Advertisement

ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.11

தன்னை விட சற்றே உயரமாக இருந்த ஆரியனை முன் நாட்களைப் போல் மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கண்களுக்குள் உற்றுநோக்கி முறைத்த யுகேந்திரனின்  கோபத்தை அசட்டையான புன்னகையில் புறம் தள்ளி அலட்சியமாக நின்ற அவனின் அகம்பாவம் கண்டு தன் பற்களை நொறுங்கும் அளவிற்கு இருக்கமாக கடித்து தன் கோபம் பொறுத்தவன்…..

இங்கே பார் ஆரியன் ஷிவானிக்கு உன்னருகில் இருப்பதில் சிறிதுகூட உடன்பாடு இல்லை இருந்தும்…… நீ ஏதோ ஒரு வகையில்  அவளை கட்டாயப்படுத்துகிறாய் என்பதும்​ என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது இனி அது நடக்காது…….. நீ அவளை  கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன்,…….

விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை  இப்படி பலவந்தப்படுத்தி தன்னோடு இருக்க வைப்பது   ஒரு நல்ல ஆம்பிளைக்கு அழகு இல்லை ஆரியன் நீ ஆம்பிள்ளை என்று   நான் நினைத்தேன்…… வேண்டுமென்றே தான் மொழியும் வார்த்தைகளின் வீரியம் அறிந்தே  எதிராளியை கோபப்படுத்தி அவனைத் தடுமாறச் செய்யும் விதமாக,…… ஒரு ஆண்மகனை வெறியேற்றும் வகையில்   தெரிந்தே அந்த வாக்கியங்களை உதிர்த்த யுகேந்திரனின் எதிர்பார்ப்பை பொடிப்பொடியாக்கி…….

தந்திரங்களை வகுப்பதிலும் அதை  செயல்படுத்துவதிலும் நான் எத்தனுக்கு எத்தனாடா  என்று உரக்க பறைசாற்றும் விதமாய்…… தன்னிலையில் மட்டும் அல்லாது   முக அசைவில் கூட சிறு மாறுதல் இன்றி…. கிரேக்க சிலையென கல்லாய் இறுகிப்போன வதனத்தோடு  நின்ற ஆரியனின் கண்களில் மட்டும்…. மின்னி மறைந்தது ஒரு விபரீத ஒளி….. தன் எதிரில் நின்றவனை பார்த்த  அவனின் பார்வையின் குரூரம் காண்பவர் எவரையும் சில கணங்கள் நிச்சயமாய் அச்சத்தில் உறைந்து போகச் செய்ய வல்லது……

தன்னை  பற்றி ஒன்றும் தெரியாமல்   சீண்டி விட்டு குழப்ப முயலும் எதிராளியின் சிறுபிள்ளை தனத்தை….. அதே வகை தன்மையோடு தானும்  உபயோகிக்க ஆரம்பித்தான் ஆரியன்……வெல் மிஸ்டர் ஆம்பள சார் மிஸ் ஷிவானியை கட்டாயப்படுத்தி பிளாக் மெயில் பண்ணி   என்கூட பிடித்து வைத்திருக்கிறேன் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…….

 அதுதான் இப்போ  சூப்பர் ஹீரோ..!!   இல்லை இல்லை சூப்பர் ஆண்பிள்ளை   நீங்க இருக்கீங்களே உங்களால முடிஞ்சா…… உண்மையிலேயே  உடம்பில் பலம் இருந்தா என்னிடம் மோதி என்னை வீழ்த்தி அவளை என் கட்டுப்பாட்டில் இருந்து   காப்பாத்தி கூட்டிட்டு போங்க பார்க்கலாம்……

அப்போது  தெரியும் உண்மையில்  உன் நெஞ்சில் உரம் உண்டா என்று..  தான் அவனுக்கு செய்ய நினைத்ததை மிக மிக சுலபமாக ஆரியன்  தனக்கு எதிராய் திருப்பி விட்டதை உணராமல்…… உணரும் அளவிற்கு நிதானமின்றி  கோபம் என்னும் நெருப்பில் சிக்கிக்கொண்டு தொலைந்து போனான் யுகேந்திரன்……

சரி நம்ம இரண்டு பேருக்கும் பொதுவான பாஸ்கெட்பால்   அதுவே போட்டியாய் வச்சுக்கலாம் நான்​ வின் பண்ணிட்டா…… இனி நீ எப்பவும் ஷிவானி பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது….. அது மட்டும் இல்லாமல்​  இந்த காலேஜ் விட்டே போயிடனும் இந்த நிபந்தனைகள் எல்லாம்…… உனக்கு சம்மதமா ஆரியன்..??!! யுகேந்திரனின் சவாலுக்கு துளிக்கூட மறுப்புத் தெரிவிக்காமல்……

 கண்டிப்பா மிஸ்டர்   போரில் தோற்றவனுக்கு அதன்  பிறகு அந்த இடத்தில் எந்த முகாந்திரமும் இருப்பதில்லை யுகேந்திரன்….

