Advertisement

ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.9

அந்த ஹைவேயில் ஸ்பீடா மீட்டரின் முள்ளே வெடித்து விடும் அளவுக்கு வேகத்தோடு பறந்து கொண்டிருந்தது அந்த மோட்டார் பைக்…..

ஆரியனின்  வேகத்திற்கும் அவன் திமிருக்கும் பொருத்தமான….. ஆனால் ஒரு   சாதாரண எளிய மனிதன் அதன் விலையை கேட்டால் உடனே வாயைப் பிளக்கும் அளவுக்கு   17 லட்சத்தை சாதாரணமாக விழுங்கிய அந்த ஹார்லி டேவிட்சன் பைக்…….

அதிகமாக இந்திய தெருக்களில் புழங்காத அந்த வண்டியை தன் 17 வயதில் விரும்பி வாங்கி இப்போது….. அதில் கிட்டத்தட்ட நான்கைந்து மாடல்களை   மாற்றியும் விட்டான் அவன்……

பார்வைக்கு அழகாய்…… உயிர்ப்பித்த உடன் சீறிக் கொண்டு  பறக்கும்போது அரக்கனாய் மாறும்….. அந்த மோட்டார் பைக்கின்  மீது ஆரியனுக்கு ஒரு தீராத காதல் என்று கூட சொல்லலாம்…….. அதற்குக் காரணமும் இருந்தது……

அவனைக் காணும் கன்னியர்கள் எவரையும் நொடியில்…… தன் பாதம் பணிய வைக்கும் ஆண்களில் பேரழகனாய்  உருவத்தில் மன்மதனாய்…… தோன்றினாலும்…… குணத்தாலும் செயலாலும் அந்த இரும்பு குதிரையை போல் அவனும் கூட கட்டுப்படுத்த முடியாத ஆற்றலையும் வேகத்தையும் கொண்டவன் தானே…..

எப்போதும் போல் அன்றும் கூட காற்றைக் கிழித்துக் கொண்டு  ஆகாயத்தில் பறக்கும் உணர்வை……. அளிக்கும் தன் உற்ற நண்பனை…… ரசித்து செலுத்திக் கொண்டிருந்த ஆரியனின் முதுகுப்புறம்  சுவற்றுப் பல்லியை போல் அவனோடு பிரிக்கவே முடியாத அளவுக்கு ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ஷிவானிக்கு…….

அந்தப் பயணமும் ஆரியனின் அருகாமையும்…… நொடிக்கு நொடி பயத்தையும்  திகிலையும் இன்னும் ஏதோ ஒரு பிடிக்கா உணர்வையும் உண்டு செய்ய….. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் அதற்குமேல் தன்னால் அத்தனை வேகத்தை  தாங்க முடியாது என்று தோன்றிவிட…… அவனிடம் வேகத்தை குறைக்கச் சொல்லி சத்தமாக கெஞ்ச ஆரம்பித்தாள்……

 ஷிவானியின் மன்றாடலுக்கு   சற்றும் செவி சாய்க்காமல் மேலும் மேலும் அவன்  வேகம் கூட்டி அவளை வேண்டுமென்றே அலற செய்ய…….. அவனைக் கண்ட நாள் முதலாய் ஒரு பெண் என்றும் பாராமல் தன் வார்த்தையாலும் செயலாலும்…… நாளுக்கு நாள் அவன் தன்னை வதைக்கும் விதம் அதிலும் கடைசியாக தானே வலியச் சென்று அவனிடம் மாட்டிக் கொண்ட அவளின் மோசமான தலை  விதி…..

இன்று காலையில் தன் பிரியமான தோழிகளின் இவள் செயல் மீதான……. நம்பமுடியாத பார்வையும்  இதில் அவளுக்கு உதவ முன் வந்த யுகேந்திரன் இடம் வேறு ஆரியன் நடந்து கொண்ட விதமும் மூளைக்குள் தோன்றி மறைய…….இவன் ஏன் தன்னிடம் மட்டும் இத்தனை பயங்கர காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறான் என்ற கேள்வி ஷிவானின்னுள் எழுந்தது …….

