Advertisement

UD:20(1)

நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க… இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக  தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்…

 

கார்த்திகா,”ஏன்டா… உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்… நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க…”என்க,

 

“அதான் நீங்க இருக்கீங்களே அம்மா… அப்புறம் எங்களுக்கு என்ன கவலை… “சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனை கண்டு முறைத்த கார்த்திகா,

 

“இத்தன நாள் நான் இருந்தேன் சரி இனி என்ன பண்ணுவ?” அனைத்தும் சரியாக இருக்கா என்று ஆராய்ந்துக் கொண்டே அவனிடம் கேட்க,

 

அன்னையின் கேள்வியில் நந்தன் மஹாவை தீப் பார்வை பார்க்க, அத்தையின் கூற்றில் சட்டென நந்தனை திரும்பி பார்த்தவள் அவன் முறைப்பதை கண்டு, ஒன்றும் அறியாதது போல் ஹாலின் சீலிங்கை (ceiling) நோட்டம் விடுவது போல் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்…

 

‘தப்பே பண்ணல பட் என் நிலைமை இப்படி ஆயிடுச்சே…. ஆன்னா வூன்னா முறைக்க ஆரம்பிச்சுறான் கொல்லி கண்ணா…’மனதில் தன் ஆசை மணாளனை  திட்டியப்படி விட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள்.

 

அவளையே முறைத்துக் கொண்டு இருந்தவன், ‘உனக்கு இனி தான் டி இருக்கு கச்சேரி… ‘மனதில் கருவியபடி வெளியே வெற்று பார்வையை அவள் மீது செலுத்தினான்.

 

“என்னடா பதிலே இல்ல…”கார்த்திகா கேட்டு கொண்டே நந்தனை பார்க்க மகனது பார்வை மருமகளிடம் இருப்பதும். மருமகளின் பார்வை விட்டத்தில் இருப்பதும் கண்டு அவர்களுக்குள் ஏதோ நடந்து இருப்பதாக எண்ணி நமட்டு சிரிப்பை உதிர்த்தார்.

 

அன்னையின் கேள்வியை கேட்டு தன் பார்வையை அவரிடம் திருப்பியவன், தாய் தன்னை கண்டு கொண்டார் என்று தெரிந்ததும் அசடு வழிய, தலையை குனிந்துக் கொண்டான்.

 

பின்,”அதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கீங்களே… அப்புறம் என்ன மா… உங்க மருமக பார்த்துப்பா எல்லாத்தையும்…” என்று நக்கலாக கூறியது சரியாக மஹாவிற்கு புரிந்தது…

 

‘நான் என்ன இவனுக்கு வேலைக்காரியா…? எல்லாத்தையும் பார்த்துக்க… போடா காண்டாமிருகம்…’அவன் கூறியதில் பெருத்த கோபம் வர மனதில் அவளது GMக்கு அர்ச்சனை செய்ய   தொடங்கினாள்….

 

“அது சரி தான்… ஆனா நீயும் பாப்பாக்கு ஹெல்ப் பண்ணனும்… அவ மட்டும் எப்படி தனியா எல்லாத்தையும் பார்த்துப்பா…” ஒரு நல்ல மாமியாராக பேச, அவரை அன்பொழுக பார்த்த மஹாவிற்கு அவர் மற்றுமொரு தாயாகவே தெரிந்தார்.

 

“ம்க்கும்… எனக்கு வேற வேலை இல்லை…” தலை குனிந்து மெல்லிய குரலில் முணுமுணுக்க,

 

“என்டா சொன்ன…?”கடுமையாக கேட்ட தன் அன்னைக்கு,

 

“இல்ல மா… ஹெல்ப் பண்ணாம எங்க போயிற போறேன்னு சொன்னேன்… ” மழுப்பழாக பதில் கூறி விட்டு மஹாவை பார்த்தவன்,

 

அவள் அவனை கண்டு மிதப்பாக  ஒரு பார்வையை செலுத்தி, தலையை சிலுப்பிக் கொண்டு தன் அத்தையுடன் இணைந்து அவருக்கு உதவி புரிந்துக் கொண்டு இருக்க…

 

இருக்கையை விட்டு எழுந்தவன் அவளை கடந்து செல்லும் முன் அவள் அருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி,”பார்த்து டி… ரொம்ப சிலுப்பாத…. இதுவரை கொசுக்குட்டின்னு மட்டும் தான் சொல்லிட்டு இருந்தேன் அப்புறம் கோணகழுத்துக் காரின்னு சொல்ல வச்சுடாத…”என்றுவிட்டு விறுவிறுவென அவளை விட்டு நீங்கி சென்றான்.

