Advertisement

கவிக்கு, ‘சே… கோவிலுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன தப்பு தப்பா நினைச்சுகிட்டு…லூசா டா நீ…. என தலையை கோதி உள்ளுக்குள் அசடு வழிந்தான்…
சே… ஒழுங்கா ஒட்கார்ந்து இருக்க வேண்டியதுத்தேனே புள்ள… இப்ப பாரு எப்படி ஆயிப்போச்சுன்னு…இறங்கி அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவள் தன் பையின் நுனியை நோண்டிக்கொண்டிருந்தாள் பதட்டத்தில் உண்டான வெட்கத்தோடு… 
அவளை பார்த்தபடி வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நின்றவன் கண்களிலும் இதழிலும் அப்படிஒரு விஷம புன்னகை தவழ்ந்தோடியது… 
ஆனால் அதெல்லாம் அவளது முதுகுக்கு பின்தான், இறங்கி வந்தவன்வா போலாம்… டைமாச்சு…என்றபடி வந்து அருகில் நிற்க, வெட்கத்தில் தலை கவிழ்ந்து நின்றிருந்தவள் அவன் அழைக்கவும், ‘ஙே…என நிமிர்ந்து பார்த்து ஒரு முறை இமைகள் மூடி திறந்து அவனை ஓர் அர்ப்பபிறவி போல் பார்த்து வைத்தாள்… 
அவளது பாவனைக்கான அர்த்தம் கவிக்கு புரிந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை… உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன் வெளியே முகத்தை ஒன்றும் அறியாததை போல் வைத்திருந்தான் அந்த காதல் கள்வன்…எதுக்கு இப்படி மூஞ்சையே பார்த்துட்டு இருக்க… சீக்கிரம் வா போலாம்…என கைபற்றி கோவிலுள் இழுத்து சென்றவன், வலது கையால் தன் மீசையை முறுக்கி கொண்டான் கம்பீரமாக…
 
அடுத்து என்னவாக போகிறது என்று தெரியாமல் , மனதினுள் என்ன இவீக ஒன்னும் நடக்காதயாட்டம் சுழுவா பேசுதாக… நமக்குத்தேன் கோட்டி தனமா ஏதாச்சும் தோணுதா உள்ளுக்குள்ள…?’ என வாயில் விரல் வைத்து யோசித்துக்கொண்டே கணவன் இழுப்பிற்கு தன் கையை கொடுத்துவிட்டு, யோசனையோட சென்றாள் குழலி… 
சட்டென கவி நிற்கவும், தன்னுள் ஏதோ யோசனையோடு சென்றுக்கொண்டிருந்தவள் அவன் முதுகில் முட்டி நின்றவள்,
ம்ப்ச்ச்…என சலிப்போடு அவனை நிமிர்ந்து பார்க்க, அவனது பார்வையோ வேறு எங்கோ நிலைத்திருந்தது… குழலி என்னாச்சு…?’ என்று எண்ணியபடி அவனது பார்வை நிலைத்திருந்த இடத்திற்கு மெதுவாக நகர, அங்கு படியில் அமர்ந்திருந்த செல்லதாயி, வசுந்தராவின் மீது படிந்து அதிர்ந்து நின்றாள்… 
திருமணத்திற்கு முன்பு வீட்டில் தங்காமல் ஊரை சுற்றிக்கொண்டிருந்தவள், திருமணத்திற்கு பின் வீட்டை விட்டு படி தாண்டவில்லை… கல்லூரியில் இருந்து வருபவள் நேரே அவளது சைக்கிள் வந்து நிற்கும் இடம் வீடு தான்… 
