Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.15.1

அந்தப் பாம்பு போன்ற நீண்ட தார் சாலையில்   மிக வேகமாக சென்று கொண்டிருந்தது படகு போன்ற விலைமதிப்பான அந்த கார்…. சிறிது கூட பயண கலைப்பை  கொடுக்காத சொகுசு காரில் ஏசியின் மிதமான குளிரை….. அனுபவித்தபடி செல்லும் அந்த சுகமான பயணமானது   ஏனோ ஷிவானிக்கு மட்டும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் மத்தியில் அமர்ந்திருப்பதுபோல்….. அக்கினி மலை உடம்பெல்லாம் பொழிவது போல் ஒரு எரிச்சல் உள்ளுக்குள் பரவி  பற்றி எரிய……

 தன்னருகில் பட்டு வேட்டி பட்டு சட்டையில்  புதுமாப்பிள்ளை காண சர்வ லட்சணங்களும் முகத்தில் பொங்கும்  உற்சாகமும் சேர்ந்தபடி அந்த ஆடி காரை….. மிக லாவகமாக செலுத்திக் கொண்டிருந்த  ஆரியனை பார்க்க பார்க்க அந்த கொழுந்துவிட்டு எரியும் அக்கினியின் ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஊற்றியது போல்   சீற்றம் அதிகரித்த வண்ணம் இருந்தது…….

அவனைப் பார்த்த வரையில் பாவி பாவி என்று பதறித் துடித்தது  அவள் உள்ளம்….. எத்தனை பெரிய பலி பாவத்தை அவள் ஒழுக்கத்தின் மீதான கேள்வியை   சர்வசாதாரணமாக அவள் மீது சுமத்தி விட்டு……அதனால் அவள் அடைந்த துன்பத்தையோ தன்னை உயிரோடு  ஆயிரம் கூறுகளாய் வெட்டி எறிவது போன்ற அவள் உள்ளத்தின் துடிதுடிப்பையும் சற்றும் உணராமல்…..

 ஏதோ ஆண்டாண்டு காலமாய்  காதலித்த பெண்ணை கரம்பிடித்த  காதலனாய் சிரிப்போடு விசில் அடித்தபடி இருக்கும் அவன்  புன்னகை முகத்தில்……ஓங்கி அறைந்து அந்த உதட்டை காயப்படுத்த வேண்டும் போல் ஒரு பயங்கரக் உணர்ச்சி எழுந்து அவளை ஆட்கொள்ள……. இருந்தும் தன் கைகளை இரும்பு சங்கிலி கொண்டு பிணைத்தது போல்…. தன்னிலையில் இருந்து  அசையக் கூட முடியாமல் அவளை மொத்தமாய் கட்டிப்போட்டிருந்த பூர்ணிமாவின் வார்த்தைகள்…. மீண்டும் மீண்டும் அவள் செவிப்பறையை உளி கொண்டு குடைவது போல் வலியோடு எதிரொலித்தது……

ஒரு தனிமையான இடத்தில் வாய்விட்டுக் கதறி அழ முடிந்தால் ஒருவேளை அந்த உயிர் பறிக்கும் வலி சற்றுக் குறைந்து போகுமோ..?? இவ்வுலகத்தில் தான்  தோல் சாய இருந்த ஒரு சொந்தமும் தன்னை விட்டு விலகியதின் எல்லையற்ற துயரம் மறையக்கூடுமோ…‌.‌‌….

திடீரென்று  சில நிமிடங்களில் யாருடைய வாழ்க்கையாவது தலைகீழாய் மாறி விடுமா..?? தான் நம்பிய  அனைவரும் விலகிவிட இவ்வுலகத்தில் தனக்கு இணை யாரும் இன்றி

அனாதையானாதுபோன்றோரு…… அவலம்  சில கணங்களில் ஏற்படுமா…??? முன்பென்றால் அவள்  இதனை மறுத்து இருக்கக்கூடும் ஆனால் இவையெல்லாம் அவள் கண்ணெதிரில்  நடந்தேறியதே……

தன்னை உயிருக்கும் மேலாக நேசித்த உறவும் உடன்பிறந்தவர்கள்   மேலாக பாசம் காட்டிய நட்பும்….. ஒரு நொடியில் தன்னை உதறி போன கொடூரம் ஷிவானியின் வாழ்க்கையில் அரங்கேறியது…….