மனதின் ஆற்றாமை முழுவதுமாய் அந்த நேரம் அவளை  பலவீனப்படுத்த தன் மீது கழிவிரக்கம் கொண்டவள்…….. சுயம் மறந்து  இப்போ மட்டும் நீங்க இந்த பைக்கை நிறுத்த வில்லை என்றால் நான் வண்டியில் இருந்து……. குதிக்கப் போகிறேன் அவன் காதில் நன்றாக விழ வேண்டும் என்று சத்தமாக வே  சொன்னாள்……

ஷிவானியின் குரலை தான் கேட்டதற்கு  அடையாளமாய்…..அவன் கைகளின் உந்துதலில் அந்த மோட்டார் பைக் மேலும் வேகம் கூட்ட  அதற்கு மேல் யோசிக்க ஒன்றும் இல்லை என்று உணர்ந்த ஷிவானி…… தான் சொன்னதை செய்துவிடும்  முனைப்போடு அவன் முதுகுபுறம் இருந்து அசைந்து எழுந்து நிற்க முயல…….

அவள் அசைவை உணர்ந்தோ என்னவோ அதே  நொடியில் அத்தனை வேகத்தோடு….. தான்  செலுத்திய வாகனத்தின் பிரேக்கை அவன்  அழுத்த……

காற்றின் வேகத்தில்  பயணப்பட்டுக் கொண்டிருந்த இருவரில்….. ஆரியன்  எதற்குமே சற்றும் பாதிக்காமல் தன் நிலையில் இருந்து அசையாது….. வேதத்தின் அழுத்தத்தை தாங்கி வலிமை மிகுந்த கற்பாறையாய்   கம்பீரமாய் நிற்க…..

ஆனால் ஷிவானியோ  வண்டி நின்றதால் உண்டான உந்து  விசையில் முன்பக்கம் சாய்ந்து….. முன்பை விட அதிகமாய்  ஆரியனின் முதுகில் அழுத்தமாய் மோதி பின்பு விழாமல் இருக்க……. சட்டென்று  தன் இரண்டு கைகளையும் முன்பக்கமாய் கொண்டு அவன் சட்டையை இறுகப் பற்றியபடி பதட்டத்தை தணிக்க விழிகளை இறுக மூடி கொண்டாள்……

அவளின் கை அணைப்பில் இலகுவதற்கு  பதில் முன்பைவிட கடினப்பட்டது அவனின் தேகம்….. சற்றே குனிந்து தன்னை பற்றுக் கோலாய்  சுற்றி இருக்கும் அந்த வெண் தாமரைத்தண்டு போன்ற கைகளை….. வெறுப்பாய் பார்த்து பின்பு வினாடிகள்  தன் விழி மூடி உள்ளுக்குள் மூளும் ஆத்திரத்தோடு சேர்ந்த மற்ற உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தியவன்……..

இன்னும் தன் மீதே இருக்கும் அவளின் கைகளை தன் கைக் கொண்டு  ஒரு அழுத்தத்தோடு பிரித்தெடுக்க அதில் உண்டான சிறு வலியில் தன்னுணர்வு பெற்றவள்……பதறியடித்துக் கொண்டு ஆரியனின் இடையில் இருந்து  கைகளை விலக்கி இறங்கி தரையில் நின்றாள்……

எதிரில் நின்றவனின் ரௌத்திரமான பார்வை தன்னை கூறு போடுவதை உணர்ந்தும் விழி உயர்த்தாமல்……..தரை பார்த்து ஷிவானி நிற்க….. தன் விரல் சொடுக்கி அவள் கவனத்தை தன் புறம் திருப்பியவன்…ஷிவானி வேகமாக எதுவோ  சொல்ல வர தன் ஒற்றை அலட்சியமான கை அசைவில் அவளை நிறுத்தும்படி சைகை செய்தவன்…..