காலையும் மாலையும் வெயியே வருபவளின் கண்ணில் இதுநாள் வரை வசுந்தரா பட்டதில்லை… ஆனால் வசுந்தரா செல்லதாயி பற்றி விசாரித்து தெரிந்துக்கொள்வாள் கனிமொழியின் வாயிலாக…
ஏனோ அவர்களை பார்க்க ஒருபுறம் பயமாக இருந்தது குழலிக்கு… அன்று அத்தனை கெஞ்சியும் தன்னிடம் பேசாத தன் பாட்டி, தாயை நினைத்து மனம் கலங்கியவளுக்கு, ஒருவார்த்தை கூட தன்னை ஆசிர்வதிக்கவில்லையே என்னும் வருத்தம் அவளுள்…. அது ஒருவகை கோபமாக அவளுள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக்கொண்டிருந்தது… 
அது முழுவதும் உருபெறும் முன், கவி அவர்கள் முன் நிருத்தியிருந்தான் குழலியை… அவளது பார்வையை கண்டவன் மெல்லிய குரலில், அவள் காதருக்கில்போய் பேசு….என்றிட, திகைத்து திரும்பி பார்த்தாள்… 
எதுக்கு டி இப்படி முட்டக்கண்ணை விரிச்சு பார்க்குற…?” என்று கேட்டவனை வேதனையோடு நிமிர்ந்து பார்த்தவள்
வேண்ணாங்க… அவீகளுக்கு இப்ப எம்மேல பிரியமில்ல… வாங்க வூட்டுக்கு போவலாம்…என்று திரும்பியவளை கணவனது வார்த்தைகள் தடை செய்தது… 
கேள்வியாக அவனை திரும்பிய வாக்கிலேயே முகத்தை மட்டும் திருப்பி பார்க்க, கவியோஎன்ன அப்படி பாக்குற… நீ சைலன்டா நிக்குறத பார்த்தா அப்படிதான் போல… வெளிய தான் பெருசா வீராப்பு பேசிட்டு சுத்துறது உள்ளுக்குள் அவ்வளவு பயம்… பயந்தாங்கோலி…என்று கேலி பேசி குழலியை சரியாக தூண்டிவிட்டான்… 
என்ன… என்ன சொன்னீக… நாங் பயந்தாங்கோலியா… நாங் ஒன்னும் அப்படி இல்ல…என்று அவனை பார்த்து முறைத்து நிற்க,
 
அப்ப போய் பேசு… எதுக்கு வீட்டுக்கு போகணும்னு சொல்லுற… உன் பாட்டி, உன் அம்மா அவங்களை கூட உன்னால கன்வீன்ஸ்(convince) பண்ண முடியாதா…?” என்றிட, குழலி தனிந்த குரலில்
அவீகளுக்கு இப்ப நாங் முக்கியம் இல்லாம போயிட்டேன்…என்றவளை பார்க்க மனம் கனத்தது கவிக்கு… 
அவளையே விழியெடுக்காது பார்த்தவன், மெல்ல அவள் அருகில் வந்து இருகரம் பற்றி , விழிநோக்கிஉங்க அம்மா அன்னைக்கு பண்ண தப்ப இன்னைக்கு நீ பண்ணாத…என்று தனிந்து பேசியவனின் வார்த்தை புரியாது தலை நிமிர்ந்து அவனை பார்த்திருக்க, மேலே தொடர்ந்தான் கவி…
அத்த கல்யாணத்துக்கு முன்னாடியே  தைரியமா பேசி இருக்கணும்… இல்லையா அன்னைக்கு அப்பா தப்பு பண்ணப்ப மனசுல இருந்தத தைரியமா பேசி இருந்திருக்கலாம்…. ஆனா எதுவும் பண்ணல அண்ணன்னு கல்யாணத்துக்கு முன்னாடி நம்பி பேசாம இருந்தாங்களோ அதே அப்புறம் துரோகின்னு நினைச்சு பேசாம விலகி போயிருக்கணும்… அண்ணன்னு நினைச்சு உரிமையா சண்டை போட்டு அவங்க பக்க நியாயத்தை கேட்டுருந்திருக்கலாம்… எந்த ஒரு உறவுளையும் சண்டை வரமா இருக்காது அதை மனசுல வச்சுகிட்டு விலகி போனா