Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா  பானு

அத்தியாயம்.10

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…..!! அந்த  அரதப்பழசான சோக பாடலை இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியின் உதவியோடு  காதுக்குள் ஹை சவுண்டில் ஒலிக்க நயாகரா அருவியாய் பொங்கி வரும் கண்ணீரை…… அப்படியே கர்நாடகாவை போல்   எவரும் காணாமல் அணைக்கட்டி நிறுத்தி வைத்தாள் ஷிவானி…….

அவளுக்குத்தான் அதைவிட்டால் வேறு வாய்ப்புகளும் இல்லையே    அவள் முகம் கொஞ்சம் சுருங்கி அதை அந்த ஆரியன் என்னும்….. நித்தம் நித்தம் அவள் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கும்   அந்த டிராகுலா பார்த்து விட்டால் போச்சு……

நீ அழுவதற்கு கூட என் அனுமதி வேண்டும் என்று சொல்லி….. அதற்கும் சேர்த்து ஒரு  பனிஷ்மென்டை கொடுத்து விடுவான் ஏற்கனவே அவனை அன்று கொஞ்சமே கொஞ்சம் முறைத்துப் பார்த்ததற்கு…… அதுவும் அவன் முதுகின் பின்புறம் நின்று கொண்டு…..  திரும்பிப் பார்க்காமலே பாவி எப்படித்தான் கண்டுபிடித்தானோ..??!!

அவளின் அனல் பார்வைக்கு தண்டனையாய்  அன்றைய வேகாத வெயிலில் எப்படி அலையவிட்டான் அதுவும் ஒரு ஐஸ்கிரீம் உண்பதற்காக……. இவனோடு சேர்ந்து கொண்டு  அந்த நான்கு எருமைகளும் அடித்த கூத்தை இப்போது நினைத்தால் கூட ஷிவானியின் கண்களில் ரத்தக்கண்ணீர் வரும்போல் இருந்தது……. சரியான ரவுடி பசங்க உதட்டோடு முனுமுனுத்தாள்   அவ்வளவுக்கு அவன் அவளை ஆட்டிப் படைத்தான்…….

அதிலும் தன் தோழிகளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியதைத்தான்  ஷிவானியாள் தாங்கி கொள்ளவே முடியவில்லை…….

இந்த ஒரு வாரத்தில் அவர்கள் இருவரின்  ஷிவானி மீதான அக்கறை கலந்த புரியாத பார்வை கூட….. இப்போது    மாறிவிட்டது……எங்கு பார்த்துக் கொண்டாலும் ஒரே கோபப் பார்வை தான்    அதற்குக் காரணமும் இந்த ஆரியனே அல்லவா..?? நிலாவும் நிஷாவும் இரண்டொரு முறை ஷிவானி உடன் பேச முயன்று  கடைசி நேரத்தில் இந்த அவன் குறுக்கிட்டு அவர்களை சந்திக்க விடாமல் தடுத்ததோடு…..

மறுமுறை இப்படிப்பட்ட சந்திப்புகள் நடந்தால் தான் வைத்திருக்கும்…… அவன் வீட்டிற்குள் அவர்கள் மூவரும் அத்துமீறி பிறர் அறியாது  நுழைந்த வீடியோவை நிஷாவின் வீட்டிற்கு அனுப்பி விடுவதாக அந்த ஆரியன் ஷிவானியை பயங்கரமாய் பயமுறுத்த……..

ஏற்கனவே தான் முட்டாள் தனமான ஐடியாவால் அவர்களை  தானே…..அவன் வலையில் சிக்க வைத்தது போதும் என்று நினைத்தவள் இனி தன்னால் தன் நண்பிகளுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது…… என்னும் உறுதியோடு மறுமுறை அவர்களே ஷிவானி இடம் பேச முயன்றும் கூட தான் விலகிச் சென்று விட்டதையும்​  அதன்பிறகு அவர்களின் பார்வை மாற்றத்தையும் ஒரு வருத்தத்தோடு நினைத்துப் பார்த்தாள் அவள்…….