 அதையும்  இதோ தன் அருகில் சற்று முன்பு  அக்னி சாட்சியாய் அவளுக்கு தாலிகட்டி அவள் வெற்றுடம்பை மட்டும் தனக்கு  சொந்தமாக்கிக் கொண்ட….. இந்த ஆரியனின் கைங்கரியத்தால் அனைத்தும் நிகழ்த்தப்பட்டது    அந்தக் கொடுமையை அவள் யாரிடம் சொல்ல முடியும்……சிலந்தி வலை போன்று தன்னை சுற்றி அவன் பின்னிய சூழ்ச்சியின்  முழுப் பரிமாணத்தையும் அன்றைய இரவில் ஷிவானி தன் கண்முன்னே கண்ட நொடிகள்…….

அன்று அத்தனை பெரிய ஆபத்தில் ஐந்தாறு கயவர்களின் மத்தியில் தனி ஒரு பெண்ணாய் சிக்கிக்கொண்டு…… உயிர் போனாலும் அதற்கும் மேலான தன் மானம்  காப்பாற்ற வேண்டி போராடிய கடைசி நொடியில்…. சுயநினைவை இழந்த நேரத்திலும் அவள் பரிதவித்த நிலை…….அந்தக் கொடும் நிகழ்வை இப்போது நினைத்தால் கூட ஷிவானியின் மனதோடு சேர்ந்து உடலும் தூக்கிப்போட அவள் உள்ளுக்குள் ஒரு பயங்கர பய   குளிர் பரவியது…….

சிறிது கூட அந்த பயம் மாறாமல் மீண்டும் அவள் கண் விழித்த போது   தான் எந்த நிலையில் இருக்கிறோம் இனி வாழ்வு என்று ஒன்று தனக்கு மிஞ்சுமா  என்ற எண்ணத்தோடு பதறியடித்து கண் விழித்தவள்……. தான் மிகப் பாதுகாப்பாய் தன்  அறை படுக்கையில் ஒரு தாயின் பரிவோடு யாரோ காது வரை போர்த்தி விடப்பட்ட போர்வையின் அரவணைப்பில்….. எந்த அபாயமும் மின்றி பொதிந்திருக்கிரொம்   என்ற புரிதல் தந்த மன நிம்மதிக்கு ஈடு இணை இல்லை ஆனால் அந்த மகிழ்வு கூட சில கணங்களே……. 

நிகழ இருந்த சம்பவமும் அது கொடுத்த அளவிடமுடியா அச்சமும் அடுத்தடுத்த  நொடியில் வந்து சேர்ந்து கொள்ள….. பசுவைத் தேடும் கன்றாய் அன்னையின் மடி தேடும் மழலையாய்  தன் அச்சங்கள் அனைத்தையும் கொட்டி ஆறுதல் தேடி பூர்ணிமாவை வேண்டியது ஷிவானியின் ஒவ்வொரு அணுவும்….போதும் இது நாள் வரை அவரிடமிருந்து தான் மறைத்த விஷயங்களும் போதும் அதனால் தான் பட்ட துன்பங்களும் இனி காலாகாலத்திற்கும் போதுமானது…….

யுகேந்திரன் ஆரம்பித்து ஆரியன்  வரை தனக்கு நடந்த அனைத்தையும் பூர்ணிமா விடம்  கூறி….. அவரின் வார்த்தைகள் கொடுக்கும் தைரியத்தோடு   தன் சூழ்நிலையை சமாளிக்க விரும்பினாள் ஷிவானி…. இனி ஒருமுறை தனியாய் போராட அவள் மனதிலும் உடலிலும் தெம்பில்லை…….அவர் மனம்  நோகுமென்று தான் மறைத்த சில விஷயங்கள் இன்று தன்னை எங்கு கொண்டு நிறுத்தி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது……..

