்யணுமா இந்த அம்மா எப்படியெல்லாம் சதித்திட்டம்  போடுறாங்க பார்த்தீங்களாப்பா…. எப்பவும் இந்த அம்மாவுக்கு ஆண் பிள்ளைகள் மட்டும் ரொம்ப வசதி……..என்று நீட்டி முழக்கி தன் அன்னையை தகப்பனிடம் சௌந்தர்யா மாட்டிவிட  தன் மகனை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியவளின் தலையில் கொட்ட வந்த பூர்ணிமாவின் கைகளில் சிக்காமல் மகளை தன் கரங்களுக்குள் பொத்தி பாதுகாத்த ஆவுடையார் என் பொண்ணு சொல்றதுல என்னடி தப்பு இருக்கு……..

இந்த  ஊருக்கே நாம பாடம் நடத்த அதையே படிக்க அப்பனோட காசையெல்லாம் கரியாக்கி வெளிநாட்டிற்கு   பந்தாவுக்காக படிக்கப் போன உன் பிள்ளைக்காக என் மகளை வேலை வாங்கப் போகிறாயா என்று ஆவுடையார் சிறிது கேலியாக கேட்க……தன் பிள்ளையைப் பற்றி குறை கூறிய கணவரை விரோதி போல் முறைத்து பார்த்த அன்னபூரணி  என் மகன் சீமையில போய் படிச்சுட்டு வரானேன்னு உங்களுக்கும் உங்க பொண்ணு பொறாமை முதல்ல உங்க ரெண்டு பேர் கண்ணும் படாமல் அவனுக்கு திருஷ்டி சுத்தி போடணும் தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு உள்ளே போன  அன்னபூரணியின் செய்கையில் மீண்டும் ஒருமுறை கலகலத்து சிரித்தனர் தந்தையும் மகளும்………

தங்கையின் பிள்ளை சிரிப்பை  ரசித்தபடி வந்த ஆனந்தனின் கைகளில் இருந்த ஆரியனை   பார்த்ததும் தங்க குட்டி என்ற சௌந்தர்யாவின் ஒரு அழைப்பில்….  தகப்பனின் கைகளில் இருந்து துள்ளிக்குதித்து தன் பாசமிகு அத்தையிடம் செல்ல ஆர்ப்பரித்தான்   மூன்று வயதே ஆன சின்னஞ்சிறு ஆரியன்…..தன் அன்னையை விட எப்போதும் தன்னிடம் மட்டுமே விளையாடும் தன்னைக் கொண்டாடும்   அத்தையின் மீது பெரும் மையல் உண்டு அவனுக்கு…… 

தன் கைகளில் அடங்காது நெளிந்த மகனை தங்கையின் கைகளில் ஒப்படைத்த ஆனந்தன் தந்தைக்கு எதிரில் அமர்ந்து என்னப்பா ஒரே சிரிப்பா இருக்கு…..என்று வினவ உன் தம்பி வரதுக்கு உங்க அம்மா இந்த வீட்டையே ரெண்டு பண்றானா மகனே இதுல நாம வேற அந்த  துறைக்கு கூஜா தூக்கணுமாம் என்று சொல்லி சிரிக்க……ஒரு வாரமாகவே அன்னையின் அலப்பறைகள் பார்த்து வரும் ஆனந்தனுக்கும் முகத்தில் அகலமான புன்னகை உதயமானது…..

வாயிலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு பரபரப்பான அன்னபூரணி ஆரத்தி தட்டோடு வாசலுக்கு விரைய…..என்னதான் மகனைப் பற்றிய கேலி பேசினாலும் மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வரும் சூரியபிரகாஷ் காண அந்தப் பாசமிகு குடும்பமே வாயிலுக்கு ஓடியது…..அன்னையின் பாதம் பணிந்து ஆசி பெற்ற பிள்ளையை தோளோடு அணைத்து அன்னபூரணி கண் கலங்க  என்னம்மா இது நான் என்ன சண்டைக்காக போயிட்டு வரேன் நீங்க இப்படி வருத்தப்பட….. என்று சூரியபிரகாஷ் கேட்க ஏற்கனவே இதையே சொல்லி கேலி செய்த கணவனை திரும்பிப் பார்த்து அசடு வழிந்த மனைவியை கண்டு பொங்கி சிரிப்பில் வெடித்துச் சிரித்தார் ஆவுடையார்……

