Advertisement

ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.17 

கண்களால் பார்த்தாலே அதன் ஆடம்பரத்தை பறைசாற்றும் விதத்தில் அறையின்   நடுவில் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த பெரிய தேக்கு மர கட்டிலும் இன்னும் அறைகளைச் சுற்றி அலங்காரமாக  கலைப் பொருட்களும் என கண்ணையும் மனதையும் ஒருங்கே மென்மையாய் கவர்ந்த அந்த அழகிய படுக்கை அறையில்  நிற்பதற்கு கூட ஷிவானிக்கு பிடிக்கவில்லை…….. அதுவரை அன்பின் பிறப்பிடமாய் கலைமகளின் கடாச்சமாக தெரிந்த அந்த வயோதிக பெண்மணி இப்போது அவள் கண்களுக்கு கொடுமைகளின் மொத்த ரூபமான  தெரிந்தார்…….

அழகிய அரண்மனையின்   சாயலில் வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறை  மயானத்தின் வாயிலைப் போல் அவளுக்கு தோன்றியது……இது அனைத்திற்கும் காரணம் சில நிமிடங்களுக்கு முன் அவள் அந்த அறையின் பக்கச் சுவர்களில் கண்ட அந்த புகைப்படம்…….. அது அந்த அறையின் ஒரு பக்கம் முழுவதிலும் விதவிதமான புகைப்படங்கள்  ஒரு சிறு குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பில் கருப்பு வெள்ளையாய் ஆரம்பித்து………

 படிப்படியாக அந்தக் குழந்தையின் வளர்ச்சி  சிறுமியாய் , பதின்ம வயதுப் பெண்ணாய் , பருவம் எய்திய மங்கையாய்  என்று ஒரு பெண்ணின் படங்கள் அங்கே அழகிய முறையில் சட்டமிட்டு மாற்றப் பட்டிருக்க…….முதலில் அந்த அழகிய குழந்தை யார் என்ற சுவாரஸ்யத்தோடு பார்க்க ஆரம்பித்த ஷிவானி   பார்வையில் அழுத்தமாய் பதிந்தது கடைசியாய் சுவற்றின் நடுவில் பெரிதாய் இடம் பிடித்திருந்த அந்த புகைப்படம்…….  

கிட்டத்தட்ட ஷிவானியின்  சாயலில் இரட்டை ஜடை யோடு பன்னீர் ரோஜா இதழின் மென்மையோடு  அதன் நிறத்தையும் சேர்த்து செய்த பொற்சிலை போல் தாவாணி சகிதமாக…… சற்று பழமையான முறையில் உடை அணிந்து……. ஊஞ்சலில் தன் அழகிய பல்வரிசை தெரிய செந்தாமரை  மலர் ஒன்று சட்டென்று மொட்டவிழ்ந்தது போல் விழி தொடங்கி முகம் முழுவதும் மலர்ந்து சிரித்தபடி விளையாடும்…… அற்புத உயிரோட்டத்தை கொண்ட அந்த புகைப்படத்தை   கண்ட நொடி அனைத்தும் விளங்கி விட்டது அவளுக்கு…..

ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்குவதற்கு முன்பும்   பார்த்து முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்தபடி உறங்கும் ஷிவானி க்கு    தன் அன்னையின் இளவயது புகைப்படம் அது என்பதை தெரிந்து கொள்ள சிறிது நேரம் கூட ஆகவில்லை…..

அப்படியானால்..!  இ..து இது தன் அன்னையின் பிறந்த வீடு   அந்த எண்ணம் தோன்றியவுடன்…….அவள் அத்தை பூர்ணிமாவின் வார்த்தைகள்  செவிப்பறை கிழிக்கும் அளவிற்கு வேகமாக அவள் காதுக்குள் ஒளித்து இரைச்சலை உண்டு செய்தது…… தன் விரும்பிய ஆண்மகனை வாழ்க்கை துணையாய் கரம் பிடிக்க நினைத்த உன் அன்னையை…..‌ அவர்கள் கௌரவத்தை அழிந்து  விட்டதாக குற்றம் சுமத்தி கொல்ல முடிவு செய்து துரத்திய கொடூரர்கள் உன் தாயின் பிறந்த வீட்டினர்……

அவர்களுக்கு பயந்து காதலித்த ஒரே குற்றத்திற்காக ஊர் உலகத்திற்கு தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் தன் அனைத்து வசதிகளையும் இழந்து விட்டு…… ஒளிந்து வாழ்ந்தனர் உன் பெற்றோர்  அதற்குக் காரணம் உன் அம்மாவின் தந்தையும் அவரின் பிள்ளைகள் தான்…..

