Advertisement

வீட்டை நோக்கி சென்ற இருவருக்கும் மனம் அத்தனை லேசாக இருந்தது… ஏதோ பல தடைகள் தாண்டி தன் பொருள் தன்னிடம் வந்து சேர்ந்த திருப்த்தி அவர்கள் முகத்தில்…
 
ஆனால் அது விதிக்கு பிடிக்கவில்லை போலும்… இன்னும் சில பல மணி நேரத்தில் அது அத்தனையும் குழைய போவதை அறியாத இருவரும் தங்கள் இணையின் அருகாமையை ரசிச்சபடி வீடு வந்து சேர்ந்தனர்…
 
மதிய உணவை உண்டுவிட்டு கவி மில்லுக்கு சென்றுவிட, குழலி எப்பொழுதும் போல் தன் மாமியாரை வம்பிழுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள் கூடுதல் மகிழ்ச்சியில் ஒன்று அவளது படிப்பிற்கு இன்றோடு பெரிய கும்பிடு போட்டதொன்று மற்றொன்று அவளது கணவனால்…
 
மாலை வரை காயத்ரி, சைந்தவியுடன் சுற்றியவள் பின் அன்னையை காண செல்ல எண்ணி தயாராகும் போது வீடு வந்து சேர்ந்தான் கவியழகன்…
 
ம்மா….”என்றழைத்தபடி சோபாவில் அமர்ந்தவன், கையிலிருந்த பேப்பர்களை முன்னிருந்த டீபாயில் வைத்தான் கண்களால் தன்னவளை தேடியபடி…
 
என்ன ராசா, வெரசா வந்துப்புட்டீக…. குடிக்கு காபி தண்ணீ கொண்டாரவா…என்றபடி சமையலறைக்கு செல்லயிருக்க, கவி
 
ம்ப்ச்ச்… ம்மா… இப்படி வந்து உட்காருங்க…என்றழைத்தவனை சந்தேகமாக பார்த்தவர், அவன் அருகில் அமராது நின்றபடியே
 
என்னனுட்டு சொல்லு ராசா… ஜோலி தலைக்கு மேல கெடுக்கு… ” என்று சலித்துக்கொள்ள,
 
ம்மா…. உங்களுக்கு தான் வயசாகுதுல அப்புறம் ஏன் எல்லா வேலையையும் நீங்களே பண்ணுறீங்க… அதான் ஒருத்திக்கு தாலி கட்டி வீட்டுல வேஸ்டா வச்சு இருக்கேனே அதைய செய்ய சொல்லாம்ல… எங்க போச்சு அது…?” என்றபடி தேடியவனை பார்த்து முறைத்த காயத்ரி,
 
பொண்டாட்டி எங்கனுட்டு கேட்க வாய் வலிக்குது அதுக்கு எப்படியெல்லாம் பேசுதான்… கேடிபய… இவீங்களுக்கு வேல ஜோலி இல்ல…’ என்றெண்ணியவர், முந்தானையை உதறிவிட்டு நகர இருந்தவரை கவி,
 
எங்கம்மா போறீங்க… அவளை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லணுமோ சொல்லுங்க… நீங்க கொஞ்சம் ஃபிரியா இருக்குங்க…” என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவர், பேச வாய் திறக்கும் போது
 
ஏங் மாமியாரே.என்னைய பாத்தா எப்படி தெரியுதாம் உங்க மவனுக்கு… நாங் என்ன உங்க வூட்டுக்கு வேல செய்யவா வந்த்தேன்...” என்றபடி படியிறங்கி வந்தவளை காதல் பொங்க விழிகளால் கபளீகரம் செய்துக் கொண்டிருந்தான் கவியழகன்…
 
அதை உணர்ந்தாலும் உணர்ந்து கொள்ளாதது போல், காயத்ரியின் புறம் திரும்பி, “சொல்லி வைங்க உங்க மவன்கிட்ட இங்குட்டு என்னைய அதிகாரம் பண்ணுற ஜோலியெல்லாம் ஆவாது…” என்று மிடுக்காக தலையை திருப்ப, காயத்ரி
 
