Advertisement

UD:35
என்ன புள்ள ஓங்கெண்ணேன் இங்குட்டு நிக்குறாக… என்னவாம்….?” என கனியின் காதை கடிக்க
ம்ம்ம்… எமக்கு எப்படில தெரியும்… நானும் ஓங்கூடத்தேனே வந்துட்டு இருக்கேன்…என்றவளை பார்த்து உதட்டை சுழிக்கவும், தோழியுடன் சேர்ந்து தங்கள் சைக்கிளை நோக்கி நடந்தாள் ஓரகண்ணில் கவியழகனை நோட்டம் விட்ட படி… 
என்னத்துக்கு வந்திருப்பாக… நமக்காகவா இல்ல வேற ஜோலியா இங்குட்டு நிக்குதாகலா…?’ என எண்ணியபடி சைக்கிளின் அருகில் செல்ல
தன் பைக்கின் மீது தோரணையாக சாய்ந்து நின்றிருந்தவன், தான் அணிந்திருந்த கண்ணாடியை ஒற்றை கையால் கழட்டிவிட்டு மறுகையில் இருந்த ஃபோனை தன் சட்டை பையில் போட்டவாரே
அடியேய் முட்டக்கண்ணி….என கத்த, குழலியோடு சேர்த்து அங்கு இருந்த அனைவருமே திரும்பி பார்த்தனர்… 
ஆனால் மறுநொடி தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள் சுற்றி இருந்தவர்கள், காரணம் இவர்கள் இப்படிதான் என்பது அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தது… 
கவி அவ்வாறு கத்தவும், கனிமொழி கலுக்கென்று சிரிக்க, குழலிக்கு உள்ளுக்குள் அப்படியொரு கோபம் வந்தது… 
எம்புட்டு தடவ சொன்னாலும் கேட்க மாட்டீகுது கோட்டி பய… கூறுக்கெட்டவன்… என மனதில் அர்சித்தவள், வேகமாக திரும்பி பார்த்து முறைத்து வைத்தாள் வேக மூச்செடுத்து… 
அவளது முறைப்பையும் கோபத்தையும் துச்சமாக எண்ணியவன், வெகு இயல்பாக, “இங்க வா டி…என அழைக்க
உன்னைய என்ன பண்ணுத்தேன் பாரு…என முனுமுனுத்தவள் அவன் அருகில் வேகமாக சென்று , பைக்கில் சொறுகி இருந்த வண்டிசாவியை உருவ முயன்றாள்…. 
நொடியில் அவளது இருகையையும் பற்றியவன், “ஹே… லூசு என்ன பண்ணுற… விடு… விடுடி…என அவளுடன் மல்லுகட்ட, அவளோ
முடியாதுவே… இதைய புடுங்கி விசாட்டாம விட மாட்டேன்…. நீரு எங்கைய விடும் மொத…என சாவியை பிடுங்குவதில் கவனத்தை செலுத்தியபடி பேசினாள் அவனிடம்… 
கனியோ, ‘ எப்படியும் இப்ப இதைய நிறுத்த மாட்டாக ரெண்டு பேருக்கும்…. ம்ம்ம்…என எண்ணியபடி இருகைகளையும் கட்டிக்கொண்டு சுற்றி முற்றி வேடிக்கை பார்க்க தொடங்கினாள் சாதாரணமாக…. 