தனக்கு நினைவு தெரிந்து தன்னுடன் பயிலும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தாய் தந்தையை தவிர்த்து….. பாட்டி தாத்தா சித்தப்பா பெரியப்பா மாமா   இன்னும் எத்தனையோ சொந்தங்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் அப்படி யாரும் இல்லையே ஏன் என்று ஷிவானி ஒருமுறை பூர்ணிமா விடம் கேட்க அப்போது…… அவர்களெல்லாம் கெட்டவர்கள் உன்னை கண்டால்  அவர்களுக்குப் பிடிக்காது என்று சிறுவயதில் மேலோட்டமாக சொல்லிய அத்தை…….

 இன்னும்  சற்று ஷிவானிக்கு  விபரம் அறிந்த வயதில் தன் மீதான அவர்களின் பிடித்தம் இன்மைக்கு  மேலும் விளக்கம் கேட்க அவளிடம் கூறிய வார்த்தைகள் இவை……

சிறுவயதில் இருந்து ஒரு முறை கூட தன்னை காண வராத     தன்னை பற்றிய எண்ணம் கூட இன்றி….. எங்கோ ஓரிடத்தில் அவளை தனித்து விட்ட தன் பாட்டி தாத்தாவின் மீதும் தன் அன்னையின் உடன் பிறந்த சகோதரர்களான அவளின்  தாய் மாமன்களின் மீதும் ஷிவானிக்கு உள்ளுக்குள் மிகப் பெரும் கோபமும் வெறுப்பும் உண்டானது….. நாட்கள் செல்லச் செல்ல அது அதிகமானதே ஒழிய குறையவில்லை……. எந்த அளவிற்கு அவர்கள் மீது  வெறுப்பு உண்டோ அந்த அளவிற்கு அவளுக்காக அவளை வளர்ப்பதற்காக….. தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த பூர்ணிமாவின் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தவள் அவரின் வார்த்தைகளை வேதமாய் மதித்து  நடக்க ஆரம்பித்தாள்….. 

இதோ இன்று அவள் இவ்வுலகத்திலே அதிகமாய் வெறுக்கும் ஒருவனுக்கு மனைவியாகி….. நிற்பதற்குக் கூட அவள் அத்தையின் வார்த்தைகள் மட்டுமே காரணம் அல்லவா…….

இப்படி தனக்கு சற்றும் பிடிக்காத தன் தாய் தந்தையரை விரட்டி அடித்த அந்த வீட்டில் அந்த குடும்பத்தவர்கள் மத்தியில் ஷிவானி ஒரு நொடி கூட இருக்க மாட்டாள்…….தனக்குத்தானே தலையை அசைத்தபடி  கண்களில் நீர் நிறைய பரிதாபமாக தன்னையே பார்த்திருந்த அந்த வயதானவரின் சோகம் நிரம்பிய தோற்றத்தை கணக்கில் கொள்ளாமல்….. வேகவேகமாய் அந்த அறையை விட்டு ஓடியவள் வாயில் கதவைத் திறந்துகொண்டு வெளியேற நினைக்க….. அது முடியாமல் திடீரென்று எதுவோ  முன் வந்து அவள் பாதையை மறைத்தபடி நிற்க….. சமாளிக்க முடியாமல் அதன் மீது மோதிய வாளின் நெற்றி பலமாக மரம் ஒன்றின் மீது மோதிய உணர்வில் ‌ வலிக்க ஆரம்பிக்க……