அனைவரின்  நல விசாரிப்பு களையும் பெற்று வெளிநாட்டு வாழ்வை பற்றிய விவரம் கூறி முடித்து  உள்ளே வந்த சூரியபிரகாஷ் தங்கையோடும் தன் அண்ணன் மகனோடும் சிரித்து விளையாடி நேரம் போக்க  அதன்பிறகு அன்னையின் பாசமான விருந்தோம்பல் பழைய நண்பர்கள் என்று அவன் பொழுதுகள் இனிமையாய் கழிந்தது ….. இன்றோடு சூரியபிரகாஷ் வீடு திரும்பி ஒரு வாரம் சென்றிருந்தது  கட்டிடக்கலை பற்றிய படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற சூரியபிரகாஷ் தன் தந்தையின் கல்வி நிறுவனத்தில் இணையாமல் கட்டுமான நிறுவனம் தொடங்கி நடத்த ஆவல் இருக்க அதன் வேலையாய்  தன் நண்பனும் தன் அண்ணியின் சகோதரனுமான செந்தில் நாதனோடு சேர்த்த அலைந்து கொண்டிருந்தான்…….

ஆனந்தின் மனைவி விசாலாட்சியும் செந்தில்நாதனும் ஆவுடையாரின் குடும்பத் தொழிலான கல்வி நிறுவனத்தில் 30 சதவீத பங்குகளை தங்கள் வசம்  வைத்திருக்கும் குடும்பத்தின் பிள்ளைகள்….. அரங்கநாதனுடன் சேர்ந்து அவர்களது தாத்தா உழைப்பை மட்டும் பங்காக கொடுக்க நண்பனுக்காக அரங்கநாதன் தன் நிறுவனத்தில் 30 சதவீத பங்கை அளித்திருந்தார்…..கிட்டத்தட்ட இரண்டு மூன்று தலைமுறைகளாக நண்பர்களாக இருக்கும் குடும்பத்தில்…. ஆனந்தனுக்கு விசாலாட்சியை மணம் முடிக்கும்  விருப்பத்தை செந்தில் நாதனின் தந்தை தெரிவிக்க ஆவுடையாரும் அதில் விருப்பப்பட தந்தையின் வார்த்தைக்கு மதிப்பளித்த ஆனந்தன் முழு விருப்பத்தோடு விசாலாட்சி மணந்து கொள்ள அதுவரை தொழில்முறை நண்பர்களாக இருந்த குடும்பம் இப்போது உறவினர்களாகவும் மாறிவிட்டது……

அந்த வகையில் சூரிய பிரகாஷி செந்தில்நாதனும்   நல்ல நண்பர்களாக இருக்க இருவரும் ஒரே கல்லூரியில் தங்கள் முதுகலைப் பட்டத்தில் வெளிநாட்டில் முடித்துவிட்டு இந்தியா திரும்பி இருந்தனர்  தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் உத்வேகத்தோடு…….மூன்று வருடங்கள் கழித்து அன்று தன் நண்பனையும் தங்கையையும் காண ஆவுடையார் இல்லம் வந்திருந்த செந்தில் நாதனை வரவேற்ற விசாலாட்சி மிகுந்த அன்போடு உபசரித்து பேசிக்கொண்டிருக்க……

எங்க மா என்னோட மருமகனே காணமே அவனைப் பார்க்க இந்த மாமா ரொம்ப ஆசையா வந்து இருக்கேன் என் கண்ணில்  அவனை காட்டுவியா இல்லையா என்று கேட்க…… அவன் எங்க என்கிட்ட இருக்கான் எப்பவும் அத்தை கூட மட்டும் தான் இருப்பான்……என்று சலித்து கொள்வது  போல் பெருமை பேசிய விசாலாட்சி மாடி புறம் திரும்பி சௌந்தர்யா கொஞ்சம் உன் மருமகனை இங்க கூட்டிட்டு வா எங்க அண்ணன் வந்திருக்காங்க பாரு என்று குரல் கொடுக்க…..

