Advertisement

அத்தியாயம்.1

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மிகப் பிரபலமான அந்தக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல கட்டிடங்கள் கொண்ட…. இளம் பிள்ளைகளின் வேடந்தாங்கலாய்…… கம்பீரமாய் உயர்ந்து நின்றது……காலை 7 மணி ஒருவர் கூட இல்லாத அந்தப் முற்பகல்  பொழுதில் கல்லூரியின் வளாகத்தில்……அமைந்திருக்கும் மரங்கள் அடர்ந்த மாணவர்கள் ஓய்வாக அமரும் பகுதியில் மூன்று பெண்கள் மட்டும்….. அமர்ந்து தங்களுக்குள் எதையோ வேகு சுவாரஸ்யத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்……..

ஏய் ஷிவானி அதான் நாங்க ரெண்டு பேரும் சொல்றோம்  இல்லை…… இத விட்டா வேற பெஸ்ட் ஐடியா கிடையவே கிடையாது டி  ஒரு வருஷத்துக்கு மேல சும்மா பாத்துகிட்டு இருந்தா மட்டும் போதுமா…?  அவ்ளோ சூப்பரான ஆளு வேற எவளாவது கரெக்ட் பண்ணிட்டு போயிட்டா…..

அப்புறம் நீ என்ன பண்ணுவ…… சொல்லு…?  அதனாலதான் இந்த லெட்டர் , நம்ம கேம்பஸ் குள்ளத்தான்  போன் நெட்வொர்க் எதுவுமே அளவோட் இல்லையே……. அதனால அவன்கிட்ட  இந்த லெட்டரை குடுத்துட்டு ஓடி வந்திரு…… இது என்னன்னு தெரிஞ்சுக்க வாது நிச்சயம் உன்னுடைய ஹீரோ திறந்து பார்ப்பான்……

அப்புறம்  என்ன உன் லவ் புரிஞ்சுடும் என்ன  மாதிரி சூப்பர் ஃபிகர் இல்லனாலும்  நீ பாக்க நல்லாத்தான் இருக்க……அதுவரை மிக அமைதியாக மனதில் ஒரு வித பயத்தோடு தன் தோழி நிஷாவின் பேச்சைக் கேட்டு இருந்த ஷிவானி… இப்போது விழி உயர்த்தி  அவளை முறைத்துப் பார்த்தாள்….‌..

தோழியின் பார்வையில் தெரிந்த கொலை வெறியில் சற்றும் உஷாரான நிஷா…… சரி சரி நீ ரொம்ப  அழகாதான் இருக்க இப்போ நான் சொல்றத ஒழுங்காக கவனி இந்த லெட்டர் கொடுத்தா போதும்….. உன் ப்ரபோசலை அவன் கண்டிப்பா அக்செப்ட் பண்ணிக்குவான்……அப்புறம்  என்ன ஒரே லவ்சுதான்…..

தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற உயிரைக் கொடுத்து ஒரு வீரமான  சொற்பொழிவை ஆற்றிவிட்டு நிஷா அமைதியாக அமர…… ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு டி….. என்று காலையில் இருந்து ஒரு மணி நேரமாக படித்த  அதே பாட்டை ஷிவானி மறுபடியும் படிக்க……அந்த காலத்து ஹீரோயின்கள் போல் குலுங்கி குலுங்கி அழ ஆசை வந்தது நம் கதாநாயகியின் அன்புத் தோழிகளுக்கு……..

இது தேறாத கேஸ்சு என்று நினைத்தபடி  தலையை இடவலமாக அசைத்த…. நிஷா திரும்பிப் பார்க்க அருகில் நிலாவும்  அதையேதான் செய்து கொண்டிருந்தாள்……பின்பு அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு…..

