Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.13

தன்  முன்பு மேசை  மீது தூக்கி வீசப்பட்ட புகைப்படங்களில் பார்வையை பதித்த  பூர்ணிமாவின் உலகமே சில நொடிகளுக்கு தன் சுழற்சியை நிறுத்தி கொண்டது போல்…. அவரை எங்கோ அண்டசராசரத்தில் ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டது போல்….. கண்கள் இருட்ட ,  மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க முடியாமல் சிரமப்பட உடல் பலவீனப்பட அவரின் தள்ளாட்டம் உணர்ந்த….. அங்கே பக்கத்தில் நின்றிருந்த ஆசிரியரின் உதவியோடு நாற்காலியில் அமர்ந்தார்…….

கண்ணால் பார்த்ததை புத்தி நம்ப முயன்றாலும் மனதோ இப்படி ஒரு நிகழ்வு நடந்ததிருக்க துளி அளவு கூட வாய்ப்பில்லையே  என்று ஆணித்தரமாக அடித்து கூறி வலியோடு துடித்தது……. இருந்தும் தன் உணர்வுகளை ஒதுக்கி வைத்து. முடிவாக மீண்டும் ஒருமுறை  நேரில் உள்ளவற்றின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள……. அந்தப் புகைப்படத்தை கைகளிலிருந்து பார்த்தவரின் கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது……

விழி மூடி  , முகம் திருப்பி,  விழியோடு விழி பார்த்து , இதழ் கடித்து,  மார்பில் முகம் புதைத்து இன்னும்…. எண்ணிலடங்கா காதல் நிகழ்வுகளை  காட்சிகளாய் பதித்திருந்த அந்த புகைப்படங்களில் எல்லாம் ஒரு ஆடவனோடு இருந்தது….. கண்ணுக்கு கண்ணான தன் உயிரையே அன்பாக  கொட்டி வளர்த்த அவரின் செல்ல இளவரசி ஷிவானி….. ஆனால் இது இது…. எப்படி இருக்க முடியும்…??!!!  

குழந்தைத்தனம் மாறாத வெகுளியாய் மழலையாய்  தன் கண்களுக்கு காட்சி அளிக்கும் அவரின் மருமகளா….. இப்படி ஒரு நிலையில் அந்தப் புகைப்படங்களில் இருப்பது….??!!!!   எதிலொ தோல்வி அடைந்தது போல்……. தன் வாழ்க்கையிலேயே தான் முதல் முறையாய் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து விட்டதாய் பூர்ணிமா எண்ணினார்……

இதற்கு முன்பும் இப்படி ஒரு உணர்வு அவருக்கு வந்திருக்கிறது….இதே போன்றோரு  வேதனை……. தன் வாழ்க்கை மொத்தமும் யார் ஒருவன் தன் உயிராய், உணர்வாய் உலகமாய் தன்னை கொண்டாடுவான்  என்று நம்பி இருந்தாரோ….. அந்த ஒருவனே அவன் வார்த்தைகளால் கரங்களால் தன் கனவுகளையும் ஆசைகளையும் சுக்கல் சுக்கலாய் கிழித்து எறிந்து   தங்கள் காதலை நிர்மூலமாக்கிய அன்றும்….. இதே போன்றதொரு உயிரைக் கொல்லும் வலி இருந்த போதும் . தன் துயர் தீர்ப்பதற்கும்….. நானுண்டு உனக்காக என்று ஆறுதல் கொடுப்பதற்கும் உடன் பிறந்தத சகோதரன் என்று ஒருவன்  உறுதுணையாய் இருந்தான்……ஆனால் இன்று…??!!!!!