இருவரையும் ஒருசேர ஒன்றாக முறைத்தவர், ‘இதுங்கள ஒரே வூட்டுல வைக்குறது மொத தப்புஅப்படியே வச்சாலும் வேற மனுஷனுங்க அங்குட்டு இருக்க கூடாது… நம்ம மண்டையத்தேன் போட்டு உருட்டுவாக… சிறுக்கு பயலுவ…’ என உள்ளுக்குள் புலம்பியவர், அவர்களுக்கு பதில் கூறாது சமையலரை பக்கம் திரும்பும் சமயம்,
 
கவி, “அப்புறம் எதுக்கு இங்க வெட்டியா இருக்காளாம்… கேட்டு சொல்லுங்க ம்மா…” என்னும் போது முருகவேல் வீட்டினுள் நுழைந்தார் பூங்குழலியை முறைத்துக் கொண்டே…..
 
அவளோ முருகவேலை கண்டதும், எப்பொழுதும் போல் அவளது வாய் வம்பு செய் என தூண்ட, “நாங் எங்கன வெட்டியா இருந்த்தேன்…? நாங் இந்த வூட்டோட மகாராணியாக்கும்… ராணி எப்படி இருப்பாகளோ அப்படித்தேன் நாங்னும் இருக்கேன்…  ” என்றவள் அத்தோடு நல்லாமல் அங்கிருந்த சோபாவில் தோரணையாக அமர, முருகவேலுக்கு உள்ளுக்குள் அத்தனை கொதித்தது… இருந்தும் மகன் இருப்பதை கருத்தில் கொண்டு அமைதி காத்தார்....
 
காய்திரியும் கவியும், ‘ஆரம்பிச்சுட்டா…’ என தலையை பிடித்துக்கொண்டனர்… ஏனோ அவளுக்கு முருகவேலை கண்டால் மட்டும் உடம்புக்குள் பேய் புகுந்துவிடும் போல்… 
 
கவி, நீ எப்படியோ இருந்துட்டு போ… இப்ப இதுல இன்டூ மார்க் போட்டுயிருக்குற இடத்துல சைன் பண்ணு…” என தான் வைத்திருந்த பேப்பரை நீட்டினான் அவளிடம்
 
அவளோ, “என்னதிது…” என்றபடி வாங்கியவளுக்கு அது பத்திரம் என்பது புரிந்தது…
 
என்னவே பத்தரம் இது…?” என்றபடி அதை புரட்டி பார்த்தாளே தவிர படித்து பார்க்கவில்லை, ஆனால் அவன் சொன்ன இடத்தில் கையெழுத்து போட தவறவில்லை…
 
அது பத்திரம் என்றதும் முருகவேலின் பார்வையும் மூளையும் தீவிரமானது அவள்புறம்… கவியோ வெகு சாதாரணமாக,
 
இப்ப புதுசா கட்டியிருக்குற மில்லை உன் பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணறதுக்கு தேவையான பத்திரம்… படிச்சு பார்த்து கையெழுத்து போடு லூசு.... வாய் மட்டும் தான் மத்தபடி மண்டைல ஒன்னுமில்ல… என்று கடிந்துக்கொள்ளும் சமயம், காயத்ரி முருகவேலுக்கு குடிக்க தண்ணீரை நீட்ட, அது ஹாலின் ஒருமூலையில் சென்று விழுந்தது அவர் தட்டி விட்டதில்…
 
அதில் அனைவரும் அதிர்ந்து பார்க்க, முருகவேலோ குழலியை சுட்டெரிப்பது போல் பார்த்திருந்தார்… குழலிக்கு ஏன்னென்று புரியாவிடிலும் அவரது பார்வை ஏனோ உள்ளுக்குள் பயத்தை கிளப்பியது…
 