தான் செய்த தவறுக்காக  தன் அத்தையின் கால்களை பற்றி மன்னிப்பு வேண்டவும் ஷிவானி தயாராக இருந்தாள்…….ஆனால் இனி அவரின் துணை இன்றி எதுவும் அவளால் செய்ய இயலாது……காயம் பட்டதால் உண்டான  தலைவலியும் ஆபத்தில் சிக்கி மீண்ட உடலும் எழமுடியாத சோர்வை கொடுக்க…… இருந்தும் அவை அனைத்தையும் ஒதுக்கி படுக்கையில் இருந்து வேகமாக இறங்கியவள் உடல் தள்ளாட நிக்க முடியாமல்  சோர்வுற்று தரையில் விழுந்தாள் ஷிவானி ……

தன் அத்தையை பார்க்க வேண்டும் அவரிடம் அனைத்தையும் கூற வேண்டும் அவர் தரும் சொல்லின் தைரியம் வேண்டும்….. அவர் மடியில் கதகதப்பு வேண்டும் உள்ளம் அவளை உந்தித் தள்ள……. தன் பலஹீனம்   புறம் தள்ளி உடலில் இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பை மொத்தமாய் திரட்டி ஆவலே உருவாய் கீழே இறங்கி வந்த ஷிவானி கண்டது…….எங்கோ நிலைத்த பார்வையோடு முடிவில்லா ஒன்றை யோசிக்கும் முகபாவத்தோடு  இறுக்கமாக அமர்ந்திருந்த பூர்ணிமாவை தான்……ஏன் இத்தனை கடினமும் கருமையும் அந்த கனிவு பொங்கும் முகத்தில்…!!??? விடை தெரியாத கேள்வியில் திகைத்து நின்றாள் ஷிவானி…..  

சிரிப்பில் எப்போதும் மலர்ந்திருக்கும் முகம்  இன்று வாடிய தாமரையாய் பொலிவிழந்து அதைவிட…. ஏதோ ஒரு நிகரில்லா துன்பத்தை சகித்திருப்பது போன்ற   பூர்ணிமாவின் முகபாவம் அவர் துன்பத்தை வார்த்தைகள் இன்றியே அவள் உணர்ந்து கொண்ட நேரம் தன் துயர் அனைத்தையும் மறந்து……. 

பூர்ணிமாவின்  விழிநீர் துடைத்து உன் எல்லா நிலையிலும்  உறுதுணை நான் இருக்கிறேன் என்று பறைசாற்றும் வேகத்தோடு…… தன் கால்களை எட்டி  போட்டு பூர்ணிமாவின் அருகில் நெருங்கிய ஷிவானியின் வருகை உணர்ந்தும் ஏனோ அவளை ஏறெடுத்தும் பார்க்க தோன்றாமல் அமர்ந்திருந்தார் பூர்ணிமா…….

அளவிலா சீற்றத்தோடு பொங்கி எழும் கடல் அலை போல் அடுக்கடுக்காய்  உணர்ச்சிகள் மேலெழ….அ.. அத்…. அத்தமா என்ற வார்த்தையை உயிரின் ஆழத்திலிருந்து  சிறு குழந்தை ஒன்று. உச்சரிக்கும் முதல் வார்த்தையாய் பாசத்தோடும் பரிதவிப்போடும்….. தன்னை அழைக்கும் மருமகளின் யாசிப்பு  குரல் செவி தீண்டினாலும் மனம் தீண்டவில்லை என்று காட்டியது…… 

அவளை இதுவரை ஒரு நாளும் தான் காணாத வெறித்த பார்வையாய் கண்ட பூர்ணிமாவின் கண்களில் இருந்த விடைகாணா உணர்வுகளின் ஆதிக்கம்……..

