Advertisement

Final part:
பின் சுயத்திற்க்கு வந்தவள், “பொழுதாச்சு… வூட்டு போவோம்…” என்று மெல்லிய குரலில் அவனது கையை சுரண்ட,
 
ம்ம்ம்…” என ஆமோதித்தவன் வேறேதும் பேசி,அந்த அழகிய தருணத்தை கழைக்க அவன் விரும்ப வில்லை ஏன் அவளும் கூடதான்…
 
வண்டியை விட்டு இறங்கி அவன் பின் அமர்ந்து, அவனது இடையை சுற்றி கையை வளைத்து பிடித்தவள், அவனது பரந்த விரிந்த தோளில் வாகாக சாய்ந்துக் கொண்டாள் காதல் உரிமையோடு…
 
அவனது முகத்திலும் அவளது முகத்திலும் அத்தனை நிம்மதியும் அதனால் உண்டான புன்னகையும் முகத்தை அத்தனை பிரகாசமாக மாறியிருந்தது.
 
சற்றுநேரத்தில் ஊருக்குள் நுழைந்ததும் விலகி அமைதியாக அமர்ந்துக்கொண்டாள் குழலி… கவியும் அதை புரிந்து புன்னகையுடன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் அமைதியாக…
 
வீட்டிற்குள் வந்ததும் குடுகுடுவென ஓடிய குழலியை வினோதமாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் கவியழகன் அவளது திட்டத்தை பற்றி அறியாது…
 
காயத்ரி என்னவென்று கேட்டு எதற்கும் பதில் கூறாது தங்கள் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து நெற்றியை சுருக்கியவன், என்ன பண்ணுறா இவ…? ஒருவேல வெட்கப்பட்டு ரூம்க்கு ஓடி இருக்களா…? நாம ஒன்னும் அந்த அளவுக்கு எதுவும் பண்ணலையே… இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தா…’ என்று யோசித்தபடி சோபாவில் அமர்ந்தவனுக்கு அடுத்தடுத்து வேலை விஷயமாக ஃபோனில் அழைப்பு வர, அதில் மூழ்கி போனான்…
 
இரவு சாப்பாட்டிற்காக தயங்கி தயங்கி சுற்றி முற்றி பார்த்தபடி கீழே இறங்கி வந்தவளின் விழியில் பட்டான் அவளது அருமை கணவன்… குமாரிடம் நாளைய பொழுது செய்ய வேண்டிய வேலையை பற்றி எடுத்துரைத்துக் கொண்டிருந்தவன், கால் மேல் கால் போட்டு, ஒரு கையை கைபிடியில் ஊண்றி, மற்றொரு கையில் ஃபோனையும் சில கோப்புகளையும் மாற்றி மாற்றி அலசியபடி பேசிக்கொண்டிருந்தவனின் தோரணையில் குழலி காதலில் விழ, அவனை ரசித்தபடியே படியில் இறங்கி வந்தவள் கடைசி படியில் தவறி தடுக்கி விழுந்துவிட்டாள் அலறியபடி…
 
அவள் முன்பே கவியை ரசித்தபடி இறங்கி வந்ததை குமார் கவனித்து இருந்தாலும் தான் பார்த்தது போல் எதையும் காட்டி கொள்ளாமல் இருந்தவன், குழலி விழவும் சட்டென வாய்மூடி சிரிக்க,
 
அம்ம்ம்ஆஆஆ…” என சிறு அலறலுடன் விழுந்ததில் கவி பதறி திரும்பி பார்க்கையில் குமாரின் சிரிப்பையும் கண்டவனுக்கு கோபம் வந்தது கண்மண் தெரியாமல்…
 
குழலியோ நோக்கி போகும் முன், குமாரை உக்கிரம் கொண்டு முறைக்க, அதை கண்டு பதறியவன், அவசரமாக “இல்ல சின்ன ஐயா… அம்மணி உங்களையவே பார்த்துட்டு வந்து விழுந்துபுட்டாகன்னுத்தேன் சிரி… ” என சொல்லும் முன் மீண்டும் திரும்பி முறைத்தவன்,
 