ஒருகட்டத்துல உறவு அந்து போயிரும் அது பேசுவார்த்தையோ சண்டையோ பேசிட்டா அந்த பிரச்சனைக்கான தீர்வு ஒருகட்டத்துல கிடைச்சுரும்… அன்னைக்கு அத்த பேசி இருக்கணும் இல்ல சண்டையாச்சும் போட்டு இருக்கணும் ஆனா பண்ணல அது அத்தையோட மிஸ்டேக்கும் இல்ல… அத்த அப்படி பட்ட கேரேக்டரும் இல்ல… ஆனா நீ அப்படி இல்லையே ஊரையே பயமுறுத்தி வச்சுருக்க… உங்க அம்மா பண்ணாததை தினம் நம்ம வீட்டுல நீ அப்பாவை வச்சு செய்யுற… அப்படி பட்ட நீ இப்ப பயந்து ஓடுறன்னு சொல்லுறது தான் காமெடியா இருக்கு… அப்ப பூங்குழலினா அவ்வளவு தானா… கல்யாணம் ஆனதும் புருஷனுக்கு பயந்த பொண்டாடியா மாற்றிட்ட அப்படிதானே…?” சீரியஸாக பேச ஆரம்பித்தவன் முடிவில் அவளை வேண்டும் என்றே வார்த்தையால் தூண்டி விட முயற்ச்சித்தான்…
அது சரியாக வேலை செய்தது குழலியிடம், அவனது வார்த்தையை கவனமாக கேட்டுக்கொண்டு வந்தவள் கடைசியாக கூறியதை கேட்டு, “என்னதுஉஉஉ…என தலை நிமிர்ந்து முறைத்து கொண்டே, “ஆரு ஆருக்கு பயந்தது… பிச்சுபுடுவேன் பிச்சு… நாங் ஒன்னும் பயந்து ஓடலவே… அவீக சங்கட பட வைக்க வேண்டாம்னுட்டு நினைச்சேன் அம்புட்டுத்தேன்… அதுக்குன்னுட்டு வாய்க்கு வந்தது அம்புட்டையும் பேசுவீகளோ…?” என கோபமாக கேட்டவள் அவன் பதிலளிக்க வாய் திறக்கும் முன், தன் தோளில் தொங்கி கொண்டிருந்த கல்லூரி பையை கழட்டி அவன் மீது ஏறதாழ வீசியவள், அவனை நின்ற இடத்திலேயே விட்டுவிட்டு பாட்டி அன்னையை நோக்கி நடையை கட்டினாள்….
அன்னையுடன் பேசிக்கொண்டிருந்த வசுந்தரா தன் முன் நிழல் ஆடுவதை கண்டு விழியுயர்த்தி பார்க்க, இடுப்பில் கை வைத்து வேகமூச்செடுத்து விட்டபடி நின்றிருந்த மகளை எதிர்பாராவிதமாக பார்த்ததில் திகைத்து பின் கண்கள் நிறைய அவளது உருவத்தை இதயத்தில் சேமித்து வைத்தார்…. 
பாட்டியோ பேத்தியை கண்டதில் உள்ளுக்குள் அத்தனை குதுக்கலமாக உணர்ந்தவர், ‘கண்ணாலம் கட்டிக்கிட்டு நல்லா பாலிசாத்தேன் ஆயிடா வாயாடி…என பார்வையால் அவளை அளந்துக்கொண்டிருந்தார்…
கலைந்த தலைமூடி சொல்லாமல் சொல்லியது கல்லூரியில் இருந்து வந்திருக்கிறாள் என்று, இதுவரை அரிதாக சுடிதார் அணிந்து பார்த்தவர் வெகுகாலம் கழித்து மீண்டும் பார்க்க அழகாக தெரிந்தாள் அதன் நிறத்தில்,நெற்றி வகுட்டில் குங்குமம், தடிமனான தாலி கயிருடன் ஒற்றை தங்க சங்கிலி குழலிக்கு அத்தனை எடுப்பாக இருந்தது, ஒற்றைக்கையில் ஒருஜோடி முறுக்கிய தங்க வளையல், சற்று பூசினார் போன்ற உடம்பு என அழகு நிறைந்து காணபட்டவளை பார்த்த இருவருக்கும் அங்கு சுகமாக வாழ்கிறாள்..என்று புரிந்தது…. 