ஏய்ய்ய்… கடுப்பேத்தாத அமைதியா இரு… இப்ப எதுக்கு பைக் சாவிய வீசணும்னு அடம்பிடிக்குற… அமைதியா இருடி… லூசு…” 
என்னத்துக்கா…என்ற கேள்வியோடு கோபமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எத்தன மொற நாங் சொல்லி இருப்பேன், என்னைய அப்படி கூப்பிடாதீகன்னுட்டு கேட்குதீகளா… இல்லல… அத்தேன் சாவிய புடிங்கி வீச போத்தேன்…என்று விளக்கம் அளித்தவள் மீண்டும் சாவியை பிடுங்க முயற்சிக்க, கவியோ
அடிங்கு உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா…?இது என்ன அநியாயம் டி…?” என கேட்க
என்ன பேசுதீக கூறுக்கெட்ட தனமா…?” என முகத்தை சுருக்கி சந்தேகமாக கேட்டவளை பார்த்து
அடிங்கு… திமிர் பிடிச்சவளே… வாய ஓடைச்சுருவேன் யார பார்த்து கூறுக்கெட்டவன்னு சொல்லுற…என மிரட்டினான் பொய் கோபத்தோடு… 
அவளோ தோளை குழுக்கி, “உங்களையத்தேன்…என்றதும் அவனது ஒற்றை கைக்குள் அடங்கியது அவளது இருகைகளும்…
மறுகையால் ஓங்கி அவள் மண்டையில் ஒரு கொட்டு வைக்க, அவளோஸ்ஸ்ஸ் ஆஆஆஆ….என கத்த, சட்டென தோழியை திரும்பி பார்த்தாள் கனிமொழி… 
கவி, “வாய் ரொம்ப ஜாஸ்தி டி உனக்கு… நீ மட்டும் என் அம்மாவ மாமியாரே ன்னு கூப்பிடுவ, அப்படி கூப்பிடாதன்னு சொன்னா அது தான் நல்லா இருக்குஒரு நெருக்கம் இருக்குன்னு வாய்கிழிய பேசுனல… அதே மாதிரிதான் என்னுக்கும்… உன்னை முட்டக்கண்ணின்னு கூப்பிடுறது ஒருவகையான கிக், போதை மாதிரி… சோ நான் அப்படிதான் கூப்பிடுவேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ…என்று அவள் கையை உதற, ஓரடி பின்சென்றாள் குழலி… 
விழிகள் படபடவென அடித்துக்கொண்டது என்றால் அவளது இதயம் என்னதென்று உணராத ஒரு இதத்தை உணர்ந்தது காதலில்… அதை அவள் முகம் பிரதிபலிக்க, கவியழகன் அழகான ஒரு புன்னகையில் அதை உள்வாங்கி கொண்டான்… 
ஆனால் இவை அனைத்தையும் ஏக்கத்தோடு பார்த்திருந்த கனிக்கு விக்கியின் காதலை உணர துடித்தது… ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை என்ற உண்மை நிலையை உணர்ந்துக்கொண்டவள், சட்டென தன் விழிகளை மாற்றிகொள்ள கொஞ்சம் கொஞ்சமாக மனதையும் மாற்ற முயன்றாள்….
கவியழகனோ, குழலியை கண்டு ஒற்றை கண்ணை சிமிட்ட, அவளோ திகைத்து சுயத்திற்க்கு வர, ‘அடி அறகிறுக்கி… இப்படியா புள்ள பார்த்து வைப்ப… கோட்டி… கோட்டி…என தன்னை தானே திட்டிக்கொண்டவள், வெடுக்கென்று முகத்தை திருப்பி கொண்டாள் வேறுதிசையில்…
அவளது செயலை கண்டு சற்று சத்தமாக சிரித்தவன், கனியின் புறம் திரும்பிநீ வீட்டுக்கு போ கனி… இந்த லூசு என் கூட வந்துரும்…என்க
செரிணேன்…என மண்டையை ஆட்டியவள், சைக்கிளை எடுக்க போக, குழலி கோபமாக
நாங் வாரேனுட்டு சொல்லவே இல்ல…நீரா எப்படி சொல்லலாம்…? நாங் அவ கூட எங் சைக்கிள்ல போத்தேன்…என திரும்பி நடக்க போனவளின் கரம் பற்றி தடுத்தவன், அவளிடம் ஏதும் பேசாது தங்களை பார்த்துக்கொண்டு போவது வேண்டாமா என சைக்கிளை பிடித்துக்கொண்டு நின்றிருந்த கனியை கண்டு
