Advertisement

 
 
மீண்டும் தன் அலைபேசியில் மகனிற்கு அழைக்க, அவனோ ஃபோனை வண்டியின் மீது வைத்துவிட்டு,  மாதுளை தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் மனம் அமைதியடைய…
 
முருகவேலுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை… எல்லாம் தன்னால்தான் என்னும் எண்ணம் அவருள் ஒருவித மன அழுத்ததை கொடுக்க, வீட்டில் இருந்த மற்றொரு காரில் ஏறி, டிரைவரிடம் தோப்பிற்கு வண்டியை விட சொன்னார் காயத்ரி கேட்கும்படி
 
இங்கு செல்கிறேன் என மனைவியின் முகம் பார்த்து கூற சங்கடமாக இருக்க, அவர் காதில் விழும்பிபடி கூறிவிட்டு தோப்பிற்கு சென்றார்… காயத்ரிக்கு அது செவியில் விழுந்தாலும் மனம் ஏதோ மகனை பற்றியே நினைக்க தூண்டியது…
 
சொல்ல தெரியதா பயம் அவருள்… தவறாக ஏதோ நடக்க போகிறது என்னும் இனம் காண முடியாத பதற்றம் தோன்றுவதை அவரால் உணர முடிந்தது… அடுத்து மகனை கண்ணால் காணும் வரை நிம்மதியிருக்காது என  வாசலில் மகனுக்காக காத்திருக்க தொடங்கினார் தவிப்போடு…
 
இங்கு மில்லுக்கு வந்த பூங்குழலியை வரேற்றது என்னமோ மூடிய பெரிய கேட்(gate) தான்… எப்பொழுதும் காவலுக்கு நிற்கும் நபரை காணாது காரில் இருக்கும் இருவரும் குழம்பினர் புதிராக…
 
அண்ணேன்… மில்லு என்னத்தக்கு இம்புட்டு வெரசா மூடியிருக்கு…?” என காரை விட்டு இறங்கியபடி கேட்க,
 
ரெண்டு நாளா தொடர்ந்து ஓடுச்சு சின்னம்மா… பெரிய லோடு ஒன்னு ஏத்துனோம்… ஆரும் வூட்டுக்கு போகல… அத்தேன் சின்னய்யா இன்னைக்கு லோடு ஏத்துனதும் அம்புட்டு பேருக்கும் ஓய்வு குடுத்துபுட்டாரு ரெண்டு நாளைக்கு… வெரசா அம்புட்டையும் முடிச்சுட்டு நானும் சின்னய்யாவுந்த்தேன் கடைசியா வந்தோம்… இங்குட்டு காவலுக்கு நின்ன பைய எங்குட்டு போனாவகன்னு தெரியல…. இருங்க மா நான் போய் பாக்குத்தேன்…” என நகர போகையில், அரிசி ஆலையில் ஏதோ தகராறு என்று அழைப்பு வரவும்,
 
நீரு கிளம்புங்க அண்ணே… அவீக இங்கனத்தேன் இருப்பாகநாங் பார்த்துகிடுத்தேன்… ” என்றவளை மறுத்து,
 
இல்ல சின்னமாநாங்த்தேன் கூட்டியாந்த்தேன் இப்ப கிளம்பையல எப்படி போவீக… ” என தயங்கி நிற்கவும், குழலி
 
அண்ணே… ரொம்ப வெசன படாதீக… நாங் எங் புருஷன் கூட வந்துபுடுவேன்… ” என நிமிர்ந்து கூறவும், லேசாக தலை குனிந்து சிரித்த குமார்,
 
செரிங்க சின்னம்மா… அப்ப நாங் அரிசி ஆலைக்கு கிளம்புத்தேன்…” என்று கிளம்பியவனுக்கு உள்ளம் ஏதோ சரியில்லை என்று எடுத்துரைத்தது…
 
திரும்பி மில்லை ஒருமுறை பார்த்துவிட்டு காரை உயிர்ப்பித்தவனுக்கு அரிசி ஆலையத்தில் தகராறு என்பது புதிய செய்தி ஏனெனில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் அவனது கண்பார்வையில் நிகழ்ந்ததில்லை…
 
அதனால் வேகமாக வண்டியை செலுத்தினாலும் மில்லின் காவலாளிக்கு அழைக்கவும் தவறவில்லை… ஆனால் அவன்தான் எடுத்தபாடில்லை…
 