இருவரும் தன்னை பார்வையால் அளந்ததை உணர்ந்தவள், “என்ன உங்கே ஆராய்ச்சி முடிஞ்சுதா… நாங் நல்லா சொகமாத்தேன் வாழுத்தேன் நீரு ஆசி கொடுக்காட்டியும்….என்றவளை வசுந்தரா முறைத்து பார்த்தார் என்றால் செல்லதாயி நிம்மதியாக உணர்ந்தார்… 
ஆத்தா பொழுதாச்சு வாங்க போவோம்…என்று வசுந்தரா எழ போக, குழலி சட்டென அவர்களது அர்ச்சனை கூடையில் இருந்து தேங்காயை வெடுக்கென்று கையில் எடுத்தவள்
ஒழுங்கா உட்கார சொல்லு ஆச்சி… இல்ல என்ன பண்ணுவேனுட்டு எமக்கே தெரியாது சொல்லிப்புட்டேன்… நாங் எதையும் அத்தன சுழுவா சொல்ல மாட்டேனுட்டு உமக்கு தெரியும்ல… ஒன்னு ஆரு மண்டையாச்சும் உடைச்சுபுடுவேன் இல்லாட்டி என்னைய நானே ஏதாச்சும் பண்ணிக்கிடுவேன்…என்று மிரட்டவும் அடங்கி விட்டார் வசுந்தரா… 
இவளையே சற்று தொலைவில் அதும் பக்கவாட்டில் நின்று பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் செய்த காரியத்தில் வாயில் கை வைத்து அதிர்ந்து, ‘பாவி இவளைய சமரசம் பேச அனுப்பி வச்சா…நம்மளை இவ ஆம்புலன்ஸ்க்கு கால்(call) பண்ண வச்சுருவா போல…என உள்ளுக்குள் புலம்பியவன் எந்நேரமும் மனைவி யாரை வேண்டுமானாலும் தாக்க வாய்ப்புகள் உள்ளன என்று உணர்ந்து அவளை தடுக்கும் நோக்கோடு தயாராக இருக்க தொடங்கினான்….
பாட்டி,” என்னடி சிறுக்கி எங்களையேவே மிரட்டுத்தியா… ?” என்று கேட்க
ம்ம்ம்… மிரட்டுறதா எனக்கிருக்க கோவத்துக்கு உங்களைய…என பல்லை கடித்தவள் தேங்காய் மூடியை பிடித்து இறுக்கினாள்… 
ஆமா உமக்கு எத்தன மொற சமைச்சு போட்டுயிருப்பேன், நேரம் காலங் பார்க்காம கை கால் புடிச்சு இருப்பேன், சிறுசுல இருந்து நீரு என்னைய கொஞ்சுனத விட திட்டுனதுத்தேன் அதிகம் அம்புட்டையும் பொருத்துகிட்டு உம்பின்னாடித்தேனே நாங் சுத்தி இருக்கேன்… வெவரம் தெரிஞ்ச வயசுல இருந்து உங்கால சுத்தித்தேனே வந்துருக்கேன்…. ஆனா அம்புட்டையும் மறந்துபுட்டு அன்னைக்கு வெறும் பத்து தினத்துங்கு மொந்தி வந்த உம்பேரன் ஒசதியா போச்சுல… உம்பேரன அசிங்க படுத்திபுட்டேன்னு நீரும் உம்மவளும் என்னைய நட்டாத்துல விட்டுபுட்டீகள… இந்த உலகத்துல உங்ரெண்டு பேர தவிர கனியோடு சேர்த்து வேற ஆரு எனக்குன்னுட்டு இருக்கா…? உம்ம பேரன பஞ்சாயத்துல நிக்க வச்சுபுட்டேன்னுட்டு இம்புட்டு கோபடுதீயளே நாங் எங் ஆத்தா இம்புட்டு வருஷம் பட்ட கஷ்டத்துக்கு எம்புட்டு கோப படணும்… ஆனா என்னைய புரிஞ்சுக்காம என்னவெல்லாம் பேசிபுட்டாக உம்மவ, ஆயிரத்தேன் நடந்து இருந்தாலும் மக கண்ணாலத்துக்கு ஆசிக் குடுக்க கூட தகுதி இல்லாதவளா போயிட்டேன்ல…என்றவளின் கண்ணீர் நிற்காமல் வழிய
போவட்டும்… இது அம்புட்டையும் நாங் மறக்க மாட்டேன் சொல்லிட்டேன்… இம்புட்டு நாள்ல ஒருநாள் கூட என்னைய பார்க்கணும்னுட்டு தோணளல…. ம்ம்ம்…என பெருமூச்சு விட்டவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு இருவரையும் ஒருதரம் பார்த்தவள் திரும்பி நடக்க தொடங்கும் சமயம் வசுந்தரா சொன்னதை கேட்டு அத்தனை கோபம் முகிழ்ந்தது குழலிக்கு…. 
