Advertisement

அவளது புரியாத பார்வையை கண்டு, “அப்ப்ப்பாஆஆஆ…. ஒரு நிமிஷ சங்கு ஊதுன மாதிரி இருந்துச்சு… ஆமா இப்ப எதுக்கு நீ சுங்கு ஊதுன…? ” என்று சந்தேகமாக புருவம் சுருக்கி கேட்க, பெருத்த அவமானமாகி போனது குழலி…
அதில் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கி நின்றாள் சிணுங்கியபடி… அதையும் ரசிக்க தோன்றியவனுக்கு இன்னும் அவளை திணற விட வேண்டும் என்று எண்ணி,
“சரி என்னத்துக்கோ கத்திருப்ப எனக்கு எதுக்கு அதெல்லாம்…? இந்தா தைலம்…” என அவள் கையில் தைல டப்பாவை திணித்தவன்,
“நான் படுத்துக்குறேன் நீ என்ன பண்ணுற….என் பக்கத்துல நெருங்கி உட்கார்ந்துஉஉஉ….. உன் இரெண்டு கைலையும் தைலத்தை எடுத்து என் முதுகுல வச்சு அப்படியேஏஏஏ மெது மெதுவா தே….” என ஒருமாதிரி குரலில் ஒருமாதிரி உடலை நெழித்து ஒருமாதிரி இழுத்து பேசவும், நடுவில் புகுந்த குழலி தன்  உச்சக்கட்ட குரலில்
“அத்தேஏஏஏஏஏஏஏஏஏஏ……” என  அவனை சுற்றி கொண்டு கதவை திறந்து கத்தியபடியே ஓடி விட்டாள் அவனது முட்டக்கண்ணி…
ஓடுபவளை கண்டவன், “ஏய் முட்டக்கண்ணி தேச்சுவிட்டு போடி….” என சிரித்துக்கொண்டே கத்த, எங்கே அவள் நின்றாள் தானே…
“வாய் மட்டும் தான்… கொஞ்சம் கிளோஸா வந்ததும் தெரிச்சு ஓடுது லூசு…” என தலையை கோதி முறுவழித்தவன் அவளது பாவனைகள், திருதிருவென முழித்தது பின் கத்திக்கொண்டே ஓடியது என அனைத்தையும் மனதில் அசைப்போட்டபடி தன் சட்டையை மீண்டும் அணிந்துக்கொண்டு பல்கனியில் போய் நின்றுக்கொண்டான்…
அறையில் இருந்து ஓட்டம் பிடித்தவள் சமையலறையில் காயத்ரியின் அருகில் தான் போய் நின்றாள்… மூச்சறைக்க வந்து நிற்பவளை பார்த்து காய்த்ரி,
“என்னவே… என்னாச்சுனுட்டு இப்படி மூச்செரிக்க வந்து நிக்க…” என்று அவளை பார்வையால் அளந்தபடி கேட்க, இங்கும் குழலிக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்க வேண்டியதாகி போயிருற்று…
“கேட்டுக்குதோம்ல சொல்லுவே… என்னத்துக்கு இம்புட்டு வேகமா ஓடியாரவ…?” என மீண்டும் கேட்க, தலையை குனிந்து உதட்டை கடித்தவளுக்கு வெட்கம் பிடுங்கி திண்றது…
‘கூறுகெட்டவளே… வேறு எங்குட்டாச்சும் போய் நின்னுருக்க வேண்டியதுத்தேனே… பாரு இப்ப இவீக கேட்குற கேள்விக்கு என்னத்த பதில் சொல்ல போவுத…?’ என யோசித்து கொண்டிருக்கையில் காய்த்ரி அவளது கையை பிடித்து உழுக்கவும், நினைவிற்கு வந்தவள் காயத்ரியை பார்த்து பேந்த பேந்த விழித்தபடி, மெல்லிய குரலில் தலையை குனிந்து
“அ.. அது … உங்க ம..மவன்… எங்கிட்ட வம்பு பண்ணுதாக… அ.. அத்தேன் இங்குட்டு ஓடியாந்தேன்…” என திக்கிதிணறி சொல்லி முடிக்க, காயத்ரிக்கு என்ன நடந்திருக்கும் என்று ஓரளவுக்கு புரிந்திருந்தது…
அதில் லேசாக சிரித்தவர், “செரி செரி… வந்து ஜோலிய பாரு…” என பேச்சை மாற்ற சிறிது நேரத்தில் அவளும் சகஜ நிலைக்கு திரும்பினாள்…
அதன் பிறகு வந்த நாட்களில், அவள் கண்ணில் முருகவேல் பட்டால் அவ்வளவுதான் வேண்டுமென்றே பணத்தை காரணம் காட்டி அவரை வம்பிலுக்க ஆரம்பித்தாள்…
