Advertisement

மெல்ல சன்னிதானத்தை நோக்கி நடக்க தொடங்கியவளை கண்களால் பின்தொடர்ந்தான் கவி…. ஆயிரம் சண்டை வந்தாலும் தன்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்திடாத மனைவியின் மேல் மையல் வராது இருப்பது கடினமே… இவள் தன்னை மேலும் மேலும் கவர்ந்து தன்னை அவள் கடிமை ஆகுக்குகிறாள் என்று புரிந்துக்கொண்டான் கவி…. 
அதுவும் ஒருவித சுகத்தை அவனுக்கு கொடுக்க, சிரித்தபடி அவளை பின்தொடர்ந்தான்… அவள் அருகில் சென்று அவளது கரம் பிடித்து தடுத்து நிருத்தியவன், “என் அத்த வீட்டுக்கு யாரும் என்னை அழைக்கணும்னு அவசியம் இல்ல… எனக்கு உரிம இருக்க வீட்டுல யாரும் அழைச்சு போகணும்னு நிலை எனக்கு இல்ல…என்றவனை கண்கள் விரிய பார்த்து வைத்தாள்… 
கவி மேலும், “இப்ப கோவமா விலகி நிக்குறது இந்த முட்டக்கண்ணி தான் … அதுனால தான் மேடம்க்கு அழைப்பு விடுத்து இருக்காங்க…என்றதும் குழலி
நெசமாலுமா….?” என மீண்டும் கேட்க
உனக்கு சந்தேகம்னா அங்க வீட்டுக்கு போனா புரிஞ்சுட போகுது…என்றதும் குழலி முகத்தில் மகிழ்ச்சியை கடந்து அத்தனை நிம்மதி உண்டானது…
அதன்பின் இருவரும் கடவுளை தரிசித்து விட்டு வந்து நிழல் மண்டபத்தின் கீழ் அமர்ந்தவர்களுக்கு மனம் முழுவதும் நிறைந்திருக்க, நினைவுகள் யாவும் பின்நோக்கி நகரந்தது… 
………………………….
திருவிழாவில் கவியழகன் கொடுத்த காஜலோடு கவியின் எண்ணங்களில் மிதந்தபடி துள்ளிகுதித்து வந்தவள், வீட்டினுள் நுழைய, அப்பொழுது வீட்டு முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்திருந்த பாட்டியையும் அருகில் அமர்ந்து தாணியத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்த அன்னையையும் கண்டவள் அமைதியாக நின்றுவிட்டாள்…, அவர்களை நோக்கி கால் எடுத்து வைக்க போகையில், வசுந்தரா
ஆத்தா… இந்த புள்ளைக்கு பக்கத்தூருல இருந்து ஒரு ஜாதகம் வந்திருக்கு, பேசிடலாம்னுட்டு இருக்கேன்… நீரு என்ன சொல்லுதீக….?” என கேட்கவும் குழலியின் தலையில் இடிவிழுந்தார் போல் ஓர் உணர்வு, காதலை உணர்ந்து சில மணிதுளிக்கள் கூட கடந்திருக்க வில்லை அதற்குள் இப்படியா என்றிருந்தது குழலிக்கு…
என்னவே கூறுக்கெட்ட தனமா பேசுதா… எம் பேத்திய என்னதுக்குவே அசலூருல கொடுக்கணும்… அத்தேன் அவளுக்கு மொறபையன் இருக்கானே…பொறவு என்ன…?” என கேட்கவும், குழலியின் முகம் சட்டென மலர, வசுந்தராவின் முகம் யோசனையில் ஆழ்ந்தது… 
பின், “இல்ல ஆத்தா… அது தோதுப்பட்டு வராது…என்றிட குழலிக்கு வயிற்றுக்குள் சொல்ல முடியாத ஓர் உணர்வு… எங்கு காதல் கைகூடாதோ என்னும் பயத்தில் உண்டான உணர்வு…. 
