Advertisement

 
சாலை வழியாக சொன்றிருந்தாள் யாராவது கண்ணில் பட்டவர் மூலம் உதவியை நாடி இருக்கலாம் என்ற எண்ணம் அப்பொழுது குழலிக்கு தோன்றவே இல்லை… அப்பொழுதைய பதற்றத்தில் முருகவேலை காப்பாற்ற வேண்டும் என்ற  எண்ணம் மட்டுமே அவளுள்…
 
சற்று நேரம் மாதுளை தோட்டத்தை சுற்றி வந்தவன் மனநிலை சீர் படவே வீட்டிற்கு செல்ல வேண்டி வண்டியை எடுக்க வர, அப்பொழுது தான் அவனது அலைப்பேசி வண்டியின் மீதிருப்பதை கண்டான்….
 
சே… இங்கேயே விட்டுட்டு போயிட்டேனா… ம்ம்ம்… கூடவே வச்சு இருந்தாலும் தொல்லை தான்… ஏதோ இப்ப கொஞ்ச நேரம் நிம்மதியாக இருந்தோமே… நல்லதா போச்சு…’ என எண்ணியபடி அதை உயிர்ப்பிக்கவும் அதிர்ந்துவிட்டான்…
 
வந்திருந்த அழைப்புகளின் எண்ணிக்கை அத்தனை…. அதை பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு திடுமென அழைப்பு வரவும் சந்தேகமாக ஒருநொடி பார்த்தவன் தான் அதன்பின் யோசிக்காது அதை உயிர்ப்பித்து காதிற்கு குடுக்க,
 
தான் கேட்ட விஷயத்தில் கண்கள் சிவக்க, பல்லை கடித்து, கையை முறுக்கியவன் அழைப்பை துண்டித்து விட்டு வண்டியில் ஏறி புயல் வேகத்தில் சீறி பாய்ந்தான் கொலைவெறியில்…
 
இங்கு வேகமாக ஓடியவள் அடுத்து நின்றது அவர்களது தோப்பு வீட்டின் முன்பு தான்… இத்தனை வேகத்தில் ஓடியவளுக்கு கால்கள் ஏதோ வலுவிழந்து போனதை போல் ஓர் உணர்வுஆனால் அதை கருத்தில் நிறுத்தாமல் முருகவேலை தேட தொடங்கினாள் அவசரமாக…
 
அவரோ தோப்பை சுற்றி மெதுவாக நடந்துக்கொண்டிருக்க, குழலியோ வீட்டை முழுவதும் தேடி பார்த்துவிட்டு அவரை காணவில்லை என்றதும் உள்ளுக்குள் அத்தனை பயம் பிடித்துக்கொண்டது…
 
வீட்டிற்கு அழைத்து விஷயத்தை கூறலாம் என்று பார்த்தால், கவிக்கு அழைக்கும் போது ஃபோன் கை தவறி கீழே விழுந்து விட, அதை நோண்டிக்கொண்டிருக்கும் தருணம் இதுவள்ள என கீழே விழுந்த தன் ஃபோனை கண்டுக்கொள்ளாது ஓடத்தை தொடர்ந்தவளுக்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை…
 
ச்சே…கடவுளே… காப்பாத்து…’ என முகத்தில் வடியும் வேர்வையை தொடைத்தவாரே தேடியவளுக்கு விடையாக முருகவேல் கிடைக்காதது மேலும் மேலும் பயத்தை ஏற்படுத்தியது அவளுக்கு…
 
அந்த தடிமாடுங்க கடத்திகிட்டு போயிருப்பாகளோ..?’ என எண்ணம் தோன்றினாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் தேடுதலை நிறுத்தவில்லை…  
 
 ஒரு பின் தோட்டத்தில் தேடியவளுக்கு சற்று தொலைவில் தலையை குனிந்து நடந்துக்கொண்டிருந்த முருகவேல் கண்ணில் படவும் தான் சற்று சீரான மூச்சே வந்தது குழலி…
 
தன் நெற்றியில் இருந்து வழிந்த வேர்வையை தொடைத்தபடி அவரை நோக்கி இரெண்டடி எடுத்து வைக்கையில், பக்கவாட்டில் தான் மில்லில் கண்ட தடியன் ஒருவன் கண்ணில் பட்டவுடனே, குழலி
 
மாமா… ” என கத்திக்கொண்டே அவரை நோக்கி ஓட, அந்த தடியனோ அவளது குரலில் உசாராகி அவள் முருகவேலை நெருங்கும் முன் தான் முருகவேலை போட்டு விட வேண்டும் என எண்ணி, கையில் இருந்த கத்தியை இறுக பற்றியபடி முருகவேலை நோக்கி ஓடினான் வேகமாக…
 