இருக்கும் எரிச்சலில் இந்த வலியும் சேர்ந்து அவளை ஆத்திரப் படுத்த….. எரிப்பது போல் தன் விழி உயர்த்தி பார்த்தவளின் கண்களில் விழுந்தான்…..அந்த நுழைவாயிலை மொத்தமாய் அடைத்துக்கொண்டு   உயரமாய் வாட்டசாட்டமா அவளையே பார்த்தபடி நின்றிருந்த ஆரியன்……. அப்போதுதான் அவளுக்கு அவனின் ஞாபகம் வந்தது…. இவன் இவன் எப்படி இங்கே ஒருவேளை இவன் தான் அவளை இங்கே கொண்டு வந்திருப்பானோ  ஆனால் ஏன்..!!?? ஏனோ அதற்கு மேல் யோசிக்க முடியாமல் முன்பிருந்த ஆவேசமும் கோபமும் பன்மடங்கு அதிகரிக்க அது கொடுத்த வேகத்தில்….

தன் எதிரில் நிற்பவனின்  நெஞ்சில் தன் கரம் பதித்து முழு பலத்தையும் உபயோகித்து  அவனை வேகமாக தள்ளிவிட்டு……வெளியேற முயன்ற வாளின் முயற்சி ஐயோ பாவம் பரிதாபமாய் தோற்றுப் போனது……. பிறகு  அவனை சற்றேனும் இருந்த இடத்தில் இருந்து நகர்த்தினால் அல்லவா அவள் வெளியேற வழி கிடைக்கும்……. ஆனால் என்ன செய்வது அவளின் முழு உடல் பலத்தையும் ஒன்று திரட்டி முழு மூச்சாக  முயன்று பார்த்தும் அவன் நின்ற இடத்தில் இருந்து இம்மி அளவு அசைக்கக்கூட ஷிவானி யால் முடியவில்லையே…….

இயலாமை கொடுத்த  எரிச்சலோடு விழி நிமிர்த்தி  அவன் முகம் பார்த்தவளின் கண்களை…. சற்றே கேலியாக புருவங்கள் உயர்த்தி இளக்காரமாக  பார்த்தவன்……. மேலும் தன் உதடு குவித்து அவளுக்காக உச்சுக்கொட்டி பரிதாபப்பட்ட படி….. இப்போது  வெகு நிதானமாக சற்றே தன் பாதத்தை பின்னால் எடுத்து அதன் மூலம் லாவகமாக தன் கையில் கிடைத்த…… வேட்டியின் தலைப்பை இடையில்  முடிச்சிட்டு நிறுத்தி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி தன் கால் அடிகளை மிக நிதானமாக முன்னெடுத்து வைக்க…..அவன் தோற்றம் கொடுத்த மயக்கமா  அல்லது அந்த காந்த விழிகளில் கூர்மையோ……அவன் நெஞ்சில் பதிந்திருந்தத அவள் கைகளோடு சேர்ந்து ஷிவானியும் அனிச்சையாய் பின்நோக்கி அறையின் உள்ளே செல்ல ஆரம்பித்தாள்……. இதற்கே  அவன் தன் சுண்டு விரலைக்கூட அவளை நோக்கி உயர்த்தவில்லை……இவன் ஏன் இப்படி அசுரத்தனமாக அவளால் சமாளிக்க முடியாத படி இருக்கிறான் என்ற எண்ணம் அந்த நேரம் அவளுக்கு வந்தது……

அவள் முன்பு அவன் வந்து  நிற்கும் ஒவ்வொரு கணமும் தோல்வியானது பரிபூரணமாய் அவளைத் தழுவும் காரணம் தெரியாமல் பேதை  அவள் மனம் சஞ்சலம் கொண்டது …….

எங்க போக இவ்வளவு வேகமா கிளம்பிட்டீங்க பொண்டாட்டி….. குரல் கேலி போல் இருந்தாலும் முகத்தில் கடினம் வர ஆரம்பித்திருந்தது  அந்தக் கடினம் அவளையும் கோபப்படுத்த தன் சிந்தனை விடுத்து எங்கேயோ…. ஆனால் இந்த நரகத்தை விட்டு மட்டும் மொதல்ல வெளியே போகு வேண்டும்…….  மனிதத் தன்மையே இல்லாத ராட்சஷர்கள் மட்டுமே வாழும் இந்த இடத்தில் இனி ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது…….. அவன் கண்களை அழுத்தமாய் பார்த்து ஆணித்தரமாய் கூறிய அவள் கூற்றில் இரும்பை விட கடினமாய் இறுக்கியது ஆரியரின்  முகம் என்றால்….. 