மரித்து விட்டதாய் தான்  நினைத்த தன் வாழ்க்கைக்கு  விடிவெள்ளியாய்….தன்னை அரவணைத்து பாதுகாத்த   அண்ணனுக்கும் அண்ணிக்கும்….செய்யும் கைமாறாய் நினைத்து  உயிராய் வளர்த்த அவரின் ஷிவானி….. இப்படி முறைதவறி விட்டாள் என்பதை. ஏற்றுக்கொள்ளவோ  நம்பவோ முடியாமல் அவரின் உள்ளம் படும் அவஸ்தை……. அது கொடுத்த வலியோடு தனக்குள் மருகிக் கொண்டிருந்தவர்  செவிகளை தீண்டிய….. கல்லூரி முதல்வரின் அழைப்பு பூர்ணிமாவை நிஜ உலகிற்கு வரவைக்க கண்ணீர் வடிப்பதற்கு தயாராக இருந்த  தன் விழி உயர்த்தி அவரைப் பார்த்தார்…….

இங்க பாருங்க மிஸ்  பூர்ணிமா இந்த காலேஜ் ரொம்பவே மரியாதையான கவுரவமான இடம்…..பல பெற்றோர் நாங்க அவங்களோட பிள்ளைகளுக்கு‌ தகுந்த நல்வழி காட்டுவோம்  என்று நம்பி அவர்களின் எதிர்காலத்தை எங்க கிட்ட ஒப்படைக்கிறார்கள்…… அந்த பொறுப்பை திறம்பட செயல்படுத்த வேண்டி நாங்களும் சில கட்டுப்பாடுகளுடன் இத்தனை வருஷமா இந்த கல்லூரியை  நல்லபடியா நிர்வாகித்து வருகிறோம்…… 

தமிழ்நாட்டின்   கல்வித் துறையின் மற்ற கல்லூரிகளை விட எங்கள்   பெயர் நிலைத்திருக்கக் காரணம்…. எங்களின் பிள்ளைகள் மீதான கவனமும் கண்டிப்போடும்  சேர்ந்த கற்பித்தல் முறை தான்……

அதனால்தான்  மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கும் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கும்……நாங்கள் நேரடியாக அவர்களின் பெற்றோரையோ  அல்லது அவர்களின் பொறுப்பாளர்களையோ அழைத்து பேச வேண்டிய சூழ்நிலை அமைகிறது……. இப்போது ஷிவானி பற்றி பேச தங்களை அழைத்ததற்கான காரணமும் அதுதான்……

கல்லூரிக்குள் ஆரோக்கியமான  ஆண்-பெண் நட்பு முறை வரவேற்கப்படுகிறது…. ஆனால் அதையும் தாண்டி‌ உங்கள் பெண் ஷிவானி   கல்லூரியில் நடந்து கொள்ளும் முறைகள்…. சமீப காலத்தில் மிகத் தவறாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு……. பல மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடம் இருந்தும்  எங்களுக்கு புகார்களாக வந்த வண்ணம் இருக்கிறது….

அப்படி வந்தவற்றை நாங்கள் விசாரித்த வரையில் அது உண்மை என்றும் ஊர்ஜிதப் படுத்தப் பட்டிருக்கிறது…… அதற்கான ஆதாரத்தை தான் நீங்கள் இப்போது பார்ப்பது…….

சக மாணவன் உடனான  உங்கள் பெண்ணின் நெருக்கம்…..எங்கள் கல்லூரியில் சட்ட திட்டங்களையும் கட்டுப்பாட்டையும் அடியோடு நாசம் செய்வதாய் இருப்பதால்….. ஷிவானியை  நாங்கள் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய் கிறோம்……. தங்களது முடிவை அவர்கள் அறிவிக்க . பேசுவதற்கான வார்த்தை மறந்து விட்டது போல் ஒரு நொடி திகைத்து விழித்தவர் உடனே சுதாரித்து….. நீங்க நினைக்கிற மாதிரி ஷிவானி  மோசமான பொண்ணு கிடையாது சார் இது எல்லாவற்றிற்கும் வேறு விளக்கங்களும் இருக்கலாம்…… அவளைக் கூப்பிட்டு விசாரிங்க சார் இப்போது கூப்பிடுங்க உடனே….. 