ஆனா இது உனக்கும் சேர்த்துதான் என்னிடம் நீ ஒரு வேலை பரிதாபமாக தோற்றுப்போய் மண்ணைக் கவ்வ வேண்டி வந்து விட்டால்….??!! அதன் பிறகு   நீ எப்படியாவது என்னிடம் இருந்து பாதுகாக்க துடிக்கும்…… இவளின் நிழலை தொடக் கூட உன் இந்த ஆயுள் மொத்தமும் முடியாமல் போய்விடும்……தன்னை தன் சுதந்திரத்தை பணயமாக வைத்து  

இரு வேங்கைகளின் ஆக்ரோஷ சவாலை செவிமடுத்த படி நின்றிருந்த  அந்த சிறுபெண்ணின் மனதிற்குள் எண்ணிலடங்கா உணர்ச்சி அலைகள்……

நிமிடத்தில் தன்னை ஒரு பொம்மையை கையாள்வது போல்  சுலபமாக சுற்றித் தூக்கி இடம் மாற்றி வைத்த அரியணை….. அவன் மீதான தன்   உள்ளத்தில் மொத்தமாய் தோன்றிய மிக அதிகப்படியான வெறுப்போடு பார்த்தாள் ஷிவானி ……. தன் மனதில் இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்…??  அவளை என்ன செய்தாலும் அவனைத் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை என்ற திமிரில் அவளைக் கட்டிப் பிடிப்பதும்….. தொட்டு தூக்குவதும் என அனைத்தையும் அவ்வளவு சுலபமாக இந்த ஆர்யன் செய்கிறான் என்பதில் எக்கச்சக்க எரிச்சல் அவளுக்கு வந்தது……..

ஆனால் கோபப்பட்டு ஆத்திரப்பட்டு அவசரகதியில் செய்து முடிக்கும் காரியம் இதுவல்ல…… தன்னால் தன் தோழிகளுக்கோ அவளின் அன்பான அத்தை பூர்ணிமா விற்கோ எந்த ஒரு துன்பமும்  நேர்ந்துவிடக் கூடாது என்கிற தன் தலையாய காரணத்தால்….. ஆரியனின் ஆட்டத்திற்கு எல்லாம் இணங்கிப் போய்….. அமைதிகாக்கும் ஷிவானிக்கு இன்றைய யுகேந்திரனின் வருகை மனதிற்கு சிறிது மகிழ்ச்சியை அளித்தது…….

அவன் இஷ்டப்படி  எல்லாம் தன்னை ஆட்டிப்படைக்கும்….. இந்த பணக்கார பொறுக்கியின் கொட்டத்தை அடக்க யாராலும் முடியாதோ  என்ற அவளின் மனக் கவலை தீர்க்கும் பொருட்டு…..

இன்று இவனையும் எதிர்த்து நிற்க அவள் மனதிற்கு பிரியமான யுகேந்திரன் வந்துவிட்டான்……அவனிடம் இந்த ஆரியன் தோற்று நிற்க  போவதை காணும் ஆவலோடு அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள் ஷிவானி……ஆரியனின் விளையாட்டின் ஆளுமை அவள் அறிந்ததே இருந்தாலும் யுகேந்திரனும்  அவன் திறமையும் கூட சாதாரணம் அல்லவே..?? கொஞ்சம் முயன்றால்……யுகேந்திரன் ஆரியனை ஜெயித்து விடுவான் என்கிற உறுதி மனதில் தோன்ற…..