சடசடவென்று படிக்கட்டில் துள்ளிவரும் பாத ஓசையோடு  கொலுசின் ரீங்காரமும் செவியை நிறைக்க….. தன்னை மிஞ்சிய ஆவலோடு திரும்பிய செந்தில்நாதனின் விழிகள் அப்படியே அந்தரத்தில் நிலைகுத்திப் போய் அசைவற்று ஸ்தம்பித்து நின்றது……இவ்வுலகின் கைதேர்ந்த சிற்பி ஒருவன் தங்கத்தை செதுக்கி  உருவாக்கிய பொற்சிலை ஒன்று உயிர்ப்பெற்று வந்தது போல்…. தலை முடியில் இருந்த பாத நகம் வரை ஒரு சிறு குறை கூட கூற முடியாத அளவிற்கு பாலில் ரோஜா இதழ்கள் கலந்த நிறத்தில் முல்லைக் கொடியின் நளினத்தோடு பிரம்மனின் கலைப்பொக்கிஷமாய்  படிக்கட்டில் இறங்கிவந்த சௌந்தர்யா லட்சுமியை கண்டு மெய்மறந்து நின்ற செந்தில்நாதன் கண்கள்…. சிறு பறவையை கொத்தி தூக்கிச்செல்லும் கழுகின் வேட்டை பார்வையாய் பளபளத்தது……

ஐயோ பாவம் அங்கிருந்த  இரு பெண்களுக்குமே அவன் பார்வையின் வீரியமும் அது கொடுக்கும் அர்த்தமும் புரிந்து கொள்ள முடியாமல் போனது  வருங்காலத்தில் நடைபெற இருந்த விபரீதம் அனைத்திற்கும் வழிவகுத்து விட்டது…….

அழகு மயில்  வேடன் அவன் கண்களில் பட்டது தான் அதன்  அதிர்ஷ்டமுமோ அல்லது அது விதியின் சதியா…!!??  

தங்கையின் மைந்தனை  கொஞ்சிக் கொண்டிருந்த செந்தில் நாதனின் கண்கள் என்னவோ சௌந்தர்ய லட்சுமியின் சௌந்தர்யத்தின் மீதே  இருந்தது…. நண்பன் வரும் வரை தன் பார்வையால் பெண்ணவளை பிறர் அறியாமல் பருகிக் கொண்டிருந்தவன் சூரியபிரகாஷ் வருகையைத் தொடர்ந்து  அவளைப் பிரிய மனமற்று கிளம்பினான்……

தான் ஆரம்பிக்கப் போகும் நிறுவனத்தின் பொருட்டு  அலைந்துகொண்டிருந்த சூரிய பிரகாஷ் அன்று பரபரப்பாக கீழிறங்கி வந்தவன்…. அம்மா அப்பா எங்க நான் உடனே அவங்கள பாக்கணும் அந்த இடத்தோட ஓனர் சீக்கிரமா பேமெண்ட் வேணும்  சொன்னாரு நான் அப்பா கிட்ட அதைப் பற்றி பேசணும்…….

காலையில கிளம்பி காலேஜுக்கு போய்ட்டாங்க சூர்யா    அங்கே ஏதோ கணக்கு வழக்கு பாக்கணும் சொன்னாரு நீ இப்போ போனா அங்க தான்  இருப்பாங்க பேசிட்டு வா என்று அன்னபூரணி மகனிற்கு தகவல் சொல்ல தன் மோட்டார் பைக்கில் ஏறி அமர்ந்தவன் வேகத்தோடு அதை செலுத்தினான்……வண்டியை வாசலிலேயே ஓரமாய் நிறுத்தி விட்டு சூரிய பிரகாஷ் கல்லூரிக்குள் நுழைய அது கல்வியாண்டின் தொடக்கமாய் இருந்ததினால் பல சீனியர் மாணவர்கள் புதிதாக வருகை தந்த ஜூனியர் பிள்ளைகளிடம் தங்கள் கைவரிசையை காட்டியபடி இருந்தனர்……

அவன் இருந்த பரபரப்பில்   சுற்றுப்புறத்தை கவனிக்கவும் தோன்றாது விறுவிறுவென்று நடந்தவன்   முன்னால் தயங்கித் தயங்கி சிகப்பு நிற பாவாடை அணிந்த ஒரு ஜோடி கால்கள் வழிமறித்து நிற்க…. எரிச்சலோடு முகம் தூக்காமல் விலகிப் போனவன் அந்தக் கால்கள் தானும் நகர்ந்து அவன் பாதையை மீண்டும் மறைக்க  நொடியில் சினம் துளிர்க்க தன் சிவந்து விட்ட விழிகளை உயர்த்திப் பார்க்க அவன் கண்களில் விழுந்தாள் அவள்……