வேகவேகமாக  பேசிய அந்தப் பெண்மணியை பார்த்த  அந்த வயதான மனிதருக்கு சிறிது பரிதாபமாக இருந்தது…… ஆனால் அவரிடம் இதை  செய்வதை தவிர வேறு வழிகளும் இல்லையே…..

மிகப்பெரிய இடத்தில் இருந்து வந்திருக்கும் பலமான கட்டளை…‌‌…அதற்கும் மேலாக  அந்தப் பெண்ணின் செயல்களை நிரூபிக்கும் ஆதாரங்கள்……. இவை அனைத்தையும் மீறி எந்தவிதமான சலுகையோ மன்னிப்போ  வழங்க அவரால் முடியாது……. சற்று இலகிய மனதை திடப் படுத்திக் கொண்டவர் மிஸ் பூர்ணிமா கூப்பிட்டு விசாரிப்பதற்கோ  அல்லது விளக்கம் கேட்பதற்கோ மிஸ் ஷிவானி இப்போது இங்கே இல்லை…..முன்கூட்டியே தெரிவிக்காமல் விடுமுறை எடுப்பது மிக மோசமான விதிமீறல் அதையும் உங்கள் பெண் சர்வசாதாரணமாக செய்திருக்கிறார் ‌……

என்ன..??!!!  என்ன சொன்னார் அவர் இப்போது ஷிவானி இன்று காலேஜ்க்கு வரவில்லையா…??  அன்றைய நாட்களிலேயே பெரிய அதிர்ச்சியாக அவருக்கு அது அமைந்தது… ஷிவானி மீது     தான் வைத்த மலையளவு நம்பிக்கையின்….. கடைசி நூல் இலையும் அருந்தி விட்டதாய்   இதற்கு மேல் சொல்லவோ அல்லது கேட்கவோ எதுவும் இல்லை அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவர்……. 

உங்களுடைய   ஷிவானி மீதான நடவடிக்கைக்கு  நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன்   கூறிவிட்டு……… ஒரு நொடி கூட அதற்கு மேல் தாமதிக்காமல் விறுவிறுவென்று  அந்த அறையைவிட்டு வெளியே வந்தவரின் கண்பார்வையில் பட்டனர்……. அங்கு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த நிலாவும் நிஷாவும்…..சுறுசுறுவென்று கோபம் உள்ளுக்குள் பற்றி எரிந்தாலும்  அந்த இடத்தின் ஒன்றும் பேசப் பிடிக்காமல். நீங்களும் ஒரு ஃப்ரெண்ட்ஸா ச்சீ …. என்ற ஒற்றை சொல்லில் தன் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி விட்டு போகும் பூர்ணிமாவை அணுகி பேச முகாந்திரம்  இன்றி அமைதியாக நின்று இருந்தனர் இருவரும்……

மேனேஜ்மென்ட்  இடமிருந்து பூர்ணிமா விற்கு அழைத்துச் சென்றதை ஆபிஸ் ப்யூன் மூலமாகத் தெரிந்துகொண்ட  போதே….. நிச்சயம் இது கல்லூரிக்குள்ளேயே ஷிவானி அந்த ஆரியன் உடனான நெருக்கத்தின் காரணமான விசாரணையாக இருக்கும் என்று யூகித்த இருவரும்….. தங்கள் கோபங்களையும் வருத்தத்தையும் மறந்து அன்று கேம்பஸ் முழுவதும்  ஷிவானியை தேடி பார்த்தும் அவள் கிடைக்கவில்லை……

நடந்து கொண்டிருப்பது எதையும் தடுக்க முயன்றும் முடியாமல்…..வேடிக்கை பார்த்த இருவருக்கும்  பூர்ணிமாவின் முகமும் அதில் இருந்த ஆற்ற முடியாத வருத்தமும் தங்கள் தோழி மீதான அவர்கள் கோபத்தை இன்னும் அதிகரித்தது…….