 

அவன் கூறியதின் பொருள் புரிய சில நொடிகள் எடுத்துக் கொண்டவள். புரிந்ததும் அவனை திட்ட வாய் திறக்கும் முன்,

 

“எல்லாம் தயார்னா கிளம்பலாமா…?”என்றபடி பத்மாநந்தன் வர,

 

வெளி வர துடித்த வார்த்தைகளை கடினப் பட்டு அதை விழுங்கிக் கொண்டவள், வெளியே யாரும் அறியா வண்ணம் நந்தனை முறைத்துக் கொண்டு இருந்தாள்…

 

அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் அந்த ஆறு மாடி குடியிருப்பில் மூன்றாம் தளத்தில் இருந்த வீட்டின் முன் நின்றனர்… கதவினை திறக்க சொல்லி மஹாவின் கையில் வீட்டின் சாவியை கார்த்திகா தர, அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், திரும்பி நந்தனின் முகம் பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

சில நொடிகளே  என்றாலும் அவள் விழிகளால் அவனிடம் அனுமதி வாங்க, அவனும் இமை மூடி திறந்து தன் சம்மதத்தை அளிக்க அவளும் தன் கையில் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்தாள்….

 

தங்களுக்குள் எத்தனை பிணக்குகள் இருப்பினும் ஒருவருக்கொருவர் தங்களின் காதலை அவர்கள் அறியாமலே சிறு சிறு செயல்களில் மற்றவருக்கு கட்டிக்கொண்டு இருந்தனர்….  

 

பின் இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடக்க தொடங்கின அவ்வீட்டில்.

 

ஆண்கள் அனைவரும் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, பெண்கள் அனைவரும் சமையலறையில் பாலை காய்ச்சி கொண்டு இருந்தனர்…

 

பால் பொங்கியதும், அதை புஜை அறையில் வைத்து குடும்பத்தினர் அனைவரும் வணங்கிய பின்  அப்பாலை பருகினர்…

 

பின் இரவு வரை அவ்வீட்டிலே அனைவரும் உணவு உண்டு, அரட்டை அடித்து பொழுது போக… மணி ஒன்பது ஆனதை உணர்ந்து, பத்தா அனைவரிடமும் கிளம்பலாமா என்று கேட்க, நந்தன் சட்டென அமைதியாகி போனான்.

 

அதை கவனித்த பத்தா, அவன் அருகில் சென்று, “உனக்கு இது பிடிக்கவில்லைன்னு தெரியும்… ஆனா உங்க இரண்டு பேருக்காகவும் தான் நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்…” என்றவரை ஒருவகை இயலாமையுடன் நந்தன் பார்க்க,

 

அவனது தோளில் கை போட்டவர், அவனை பால்கனிக்கு அழைத்து சென்று, “நான் இந்த முடிவு எடுக்க காரணம், நீங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பீங்கன்னு தான்… இரண்டு பேரு மட்டும்னா உங்களுக்கு பெர்சுனல் ஸ்பேஸ் கிடைக்கும்… புரிஞ்சுக்க வாய்ப்புகள் அதிகம்…. ” அவர் பேசி முடிக்கும் முன் இடைபுகுந்தவன்,

 

“நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க இப்படி பண்ணனும்னு என்ன அவசியம்…? எல்லோரும் ஒன்னா இருந்தா கூட புரிஞ்சுக்கலாம் அப்பா… வாட் ஸ் தி நீட் பார் திஸ்…?” என்க,

 

“கண்ணா… உங்களை என்ன லைஃப் லாங் இப்படியே இருக்கவா சொன்னோம்… ஜஸ்ட் பார் பியூ மன்ஸ்…. ” என்றவருக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக கையை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வெறித்தப் பார்வையுடன் வெளியே பார்த்துக் கொண்டு இருந்தவனை கண்டு இளமுறுவல் பூத்தவர்….