நீ செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கிற  ஒரு கைதி…… கோபப்படவோ தப்பிச்சி போகவோ உனக்கு எந்த உரிமையும் கிடையாது என்று நிறுத்தியவன் .  என்னிடமிருந்து தப்பிக்க உன்னால் முடியவும் முடியாது சவாலாக சொல்லி விட்டு……

தேவையில்லாம என்னோடு   மோதிப் பார்க்க முயற்சி செய்யாத பெண்ணே என் கை அசைவிற்கு தகுந்தது போல்   ஆட கற்றுக்கொள்……. என் அனுமதியின்றி நீ செத்தே போனால் கூட உனக்கு நிம்மதி மட்டும் கிடைக்கவே கிடைக்காது……. மனதில்  நினைத்ததை எதற்காகவும் நடத்தி முடிக்காமல் விடுபவன் நான் அல்ல……. எச்சரிப்பாக ஆரம்பித்தவன் கடுமையாய் முடிக்க…….

சிறு பறவையின்  பட்டுச் சிறகாய்  படபடக்கும் பெண்ணவளின் பயந்த கருவிழிகளை  மறைத்து மறைத்து வெளிக்காட்டும் அவளின் அழகிய இமை மயிர்கள்…..அசையும் விதத்தை சற்று உன்னிப்பாய் கவனித்தவன்…… இந்த பயத்தை எப்போதும் மனதில் வைத்து நட அலட்சியமாக ஆணவமாக ஓர் ஆணையைப் பிறப்பித்து விட்டு……

என் அனுமதியின்றி சாக முயன்றதற்காக இன்றைய உன்  தண்டனை இப்படியே நடந்து வீட்டுக்கு போய் சேரு……. அந்த ஹைவேயில் பேருந்தோ  ஆட்டோக்களோ கிடைப்பது எத்தனைக் கடினம் என்று தெரிந்தும் அந்த உச்சி வெயிலில் அவளை அங்கேயே விட்டு   தன் பிரத்தியேகக் சிரிப்பு ஒன்றை ஒற்றைக் கண் சிமிட்டலோடு அவளுக்கு பரிசளித்துவிட்டு…….

ஆரியன் தன் இயந்திர காதலியோடு   காற்றில் கலந்து மறைந்து போக அவனை பார்த்த பொழுதிலிருந்துக்ஷ…… தான் தவறாமல் செய்யும் ஒரே வேலையான அழுகையில் விசும்பியபடி நடக்க ஆரம்பித்த ஷிவானியின் மனதில்  முட்டிக் கொண்டு வந்து நின்றது….. அவன் ஆதிக்கத்தில் கைப்பாவையாய் தன் மாட்டிக்கொண்டு தவிக்கும் காரணமான அன்றொரு நாள் இரவு…….

***************************************************

ஆறு அடிக்கும்  அதிகமான அந்த பங்களாவின் சுற்றுச்சுவரை எப்படியோ முயன்று மூவரும் தங்களுக்குள் உதவி செய்துகொண்டு ஏறி மறுபுறம் இறங்கிய போது…… கிட்டத்தட்ட மலையையே புரட்டிப் போட்டது போல் தோழிகள் மூவருக்குமே  மூச்சு வாங்கியது……

ஏய் ஷிவு எனக்கு ஒரு சந்தேகம் டி இது மாதிரி பெரிய பணக்கார…… வீட்டுக் எல்லாம் செக்யூரிட்டி அதிகமா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டேனே.  சினிமால கூட அப்படித்தான் காட்டுறாங்க….. ஆனா இங்க யாரும் இருக்கா மாதிரியே தெரியலையே…? எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு டி…. நிலா உண்மையிலேயே தான் சிறிது புத்திசாலிதான் என்பதை நிரூபிக்கும் விதமாக பேச……

ஆனால் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி   நுழைந்து விட்ட…….பயத்திலும் படபடப்பிலும் இருந்த ஷிவானி  நிலாவின் வார்த்தைகளை காதில் வாங்கினாலும் கருத்தில் ஏற்ற  முடியாமல் தவித்தபடி…… எனக்கு என்னடி தெரியும்…. இவங்க சரியான கஞ்சம் பார்ட்டியா    இருப்பாங்க செக்யூரிட்டி காவல் வைத்தால் நிறைய செலவாகும் என்று கூட விட்டிருக்கலாம்….. ஏதோ வாய்க்கு வந்ததை அவளிடம் சொல்லிவிட்டு…….