ஏம்டி அப்படி சொல்லுத… என்ற பேரன் மேல நம்பிக்க இல்லையாக்கும்…?” என முகத்தை தீவிரமாக்கி கேட்க
ஆத்தா… உம்ம பேரன விட என்ற மருமவன் மேல கொள்ள நம்பிக்க வச்சுருக்கேன்…என்க
பொறவு என்னவாம்…?” என்று செல்லதாயி கேட்கவும்
வேண்ணாம் ஆத்தா  இது செரிப்பட்டு வராது ஆத்தா… உம்ம மவனுக்கு என்னைய கண்டாலே ஆகாது… கூட பொறந்தவள கூட காசு கண்டு வெலக்கி வச்சுருச்சு… இதுல எம் மவள அவீக வூட்டுக்கு மருமவளா எப்படி ஏத்துக்குவாக…என்றவரை ஆழ்ந்து பார்த்தார் செல்லதாயி, இதை கேட்டுக்கொண்டிருந்த பூங்குழலிக்கு பொட்டில் அரைந்தார் போல் உண்மைநிலை விளங்கியது… 
அதிலும் இத்தனை வருடம் முருகவேலை வரும் போதும் போகும் போதும் வம்பிழுத்து வம்பை வளர்த்து வைத்திருக்க, இப்பொழுது எப்படி ஒத்துக்கொள்வார்… அதற்காக தான் செய்ததை தவறு என்றும் அவள் மனது ஏத்துக்கொள்ளவில்லை… தங்களை கஷ்டத்தில் ஆழ்ந்தியவரை வம்பிற்கு இழுத்தாள் அவ்வளவே என்னும் எண்ணம் அவளுள்…
 
ஒருவேலை கவியழகனின் எண்ணம் அவளுள் இருந்திருந்தாலும் தன் சீண்டலை நிறுத்தியிருக்க மாட்டாள் என்பதுதான் அவளது உண்மைநிலை… 
செல்லதாயி, “நீ சொல்லறது வாஸ்த்தவம்த்தேன்… அந்த பையனுக்கும் நம்ம புள்ள மேல ஆச இருக்கும்னுட்டு நெனைக்குத்தேன் வசு… அவசர பட்டு முடிவ எடுத்துபுடாத என்னத்துக்கும் இந்த சிறுக்கிட்ட ஒத்த வார்த்தைய கேட்டுக்கோ…” 
எம்பொண்ண பத்தி எமக்கு தெரியும் ஆத்தா… நாங் சொல்லுற பையனத்தேன் அவ கட்டிகிடுவா… அவ மனசு தொடைச்சு வச்ச குத்துவிளக்கு ஆத்தா…என்று சற்று பெருமையாக சொல்ல செல்லதாயிக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை…
அன்று கனி வீட்டு விஷசத்தில், படியின் அருகில் இருவரது நெருக்கத்தையும், கவியை தள்ளி விட்டு திரும்பி நடக்கையில் அவளது முகத்தில் தோன்றிய புன்னகையும் செல்லதாயிக்கு வேறு கதை கூறியது… 
ஆனால் அதை இப்பொழுது பேசி நிம்மதியை குலைக்க அவர் விரும்பவில்லை… இப்பொழுதே ஒன்றும் திருமணம் நிச்சயம் ஆக போவதில்லையே என்னும் மெத்தனத்தில் அவர் அமைதியாகி விட, அதுவே குழலிக்கு பெரும் பிரச்சினை ஆகி போனது…
இது அத்தனையும் கேட்ட குழலிக்கு உள்ளுக்குள் என்னவோ போல் ஆனாது… அன்னையின் நம்பிக்கையை நாம கெடுத்து விட்டோம் என்று குற்றணர்வு அவளுள் எழ தொடங்கியது பூதாகரமாய்… 
கவியின் மீது புதிதாக உண்டான காதல் அன்னையின் பாசத்தில் மறக்கடிக்க முயன்றது… காதல் அத்தனை எளிதில் மனதை விட்டு விலகிவிடாத ஒன்று என பேதையாள் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை… 
அன்னையின் நம்பிக்கையை காப்பாற்ற முடிவெடுத்தவள் அவனை மனதில் இருந்து அகற்ற எண்ணி இரண்டு நாள் பிராய்ச்சித்தவளுக்கு தோல்வியே மிஞ்சியது… 
ஒன்றை மறக்க நினைக்கும் போதுதான் அதன் எண்ணம் உள்ளுக்குள் தீயாக பரவுமாம்… அதுதான் குழலியின் விஷயத்திலும் நிகழந்தது… 
