Advertisement

வசுந்தராவிற்கு, என்ன சொல்வது செய்வது என்று தெரியவில்லை… எதிரில் இருக்கும் அண்ணனை இமைக்காது பார்த்திருக்க, முருகவேலோ
 
இம்புட்டு வருஷம் பண்ண தப்புக்கு எங் ஒத்த மன்னிப்பு செரியாகாதுத்தேன்…ஆனா மன்னிப்ப தவிர வேற என்னத்த பண்ணி என்ற பாவத்த செரி செய்யனுட்டு எனக்கு தெரியல தாயி…” என்றபடி அவள் காலில் விழ போக, அனைவருமே பதறிவிட்டனர்…
 
வசு, பதறி விலகி நிற்க அவரால் எதுவும் பேச முடியவில்லை… சட்டென அனைத்தையும் மறந்து விடவும் முடியவில்லை…. பட்ட துன்பங்கள் அப்படி பட்டதள்ளவா…  செய்வதறியாது கண்கள் அலைப்பாய பதற்றத்துடன் கையை பிசைந்துக்க கொண்டிருக்க,  அவளை கண்ட அனைவருக்குமே அவளது நிலை அத்தனை வேதனையை அளித்தது…
 
முருகவேலும் அதை புரிந்துக்கொண்டு, “எங்தப்ப நாங் உணர்ந்தது எம்மருமவளாலத்தேன்… சொத்து வேண்ணாம் உங்க மவன மட்டும் குடுங்கன்னாஒடைச்சுட்டேன் தாயி… பொறவு தோப்புல நாங் எம்புட்டு கஷ்டத்த கொடுத்து இருக்கேன் ஆனா அம்புட்டையும் மறந்துபுட்டு என்னைய குத்த வரப்போ ‘மாமா..’ னுட்டு கத்த…” என்று சொல்லிக்கொண்டு வந்தவருக்கு அதற்கு மேல் முடியவில்லை வலியும் வேதனையும் பேச விடவில்லை…
 
அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கண்களை கலங்க வைத்தது என்னவோ உண்மை… பின் தன்னை சரிசெய்துக்கொண்டவர்,
 
இம்புட்டு வருஷங்கழிச்சுத்தேன் எனக்கு புத்தி வரணும்னுட்டு இருக்கு… ம்ம்ம்… அதும் எம் மருமவளால…” என்றவர் அவள் அடிப்பட்டு மடியில கிடைக்கையில் பேசிய பேச்சு நினைவிற்கு வர லேசாக புன்னகைத்துக் கொண்டவர், பின் முகம் இலகுவாக,
 
உனக்கா எப்ப தோணுதோ அப்ப என்னைய மன்னிச்சா போதும் தாயி… நாங் பண்ண தப்புக்கு உடனே என்னைய மன்னிச்சுபுடுனுட்டு சொல்ல மாட்டேன்.... ஆனா என்னைய மன்னிச்சுரு தாயி…” என மீண்டும் இருகரம் கூப்பி மன்னிப்பை வேண்டியவர், அமைதியாக கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்தபடி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார் தலை குனிந்து…
 
அனைத்தையும் கண்ட சைந்தவி அமைதியாக சென்று தந்தையின் அருகில் அமர்ந்து தோள் தொட, அவரோ ஆச்சரியமாக அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவரை பார்த்து மென்மையான புன்னகை ஒன்றை பதிலாக தந்தாள் தந்தையை பார்த்து…
சரியாக அதே நேரம் குழலியின் அறையில் இருந்து டாக்டர் வெளியே வர, அனைவரும் பரபரப்பாக, அவரோ கவியை பார்த்து
 
ஒன்னும் பிரச்சினை இல்ல… ஷீ ஈஸ் ஓகே… கத்தி ஆழமா பதியல… அண்ட் அதுல விஷம் தடவலை சோ பெருசா பிரச்சனை இல்லாம போச்சு இல்லாட்டி ரொம்ப கஷ்டமா போயிருக்கும்… இப்ப மயக்கத்துல இருக்காங்க, பிளட் நிறைய லாஸ் ஆயிருச்சு சோ பிளட் ஏறிட்டு இருக்கு மத்தபடி ஓகே…என்க, அப்பொழுது தான் அத்தனை பேருக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது…
 