குமார் கிளம்பவும், சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தபடி உள்ளே நடந்தவளுக்கு எந்த ஒருவித்தியாசமும் தெரியவில்லை அவளது பார்வைக்கு… ஏன் திறந்திருந்த கேட் கூட அவள் கருத்தில் பதியவில்லை… கவியை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே கருத்தில் கொண்டு வேடிக்கை பார்த்து நடந்தவள், அப்பொழுது கூட, கவியழகனின் வண்டி அங்கில்லை என்பதை கவனிக்கவில்லை…
 
உள்ளே சென்று ஆப்பிஸ்க்குள் நுழைந்தவளை அங்கிருந்த வெறுமையே வரவேற்றது… சந்தேகத்தில் புருவம் சுருங்கியவள், மில்லை சுற்றி வருகையில் அவளது நினைவடுக்கில் ஒருமுறை கவி தனக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றாலோ ஏதேனும் பிரச்சினை என்றாலோ எப்பொழுதும் இந்த மில்லிற்கு வந்துவிடுவது பழக்கம் என கூறியது தான் நினைவில் நின்றது…
 
அதை வைத்து தான் காயத்ரியிடம் உறுதியாக பேசிவிட்டு இங்கு மில்லுக்கு வந்தது ஆனால் அவன் இல்லாதது இப்பொழுது குழலிக்குமே மனதில் கிலிப்பிடித்துக் கொண்டது அவள் அறியாமல்…
 
யாருமில்லாத மில்லில் எங்காவது இருக்கிறானா என்று சுற்றிப்பார்த்துக் கொண்டே வந்தவள் கண்ணில் பட்ட உருவதை கண்டு திகைத்து சிலையென நின்றுவிட்டாள்…
 
ஒருநொடிதான் அடுத்த கணம் சட்டென அருகில் இருந்த சுவரின் பின் தன்னை ஒளித்துக்கொண்டாள் படபடவென துடிக்கும் இதயத்தை ஒருகையால் பிடித்து கொண்டு…
 
தடிமனான உருவத்தில் இருவர் சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு அழைப்பு வந்தது தங்கள் தலைவரிடம் இருந்தது… குழலிக்கோ அவர்களை கண்டதுமே  புரிந்துவிட்டது இவர்கள் அடிதடி செய்பவர்கள் என்று…
 
அவர்கள் பேசுவது அருகில் சுவரின் பின் பதற்றத்துடன் பல்லியை போல் ஒட்டியபடி நின்றிருந்த குழலிக்கு தெளிவாக கேட்க, என்ன செய்வது யார் இவர்கள் என்று புரியாமல் பயத்தில் நின்றிருக்கும் சமயம், அந்த தடியர்களில் ஒருவர்
 
சொல்லுங்க ஐயா…” என்க,
 
“……”
 
இல்லங்க ஐயா… இங்க யாரும் இல்ல மில்லு மூடியிருந்துச்சு… காவலுக்கு மட்டும் ஒருத்தன் நின்னுட்டு இருந்தான்... அவனையும் அடக்கிட்டோம்… இங்க அந்த கவி பையன் இல்லை…. வேற எங்கையாச்சும் போயிருப்பானா இருக்கும்…”
 
“…..”
 
இல்லைங்கைய்யா… அவன் வீட்டுல இருந்து கிளம்புறத பார்த்து சொன்னத வைச்சுதான் இங்க வந்தோம்… ஆனா ஆளு இங்க வரல… என்ன பண்ணுறது… வேற எங்கையாச்சும் தேடி பார்க்கட்டுமா அய்யா…?”
 
“……”
 
செரிங்கய்யா செரிங்கய்யா… ஆனா அவரை ஏன் போடணும்…?என தலையை சொரிந்தபடி சந்தேகம் கேட்க,
 
“……”
 
ஓஓஓ…. செரிங்கய்யா… வேலைய முடிச்சுட்டு கூப்பிடுறோம்…” என்று அழைப்பை துண்டித்தவன், அருகில் இருந்தவனிடம்,
 
டேய் அந்த முருகவேல தேட சொல்லு டா நம்ம ஆளுங்கள…என்றபடி நகர போனவனை கைபிடித்து நிற்க வைத்தவன்,
 
என்ன அண்ணே ஆச்சு… அந்த கவியழகன தானே நாம போடுறத இருந்துச்சு…? இப்ப அவனோட அப்பாவ தேட சொல்லுறீங்க…?” என சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்க, பக்கவாட்டில் ஒளிர்ந்திருந்த குழலிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது அவள் கேட்டு திகைத்து நின்றிருந்த வார்த்தையில்…
 