வேதனையுடன் வலம் வந்தவள் ராசுவின் கையில் சிக்கி, பின் பஞ்சாயத்து கூடியது குழலியின் திறமையில்…. அவளது எண்ணமெல்லாம் செய்த தவறுக்கு தங்களது நிராதரவான நிலைக்கு காரணமான முருகவேலை அன்னையிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பது தான்… 
தனக்கும் கவியழகனுக்கும் திருமணம் நடக்க போவதில்லை என்று அன்னையின் பேச்சில் உணர்ந்தவள் அதை ஓரம் தள்ளிவிட்டு நியாயம் வேண்டி கவியழகனை வைத்து முருகவேலை பஞ்சாயத்திற்கு அழைத்து நான்கு வார்த்தைகளை நெறுக்கென்று கேட்டதே அவளது முதல் வெற்றி…
 
பின் மன்னிப்பு வேண்ட வைக்க வேண்டும் என்று எண்ணி அதை அடுத்து அமல் படுத்த அடியெடுத்து வைக்க, ஜெயசீலன் திருமணத்தை பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்பி விட்டார்…
காதல் கைகூடாது என்று எண்ணியவளுக்கு திருமணம் என்றதும் காதலில் சிக்கியிருந்தவளுக்கு மனம் தவியாய் தவித்து என்ன செய்வது, என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை… சரியாக அந்நேரம் முருகவேல் மகனுக்கு வேறு சம்பந்தம் பார்த்திருப்பதாக கூறவும், குழலி முடிவே எடுத்து விட்டாள் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்னும் தோரணையில்… 
ஆனால் இதில் அவள் எதிர்பார்க்காத இரெண்டு விஷயம் ஒன்று கவி சம்மதம் சொன்னது பின் எந்த முன்பேச்சும் இன்றி ஜெயசீலன் மாமா திருமணத்தை பற்றி பேசியது… 
பின்நாளில் கணவனது புரிதலில் அவனது காதலை புரிந்துக் கொண்டவள்… ஜெயசீலன் திருமணத்தை பற்றி பேச காரணமும், பாஞ்சாயத்து முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின் அறிந்து கொண்டாள்… 
ஒருவகையில் இந்த வாழ்க்கை அவரால் அமைந்தது என்று எண்ணுகையில் அத்தனை நன்றியுணர்வு அவளுள்… 
அன்று பாஞ்சாயத்து முடிந்து வீட்டிற்குள் வந்த குழலிக்கு அத்தனை பயமாக இருந்தது… இன்னைக்கு உமக்கு நல்ல பூச இருக்குடி புள்ள… எந்தன அடிச்சாலும் தாங்கிக்க வேற வழியில்ல எதுத்து மட்டும் பேசிபுடாதடி… என்றெண்ணியபடி வந்தவளுக்கு இருவரது அமைதியும் அவளை ஏதோ செய்தது… 
சில பல மணி நேரம் பொறுமை காத்தவளால் அதற்கு மேல் முடியவில்லை… மெல்ல அன்னையிடம் சென்றவள்
ஆத்தா… ஆத்தா….என்று தயங்கி தயங்கி அழைக்க, வசுந்தராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை… அவர் அவருடைய வேலையில் கவனமாக இருக்க, குழலிக்குதான் என்ன செய்வது என்று புரியவில்லை…
சிறிது நேரம் அன்னையின் பின்னேயே அழைத்துக்கொண்டு சுத்தியவளுக்கு லேசாக கோபம் தலைதூக்க தொடங்கியது… 
ஆத்தா… இப்ப பேச போறீயளா இல்லையா…?” என்று சற்று குரலை உயர்த்த வசுந்தரா ஒருமுறை திரும்பி வெற்று பார்வை பார்த்தவர் மீண்டும் தன் வேலையை தொடர, குழலிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது…