கவி, “எப்ப டாக்டர் பார்க்கலாம்…?” என கேட்க,
 
இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிருவாங்க… அப்ப பார்த்துக்கலாம்… ” என்றவர் ஒரு தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்து விட, அத்தனை பேருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு…
 
அப்பொழுது கவிக்கு ஒரு அழைப்பு வரவும், ஜெயசீலன் குடும்பம் வரவும் சரியாக இருந்தது… அதில் கனியை பார்த்தவாரே அழைப்பை ஏற்றவன்,
 
சொல்லு டா விக்கி…” என்று மெல்லிய குரலில் கேட்டபடி அவ்விடத்தை விட்டு அகன்று மற்றவர்களை விட்டு தள்ளி நின்றான்…
 
சிஸ்டர் இப்ப எப்படி இருக்காங்க…?”
 
ம்ம்ம்... பைன்அடி பலமா இல்லாம போனதுனால பிரச்சினை இல்ல… இப்ப மயக்கத்துல இருக்கா… சீக்கிரம் ஓகே ஆயிருவா…” என்க…
 
ம்ம்ம்…
 
சரி நான் சொன்னது என்னாச்சு…?”
 
எவிரிதிங் ஈஸ் ஓகே… பத்ரிநாத்க்கு ஆக்சிடன்ட் பண்ணியாச்சுயாருக்கும் சந்தேகம் வராதுசீரியஸ் கண்டிஷன்னு சொன்னாங்க…என்றதும் தான் கவிக்கு மனம் சற்று ஆறியது…
 
வெளிபடையாக தாக்கினால் மீண்டும் ஏதாவது வம்பை வளர்ப்பான் நிம்மதி போயிவிடும் அதனால் தான் கவி இப்படி முடிவெடுத்ததற்கு காரணம்… தந்தை மீது கை வைக்க எண்ணி தன்னவள் மீது தாக்கியவனின் கையை உடைத்தவன் அதற்கு காரணமானவனை சீரியஸாகி படுக்க வைத்து விட்ட பின்னரே அவன் மனம் ஆறியது…
 
தேங்கஸ் மச்சான்….” என்றவனை விக்கி,
 
ம்ப்ச்ச்… லூசு தனமா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு… போ போய் சிஸ்டரை கவனி…”என்றவன், அழைப்பை துண்டித்துவிட்டு பால்கனி சுவரினை பிடித்து நின்றவன் வானில் தெரிந்த நிலாவை வெறித்தான் விக்கி…
 
தன் பின்னந்தலையை கோதியவனுக்கு தோன்றியது கனியின் முகம், தன்னை மொத்தமாக களவாடி அவளது முகத்தை எண்ணியவன், “என்னை களவாடிய பெண்ணிலா…”  என்று முனுமுனுத்துக்கொண்டான்…
 
இங்கு முழுதாக நான்கு மணிநேரம் கழித்து கண்ணை விழித்தாள் பூங்குழலி… அதற்காகவே காத்திருந்த மொத்த குடும்பமும் பரபரப்புடன் அவளை நோக்கி முன்னேர….
 
அவளோ கண் விழித்து அனைவரது கலக்க முகத்தையும் கண்டவள், தன் அன்னையை பார்த்த, அடுத்தநொடி “ஆத்தா… நாங் மோசம் போயிட்டேன் ஆத்தா… நீரு பயந்த மாதிரியே ஆச்சு… எங் வாழ்க்கையே போச்சு…” என ஒப்பாரி வைக்க, அனைவரும் ஸ்தப்பித்து போயினர்….
 
