Advertisement

UD:8  

“ஏன்டி… வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா… இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே… எங்க சுத்திட்டு வா பாப்போம்… கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு…” என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய மணி இருவர் மண்டையின் மீதும் அடிக்க சட்டென எழுந்து அவர் கையில் சிக்காமல் நகர்ந்து ஓடி நின்றனர்…

“மறுவாதையா நில்லுங்க டி லூசுங்களா…” என்று அவர் நான் விடுவேனா என்பதை போல் தொறத்த தொடங்கினார்…

‘இன்னைக்கு ஆத்தா கைல சிக்குனா சின்னா பின்னாமாக்கிரும் எப்படியாச்சும் தப்பிச்சுரனும் கடவுளே…’ என்று எண்ணியபடி பூங்குழலி ஓட, ‘இவ கூட சேர்ந்து நாதேன் கஷ்டப் படுதேன்… ஒழுங்கா திண்ணோமா கவுந்தடிச்சு தூங்குனோமான்னு இருந்திருக்கலாம்… ச்சை…’ என்று எண்ணியபடி அந்த முற்றத்தில் இருவரும் வசுந்தராவை வைத்து கபடி விளையாடிக் கொண்டிருந்தனர்…

அப்பொழுது, “விடாத வசுந்தரா… ரெண்டுக்கும் அதுப்பு கூடி போச்சு… நல்லா நாலு சாத்து சாத்தனும்… நான் இன்னும் நல்லா இருக்குறது இதுங்களுக்கு வயித்தெரிச்சல்… இதுங்க ரெண்டத்தையும் ஒன்னு சேர விடாதேன் எத்தன மொற சொன்னேன் கேட்டியா…? இப்ப பாரு என்ன பேச்சு பேசுதுன்னு… ரெண்டையும் இழுத்து வச்சு சூடு போடு எல்லா அடங்கி இருப்பாளுக… சுத்த போவாங்களாமே ஊர் சுத்த… திமிரு பிடிச்ச சிறுக்கிங்க….” என்று ஓடிக்கொண்டு இருந்த இருவரையும் முறைத்துக் கொண்டே கூற,

“இங்க பாரு அப்பத்தா ஓவரா பேசாத… இன்னைக்கு எங்களுக்கு நேரம் சரியில்லாம இருக்கலாம் ஆனா இன்னொரு நாள் உன்னை என்ன பண்ணுறேன் பாரு…” என்று கனி கத்திக் கொண்டே ஓட,

“அடிங்க… என்னடி வாயி நீலுது… “என்று வசுந்தரா கோபத்தில் கத்தினார் இவர்களை அடக்கும் வழி அறியாது…

“சும்மா கத்தாத ஆத்தா… இந்த காலத்துல வயசு பொண்ணுங்கன்னு இல்லாம இந்த மாதிரி இத்து போன வயசான டிக்கெடை கூட விடறதில்ல சிலரு… அதேன் அக்கரைல பேசிட்டு இருந்தோம்…” என்று பாவனையுடன் பூங்குழலி கூறவும் , தூரத்தில் இருந்தே வசுந்தரா குறி பார்த்து அடித்த காலியான சோப்பு டப்பா அவளது தலையை பதம்பார்த்தது சரியாக…

“ஸ்ஸ்ஸ்…. ஆத்தா ஆஆஆ….” என்று சண்டைக்கு எதிர்த்து நிற்கும் வேலையில் அவளை தடுத்து நிறுத்தினாள் கனி…

“அய்யோ… சும்மாதேன் இறேன் புள்ள…” என்று கனியின் வார்த்தை அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை…

“என்னடி ஆத்தா… வாய உரைச்…” என்று வசுந்தரா திட்ட தொடங்கும் முன்,

“அக்கற படுறாம்ல அக்கற… எடுப்பட்ட சிறுக்கிக்கு திமிர அடக்கவருவான் பாரு ஒருத்தன் அப்ப தெரியும் உன் பவுசு… காபடி சைஸ்ல இருந்துட்டு என்ன திமிரு… நீ வா வசுந்தரா… அவ கெடுக்கா கூரு கெட்டவ…” என்ற செல்லதாயி பேத்தி இருவரையும் முறைத்தபடியே மகளை அழைத்து சென்றார் அவ்விடத்தில் இருந்து…

