Advertisement

பேசிக்கொண்டு வந்த காயத்ரி, கவியின் தோளை பற்றி “அவ ஏதாச்சும் குறும்பு பண்ணாம இருக்க மாட்ட ராசா… அது அவளையால முடியவும் செய்யாது… நீத்தேன் அதைய பெருசு பண்ணாம பொருத்துக்கணும் ராசா… அவ குறும்பு உட்டுப்புட்டு பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணுயா…” என்றவறை திரும்பி பார்த்தவன், இதழை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து,
“மருமகளுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுறீங்க…?” என கிண்டலாக கேட்க, அவளது தோளில் லேசாக தட்டி,
“எம்மருமவளுக்கு நாங் பேசமா வேற ஆரு பேசுவா…”என்று நிமிர்வாக கூறியவர், எழுந்து “செரி ராசா… நாங் ஜோலிய பாக்குத்தேன்… உம் பொண்டாட்டிகிட்ட குடிக்க கொடுத்து விடுத்தேன்…கொஞ்சங் தூங்கி எழு மொகமே ஒருபோக்குல இருக்கு…” என்றுவிட்டு செல்ல…
கவியழகன் மனதில் அன்று குழலி அழுதுக்கொண்டே நடந்த பழைய விஷயங்களை கூறியது நினைவில் சுழன்றுக் கொண்டிருந்தது… ஒருமாதிரி இறுக்கமாக உணர்ந்தவன் பால்கனி செல்ல இரண்டடி எடுத்து வைக்க, உள்ளே நுழைந்தாள் குழலி….
அவளை கண்டதும் வருத்தம், இறுக்கம், பழசு என அனைத்தும் மறந்து போய் இன்றைய நினைவில் உல்லாசம் போங்க அவளை பழி தீர்க்க தயாராகினான்… அருகில் வந்து காப்பி அடங்கிய கோப்பையை அவன் புறம் நீட்ட,
அவனோ நெஞ்சுக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளையே குறுகுறுவென பார்த்திருந்தான்…
‘வாங்காமா என்ன பண்ணுதாக… ?’ என்றபடி நிமிர்ந்து பார்த்தவள், அவனது பார்வையை கண்டு , ‘ஆத்தி… இவீக பார்வ செரியில்லையே… புள்ள அப்புடியே ஓடிரு… சிக்குன வச்சு செய்வாக… ‘ என திருட்டு முழி முழித்தப்படி உதட்டை கடித்து நின்றாள்…
அவளது முகபாவனைகளையும், விழியின் முழியையும் கண்டவன், ‘எஸ் ஆக பிளான் போடுறா போல… அடியேய்… இன்னைக்கு நீ மாட்டுனது மாட்டுனது தான் டி என் முட்டக்கண்ணி… ‘ என்று என்றெண்ணியவன் அவள் முடிவெடுத்து ஓடும் முன், அவளை தாண்டி காலை எடுத்து வைத்தான் விழியை அவளது விழியோடு கோர்த்தபடி…
‘எங்குட்டு போறாக… ஒருவேல கோவமா அறைய விட்டு போறாகளோ… போனா கூட செரித்தேன் புள்ள… நீ தப்பிச்சே…’ என யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவளது விழிகள் பெரிதாக விரிந்தது அவன் கதவை சாற்றியதை கண்டு…
‘ஆஆஆஆத்த்த்த்திதி… புள்ள உன்னைய இன்னைக்கு என்னத்த பண்ண போறாகளோ….? உசாரா இரு புள்ள… பக்கம் வந்து தொட்டு பேச உட்டுறாத டி… ‘ என மிரண்ட விழியோடு யோசித்துக் கொண்டிருக்க, கவி
“பாத்ரூம்ல எதுக்கு சோப் தண்ணிய கொட்டி வச்ச…?” என இறுக்கமான குரலில் கேட்கவும், குழலி ஆர்வகோளாரில்
“அய்யய…. அது சோப்பு தண்ணீ இல்ல ஷாம்பு தண்ணீ… ” என்றவள் அவனது பார்வையின் மாற்றத்தில், நாக்கை கடித்துக் கொண்டாள் தாம் உளறியதை உணர்ந்து…