ஓகே ஃபிரண்ட்ஸ் இப்போ மூணு பேரும் ஒன்னா போனா யாராவது நம்மள பார்க்க வாய்ப்பிற்கு அதனால தனித்தனியா போகலாம்…… அந்த ஆளை  யாராவது பார்த்தா எனக்கு ஒரு மெசேஜ் பண்ணுங்க போதும்…… இல்ல யாராவது பெண்களை பாத்தா கூட…… என் அத்தைக்கு அந்த மனுஷனால நடக்கிற தொல்லையை  பற்றி சொல்லி……அவரை கண்டித்து வைக்க சொல்லலாம் ஷிவானி தன் பாடு மொக்கையான அந்த ஐடியாவை பார்வை படுத்த…..

முழு மொத்தமாய் இது எத்தனை பெரிய முட்டாள் தனமான……‌ செயல் என்று தெரிந்திருந்தும் கூட  ஷிவானியின் மன திருப்திக்காகவும் ஒருவேளை……. இதனால் ஏதேனும் நல்லது உண்மையில் நடந்து விடாதா…??  என்கிற சிறு ஆசைக்காகவும் தோழியின் சொல்படி பிரிந்து சென்று அந்த பங்களாவில் நுழைந்த மூவருக்குமே அங்கே  மிகுந்த ஆச்சரியம் காத்திருந்தது…….

பார்வைக்கு கம்பீரமாய் மிகுந்த எழிலோடு பராமரிக்கப்பட்ட அந்த மாளிகையின் வெளித்தோற்றத்திற்கு…… முற்றிலும் வேறாய் கட்டிடத்தின் உள்புறம் தூசி படிந்த ஓவியத்தைப் போல்….. அங்கங்கு  சிறிது பராமரிக்க பட்டதற்கான அடையாளங்கள் இருந்தாலும்….. ஷிவானி எதிர்பார்த்து வந்தது போல் ஒரு நேர்த்தியோ சுத்தமோ இல்லை……

ஏனோ அந்த வீட்டின் சற்று அசட்டையான தோற்றம் அவளின்  மனதிற்கு சிறிது வலியை கொடுக்க…… அந்த அனைத்தையும் தானே சீர்படுத்தி வெளித் தோற்றத்தைப் போல் உள்ளேயும் ஜொலி ஜொலிக்க…….வைக்க வேண்டும் என்ற ஆவல்  மனதிற்குள் ஏற்பட……..

இது என்ன புது வகையான   உணர்ச்சிகள் என்று புரியாமல்….. சிறிது தடுமாறியவள் உடனே சமாளித்து  தன் தலையை உலுக்கிக் கொண்டு வந்த வேலையை பார்க்க தொடங்கினாள்…….

கிட்டத்தட்ட ஒரு மணி நேரங்கள் சுற்றியும் அங்கு மனிதர்கள்.  என்ற ஒருவரைக் கூட காண முடியாமல் போக……. தப்பித்தவறி ஏதாவது பேய் பங்களா உள்ளே வந்து மாட்டிக்கிட்டோமா  என்ன ஷிவானிக்கு தோன்ற ஆரம்பித்தது ‌…….

அந்த எண்ணம் மனதில் எழுந்த உடன்  அதுவரை இருந்த தைரியம் கற்பூரமாய் காற்றில் கரைந்து போக…… சுற்றும் முற்றும் ஒருவித கவனத்தோடு பார்த்தபடி நடந்தவள் தன் முதுகுப்புறம் யாரோ…… நிற்பது போல் தோன்ற……

ஒரே நொடி  உள்ளிழுத்த மூச்சு அப்படியே ஸ்தம்பிக்க…… கை கால்களில் நடுக்கத்தோடு திரும்பிப் பார்த்த அவளின் கண் முன்னால் ஒரு அழகிய சிலையை தவிர அங்கு  வேறு எதுவும் இல்லை…….