இரு ஆண் பிள்ளைகளின் வீரத்தை காட்ட பெண்ணவளை பணயம் வைப்பது எத்தனை அபத்தமான விஷயம் என்றும்…….​  அதனால் பந்தயப் பொருளான அந்த பெண்மைக்கு எத்தனை பெரிய இழிவு ஏற்படும் என்ற புரிதலின்றி……. அடுத்து வரப் போகும் நாட்களில்  தன் வாழ்வில் ஏற்படப்போகும் துன்பங்களுக்கு தானும் ஒரு வகையில் காரணம் ஆகிப்போனாள் ஷிவானி……

விழிகள் மகிழ்ச்சியில்  பலபலக்க பெண்ணவள் இதழ்களில் பூத்த  நம்பிக்கை நிறைந்த புன்னகையும்…… கண்களின் ஒளிர் வையும் கண்டவன்  ஷிவானியை இமை விடுங்க சிலகணங்கள் கூர்ந்து பார்த்தவனின் முகத்தில் உடன் பிறந்தது போல் இப்போது நீங்காமல் கொலுவிருக்கும் புன்னகை    முதல் முறை மறைந்து……உலகத்தையே நிர்மூலமாக்கும் பொருட்டு வெடிக்கபோகும் பிரளயத்தின் அதி தீவிர சீற்றத்தின் கடுமையை முகத்தில் காட்டி நின்றவனின்   மனதில்…….. அவன் அறியாமலே அவள் புன்னகை விதைத்த காயத்தின் காரணமாய் சில கணங்களுக்குள் அவள் மீதான பழி வெறி பல மடங்கு அதிகரித்து போனது……..

என் முன்பே அடுத்தவனின் பெருமை பேசும் உன் கண்களில் வற்றாத கண்ணீர் நதியைக் காணாமல்…… நான் ஓயப்போவது இல்லை    அடிப்பெண்ணே. இந்த நொடிகள் தான் உன் வாழ்க்கையின் கடைசி நிமிட சந்தோஷ தருணங்கள் ஆகும் . இப்போதே வேண்டுமட்டும் சிரித்து     கொள்……. அழகிய வடிவான உன் செவ்விதழ்கள் தாளமுடியாத துயரத்தில் நடுங்க போவதை நான் காண காத்திருக்கிறேன்….. எனக்கு மட்டும் உரிமையான என்   அடிமையே…..

 பார்வையால் அவளிடம் சேதி சொன்னவன் மனதில்  நொடி நேரத்தில் தோன்றி மறைந்த சிறு வலியை வேண்டுமென்றே  உணரக் கூட முற்படாமல் புறம் தள்ளினான்…….. அதை அவன் உணர்ந்திருந்தால்..?? ஒரு வேளை வரும் நாட்களில் அத்தனை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாமோ…..

நடந்ததும் நடக்கப்போவதும் விதியின் கைகளில் எனும்போது யார்தான்  என்ன முயன்று விதியை மாற்றி அமைத்திட முடியும்…..

சம பலம் வாய்ந்த இரு வீரர்களின்  மோதலானது…..அந்த இடத்தையே நிமிடத்துக்கு நிமிடம் பற்றியெரியும் அக்கினி களமாய்  மாற்ற வேகமும் ஆக்ரோஷமும் கொழுந்துவிட்டு எரிய முதல் 10 நிமிடங்கள் இருவரும் நொடி கூட விட்டுக் கொடுக்காமல் ஒருவித உத்வேகத்தோடு   முயன்றும் ஒரு முறை கூட பந்தை கூடைக்குள் போட முடியாமல் தடுமாற…….

இரண்டாவது சேட்டில்   பதினைந்தாவது நிமிடத்தில் ஆரியனின் இடப்பக்கம் அவன்  சற்றும்​ எதிர்பாராதவிதமாய்….. லாவகமாய் நுழைந்து பந்தை தட்டி சென்ற யுகேந்திரன் காற்றின் வேகத்தில் செயல்பட்டு அந்தப் போட்டியின் முதல் பந்தை தன்  சக்தி முழுவதும் திரட்டி கூடைக்குள் சேர்ப்பித்தான்…….

ஹெ..!!  வாவ்..!!   சூப்பர்… யுகேந்திரன் கலக்கிட்டீங்க….  தன்னை மறந்து கூச்சலிட்டு துள்ளி குதித்த ஷிவானியையும் வெற்றிப் பெருமிதத்தில் அவளைப் நோக்கி புன்னகைத்த யுகேந்திரனையும்   பார்த்தபடி நெருங்கி அவள் தோளில் கிடந்த துண்டை எடுத்து….. முகம் துடைத்த ஆரியன் மறுபடியும் அதை அவள் தோளில் போடும் பொருட்டு அவளிடம் மிக நெருங்கியவன்…….