‘அப்படி வா டி வழிக்கு… நான் நேரா கேட்டு இருந்தா அப்படியான்னு என்கிட்டையே கேட்டிருந்திருப்ப… இப்ப பாரு… உன் வாயிலையே வர வச்சேன் உண்மைய…’ என மிதப்பாக பார்க்க,
குழலிக்கு அவனது பார்வையின் பொருள் உள்ளுக்குள் கோவத்தை வெகுவாக தூண்டிவிட்டது… அதில் தலையை நிமிர்த்தி நிமிர்ந்து நின்றவள்,
“ஆமா நாந்த்தேன் பண்ணுனேன் இப்ப என்னங்குறீக… ? நீரு எம் பைய ஒளிச்சு வச்சீக… அத்தேன் நான் இப்படி பண்ணி வச்சேன்…” என்றவளை உற்று பார்த்தவன்,
“ஒன்னும் பண்ண வேண்டாம்…தைலம் தேச்சு விடு போதும்…” என்று அசால்ட்டாக கூற, மேலும் அதிர்ச்சியில் விரிந்தது அவள் விழிகள்…
அதை கண்டு உள்ளுக்குள் சிரித்தவன், வெளியே இறுகிய முகத்தை வைத்துக்கொண்டு, “என்ன முழிக்குற… உன்னால தானே எனக்கு இப்படி ஆச்சு… ஒழுங்கா தைலம் தேச்சு விடு… ” என்றவனை பார்த்திருந்தவளின் பார்வை இப்பொழுது மாறியது அவனது வார்த்தையில்…
“ஆங்ங்… அது நீரு காலைல எங் பைய எடுத்து ஒளிச்சுல்ல வச்சீக… அத்தேன் நாங் இப்படி பண்ணேன் பழிக்கு பழி செரியா போச்சு…” என்று தலையை திருப்பியவள் கையில் இருந்த கப்பை அறையிலிருந்த மேசையில் வைத்தவள், “குடிச்சா குடிக…. இல்லாட்டி உங்பாடு…” என்றபடி நிமிர்ந்தவள் வெளியே செல்லும் முனைப்போடு ஓரடி எடுத்து வைக்க, அப்பொழுது தான் கவியை ஒழுங்காக பார்த்தாள்…
கதவின் மீது சாய்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டு அவளையே குறுகுறுவென பார்த்திருந்தான் திமிரான ஒரு சிரிப்போடு…
அதை கண்டவள், லேசாக மிரண்ட பார்வையோடு, “என்ன… என்ன ஒரு திணுசா பார்க்குதீக…?” என கேட்க,
அவனோ, “ஒழுங்கா தைலம் தேச்சு விடு… வழிய விடுறேன்… இல்ல இந்த ரூமை விட்டு ஒருவாரம் ஆனாலும் உன்னால வெளிய போக முடியாது…” என்றவனை பார்த்து முழித்த குழலி,
‘புள்ள… ரொம்ப யோசிக்காத… ஒரு அஞ்சு நிமிஷம் தேச்சிப்புட்டு ஓடிரு… இல்ல இவீக உன்னைய போக விட மாட்டாக…’ என்று யோசித்தவள் பின் ஒரு முடிவாக,
பார்வையை பக்கவாட்டு சுவரின் மேல் பதித்து, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன், “செரி… நீரு சொல்லுறாப்புல தேச்சுவுட்டு போத்தேன்…” என்று கூறவும் கவியின் இதழோரத்தில் ஒரு விஷம புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது…
“குட்…” என்றவன் மெல்ல அவளை பார்த்தபடி அடியெடுத்து வைத்துக் கொண்டே கைவிரல்கள் சட்டையின் பொத்தணை பற்றியது…
முதல் இரண்டை கழற்றிவிட்டு, மூன்றாவதில் கை வைக்க, அவளை சற்று நெருங்கி இருந்தான். குழலி,
‘இம்புட்டு நேரம் என்னத்த பண்ணுறாகவ…? வெரசா தேச்சுபுட்டு இங்கிட்டு இருந்து கிளம்பிரணும்…’ என்றெண்ணியபடி, தலையை திருப்பாமல் மெல்ல விழியை மட்டும் உருட்டி அவனை பார்க்க, அதிர்ந்து மொத்தமும் திரும்பி அவனை பார்த்தவளுக்கு சத்தியமாக வார்த்தை வரவில்லை மாறாக காற்றுதான் வந்தது…