இல்லையே யாரோட மூச்சுக்காற்றோ  மேல படுவது போல் இருந்ததே…… வலது  புறம் திரும்பி நின்று ஷிவானி யோசிக்கும் போதே……இடது புறமாய்  அவளின் மென்மையான பூப்போன்ற செவி மடலில் யாரோ தன் இதழ் குவித்து குளிர்ச்சியாய் காற்றினை   ஊத…….

 காதோடு உடல் மொத்தமும் சிலிர்க்க செய்ய….. ஐயோ அம்மா  பே….ய்…!!! என்ற அலறலோடு அப்படியே…… தரையில் அமர்ந்து இருக்கைகள் கொண்டு காதைப் பொத்தி முகத்தை கால்களுக்கு இடையில் மறைத்து ஒரு பந்தை  போல் உடல் குறுக்கி ஷிவானி அமர்ந்துவிட ‌‌…….

சில நிமிட இடைவெளியில் ஏய்  ஷிவானி என்ற அழைப்போடு தோழிகள் இருவரும் அவள் அருகில் வந்து இருந்தனர்…….. என்னடி ஆச்சு எதுக்கு இப்படி கத்தினாய் நிஷா கேட்க  யாரோ யாரோ என் பக்கத்துல நிக்கற மாதிரி இருந்திச்சு நிஷா…… அவள் பேச்சை நம்பாத முக பாவனையோடு தலையசைத்தவள்…….

உனக்கு இதுவே வேலையா போச்சு…….எப்ப பாரு யாரைப் பார்த்தாலும் பயந்து கொண்டே இருக்கிறது…… இதுக்கு தான் இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்றது…..

இந்த வீட்டின் அனைத்து இடத்திலும்  தேடிப் பார்த்தும்…… யாருமே இருக்க மாதிரி தெரியலையே.  நாம் இந்த ஒரு வாரமாய் கண்காணித்த வரையிலும் அன்னைக்கு அந்த அவர் உள்ளே வந்ததற்குப் பிறகு……

முதல் நாள் இருந்த வாட்ச்மேன் தோட்டக்காரர்னு கூட……இப்போது இங்கே இருப்பதாய்  தெரியவில்லை இதுக்கு மேல நாம இங்க இருக்கறது…… எனக்கு சரியா படலை ஷிவு வா உடனே இங்கிருந்து போயிடலாம்……..

சொன்னதோடு இல்லாமல் அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தோழிகள் நடக்க ஆரம்பிக்க…….. ஒரு பயத்தோடு  இருந்தாலும் ஏனோ உள்ளுக்குள் மூண்ட ஒரு ஆர்வத்தோடு பின்புறம் திரும்பிப் பார்த்தவளின் விழிகளில் அங்கிருந்த…… பெரிய தூண் மறைவில் இருவிழிகள் ஒரு தீவிரத்தோடு   தன்னையே வெறித்து நோக்குவதாய் பட…….

திக் என்று  அதிர்ந்த மனதோடு எதைச் சொன்னாலும்    எப்படியும் தன்னை தோழிகள் நம்பப் போவது இல்லை என்று தெரிந்ததால்……. கண்களை இறுக மூடிக்கொண்டு அவர்களின் உதவியோடு அந்த மாளிகையில் இருந்து…… எப்படி எப்படியோ அரும்பாடுபட்டு மறுபடியும் அந்த மதில் சுவரை தாண்டி குதித்து வந்தவர்கள்…..