தான் மீண்டு வந்த ஆபத்தை சொல்லி அவர் வாடிய வசனத்தின்   காரணம் கேட்டு ஒருவரின் வடிகாலாய் ஒருவர் மாற விரும்பி அவர் அருகில் சென்ற ஷிவானியை……. தான் பார்த்த அந்த  பார்வையை மாற்றிக் கொள்ளாமல் தன் வலது கரம் நீட்டி நெருங்க விடாமல் அவளை எட்டி நிறுத்தியவர்……. தூக்கத்தில் அவள்  முகம் சற்று சுருங்கினால் கூட தான் வளர்த்த பெண்ணின் வலியை அவள் உணர்வை பரிபூரணமாய் உணர்ந்து கொள்ளும் மனம் படைத்தவருக்கு…. அந்த நேரம்.  இதயத்திற்கு பதிலாய் அங்கே பெரிய கல்லொன்று முளைத்துவிட்டதோ….

ஒவ்வொரு நாளும் தான் பார்த்து ரசித்த அந்த கள்ளம் இல்லா பிள்ளை முகத்தை இன்று விழிகளில்   வெறுப்போடு பார்த்தவர்……. 

அங்கேயே நில்  இங்கே வராதே இனி என்னை நெருங்கி என் மடி சாயும் அருகதையை நீ இழந்து விட்டாய் ஷிவானி.  என்ற பூர்ணிமாவின் கொடும் சொற்கள்…..ஆறுதல் தேடி உயிர் பறவை பரிதவிக்க அவரை நாடி வந்த அந்த சிறு  பெண் தலையில் சுடு அமிலத்தை கொட்டியது……அவர் வாய்மொழிந்த இரண்டொரு வார்த்தை களில் மொத்த மூளையும்  பேதலித்தது போல் அசைய மறந்து ஷிவானி பூர்ணிமாவையே வெறித்து பார்க்க…….

அவளின் அந்த ஸ்தம்பித்த நிலையை சிறிதும் கணக்கில் கொள்ளாது அல்லது காணும் அளவிற்கு நிதானமின்றி……..எனக்குன்னு ஒரு வாழ்க்கையைப் பத்தி நான் யோசிக்காமல் உன்னை மட்டுமே உலகமாய்   நினைச்சு உயிராய் வளர்த்ததற்கு நீ எனக்கு செஞ்ச பிரதிபலன் ரொம்பவே பெருசு ஷிவானி……. உன்னுடைய ஒழுக்கத்தை மட்டும் நீ கேள்விக்குறி ஆக்கவில்லை உன்னை வளர்த்த என்னோட வளர்ப்பையும் சேர்த்து நீ அவமானப்படுத்தி விட்டாய்…….

ஒவ்வொரு வார்த்தையாய்   அவர் பேசப்பேச தான் காதில் விழுந்து உள்ளத்தை பிளக்கும்  அந்த சொற்கள் கொடுத்த வலியை தாள முடியாமல் துடித்தாள் ஷிவானி…. தான் ஒன்றும்  அப்படிப்பட்ட எந்தத் தவறும் செய்யவில்லையே……. ஒழுக்கத்தை மீறும் ஒன்றைச் செய்ய அவளால் முடியுமா..??? சிறு வயதிலிருந்தே அவர் சொல்லி வளர்த்தது தான் அவளுக்கு மறந்து போகுமா…..!!??? இத்தனை ஆண்டுகள் அவளை  போற்றி வளர்த்த பூர்ணிமா விற்கு அது எப்படி தெரியாமல் போனது…!!???  

இதயத்தில் மிக ஆழமாய் பாய்ந்தது விட்ட வார்த்தை  ஈட்டிகள் ஏற்படுத்திய வலியின் உள்ளம் வதைபட அதற்கு  மாறாய்….. முகத்தில் அமைதி சுமந்திருந்த ஷிவானி வைத்த விழிகளை விளக்காமல்  அவரையே பார்த்திருக்க…….