அவளது முக பாவனைகள் அத்தனையும் உள்ளுக்குள் குறித்து வைத்து ரசித்தவன் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை…
அதற்குள் அவளை சில அடி இடைவெளியில் நெருங்கி இருந்தவன் சட்டையின் அத்தனை பொத்தண்களும் அவிழ்க்கப்பட்டு இருந்தது… குழலியின் கருவிழிகள் அவனையும் அவனது அவிழ்ந்து கிடக்கும் சட்டையையும் மாற்றி மாற்றி பார்த்தவளுக்கு வாய்திறந்து சண்டையிடவோ கேள்வி கேட்டவோ முடியவில்லை…
கவியின் செயலில் குழலிக்கு காதோரம் வழிந்த வேர்வை அவளது கழுத்து பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது… நிச்சயம் அவள் இதை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை…
குழலி மனதில், ‘என்ன இவீக இப்படி பண்ணுதாக… நாம கால்லத்தேன் தைலம் தேச்சுவுடனும்னுட்டு நினைச்சா… இவீக என்னத்துக்கு சட்டைய கழட்டுறாகவ… அய்யோ… மூச்சுவுட முடியலையே… நாங் மயங்கி உழப்போறேனா …. பிடிக்கேன்னுட்டு இடுப்ப புடிச்சுடுவாகளோ… ம்ஹும்… மயங்கிறாத புள்ள மயங்கிறாத… ‘ என்று தனக்குள் பேசிக்கொண்டிருக்கையிலேயே,
கவி தன் சட்டையை சட்டென கழட்டிவிட்டு, மேலே  வெறும் பணியோடு நின்றிருந்தான்… குழலி தன் பார்வையை எத்தனை கஷ்டப்பட்டு இழுத்துபிடித்து அங்கு பார்க்காதே என்று போராடினாலும் அவனது பரந்த விரிந்த தோளும் கட்டுக்கோப்பான கை புஜங்களையும், தன் கண்முன் தோன்றும் அவனது விலாசமான நெஞ்சமும், ஒட்டிய வயிற்றிலும் அவளது கண்கள் அவளது சொல் பேச்சை கேட்காமல் கணவன் மீது மேய, அவனோ அவளை பார்த்து நமட்டு சிரிப்புடன் தன் பணியனில் கை வைக்க போக, குழலியின் கண்கள் அதை கவனிக்க, அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்…
அவனோ அதே விஷம சிரிப்புடன் அதை கழட்ட போக, குழலி அவசரமாக “அய்யயயோ…. என்னத்த பண்ணுறீக… ?” என பதற்றத்தில் கத்திவிட்டாள்…
இப்பொழுது இருவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி மட்டுமே… குழலியின் பதற்றத்தை உள்ளம் குளிர கண்டு ரசித்தப்படி பார்வையால் அளந்தவன்,
“நீதானே தைலம் தேச்சு விடுறேன்னு சொன்ன … அதான் ரெடி ஆகுறேன்… ” என்று ஒன்றும் புரியாததை போல தோளை உழுக்கி சொல்ல, நெற்றியில் அரைந்துக் கொண்டாள் குழலி…
“அதுக்கு என்னத்துக்கு சட்டைய கழட்டுறீக… நீரு படுக்கைல உட்காரும்… நான் வெரசா உங்க கால்ல தைலத்த தேச்சுபுட்டு போத்தேன்…” என்றவளை பார்த்து பெரிதாக சிரித்து வைத்தான் கவியழகன்…
பூங்குழலி அவனது சிரிப்பிற்கான காரணம் புரியாது பார்த்திருக்க, கவியே பேச தொடங்கினான்… “ஹலோ மேடம்… எனக்கு அடிப்பட்டது இடுப்புல, கால்லன்னு உனக்கு யாரு சொன்னது…?” என ஒற்றை புருவத்தை தூக்கி கேள்வி கேட்க , பேயரைந்தார் போல் நின்றுவிட்டாள் குழலி….