உணவு உண்ணும் நேரம் முன்போல் அல்லாமல் நேரம் கழித்தே உண்ண தொடங்கினார் முருகவேல்… காலையில் அவள் கல்லூரிக்கு சென்று பிறகு தான் உணவு உண்ண வருபவர் தப்பி தவறி அவள் கண்ணில் பட்டு விட்டாள் அவ்வளவுதான் அவரது ரத்த அழுத்தத்தை ஏற்றிவிடாமல் அவளது அப்பொழுதைய பொழுது நகராது…
ஒருசில நாள் கண்ணில் படாமல் அவர் ஒதுங்கி இருந்தாலும், “எங் மாமனாருக்கு காப்பி தாரேன்…” ,” உண்ண ஏதாவது வேணுமானுட்டு கேட்டுபுட்டு வாரேன்…” என அவரை தேடிச்சென்று ஏதாவது பேச்சி அவரை ஒருவழி பண்ணிவிட்டு வருவதை பொழுதுபோக்காகவே வைத்திருந்தாள்…
இவை அனைத்தும் அவ்வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பார்க்க அத்தனை வேடிக்கையாக இருக்கும் முருகவேலுக்கோ விழி பிதுங்கி விடும் அவளுடன் மல்லுக்கட்டி… முருகவேல் என்றில்லாமல் ஒரு மருமகளாய் தன் பணியை செவ்வென செய்வாள் குழலி, மாமியாருடனான சண்டை, நாத்தனாருடன் வாக்குவாதம் என்று அனைத்தையும் செய்துவிட்டு அறையில் வந்து கவியிடம் அவனது பாணியில் நன்கு வாங்கிக் கட்டிக்கொள்ளவும் செய்வாள்…
ஆனால் கவியழகனின் பழிவாங்கல் அனைத்தும் அவனது அன்னை தங்கையை அவள் சீண்டினாள் மட்டுமே, முருகவேலை அவள் என்ன செய்தாலும் ஏன்னென்று ஒரு வார்த்தையும் கேட்க மாட்டான்…
அவனும் தந்தைக்கு பலவிதமாக சொல்லி புரிய வைக்க முயன்று தோல்வியை தழுவியது தான் மிச்சம்… முருகவேலின் எண்ணம் எல்லாம் குழலி இங்கு இந்த வீட்டிற்கு மருமகளாக  வர ஒரே காரணம் சொத்து, அனைத்தையும் தன் வச படுத்த எண்ணித்தான் இவ்வாறு செய்கிறாள் என ஆழமாக எண்ணினார்..
அதன் விளைவு மகன் மருமகள் இருவரையும் பிரிக்க நேரிடும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை… ஆனால் அனைத்தும் நிகழ்ந்தேரும் பொழுது இருவரது மனநிலையும் முருகவேல் நோக்கி எவ்வாறு இருக்குமோ….
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான் கவியழகன்… ஒருகட்டத்தில் தூக்கம் முற்றிலும் கலைய, கவிழ்ந்து படுத்து தலையணையை கட்டிக்கொண்டு லேசாக கண்விழித்து பார்க்கவும், அவனுக்கு கிட்டியது மனைவின் காலை தரிசனம்…
அன்று குழலியின் கல்லூரியில் பேர்வெல்(fare well)  இருந்ததால் படவை கட்டியிருந்தாள்… திருமணம் ஆன மறுநாளில் இருந்து சுடிதாரை மட்டுமே அணிந்து வந்தாள் குழலி… கல்லூரிக்கு செல்ல இதுவே சரியாக இருக்கும் என, புடவையை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்… வீட்டிலும் யாரும் எதுவும் சொல்லாததால் அதையே தொடர, வெகு மாதங்கள் கழித்து இன்று மனைவியை புடவையில் பார்த்ததும் கவியின் பார்வை அவள் மேல் ஊர்ந்தது…
தலைக்கு குளித்திருப்பாள் போலும், மின்விசிறியின் உபயத்தில் அவளது கருங்கூந்தல் காற்றில் ஆடா, குழலி அதனுடன் போராடிக்கொண்டிருந்த சமயம்…
“சே… எம்புட்டு நேரமா ஒத்த கிளிப் குத்த போராடுதேன் முடியுதா பாறேன்… எங்முடி குண்டாருச்சா… இல்ல கிளிப் சிறுசாயிருச்சா…?” என புலம்பியபடி உச்சியில் முடியை ஒன்று சேர்த்து கிளிப்பில் அடக்க முயற்சிக்க அது நான் அடங்குவேனா என்று போராட்டம் செய்துக் கொண்டிருந்தது….