அம்மாடி  அப்படி சொல்லாத மா  என்று நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியது   பதறிப் தவித்துப் போனார் அந்த வயதான பெண்மணி …….அந்த முதியவரின் குரலில் இருந்த ஆற்றாமையும்   இப்படி பேசி விட்டாளே என்ற வருத்தமும் ஷிவானி யை சிறிதும் பாதிக்கவில்லை……. ஆனால் அவள் கணவனின் முகம் இப்போது பற்றியெரியும் தீக்கங்கு  போல் ஜொலிக்க ஆரம்பித்தது…….

மேலும் ஏதோ  பேசப் வந்தவளின் கரத்தை தன் கைகள் கொண்டு முறித்து  விடுவது போல் மணிக்கட்டை அழுத்தமாகப் பிடித்து அவள் பேச்சை நிறுத்தியவன்……நொடியில் உண்டான வலியை முகம் சுருக்கி இதழ் கடித்து பிறர் காணாது மறைக்க முயலும் மனைவியின் முகத்தை ஓரவிழிகளால் பார்த்தபடி……. பாட்டி  ஏன் இவ்வளவு வருத்தம்….. அவ இப்பதான் மயக்கத்தில் இருந்து தெளிந்து இருக்க……அதனால ஏதும் முட்டாள்தனமா உளறுகிறாள்…… அத போய் பெருசா எடுத்துக்கிட்டு நீங்க இவ்வளவு கஷ்டப் படணுமா..? பாவம் காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடவில்லை அவள்.    பசியாக இருக்கும் நீங்க போய் சாப்பாடு ரெடி பண்ண சொல்லுங்க நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழ வருகிறோம்….. 

சமாதானமாக பேசியபடி  தான் பிடித்திருந்த மனைவியின்  கையை ஒரு முறை அழுத்தி பிடித்து மேலும்  வலிக்க வைத்து மறு நொடியே உதறியவன்….. தன் பாட்டியின் தோல்களை அரவணைப்பாக  பிடித்து லேசாக தன்னோடு அணைத்துக் கொண்டு நடந்து அறையை விட்டு வெளியேறி இருந்தான்…..  செல்லும்போது கவனமாக அவன் பூட்டிச் சென்ற கதவுகளையும் அப்போது அவன் விழிகள் காட்டிய பாவத்தையும்  பார்த்தபடி அசையவும் ஏன் மூச்சு எடுக்க கூட மறந்து நின்றிருந்தாள் ஷிவானி…….

யார் இவன் தன் வாழ்க்கையில்  புகுந்து அழகிய கோலமாய் இருந்த அவள்  உலகத்தை அலங்கோலமாய் மாற்றி…..அவளுக்கு இத்தனை அநியாயம் செய்தது  அனைத்தும் இதோ இந்த இடத்தில் அவளை கொண்டுவந்து நிறுத்துவதற்காகவா….??  இவனுக்கும் இந்த வீட்டிற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கும்…….?? அது எதுவாக இருந்தாலும் இத்தனை வருடங்கள் கழித்து எங்கோ ஓரிடத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவளை….. இங்கு எத்தனையோ  சூழ்ச்சிகள் செய்து சிறைப்பிடித்து வர என்ன காரணம்……?? எண்ணிலடங்காத கேள்விகள் எழுந்து அவளை பயமுறுத்த அது ஒன்றிற்குக் கூட அவளால் விடைகாண முடியவில்லை…..  

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் கூடியவன்  ஒரே ஒருவன் தான்……..அந்த எண்ணம் அவள் மனதில் தோன்றிய அதே வினாடியில் பூட்டியிருந்த அந்த அறையின் கதவுகள் மீண்டும் திறந்து  கொள்ள….ஜல்லிக்கட்டில் துள்ளி ஓடும் யாராலும் அடக்க முடியா வேகமா வாய்ந்த காங்கேயம் காளையின் வனப்போடு அறைக்குள் நுழையும் ஆரியனின்  மேல் அவள் கவனம் திரும்பியது……..