இளசுகள் இரண்டும் ஒரு பக்கமும், பெருசுகள் இரண்டும் ஒருபக்கம் நகர்ந்து விட்டாளும் அனைவர் மனதிலும் ஓடிய ஒரே விஷயம், “அந்த ஒருவன்” தான்…

பெரியவர்களுக்கு பயம், பூங்குழலியின் நிலையை எண்ணி, பூங்குழலிக்கோ தன் பாட்டி கூறியதை கேட்டதும் அவள் மூளையில் பட்டென்று உதித்த முகம் அந்த கார்காரன், ‘இது செரியில்ல புள்ள… ஒழுங்கா இருந்துக்கோ இல்லாட்டி நீதாம் புள்ள கஷ்ட படனும்…’ என்று வீட்டின் பின் புறத்தில் இருந்த கிணற்றின் திட்டின் மீது அமர்ந்து யோசித்துக் கொண்டு இருக்க…

கனியோ, ‘நமக்கு என்ன மாதிரி மாப்பிள வருவான்… இப்ப வருவான்…?’ என்று சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள்…

“டேய் விக்கி… நான் டவுன் வரை போரேன் வரியா…?”

“என்னடா லூசுதனம்மா கேட்குற…?” என்று விக்கி கேட்கவும் திரும்பி பார்த்து நண்பனை முறைக்க தொடங்கினான் கவி…

“இப்ப எதுக்கு முறைக்குற…? இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன்… உன் ஊருக்கு வந்திருக்கேன்… அப்ப ஊர் சுத்தி காட்டாம மில், வீடுன்னு கூட்டிட்டு போயிட்டு வர… உனக்கே நியாயமா இருக்கா…? அட்லீஸ்ட் இப்படி எங்கையாச்சும் போறப்பவாச்சும் கூட்டிட்டு போ… ” என்று சலிப்புடன் கூறி முடிக்கவும் கவியின் முகத்தில் சிறு புன்னகை ஒன்று தோன்றியது நண்பனை எண்ணி…

“சரி சரி வந்து தொல…” என்று பெரிய மனதுடன் அழைக்கவும் விதியேன்று விக்கியும் உடன் சென்றான்…

திங்கள் காலை, கவி “டேய்… எந்திரிச்சு தொல நாயே…” என்று விக்கியை புரட்டிக் கொண்டு இருந்தான் கவி…

“ம்ப்ச்ச் டிஸ்டர்ப் பண்ணாத கவி… செம்ம கனவு நான் என் வில்ளேஜ் பியூட்டி கூட டூயட் பாடிட்டு இருக்கேன்… தொல்ல பண்ணாம போயிரு…” என்று காலால் கவியை ஒரு எத்து விட்டுவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்…

“டேய் எரும கடுப்படிக்காத டா… இன்னைக்கு குமரேசன் கல்யாணத்துக்கு வரேன்னு நீ தானே சொன்ன…. டைம்மாச்சும் எந்திரி டா…” என்று உலுக்க, ம்ஹும் எந்த ஒரு எதிர்வினை செயலும் விக்கியிடம் இருந்து இல்லை…

சில நிமிடங்கள் முயற்ச்சித்து பார்த்தவன் பின், “போய் தொல நாயே… இனி எப்பவாச்சும் வெளிய எங்கையும் போகலைன்னு சொல்லி பாரு வாய ஒடைக்குறேன்… ” என கத்திவிட்டு தான் தயார் ஆக சென்றவனுக்கு சட்டென நினைவுக்கு வந்தது ஒரு யோசனை…