ஆரம்பத்திலேயே ரொம்ப சந்தோஷம் படக்கூடாது  பூனக்குட்டி பொறுத்திருந்து பார் உன் எஜமானனின்  ஆட்டத்தை……

அவ்வளவு சீக்கிரம் நீ என்னை விட்டு விலகிப் போக நான் விட்டுவிடுவேனா…??  இல்லை என் அழகான அடிமையை தான் அடுத்தவனுக்கு விட்டுக்கொடுப்பேன் என்று  நினைத்தாயா..?? கேள்வியோடு நிறுத்தி வலமாக இடவலமாக தலையசைத்து சென்றவனின்…… தோரணை  அதுவரை அவளுள் இருந்த சந்தோஷத்தை துணி கொண்டு துடைத்து அதுபோல் இல்லாமல் செய்ய அந்த இடத்தை இப்போது  பயம் வந்து ஆக்கிரமித்தது…….

மூன்றாவது   முறை இன்னும் இன்னும் எரிமலையின் சீற்றமாய் மிகுந்த வேகத்தோடு ஆட்டம் சூடு பிடிக்க…. பந்தை தரையில் நொடிக்கொரு முறை தட்டிக்கொண்டே இரும்புக் கம்பத்தோடு இணைந்திருந்த கூடைக்குள்  ஆரியனை லாவகமாய் வலது புறம் தள்ளிவிட்டு தாண்டி சென்று…… இரண்டாவது கோல் போட முயன்ற யுகேந்திரனின் கையில் இருந்து கணநேரத்தில் பந்தை தட்டி பறித்த ஆரியனின் விளையாட்டு யுக்தி முற்றிலும் புதிய தாய் இருக்கவே……. உடனடியாக சுதாரித்து நிமிடத்தில்  எதிர் தாக்குதல் நிகழ்த்த முடியாது யுகேந்திரன் திணற……

நின்ற இடத்தில் நின்றபடி  இடைப்பட்ட தூரத்தையும் வேகத்தையும் துல்லியமாய்  கணித்து ஆரியன் எறிந்த பந்தானது சரியாய் அவனுக்கு  அந்தப் போட்டியின் மூன்றாவது செட்டில் 25 ஆவது நிமிடத்தில்   முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது…… அடுத்த சென்ற ஐந்து நிமிடமும் ஒருவரை ஒருவர் தடுப்பதில் மீண்டும்  நேரம் கழிய…..

பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கிச் சென்ற விளையாட்டை தன் விரல்  நகங்கள் அனைத்தையும்… கடித்துத் துப்பிய படி மிகத்தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்த ஷிவானியை   நோக்கி ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து குறும்பு செய்தவனை கண்டு கொஞ்சம் நஞ்சம் இருந்த அவளின் தைரியம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி மறைய உடல் முழுவதும் ஓடிய நடுக்கத்தோடு  கலங்கிப் போய் நின்றாள் ஷிவானி…….

நான்காவது மற்றும் கடைசி செட்டில் அனல் பறக்கும் அந்தப் போட்டியை காண கூடிவிட்ட.…… அவரவர் நண்பர்களின் உற்சாக ஆரவாரத்தோடு  முதல் நொடி தொடங்கி அடுத்தடுத்த நிமிடங்களில்…… வேங்கையின் பாய்ச்சலில் பாய்ந்து துரிதமாய் செயல்பட்ட ஆரியனிடமிருந்த பந்தை தன் வசப்படுத்த முயன்ற யுகேந்திரனின் தந்திரம் நிறைந்த  முயற்சியை……..

ஒரு எளிய துள்ளலில் வீழ்த்தி தன் பலமான புஜங்கள் கொண்டு இடப்பக்கமாய் வளைந்து  பிறர் அறியாது அவனது விலாப்புறத்தில் இடிக்க…… சாதாரண தடுக்கும் முறையாய் இல்லாமல் எதிராளியின் பலவீன  புள்ளியை சரியாக கண்டறிந்து தட்டியவனின் பலம் பொருந்திய அடியில்….தடுமாறி தரையில் விழுந்தவனை தாண்டிச் சென்று பந்தை கூடைக்குள் போட்டு   இரண்டாவது பாயிண்டை கைப்பற்றி அந்தப் போட்டியில் தனது வெற்றியை உறுதி செய்தான் ஆரியன்……

சரியாக அதே நேரத்தில் 40 நிமிடங்கள் கொண்ட போட்டியின் இறுதி நொடிகள் கடந்ததற்கான  மணி சத்தம் கேட்க……இத்தனை நாட்களில் தான் பங்கேற்ற ஏராளமான போட்டிகளில் வெற்றியில் கிடைக்காத உச்சபட்ச  சந்தோஷம் அந்த நிமிடம் அவனை ஆட்கொள்ள விழிமூடி அதனை அனுபவித்தவனின்……. மனதில் பொங்கி எழும் அந்த ரம்மியமான  உணர்ச்சிக்கு முகவரி தெரியவில்லை என்றாலும் அதை ரசிக்கவும் உணர்வுப் பூர்வமாய் அனுபவிக்கவும் ஆரியன் தவறவில்லை…….