கண்ட ஆண்களோடு சுத்தி காலேஜ்க்கு போகாமல் வேறு எங்கோ ஊர் சுற்றக் போய் அவர்கள் கல்லூரி பெயரையே முழு மொத்தமாய் நீ கெடுத்து விட்டதாக….. என்னை நிற்க வைத்து குற்றம் சாட்டிய உன் கல்லூரி தலைமை இனி நீ படிப்பதற்கு லாயக்கு இல்லை என்று கூறி  உன்னை கல்லூரியில் இருந்தே நீக்கிவிட்டார்கள்…….சொன்னதோடு நிறுத்தாமல் அவள் முகத்தின் மீது தான் கொண்டுவந்திருந்த புகைப்படங்களை விசிறி அடித்தார் இது உன் மீது சுமத்தப்பட்ட பழிக்கு சான்று என்றபடி……. 

ஷிவானி  பிம்பம் மட்டும்   தெளிவாக அவளுடன் இருந்த ஆணின் உருவம் திட்டமிட்டு மறைக்கப் பட்ட அந்த புகைப்படங்கள் அவள்  முகத்தில் சுளீர் என்று மோதி தரையில் விழுந்து சிதற இருந்தும் அதனை ஏறிட்டும் பார்க்கவில்லை ஷிவானி…….

 தன்னைப்பற்றிய பழியை  இந்த உலகம் சொல்லட்டும்  தன்னை குற்றவாளியாய் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டும்…… அதனால் அவளுக்கு ஒன்றும் இல்லை ஆனால்  இவை அனைத்தையும் பூர்ணிமா எந்தவித விளக்கமும் அவளிடம் கேட்க முயலாமல் மற்றவர்கள் காட்டிய ஆதாரத்தையும் அவர்களின் வார்த்தைகளையும் வைத்து மட்டுமே நம்பியதுதான்  அவளால் சற்றும் நம்ப முடியவில்லை……. தான் மிக உயர்வாய் நினைத்து உள்ளத்தில் கட்டி வைத்திருந்த பாசம் கோபுரம் ஒன்று….. தரைமட்டமாகி இடிந்து அவள் தலைமேல் விழுந்தது போல் கண்கள் இருட்ட  உடல் தள்ளாட நிற்க முடியாமல் தரையில் சரிந்து அமர்ந்தாள் ஷிவானி……

அதன் பிறகு  அவளிடம் ஒரு மிதமிஞ்சிய அமைதியே  நிலவியது…. இனித்தான் பதறி என்ன செய்யப் போகிறோம்  தன் பவித்ரத்தை நிரூபித்து தான் என்ன பலன் இருக்க போகிறது….. தீயில் இறங்கி நடந்து தன் தூய்மையை நிரூபித்தால் கூட  தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வலுவிழந்து போகுமா என்று அவளுக்கு தெரியவில்லை…… அது அவசியமாகவும் படவில்லை….. யார் தன்னை நம்ப வேண்டும்.  யாரிடம் இனி அவள் தன்னை நிரூபிக்க வேண்டும் எதற்காக..!!?? எண்ணிலடங்கா கேள்விகள் குவிந்து அவனை விரக்தியின் எல்லைக்கே தள்ளிவிட…. செய்வதற்கு ஒன்றுமில்லாத மரணத்தின் அமைதியில் திளைத்தது  அந்தப் பாவப்பட்ட பிறரால் வீண் பழி சுமத்தப் பட்ட சீதையின் உள்ளம்…… 

தான் வளர்த்த தன் செல்ல  இளவரசியை தானே மிக கொடூரமாய் காய படுத்துவதை அறியாமல்….. தான் நினைத்தது நடக்காமல் போன ஆத்திரமும்  யாரிடம் தோற்கக் கூடாது என்று பூர்ணிமா நினைத்தாரோ அந்தக் குடும்பத்திடமே இன்று அவர் தோற்று நிற்கும் நிலை….. அதற்கு முழுக் காரணமும்   ஷிவானியின் செயல்கள்தான் என்று அவரின் தவறான புரிதல்…… அனைத்தும் பூர்ணிமாவை ஆட்கொள்ள இத்தனை வருடங்களாய் தாங்கள் சேர்த்துக் கட்டிய அந்த அழகிய சிறு குருவி கூட்டை தன் கைகள் கொண்டு அவரே கிழித்தெறிந்தார்…….