தன் போக்கில் புலம்புவது போல் கவி சற்று சத்தமாக, “ஒருவேல இவனோட வில்ளேஜ் பியூட்டிய போற வழியில பார்த்தா நாம என்ன பண்ணுறது…?” என்று தாடையை தடவி யோசிப்பது போல் ஒரு கையை இடுப்பில் வைத்து நின்று யோசிக்க, அவனை பலமாக இடித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்த விக்கி,

“மாப்ள… பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு டா வந்துறேன்….” என்று குரல் கொடுக்கவும் பெரிதாக சிரித்தபடி தயாராக தொடங்கினான் கவி…

‘உண்மையாவே ரொம்ப லவ் பண்ணுறான் போல… அதுவும் ஒருமுறை பார்த்ததுக்கேவா…? எப்படியோ எல்லாம் நல்லபடியாக நடந்தா சரி…’ என்று எண்ணியவனுக்கு தெரியவில்லை அவனது வாழ்க்கையும் அவளது வாழ்க்கையும் தன்னால் மாற போவதை…

இருவரும் கிளம்பி வீட்டில் அன்னையிடம் கூறிவிட்டு குணா கூறிய இடத்திற்கு தங்கள் காரை செலுத்தினான் கவி…

“சீக்கிரம் வா புள்ள லேட் ஆச்சு… ” என்று கனி கத்திக் கொண்டு இருக்க,

“சும்மா கத்திக்கிட்டே கெடுக்காத டி… வந்துட்டேன்…” என்று பதிலுக்கு இவளுக்கும் கத்தியபடி குழிபனியாரத்தை வாய்க்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்…

“எப்பதேன் இது திருந்துமோ தெரியல…”என்று வசுந்தரா திட்டிக்கொண்டே கனியிடம்,

“ஏன்டி… உனக்கு அறிவிருக்கா இல்ல இருந்ததையும் வித்துட்டியா…? அவதேன் எப்பபாரு இதையே பொழப்பா வச்சுயிருக்கால பொறவு என்னதுக்கு இது கூட சுத்திட்டு இருக்கவ… நீ உன் ஜோலிய பாக்க வேண்டியது தானே… ” என்ற வார்த்தைக்கு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவள் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்..  

அவளது முகத்தை பார்த்து பாவமாக உணர்ந்த வசுந்தராவுக்கு கோபத்தோடு சிரிப்பாகவும் இருந்தது… இவர்கள் பள்ளி செல்ல ஆரம்பித்த நாள் முதல் இதே கதை தான் தினமும் தொடர்கிறது என்ன ஆயினும் இவ்விரு ஜீவன்கள் என்றும் எதற்கும் பிரிந்ததில்லை… சண்டையிட்டாலும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு தான் சுத்தும் ஆனால் பேச்சு வார்த்தை இருக்காது அத்தனை நெருங்கிய நட்பும் அதையும் தாண்டிய பந்தம் அவ்விருவருக்குள்ளும்…

சில நொடிகளுக்கு மேல் வசுந்தராவால் அவளது முகத்தை பார்க்க முடியாமல் போனது எங்கு சிரித்து விடுவோமோ என்று அஞ்சி முகத்தை திருப்பிக் கொண்டவர், வர வைத்த கோபத்தோடு “திமிரு பிடிச்சவளே, திண்ணது போதும் கிளம்புற வழிய பாரு…” என்று கத்தி, அவள் முன் இருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார்…

“ஆத்தா… என்னத்த பண்ணுறீக… நா இன்னும் சாப்பிட்டு முடிக்கல…” என்று சிணுங்கவும் கனிக்கு கோபம் உச்சத்தை தொட்டது…

“அடிப்பாவி… முழுசா பதினஞ்சு பனியாரம் திண்ணுட்டு இன்னும் சாப்பிடலன்னு குறை படுறியோ… எரும மாடே… வந்து தொல இல்ல நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன் புள்ள…”

“ஆத்தா… இங்குட்டு பாரு இவளைய… நான் சாப்புடுறத பார்த்து கண்ணு வைக்கா….” என்று நீலிக்கண்ணீர் வடித்தவளின் மண்டையை கொட்டிய செல்லதாயி,