காதல் என்ற பெயரில் தங்கள் தோழி இந்த ஆறு மாதமாக தங்களை படுத்தும் பாட்டை நினைத்து இருவருக்கும் கண்களில் ரத்த கண்ணீர் வராத குறை…….எப்படி முயன்றாலும் அவளிடம் இருந்து தப்பிக்க முடியாத  காரணத்தால் பெரும்பாடுபட்டு…… ஷிவானி யின் வாயை அடைக்க ஒரு வழி கண்டுபிடித்து…..

அவள் காதலனை அவளோடு சேர்த்து வைத்து தொலைத்து விடுவோம்  என்கிற ஒரு நல்ல முடிவிற்கு வந்து…… மிகவும் கட்டுப்பாடு நிறைந்த அந்தக் கல்லூரியில்…….. காதல் என்கிற விவகாரம் எல்லாம் ரொம்பவே அபத்தமான   ஒன்றாக கருதப்படும்…….. துரதிஷ்ட வசத்தால் வேறு எந்த வழியிலும் தோழியின் காதலனை அணுக முடியாமல் போக……

அதனால்தான் இந்த நவீன காலத்திலும் லெட்டர் கொடுக்கும் அரதப்பழசான  பழைய யுக்தியை கையாள முடிவு செய்து….. கிட்டத்தட்ட ஒரு வாரமாக யோசித்து யோசித்து  இல்லாத மூளையை பிழிந்து காதல் ரசம் சொட்ட சொட்ட அழகான கவிதை வரிகள் கொண்ட காதல் கடிதத்தை தோழிகள் மூவரும் தயார் செய்து முடித்து…….

கல்லூரி துவங்கும் நேரத்திற்கு முன்பாகவே  அவள் காதலனிடம்…. கடிதத்தை கொடுக்க காலை வேளையின்  அருமையான தூக்கத்தை வேறு தியாகம் செய்து ‌…..‌‌தோழிகள் இருவரும் அவளை கூட்டி வந்தால்….??!!!!

கடந்த இரண்டு மணி நேரமாக…… அவர்கள் சொல்வது அனைத்தையும் நல்ல பிள்ளை போல் தலையாட்டி  கேட்டுவிட்டு கடைசியாக ஆனாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்குடி…….என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும்  தோழியை என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் பழைய படங்களில் வரும் வில்லன் நம்பியார் போல் கைகளை பிசைந்தனர்……..

சரி அப்போ நீ லெட்டர் கொடுக்க மாட்ட…?? ஓகே விடு பரவாயில்லை…..அவன் நம்ம  கேம்பஸ்லயே செம பாப்புலர் சூப்பர் ஹாட் பேஸ்கேட் பால் ப்ளேயர்….. ஸ்டேட் சாம்பியன்…. அதனால இந்த லவ் லெட்டரை என் பெயர் போட்டு நானே கொடுத்துடறேன்….

சொல்லி விட்டு  நிலா எழுந்து கொள்ள முயல….மறுபடியும் அவள் கையைப் பிடித்து இழுத்து தரையில் போட்டவள்……. அடிப்பாவி ஸ்நேகித  துரோகி….. எத்தனை நாளிடி உன் மனசுல இந்த எண்ணம் இன்று ஷிவானி அலற…… இங்க பாரு சிவு இப்போ நீ லெட்டர் கொடுக்கப் போறியா    இல்லை அவனுக்கு நாங்க கொடுக்கட்டுமா……

எங்கே தோழிகள் இருவரும் தன் காதலனை தன்னிடமிருந்து ஆட்டையைப் போட்டு விடுவார்களோ என்ற…… பயத்தில் தானே  கொடுப்பதாக ஒத்துக் கொண்டவள் சிலபல பெருமூச்சுகள் விட்டு தன்னை சரி செய்தபடி….. நிலாவிடம் இருந்து காகிதத்தை பறித்துக்கொண்டு வீர நடை போட்டு கிளம்பினாள்  ஷிவானி…….