இங்கு இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு இந்த ஷிவு  இங்கதான் போய் தொலைந்தாள்….. சற்று எரிச்சலாக கேட்டபடி ஷிவானியின் செல்போனை தொடர்பு கொண்ட நிஷாவின் செல்போன் அது அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறதாய் ஒப்பிக்க….. ச்சே…!!  என்று சலிப்பாக கைகளை உதறிக்கொண்டாள்…….

மனிதர்கள் செய்யும்  சூழ்ச்சியை கூட முறியடிக்க  வாய்ப்புகள் உண்டு…. ஆனால் இன்று ஷிவானியின் வாழ்க்கையில்  விதி தன் உச்சஸ்தாயியில் ஆடும்போது அதை மாற்ற எவராலும் முடியாமல் போனது…..

அந்த கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த பூர்ணிமாவின் உள்ளக்குமுறலை எடுத்துக்காட்டும் விதமாக…. சுற்றுச்சூழல் மிக வேகமாக மாறி தகித்த வெப்பத்தை தணிக்கும் பொருட்டு வான்மழை பூமி நோக்கி மிக வேகமாக வந்து சேர……. சுற்றியிருந்த அனைவரும்  தலைக்கு மேல் கூரை தேடி அங்கங்கு ஓரத்தில் வளர்ந்திருந்த மரங்களின் அடியில் சென்று தங்களைக் காத்துக் கொள்ள…..

சட சடவென்று கொட்டிய மழை துளியின் வேகத்தை உடலில் உணர்ந்தாலும் உள்ளதால் அதை உணர முடியாமல்……ஒருவித மரத்துப் போன மனநிலையில் எதைப்பற்றியும் பிரான்சை  இன்றி நடந்து கொண்டிருந்த பூர்ணிமாவின்….. கண்கள் மட்டும் மழை நீருக்கு போட்டியாய் கண்ணீரை வடித்தபடி இருந்தது……..அப்படியே கொட்டும் மழையில் எவ்வளவு தூரம் நடந்தாரோ  சடாரென்று இடிச் சத்தம் காதைப் பிளக்க அதில் தன்னுணர்வு பெற்றவர் சுற்றிலும் பார்க்க அந்த வீதியில் எவருமே இல்லை…..

மிக மிக மோசமான தனிமை உணர்வு இந்த 38 கால வாழ்க்கையில் இவ்வளவு கோரமான தனிமையை தான் அனுபவித்தது இல்லை என்னும் அளவிற்கு அந்த சூழ்நிலையின் அழுத்தம் அவரை ஆட்டுவிக்க……. பல வருடங்கள் கழித்து.  முதல் முறையாக சாய்ந்து கொள்ள தோள்கள் வேண்டி அவர் மனம் அலை பாய்ந்தது…… சரியாக அதே வினாடியில் அவருக்கு நேர் எதிரில் கொட்டும் மழையில் மங்கலாக பிரகாசித்த காரின் ஹெட்லைட் ஒலி தெரிய அதைத் தொடர்ந்து…. மிக வேகமாக அவரை நெருங்கி வந்த அந்த  கார் பக்கவாட்டில் பலமான சத்தத்தோடு சடன் பிரேக் அடித்து நிற்க……

தன் வயது அனுபவம் திடம்  அனைத்தையும் மீறி கொண்டு அந்த நிமிடம்  சிறுமியாய் தன் விழிகளில் ஒருவகை மிரட்சியோடு அவர் பார்த்துக் கொண்டிருக்க…… நின்ற காரில் இருந்து கருப்பு நிற சூ  அணிந்த கால்கள் மழையில் இறங்கி நிற்க…..

கோட் சூட் அணிந்த சராசரி அளவிர்க்கும்  அதிகமான உயரத்தில்…… வலிப்பும் வனப்புமான  திடகாத்திரமான உடலோடு படர்ந்து விரிந்த தோள்கள்  கொண்டு….. தன் முன்பு அந்த வயதிலும் சிறிது கூட கம்பீரம் குறையாமல் தேவலோக   கந்தர்வனின் தேஜஸோடு கண்களில் மட்டும்….. எல்லை இல்லாத காதலும் கருணையும் தேக்கி அவரை  பெண்ணாய் உணர வைக்கும்….. தன்னுடைய பிரத்தியேக பார்வை பார்த்து நிற்கும் அந்த ஆண்மகனின் கண்களை  தன் விழியோடு விழி கலக்க உற்றுப் பார்த்தவர்…….