என்ன நெனப்புல இருக்கீக ரெண்டு பேரும்….?” என பாட்டி, அன்னை இருவரையும் பொதுவாக பார்த்து குரலை உயர்த்தி கேட்ட வேலையில் அவர்களது பின் வாசல் வழியாக மெதுவாக உள்ளே நுழைந்தான் கவி… 
யாரையும் அறியாமல் குழலியை சந்தித்து பேசிவிட்டு வந்துவிடலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு குழலியின் கேள்வியும் கேட்ட தோரணையும் சூழ்நிலை சரியில்லை என்பதை நன்கு உணர்த்தியது அவளுக்கு… 
இப்ப என்னத்த ஆகி போச்சுன்னுட்டு ரெண்டு பேரும் ரொம்பத்தேன் பண்ணுதீக…?” கேட்டவளை பார்த்து வசுந்தரா…
என்னத்த ஆகி போச்சா…? திமிரெடுத்தவளே, பண்ணுறதையும் பண்ணிப்புட்டு எகத்தாலமா கேள்விய வேற கேட்குதீயோ…?” என வெகு நேரம் கழித்து வாய் திறந்தார் வசுந்தரா…
அப்படி என்னத்தேன் பண்ணிப்புட்டேன்னுட்டு இப்படி மொகத்த திருப்பிட்டு போறீக… உங்களையும் என்னையும் தண்ணீ தெளிச்ச விட்டுபுட்ட மனுஷனுக்காக எங்கிட்ட சண்டைக்கு நீக்குதீய…?” என ஆவேசமாக கேட்க, வசு
வாய அடுக்குடி சிறுக்கி… உன்னைய நாங் ஒழுங்கா வளக்காம தப்பு பண்ணிப்புட்டேன் அத்தேன் இப்படி வந்து நிக்க எங் மானத்த வாங்கி… ஆரு மேல இருக்க கோவத்த ஆரு மேல காட்டியிருக்க…? எம் மருமவன் என்ன தப்பு பண்ணுனானு அவனையும் ஓங்கூத்துல இழுத்துவிட்ட, சொல்லுவே….என கத்த, குழலிக்கு உள்ளம் ஏனோ கனத்தது… 
அதன் வெளிப்பாடாக, “அப்ப என்னையவிட அவீகத்தேன் உங்களுக்கு முக்கியாம போயிட்டாகளா…?” என கேட்ட விதத்தை அங்கிருத்த இருவரும் கவனிக்கவில்லை என்றாலும் கவியழகன் கவனித்தான் புருவம் சுருக்கி… 
வசுந்தரா, “ஆமா அப்படித்தேன் இப்ப அதுக்கு என்னவே… எம்மருமவன பத்தி எனக்கு நல்லா தெரியும்டி… அவங் தங்கம்… உன்னைய போய் இப்படி வளத்து வச்சுருக்கேன் பாரு என்னைய சொல்லணும்…என வசுந்தரா சொல்லும் போதே, செல்லதாயி
இங்குட்டு பாரு டி… எம்மவன் தப்பு பண்ணாந்த்தேன் அதுக்குத்தேன் நீ அவனைய காணும் பொழுது மூச்சுடும் அவனைய போட்டு படுத்தி எடுக்க… அத்தோடு நிறுத்தியிருக்கணும் டி… அதைய உட்டுப்புட்டு எம் பேரன என்னத்துக்கு டி இதுல இழுத்து உட்ட…?”என கேட்க குழலி பதில் கூறாது இருவரையும் மாற்றி மாற்றி பார்த்திருந்தாள் வெறுமையாக…
அவளது எண்ணமெல்லாம், ‘பொறந்ததுல இருந்து கூட இருக்க என்னைய விட இப்ப புதுசா முளைச்ச பேரன் ஒசத்தியா போச்சுல….என்பது தான்… 
வசு, “நீ பண்ண கிறுக்கு தனம்ல இப்ப எம் மருமவன் வாழ்க்கத்தேன் போச்சு… பாவம்… உன்னைய காட்டிகிட்டு என்ன பாடு பட போகுதோ…என்னும் போது ஜெயசீலன் வீட்டினுள் நுழைந்தார்…. 
வெறுமையான குழலியின் பார்வை, கோவமான செல்லதாயின் பார்வை, உக்கிரமாக குழலியை முறைத்துக்கொண்டிருந்த வசுந்தரா என அனைத்தையும் கண்டவர் எளிதில் சூழ்நிலையை அறிந்துக்கொண்டார்….