ஒருவேளை  அவளை தன்னிடமிருந்து பிரிக்க, தான் அறியாமலே….. தன்னை  மதி மயங்கிய அவனுக்கு மட்டுமே சொந்தமான அழகிய பூனைக்குட்டியின்  பார்வையில் அவனை விட உயர்ந்து தெரிய, இனி யாரும் இல்லை என்கிற நிம்மதியில்  தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடோ அந்த சந்தோஷ ஆர்ப்பரிப்பு……

ஏய் சூப்பர் சூப்பர் சூப்பர்   மச்சான் கலக்கிட்டடா ராக்கிங் மச்சான்  அசத்திட்டடா உன்னை ஜெயிக்க யாரும் இல்லடா  சிங்கம் டா நீ ராஜீவும் ரூபனும் ஒரே தூக்காக அரியணை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு உயிர் நண்பனின்  வெற்றியை ஆர்ப்பாட்டமாய் கொண்டாட சந்துருவும் அரவிந்தனும் கத்தி கூச்சலிட்டு குதித்து அந்த இடத்தையே தங்களின் சந்தோஷ கும்மாளத்தில் இரண்டாக பிளக்கும் முயற்ச்சியில் இறங்கினர்……

தன் உடலின் அங்கமாகத் திகழும் நண்பர்களின் கொண்டாட்டத்தை ஒற்றைப் புன்னகையில் ஆமோதித்து அமைதி காத்தவனின் கண்கள் மட்டும் தான்  போட்டியில் வென்று வெற்றிக் கனியாய் தட்டிப் பறித்த ஷிவானியின் மீதே படர்ந்திருந்தது……அவள் முகத்தில் தோன்றிய வலியின் காரணம் என்ன…??  அது இவனிடம் இருந்து தான் தப்பிக்க இனி வழியற்று போனதால் உண்டானதா…….

அல்லது தன் மனம் கவர்ந்தவனின்   தோல்வியால் உண்டான காயத்தில் பிரதிபலிப்பா……. இரண்டில் எதுவாக இருந்தாலும் அது தனக்கு எந்த விதத்திலும் சந்தோஷத்தை அளிக்காது என்று நினைத்த ஆரியனின் முகத்தில் அதுவரை  பூத்திருந்த புன்னகையை மறைந்து கடினம் தோன்றியது…….

கீழே கேட்பாரற்ற தரையில் கிடந்த யுகேந்திரனின் உள்ளக் கொதிப்பை உரக்க சொல்வது போல்….. சிவந்து போய் நரம்புகள் வெடிக்க தயாராக இரு கண்கள் ஆரியனொடு

 சேர்த்து  ஷிவானி மீதும் நிலைத்து    நின்றது…… அந்தப் பார்வை அதிலிருந்த வஞ்சினம்  தனக்கு கிடைக்காத பொருள் அடுத்தவருக்கும் கிடைக்காமல் . அழிந்துபோக வேண்டும்     என்கிற சுயநல வெறி கண்களில் பிரதிபலித்த…..

யுகேந்திரனின்  உதடுகளோ அவளையே பார்த்தபடி முனுமுனுத்தது…..எப்படியும் என் வெற்றிக்கு   நீ கிடைத்தே  ஆகவேண்டும் ஷிவானி உன்னால் முதல் முறை நான் அடைந்த தோல்விக்கு பிராயச்சித்தமாக  நீ வேண்டும் எனக்கு உன்னை ஒருபோதும் நான் விடமாட்டேன் …….

துள்ளி ஓடும் புள்ளி மானை வேட்டையாட இப்போது இன்னும் ஒரு வேடன் சேர்ந்துகொள்ள மான்குட்டியின் வருங்கால  நிலை என்னவோ…….

                                சிண்ட்ரெல்லா வருவாள்…..

Advertisement