எதையும் வெளிகாட்டிக்கொள்ளாது அவரது பார்வையை தாங்கி அவரையே பார்த்திருக்க, முருகவேல் பல்லை கடித்தபடி “ஆரு பேருக்கு ஆரு வூட்டு சொத்த எழுதி வைக்குறவ… என்னடா கேக்க ஆள்ளில்லைன்னு நெனைச்சுப்புடியோ…?என குழலியை முறைத்துக்கொண்டே கவியிடம் கேட்க,
 
ப்பாஆஆ….. சும்மா சும்மா யாரு யாருன்னு சொல்லுறத நிறுத்துங்க… அவ யாரோ இல்ல என் மனைவி…என கவி கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் எழுந்து நின்று உறும, குழலியும் தன்னை போல் எழுந்து நின்றாள்…
 
அட்சீஈஈ… இதைய நாங் மொத கண்ணாலமாவே நெனைக்கல… இதுல எங்குட்டு இருந்து பொண்டாட்டி வந்தாஇன்னும் புரியாதவனாவே இருக்கியளே… அவ உன்னைய ஏமாத்தி உங் மானத்த ஊரு முன்னக்க கூறுப்போட்டு கண்ணாலம் பண்ணவ…அதைய மறந்துபுட்டு இவ பின்னால அலையுற வெக்கமா இல்லையாவே… உன்னைய அழக காட்டி மயக்கிட்டாளோ…?” என கேட்கவும், காயத்ரி
 
என்னங்கககக….” என கத்த, கவியோ
 
ப்பாஅஅஅ….” என கத்த, குழலி அமைதியான பார்வையோடு அவரையே பார்த்திருந்தாள்…
 
கவி, “என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா…? குழலி என் மனைவியோடு சேர்த்து உங்க தங்கச்சி மகளும் கூட…” என பேசிக்கொண்டிருக்கும் போதே , முருகவேல்
 
ஆமாவே ஆமா…. சொத்த அனுபவிக்க முடியலன்னு திட்டம் போட்டு இந்த வூட்டுக்குள்ள நுழைஞ்சவத்தேன் இந்த சிறுக்கி… நீ என்ன சொன்னாலும் இதுத்தேன் நெசமும் கூட… இங்குட்டு வந்ததுல இருந்து இந்த வீட்டைய அவ பெருக்கு மாத்த முயற்சி பண்ணிகிட்டு கெடக்கா… நீ என்னனா அவளுக்க சூழ்ச்சி வெளங்காம அவ பெருல மில்ல எழுதி வைக்கனுட்டு சொல்லுத…. கோட்டி பையலே….” என திட்டவும் குழலி அவரை புரியாது பார்க்க, கவிக்கு புரிந்து விட்டது…
 
குழலி விளையாட்டாய், ‘இது என் வீடு, நான்தான் அனைத்தும், நானே ராணி…’ என சொல்லிக்கொண்டு சுத்தியதை பெரிதாக கொண்டு வார்த்தையை விட்டுவிட்டார் என்று…
 
பொறுமையாக மூச்சை இழுத்து விட்டவன், தந்தையை பார்க்க அவரோ பூங்குழலியை முறைத்து நின்றிருந்தார்… அவளோ என்னனென்று புரியாத வெற்று பார்வையோடு அவரை பார்த்திருக்க, கவி பார்ப்பதை உணர்ந்து அவன்புறம் விழியை நகர்ந்தியவள் அவனை கண்டு சோபையாக இதழ் வளைத்து புன்னகைத்தாள் முயன்று ….
 