 வேடன் கை  அம்பு பட்டு   துடிக்கும் பறவைபோல் பரிதாபமாக தன்னைப் பார்த்து இருக்கும் மருமகளின் கண்களை காண பிடிக்காமல் முகம் திரும்பியவர்…….கடைசித் துடிப்பாய் மிக லேசாக துடித்துக்கொண்டிருந்த அவள் உயிர் மூச்சை நிறுத்தும் அந்த வார்த்தைகளை சொன்னார்…..‌..

உண்மையிலேயே நீ என் மேல கொஞ்சமாவது மரியாதை பாசம் வைத்திருந்ததால் இத்தன வருஷமா நான் உன்னை வளர்த்ததற்கு   நன்றிக் கடனா உன் முன்னாடி கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் என் மரியாதையை ஊர் உலகத்தில் முன்பு காப்பாற்ற நான்  சொல்லும் பையனை…… எங்கோ சென்று ஆபத்தில் மாட்டிக் கொண்ட உன்னை காப்பாற்றி பாதுகாப்பாய் அழைத்துவந்த அவனை திருமணம் செய்ய தயாராக இரு…….

விழிகளை இறுக மூடி எதையோ  விழுங்க முடியாமல் விழுங்குவதை போல் தொண்டைக்குழி அவதிப்பட….. சற்று நேரம் இருந்த ஷிவானி  மீண்டும் கண்களைத் திறந்த போது அந்த விழிகளில் சற்றும் உயிர்ப்பு இல்லை….. ஜீவன் இல்லை ஏன் இனி வாழும் எண்ணம் கூட அற்றுப் போன மயானத்தின் அமைதி நிலவியது…….. முழு முற்றாய் முயன்று தள்ளாடி எழுந்து நின்றவள்  சரி அத்….. அத்தை மா என்று தன் பாச விழிப்பை கூற போய் பாதியில் நிறுத்தி உங்க விருப்பப்படி நீங்க என்னை வளர்த்ததற்கு பிரதிபலனாக நீங்க சொன்னதை செய்ய தயாரா இருக்கேன்…….

கூறிவிட்டு நடந்து போன ஷிவானியின் தவிப்பிற்கு   சற்றும் குறையாத வேதனை காட்டி நின்றது பூர்ணிமாவின்    தள்ளாடும் உடல்….

அதன்பிறகு அனைத்தும் துரித கதியில் நடக்க யார் மாப்பிள்ளை யாருக்குத்தான் மனைவியாக போகிறோம் என்ற வாஞ்சை சிறிதுமின்றி பொம்மை போல்…… தான் செய்யவேண்டிய  கடமை ஒன்றே குறிக்கோளாய் நடந்து கொண்ட ஷிவானி திருமணத்துக்கு முந்தைய நலங்கிடும் வைபவத்தில் தான் மணமகளாய் ஆரியனை காண முடிந்தது……. பார்த்த வரையில் அவள் உணர்ந்த அதிர்ச்சியை விவரிக்க உலகத்தில் வார்த்தைகள் இல்லை……..

முதலிலிருந்தே தன்னை சுற்றி அகழி வெட்டி அனைவரை விட்டும் அவளைத் தனிமைப்படுத்தி…… மற்றவர் கண்களுக்கு அவளை தவறாய் காட்டியதும் அவருக்கு ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்ப காரணமாக இருந்ததும் இந்த ஆரியன் தானே……அதே நொடியில் கல்லூரியின் நிறுவனர்  அவனின் தந்தை என்று என்றோ தன் தோழி சொன்னது ஷிவானிக்கு ஞாபகம் வர…..கல்லூரியை விட்டு அவளை நீக்கிய காரணமும் இப்போது புரிவது போல் இருந்தது…….அந்த நிமிடம் அவிழாத பல முடிச்சுகள் அவள் முன்னிலையில் புதிரை விடுவித்து மறைந்திருந்த அனைத்து பாகத்தையும் வெளிக்காட்ட……..