சிகப்பு நிறத்தில்  ரவிக்கையும் பாவாடையும் உடுத்தி வெள்ளை நிற தாவணி அணிந்து இடை  தாண்டிய கூந்தலை என்னை போட்டு வழிச்சு சீவி நேர் வகிடெடுத்து இரட்டை பின்னல் போட்டு நுனியில் ரிப்பன் கட்டி……சற்று அசட்டுத்தனமாக  பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு தன் முன்பு வழிமறித்து நிற்கும் அந்த மஞ்சள் அழகியை அவன் கூர்மையாய் உற்றுப் பார்த்த அந்தப் பார்வை அவளை என்ன செய்ததோ….பட்டென்று விழிமூடி கைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து தனக்குள்ளாகவே ஏதோ படபடவென்று முணுமுணுத்துக் கொண்டே இரண்டு நிமிட காத்திருப்புக்குப் பிறகு அவன் பொறுமையை வெகுவாக சோதித்து விட்டு மீண்டும் விழி திறக்க அவள் எதிரில் அவன் இல்லை……..

சற்றே அதிர்ந்து அவள் திரும்பிப் பார்க்க அவளைக் கடந்து சற்று தூரம் சென்று இருந்த அந்த ஆறடி உயர ஆண்மகனின் காலடி பின்பற்றி ஓடினாள்….. சார் சார் கொஞ்சம் நில்லுங்க சார் ப்ளீஸ் சார் சத்தமாக கத்திக்கொண்டே அவள் பின்வர சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் மேல் திரும்ப ஏற்கனவே இருந்த கோபத்திற்கு அவளின் இந்த வழி மறைத்தலும் சத்தமான அழைப்பும் தூபம் போட மிகுந்த சினத்தோடு அவளை ஏறிட்டு உருத்து  விழித்த சூரியபிரகாஷ் இன் முன்பு மீண்டும் மூச்சு வாங்க வந்து நின்றவள் தன் நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்க என்ன சார் நீங்க….. இவ்வளவு வேகமா வந்துட்டீங்க என்னால உங்க வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியல சார் தயவு செஞ்சு இந்த லெட்டரை வாங்கிக்கோங்க ப்ளீஸ் என்று அவன் முன்பு நான்காக மடித்த வெள்ளைக் காகிதத்தை நீட்ட……

ஏழைகள் என்றாலே  ஒதுங்கிப் போகும் சூரியபிரகாஷிர்க்கு தன் எதிரே நிற்கும் பெண்ணின்  உடை அலங்காரமே அவளின் வசதியின்மை யை கூறிவிட அவளோடு நின்று பேசவே பிடிக்காது   தன் வழியை மறைத்து பேச இவளுக்கு எத்தனை தைரியம் என்ற பொருளோடு வேண்டா வெறுப்பாக….. அவள் நீட்டிய காகிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்க  நொடிக்கு நொடி அவன் கண்களில் நெருப்பு கூடிக்கொண்டே போனது…..

அவளின் சார் என்ற தலைப்பில்   எல்லை கடந்த ஆத்திரத்தோடு அவன் நிமிர்ந்து பார்க்க…. சீக்கிரம் பதில் சொல்லுங்க சார்  நீங்க சொன்னா தான் நான் இங்கிருந்து போக முடியும் கண்களில் பயமும் தவிப்பும் போட்டிப்போட பரிதாபமாக கேட்ட அந்த சிறு பெண்ணின் தவிப்பு   அவன் கவனத்தில் படாமல் போனது யார் செய்த தவறு……

அவள் பேசி முடித்த அடுத்த நொடி அந்த காகிதத்தை  சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தவன்…..சற்றும் யோசிக்காமல் அந்த சிறு பெண்ணின் கன்னத்தில் தன் 5 விரல்களும் அழுத்தமாக பதியும் வகையில் அறைந்து விட்டான்   பலம் பொருந்திய ஆண் மகனின் கைகளின் வேகம் தாங்காமல் பலகீனமான பெண்ணவள் தரையில் பொத்தென்று சுழன்று விழ…. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த என்கிட்டயே இந்த மாதிரி லெட்டர் நீட்டுவ  உன்னை கொன்று புதைத்து விடுவேன் ராஸ்கல்…..கீழே விழுந்து கிடந்தவனை சற்றும் கவனிக்காமல் அவளைத் தாண்டி விறுவிறுவென்று அவன் நடந்து போக மொத்த கல்லூரியே அங்கு நடந்த சம்பவத்தில் ஸ்தம்பித்து நின்றது……

                                  சின்ரெல்லா வருவாள்………

Advertisement