அதை படுக்கையில் ஓரகண்ணால் அவளை ரசித்தபடி பார்த்திருந்தவன் கண்ணில் பட்டது அவனை வசியம் செய்யும் அவளது சிறுத இடை… புடவைக்கு இடையில் இங்கும் அங்குமாய் அசைந்தாடும் முந்தானையின் இடைவெளியில் கணவனுக்கு காட்சியாகி கொண்டிருக்கும் தன் இடையை அவள் உணரவில்லை…
உணர்ந்தவனோ அமைதியாக பார்வையாலனாக இல்லாமல் , மூளை ஏதோ சிந்திக்க, மெல்ல ஒருங்களித்த நிலையில் தலையை தூக்கி கையால் முட்டுக்குடுத்து படுத்தவன், மெல்லிய குரலில் மோகன குரலில்
அன்பே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி….
என பாடவும் குழலி அதிர்ந்து கவியை திரும்பி பார்க்க, அப்பொழுதும் அவனது பார்வை ஒரே இடத்தில் நிலை பெற்றிருந்தது…. இன்னும் சொல்ல போனால் முன்பு முந்தானையால் சரியாக தெரியாதது அவள் அவன் புறம் திரும்பவும் அம்சமாக காட்சியளிக்க, புருவம் இரண்டும் மகிழ்ச்சியில் மேலோங்கியதை, குழலி கவனித்து விட்டாள்…
வேகமாக புடவையை மேலேற்றி விட்டவள் அவனை பார்த்து கண்கள் விரித்து கோபத்தை கக்கியவளுக்கு அத்தனை சக்தி இருந்திருந்தால் கவி பஸ்மமாகி இருப்பான்…
ஆனால் அவனோ அத்தனை நேரம் விருந்தளித்த பகுதி மறைக்கபடவும் மெல்ல விழிகளை மேல் ஏற்றி,
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்…
ஆஹா…. அவனே வல்லலடி….
என பாடியதோடு நெஞ்சை பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாந்து சரிய, அவ்வளவு தான் குழலி காளியாகவே மாறி விட்டாள்…
வந்த ஆத்திரத்திற்கு கையில் இருந்த சீப்பை அவன் மீது வீச, அதை அழகாக தவிர்த்து விட்டான் விஷம சிரிப்புடன்… அவளுக்கோ கோபம் பல்மடங்காக எகிற,
“கோட்டி பயலே…. உன்னைய…..” என பல்லை கடித்துக் கொண்டு அருகில் வந்தவள் அவனை சரமாரியாக தாக்க, முதலில் சிரித்துக்கொண்டே அதை வாங்கியவன்,
பின் சட்டென அவளது இடையோடு கையிட்டு இழுத்து படுக்கையில் கிடத்தி அவள் மேல் பட்டும் படாமல் படர்ந்தார் போல்  படுத்தான் கவி… அவனது செயலில் திகைத்து படுக்கையை விட்டு எழ முயற்சிக்க எங்கே முடிந்தால் தானே…
இடையோடு அணைத்திருந்தவன் பிடியை, அவள் திமிரவும் அழுத்த கொடுத்து அவளது முகம் பார்க்க, அவளோ அவனது செயலில் கண்களை இறுக மூடி சிலையென படுத்திருந்தாள்…
திருமணமான நாள் அன்று இரவு அவளை நெருங்கியவன் தான் அதன் பின் அவளிடம் கன்னியம் காக்க தவறவில்லை… பொதுவாக கைபிடித்து பேசி வம்பிலுப்பானே ஒழிய, பெரிதாக எந்த ஒரு உரிமையும் எடுத்துக் கொண்டதில்லை… ஆனால் இன்று அவன் அறியாமல் அவன் இதயம் அவளை நாட சற்று தடுமாறி போனாள் பூங்குழலி…
அவளது மூடியவிழியில் மென்மையான ஒரு முத்ததை வைத்தவன் அவளது காதோரம் குனிந்து, “கொல்லுற டி முட்டக்கண்ணி… சீக்கிரம் படிச்சு முடி…” என்றவன் வெடுக்கென்று அவளை விட்டு விலகி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்…  
குழலிக்கு தான் சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை… தன்னை சமாளித்து கொண்டு எழுந்து நின்றவள் நொடியில் தன் புடவையை கசக்கியவனை நினைத்து அவளுள் அத்தனை கோபம் எழுந்தது…
தன்னை சீர் செய்துக்கொண்டு, கண்ணாடியை பார்த்து தயாராகும் போதுதான் கவி என்ன கூறினான் என்று அதன் பொருளோடு கணவனது செயலையும் என்ன என்று ஆராய்ந்தாள்…