உன் தேடல் நானே…. உன் வாழ்க்கையின் அஸ்திவாரம் நானே…. உன் அனைத்தும் நானே ,, நானே உனக்கு  அடைக்கலம் என்று பறைசாற்ற அந்தப்பார்வை தொடர்ந்து….

 சூர்யா….!!  என்ற கூவலோடு ஒரே எட்டில் பாய்ந்து சென்று தன் பலம் மொத்தமும் உபயோகித்து….. முதுகோடு  அணைத்து தோள்களில் முகம் புதைக்க…….உன் சந்தோஷம் துக்கம் அனைத்தும் என்னைச் சேர்ந்தது என்று  அறிவிக்கும் பொருட்டு…..

பூர்ணிமா வின்  வேகத்துக்கு சற்றும் குறையாது வேகத்தோடு  தானும் தன் உயிரின் சரி பாதி ஆனவளை‌…… பின்  இடையோடு கை போட்டு தன் உடலுக்குள் புதைத்து விடும் நோக்கத்தில் பலமாய் இழுத்து தன்னோடு சேர்க்க……அவர்களின் இத்தனைக்கால உன்னதமான காதலின் காத்திருப்புக்கு வெகுமதியாய் மழைத்துளி தன் ஆக்ரோஷத்தை  குறைத்து பூஞ்சாரலாய் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது …….

தன் உச்சபட்ச உணர்ச்சிகளின் வடிகாலாக பொங்கிக் கொண்டு வந்த அழுகையை சூர்யப்ரகாஷின்   மார்பில் இறக்கி வைத்து அவர் ஆறுதல் தேட….. குலுங்கும் அவள் முதுகை தன் பெரிய பலம் பொருந்திய கரத்தினால்  அழுத்தமாய் நீவிவிட்டு சிறிது நேரம் அமைதி காத்தவர்……

என்ன ஆச்சுடா ஏன்  இந்த அழுகை என் கண்மணியின் மனம்  வருந்தும் அளவிற்கு அப்படி என்ன நடந்துவிட்டது…….ஒருகை இடையிலும்  மற்றொரு கை அவளின் பின்னங்கழுத்தில் போட்டு தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்தபடி…..பூர்ணிமாவின் செவி மடல்  தீண்டி சூரியபிரகாஷ் கேட்ட……

அ.‌‌து ந…ம்ம நம்ம….ஷிவு  ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா என்  நம்பிக்கையை மொத்தமா உடைத்துவிட்டாள். உங்ககிட்ட  சவால் விட்ட மாதிரி என்னால அவளை சரியாக வளர்க்கவோ பாதுகாக்கவோ   முடியல…… நான் தோற்று விட்டேன். கதறலாய் திக்கித்திக்கி சொல்லிவிட்டு மீண்டும் பூர்ணிமா அழுகையில் தேம்ப……. அந்த மழையிலும் தன் காதல் கிளியின் கண்ணீர் துடைத்து தன் மார்போடு அழுத்தி கொண்டவர்……

அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காது ஷிவானி  யாரென்று….. அவள் உடலில் ஓடுவது யாருடைய பரம்பரை ரத்தம் என்று   உனக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும்….. அவளின் ஒழுக்கம் பற்றி யார் கூறியும்  நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை பூர்ணிமா…… இப்போது நம் பெண் எங்கே   சூரிய பிரகாசின் கேள்விக்கு குரல் எழும்பாமல் தலையை மட்டும் மறுப்பாய் அசைத்தவர் பிறகு முயன்று….. தெ..‌தெரி..யல இன்று  காலேஜ் க்கு அவள் வரவில்லையாம் எங்கே போனாள் என்று ஒன்னும் புரியல……