கவியழகன் மட்டும் நெற்றியை தேய்த்தபடி, இவள…. அடங்க மாட்டீங்கிறாளே…” என வாயிக்குள்ள முனுமுனுத்தான்…
 
வசுந்தரா,  என்னவோ ஏதோயென்று பதறி, “என்னத்த டி உளர….?” என கடிய,
 
ஆமா ஆத்தா… உம் மருமவன நம்பி நாந் கெட்டுப்போயிட்டேன்….” என கத்தி ஓப்பாரி வைக்க, அனைவரும் திடுக்கிட்டு பார்க்கவும், கவி தன் நெற்றியில் இப்பொழுது வெளிப்படையாகவே அரைந்துக்கொண்டான்…
 
அவள் கத்தவும் அருகில் இருந்த நர்ஸ் அவசரமாக, “அய்யோ… கத்தாத மா… வயிற்றுல போட்டு இருக்குற தையல் அந்துரும்… ” என்றதும் பட்டென தன் வாயை மூடியவள் தொலைந்து போன குழந்தையை போல் திருதிருவென முழிக்க தொடங்கினாள்…
 
அங்கிருந்த அனைவருக்கும் அவளை பார்த்து சிரிப்பு வர, முருகவேல் முதல்முறையாக அவளது அழிச்சாட்டியத்தில் மனம் நிறைந்து வாய்விட்டு லேசாக சிரித்திருந்தார்…
 
இத்தனை நாள் எரிச்சலாக தெரிந்த அவளது வால்தனம் இன்று அவள் மனதிற்கு அன்புக்குறியவளாகவும் அவளது செயலை ரசிக்கவே தோன்றியது அவருக்கு…
 
அவர் சிரிப்பதை கண்டவளுக்கு கோபம் வர, வேகமாக காயத்ரியின் புறம் திரும்பி, “மாமியாரே இதெல்லாம் செரியில்ல சொல்லிப்புட்டேன்… நீரு கட்டிக்கட்டதும் செரியில்ல நாங் கட்டிக்கிட்டு வந்ததும் செரியில்ல… “என்றதும் ஏன்னென்று கேட்க காயத்ரி வாய் திறக்க வர, செல்லதாயும் வசுவும் அவளது ‘மாமியாரே…’ என்னும் அழைப்பு கோபத்தை தூண்ட, அவளை கண்டிக்கும் பொருட்டு பேச வாய்திறக்கும் முன் கவியழகன் முந்தி இருந்தான்…
 
என்னடி சரியில்ல….?” என கேட்டபடி அருகில் வந்தவன்,
 
“நானும் அப்ப இருந்து பார்க்குறேன் நீயும் ரொம்ப ஓவரா போயிட்டே இருக்க… என்னடி சரியில்ல…?” என கைசட்டையை மடக்கி விட்டபடி அவள் அருகில் வர, வசுந்தரா செல்லதாயி நர்ஸை தவிர மற்ற அனைவருக்கும் வேடிக்கை பார்க்கும் நிலை…
 
ஏனென்றால் இது தினமும் வீட்டில் நடக்கும் கதை என்பதால் அவர்களுக்கு அது பெரிதாக தெரியவில்லை ஆனால் மற்ற மூவரும் ஏதோ பிரளயம் வரும் என்னும் உணர்வு….
 
ஆமா… செரியில்ல இல்லத்தேன்… நாங் குத்து பட்டு கெடக்கேன் உம்ம அப்பாரு என்னனா நேரங்காலம் அறியாம ஓப்பாரி வைக்காரு நீரு என்னனா பொண்டாட்டி விழுந்து கெடக்காலேனு அக்கர இல்லாம தொர ஹீரோயிசம் காட்டிட்டு சுத்திட்டு இருக்கீரு…என முடிக்கும் முன்,
 
ஏய்… அரலூசு… எம் பொண்டாட்டி மேல கை வச்சவன சும்மா விட சொல்லுறியா…அவன கொன்னு இருக்கணும்…  ஆனா கைய உடைச்சதோடு விட்டுயிருக்கேன்…” என மீசையை முறுக்க, குழலிக்கு உள்ளுக்குள் ஜில்லென்று இருந்தாலும்  வெளியே காட்டிக்கொள்ளவில்லை…
 