இந்த   பிரச்சனைகள் எல்லாம்.  முடிந்தவுடன் நடந்த அனைத்தையும்….. கூறி தோழிகளின்   சந்தேகங்களை மறைய வைக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு   தெரியவில்லை அப்படி ஒரு நாள் இனி ஒருபோதும் வராது என்கிற உண்மை……

தன் உயிரானவர்கள் அனைவரும் தன்னை விட்டுப் பிரியும் காலமும் நெருங்கி விட்டது என்பதையும் பாவம்  பேதைப்பெண் அறிந்திருக்க வில்லை……

தன் துயரமான நினைவுகளில் மூழ்கி போனவளின் மேசை மேல் இருந்த  கையை அதே இடத்தில் வைத்திருந்த தன் ஷூ காலால் தட்டிய ஆரியன்…… அவன் இடித்ததில்  உள்ளங்கையில் முட்டுக்கொடுத்து இருந்த தலை டேபிளில் சென்று மோதி ஷிவானிக்கு வலியை கொடுக்க…… கோபமாக நிமிர்ந்து பார்த்தவள்  அங்கே அவன் முகத்தில் தெரிந்த நக்கலும் திமிரும் கலந்த புருவ அசைவில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு……

அவனின்  கேள்விக்கு  ஒன்றுமில்லை என்று தலையசைத்து விட்ட…. வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள் அவனை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாத கைதி நிலை  அவளிடம்……கைகள் அதன் வேலையைச் செய்ய உதடுகளோ அந்த ஆரியனை திட்டித் தீர்த்து கிழித்து மூலைக்கொன்றாக ஏறியும் வேலையை செய்து கொண்டிருந்தது…….

தங்கள்  வகுப்பறையில் அமர்ந்து   ஆரியனின் பேப்பர் வொர்க்கை  எழுதிக் கொண்டிருந்த ஷிவானியை……அங்கிருந்த ஆண்கள்  விசித்திரமாய் பார்த்தார்கள் என்றால் பெண்களோ கொஞ்சம் பொறாமை சிறிது இளக்காரம் இன்னும் பலமான வயிற்றெரிச்சலோடு பார்த்து தங்களுக்குள் பேசியபடி இருந்தனர்…….

ஷிவானி அந்த கல்லூரியின்  உரிமையாளரின் மகனான ஆரியனை தன்வச படுத்துவதற்காகவே அவனுக்கு எடுபிடி வேலை செய்துகொண்டு…..  இப்படி சில நாட்களாக அவன் நிழல் போல் சுற்றிச்சுற்றி வருவதாய்…… ஒரு வதந்தி ஏற்கனவே அந்த வளாகம்  முழுவதும் பரவியிருந்தது……. என்பதும் இப்போதுகூட மற்றவர்கள் தன்னைப் பற்றி தான் புறம் பேசுகிறார்கள் என்பதும்   ஷிவானி உணரவில்லை…..

அதைவிட தன் நடவடிக்கைகள் மூலமாய்  இதுபோல் ஒரு விமர்சனம் எழும் என்று கூட அவள்  யோசித்திருக்கவில்லை…. ஒருவேளை ஆரியன் அது போல்   அவள் சிந்திக்க இடமளித்து விடாமல் மற்றவர்களின் கேவலமான பேச்சுக்களையும் அவள்  கேட்டு விடாமல் பார்த்துக் கொண்டானோ என்னவோ…??

தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பார்வையும் அது சொல்லும்…..  குற்றச்சாட்டையும் அவ தணிக்கும் ஆற்றல் இல்லாத ஷிவானியை நினைத்து ஆரியனுக்கு……பரிதாபத்திற்கு பதில் எரிச்சலும் கோபமும் மட்டுமே எழுந்தது  இப்படியா ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூட….. முடியாத அளவுக்கு முட்டாளாக இருப்பாளா என்று அவன் ஆத்திரமாக எண்ணினான்……

தனக்கும்​  அவள் வேண்டும்  தான் அவன் எடுத்த காரியம் நிறைவேற தன்னைச் சார்ந்த சிலரின்  நன்மைக்காக………. எந்த நல்ல உள்ளத்தின் உண்மையான அன்பிற்கும் தகுதியில்லாத   அவளுக்கு சரியான தண்டனையாய் தன் காரியம் சாதிக்க அவளை பலிகடாவாக மாற்றும் எண்ணத்தோடுதான் ஆரியன் ஷிவானியை நெருங்கியது…….