“இப்படி திண்ணுகிட்டே இருந்தேன்னு வை… பொறவு கண்ணாலத்துக்கு மாப்பிள தேடுறது கஷ்டம் டி… இதுவர நீ திண்ணது போதும் காலேசுக்கு கிளம்புடி…” என்று ஒரு அதட்டல் போடவும், கனி லேசாக சிரித்து விட்டாள்…

அதை பார்த்து முறைத்தவள், பதிலேதும் வம்பு வளர்க்கலாம் அமைதியாக பதினைந்தோடு சேர்த்து தட்டில் இருந்த இரண்டு பனியாரத்தையும் வாயில் அடைத்துக் விட்டே அவ்விடத்தை விட்டு எழுந்தாள்…

அவளது அமைதி அங்கிருந்த மூன்று பேருக்குமே ஆச்சர்யத்தை கொடுக்க இவளோ அமைதியாக கையை கழுவி விட்டு அறைக்குள் சென்று தன்னை ஒருமுறை சீர் படுத்திக் கொண்டு, புத்தக பையுடன் வெளியேறும் முன் அங்கு இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு, தான் ஒன்றும் அத்தனை குண்டாக இல்லை லேசாக பூசினார் போன்ற உடம்பு என்ற எண்ணம் தோன்றவும் பழைய பூங்குழலியாய் உர்ச்சாகத்துடன் கிளம்பினாள் கனியுடன்…

ஏனோ அவளது அந்த சில நொடி அமைதி கூட, பெரியவர்கள் இருவருக்கும் ஏதோ வேதனையை கூட்டியது என்னவோ உண்மை…

“புள்ள குழலி…” சைக்கிளில் தன் பக்கவாட்டில் வந்துக் கொண்டு இருந்தவளை மெல்ல அழைக்க,

“ம்ம்ம்….”

“அப்பத்தா அப்படி சொன்னதுக்கு கோவமா புள்ள…?”

“ம்ஹும்….”

“பொறவு ஏன் புள்ள அமைதியா வார…?” தோழியின் அமைதி அவளை கஷ்டப்படுத்த பாவமான முகத்துடன் கேட்கவும், அவளை திரும்பி பார்த்தவள் பதில் ஏதேம் சொல்லவில்லை…

“ஏன் புள்ள பதில் பேச மாட்டீங்கிற…?” ம்ஹும் தோழியிடம் பதில் இல்லை…

‘என்ன இவ பேச மாட்டீங்கறா… அப்பத்தா சொன்னது இவளை கஷ்டப்படுத்திருக்குமோ… அதேன் அமைதியா வாரளோ…’என்று எண்ணியவளுக்கு இவளை எப்படி சரி செய்வது என்ற சிந்தனையில் அமைதியாக சைக்கிளை மிதித்துக் கொண்டு இருந்தவளுக்கு சட்டென தோன்றியது ஒரு விஷயம்…

“ஏன் மச்சான்… அதான் கார் இருக்கே அப்புறம் ஏன் நம்ம இங்க காத்துட்டு இருக்கோம்…” விக்கியின் குரலில் லேசான எரிச்சல்…

அவனை ஒரு மார்க்கமா பார்த்த குணாவின் தோளில் கை போட்ட கவி, “அது ஒன்னுமில்ல மச்சான்… சாருக்கு அவங்க ஆளை பார்க்க முடியலையேன்னு கவலை… அதான் கொஞ்சம் கடுப்பா இருக்காங்க…” என்று லேசாக சிரித்துக்கொண்டே கூற, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்த விக்கி தலையை வேறு புறம் திருப்பி கொண்டான்…

வீட்டில் இருந்து கிளம்பிய நொடி வரை விக்கியின் கண்கள் ரோட்டில் தான் அலைபாய்ந்துக் கொண்டு இருந்தது ஏக்கமாக… எங்காவது அவளை பார்த்துவிட மாட்டோமா என்று, ஆனால் அது முடியாமல் போகவே கோபத்தோடு ஒரு பயம் கலந்த எரிச்சல் தோன்றியது அவனுள்…