கிளம்பு… மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்…” என இறுகிய முகத்துடன் கூற,
 
செரிங்க சின்ன ஐயா… மன்னிச்சுக்கோங்க… ” என மெல்லிய குரலில் மன்னிப்பை வேண்டிவிட்டு அவ்விடம் விட்டு விரைந்து வெளியேறினான் குமார்
 
அவன் சென்றதும் திரும்பி மனையாளை பார்க்க, அவளோ உதட்டை பிதுக்கி முழங்கையை தட்டிவிட்டு கொண்டிருந்தாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு…
 
அதை கண்டு கவிக்குமே சிரிப்பு வரத்தான் செய்தது… இவளைய வச்சுக்கிட்டு…’ என வாய்க்குள் முணுங்கியபடி, அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்து,
 
ஏன்டி இப்படி மானத்த வாங்குற… சைட் அடிக்குறத கூட ஒழுங்கா அடிக்க தெரியாம இப்படியா பார்த்துட்டே வந்து விழுவ…. லூசு…” என அவளது மண்டையில் வலிக்காமல் கொட்டு ஒன்று வைத்தான் சிரித்த முகத்தோடு…
 
அவனது வார்த்தையில் ரோசம் கொண்டவள், கொட்டியவன் கையை தட்டிவிட்டபடி “நாங் ஒன்னும் ஆரையும் பார்க்க கிடையாது… நாங் தவறி போய் விழுந்த்தேன் அதுக்கு உங்களைய பார்த்துத்தேன் படிய கவனிக்காம வந்து விழுந்தேனுட்டு ஆகாது…என முகத்தை திரும்பியவள் வேகமாக எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள் தொம்தொம்மென்று….
 
அவளை பார்த்து சிரித்தபடி எழுந்தவன், கொஞ்சும் கஷ்டம்தான் டா உன் நிலம…’ என எண்ணியபடி தன் வேலையை பார்க்க, குழலியோ அவசர அவசரமாக தன் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் சென்று புகுந்துக்கொண்டாள்…
 
அவளையே அனைவரும் வித்தியாசமாக பார்த்தாலும் அவர்களுக்கு அவளது செயல் தான் புரியவில்லை…சிறிது நேரம் கழித்து இரவு உணவை முடித்த கவி மாலை தன்னவளுடன் உடனான நெருக்கத்தை எண்ணி அதையே இப்பொழுதும் எதிர்பார்த்து அறைக்கு செல்ல பரபரத்தான்…
 
அவளது படிப்பு முடியும்வரை தன் எல்லையை அறிந்து இருந்தாலும், அவளிடம் இருந்து கிடைக்கும் சிறு அணைப்பும் பட்டும் படாமல் கிடைக்கும் சிறு இதழொற்றலுமே இப்பொழுது அவனுக்கு போது மானதாக இருந்தது…
 
அதை எல்லாம் எதிர்பார்த்து படியேறி தங்கள் அறைக்கு சென்றவனோ அதிர்ந்து போனான்…
 
இதுக்குதான் அவ்வளவு அவசரமா ரூம்க்கு வந்தாளா… இவள…’ என பல்லை கடித்தபடி, தங்கள் அறை கதவை தட்டினான் சற்றே பலமாக…
 
ஏய்… தொற டி கதவ…” என இவன் குரல் குடுக்கவும், இதற்காகவே காத்திருந்தது போல் சட்டென கதவின் பின்புறத்தில் இருந்து பதில் வந்தது அவனது முட்டக்கண்ணியிடமிருந்து…
 
ம்ஹும்மாட்டேன்…” என, அதில் கடுப்பான கவி,
 
எதுக்குடி இப்படி என்னோட எல்லா பொருளையும் பேக் பண்ணி வெளிய வச்சு இருக்க… லூசு… என்றவனின் பார்வை கீழே பரப்பி வைத்திருந்த அவனது அனைத்து பொருட்களின் மீதும் படர்ந்தது…
 