ஷிவானியின் காதலன்  அந்தக் கல்லூரியின் முதன்மையான மற்றும் பிரபலமான  கூடைப்பந்து வீரன்…… யுகேந்தர் எப்போதும் போல் தன் வழக்கமான அவன் கூடைப்பந்து களத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருக்க….. அங்கிருந்த ஒரு மரத்திற்கு பின் மறைந்து நின்று அவனையே  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி தலையில் அடுத்தடுத்து இரண்டு மூன்று கொட்டுகள் வில…… அதில் வலியோடு கத்த போனவளின் வாயை மூடி மரத்திற்கு பின்னால் இழுத்துப் போனார்கள் நிலாவும் நிஷாவும்………

ஏண்டி பிசாசுகளே இப்படி   ஒரு பச்ச பிள்ளை மண்டைய பஞ்சர் பண்றீங்க…… என்று சண்டைக்கு கிளம்பிய ஷிவானியை  பார்த்துப் பல்லை கடித்தவர்கள்……. ஏய் எருமை அவன் கிட்ட லெட்டர் கொடுக்கிறேன்னு எங்ககிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டு……

இங்க  மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சு நின்னு  அவன் பயிற்சி பண்றத பே… ன்னு பார்த்துகிட்டு இருக்க….. இடுப்பில் கைவைத்து அவளை முறைத்தபடி கேட்டவர்கள்…..இல்ல நீ சரிப்பட்டு வரமாட்ட….. நாங்க முடிவு பண்ணிட்டோம் யுகேந்தர்  எங்களுக்குத்தான் சொல்லிவிட்டு அவளைக் கடந்து அவர்கள் போக முற்பட…….

ஏய் ப்ளீஸ்டி ப்ளீஸ்டி கடைசி வாய்ப்பு…..இந்த முறை  கரெக்டா யுகி கிட்ட லெட்டர் கொடுத்துட்டு வேன்…… தன் காதுகளை பிடித்து ஷிவானி  தோப்புக்கரணம் போட…. சரி சரி பொழச்சிப்போ…… எப்படியும் அவன் பாய்ஸ் ஹாஸ்டல் பக்கம் தான் வருவான்……. இந்த வட்டி மிஸ் பண்ணிடாத டி…… நிஷா எச்சரிக்கை……இப்போ பாரு நான் என்ன பண்றேன்னு கெத்தாக சொல்லிவிட்டு……

இம்முறை எப்படியும் துணிந்து செயல்படுவது என்ற…..சங்கற்பத்தோடு மீண்டும் ஒருமுறை வீரநடைபோட்டு கல்லூரி வளாகத்தில் கட்டிடத்தில் அவன் வருகையை எதிர்பார்த்து  ஷிவானி மறைந்து நின்றவளின்……காதில் சில நிமிடங்களுக்கு பிறகு…..

காலடி ஓசை கேட்க அதுவரை அமைதியாக இருந்த மனது அடுத்த நொடி  பிரபுதேவா போல் உள்ளுக்குள் குத்தாட்டம் போட…… இதயம் துடிக்கும் துடிப்பில் வாய் வழியாக  வெளியே வந்து விழுந்து விடுமோ என்னும் அளவிற்கு பயம் உண்டாக தன் நெஞ்சில் இரு கைகளையும் வைத்து அலுத்தியவள்….. ஷிவானி ஸ்டேடி ஸ்டேடி தைரியமா இரு   லெட்டர் கொடுத்துட்டு உடனே ஓடிப் போயிறலாம்…… தன் மனதிற்கு தைரியம் சொல்லியபடி அவள் நிற்க இப்போது காலடி ஓசை மிக அருகில் கேட்க ஆரம்பித்தது…….