தன் நினைவில் நடந்துக்கொண்டிருந்த முருகவேலுக்கு மாமா’ என்ற அழைப்பில் இதயத்தில் ஏதோ ஒன்று தாக்கியது போல் பதறி குரல் வந்த திசையில் பார்க்க திகைத்து போனார்…
 
வெறிக்கொண்டவள் போல் ஓடிவந்துக்கொண்டிருந்த குழலியை கண்டு முருகவேலுக்கு ஒன்றும் புரியவில்லை… குழலியை கவனித்துக்கொண்டே அவளை நோக்கி நடந்தவர் பக்கவாட்டில் தன்னை கத்தியால் குத்த ஒருவன் வருவதை கவனிக்கவில்லை…
 
இத்தனை நேரம் ஓடிவந்ததும் இப்பொழுது பதற்றத்தில் ஓடுவதாலும் குழலிக்கு தொண்டைக்குலிக்குள் ஏதோ அடைத்த உணர்வால் வாய் திறந்து கத்த முடியாமல் போக, தன் வேகத்தை கூட்டினாள் அந்த தடியனையும் முருகவேலையும் பார்த்தபடி…
 
குழலியை நோக்கி தடக்க தொடங்கிய முருகவேல் அவள் அருகில் செல்ல செல்ல, அவளது பார்வை தன்னையும் தனக்கு பக்கவாட்டிலும் மாறி மாறி பார்ப்பதை கண்டு புருவம் சுருங்க பார்த்தவர், அதே சந்தேகத்தோடு திரும்பி பக்கவாட்டில் பார்க்க மேலும் அதிர்ந்து நின்று விட்டார்…
 
தடியவன் ஒருவனும் அவனுக்கு பின் மேலும் இரெண்டு பேர் சற்று இடைவெளியில் ஓடிவருவதை கண்டவர் என்ன ஏது என உணரும் அந்த நொடி நேரத்தில் அவரை தடுத்தார் போல் வந்து நின்றாள் குழலி…
 
அடுத்த நொடி அந்த தடியனின் கத்தி அவளது வயிற்றில் இறங்கியது இரக்கமின்றி… அவ்வளவு தான்…. நடந்த அனைத்தும் சில நொடிகளில் நிகழ்ந்தேறி இருந்தது வேகமாக…
 
குத்தியவனுக்கும் அதிர்ச்சியே, அவனது நோக்கம் முருகவேல் அல்லவா... பெண் ஒருவள் தானே ஏமாற்றி விட்டு ஓடி விடலாம்… மாட்டினாலும் அய்யா ஜாமீனில் எடுத்து விடுவார் என்று ஒரு கணக்கு போட, நடந்தது என்னவோ வேறாகி போனது…
 
முருகவேலை நோக்கி ஓடி வந்த குழலியின் எண்ணத்தில் அவரை அவனது தாக்குதலில் அகப்படாமல், தள்ளி விட வேண்டும் என்று தான் எண்ணியபடி ஓடி வந்தாள்… ஆனால் அருகில் வரவும் சட்டென தடுமாறிய குழலி முருகவேலுக்கும் அந்த தடியவனுக்கும் நடுவில் புகுந்துவிட்டாள் பதற்றத்தில்…
 
தன் வயற்றில் இறங்கிய கத்தியை பற்றியபடி விழிகள் விரிய, திகைத்து குத்து பட்ட இடத்தை பார்த்தவாரே நிமிர்ந்து குத்தியவனை கண்டவளுக்கு நன்றாக நாலு வார்த்தை  கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும் போல் இருந்தது… ஆனால் ஏதோ மூச்சுவிடவே கஷ்டப்படுவது போல் திணறல் அவளிடம்…
 
வாய் திறந்து ஏதோ பேச முயல்கையில், குத்தியவன் இரண்டடி தள்ளி சுருண்டு விழுந்திருந்தான் தீடிரென…குழலியோ மூச்சுவிட திணறியபடி பக்கவாட்டில் பார்க்க,
 
பின்னங்காலை தூக்கி வேட்டியை மடித்து கட்டியபடி, இடது கையால் தன் மீசையை நீவி, கையிலிருந்த காப்பை ஏற்றி விட்டுக்கொண்டிருந்த கவியழகனின் கண்கள் ரத்தமென சிவந்திருந்தது…
 
தடியன், குழலியின் வயிற்றில் குத்தும் போது அங்கு வந்துவிட்டிருந்தான் கவியழகன்… நடந்த நிகழ்வை கண்டதும் கோபம் கண்மண் தெரியாமல் வர, வேகமாக வந்தவன் அந்த தடியனின் மீது ஒரு எத்துவிட, எதிர்பாரா விதமாக குறுக்கே வந்தவள் மீது குத்திவிட்ட அதிர்ச்சியில் நின்றிருந்தவன் சத்தியமாக இந்த தாக்குதலை எதிர்ப்பார்க்காததால் தடுமாறி சுருண்டு இரெண்டடி தள்ளி விழுந்தான்…
 
முருகவேலுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியாகி இருந்தது, குழலியின் பின் நின்றிருந்தவர் அவளது தோள்பட்டையை பிடித்தபடி அவளையே பார்த்திருந்தார்… இந்நிகழ்வு அனைத்தும் சில நொடிகளில் பட்டென நிகழ்ந்திருந்ததை அவரால் உடனே புரிந்துக்கொள்ள முடியவில்லை…
 
கணவனை கண்டதும் தைரியம் வரபெற்ற குழலி, கடினப்பட்டு பெருமூச்செடுத்து “அ.. அத்… அத்த்…” என திக்கும்போதே வயிற்றில் இறங்கி இருந்த கத்தியின் வலியை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கால் வலுவிழந்து சரிந்தது ஒருபக்கமாக…
 
அவள் சரிய தொடங்கவும் சட்டென திரும்பிய கவி அவள் நிலை கண்டு உள்ளம் வலித்தாலும் அவளது இந்நிலைக்கு காரணமாகியவன் மீது அத்தனை வெறி எழுந்தது அவனுக்கு…
 
சட்டென பாய்ந்து அவளை பிடிக்கும் முன்,  குழலியின் தோள்பட்டையை பற்றி இருந்த முருகவேலுக்கு அவளை சரியான முறையில் பிடிக்க முடியாமல் திணறவும் அவளுடோ தரையில் அமர போனார்…
 
ஆனால் அதற்குள் அவளை இடையோடு பற்றிய கவி, “குழலி…..”என முனுங்கியபடி தரையில் சரிய, குழலியின் தலை முருகவேலின் மடிக்கு வந்தது…
 
கவியோ அவள் தரையில் சரிந்ததும் கையை விலக்கியவன் முற்றிலும் கலங்கி போனான் அவன் கையில் படிந்த அவளது இரத்தத்தை கண்டு…
 
அதில் மேலும் ஆத்திரம் வர, வேகமாக எழுந்தவன் அங்கு அடுத்து என்ன செய்வது என்று சற்று திணறி நின்றிருந்த இருவரையும் எங்கு அடிக்குறோம், எவ்வாறு அடிக்குறோம் என்ற எந்த எண்ணமும இன்றி சரமாரியாக பாய்ந்து பாய்ந்து அடிக்க, அதற்கிடையில் குத்தியவன் தப்பித்து ஓட பார்க்க, அவனையும் போட்டு புரட்டி எடுத்துக்கொண்டிருந்தான் கவி…
 
இங்கு முருகவேலுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் அருவி போல் வந்துக்கொண்டிருக்க, வாய் ஓயாமல் “என்னைய மன்னிச்சுரு தாயி… என்னைய மன்னிச்சுரு…”என அரற்றிக் கொண்டிருந்தார்…
 
குழலியோ சில நிமிடங்கள் தன் வலியை முகம் சுழிக்க, உதடு கடித்து பொருத்துக்கொண்டவள் இதற்கு மேல் முடியாது என உணர்ந்து, முயன்று தன் ஒட்டு மொத்த சக்தியையும் கூட்டி பேச, திகைத்து போனவர் இமைக்ககூட மறந்து கண்களில் வழிந்த கண்ணீரை கூட தொடைக்காமல் தன் மடியில் வேதனையில் படுத்திருந்தவளை பார்த்துக்கொண்டிருந்தார்…
 
குழலி, “எ.. என்ன… மாமனாரேஏ…”என்றழைத்தவள் வலியில் மீண்டும் உதட்டை கடித்துக்கொண்டு, “இப்படியே அழுத்தேன்னுட்டு, என்னைய கொன்னுபுட்டு உம்மவனுக்கு வேற பொண்ண கட்டி வைக்க பாக்குதீயோ…  ?”என மெல்லிய குரலில் கூறியவளை பார்த்த முருகவேலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
 
அவரை கண்டவளுக்கு சலிப்பு வர, தலையை திருப்பி மன்னவனை பார்க்க அவனோ தன்சரிபாதியை தாக்கியதில் வெறிக்கொண்டவன் போல் அம்மூவரையும் அடி பின்னிக்கொண்டிருந்தான்…
 
அதை பார்த்து கோபம் கொண்டவள் அந்த வலியிலும் முருகவேலின் புறம் திரும்பி,  என்ன புள்ளைய பெத்து வச்சுருக்கீக.. சே….?” என கேட்க, முருகவேல் அந்த அதிர்ச்சியிலும் விழியுயர்த்தி மகனை பார்க்க,
 