இன்று அவளைச் சுற்றி இருக்கும் இந்த சதி வலை கூட அவன் திட்டத்தில் ஒன்றுதான்….. அவளே  அறியாது உணராது அவன் நடத்திக் காட்டும் வித்தை தானே அது….. அப்படி இருக்கும் போது தான் நினைத்தது அனைத்தும் அடி பிசகாமல் அற்புதமாய் நடந்தேற  ஆனாலும் கூட…… உள்ளத்தில் ஒரு உறுத்தல்…..

அவனின் சிறு முயற்சியும்  தேவையின்றி காற்றில் நூல் அறுந்து  பறக்கும் பட்டம் போல் தானாகவே….. தன் மடியில் விழுந்த   அவளின் ஏமாளித்தனமும் குழந்தை மனமும் என்னதான் தனக்கும் தன் திட்டத்திற்கும் சாதகமாய் மாறினாலும்……ஆரியன் உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில்  ஷிவானியின் சிறுபிள்ளைத்தனம் நினைத்து கோபமும் வெறுப்பும் எழுந்த வண்ணமே இருந்தது……

யார் வேண்டுமானாலும் சற்றும் சிரமமின்றி ஷிவானியை  வசப்படுத்த முடியும் என்ற எண்ணமே ஆரியனுக்கு கசந்தது …… அவன் புத்திக்கு சரி என்று பட்ட ஒன்றை எவருக்கும் அஞ்சாது  தன் முடிவு ஒன்றே சரியென நினைத்து நடப்பவனின்….. வலிமையான நெஞ்சமானது இன்று அவன் உறுதியை நிராகரித்து….. அதற்கு  மாறாக வேறொன்றை எதிர்பார்த்தது அது அவள் தன்னிடம் எதிர்த்து நின்று தன்னை முறியடித்து ஜெயிக்க வேண்டும் என்று ….. அவனே விரும்பும்  விந்தை அவனுக்கே கூட புரியாத புதிராக தோன்றியது…..

அப்படி நடக்காத போது அது அவள் புறமே இன்னும் இன்னும் கோபமாக பழிவாங்கும் உணர்ச்சியாக திரும்பியது…… தன்னிடம் கொஞ்ச நஞ்சம் இருந்த ஷிவானி மீதான இலக்கத்தையும் மொத்தமாய் துடைத்தெறிந்தவன்  தன் நாடகத்தை முழுமையாய் அரங்கேற்ற ஆரம்பித்தான்……..

ஒரு தனி மனிதனின் மிரட்டலுக்கு பயந்து அவனுக்கு பணிந்து நடப்பது அவளின் இந்த சம்பவம்  எத்தனை தூரம் ஆபத்திற்கு கொண்டு செல்லும் என்று ஷிவானிக்கு உணர்த்த விரும்பினான் ஆரியன்……. தன் திட்டங்கள் நிறைவேற்றுவதோடு ஒரு ஆழமான படிப்பினையும் அவளுக்கு  கிடைத்துவிடும் அதன் மூலம்….. தன் வாழ்வில் இனி வரும் தனிமையான காலங்களை அவள் எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும் என்று அவன் நம்பினான்…….

வலையை விரித்து காத்திருந்த  வேடன் மேல் தவறு இல்லாமல்…..அதில் மாட்டிக் கொண்ட மானின் அறியாமையில்  குறை கூறும் இவனின் தருமம் தான் என்ன விதமோ..???!!!!!

ஹாய் நிஷா ஹாய் நிலா ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க கேட்டபடி  தங்கள் முன்பு வந்து நின்ற யுகேந்திரனை கண்டு…… சோகமாய் சிரித்தவர்கள்  நல்லா இருக்கோம் யுகேந்திரன் நீங்க எப்படி இருக்கீங்க…… அவர்களின் பதில் உபச்சார கேள்வியில் சட்டென்று முகம் சுருக்கியவன் உடனே சுதாரித்து ஐ அம் ஓகே  அப்புறம் உங்க ஃப்ரெண்ட் அவங்க என்ன சொல்றாங்க…?? உங்களால் அவங்ககிட்ட பேசிப் பார்க்க முடிந்ததா…..