தன் கணவனை கொல்ல வந்திருக்கிறார்கள் என்னும் செய்தியே அவளை செயலிலக்க செய்ய, உடல் வேர்க்க மன தைரியம் இழந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நினைவே அற்று தன்னவன் நினைவில் மூழ்கி போயிருந்தாள்…
 
கவியழகன் தன் வாழ்வில் எத்தனை முக்கியமானவன் என்று அவளுக்கு முன்பே தெரியும் ஆனால் இப்பொழுது அதை விட நங்கென்று தலையில் அடித்து சொல்லிக்கொடுத்தது போல் இருந்தது இப்பொழுது நடக்கும் செயல்கள்…
 
அப்பொழுது அவள் காதில், “அது அய்யாக்கு முதல்ல வாக்கு குடுத்து ஏமாத்துனது அந்த முருகவேலாம்… அதுனால அவனை முதல்ல போட்டு தள்ளிட்டு மகன போட்டு தள்ளுறதாம்…என விஷயத்தை சுருக்கமாக கூற, அவனது கூட்டாளிக்கு புரிந்ததோடு குழலிக்கும் இருக்கும் நிலை புரிந்தது….
 
அவர்கள் பேசியபடி, வேறு யாருக்கோ அழைத்து முருகவேல் எங்கு இருக்கிறார் என தேட சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன், மில்லை விட்டு வெளியேறினார்கள்…
 
சுவரின் மீது  சாய்ந்து நின்றவள், சிலையென ஆகி போனாள்… இப்பொழுது என்ன செய்வது என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை… கணவனது உயிருக்கு இப்பொழுது பிரச்சினை இல்லை என்பதை நினைத்து மகிழ்வதா இல்லை மாமனார் உயிருக்கு ஆபத்தை எண்ணி பதறவா என்று புரியவில்லை…
 
மெல்ல நகர்ந்து வெளியேற போனவள் கண்ணில் விழுந்த காட்சியில் சுயுணர்விற்கு வந்தாள் குழலி… வேகமாக ஓடியவள், மதில் சுவரின் பக்கம் வளர்ந்திருந்த புதரின் உள்ளே உடம்பில் காயத்தோடு முணங்கிக்கொண்டிருந்தவரை கண்டு,
 
அண்ணே… அண்ணே… என்னாச்சுகண்ணு தொரந்து பாருக…என அவரை எழுப்ப முயல அவரோ அடியின் தாக்கத்தில் அரை மயக்கத்தில் முனங்கியபடியே இருந்தார்…
 
அய்யோ…என நெற்றியில் கை வைத்துக்கொண்டவளுக்கு அப்பொழுது தான் நிலையின் தீவிரம் புரிந்தது… திரும்பி அரை மயக்கத்தில் இருந்தவரை பார்த்தவள், உதட்டை கடித்து வேகமாக யோசிக்க தொடங்கினாள் குழலி…
 
அதன் விளைவாக, தன் கையில் இருந்த ஃபோனிலிருந்து வீட்டிற்கு அழைத்தாள் கடவுளை வேண்டியபடி, ஆனால் வெகு நேரம் கழித்தே அவளது அழைப்பை ஏற்றார் காயத்ரி….
 
ஹலோ…. ஆரு பேசுறது…?”
 
அத்தே… நாங் குழலி பேசுத்தேன்… மாமனார் எங்குட்டு இருக்காக அத்தே…?” என கேட்க முயன்றவள் குரலில் முடிந்த அளவிற்கு பதற்றத்தை மறைத்தாள்…
 
காயத்ரிக்கு அவளது முதல் வார்த்தையிலேயே ஏதோ ஒன்று  புரிந்துவிட்டது… அவள் இது வரை தன்னை அத்தை என்று அழைத்ததே ரெண்டு மூன்று முறையாக தான் இருந்திருக்கிறது அதுவும் குழலி உணர்ச்சி வசப்பட்டு இருக்கும் போது அவள் அறியாது வாய்மொழியாக வந்தது மட்டுமே…
 
இப்பொழுது, அவள் இவ்வாறு அழைக்கவும் அதுவும் வீட்டின் சூழ்நிலையும் குழலி மகனை காண சென்ற காரணமும் அவரை ஏதோ பிரச்சினை என்றுதான் எண்ண வைத்தது…
 