உள்ளே நுழைந்த கையோடு கதவுகளை அடைத்துவிட்டு அவள் அருகில் வந்தவன் உரமேறிய தன் இருந்து நெஞ்சில்   கைகளை கட்டி நின்று……. அப்போ என்ன சொன்ன அதை மறுபடியும் சொல்லு பாக்கலாம்…. சாவதானமாக அவன் கேட்க அளவுக்கு அதிகமான அவன் அமைதியையும் நிதானத்தையும் கணக்கிட தவறிவள்  அவனின் 

நிதானத்தில்   வழக்கம் போல் தன் அவசர புத்தியும் கோபம் தலைதூக்க…….ஒரு தடவை என் ஆயிரம் தடவை திரும்பத் திரும்ப சொல்லுவேன்….. இந்த வீடு ஒரு நரகம் இதில்  இருப்பவர்கள் அனைவரும் மனிதத் தன்……. சொல்லிக்கொண்டே போனவளின் குரல்வளை இப்போது ஆரியன் கைகளில் சிக்கி இருந்தது….. 

முறம் போன்ற அகலமான கைகளில் மென்மையான  மலர் போன்ற அவள் சங்குக் கழுத்து சிக்கிக் கொள்ள….. ஹ..க்…. என்ற சத்தத்தோடு தன் பேச்சை நிறுத்தி பயத்தில் விழிகள் விரிய   அவனைப் பார்த்த ஷிவானி கண்களை தன் தீ துப்பும் பார்வையால் எதிர்கொண்டவன்……..இன்னும் ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை என் குடும்பத்தைப் பற்றி நீ தவறாக பேசினால் அடுத்த வார்த்தை பேச உன் உடம்பில்    உயிர் இருக்காது…… ராஸ்கல் யார் முன்னாடி யாரைப் பத்தி தப்பா பேசுற ஹா அவள் கழுத்தைப் பிடித்த கைகளின் கட்டை விரலை மட்டும் சற்று அழுத்தமாக அவள் குரல்வளையில் பாதித்து ஆரியன் கர்ஜனை செய்ய……

அவன் பேச்சும் நடத்தையும் சொன்னது அவன் கூறிய வார்த்தைகளை உண்மையாக்க அஞ்ச மாட்டான் என்று……

 இதுநாள் வரையில்  அவன் மீதான அச்சம் நொடிப்பொழுதில்பன்மடங்கு அதிகரிக்க……சிங்கத்தின் பிடியில் மாட்டிக் கொண்ட புள்ளி மானின்  கண்களைப் போல் பயத்தில் பரிதவித்து கலங்கி கண்ணீர் சிந்த தயாரான…….பெண்ணவளின் எழில் பொங்கும் அழகிய விழிகள் அந்த  ஆடவனுக்கு என்ன செய்தியை சொன்னதோ….? சட்டென்று மிக லேசாய் தன் பிடி தளர்த்தியவன் கையை விலக்காமல்….. அப்படியே அவள் முகத்தை தன்னருகில் கொண்டு வந்தவன் இடது கரம் இப்போது நீண்டு அவள் பின் இடையில் ஊர்ந்து சுற்றிய   கரத்தால் அவள் தளிர் இடை முழுவதும் தாங்கிப் பிடித்து அவள் முகம் நோக்கி தான் குனியாமல் தன் உயரத்திற்கும் அவளை தூக்கியவன் இடது கரம் இப்போது இடம்பெயர்ந்து அவள் பின் கழுத்தை தாங்க……

 தன்  மீதான  அவனின் இத்தனை  செயலுக்கும் எந்த வித எதிர்வினையும் இன்றி  அவன் முந்தைய செயலிலும் சொல்லிலும் உறைந்துபோனவளின்……. அச்சத்தில் பிளந்து  பயத்தில் துடித்தபடி இருந்த அழகிய மாதுளை நிற செவ்விதழ் தன்னில் இரண்டொரு மோடி தன் பார்வையை அழுத்தமாய் படித்தவன்  உதடுகள் முழுவதும் பாவையின் இதழில் மதிக்காமல்…..பருத்து சிவந்திருந்த அவள் கீழ் உதட்டை மட்டும் சற்று முரட்டு தனத்தோடு அழுத்தமாய் தன் பற்களைக் கொண்டு கடித்து இழுத்து…… அவளுக்கு சுருக்கென்ற  வலி கொடுத்து ‌ தன் வாய்க்குள் இழுத்து கொண்டவன் அதே வகை ஆளுமையோடு கன்னியவள் தேன் சுளை இதழ்களை தின்ன ஆரம்பித்தான்…….