என்னதான் மறைத்தாலும் அவன் கண்களின் எதிர்பார்ப்பு யுகேந்திரனை பெண்களுக்கு காட்டிக் கொடுத்துவிட….. அவனுக்காக  பரிதாபப்பட்டவர்கள்…..

ப்ளீஸ் யுகேந்திரன் அவள பத்தி மட்டும் பேசாதீங்க  அவ இப்படி மாறி போயிடுவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை…… முன்னாடி நாங்க கூட நினைத்தோம் இந்த ஆரியன் தான் அவளை  ஏதோ ஒரு வகையில மிரட்டி பயமுறுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்னு….. ஆனா அது அப்படி இல்லைன்னு இந்த ஷிவு நிரூபிச்சுட்ட……

எங்களோட பேசக்கூட அவளுக்கு நேரம்  இல்லை….. கிளாசிலும் தனியா போய் உட்கார்ந்து கொண்டாள்  நாங்களே மூணு தடவை முயற்சி பண்ணி கூட எங்க கிட்ட பேச பிடிக்கலைன்னா……??  அதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும் அவளுக்கு குற்ற உணர்ச்சி உங்களை விரும்புகிறேன் ன்னு எங்க கிட்ட சொன்னதால இப்போ எங்களையும் அவாய்ட் பண்ண ஆரம்பிச்சுட்டா……

அதைவிட மோசம்  பிளான் பண்ணி கூடவே இருந்து அந்த ஆரியனை வளைத்து  போட்டுட்டா என்று….. காலேஜ் மொத்தமும் பேசுது அதப்பத்தி கூட அவளுக்கு தெரியாமலா  இருக்கும்……அப்படிக்கூட ஒரு வார்த்தை விளக்கம் சொல்ல முயற்சிக்கவில்லையே…..

லேசாய் கண்கள்  கலங்கிய விட தங்கள் ஆருயிர்த் தோழி பற்றி அடுத்தவர் கூறும் வார்த்தைகளை….. சிறிய ஏற்க முடியாமல் ஆனால் நடப்பவை அனைத்திற்கும் வேறு விளக்கங்களும் இல்லாமல் போக  கோபத்திற்கும் தவிப்பிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு நிஷா தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க……

அதுவரை தலைகவிழ்ந்து அவள் சொல்வதை  கேட்டுக் கொண்டிருந்த மகேந்திரனின் தலை சட்டென்று நிமிர…..கண்களில் மின்னும் மின்னலோடு நிஷா உண்மையாதான் சொல்றீங்களா ஷிவானி உங்ககிட்ட என்னை லவ் பண்றதா சொல்லி இருக்காங்களா…… அதிகப்படியான ஆவலோடு வினவும் அவனைப் பார்க்க நிஷாவிற்கு சிறிது பரிதாபமாக கூட இருந்தது……. அத்தோடு தன் தோழியின் ரகசியத்தை அவள் விருப்பமின்றி  சொல்லிவிட்ட தன் தவறும் சேர்ந்துகொள்ள…….

சாரி மிஸ்டர் யுகேந்திரன் நான் இத ஷிவு அனுமதி  இல்லாமல் சொல்லக்கூடாது மறுபடியும் சாரி…. என்பதோடு எழுந்துகொண்ட நிஷா நிலாவின் கைகளைப் பிடித்து இழுத்தபடி அங்கிருந்து விலகிப் போய்விட……

இதுவரை தன் கண் முன்னால் நடந்த கண்ணாமூச்சி விளையாட்டில் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய்….  தன் விருப்பமானவளின் மனம் அறியாமல் குழம்பிப்போனவனுக்கு முதல் முறை ஒரு நம்பிக்கை துளிர்விட…. அத்தோடு அந்த ஆரியனின் மேலிருந்த வெறுப்பும் சேர்ந்து கொள்ள அவனை  ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் வலுப்பெற்றது…… அதற்கு முன்பு ஷிவானியை தனிமையில் சந்திக்க வேண்டும்…..

தன் மீதான அவள் காதலை உறுதிப்படுத்திக் கொண்டு…… அந்தக் கயவனிடம் இருந்து அவளை மீட்க வேண்டும்…. எண்ணிலடங்கா சிந்தனைகளோடு  கால் போன போக்கில் பேஸ்கட் பால் ஸ்டேடியம் வந்தவனின் கண்கள் ஓரிடத்தில் அப்படியே நிலை குத்தி நின்றது……அவன் சுவாசம் கூட தடைப்பட்டதோ….. அங்கே….