“என்லே சொல்லுத…” ஆச்சரியம் குணாவின் குரலில்…

“அட ஆமா மச்சான்… லவ்னா லவ் அப்படி ஒரு லவ்…” என்று கிண்டலுடன் கூற, விக்கியிடம் இருந்து முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது…

“ஏலே… நீங்க ஊருக்கு வந்தே ரெண்டு நாளு தாம்ல ஆச்சு… அதுக்குள்ள எப்படில காதல்…?” என்று ஆச்சரியமும் லேசாக துளிர்ந்த சந்தேகம் அவனுள் எங்கு பொழுது போக்கிற்காக ஊர் பொண்ணிடம் வாலாட்டுவானோ என்று…

அவனது கேள்வியில் குணாவை பார்த்து விக்கி, “என்ன, சந்தேக படுறியா குணா டைம் பாஸ்க்கு பண்ணுறேன்னு….?” அவனது கேள்வியில் சற்று மிரண்டு போனான் குணா, அத்தனை அழுத்தம் அவனது கேள்வியிலும் பார்வையிலும்…

“ஹே… கூல் மச்சான்…”என்று விக்கியின் தோள் பட்டையை அழுத்திய கவி, குணாவின் புறம் திரும்பி “மச்சான்… எனக்கு விக்கிய பல வருஷமா தெரியும் அவன் ரொம்ப நல்லவன் டா… எந்த கெட்ட பழக்கமும் கிடையாது இப்ப தான் முதல்முறையா ஒரு பொண்ண பார்த்து கவுந்துட்டான்… என்ன ஆனாலும் அந்த பொண்ணு தான் என் பொ… சாரி சாரி அவன் பொண்ணாட்டின்னு முடிவு பண்ணி, ஏக்கமா சுத்திட்டு இருக்கான்…”என்று குரலில் ஏற்ற இறக்கங்களுடன் கூற விக்கிக்கு சற்று கடுப்பாகி போனது, அவனை முறைத்து பார்த்து

“என்னடா கிண்டலா…?” என்று கேட்டவனின் தோரணை சண்டைக்கு தயார் ஆவது போல் இருந்தது இருவருக்கும்…

கவி கூறியதை கேட்டு தெளிந்த குணா விக்கியின் கேள்வியில் லேசாக சிரிக்க, கவி “சே சே… சத்தியமா இல்ல மச்சான்… உன்ன போய் கிண்டல் பண்ணுவேனா… நீ என் நண்பன்டா…” என்று தோளை பிடிக்க வர, அவன் கையை  வேகாமாக தட்டி விட்ட விக்கி விலகி முதுகு காட்டி நின்றுக்கொண்டான்…

அதை பார்த்து வாய்விட்டு சிரித்த குணா, கவியிடம் “அது செரி மாப்ள… ஒருபொழுது பார்க்காததுக்காக இம்புட்டு கோவமா…?”  என்று சந்தேகம் கேட்க,

“அட நீ வேற மச்சான்… துரை அந்த பொண்ண பார்த்ததே ஒருபொழுது மட்டும் தான்… அந்த பொண்ணு யாரு, எங்க இருக்கா, என்ன பண்ணுறான்னு ஒன்னுமே தெரியாது… சரி தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தா அந்த ஒரு பொழுதுக்கு அப்புறம் அந்த பொண்ணை பார்க்க முடியல சாருக்கு…” என்று விளக்கம் அளித்த நண்பனை ஆச்சரியமாக பார்த்து வைத்தான் குணா…

ஏனோ அந்த நொடி குணாவிற்கு விக்கியின் மீது பெரும் மதிப்பும் பற்றும் உண்டாக, விக்கியின் அருகில் சென்று “மாப்ள… நீ எதுக்கும் வெசனப் படாத அந்த பொண்ணு யாரு என்னனுட்டு கண்டுப்புடிக்குறோம், உன்ற காதல சொல்லி புரிய வைக்குறோம்…” என்று கூறியவனை பார்த்து சலிப்பாக,

“ம்ப்ச்ச்… போ மச்சான்… இன்னும் எத்தன நாள் என் கண்ணுல படாம இருக்க போறான்னு தெரியல… நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி யாருன்னு தெரிஞ்சா கூட போதும்… மத்ததை நான் பார்த்துக்குவேன் ஆனா எப்படின்னு தான் தெரியல…” என்றபடி தன் பின்னந்தலையை கோதியபடி திரும்பினான்….