 

“இப்ப எதுவும் தெரியாது… பட் ஒரு நாள் புரிஞ்சுப்ப கண்ணா…”என்றவர் அவன் தோளில் தட்டி விட்டு, ஹாலுக்கு சென்று,

 

அனைவரையும் கிளம்ப சொல்ல, மஹாவின் அத்தைமார்கள் அனைவரும் அவளுக்கும் அவனுக்கும் ஆயிரம் புத்திமதி சொல்லிக் கொண்டு இருந்தனர். இதற்கு அனைத்திற்கும் காரணம் இவள் தான் என்று நினைத்து அவளை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டு இருந்தவன், கார்த்திகா அவன் புறம் திரும்பவும் சட்டென தன் கோப முகத்தை மாற்றிக் கொண்டான்.

 

கார்த்திகா,”கண்ணா பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ… ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் பண்ணிக்கோங்க… ” என்று இருவருக்கும் அறிவுரை வழங்க, இருவரும் மந்திரித்து விட பட்ட ஆட்டை போல் தலையை ஆட்டி வைக்கவும். அனைவரும் சண்டை கோழிகளிடம் கூறிவிட்டு விடைபெற்றனர்…

 

நந்தன், இந்த பிரிவுக்கு காரணம் மஹா என்று எண்ணி இருக்க… மஹா, விதி விட்ட வழி என்று எண்ணி சிவனே என்று இருந்தாள்.

 

அவர்கள் சென்றதும் ஏதோ தனிமை சூழ்ந்தது போல் இருக்க, கண்மூடி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவன் வெறுமையாக உணர்ந்தான்.

 

மஹா அவ்வீட்டை நோட்டமிட்டாள், சற்றே விசாலமான ஹால், அதன் வலப்பக்கத்தில் சமையலறை, அதனை ஒட்டி டைனிங் டேபிள் அதன் அருகில் பால்கனி, ஹாலின் இடப்பக்கத்தில் இரண்டு படுக்கை அறைகள் நடுவில் குட்டியாக ஒரு பூஜை அறை என பார்க்க அழகாக இருந்தது மஹாவிற்கு…

 

இதற்கு முன் இரண்டு முறை வந்து இருக்கிறாள் தான் ஆனால் இன்று போல் இதற்கு முன் வீட்டை உன்னிப்பாக கவனித்தது இல்லை… அதனால் இன்று அதையனைத்தையும் ரசித்தாள்.

 

“வீடு அழகா இருக்குல…” வீட்டை பார்த்துக் கொண்டே அவள் வாயில் இருந்து வார்த்தை வந்து விட,

 

நந்தனுக்கு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது… அவள் கூறவும் கண்மூடி அமர்ந்து இருந்தவன் சட்டென நிமிர்ந்து அவளை எரித்து விடுவது போல் பார்த்து வைத்தான்.

 

கைகளை ஆட்டி கொண்டே வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டு வந்தவளின் விழி வட்டத்தில் தன்னை ஆசையாக பார்த்துக் கொண்டு இருந்தவன் விழ, ஆடி கொண்டு இருந்த அவள் கை ஆந்திரத்தில் நின்றபடி, விக்கித்து போனாள் மஹா…

 

‘ஆஹா… மஹா இப்படி மாட்டிக்கிட்டியே…. இப்ப இந்த காண்டாமிருகம் சாமி ஆட போகுது இனி அவன் கால்ல மிதி பட்டு சாக போற…’மனதில் தன் நிலைமையை எண்ணிக் கொண்டு இருந்தவள் வெளியே தன் வீராப்பை விட்டுவிடாமல் மெதுவாக அவனை தாண்டி செல்ல முற்பட்டாள்.

 

“அழகா தான் டி இருக்கும்… நீ நினைச்ச மாதிரி நடத்திட்ட அப்ப அழகா தானே இருக்கும்…”கோபமும் நக்கலும் ஒருங்கே வந்தது அவன் வார்த்தையில்…

 

‘ஆரம்பிச்சுட்டான்யா… ஆரம்பிச்சுட்டான்…’ மனதில் அவனை கிண்டல் அடிக்க, வெளியே வடிவேல் பாணியில் பெரு மூச்சொன்றை வெளியிட்டவள்… மெதுவாக அவன் புறம் திரும்பி,

 

“இங்க பாரு Mr.GM… நீ…” அவள் எடுத்து கூற வரும் முன்,

 

“எனக்கு எதுவும் தெரியாது… நான் இப்படி பண்ணலை… மாமா கிட்ட நான் எதுவும் பேசலைன்னு சொல்ல போற… அதுதானே… சும்மா நடிக்காத டி….”என்று பல்லை கடித்து தன் கோபத்தை அடக்கியபடி கூறியவனை உறுத்து பார்த்தவள்,