சில நிமிடங்கள் தன் விழி மூடி யோசித்தவர்  தன் அணைப்பை விலக்காமலும் இடது கையை மட்டும் நகர்த்தி…….தன் செல்போனை எடுத்து அதில் இருந்த   ஒரு எண்ணிற்கு அழைத்தவர் எதிர்முனை அழைப்பை ஏற்ற நிமிடம் ஷிவு கானம்…. அவள் எங்கே இருந்தாலும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள என் முன்னாடி இருக்கனும்…….கட்டளையிட்டு  தன் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டு விட்டு. நிமிர்ந்தவர்……

இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இளவரசி நம்மகிட்ட வந்துருவா ஓகே…. இனி இப்படி அழக்கூடாது  செல்லக் கண்டிப்போடு பூர்ணிமாவை காரில் ஏற்றிய சூர்யப்ரகாஷின் கையில் மீண்டும் வேகம் எடுத்தது  அந்த வாகனம்…….. 

*********************************”*

அந்த ஒதுக்குப்புறமான வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து இறங்கி நின்ற ஷிவானியின் மனது வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக மிகுந்த பய உணர்வோடு படபடத்தது…… ஆரியனின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு நடந்த பொழுது கூட இவ்வளவு அச்சமுமோ  ஒரு ஒவ்வாத உணர்வோ எழுந்ததில்லை…..

கல்லூரி பேருந்துக்காக காத்திருந்த போது யுகேந்திரன்  நண்பனிடமிருந்து வந்த அழைப்பை…. ஏற்ற நிமிடம் அவன் பேசிய வார்த்தைகளை இப்போது நினைத்துப் பார்த்தாள்……

ஷிவானி தயவு செஞ்சு இப்போ உடனே கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வாங்க இங்க யுகேந்திரனின்  நிலைமை ரொம்ப மோசமா இருக்கு…….ரெண்டு நாள் முன்னாடி நடந்த மேட்ச்ல அந்த ஆரியன் என்கிட்ட தோத்துப் போனதில் இருந்து இவன் இப்படித்தான் இருக்கான்……. ஆனா இன்னைக்கு இன்னும் மோசம் ஷிவானியை அவனிடமிருந்து  காப்பாத்த முடியாத நான் இருந்தா என்ன இல்லை இந்த உலகத்தை விட்டு போனால் என்னன்னு புலம்பிக்கிட்டே ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டான் எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல……

ஒவ்வொரு நிமிஷமும் உங்க பேர் சொல்லியே புலம்பிக்கிட்டு இருக்கான்……..உங்களுக்காக தான் அவன்  போராடினான் என்பதை புரிஞ்சுகிட்டு தயவு செஞ்சு வந்து எங்கள் நண்பனை காப்பாற்றிக் கொடுத்துடுங்க  ப்ளீஸ்…..குரலிலேயே அத்தனை பாவனை காட்டி உருகிப் பேசிய அவன் வார்த்தைகளை அவள் மறுக்க முயல…… ஆனால் கடைசியாக அவள் சொன்ன  உனக்காகத்தான் அவன் போராடினான் என்ற வார்த்தை தன் மறுப்பை தெரிவிக்க விடாமல் அவளை கட்டிப் போட்டது……..

அது உண்மைதானே அவளுக்காக மட்டுமே ஆரியன்  உடன் விளையாடி முதல் முறை கல்லூரியில் அத்தனை பேருக்கும் முன்பு தோற்றுப் போனான்  யுகேந்திரன்……அவனைக் காண போகலாமா வேண்டாமா என்று அவள் யோசிக்கும் முன்பாகவே….. அந்த கார் வந்து நின்று விட எதற்கும் அவகாசமின்றி ஒரு  அதில் ஏறி அமர்ந்து விட்டாலும்……  