கவியோ இவர்களது உரையாடலை கேட்டபடி டீயை பருகிக் கொண்டு இருந்தவன், நண்பனது எண்ணத்தை அறிந்து, அவன் அருகில் சென்று “ஏன்டா இப்படி ஃபீல் பண்ணுற… நீ ஊருக்கு போனா என்ன…? நான் இனி இங்க தானே இருக்க போறேன்… அந்த பொண்ணை எப்படியாச்சும் கண்டு புடிச்சு கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு அந்த பொண்ணுக்கு புடிக்குங்குற பட்சத்துல….” என்றவனின் வார்த்தைகளுக்கு விக்கி செவி சாயிக்கவில்லை…

தான் பேசியதுக்கு எந்த ஒரு பதிலோ அல்ல முக மாற்றமோ அல்லாது எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தவனை பார்த்து விக்கிக்கு மறுபக்கம் நின்றிருந்த குணாவிடம் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க, அவனோ தெரியவில்லை என்பதை போல் தோளை குலுக்கி சொல்லவும் இருவரும் ஒன்று போல் அவனை பார்க்க, அவனது பார்வை நிலைக்குத்தி இருக்கும் திசையில் தங்கள் பார்வையை செலுத்தினர் யோசனையாக…

சற்று தூரத்தில் சைக்கிளில் பூங்குழலியும், கனியும் பேசியபடி வருவதை கண்டனர் இருவரும்… அதில் கவியழகன் ஆராய்ச்சியாகவும், குணா அதிர்ச்சியாகவும் பார்த்திருந்தான்…

‘என்னதிது இந்த பய இவங்களைய இப்படி பாக்குதான்… ஒருவேல விக்கி சொன்ன புள்ள இவங்கள ஒருத்தியா இருக்குமோ…?’ என்று யோசனையுடன் இவர்கள் புறம் திரும்ப, கவியின் பார்வை மாற்றத்தை பார்த்தவனுக்கு தலையில் இடி விழாத குறையாக இருந்தது…

“புள்ள குழலி… ஒரு முக்கியமான சேதி சொல்லும் டி… என்னனுட்டு கேளேன்…” கனி அவளை பேச வைக்கும் முனைப்போடு இருக்க, தூரத்தில் தங்களை பார்த்துக்கொண்டு இருக்கும் மூவரையும் கவனிக்க தவறினாள்… ஆனால் நேற்க்கொண்ட பார்வையோடு சைக்கிளை ஒட்டிக் கொண்டு வந்த பூங்குழலியின் பார்வையில் முதலில் விழுந்தது கவியின் காரே…

‘இந்த கார் அவிகளதுதானே…?’ என்று எண்ணிக்கொண்டே வந்தவள் அப்பொழுது தான் அருகில் இருக்கும் டீ கடையில் தங்கள் இருவரையும் மூவர் பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்தாள்…

“ஏய் புள்ள… நீ அன்னைக்கு கேட்டல அந்த கார் காரனை அவிக யாருன்னுட்டு எனக்கு தெரியும் புள்ள…” யார் பெற்ற பிள்ளையோ தனியாக பேசிக்கொண்டு செல்கிறாள் என்னும் நிலைதான் கனிக்கு…

‘என்ன இவ இம்புட்டு கோவமா இருக்கா… ஒரு பனியாரத்தால வந்த வெனைய பாரு… சை…’ என்று சலித்தபடி தோழியை திரும்பி பார்க்க அவளது புருவம் சுருங்கிய ஆராய்ச்சியான முகத்தை பார்த்து,

‘அப்படி என்னத்தைய பார்க்குறவ…?’ என்று எண்ணியபடி அவளது பார்வை சென்ற நேர் திசையை பார்த்தவள்,