ஒன்னு கூட விட்டு வைக்காம எல்லாத்தையும் வெளியே எடுத்து வச்சு இருக்கு பைத்தியம்…’ என பல்லை கடித்தவன், மீண்டும் கதவை தட்ட,
 
இல்ல முடியாதுவே… என்ற பரிட்சை முடியற வர நீரு எங் பக்கமும் வர கூடாது அற பக்கமும் வர கூடாது… அத்தேன் உங்க பொருள் ஒன்னு கூட விடாம அம்புட்டையும் வெளிய வச்சுட்டேன் சும்மா எதையாவது சாக்கு வச்சுகிட்டு இங்குட்டு வந்து நிக்க கூடாது சொல்லிப்புட்டேன் ….”  என்று மிரட்ட இப்பொழுது கவிக்கு கோபம் போய் சிரிப்புதான் வந்தது மனையாளை எண்ணி…
 
ஏன் டி இப்படி பண்ணுற…?” என்று சிரிப்பை கடக்கியபடி தெரிந்த பதிலை அவளிடமிருந்து வாய்மொழி வார்த்தையாக கேட்க ஆவல் கொண்டு அவளிடம் கேட்க, முன்பு போல் அவளிடம் பட்டென்று பதிலில்லை
 
இவீக தெரிஞ்சுக்கிட்டே கேக்காகளா… இல்ல தெரியாமத்தேன் கேட்குதாகளா…?’ என்று உதட்டை கடித்து யோசித்தவள், எவ்வாறு பதில் கூறுவதென்று தெரியவில்லை அவளுக்கு வெட்கத்தில்….
 
உன் அருகில் நான் மதிமயங்குகிறேன் என்று எவ்வாறு உரைப்பாள் பெண்ணவள்
 
என்னடி பதிலை காணம்… சொல்லு டி முட்டக்கண்ணிஎதுக்கு இப்படி அலும்பு பண்ணுற…? என்று கேட்கவும் அவளுக்கு அவனது குரலின் விதத்தில் அதுவும் தன்னை ‘முட்டக்கண்ணி..’ என அழைத்ததில் அவன் வம்பு செய்யவே கேட்கிறான் என்று புரிந்து போனது குழலிக்கு…
 
அதில் பல்லை கடித்தவள், ம்ம்ம்… ஒரே மூட்டபூச்சி தொல்ல... என்னைய நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்கியதுஅத்தேன் அதைய வெளிய தொரத்த பாக்குத்தேன்…என்க,
 
அடிங்கு… நான் உனக்கு மூட்டபூச்சியா…?” என கதவை ஓங்கி தட்ட, அவளோ அதில் காதை பொத்திக் கொண்டு,
 
நாங் அப்பதையே தூங்கிப்புட்டேன்…” என குரல் குடுக்க, கவிக்கு மேலும் முகத்தில் புன்னகை விரிய,
 
கைல சிக்காமல போயிரு… அப்ப பார்த்துக்குறேன் டி முட்டக்கண்ணி…” என்று கத்தியவன், தன் பொருட்களை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு அறைக்கு குடிபெயர்ந்தான்…
 
காயத்ரி அதை கண்டு ஏன்னென்று கேட்க, “ம்ம்ம்… இதை உங்க ஆச மருமக கிட்ட கேளுங்க…என்று முகத்தை திருப்பி விட்டு செல்ல, அவருக்கோ
 
இப்ப என்னத்த ஏழ்ரைய கூட்டி வச்சுருக்காளோ சிறுக்கி…என எண்ணியபடி குழலியிடம் கேட்க, அவளோ மழுப்பலாக பதில் கூறிக்கொண்டிருக்க, காயத்ரிக்கு பொறுமை பறக்க தொடங்கியது…
 