அதை கண்டு முருகவேலுக்கு கோபம் அதிகமாக, “இங்குட்டு பாருவே… இவளைய நம்பனா உன்னைய முதுகுல குத்திப்புட்டு போயிருவா…என மகனுக்கு மூளை சலவை செய்ய முயல, கவி
 
உங்களுக்கு ஏன்ப்பா குழலிய புடிக்கல…?” என கேட்க, அவனது கேள்வியில் அதுவும் அவன் கேட்ட தோரணையில் சட்டென தடுமாறி விட்டார் முருகவேல்…
 
பின் நிதானித்து, “என்னவேநாங் என்னத்த பேசுத்தேன்… நீ என்னத்த கேக்குத… புத்தி மழுங்கி போச்சோ…?” என வினவ,
 
இல்ல யோசிச்சு தான் கேட்குறேன்… ஏன் உங்களுக்கு குழலிய புடிக்கல… உங்க தங்கச்சி பொண்ணுங்குற நாளையா… இல்ல எப்ப பாரு உங்கள அவ சீண்டிட்டே இருந்தனாளையா...?” என சரியாக கேட்டுவிட, முருகவேலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
 
அவரது தடுமாற்றத்தை கண்டவன், இகழ்ச்சியாக புன்னகைத்து… “உண்மைய சொல்லணும்னா ரெண்டுமேத்தான்… கரெக்டா அப்பா… தப்பை எல்லாம் உங்க கிட்ட வச்சுகிட்டு அவளா குறை சொல்லுறதுல என்னப்பா நியாயம் இருக்கு…?” என கேட்கவும், முருகவேல்
 
கவி…” என குரலை உயர்த்த, அவனோ அதற்குமேல்
 
போதும் ப்பா…. போதும்…. ” என கையுயர்த்தி அவரை தடுத்தவன், முகம் இறுக,
 
அத்தைக்கு நீங்க பண்ண வேண்டியத ஒழுங்கா பண்ணியிருந்தா இந்த நிலம வந்திருக்காது… இல்ல மாமா தவறுன பின்னாடியாச்சும் அத்தைய கவனிச்சு இருந்துக்கணும் அப்பவும் தப்பு பண்ணிட்டீங்க இன்னும் சொல்ல போனா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டீங்க… அதெல்லாம் உங்களுக்கு தெரியல… என் பொண்டாட்டி அவ உரிமைய இந்த வீட்டுல எடுத்துகிட்டது தப்பா போச்சு அப்படித்தானே… ?” என்று கேட்டு நிறுத்த ஏனோ முருகவேலால் பதில் கூற முடியவில்லை தலையை குனிந்து கொண்டார் கையை முறுக்கி, ஏனோ இதற்கும் அவரது கோபம் குழலியின் புறமே திரும்பியது…
 
நீங்க பாவத்துக்கு மேல பாவத்தை பண்ணிட்டு அமைதியா இருக்கீங்க… அது என்னை பழி வாங்கிருச்சு எல்லார் முன்னாடியும்என்னால குழலிய தப்பா நினைக்க முடியல… ஏன்னா அவ பக்கம் நியாயம் இருக்கு… இது என் வீடு அவ என் பொண்டாட்டி இந்த வீட்டுல அவளுக்கும் உரிமை இருக்கு…என உறுதியாக கூறியவனை நிமிர்ந்து பார்த்து முறைக்க, கவி
 
இப்ப கூட சொல்லுறத புரிஞ்சுக்காம கோபம் வருதுல… உங்கள மாதிரி நானும், சைந்தவிக்கு பண்ணா என்னப்பா…?” என கேட்கவும் வேகமாக நிமிர்ந்து மகனை பார்த்தவரின் பார்வையில் லேசான கலக்கத்தை கண்டவன், நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்த படி,
 
 “பயப்படாதீங்கநான் உங்கள மாதிரி இல்ல…” என்ற வார்த்தை ஏனோ முதன்முறையாக முருகவேலுக்கு ஒரு வலியை கொடுத்தது…
 
எனக்கு பணத்தோட அரும தெரியும்… ஆனா பணத்தாசை கிடையாது…என்றவனை முருகவேல் வெற்று பார்வை பார்க்க, மேலே தொடர்ந்தான் கவி
 