இவர் இங்கு படபடப்புடன் யோசித்துக்கொண்டிருக்க, மறுபக்கம் குழலி, “ஹலோ… ஹலோ…ஹலோ… அத்தே… கேக்குதீகளா…? ஹலோ….” என கத்தியவளின் குரலில் பதற்றம் கூடிக்கொண்டே போனது எத்தனை முயன்றும்…
 
ஆங்ஆ… அம்மாடி தாயி… அங்கன ஏதாச்சும் பிரச்சனையா… என்னாச்சு தாயி…?” என பரிதவிப்போட கேட்க, நெற்றியில் அரைந்துக்கொண்ட குழலிக்கு அப்படியொரு கோபம் வந்தது…
 
மீண்டும் திரும்பி அடிப்பட்டிருந்தவரை கண்டவள், ஒரு பெருமூச்சுடன் வேகமாக நடக்க தொடங்கினாள் பேசியபடி, “நாங் கேட்டதுக்கு பதில்ல சொல்லுதீகளா… மாமனார் எங்குட்டு இருக்காக…?” என அதிகாரமாக கேட்கவும், காயத்ரிக்கு என்னவென்றே புரியவில்லை ஆனால் ஏதோ மிகவும் தவறாக பட, அவரும்
 
அய்யோ எம் மவனுக்கு என்னவோ போலவே… என்ன ஆச்சுன்னு சொல்லு டி…?” என புலம்ப பொறுமை பறந்தது குழலிக்கு
 
ஏங் இப்படி பண்ணுதீக… மாமனார் எங்குட்டுனு சொல்லுதீகளா…? உங்க மவனுக்கு ஒன்னுமில்ல… உங்க புருஷர எம் புருஷன் கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கலாம்னுட்டு நெனைச்சுத்தேன் கேட்டேன்… இப்ப சொல்லுக… மாமனார் எங்குட்டு இருக்காக…?” என எப்படியோ சமாளித்தவளுக்கு காயத்ரியிடம் இவ்விஷயத்தை பற்றி கூறுவது சரியாக படவில்லை…
 
அம்புட்டுத்தேனா… நாங் கூட என்னவோ ஏதோனுட்டு பயந்துப்புடன்…” என்றபடி பெருமூச்சு விட்டு புடவை தளைப்பால் முகத்தை தொடைத்துக்கொண்டார்…
 
இங்கு வேக நடையோட ஓடியவளுக்குக்கு தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது… இன்னும் சிறிது நேரம் பேசி இருந்தாலும் மாமியார் என்றும் பாராமல் கத்தியிருப்பாள்… ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் காயத்ரியே வாயை திறந்தது அவரது நல்ல நேரமே…
 
அவீக தோப்புக்கு போயிருக்காவ…. ” என்றதும் தன் தலையில் அடித்துக்கொண்டவள் பதிலேதும் கூறாமல், அடுத்து முருகவேலுக்கு அழைக்க, அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று பதிலளித்தது…
 
வேக நடையில் கிட்டத்தட்ட ஓடியவள் நின்று அவசரமாக குமாருக்கு அழைத்து அடிப்பட்டு இருப்பவரின் நிலையை கூறிவிட்டு போலீஸ்க்கு அழைத்து முதலில் விஷயத்தை கூறும் படி ஆணையிட்டவள் அடுத்து கவியழகனுக்கு அழைத்தாள் அது அப்பொழுதும் அவன் வண்டியின் மீதே இருக்க, அப்படியொரு கோபம் வந்தது அவளுக்கு…
 
இனி இங்கு நிற்பது சரிவராது என்று புரிந்துக்கொண்டவள், வாய் தன் கணவனையும் அந்த அடியாட்களையும் வஞ்சனை இல்லாமல் வசைபாடியபடி இருக்க, வெகு நாட்கள் கழித்து தான் கட்டியிருந்த சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு, மீண்டும் முருகவேலுக்கு அழைத்து பார்க்க அது மீண்டும் அதே பதிலை குழலில் தரவும் இனி அவருக்கு முயற்சிப்பது வீண்  என புரிந்தது…
 
நின்ற இடத்தில் இருந்து குறுக்குவழியாக தங்கள் தோப்பை நோக்கி ஓட தொடங்கிய குழலியின் கைகள் மட்டும் கணவனுக்கு அழைப்பதை நிறுத்தவில்லை…

Advertisement