 

“என்ன டி பார்வை… பண்ணுறதையும் பண்ணிட்டு இதுல பார்வை வேற….” கோபத்தில் மேலும் அவளை சாட,

 

அவனிடம் பேசுவது வீண் என்று உணர்ந்தவள்,”நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை…. “என்றவள் தன் தோளை ஆட்டி விட்டு நகர போக,

 

அவள் பதிலிலும், தோளை ஆட்டிய தோரனையிலும் கோபம் தலைக்கேற, வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவன் அவள் கையை பிடித்து இழுக்க, இச்செயலை சற்றும் எதிர்பார்க்காததால் அவன் இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதியவள், சட்டென சுதாரித்து விலக எண்ணி பின்நோக்கி செல்ல போக தடுமாறி போனாள்….. அவள் விழாமல் இருக்க அவளை பற்ற வந்தவனை தட்டி விட பார்த்தவள், முடியாமல் அவனையே லேசாக அணைத்தவாறு கால்களை ஊன்றி அரை வட்டம் நடிக்க… அதில் இருவரும் தடுமாறி அருகில் இருந்த சோஃபாவில் விழுந்தனர் பொத்தென்று.

 

இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்து இருக்க…. சோஃபாவில் மஹாவின் மீது ஒரு பக்கமாக விழுந்து இருந்தவன் சுதாரித்து எழும் முன், மஹா அவனை அவசரமாக தள்ளி விட சோஃபாவில் இருந்து கீழே விழுந்திருந்தான்….

 

நந்தன் கீழே விழவும் அவள் சோஃபாவில் இருந்து துள்ளி எழுந்து ,அவனை விட்டு இரண்டு அடி தள்ளி நின்று அவனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்…

 

கீழே விழுந்தவன்,”ஆஆஆ….”என்று அலர, தாம் விழுவோம் என்று நினைக்காததாள் இந்த திடிர் தாக்குதலில் அவள்  மீது இருந்த கோபம்  இப்பொழுது பதவி உயர்வு பெற்று கொதி நிலையை அடைந்தது.

 

அதில் அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவனை, “என்னடா முறைக்குற… தடிமாடு மாதிரி இருந்துட்டு இப்படி மேல வந்து விழுற அறிவில்ல…?” அவன் தன்னை முழுவதுமாக உரசியதும் இல்லாமல் தன்மேலேயே விழுந்ததும் பெண்களுக்கே உரிய தற்காபிற்கான கோபம் வர அவனை வார்த்தையால் சாடினாள்.

 

“அடிங்கு… உன்னை…”அவள் பேசியதில் ஆத்திரமடைந்தவன், அவசரமாக எழுந்து அவளை துரத்தினான் அவளை அடிப்பதற்காக.

 

அவன் கையில் அகப்படாமல் சோஃபாவை சுற்றிக் கொண்டு ஓடியவளை, “ஏய்… ஒழுங்கு மரியாதையா நில்லுடி… கீழே விழ போனவளை புடிக்க நினைச்சா …நீ என்னையே கீழ தள்ளி விடுறியா…? “அவளை எவ்வாறாது பிடித்துவிடும் நோக்கோடு துரத்திக் கொண்டு இருந்தான்.

 

அவன் கூறியதை கேட்டு சட்டென நின்றவள் அவன் புறம் திரும்பி, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தாள்.

 

அவள் சட்டென நின்றதும் அவனும் நின்று அவளை கேள்வியாக பார்க்க, அவள் அடுத்த கேள்வியில் அவனது பி.பி ஏகத்துக்கும் ஏறியது…

 

“நீ லூசா…? இல்ல லூசு மாதிரி நடிக்குறியா…?”தாடையில் ஒரு விரலால் தட்டியபடி ஆராய்ச்சியாக அவனை பார்த்து வைத்தாள்…

 