இவ கெடக்குறா… நீ பத்திரமா வீட்டுக்கு போ கனி…என்க
ஓரடி சைக்கிளை உருட்டியவள், பின் நின்றுநீரும் சூதானமா இருங்க அண்ணே…என குழலியை ஓர் பார்வை பார்த்து சொல்ல, சிரித்து விட்டான் கவி… 
குழலியோ முடிந்த மட்டும் கனிமொழியை முறைத்தவள், ‘நாளைக்கு மறுக்க எங்கிட்டத்தேனே வந்தாவணும் அப்ப பார்த்துகிடுத்தேன் டி.என்று மனதில் கோபமாக சூழுரைத்துக் கொண்டாள் கனியை பார்த்து…
ஆனால் கனிமொழியோ அவள் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காது, அப்படியே திரும்பி சென்றுவிட அதுவும் குழலியை உசுப்பேற்றி விட்டது உள்ளுக்குள்… 
வேகமாக கவியின் புறம் திரும்பி, “என்னத்துக்கு இப்ப எங்கிட்ட வம்பு பண்ணுதீக… விடுக… இப்ப எங்கைய விட போறியால இல்லையா… நாங் வூட்டுக்கு போத்தேன்…என மீண்டும் அவன் பற்றிய தன் கையை விடுக்க போராடியபடி பேச
ம்ம்ம்… அப்புறம்…. நான் மட்டும் இங்கேயே படுத்து தூங்கவா போறேன்….என்றவன், அவளது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று, பிடியின் பலத்தை கூட்டி அவளை ஒருமுறை உழுக்கியவன்,
 
ஓவரா அடம்புடிக்காம என் கூட வா…என்க, ஒருநொடி அமைதியாகி அவன் பேச்சை கேட்டவள் மீண்டும் முரண்டு பிடிக்க, இவனுக்கோ சலுப்பாக வந்தது… 
அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற ஒரு வெள்ளை வேட்டியை கண்டவள், அவரை அழைக்க, அவரோ சந்தேகமாக இருவரையும் ஓர் பார்த்தபடி அருகில் வந்தார்… 
இவ எதுக்கு அவங்களை கூப்பிடுறா… இந்த லூச கட்டி மேய்க்குறது ரொம்ப கஷ்டம் டா சாமி… என எண்ணிக்கொண்டிருக்கையில், குழலி
நீரு பாட்டுக்கு போறீரு… இவீக எங்கைய பிடிச்சு இழுக்காக இந்த அநியாயத்த தட்டி கேட்க மாட்டீகளா…?” என கோபமாக பொரும, கவிக்கோ அப்படியே அவள் பின் மண்டையில் ஒன்றை ஓங்கி போடலாம் போல் இருந்தது… 
இருவரையும் பார்த்த அந்த பெரியவர், “உமக்கு மொத வாட்டி நியாயம் பார்க்க போய்த்தேன் இந்த தம்பி வாழ்க்கைக்கு அநியாயம் பண்ணிபுட்டோம்… இப்ப திரும்பவும் என்னத்த பண்ணும்னுட்டு சொல்லுத….என்று வெடுக்கென்று கேட்கவும், கவிக்கோ அகமும் முகமும் மகிழ்ந்து,
ரொம்ப நன்றிங்க…. இது சும்மா சின்ன விஷயம்தான் நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்…என்று அவரை வழியனுப்பி வைத்தவன், நக்கலாக குழலியின் புறம் திரும்ப அவளோ புசுபுசுவென மூச்சை விட்டு, செல்பவரை முறைத்துக்கொண்டிருந்தாள்… 
ஏழரைச்சனி நேரம் போல அவருக்கு, இனி யார் என்ன செய்ய முடியும்…. ம்ம்ம்… அவளை பார்த்த கவி, “இந்த அசிங்கம் உனக்கு தேவையா…?” என கேட்டிட, இப்பொழுது முறைப்பை அவன் புறம் திருப்ப