அதன் பிறகு வினாடி நேரம் கூட விடாமல் பயத்தில்  அலறும் தன் இதயத்தின் ஓசையை கேட்டபடி…… ஒரு திகிலோடு அந்தப் பயணத்தை தொடர்ந்தவளின் அச்சம் இப்போது உச்ச கட்டத்தை அடைந்தது என்றே  சொல்ல வேண்டும்……. அப்போது இருந்த உணர்ச்சியில் ஷிவானி ஒன்றை கவனிக்க மறந்தாள்…. அது இத்தனை வருடத்தில் கல்லூரியில் ஹாஸ்டலில் மட்டுமே வசிக்கும் யுகேந்திரன்….. திடீரென்று ஊரின் ஒதுக்குப்புறமான அந்த வீட்டில் என்ன செய்கிறான் என்பதை…….

அந்த வீட்டிற்குள்  செல்ல முடியாமல் ஏதோ ஒன்று அவளை  தடுக்க….. தன் யோசனையில் இருந்த ஷிவானியின் முன்பு வந்து நின்ற ரமேஷ் என்ற யுகேந்திரன்  நண்பன்…… ஷிவானி உள்ள வாங்க ஏன் அங்கேயே நின்னுட்டீங்க பேசிக்கொண்டே…… அவள் கையை பிடிக்க வர  எங்கே அவன் தன்னை தொட்டு விடுவானோ என்று பதறி அடித்து தள்ளி நின்றவளை கண்டு…. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தன் கேலியான சிரிப்பை உதிர்த்தவன் உடனே அதை மறைத்துக் கொண்டு……..

சாரி சாரி பதட்டத்துல யோசிக்காம இப்படி செஞ்சுட்டேன்  மறுபடியும் சாரி உள்ள வாங்க அவன் முன் செல்ல…. தன் கையோடு தொங்கும் கல்லூரி பையை ஆதரவாக அழுத்திப் பிடித்தபடி அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்  ஷிவானி……. அங்கே இன்னும் நால்வர் சோபாவில் அமர்ந்திருக்க அவர்களை எல்லாம் எப்போதோ பார்த்த உணர்வு….. ஆனால் அதில் ஒருவர் கூட யுகேந்திரன் உடன் கல்லூரி வளாகத்திற்குள் பேசியோ  பழகியோ அவள் பார்த்ததில்லை……

பெண்களுக்கே  உண்டான பிரத்தியேக  உள்ளுணர்வு ஏதோ ஒன்று அந்த இடத்தில் மிகத் தவறாக இருக்கிறது என்றுரைத்து அவளை  கவனப்படுத்த…… வாசலைத் தாண்டி அடுத்த அடி எடுத்து வைக்க பிடிவாதமாக மறுத்து அங்கேயே நின்று கொண்டவள்….. 

யுகேந்திரன் வர சொல்லுங்க நான் பாத்துட்டு இப்படியே பேசி முடிச்சிட்டு கிளம்புறேன் எனக்கு நிறைய வேலை இருக்கு……திட்டவட்டமாக கூறி அங்கிருந்து தன்னால் அசைய முடியாது என்று உடல்மொழியால் அறிவிக்கும் அந்தப் பெண்ணை…… ஆண்கள்  அனைவரும் கண்களில் ஒருவித போதை வெறியுடன் நோக்கினர்……..

முதலில் சுதாரித்த ரமேஷ் அவன்  அந்த ரூம்ல தான் புலம்பிக்கிட்டு படுத்திருக்கான் ஷிவானி  நீங்களே போய் பாருங்கள்…….அவன் திறந்து காட்டிய அறைக்குள் உண்மையாகவே ஒருக்களித்து யோகேந்திரன் படுத்திருக்க……  அதுவும் அவன் கைகளில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருக்க….. அதைப் பார்த்தவள் அதுவரை இருந்த ஜாக்கிரதை உணர்வு முலையில் இருந்து மறைந்து போக அவசரமாக அந்த அறைக்குள்  நுழைந்தாள்…….

                            சிண்ட்ரெல்லா வருவாள்…………

Advertisement