அவனது எரிக்கும் பார்வையை பார்த்து, “அட டென்ஷன் ஆகாத காண்டாமிருகம்… நான் ஏன் கேட்குறேனா… முதல் தடவை நான் விழும்போது இல்ல இல்ல நான் விழுர மாதிரி தான் வந்தேன் ஆனா நீ பிடிக்குறேன்னு சொல்லி கீழ தள்ளி விட்டுட்ட… அப்புறம் இரண்டாவது டைமும் நான் பாட்டுக்கு காம்பொன்டில் ஏறி போய் இருப்பேன் ஆனா நீ சவுண்ட் போட்டு என்னை பயமுறுத்தி கீழ விழுகுற மாதிரி பண்ணுன… அப்புறம் இன்னைக்கு, நான் பாட்டுக்கு போய்ட்டு இருந்தேன் ஆனா நீ என்னை பிடிச்சு இழுத்தனால வந்த வினை… பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு பெரிய சூப்பர்மேன் ரேஞ்சுக்கு, காப்பாத்த வந்த மாதிரி பில்டப் வேற…”என்றவள் தொடர்ந்து,

 

“அன்னைக்கு என்னை இவ்வளவு  ஹைட்ல இருந்து கீழ போட்ட ஆனா இன்னைக்கு இத்துண்டு ஹைட்டுல இருந்து நீ கீழ விழுந்ததுக்கு ஓவரா அலட்டிக்குற…” முதலில் தன் இடுப்பு வரை அளவு காட்டியவள்,பின் அவன் விழுந்த உயரத்தை காட்ட குனிந்து தன் மூட்டியிடம் காட்டிவிட்டு,

 

“இதுக்கே அலற…அப்ப எனக்கு எப்படி வலிச்சி  இருக்கும்… உனக்கு இதுவும் தேவை இன்னுமும் தேவை தான் டா காண்டாமிருகம்….“நக்கலாக பாவனை காட்டி கூறனினாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை முறைக்க, “இதுக்கு மேல உன்ன விட்டு வச்சா அது நான் பண்ணுற பெரிய தப்பு டி…” என்றவன் அவளை பிடிக்க பாய்ந்தான்.

 

ஆனால் அப்பொழுதும் அவள் அவனுக்கு போக்கு காட்டி விட்டு ஓடியவள், வேகமாக சென்று ஒரு படுக்கை அறையுள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள்.

 

அவளை துரத்திக்கொண்டு வந்தவன் அவள் தன்னிடம் சிக்கமால் அறையினுள் நுழைந்ததும்,”ஏய்… கதவை தொறக்க போறியா இல்லையா… நீயா வெளிய வந்துட்டா பிரச்சினை இல்லை டி… நானா உன்னை புடிச்சா நீ செத்த… “பல்லை கடித்து பேசியவன் ஓங்கி அறைக்கதவை தட்டினான்.

 

“போடா… தானா வந்து உன் கிட்ட வந்து சிக்க நான் என்ன உன்ன மாதிரி லூசா…”அறையினுள் இருந்து மஹா கத்த,

 

அறைகதவையே சில நொடிகள் வெறித்து பார்த்தவன், அவளுக்கு பதிலேதும் அளிக்காமல்  அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்….

 

அவள் அவனது எதிர் வாக்கு வாதத்திற்காக காத்திருக்க, கதவின் பின் நிசப்தமே நிலவியது…

 

“என்ன சவுண்டை காணம் …. ஓடிட்டானா… திறந்து பார்க்கலாமா… “என்று யோசித்தவள் கதவின் லாக் மீது கை வைத்தவள்,

 

“வேண்டாம் அவன் பிராடு… என்னை வெளிய வர வைக்க இப்படி பண்ணுறானா இருக்கும்… சிக்கிறாத மஹா…” என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள், படுக்கையில் விழுந்தாள் தன் நித்திரைக்காக…

 

அவ்விடத்தை விட்டு அகன்றவன் பால்கனிக்கு சென்று நின்று, கம்பியின் மீது இருகைகளையும் மடக்கி ஊன்றி, இமைக்காமல் தன் யோசனையில் வெறித்த பார்வையுடன் நின்று இருந்தான்…

 

இங்கு இவளோ படுக்கையில் விழுந்து, வெகு நேரம் ஆகியும் உறக்கம் வராமல் தவிக்க, ஏன் என்ற காரணம் புரியாமல் எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தவள் அறையை சுற்றி பார்த்து,”அந்த ரூமை நாம எடுத்து இருந்திருக்கலாம்…. இங்க பால்கனியே இல்ல… அந்த ரூம்ல பால்கனி குட்டியா இருந்தாலும் நல்லா சிக்குனு அழகா இருந்தது… இப்படி மிஸ் பண்ணிட்டியே மஹா…” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வருத்தபடத்தான் முடிந்தது அவளால்….

Advertisement