சும்மா முறைக்காத… கண் ரெண்டையும் நோண்டிருவேன்… பேசாம வந்து வண்டில ஏறு… கோவிலுக்கு போகதான் கூப்பிடுறேன்… என்னமோ தப்பு பண்ண கூப்பிடுற மாதிரி சீன் போடுற… ஏறு டி பேசாமா…என்று குரலை உயர்த்தியவன், அவளது கையை விட்டுவிட, அவளோ மெல்லிய குரலில்
கோவிலுக்கா…?” என யோசித்தபடி இழுத்து கேட்க
வண்டியில் அமர்ந்தவண்ணம், “ஆமா கோவிலுக்கு தான் வா… வந்து உட்காரு…என
அவன் சொன்னது போல் வண்டியில் அமராமல், “அப்ப எங் சைக்கிளு…என முகத்தை சுருக்க
அடியேய்… ரொம்ப பண்ணுற… நீ ஒன்னும் வர தேவையில்ல போ… ஒங் ஓட்ட சைக்கிள்ல வீட்டுக்கு போய் சேரு…என கடுப்பில் வண்டியை உயிர்ப்பிக்க,
இல்ல… இல்ல… நாங்ணும் வாரேன்… ஆனா சைக்கிளு…என அவசரமாக அவன் வண்டியின் முன் நின்று வழியை மறித்தார் போல் கையை நீட்டி நின்றவள் முகத்தை பாவமாக்கி கேட்க
கவி மனதிற்குள் சிரித்துக்கொண்டான் அவளது செயலில், “அந்த ஓட்ட சைக்கிள்ல யாரும் எடு…என வாக்கியத்தை முடிக்கும் முன்
அது ஒன்னும் ஓட்ட சைக்கிள் இல்ல… அதைய நாங் ஆறாவது படிக்குறப்பத்துல இருந்து வச்சுருக்கேனாக்கும்…என அவசரமாக இடைமறித்து ரோசமாக முகத்தை திருப்பி சொன்னவளின் அழகில் சொக்கி போனான் கவியழகன்…
சரிங்க மேடம்… உங்க சரித்திர சைக்கிள்ல யாரும் எடுக்க மாட்டாங்க… குமார் கிட்ட சொல்லி எடுத்துட்டு வர சொல்லிறலாம்… இப்ப வந்து உட்காருறீங்களா…என்று சொல்லவும் குழலியின் முகம் தெளிந்து சம்மதம் என மண்டையை ஆட்டி வைத்தாள்…
வந்து ஏறு நேரமாச்சு…என வண்டியை உயிர்ப்பிக்க, அமைதியாக ஏற போனவள் பின் ஏதோ யோசனையில் விரல் கடித்தபடி நின்றிருக்க, அவளை திரும்பி பார்த்த கவி
ஏய்ய்ய்… இப்ப என்ன டி…?” என்று சலிப்பில் குரலை உயர்த்தி விட்டான். ஆவளோ முகத்தை பாவமாக்கி தன்னவனை பார்த்து முழிக்க, நெற்றியில் அரைந்துக் கொண்டான் கவி… 
ஒரு இடத்துக்கு உன்னை கூட்டிட்டு போறதுக்குள்ள நான் என்ன பாடுபட வேண்டியிருக்கு…என்று கடுப்பில் பல்லை கடிக்க, “இப்ப என்ன உனக்கு…?” என்று கேட்கவும், உதட்டை பிதுக்கியவள்
அ… அது இந்த படத்துல வ…வராப்புல… நீரு வண்டிய ஓட்டுனா என்னத்த பண்ணுறது…என்றவளை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தான் கவியழகன்…
ஓவரா கணவு காணாத… நாம போறது கோவிலுக்கு ரொமன்டிக் பைக் ரைடு இல்ல… நீ யோசிச்சு முடிவு பண்ணி வரத்துக்குள்ள கோவில் நடைய சாத்திட்டு போயிருவாங்க… நீ வீட்டுக்கே கிளம்பு… பாவம் கல்யாணம் ஆனதுல இருந்து எங்கையும் வெளியே போகலையேன்னு கோவிலுக்கு கூட்டிட்டு போக நினைச்சா ஓவரா பண்ணுற போடி லூசு… நீ எப்படியோ போ எனக்கு என்ன… எனக்கு ஆயிரத்தெட்டு வேல இருக்கு… நான் கிளம்புறேன்…என்று வண்டியை திருப்பினான் கோபமாக… 
இல்ல… இல்ல… நாங் வாரேன்… பிளீஸ்…. பிளீஸ்…என முகத்தை பாவமாக்கி கெஞ்சியவள் அவனோடவே நகர, அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்த கவி
பாவம்னு கூட்டிட்டு போறேன்…. வா வந்து உட்காந்து தொல….என சலிப்பாக முகத்தை திருப்பிக்கொண்டான்….