“ஆத்தி… இவக அவகிளாச்சே…” என்று வாய்விட்டு புலம்பியவள், தோழியை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘பேசாம இவகிட்ட யாருன்னுட்டு சொல்லிறலாமா…’ என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே, இவர்கள் வலக்கமாக தங்களின் சைக்கிளை நிறுத்துமிடத்தில் அவர்களது காரை நிறுத்தி இருப்பதை பார்த்து பூங்குழலிக்கு சுர்ரென்று கோபம் எகிறியது…

மெல்ல சைக்கிளை விட்டு இறங்கிய இருவரும் காரையும், காரின் சொந்தகாரர்களையும் பார்த்தவர்கள் திரும்பி, பெண்கள் இருவரும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர்…

“என்ன புள்ள பண்ணுறது… பேசாம தள்ளி நிறுத்திட்டு போலாமா… காலேஜுக்கு நேரமாச்சு… பஸ் வந்துரும்….” என்று மெல்ல பூங்குழலியின் காதை கடித்தாள் கனி…

பூங்குழலியின் பார்வை, கவியழகனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்க, கனிக்கு பக்கென்று ஆனது… இது சரியல்ல என்று தோன்றவும் பூங்குழலியின் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுக்க, விழியின் திசையை மாற்றியவள், சைக்கிளை புளியமரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, பத்தடி தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர்…

இவர்கள் இருவரும் பெண்களின் மீது வைத்த கண்களை எடுக்காமல் இருக்க, குணாவிற்கு தான் அபாயமணி மண்டைக்குள் பலமாக அடித்தது…

‘கடவுளே… இவனுங்க யாரு யாரைய பார்க்குறாங்கன்னு தெரியலையே… யாரா இருந்தாலும் உசுரு போறது உறுதியாச்சே… பெரியவருக்கு விஷயம் தெரிஞ்சுது சங்கு ஊதிட்டுதேன் என்னனுடே கேட்பாரு… இந்த கனிபுள்ளையோட அய்யன் தோளை உரிச்சு, ஊருக்கு வெளிய கெடாசிருவாரே… ம்ஹும் இது தோது படாது…’ என்று யோசனையின் முடிவில் ஒரு முடிவுடன் நிமிர்ந்து நண்பர்களை பார்க்க,

இவர்களை தாண்டி செல்லும் பெண்களையே கண்கள் மின்ன பார்த்திருந்தனர்… அதை கண்டு கடுப்பானவன், தன் அருகில் நின்றிருந்த விக்கியின் தோளை பிடித்து உலுக்க, சுயத்திருக்கு வந்தவன் குணாவை பார்த்து பல் இளிக்க குணாவோ அவனை கொல்லும் பார்வையை பார்த்து வைத்தான்…

அதை புரியாமல் முகம் சுருங்க பார்த்தவன், ‘ஏதுக்கு பாசமா பார்க்குறான் ஒருவேலை நம்ம வில்ளேஜ் பியூட்டி இவனோட தங்கச்சியா இருக்குமோ…?’ என்று யோசித்தவனுக்கு பகிரென்று இருந்தாலும் அதை தெளிபடுத்திக்கொள்ள கவியின் புறம் திரும்பியவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டான்…

‘என்ன இப்படி பல்ப் எறியுது… யாரை பார்க்குறான் ஒருவேல நம்ம ஆள பார்க்குறானா… ஓ மை காட்…!!!’என்று அதிர்ந்து சட்டென பெண்கள் புறம் திரும்பி பார்க்க பெரிதும் குழம்பி போனான் விக்கி… ஏனென்றால் பூங்குழலியும் கவியை தான் பார்த்துக்கொண்டே முன் நோக்கி சென்றுக்கொண்டு இருந்தாள்… கனி அவளை கைபிடித்து “அவிகள பார்க்காம வா புள்ள ஏதாச்சும் வம்பாயிற போகுது…” என்று பயத்தில் அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்…

இதை பார்த்து குழம்பிய கனி, அவனிடமே  தெளிவு படுத்த எண்ணி கவியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப, அவனோ விக்கியை பார்த்து வாயெல்லாம் பல்லாக காட்சியளித்தவன் தன் சட்டை பாக்கெட்டில் மாட்டி இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்தபடியே குணாவிடம்,

“மச்சான்….”