அச்சச்சோ வந்துட்டான் என்று கைகளை  உதறியவள்…. கடைசியில் தன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி……. அவன் தன்னை மிகவும் நெருங்கி விட்டதை யூகித்து… அப்படியும் தைரியம் வராமல் இறுக்கமாகக் கண்களை மூடிக்கொண்டு……தன் மறைந்திருந்த இடத்திலிருந்து பட்டென்று வெளிப்பட்டு அவன் முன்பு வந்து நின்றவள்………

ஹ….லோ யுகேந்தர் எப்ப…டி இருக்கீங்க நா உங்க மேல…. இல்ல நீங்க என்மேல…. இல்ல…. இல்ல  என் மனசு இதுல…..இந்த லெட்டர் எழுதி இருக்கேன் படிச்சு பார்த்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க…….

கண்ணை மூடி தலைகுனிந்து கடிதத்தை நீட்டியபடி படபடவென்று மனதில் உள்ளதெல்லாம் பேச்சு தந்தியடிக்க வாய் குளற  சொல்லி முடித்தவள்……. இறுதியாக தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் நிமிர்ந்து பார்க்க…..

அங்கே அவள்  கண்ட காட்சியில் அது கொடுத்த அதிர்ச்சியில்….. சுவாசிக்க கூட தோன்றாமல் ஐஸ் கட்டி சிற்பமாய் உரைந்து நின்றாள்  ஷிவானி……..கண் முன்பு ஏலியனை கண்டு விட்டது போல் அவள் தன் முட்டைக் கண்களை முழுவதுமாக விரித்தபடி பார்த்திருக்க……

அங்கே ஷிவானி  முன்பு அவள் இதுவரை ஒருமுறை கூட பார்த்திராத முற்றிலும் புதிய ஆடவன் ஒருவன் சிறிது வித்தியாசமான உடையில்  நின்றிருந்தான்…… அதுவும் முகத்தில் என்னவென்று கணிக்க முடியாத ஒரு வகை புன்னகையோடு……. அவளையே பார்க்கும் அவனது கண்கள்…‌…????

யுகேந்திரனை  விட்டு வேறு எவனிடமோ காதல் சொல்லிவிட்ட பதட்டத்தில்……. ஏற்கனவே இருந்த பயமும் சேர்ந்து கொள்ள ஷிவானிக்கு அழுகை வரும்போல் இருந்தது   இல்லை இல்லை நான் இல்லை….. கைகள் இரண்டையும் மறுப்பாய் ஆட்டி அந்தப் புதிய அவனைப் பார்த்து உளறிக்கொட்டியவள்…… அவன் அவளை அதே ஏளனச் சிரிப்போடு  பார்த்துக் கொண்டிருக்க……. அவன் அருகில் இருந்து விலகி..……

பின்பக்கமாகவே நடந்தவள்   தன் கையிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்ததை கூட உணர்ந்து கொள்ளாமல் பின்னங்கால்  பிடரியில் அடிக்க அங்கிருந்து ஓடி மறைந்தாள்……

அவள் விட்டுச் சென்ற காதல் கடிதம் அந்த புதியவனின் காலடியில்  கேட்பாரற்று கிடந்தது…….

அந்த காபி ஷாப் இன் மிக ஓரத்தில் இருந்த தனிமையான  டேபிளில் தலை சாய்த்து அழுது கொண்டிருந்த ஷிவானியை கண்டு  பரிதாபத்திற்கு…… பதில் தோழிகள் இருவரும் தங்கள் விழியை  உருட்டி அவளை முறைத்தபடி அமர்ந்து இருந்தனர்……. சும்மா இப்படி அழுது நடிக்காத…!!  ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் . அதப் போய் இப்படி பயங்கரமா சொதப்பி வச்சிட்டியே சிவு ,  நிலா அவளை திட்டத்தை தொடங்க…….அது நேரம் வரை அவர்களின் சரமாரியான திட்டுகளை தாங்கி அமர்ந்திருந்த ஷிவானிக்கு ஒரு வழியை ரோஷம் வந்து விட…….