என்ன வசு… எதுக்கு புள்ளைய மொறைச்சுட்டு நீக்குறவ…?” என ஜெயசீலன் கேட்கவும்
மொறைக்குறதா… கொன்னு போட்டுற வெறில இருக்கேன் இந்த கூறுக்கெட்டவ பண்ண ஜோலில…என கோபத்தில் கத்த
ஜெயசீலன், இறுகிய குரலில்வசு….என கத்த அவர் அடங்குவதாய் தெரியவில்லை… 
என்ன பேசுத்தேன்னுட்டு தெரிஞ்சுத்தேன் பேசுதியா…? ஒத்த புள்ளைய பெத்துவச்சுகிட்டு என்ன வார்த்தைய சொல்லுத… புத்தி பிசங்கி போச்சா…என அதட்டவும் சற்று அடங்கிய வசு
பொறவு என்ணணே இந்த கூறுக்கெட்டவ பண்ணியிருக்க காரியத்துக்கு…என வேதனையோடு வார்த்தையை முழுங்க, கண்களால் வசுவை அடக்கினார் ஜெயசீலன்… 
தலைகுனிந்து அன்னையின் கொல்லும் வெறி…என்னும் வார்த்தையிலேயே அவளது மனம் சுழன்றுக்கொண்டிருத்து… அப்பனா இவீகளுக்கு நாங் முக்கியம் இல்லாம போயிட்டேன்…என்று மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்… 
அப்பொழுது ஜெயசீலன் அவளது தலையை மென்மையாக தடவ, திருவிழாவில் தொலைந்த குழந்தையின் மிரண்டு தவிக்கும் பார்வையில் ஏறிட்டு பார்த்தாள் குழலி… பெற்ற மகளை போல் வளர்த்த அந்த மாமானுக்கு அந்த பார்வையின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியவில்லை… 
உள்ளாற போ கண்ணு… எதைய பத்தியும் யோசிக்காத… அம்புட்டும் நல்லாதத்தேன் நடக்கும்… போ தாயி… போய் கொஞ்சம் படுத்து ஓய்வெடு….என கனிந்த குரலில் பேச, அவரையே இமைக்காது பார்த்து நின்றாள் குழலி… 
அப்பொழுது செல்லதாயி, “எம்பேரன் மானத்த கூறுப்போட்டு வித்துப்புட்டு இங்குட்டு மகாராணி ஓய்வெடுக்காததுத்தேன் கொற…. அம்புட்டும் நேரம்…என முகத்தை தோளில் இடித்து கொள்ள ஜெயசீலன் தன் பார்வையால் தன் விருப்பமின்மையை காட்டியவர், குழலியின் புறம் திரும்பி
அவள் தோள் தொட்டு திருப்பி, “போ தாயி… நாங் அம்புட்டையும் பார்த்துகிடுத்தேன்… வெசன படாம கண்ணாலத்தைய மட்டும் யோசன பண்ணு போ….என அனுப்பி வைக்க, குழலிக்கு உள்ளுக்குள் வேதனை தாங்க முடியவில்லை அன்னை பாட்டி இருவரின் பேச்சிலும்…. 
தலையை குனிந்தபடி அறைக்குள் சென்று மறைய, அனைத்தையும் ஒளிந்திருந்து பார்த்திருந்த கவியழகனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது… அவள் ஏன் இவ்வாறு நடந்துக்கொண்டாள் என்று புரிந்துக் கொண்டவன் ஏன் அதற்கு தன் காதல் அவமான படுத்த வேண்டும் என்ற கேள்வியை அவளை பார்த்து கேட்கத்தான் வந்தான்…
ஆனால் இவ்வாறான சூழ்நிலையை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை… தன் மேல் இருவரும் இத்தனை பாசம் வைத்திருப்பதை நினைத்து கர்வம் கொள்வதா அல்லது பெற்றெடுத்த மகளை வார்த்தையால் வதைத்த  இருவருரையும் எண்ணி வேதனை கொள்வதா என்று குழம்பி போனான்…
என்ன வசு இப்படி பேசிப்புட்ட… என்னாச்சு உமக்கு…?” என கண்டிப்பான குரலில் கேட்க, சட்டென கண்கள் கலங்கி விட்டார் வசுந்தரா… 
முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டு, முற்றத்தில் அமர்ந்தவர், “என்னைய என்ணணே பண்ண சொல்லுதீக… இவ பண்ணி வச்ச கூத்துக்கு என்னைய என்ன பண்ண சொல்லுதீக… சிறுசுல இருந்து ஏதோ எம்மேல இருக்க பாசத்துல இப்படி வம்பு பண்ணிட்டு திரியுறான்னுட்டு இருந்தேன்… ஆனா இன்னைக்கு இவ பண்ணியிருக்க ஜோலி லேசுபட்ட காரியமா சொல்லுங்க… இவளைய அங்கன கட்டி குடுத்துப்புட்டு என்னால இங்குட்டு நிம்மதியா இருக்க முடியுமா…?” என மீண்டும் கண்ணீர் வடிக்க, ஒரு தாயாய் அவர் தேவனை கொண்டார் இப்பொழுது
அதுக்குனுட்டு இப்படியா…?” என கேட்கும் போது
பொறவு என்னணணே… கவியழகன் எம் மருமவன் சம்மந்தமே இல்லாம அவன் மானத்தையே வாங்கிப்புட்டா… அந்த புள்ளையே பல வருஷங்களிச்சு இப்பத்தேன் ஊர் பக்கம் வந்திருக்க அதைய போய் இப்படி பண்ணிப்புட்டா அந்த புள்ள மனசு என்ன பாடுபடும்…என்ற வேதனையில் பெருமூச்சுவிட
இம்புட்டு நடந்த பொறவு, இவ அந்த வூட்டுக்கு போன அவிகத்தேன் நிம்மதியா இருப்பாகளா இல்ல இவத்தேன் சந்தோஷமா இருப்பாளா… நீங்களே சொல்லுங்க அண்ணே…?” என கேள்வியை அவர் புறம் திருப்ப
நிதானமாக வசுவை ஏறிட்டு பார்த்த ஜெயசீலன், “இங்குட்டு பாரு வசு… நீ சொல்லுறது அம்புட்டையும் ஏத்துக்கிடுத்தேன்… அதே போல நாங் சொல்லுறதையும் நீ ஏத்துக்க முயற்சி பண்ணு…என ஒருமுறை அவர் முகத்தை தீர்க்கமாக பார்த்த சீலன், மேலே தொடர்ந்தார்
புள்ளைங்க ரெண்டும் ஒருத்தர் மேல ஒருத்தர் இஷ்டமா  இருக்குதுங்க… இதைய நான் வூட்டுல விஷேசம் வச்சிருந்தப்ப எங்கண்ணால பார்த்தேன்…என நெஞ்சை தடவிக்கொண்டவர்
மொத அந்த பைய நம்ம பொண்ணுகிட்ட ஏதோ வம்பு பண்ணுதான்னுட்டுத்தேன் நினைச்சேன் பொறவுத்தேன் நம்ம புள்ள மொகத்துல இருந்த சந்தோஷத்த பார்த்து சந்தேகம் வந்து அமைதியானேன்…என்னும் போது கனிமொழி வீட்டினுள் நுழைந்துக் கொண்டிருந்தாள்… 
அவளை கண்டதும் செல்லதாயி, தன் மனதில் இருந்ததை ஜெயசீலனும் பார்த்திருப்பதை கண்டு சந்தேகம் கொண்டவர் இவள் மூலம் உறுதி செய்ய நினைத்தார்…
எங்குட்டு பாருடி அடியேய்… இந்த சிறுக்கியும் எம்பேரனும் விரும்புதாகளா…?” என பட்டென கேள்வியை கேட்டுவிட, கனிமொழிதான் பேய் முழி முழிக்க வேண்டியதாய் போயிற்று… 
வசமாக வந்து சரியான தப்பான நேரத்தில் மாட்டிக்கொண்டோம் என்று எண்ணியவள் மெல்ல விழியை உருட்டி தந்தையை பார்க்க, அவரோ அவளது பதிலுக்காக காத்திருப்பது புரிந்தது… 
வசமா சிக்கிட்ட டி புள்ள… போச்சு இப்ப என்னத்த பண்ணுறது…என்று யோசிக்கும் போதே, செல்லதாயி தன் கட்டை குரலில் மீண்டும் உரும, பயந்து போன கனி தயங்கி தயங்கி
செரியா தெர்ல ஆச்சி… அண்ணனுக்கு ஆசத்தேன் போல, இன்னும் இந்த புள்ளத்தேன் ஒன்னும் சொல்ல காணோம்… ஆனா இவளுக்கும் ஆச இருக்குறாப்புலத்தேன் தெரியுது…என தன் கருத்தை சொல்ல, ஜெயசீலன் வசுவை பார்த்தாயா…என்னும் தோரணையில் பார்த்து வைத்தார்… 

Advertisement