வியர்வை சொட்ட சொட்ட குதித்தாடும் அருவியாய்  விளையாடி கொண்டிருக்கும் ஆரியனை….. என்ன முயன்றும் காணாமல் அவளால்  இருக்க முடியவில்லை…… இப்படி ஒரு ஆளுமையோடு இதற்கு முன்பு எவரும் அந்தக் கூடைப் பந்தாட்டத்தை  விளையாடி அவள் பார்த்ததில்லை…… தனக்குப் பிடித்த ஒன்றை அவன் விளையாடும் நேர்த்தியில் தன்னிலை மறந்து…. அன்றுபோல் இன்றும் சிலையாகிப் போன ஷிவானியின் தோளில் ஒரு கரம் அழுத்தமாய் படிய…..

அந்தத் தொடு உணர்ச்சியில் சுயம் திரும்பியவள் ஏறிட்டுப் பார்க்க….. தனக்கு மிக அருகில் துளித் துளியாய் முகத்தில்  நீர் சொட்ட நிற்கும் ஆரியனை கண்டு விழி விரித்துப் பார்க்க…… என்ன பூனைக்குட்டி உன்னோட மாஸ்டரையே இப்படி சைட் அடிக்கிற இது ரொம்ப தப்பாச்சே….. கண்சிமிட்டி கேட்டவனின்  கைகளை நொடியில் தட்டிவிட்டு நான்கு அடிகள் தள்ளி நின்றவள் இந்த மாதிரி என்கிட்ட பேச வேண்டாம் என்று விரலை ஆட்டி எச்சரித்தாள்……

ஓ..!! என்று நக்கலாய்  தன் இதழ் குவித்தவன் எட்டி அவளின் நீட்டிய விரல் பிடித்து இழுக்க புவியின் ஈர்ப்பு விசை போல்…. பலமான அவன் இழுவிசை க்கு கட்டுப்பட்டு தன் மீது வந்து விழுந்த ஷிவானியின் இடை  பற்றி அழுத்தி மேலும் அவளைத்…. தன்னோடு பிணைத்து அவள் தோளில் கிடந்த டவலில் தன் முகம் புரட்டியவனின்…… கண்கள் மட்டும் எதிர்த் திசையில் கண்களில் நெருப்பு பொறி பறக்க ஆத்திரத்தில் உடம்பெல்லாம் பதற நின்று யுகேந்திரனின்…..  மேலேயே வட்டமிட்டது உதட்டிலோ எப்போதும் அடுத்தவரை பரிகசிக்கும் அவனின் பிரத்தியேக புன்னகை……

அய்யோ.. ச்சீ.. கருமம் என்னை விடு  ஆரியன் சொல்லிக்கொண்டே…. தன் கைகளை அவன் மார்பில் வைத்து தள்ள முயற்சி செய்த பெண்ணவளின் ஒவ்வொரு அசைவிற்கும் பல மடங்கு அதிகமாய் தன் இரும்புக்கரம் கொண்டு அவளைத் தன் உடலோடு புதைக்க முயன்றான் ஆரியன்……

கண் முன்னால் காணும் காட்சியில் எரிமலையாய் குமுறி கோபத்தில் வெடித்தவன் தன் நிதானம் தப்ப…. யூ  பிளடி ராஸ்கல் விடுடா அவளை என்று கத்திக் கொண்டே சென்று ஷிவானி யின் தோளைப் பற்றி அவளை விடுவிக்க…. முயன்றவனின்  கைகள் அவள் மேல் படும் முன்னும்…..

ஷிவானியை  தன்னிடமிருந்து பிரித்து ஒரு சுற்று சுற்றி தனக்குப் பின் பக்கம் நிறுத்தியவன்  இரும்பு கோட்டை போல்….. இருவருக்குமிடையில் நின்று யுகேந்திரனை பார்த்து சிரித்த சிரிப்பு சொன்னது என்னைத்தாண்டி உன்னால் முடிந்தால் உனக்கு துணிவிருந்தால்     அவளை உன் சுட்டு விரல் கொண்டு தொட்டுப்பார் என்று……..

                                சின்ரெல்லா வருவாள்………

Advertisement