சும்மா என்னையே குறை சொல்லாதே நிலா  நான் வருவது யுகேந்தர் னு நினைச்சேன் நாம் பார்க்கும் போது….. அங்கு வேறு எந்த பாய்ஸ்  இல்லையே….. இவன் யாரு எங்கிருந்து திடீர்னு குதித்தான்னு எனக்கு சுத்தமா தெரியல…..

ஏய்..ஷிவானி நிஜமாகவே அந்தப் பையன் யாருன்னு உனக்குத் தெரியாதா நிஷா சீரியஸாக கேட்க…….தெரியலையே நிசு  இதுநாள் வரைக்கும் அவனை நான் நம்ம கேம்பஸ் குள்ள பார்த்ததே இல்லை….. ஆனா ஆளு ரொம்ப வித்தியாசமா ரவுடி மாதிரியே இருந்தான்……

அந்த   மூஞ்சியில ரொம்ப வித்தியாசமா ஒரு சிரிப்பு வேற  அனேகமா நம்ம காலேஜ் குள்ள எதையாவது திருட வந்து இருப்பானோ….?? ஷிவானி தன் அரும்பெரும் கண்டுபிடிப்பை வெளியிட……. அவளைப் பார்த்து வெளிப்படையாகவே தலையில் அடித்துக்கொண்ட  நிஷா…….

போடி இவளே அவன் ஒன்னும்  திருடன் கிடையாது அந்த அவன்  நம்ம காலேஜ் வந்து ரெண்டு வாரம் ஆகுது…… அதுக்குள்ளேயே அவன் டிரஸ் ,  ஹேர் ஸ்டைல் , காஸ்ட்லி பைக் எல்லாமே அங்க எவ்ளோ பாப்புலர் ன்னு உனக்கு தெரியுமா….? இப்போது நிலா கேட்க….. அப்படி யாரு தாண்டி அவன் என்ற ஷிவானிக்கு தலை வேதனையாக இருந்தது…..  

அவள் உருகி உருகி எழுதிய காதல் கடிதத்தை போயும் போயும்  முகமறியாத ஒருவனிடம் கொடுத்துவிட்ட துயரத்தில் அவள் இருக்க…… ஆனால் தன் தோழிகளோ தனக்கு ஆறுதல் சொல்வதை விட்டுவிட்டு எவனையோ பற்றி  பெருமை பேசினால்……

ஏய் பக்கிகளா இப்போ அவன் யாருன்னு   சொல்லப் போறீங்களா இல்லையா கேட்டதோடு டேபிளில் இருந்த கத்தியையும்  ஷிவானி கையில் எடுக்க…….அடியே அவசரப்பட்டு குத்தி டாதடி உனக்கு இருக்கா ரெண்டே ரெண்டு பாவப்பட்ட பிரண்ட்ஸ்  நாங்க தான்……..

அவன் தான் நம்ம காலேஜ் கரஸ்பாண்டன்ட் ஓட ஒரே  பையன் வயசுல நம்மள விட அதிகம் ஆனா இப்போ சேர்ந்திருக்க கோர்ஸ் நமக்கு ஜூனியர்……. ஏகப்பட்ட சொத்துக்கு ஒரே வாரிசு ,  ஸ்கூல் படிக்கும்போதே பெரிய ரவுடியாம் எப்போ பார்த்தாலும் அடிதடிதானாம் நாலஞ்சு பேர் சேர்த்துக்கிட்டு ஒரு கேம் ஃபாம்  பண்ணி எப்பவும் கேங்ஸ்டர் மாதிரி சுத்துவானாம்…..

அவன்  இங்க இருந்தா சரி வர மாட்டான்னு .   வேற ஏதோ ஸ்டேட்ல இருக்க காலேஜ்ல சேர்த்துவிட்டு இருக்காங்க……. அங்கு யாரையோ  கொலை பண்ணிட்டானாம் மூணு வருஷம் ஜெயில்ல இருந்ததா கூடா ஒரு ருமர் இருக்கு…….ஆனால் அவனைப் பற்றி சரியான டிடைல்ஸ்  இங்கே யாருக்குமே தெரியல…….