வேகமாக திரும்பி பார்த்து அன்னையை முறைக்க, ” என்னவே மொரைக்குத… பேசுற சாக்க காட்டி தேங்க மூடிய தூக்கிட்டு போறவ… உமக்கு வேண்ணும்னா உம் புருஷன்கிட்ட கேட்டு வாங்குறது…என்றபடி முகத்தை வெட்டி திருப்ப, கையில் இருந்த தேங்காய் மூடியை பொத்தென்று அவர்கள் கூடையில் வைத்தாள் குழலி….
டி வசு… இந்த வார இறுதில கோழி அடிச்சு குழம்பு வைக்கணும் இப்பவே சொல்லிபுட்டேன்…என்றபடி கஷ்டப்பட்டு எழுந்து நிற்க, வசுந்தரா
செரி ஆத்தா… கூட இரால் தொக்கும் பண்ணிபுடலாம்…என்றபடி எழுந்து குழலியை தாண்டி நடையை கட்ட, குழலிக்கு கண்கள் கலங்கியது வேதனை தாங்காமல்… 
தன்னை முழுவதும் ஒதுக்கி விட்டதாகவே எண்ணியவளுக்கு வாய் விட்டு ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது… செல்லும் அவர்களை இமைக்காது பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவில்லை… 
மெல்ல மனைவியின் அருகில் வந்தவன் அவளையும் செல்லும் இருவரையும் பார்த்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி, மெல்லிய குரலில், “குழலி….என்றழைக்க, இமைக்காது நின்றிருந்தவள் மெல்ல இமை தட்டி தலை குனித்துக் கொண்டு
அழணும் அத்தான்… என்னைய வூட்டுக்கு கூட்டி போறீயளா…?” என அழுகையை அடக்கி கேட்க, மனம் கனத்தது கவியழகனுக்கு… 
வலி தாங்க மாட்டாள் என்று தெரியும் சிறிதாக அடிப்பட்டாலும் பெரிதாக கத்தி ஒப்பாரி வைப்பாளே ஒழிய, கண்கள் கலங்கவும் செய்யாது கண்ணீரும் வராது ஆனால் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே ஆர்ப்பாட்டம் செய்வாள்… இது இத்தனை நாளில் அவன் பார்த்து அனுபவ பட்ட ஒன்று… ஒருமுறை அதை கேலி பேச கனிமொழி, “இல்ல அண்ணே அவளுக்கு எம்புட்டு வலிச்சாலும் கண்ணுல இருந்து கண்ணீர் மாத்தரம் வராதுண்ணே… இது சின்ன வயசுல இருந்து இப்படித்தேன்… அழுதா அத்த கஷ்டப்படுவாகளோன்னு கண்ணுல தண்ணீயே வர வைக்க மாட்டா… ஆனா சிறுசா அடிப்பாட்டா கூட அவளையால தாங்க முடியாதுண்ணே…என கூறியது நினைவிற்கு வந்தது இப்பொழுது… 
ஒரு பெருமூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், ” ஏய் முட்டக்கண்ணி… இப்ப எதுக்கு இந்த முட்டகண்ணுல தண்ணீ வச்சுட்டு இருக்க… ?” என கேலி பேச, அவனை பாவமாக ஏறிட்டு பார்த்தவள்
பிளீஸ் அத்தான்…என உதடு துடிக்க அவள் கெஞ்சிய விதம் கவியை என்னவோ செய்தது… 
ம்பச்ச்… லூசு…என அவள் மண்டையை தட்டியவன், “உனக்கு வாய் மட்டுத்தேன்…மூளைன்னு ஒன்னு மேல இல்லவே இல்ல…என முகத்தை சுருக்கியவனை அவள் பார்த்த விதம், ‘லூசா நீ…‘  என்பது தான்…
ஏன் இவீக இப்படி பண்ணுதாக… நானே மனவேதனைல இருக்கேன்… இப்ப போய் கேலி பேசுதாக… என எண்ணியவள் அமைதியாக நகர போக, அவளது கரம் பற்றி தடுத்து நிறுத்தினான் கவி…