அவனை பார்த்து வாயில் அலவம் காட்டிவிட்டு, அவனது புல்லட்டில் ஆசையாக அமர்ந்தவள், அவனுக்கும் அவளுக்கும் நடுவில் ஒரு சுவர் எழுப்பும் அளவிற்கு இடைவெளி விட்டிருந்தாள்… அதில் கவிக்கு மண்டை காய்ந்தாலும், இப்பொழுது எதிர்பார்த்தது போல் வேலையாக வேண்டும் என பல்லை கடித்துக் கொண்டு பொறுமையை கடைப்பிடித்தான் அவளிடம்… 
குழலியோ, இரண்டு நிமிடத்தில் அவனது முதுகை சுரண்ட, “ஹே…. இந்த தொடுர வேலையெல்லாம் வச்சுக்காத சொல்லிட்டேன்… எடுடி கைய…என சுல்லென்று விழ, ஒருநொடி முகம் சுருங்கியவள் பின் பழைய குழலியாய் மாறியவள் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் வாயை விட கவியின் முகம் பட்டென மலர்ந்தது பிரகாசமாக… 
இது என்னவே அநியாயம்… நேத்து நீரு மட்டும் என்னைய தொட்டீக… அதுவும் கண்ட எடுத்துல நாங் ஏதாச்சும் சொன்னேன்…? இப்ப மாட்டும் கத்துறீக… இந்த ரோசம் மானம் அம்புட்டும் நேத்து எங்க போச்சாம்…என படபடவென போரிந்தவள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள்…
இரண்டொரு நொடி கழிந்த பின்னரே தான் பேசிய வார்த்தையின் பொருள் உணர்ந்து கண்களை இறுக்க மூட்டி நாக்கை கடித்துக்கொண்டாள் செய்த கிறுக்குதனத்தில்… பின் மெல்ல அவனை திரும்பி பக்கவாட்டு கண்ணாடியில் பார்க்க
அதற்காவே இரண்டொரு நொடி காத்திருந்தார் போல் ஒற்றைகண்ணை சிமிட்டி, உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை கண்ணாடி வழியாக அனுப்பி வைத்தான் கள்வன்… 
அதில் நொடி பொழுது திகைத்தவள், அவன் முதுகில் நச்சென்று ஓரடியை வைத்து, உதட்டை வலது இடமும் சுழித்து முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் குழலி… 
அதை பார்த்து புன்னகைத்த கவி, “எதுக்குடி கூப்பிட்ட… ?” என தன்மையாக கேட்கவும்
உம் ஜோலிய பாரும்… எங்கிட்ட ஒன்னும் பேச வேணாம்…என முகத்தை கோபமாக திருப்பிக் கொள்ள,
ம்ப்ச்… சரிதான் போடி…என அவனும் அமைதியாகி விட்டான்….