அடியேய்… ஒழுங்கு மருவாதையா சொல்லிபுடு… என்னத்துக்கு டி எம்மவன போட்டு இந்த பாடு படுத்துறவ…என்று குரலை உயர்த்தவும் குழலியும் ஒரு வேகத்தில் குரலை உயர்த்தி பேசி விட்டாள்…
 
ம்ம்ம்… ஆமா மாமியாரே…எமக்குத்தேன் ஆச உங்க மவன வம்பிழுத்து பாடுபடத்த… ஒழுங்கா கை கால வச்சுகிட்டு சும்மா இருந்தா பரவால… பண்ணுற அம்புட்டும் களவாணி தனம்… படிக்குற புள்ள கிட்ட எப்படி நடந்துக்கணும்னுட்டு தெரியாது… என்னத்த புள்ளைய வளத்து வச்சுருக்கீக... நாங் பரிட்சைக்கு படிப்பேனா இல்ல உங்க மவன் கூட மல்லு கட்டுவேனா… அத்தேன் அறைய விட்டு ஒதுக்கி வச்சுயிருக்கேன் போதுமா....” என்று ஆவேசமாக கத்தி விட்டு காயத்ரியின் முகத்தை பார்த்தவள் பேந்த பேந்த விழிக்க தொடங்கினாள்…
 
காயத்ரியோ அவளது வார்த்தையில் வாயில் கை வைத்து நிற்க, அதை கண்ட குழலிக்கு சற்று வெட்கமாகவும் சங்கடமாகவும் போயிற்று… மெல்ல விழியோடு தலையையும் தாழ்த்திக் கொண்டவள், நாக்கை கடித்தபடி
 
செரியான லூசு புள்ள நீஇப்படியா அம்புட்டையும் சொல்லி வைப்ப…என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள், பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,
 
என்ன மாமியாரே… இப்படியே பார்த்துட்டு இருந்தா ஆச்சா… போங்க போங்க போய் ஆக வேண்டிய ஜோலிய பாரும்… எமக்கு படிக்க வேண்டி இருக்கு…” என தன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு கூற,
 
காயத்ரியோ, லேசான சிரிப்புடன்ரொம்ப தானா டி பண்ணுறவ… ஒருநாள் அம்புட்டுக்கும் செமத்தையா வாங்க போற டி அப்ப பார்த்துகிடுத்தேன் உன்னைய…” என்றுவிட்டு நகர, மனதிலோ
 
இனி இதுக ரெண்டுக்கும் நடுவுல நாம தலைய குடுவே கூடாது சாமி…’ என்ற பெரும் முடிவோடு அறையை விட்டு வெளியேறினார்…
 
அதன்பின் வந்த நாட்கள் கவியழகனுக்கு நரகமாக போனது என்றுதான் சொல்ல வேண்டும்… அவனது கண்ணில் படாதவாறு போக்கு காட்டினாள் குழலி…. ஏன் உணவு கூட அறைக்குதான் சென்றது கவி வீட்டில் இருந்தால்… அது அவனை இன்னும் வெறியெற்றியது தான் மிச்சம்…
 
பரிட்சை அன்று அவனது கண்ணில் படாதவாறு எவ்வாரேனும் ஓடிவிடுவாள் சாமர்த்தியமாக… அதை விட மனைவி வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்பதே அவனுக்கு தெரியாமல் போனதுதான் அதிகபடி…. அன்னையின் வீட்டிற்கு விருந்திற்கு கூட வரவில்லை என மறுத்துவிட்டாள் கணவனது நெருக்கத்திற்கு பயந்து…
 
ஏன் டி சீன் போடுரு... ஒருநாள் அத்த வீட்டுக்கு போய்ட்டு வரதுல என்ன ஆயிற போகுது...? ஒழுங்கா கிளம்பி ரெடியா இரு…” என அறை வாசலில் நின்று கவி மிரட்ட,
 