ஆமா… கொல்லுவயா கொல்லுவ கட்டுனவ அம்போனு விட, கொல்லுவயா…” என நாட்டாமை படத்தில் வருவதை போல் சொல்ல, முருகவேல் இதுசரிவராது என அந்த அறையில் இருந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேற இப்பொழுது அங்கு மிச்சம் இருந்தது எலியும் பூனையும் தான்…
 
அதுனால தான் டி கைய மட்டும் உடைச்சேன்….” என்றபடி அவள் அருகில் அமர்ந்தான் இறுகி முகத்தோடு, அவளோ
 
ரொம்ப அக்கர இருக்காப்புலத்தேன்…  அத்தேன் கத்திய அப்படி உருவுனீகளோ…ஆமா ஆரு அது இப்படி பண்ணியிருக்காகவ…?” என்று முகத்தை கோபமாக திருப்பியவளுக்கு இப்பொழுதும் அந்த வலியை உணர்ந்தவளாக அனிச்சையாக கையை அடிப்பட்ட இடத்தில் வைத்துக்கொள்ள கேட்கும் வந்து நினைவு வந்தவளாக, அந்த சம்பவத்தை பற்றி கேட்கவும், கவிக்கு உள்ளம் கனத்து போனது….
 
இறங்கிய குரலில், “லூசு… அப்படியே விட்டா தான்டி பிரச்சன… அது வேற ஏதாச்சும் என்பக்ஷன், இல்ல விஷந்தடவிய கத்தியா இருந்திருந்தா பெரிய சிக்கல் அதான் உருவுனேன் டி…” என்றவன் பின் உள்ளே சென்ற குரலில்,
 
அது நான் இங்க வந்தப்ப ஒரு நெல பிரச்சன இருந்துச்சேஅவன் பண்ண வேல… அதுக்கு அவன நல்லா கவனிச்சாச்சு நீ ரொம்ப யோசிக்காத…” என்க,
 
குழலி, முதலில் “ஓஓஓஓ….” என்றபடி யோசித்தவள், பின் சட்டென அதுக்குன்னுட்டு இப்படியா எம்புட்டு வலிச்சு….”என்றவள் வார்த்தையை முடிக்கும் முன் அவளது இதழ்கள் அவனது கட்டுபாட்டில் இருந்தது நொடியில்…
 
அடுத்த இரெண்டொரு நொடியில் அவளை பிரிந்தவன் அவளது முகத்தை பார்க்க, அவளோ இறுக கண்களை மூடியிருந்தாள் அவன் விலகிய அடுத்த நொடி மூடிய அவளது விழிகளில் இருந்து கண்ணீர் சரசரவென இறங்க, பதறிவிட்டான் கவி…
 
அவளது கண்ணீரை தொடைத்துக்கொண்டே, “குழலி…என தவிக்க, அவளோ விழி திறந்து துடிக்கும் இதழோடு,
 
ரொம்ப பயந்துட்டேன் அத்தான்… எங்க உங் கூட வாழாம இரெண்டு புள்ளைய பெத்துக்காம, நெறைய சண்ட போடாமாசெ… செத்துருவே..னோன்னு பய..பயந்துட்டேன் அ…அத்தான்.…” என அழுதவளை கண்டு உள்ளம் மேலும் மேலும் அவளை காதலில் மூழ்கடிக்க ஆசைக்கொண்டது…
 
அதுவும் அவளது விழி நீர்…. தன் வயிற்றில் கத்தி இறங்கிய அந்த நிமிடத்தில் இருந்து இதோ சற்று முன்பு வரை விழிகலங்காது தைரியமாக இருந்து வலியை தாங்கியவள் கணவனது ஒற்றை முத்ததில் மொத்தமும் உடைந்தாள்…
 
அவளது கன்னம் வருடி, கண்ணீர் தொடைத்து, “ஷ்ஷ்ஷ்… ஏய் முட்டக்கண்ணி… என்னடி இது… இவ்வளவு நேரம் இப்படி வாயாடிட்டு இப்ப அழுற… உனக்கு ஏதாச்சும் ஒன்னை நடக்க விட்டுருவேனா… சொல்லு… என்மேல நம்பிக்கை இல்லையா…?என அவளை சாமாதன படுத்த, அவளோ
 