அதுவரை உறைபனி நிலையில் இருந்தவள் உதிரத்தில் மின்னலின் விரைவோடு உஷ்ணம் உண்டாகி உடலெங்கும்  பரவ……. அவன் பற்கள் கொடுத்த காயத்தின் வீரியத்தில் மூளை தன் நிலை பெற….. தான் இருக்கும் நிலை உணர்ந்து அந்தரத்தில் ஊசலாடும் தன் கால்களை படபடவென்று உதைத்து….. அவன் இறுகிய பிடியில்க்குல்  சிக்கி நசுங்கி கொண்டிருக்கும் தன் கரங்களை அசைக்க முடியாமல் பரிதவித்தவளின் கண்கள் மட்டும் எதிர்ப்பை காட்டும் விதமாக கண்ணீர் மழையை பொழிய அவன் கண்களைப் பார்த்தவள் விழிகளை….. தானும் அவள் இதழ் அமுதத்தின்   சுவையில் கிறங்கி லயித்தபடி இமை திறந்து பார்த்தவனின் பார்வையில்….. துளிக்கூட தன் செய்யும் செயலுக்கு உண்டான வருத்தமோ குற்ற உணர்வோ இல்லை…….

பல யுகமாய் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தரத்தில் அலைபாய்ந்த  அவள் உடலை ஒரு நிமிடம் மொத்த எலும்புகளும் தூள் தூளாய் நெருங்கும் அளவிற்கு தன்னோடு இறுக்கியவன்  அடுத்த நொடி அங்கிருந்த…… படுக்கையில் மீண்டும் சற்று வேகமாக வீசியது போல் தூக்கிப் போட்டவன்……. கட்டிலில்  உருண்டு எழுந்து அமர முயன்றவளின் அருகில் தன் பாதத்தை ஊன்றி அவள் முகத்திற்கு மிக அருகில் தன் முகம் எடுத்துச் சென்றவன்……. இது என் குடும்பம்.  என் உயிருக்கும் மேலாக நான் நேசிக்கும் என் குடும்பத்தினர் பற்றிய ஒரு வார்த்தை இனி உன் வாயில் இருந்து தவறாக வெளிவந்தால்…….. அதற்கு தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்   இப்போது கிடைத்ததைப் போன்றே என்பதை மனதில் வைத்து நட……என்றவன் தன் கோபம் சற்று குறைத்து…..

என்ன  என் அத்தை மகள் ரத்தினத்திற்கு  நான் சொல்ல வருவது புரிகிறதா……. என்று கேள்வியாக  புருவங்கள் தூக்கி கேட்டவன் அவள் அதிர்ந்து போய் விழிக்க…… என்னடி பார்க்கிறாய்   சொந்தத் தாய் மாமன் மகனை அடையாளம் தெரியாத அளவிற்கு முட்டாளாக இருக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லை…..இந்தக் கேள்வியில் சற்று அழுத்தம் அதிகமாக இருந்தது அந்த நொடி அவன் முக பாவனை கூட  பெரும் வித்தியாசம் காட்டியது……..

அந்த வானமே இடிந்து தன் தலையில் விழுந்தது போல் அதிர்ந்து போய்  அவனையே பார்த்த விழி பார்த்தபடி இருந்தாள் ஷிவானி…… அவன் சொன்ன வார்த்தைகள் அது கொடுத்த அழுத்தம் அவள் உடலில் உண்டான அதிர்வு இவை அனைத்தும் அவளால்  இம்மியும்….. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பயங்கரமாய் இருந்தது…….. 

                                சின்ரெல்லா வருவாள்……..

Advertisement