அவளோ உள்ளே இருந்துக்கொண்டே, “ம்ஹும்… நாங்த்தேன் வரலன்னு சொல்லுதோம்ல பொறவு என்னத்துக்கு கட்டாய படுத்துதீக…நான் ஆத்தா கிட்ட சொல்லிகிடுத்தேன்…என்க, கவிக்கு கடுப்பாக வந்தது அவள் மேல்…
 
என்னமோ ஐஏஎஸ் எக்சாம்க்கு படிக்குற மாதிரி பில்டப் பண்ணுற.ஒழுங்கா கதவை திற….” என ஓங்கி கதவை தட்ட, குழலியோ
 
எமக்கு இந்த பரிட்ச அப்படித்தேன்… இதுல அரியர் வச்சுபுட்டு பொறவு திரும்பவும் உட்கார்ந்து படிச்சு எழுத நம்மாள முடியாது… இப்ப நீரு இங்குட்டிருந்து போறீயளா இல்லையா…?” என்றவளை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று அவனுக்கு தெரியவில்லை…
 
அவள் அவளது வீட்டில் இருந்த போது கூட திருட்டுதனமாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்தவனால் சொந்த வீட்டில் கட்டிய மனைவியை பத்து நாட்களுக்கு மேலாக பார்க்க முடியவில்லை… விதியின் கொடுமையை எண்ணி நொந்தே போனான் கவி
 
படிப்பவளை தொலை செய்ய வேண்டாம் என சற்று பொறுமை கத்தவனுக்கு நாட்கள் சென்றதே தவிர அவள் அவன் முன் தோன்றுவதாகவே தெரியவில்லை…
 
சே… இவ என்ன செமஸ்டர் எக்ஸாம் தான் எழுதுறாளாஎவ்வளவு தான் கண்ணுல படாம சுத்துறா… ஒருவேல எக்சாம் முடிஞ்சும் நம்மளை ஏமாத்திட்டு சுத்துறாளாசே… சரியான கேடி பண்ணாலும் பண்ணும்… இருபது நாள் கிட்ட ஆயிருச்சு… பிராடு ஏமாத்துது…என எண்ணியவன் ஒருமுடிவோடு, ஃபோனை எடுத்து வீட்டிற்கு அழைப்பு விடுத்தான்…
 
காயத்ரி, “என்ன ராசா… ?” என கேட்க, கவி பல்லை கடித்தபடி
 
உங்க ஆச மருமவ எங்க? “என்றவனின் கேள்வியின் தோரணை காயத்ரிக்கு சரியாக படவில்லை…
 
அதன் விளைவாக, “ஏன் ராசா.…? அந்த சிறுக்கி ஏதாச்சும் வம்பு பண்ணியிருக்கா… ?”
 
பண்ணியிருந்தா பரவாயில்லையே ஆனா கண்ணுல தான் சிக்க மாட்டீங்குது…’ என எண்ணியவன், “ம்ம்ம்… இல்ல… அவ கையெழுத்து வேண்ணும் ஒரு பேப்பர்ல அதான் கேட்டேன்…” என சமாளிக்க, காயத்ரிக்கு ஏதோ லேசாக புரிந்தது சில நேரம் குட்டி போட்ட பூனையாக அவன் அறையையும் வீட்டையும் சுத்துவதை தான் கண்டிருக்கிறாரே….
 
அதை எண்ணி சிரித்துக்கொண்டவர், காலை பூங்குழலி சொன்னதும் நினைவிற்கு வர, ஒரு பெருமூச்சுடன், “அந்த சிறுக்கி காலேஜுக்கு போயிருக்கு ராசா… உச்சி பொழுதுக்கு வூட்டுக்கு வந்துரும்…”என்றதும் கவி அவசரமாக மணியை பார்த்தவன், பின் அன்னையிடம்
 
சரி அம்மா… நான் அப்புறம் பேசுறேன்…” என அவர் பதில் கூறும்முன் அழைப்பை துண்டித்துவிட்டு, புல்லட் வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு பேருந்து நிறுத்ததை நோக்கி வண்டியை விட்டான் வேகமாக…

Advertisement