பணத்துக்கு முக்கியதுவம் கொடுத்த நீங்க பெத்த புள்ளைங்களுக்கு கூட முக்கியதுவம் குடுக்க தவறிட்டீங்கபணம் இல்லைன்னு அத்தைய, குழலிய ஒரு பொருட்டா கூட நீங்க மதிக்கல, சைந்தவி அதே பணத்தால தான் உங்களை அவ மதிக்குறது இல்ல… ஏன் நான்…? இத்தனை வருஷம் கூட இல்லாதனால இப்ப பேசுறேனோ என்னவோ ஒருவேல சைந்தவி மாதிரி கூடவே இருந்திருந்தா நாணும் வெறுத்திருப்பேன்…என்றவனை நிமிர்ந்து பார்த்தவரின் பார்வையில் ஒருவித பரிதவிப்பு
 
அவர் நல்ல மகனாக இல்லாம போய் இருக்கலாம், நல்ல அண்ணனாக இல்லாமல் போய் இருக்கலாம், ஆனால் நல்ல  தந்தையாக இருக்க முயற்சித்தவர் கவியின் பொருட்டு. சைந்தவி மீது அன்பு என்பது இருந்தாலும் அவருக்கு முதன்மையாக இருந்தது கவியழகனே ஆண் வாரிசு என்பதாலோ என்னவோ… ஆயிரும் இருந்தாலும் தந்தையாக தன் கடமையை செய்ய அவர் தவறவில்லை…. தன் குடும்பத்திற்கு என்று வரும் பொழுது அவர் தன் கடமையை சரியாக செய்தவர்…
 
எல்லாமே ஓரளவுக்கு தான்உங்க ஒவ்வொரு செயலும் எவ்வளவு வெறுப்ப உருவாக்குதுன்னு தெரியுமா…? ம்ம்ம்…என நக்கலாக சிரித்தவன், “உங்களுக்கு எப்படி தெரியும்…? உங்க கண்ணுக்கு சொத்து மட்டும் தானே தெரியுது…” என்னும் போது முருகவேல் ஏதோ பேச வாய் திறக்க,  அவரை தடுத்தவன் தானே மேலே பேசினான்….
 
எப்ப பாரு குழலிய சொத்து பறிக்க வந்திருக்கான்னு சொல்லுறீங்களே… ஏன்…? ஒன்னு கேட்குறேன் நல்லா யோசிச்சு பாருங்க… இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து அவ என்னைக்காச்சும் சொத்து பத்தி பேசி பார்த்து இருக்கீங்களா…?” என முருகவேலை பார்த்து கேட்டவன், காயத்ரியின் புறம் திரும்பி “ஏன் ம்மா… நாங்க வீட்டுல இல்லாதப்ப உங்க கிட்ட ஏதாச்சும் பேசுனால…?” என கேட்க, அவரோ கலங்கிய விழியோடு ‘இல்லை…’ யென ஆட்ட, தந்தையை ஒரு பார்வை பார்த்தவன், பின் தாடையை தடவியபடி யோசித்து விட்டு வீடே அதிரும்படி,
 
சைந்தவி….” என அழைக்க, அங்கிருந்த அனைவருமே சற்று ஆடித்தான் போயினர் ஏன் குழலியும் கூட…. அறையினுள் இருந்த சைந்தவி தான் கேட்ட அழைப்பில் அடித்துபிடித்து வெளியே ஓடி வந்து அனைவரையும் புரியாது பார்க்க, கவி
 
நாங்க வீட்டுல இல்லாதப்ப இல்ல உன்கிட்ட தனியா இருக்கும் போது எப்பவாச்சும் குழலி இந்த வீட்டோட சொத்தை பத்தி பேசியிருக்காளா…?” என கேட்க, அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை, அனைவர் முகத்தையும் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பது மட்டும் தெளிவாக விளங்க,
 
என்னென்று புரியாமலேயே, சந்தேகத்தோடு ‘இல்லை…’ என தலையாட்ட, பார்த்தீர்களா என்னும் விதமாக முருகவேலை ஓர் பார்வை  பார்த்தான் கவியழகன்…

Advertisement