அவனோ சாமி வந்து ஆடிக்கொண்டிருந்த அய்யனார் போல் அவருக்கு காட்சியளிக்க, அந்நிலையிலும் முகத்தில் ஒரு பெருமிதம் வந்த போனது அவருக்கு… அதை கண்டு குழலிக்கு கோபம் பெரிதாக உருவெடுக்கவும்,
 
ச்சே… உங்க குடும்பத்துல போய் நாங் வாக்கபட்டேன் பாரு என்னைய சொல்லணும்… ” என முனுமுனுத்தப்படி விழிகளை வலியில் மூடிக்கொள்ளவும், முருகவேல் சட்டென நிலை புரிந்து குனிந்து பார்த்தவர்,
 
அம்மாடி தாயி….” என புரியாமல் அவளது கன்னம் தட்ட, பட்டென விழி திறந்தவள்,
 
என்ன நெனைச்சுட்டு இருக்கீக ரெண்டும் பேரும்… குத்து பட்டு கெடக்கேனே ஹோஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவணும்னு தோணுதா… உமக்கு ஒப்பாரி வைக்க இதுத்தேன் நேரமா… ? உமக்கு மவனுக்கு வீரத்த காட்ட வேற நேரங்காலம் இல்ல…?” என அந்த வலியிலும் வாயடிக்க, முருகவேல் வாயடைத்து போனாலும் உடனே சுதாரித்து, மகனை அழைக்கும் முன் மூவரையும் புரட்டி விட்டு மனைவியின் அருகில் வந்திருந்தான் கவியழகன் பரிதவிப்போடு…
 
குழலி….வலிக்குதா…?” என கண்கள் கலங்க கேட்டவனை பார்த்து முறைத்தவள்,
 
இல்ல நல்லா நாலு ஐஸ் திண்ணாப்புல குளுகுளுனுட்டு இருக்கு…என பல்லை கடித்து வெறுப்பாக பேச, கவிக்கு எதுவும் கருத்தில் பதியவில்லை…
 
அவளது வயிற்றில் இருந்த கத்தியின் மீதே பார்வையை பதித்திருந்தவன், சற்று நடுங்கும் கையை அதன் அருகில் கொண்டு செல்லும் நேரம் அங்கு வந்து சேர்ந்தனர் குமாரும் சில போலீஸும்…
 
குமார், “அய்யோ… அய்யா… இப்படி ஆயிபோச்சே…” என பதற, குழலி
 
அடபாவிகளா பயலுவளாஇப்படி பேசி பேசியே கொன்னுருவாங்கிய போல… ‘ என உள்ளுக்குள் புலம்பியவளுக்கு வலி ஒருபக்கம் அத்தனை வேதனையை கொடுத்தது அவளுக்கு…
 
அப்பொழுது போலீஸ், “நாங்க என்ன ஏதுன்னு பார்த்துக்குறோம்… நீங்க ஹோஸ்பிடல் கூட்டிட்டு போங்க…”என்க, தலையை ஆட்டி அதை ஆமோதித்தவன், மீண்டும் குழலியின் புறம் திரும்பி
 
அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு, சட்டென அவள் வயிற்றில் சொருகி இருந்த கத்தியை எடுத்து விட்டான் கவி… கண்கள் மூடியிருந்தவள் இதை எதிர்பார்க்காததால்,
 
ஆஆஆஆஆஆஆஆ……” என அலற, சட்டென அவளது புடவை முந்தானையால் காயம் பட்ட இடத்தில் இருந்து கொப்பளித்த இரத்தத்தை அடக்க பொத்தி வைத்தான்…
 
குமார்…. வண்டிய சீக்கிரம் எடு…” என உத்தரவிட, குமார் அடுத்த நொடி காரை நோக்கி ஓட, கவியின் கைகளில் இருந்தாள் பூங்குழலி…
 
குத்தும் போதை விட, அதை எடுக்கும் போது வலியை அதிகம் உணர்ந்த குழலிக்கு சுத்தமாக முடியவில்லை… அதிலும் இரத்த போக்கு வேற அவளை மயக்கத்தில் ஆழ்த்துவதை போல் ஒரு உணர்வு…
 
ஒருகையால் கணவனது கழுத்தை வளைத்து பிடித்திருந்தவள், மறுகையால் இரத்தம் வரும் இடத்தில் புடவையால் அழுத்தி பிடித்திருந்தாள்… வேகமூச்செடுத்து தன் வேதனையை அடக்க முயற்ச்சித்தவளுக்கு அது கணவன் மீது கோபமாக மாறியது…

Advertisement