அவனை முகம் கசங்க ஏறிட்டு பார்க்க, கவிஉனக்கு நாட்டு கோழி குழம்புன்னா புடிக்கும், இரால் தொக்குன்னா உயிரு… அத அவங்க பண்ண போறதா சொல்லுறாங்க அதும் வீக் எண்ட்… உனக்கு புரியலையா…?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி லேசாக புன்னகைக்க, அவனது செயலில் அவன்பால் சாயவிருந்த இதயத்தை இழுத்துபிடித்து மூளையை யோசிக்க, முடிவில் அவளுக்கு புரிந்தது
ம்ம்… எனக்கு புடிக்கும்னுட்டு தெரிஞ்சும் என்னைய வுட்டு அவீக மட்டும் சாப்பிட போறாக… அதைய எம்முன்னாடியே சொல்லிகாட்டி என்னைய கடுப்பேத்திட்டு போறாக…என்ற கூறவும் கவிக்கு எப்படி பதிலளிக்க என்று சுத்தமாக புரியவில்லை…
இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல புரியாம இப்படி சொல்லுறாளா…என்று தாடையை தடவி யோசித்தவன், அவளது வாடிய முகத்தை கண்டு
முட்டக்கண்ணி மேடம் தெளிவா குழம்பி இருக்கா…. அத்த இவ கூட பேசவே மாட்டாங்கன்னு நினைச்சுடே யோசிக்குறா… அதான் இப்படி யோசிக்குறா போல… அறலூசு…என்று எண்ணியவன், அவளது மூக்கை லேசாக பிடித்து ஆட்ட, அதை தட்டிவிட்டாள் குழலி…
ம்ப்ச்ச்… என்ன அத்தான் இது…என முகத்தில் அத்தனை சோகத்தையும் வைத்துக்கொண்டு சிணுங்கியபடி மூக்கை தேய்த்துக் கொண்டாள்… 
மக்கு குழலி… அத்தையும் பாட்டியும் உன்னை விருந்துக்கு அழைக்காம அழைச்சுட்டு போறாங்க…என்று மீண்டும் மூக்கை பிடிக்க, அவனது வார்த்தைகளை கிரகித்துக்கொண்டிருந்தவள் அவன் முன்பு போல் செய்ய வருகிறான் என்று புரிந்து தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் உஷாராக… 
நெசமாலுமேவா அத்தான்….?” என கண்களில் ஆர்வம் பொங்க கவியிடம் கேட்டவனின் பார்வையில் அத்தனை ஏக்கம் நிறைந்து வழிந்தது… 
அதை கவனித்தவன் முகத்தில் அத்தனை மென்மை குடியிருக்க, ‘உள்ளுக்குள்ள எவ்வளவு ஏங்கி இருப்பா… ஆனா இதுவரை ஒருவார்த்தை கூட பேசுனது இல்லயே வீட்டுல… உண்மையா இது வேற மாதிரி பிறவி…என்று சிரித்து வைக்க
இப்ப என்னத்துக்கு சிரிக்குறீரு… ?” 
ம்ம்ம்… ஒன்னுமில்ல… சத்தியமா உனக்கு விருந்து குடுக்க தான் அப்படி பேசிட்டு போறாங்க… நம்பு…என்றவனை முகம் மலர பார்த்தவள், பின் சுனங்கி போக…
 
அவளது அலைப்பாயும் கண்களையும், முக பாவனைகளையும் கவனித்துக்கொண்டிருந்தவனின் கண்ணில் இதுவும் பட, “இப்ப என்ன ஆச்சு முட்டக்கண்ணிக்கு…?” என்று கேட்கவும், அவனை தலை நிமிர்ந்து பார்த்தவள், தயக்கமாக
நாங் மட்டும் எப்படி போவ…? உங்களைய அழைக்களேயே…என உதடு பிதுக்கியவளை கண்டு கவிக்கு காட்டாரு வெள்ளம் போல் காதல் அவளை நோக்கி பாய இருக்க, அதை இடம்பொருள் அறிந்து அடக்கி அமைதிக்காதான்…

Advertisement