புரிந்ததும் தலையில் தட்டிக்கொண்டவள், “செரியான கூமுட்ட புள்ள நீ… இதைய கூட சட்டுன உமக்கு வெளங்குச்சா பாரு… லூசு… லூசு…” என தன்னை தானே திட்டிக்கொண்டவளின் முகம் வெட்கத்தில் அத்தனை சிவந்திருந்தது…
ஏனோ கண்ணாடியில் தன்னையே பார்த்துக்கொள்ள வெட்கப்பட்டவள், வேகமாக தன்னை தயார் செய்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் கவியை பார்க்க முடியாது என தெரிந்து…
முகம் சிவக்க இதழோர வெட்க புன்னகையுடன் படியிறங்கி வந்த மருமகளை பார்த்து, பூரித்து போன காயத்ரி குழலிக்கு திருஷ்டி கழிக்க, அப்பொழுது அங்கு வந்த முருகவேல்,
“ம்க்கும்… அம்புட்டும் ஓசில கிடைச்சா வளத்தியாத்தேன் இருப்பாக….” என்றிட,
“என்ன மாமனாரே… ஏதோ சொன்னாப்புல இருந்துச்சு… என்னனுட்டு தெளிவாத்தேன் சொல்லுறது… ” என்ற குழலியை பார்த்து முறைத்தவர், தோளில் இருந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் போட்டுக்கொண்டவர், வாசலை நோக்கி நடக்க குழலி விட்டுவிடுவாளா…
“மாமனாரே சொல்லிபுட்டு போரது…” என்று கத்த அவர் திரும்பியே பார்க்கவில்லை…
குழலி விடாமல், “செரி சொல்லாட்டி பரவால… நாங் ஒன்னு சொல்லுத்தேன் நல்லா கேட்டுங்கோ மாமனாரே… இது என்ற புருஷன் சொத்து… அது எமக்கு எப்புடி ஓசியாகும் மாமனாரே…? நாங் சவுக்கியாம இருக்குறதைய பார்த்து பொறாம பாடாதீக மாமனாரே…” என்க, வெடுக்கென்று திரும்பி பார்த்து முறைக்க…
குழலியும் சட்டென திரும்பி காற்றில் இல்லாத கொசுவை விரட்டிக்கொண்டிருப்பதை போல் பாவனை செய்ய தொடங்கினாள்… சரியாக அப்பொழுது கனிமொழியும் வந்து விட, மாமியாரிடம் விடைபெற்று செல்லவும் , அவளையே முறைத்துக் கொண்டிருந்தார் முருகவேல்…
உள்ளம் அத்தனை கொதி நிலையில் இருந்தது…. ‘ஆரு வூட்டு சொத்த ஆரு அனுபவிக்குறது… சே… இதுல இந்த சிலுவண்ட பார்த்து பொறாம படுதாகலாம்… கூறுக்கெட்டவ…’ என்று பொருமினார் உள்ளுக்குள்… ஆனால் அதையும் மீறி அவரால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை பேசுவும் முடியவில்லை….
அன்று இரவு கவியழகன் வருவதற்குள் உண்டுவிட்டு இழுத்து மூடி படுத்துக் கொண்டாள் குழலி… இப்பொழுது புதிதாக கோதுமை மில் ஒன்றை கட்டிக்கொண்டிருப்பதால் முன்பு போல் அல்லாமல் நேரம் கடந்தே வீட்டிற்கு வர தொடங்கினான் கவி… அது இப்பொழுது பூங்குழலிக்கு வசதியாகி போனது…
வந்தவன் அவள் தூங்கும் அழகை கண்டு சிறுசிரிப்புடன் அவளது போர்வையை விலக்கி அவளது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்தான் உள்ளத்து காதலுடன்…
பின் சிறு குளியலை போட்டுவிட்டு வந்து தன்னவள் அருகில் படுத்தவன் அவளை பார்த்தவாரே உறங்கியும் போனான்…
அடுத்த நாள் அவளது கடைசி வருடத்தின் கடைசி பரிச்சைக்கான ஹால் டிக்கெட் (hall ticket) தருவதால்… அதை வாங்க சென்றிருந்தனர் பூங்குழலியும், கனிமொழியும்… காலேஜ் சென்றுவிட்டு திரும்பி வருகையில் அவர்கள் இறங்கும் இடத்தில் காத்திருந்த கவியழகனை கண்டவர்களுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது…
தொடரும்….

Advertisement