இப்பவும் அவன் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து தான் நம்ம காலேஜ்ல படிக்க வந்திருக்கான்……ஏதோ க்ரைம் கதை சொல்லுவது போல் சரியான ஏற்ற இறக்கங்களோடு நிஷாவும் நிலாவும் மாறி மாறி அந்த புதியவன் பற்றி   சொல்ல……

ஷிவானி  ஆடாமல் அசையாமல் ஏதோ  பேய் கதை கேட்கும் எஃபெக்டில் திருதிருவென்று முழித்தபடி…… கேட்டு விட்டு….  கடைசியாக அழுது விடுவது போல் முகம் வைத்து இப்போ நான் என்னடி பண்றது பாவமாக கேட்க…….

விடு  சிவு பார்த்துக்கலாம் அவனுக்கு கேர்ள்ஸ் மேல அவ்வளவா  இன்ட்ரஸ்ட் இல்லைன்னு கேள்விபட்டேன்……. இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் அவன் உன்னை கொலை பண்ண   மாட்டான்… நிலா சமாதானம் செய்த லட்சணத்தில் மீண்டும் அழுதபடி ஷிவானி டேபிளில் சாய்ந்து விட்டாள்……. அதைப் பார்த்த நிஷா  சும்மா இருடி… அவளே பயந்து போய் இருக்கா நீ வேற அவளை இன்னும் பயமுறுத்துற……. நிலாவை கண்டித்து விட்டு ஷிவானி புறம் திரும்பியவள்……

ஓகே சிவு  அந்த லெட்டர் எங்க…?  இப்போதைக்கு அதை தர வேண்டாம் ஒரு ஒன்னு ரெண்டு வாரம் போகட்டும் அப்புறமா யுகேந்தர் கிட்ட நீ ப்ரொபோஸ் பண்ணிக்……அய்யய்யோ நிஷா பேசி முடிக்கும் முன்னும் அலறிய  ஷிவானி… லெட்டர் அந்த லெட்டர் எங்க போச்சுன்னு தெரியல….!!!! என்று பதற…..என்னது….????!!!!!!! அவளோடு சேர்ந்து தோழிகள் இருவரும் அலறினர்……

 ஓமைகாட் சிவு அந்த லெட்டர்ல உன்னோட பேர் எழுதி இருக்கு ‌…… யார் கையிலாவது அது கெடைச்சா..!!  அவ்வளவுதான் காலேஜ் ஃபுல்லா உனக்கு ரொம்ப அசிங்கமா போயிடும்……. மேனேஜ்மென்ட் தெரிஞ்ச உன் சீட்டு காலி இருவரும் பயமுறுத்த…….

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஷிவானி யின்  கைகள் பயத்தில் ஜில்லிட்டது…… தோழியின் முகத்தில் உண்மையான திகிலை  கண்டவர்கள்….. ஒன்னும் ஆகாதுடி பயப்படாதே வா நாம மூணு பேரும் போய் தேடிப் பார்த்து அந்த லெட்டரை எடுத்து விடலாம்…….

இன்னைக்கு காலேஜ் லீவு தானே யாரும் அத பார்த்திருக்க  முடியாது…… சொன்னதோடு நில்லாமல் வேகமாக மீண்டும் கல்லூரியை நோக்கி சென்ற மூவரின்  மனதிலும்..‌… அந்தக் கடிதம் எவர் கையிலும் கிடைத்து இருக்கக்கூடாது என்கிற வேண்டுதலே  மிகுந்திருந்தது…….

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….????!!!

விதியின்   திருவிளையாடல்கள்    பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்……

                                 சின்ரெல்லா வருவாள்……….

Advertisement