“என்னலே…?” என்று பல்லை கடித்து கொண்டு கேட்க,

“நம்ம போக வேண்டிய கல்யாணத்துக்கு இந்த பஸ்ல தானே போகனும்…?” என்று கண்ணாடியை மாட்டிய படி கேட்க,

குணாவும் அப்பொழுது தான் பஸ் வந்ததை கவனித்து, அவசரமாக “அய்யோ ஆமாம்லே… வெரசா வாங்கல… இந்த பஸ்ஸ விட்டா பொறவு அரைமணி நேரம் கழிச்சுதேன் பஸ் வரும்…” என்றபடி முன்னே ஓடிச்சென்று பஸ்ஸில் ஏற,

பின்னால் ஓடிவந்து பஸ்ஸில் ஏறிய இருவருக்கும் ஏக குஷி… விக்கி மட்டும் சிறு பயத்துடன் நண்பனை பார்த்திருந்தான்… ஆனால் கவியோ தன் வேலையை கடமை சரித்திரமாக பார்த்திருந்தான்…

பூங்குழலியும், கனியும் அதே பஸ்ஸில் காலேஜ் செல்ல ஏறியிருந்தனர்… அவர்களுக்கு இருவர் அமரும் இருக்கையில் சீட் இருக்கவும் அமர்ந்துக் கொண்டனர்…

அமர்ந்ததும் கனி அவசரமாக, “புள்ள அந்த கார் காரர் யாருனுட்டு கேட்டியே… நேத்து பக்கத்து தெரு சரோஜா அக்கா வந்து பேசிட்டு இருக்கேல கேட்டேன் விஷயத்த… அவிக….”என்று கூறும் முன், பூங்குழலி நிதானமான குரலில்

“பெரியவரோட வாரிசு…” என்றதும் அதிர்ந்து போனாள் கனி…

“உனக்கு முன்னமே தெரியுமா புள்ள…?”

“ம்ஹும்… தெரியாது … இப்பதேன் பார்த்த பின்னாடிதேன் தெரியும்,.. “என்று அதே பொறுமையோடு பதில் சொன்னவளின் பார்வை பஸ்ஸை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருந்தவர்களை தான் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தது…

பஸ்ஸில் ஏறியதும், கம்பியை பிடித்தபடி தன்னையே பார்த்திருந்த கவியை பூங்குழலியும் இமைக்காது பார்த்திருந்தாள்… அப்பொழுது பஸ்ஸில்,

கண்ணும் கண்ணும் மோதிய வேலை 

சில நொடி நானும் சுவாசிக்கவில்லை 

கடவுள் பார்த்த பக்தன் போலே 

கையும் காலும் ஓடவில்லை 

பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் 

உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் 

தேவதையும் பேருந்தில் வருமா 

கனவா நனவா தோன்றவுமில்லை 

நல்லவேலை சிறகுகள் இல்லை 

நானும் அதனால் நம்பவில்லை 

நெற்றி என்ற மேடையிலே 

ஒற்றை முடியை ஆடவிட்டால் 

ஒற்றை முடியில் என்னை கட்டி 

ஊச்சி வெயிலில் தூக்கிலிட்டால் 

மனதில் இதனை ரணமா? 

அட வழியில் இதனை சுகமா? 

அடடா அடடா அடடா அடடா 

பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட 

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் 

இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே …..

என்று வரிகள் ஓட, இருவரது பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தது… அவனது பார்வையோ தேவதையை கண்ட பக்தன் போல காதலை கண்களில் தேக்கி வைத்து பார்க்க, அவளோ வில்லனை பழிதீர்க்கும் வெறியில் பார்த்திருந்தாள்….

தொடரும்…..

Advertisement