என்ன இவீக திரும்பவும் என்னனு கேக்காம பொசுக்குன்னு செரின்னிட்டாக… சை… செரியான திமிரு பிடிச்சவக… இனி நீயா போய் பேசாத புள்ள… ரொம்ப ஏத்தம் கூடி போச்சு இவீகளுக்கு…என்று தனக்குள் புருவம் சுருங்க யோசித்துக்கொண்டிருந்தாள்… 
கவி அமைதியாகி விட்டாளும் கண்ணாடி வழியாக அவளை பார்த்துக்கொண்டிருக்க தான் செய்தான்… அவனுக்கு உள்ளம் பரபரவென்று இருந்தது என்னவாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்ளும் ஆவல் அவனுள்… ஏனென்றால் அவளாக இவனிடம் பேச வருவது மிகவும் அரிது விரல்விட்டு எண்ணி விடலாம்…
தன் தேவைக்கு கூட கவியை அணுக மாட்டாள்… பார்த்து பார்த்து தான் பேசுவாள் ஆனால் சண்டையென்றால் ஏன் எதற்கு என்னும் காரணமே இன்றி ஒருநாள் முழுவதும் சண்டை போடவும் தயாராக நிற்பவள் தான் அவனது மனையாள்… 
இப்பொழுது அவளிடம் இருந்து என்ன விஷயம் என்று தெரிந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் எழ, “சரி… சொல்லு… எதுக்கு கூப்பிட்ட… என்ன விஷயம்…?” என்று மீண்டும் குரல் தனித்து கேட்கவும்
குழலிக்கு கணவன் அவனாக வந்து பேசியது அத்தனை மகிழ்ச்சியை கொடுக்கவும், சற்று முன் எடுத்த முடிவு காற்றோடு பறந்திருந்தது… ஆவலாக அவன் புறம் முகத்தை திருப்பியவள், அவனது பின்னத்தலையும் காதும் பக்கவாட்டு கன்னமும் அவளது கண்ணில் பட, அதை பார்த்தும் பார்க்காமல் குரலை தாழ்த்தி, குழைந்து, விரலால் அவனது முதுகு பகுதி சட்டையை லேசாக நோண்டியபடி
நாங் வண்டியை ஓட்டட்டா அத்தான்…என்று கேட்டவளை ஆச்சரியமாக விழியுயர்த்தி கண்ணாடி வழியாக பார்த்தவன், அவளது தயக்கத்தையும் ஆசையை கண்டு இதழ் வளைத்து சிரித்து, ‘முட்டக்கண்ணிக்கு தயக்கம் எல்லாம் வேலை செய்யும் போல…என நக்கலாக எண்ணியவன் மறந்தும் வாய் திறக்கவில்லை… 
என்ன பதில காணம்… நாம சொன்னது இவீக காதுல விழலையோ…?’ என்று உதட்டை சுழித்து விழியுயர்த்தி கண்ணாடியில் பார்க்க, அவனோ அவளது நினைப்பில் இதழ் பூ பூத்திருந்தான் தன் நினைவில்… 
அதை சந்தேகமாக பார்த்தவள், மீண்டும் அவன் முதுகை சுரண்டவும் சட்டென அவன் முதுகில் பல்லியை போல் ஒட்டிக்கொண்டாள் அவன் போட்ட பிரேக்கில்… 
அவனும் இதை எதிர்ப்பார்க்கவில்லை அவளும் இதை எதிர்ப்பார்க்கவில்லை… ஆனால் அவனுக்கு இதமான ஒரு நிகழ்வாக மாற அவளுக்கோ உடலுக்குள் மின்சாரம் தாக்கிய உணர்வாக மாறி போனது… 
நிகழ்ந்த நிகழ்வில் அடுத்தடுத்த நொடியில் அனைத்தும் நடந்திருந்தது… எந்த வேகத்தில் பல்லியை போல் ஒடிக்கொண்டாளோ அதே வேகத்தில் அவனை விட்டு பிரிந்து வண்டியை விட்டு இறங்கி நின்றாள்… 

Advertisement