எத்தனை பெரிய பாதகத்தை சிறிதும் பிசகின்றி இந்த ஆரியன் அவளுக்கு செய்து இருக்கிறான் யோசித்த ஷிவானிக்கு  கடைசியாய் யுகேந்திரன் அழைத்ததாக அந்த ரமேஷ் தன்னை வரவழைத்த….. அந்த சதிவேலை கூட அவளை வீழ்த்த இந்த ஆரியனின்  மூளையில் உதித்த மிக கேவலமான திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று நிச்சயம் தோன்றியது…….

முன்பு அவன் அவளுக்கு  செய்த அத்தனை தீங்கையும் கூட மன்னிக்க முடிந்த அவளால் தன் கற்பை சூறையாட கயவர்களை அனுப்பி வைத்து…..  பிறகு காப்பாற்றுவது போல் நாடகமாடிய ஆரியனின் மிகக் கேவலமான செயலை எந்த நாளும் மன்னிக்க முடியும் என்றோ  மறக்க முடியும் என்றோ தோன்றவில்லை……‌…

தன்னைச் சுற்றி பின்னப்பட்ட முழு சூழ்ச்சி வலையில் சூத்திரதாரி இந்த ஆரியன்  என்பது தெள்ளத் தெளிவாய் சந்தேகத்திற்கு இடமின்றி அவளுக்கு புரிபட…….இருந்தும் அவனை எந்த  கேள்வியும் கேட்க முடியாமல் அப்படி அவனை கேள்வி கேட்டு தன்னை நிரூபித்து யாருக்கு என்ன பயன்…….இனி யார் தன்னை நம்ப வேண்டும்  என்ற விரக்தியும் தோன்றிவிட…..

 தன் பொம்மை நிலையை கைவிடாமல் அமர்ந்திருந்தாள்  ஷிவானி……ஆனால் அவள் உள்ளம் மட்டும் கடலுக்கு அடியில் வெடித்துச் சிதற காத்திருக்கும் எரிமலையின் அக்கினி குழம்பை உள்ளுக்குள் தேக்கி வைத்தது போல் பயங்கர கொதிப்பில் கொதித்துக்கொண்டிருந்தது……இல்லாத அட்டூழியம் எல்லாம் செய்து தன்னை இத்தனை விதமாய்  அவமானப்படுத்தி தனிமையில் அனாதையாய் நிறுத்த இந்த ஆரியனுக்கு தான் அப்படி என்ன பிழை செய்தோம்…!!????

திருமணம் செய்ய சொல்லி  வேண்டிய அத்தை காக……மண்டபத்தின் வாயிலில் இருந்து வெளியேறும் வரை  தன் அனைத்து பொறுமையும் தாங்கி நின்ற ஷிவானியின் உள்ளம்…. இப்போது அவன்  அருகாமையில் மீண்டும் ஆர்ப்பரிக்க உணர்ச்சியின் பிடியில் சிக்கிக் கொண்டவள்……அவனை பழி வாங்கும் வெறியில்   சற்றும் யோசிக்காமல் அந்தச் செயலை செய்து வைத்தாள்……..

கார் ஓட்டிக் கொண்டிருந்த ஆரியனின் சட்டையை எட்டி பிடித்து அவனை   தன்னை நோக்கி இழுத்து திசைத்திருப்ப…….அவள் எண்ணியது போலவே திடீரென்று ஷிவானியின் தாக்குதலில் தன் கவனம் கலைந்து அவள் புறம் இழுபட்ட  ஆரியனின் கைகளில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த வாகனம் தன் நிலை தடுமாற…….

அவளின்  ஆக்ரோஷத்தில் சட்டென்று தன்னை விடுவித்துக் கொள்ள அவகாசம் இன்றி ஆரியன் இரண்டொரு நொடிகள் தாமதிக்க…..  அந்த கணங்களே போதுமானதாய் இருந்தது எதிரில் புயல் வேகத்தில் வந்த மணல் லாரியோடு இவர்களின் கார் மோதுவதற்கு……

                                சின்ரெல்லா வருவாள்………

Advertisement