ஒரு நிம்மதியான பெருமூச்சோடு தங்கள் வீடுகளுக்கு ஜாக்கிரதையாய் சென்று  சேர்ந்துவிட்டதாய் தோழிகளின் குறுஞ்செய்தி செல்போனின் பளிச்சிட…….. அத்தைக்கு தெரியாமல் எப்படி வெளியே சென்றாளோ  அதே பின்புற வழியாய்….. தன் படுக்கை அறைக்குள் வந்த ஷிவானிக்கு மன நிம்மதி மட்டும் உண்டாக மறுத்தது……..

போன வேலை ஒரு சதவீதம் கூட தாம் நினைத்த விதமாய்  முடியாததோடு….. அங்கு நடந்த அனைத்து திகில் சம்பவங்களும் ஒன்றோடு ஒன்றாய்……. ஞாபகத்திற்கு வந்தாலும் எதையும் சிந்திக்க கூட பயந்து…… கண்களோடு மூளையையும் கட்டுப்படுத்தி தூங்க முயன்று சிறிது நேரத்தில் அதில் வெற்றியும் கண்டாள்  ஷிவானி……

கிட்டத்தட்ட நேரம் இரவு  நடு நிசியைத் தொட்டிருக்க….. தன் மெத்தையில் புரண்டு படுத்தவளின் கைகள் தன்  அருகிலிருந்த அவளுக்கு பிரியமான புசு புசு பஞ்சடைத்த கரடி பொம்மையை தன்னோடு சேர்த்து அணைக்க முற்பட்டது…… அது அவள் கைகளுக்கு கிடைக்கவில்லை ஆனால் அதற்கு பதில்……

 இரும்பின் உறுதியிலும் அந்த மொத்த படுக்கையையும்…… ஆக்கிரமித்துக் கொண்டது போல் ஆறடி உயரத்தில் இதுவோ  கைகளில் தட்டுப்பட……. முதலில் அதனை உணராதவள் அதை தன்னோடு சேர்த்து இறுக அணைத்து ஒன்றி படுத்து மீண்டும் உறங்க தொடங்கிய  ஓரிரு நிமிடங்கள் கழித்து…….. அந்த உருவத்தின் இதயத் துடிப்பை தன் செவிவழி உணர்ந்தவள் சுவாசத்தில் ஒரு ஆணின் பிரத்தியேக வாசனை……

அன்றைய அதிர்ச்சிக்கு  எல்லாம் உச்சபட்ச அதிர்ச்சியாய்….. எவனோ ஒரு ஆண்மகன் தன் அருகில் படுத்து இருப்பதை…… உறுதி செய்த ஷிவானி சடுதியில் தெளிந்து   தற்காப்பு முயற்சியாய்……. தன் உச்ச குரலெடுத்து அலற முயன்றபோது அவள் முயற்சியில் வெற்றி அடைய விடாமல்……..

தானும்  வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து…… அவள் பூவுடல் முழுதும்  ஒரே அசைவில் பரவி படர்ந்தபடி தன் கைகள் கொண்டு……. ஷிவானியின் உதட்டோடு சேர்த்து மொத்தம் முகத்தையும்  மூச்சுக் கூட விட முடியாதவாறு அழுத்திப் பிடித்தான் அவன்…….

என்னதான் அந்த அவனின் கைப் பிடியில் மாட்டிக் கொண்டாலும்…….உடலை நெளித்து கைகால்களை படபடவென்று கட்டிலில் அடித்து தன் எதிர்ப்பை மூர்க்கமாய்  காட்டிக் அவனிடமிருந்து தப்பிக்க முயன்று முடியாமல் அவள் தவித்து தடுமாற…….

அந்த நிமிடம் அவனின் மறுக்கையில்  செயலால்…… உயிர்பெற்ற விளக்கின் உதவியோடு  பார்க்கத் துடித்த பெண்ணவளின். கண்களில் பரிபூரணமாய் விழுந்து நிறைத்தான்  அவன்…….

அவன் ஆரியன் இனி வரும் நாட்களில்    சாட்டையாய் தான் நின்று பம்பரமாய் அவளைச் சுழற்றி அடிக்க காத்திருப்பவன்……….

                                சின்ரெல்லா வருவாள்………

Advertisement