இல்ல உமக்கு எம்மேல அக்கர இல்ல… நீரு என்னைய ஹோஸ்பிடல் கூட்டுட்டு போவாம சண்டையத்தேனே போட்டீக… அப்ப எம்புட்டு பயந்தேன் தெரியுமா… அய்யோ நம்ம செ…” என்று புலம்பியவளின் இதழை அடுத்து பேசவிடாது வன்மையாக சிறை செய்தான் கவி…
 
மெல்ல அவள் கழுத்தின் கீழ் கையை கொடுத்து சற்று மேலே தூக்கியவன் தனக்கு வசதியாய் அவளை பிடித்துக்கொண்டு நிமிடங்கள் பல அவளது இதழில் முழ்கி போனான் அந்த கள்வன்…
 
முதலில் லேசாக திணறியவள் பின் தனக்கும் அந்த ஆறுதல் தேவையென உணர்ந்து, அவனுடன் பிணைந்துக்கொள்ள, பட்ட காயமும் அனுபவிக்கும் வேதனையும் காணாமல் போனது பூங்குழலிக்கு…
 
பழிவாங்க எண்ணியவள் கடைசியில் தன்னையே தன்னவனிடம் முழுதாக ஒப்பிவித்தாள் காதலில்…  வெகுநேரம் கழித்து அவளிடம் இருந்து பிரிந்த கவி, அவளை மீண்டும் படுக்கையில் கிடத்தி, அவளது கேசம் ஒதுக்கி, கன்னம் வருட, குழலிக்கு ஏதோ சொர்க்கத்தில் மிதப்பதான உணர்வு…
 
மெல்ல, விழியுயர்த்தி பார்த்தவள், கணவனை கண்டு லேசாக  வெட்கத்தில் புன்னகைக்க, கவியோ “கொல்லுற டி முட்டக்கண்ணி…என்று மீண்டும் அவளது இதழில் ஒரு முத்தத்தை பட்டென வைத்துவிட்டு நிமிர்ந்தவன், அவளது இருபுறமும் கையை ஊன்றி அவளது மதிமுகத்தை பார்த்தவாரே,
 
சீக்கிரம் உடம்பை சரி பண்ணிட்டு  வீட்டுக்கு வந்து சேரு… மனுஷன ரொம்ப சோதிக்குற… ” என அவளது கன்னத்தில் ஒன்று வைக்க, நாண புன்னகை பூத்த குழலி,
 
எதுக்கு….?” என குறும்பாக கேட்கவும், அவளை உறுத்து பார்க்க, ஏனோ அவளால் அந்த பார்வையை எதிர்க்கொள்ள முடியாது தடுமாறி உதட்டை கடிக்கவும், அதை தன் விரல் கொண்டு விடுவித்தவன்,
 
கடிப்பட்ட இதழுக்கு தன் இதழால் சிறு ஒத்தடமிட்டு நிமிர்ந்தவன், “ம்ம்ம்… இதுக்கு… உன் கூட வாழுறதுக்குரெண்டு புள்ளைய பெத்துக்குறதுக்கு…. கடைசி வரை உன்கூட சண்டை போட்டு சேர்ந்து வாழுறதுக்கு… ” என்றவனை பார்த்து முகம் மலர்ந்தவள் டிரிப்ஸ் ஏறாத மறுகையால் அவனை அணைக்க முயல…
 
அவனே முன் வந்து அவளை அணைத்துக்கொண்டான் காதலால், குழலியோ அவனது நெஞ்சில் தன் இதழ் பதித்து தன் கன்னத்தை ஆழ புதைத்துக்கொண்டாள் காதலோடு….
 
இனி வரும் அவர்களது காலம் வசந்த காலமாக அமைய அனைவரது ஆசியுடன் விடை பெறும் நாம் விக்னேஷ் கனிமொழியின் “என்னை களவாடிய பெண்ணிலா…”லில் மீண்டும் சந்திப்போம்…
….முற்றும்….
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Advertisement