‘ஆத்தி… இப்படியாயி போச்சா…  கால்ல அடிப்படும்னுட்டு நினைச்சேன், ஆனா இடுப்ப பத்தி யோசன பண்ணலையே… சே… இவீக பார்வையே செரியில்லையே… ‘ என உள்ளுக்குள் புலம்பியவள் அவனை பார்த்து திருதிருவென முழித்தப்படி நின்றிருக்க, கவி சட்டென தன் பணியனை கழட்டி விட்டான்…
அவ்வளவுதான் படையப்பா படத்தில் வருவது போல் குழலியின் மூச்சு நின்னு போச்சு… பெரிதாக விரிந்த கண்கள் இமைக்க கூட இல்லை….
அவளது முட்டக்கண்ணை ஆழம் பார்த்தவன், அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, குழலியோ பேய் முழியுடன் எச்சிலை கூட்டி விழுங்க… எத்தனை முயன்றும் கண்கள் அலைப்பாய்வதை தடுக்க முடியவில்லை…  
‘அய்யோ… கொடும படுத்துறாக வேண்ணும்னுட்டே… ம்ஹும்… இதுக்கு மேல இங்குட்டு நின்னா செரிப்படாது புள்ள… ஏதாச்சும் பண்ணுல…’ என்று யோசித்தாளே ஒழிய ஒன்னும் பண்ண முடியவில்லை…
அவளது திணறளை கண்டவன், ‘ம்ம்ம்… நேத்து அவளா வந்து முத்தம் வச்சுட்டு போனா… இப்ப மட்டும் என்ன முழி முழிக்குறா பாரு… நல்லா அனுபவி டி என் முட்டக்கண்ணி… உன் வீக் பாய்ன்டே ரொமான்ஸ் தான்… இனியேதாச்சும் இன்னைக்கு பண்ண மாதிரி பண்ணு அப்புறம் இருக்கு உனக்கு… ‘ என எண்ணிக் கொண்டவன் அவளை நோக்கி லேசாக விஷம சிரிப்புடன்  குனிய,
அவ்வளவுதான் குழலிக்கு எங்கிருந்து தான் அத்தனை சக்தி வந்ததோ… வீல்லென்று கத்த தொடங்கினாள் கண்களை இறுக மூடி காதை பொத்திக்கொண்டு,
“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ……” என கத்துவாள் என கவி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை… அதில் அதிர்ந்து பார்க்க, அவளோ இடைவிடாது ஒருநிமிடம் கத்த முதலில் அதிர்ந்தவன் பின் கைகளை கட்டிக்கொண்டு ஏளனமாக பார்த்து நின்றான்…
‘எவ்வளவு நேரம் கத்துவன்னு நானும் பார்க்குறேன் டி…’ என வீராப்பாக நிற்க, கத்திக்கொண்டிருந்தவளோ ஒரு நிமிடத்திற்கு பிறகு மெல்ல தன் ஹை டெசிபில் வாய்ஸை குறைத்துக் கொண்டே ஒற்றை கண்ணை திறந்து பார்க்க, எதிரில் நின்றிருந்த கண்வனின் இலகுதன்மையில் ஹை டெசிபில் குரல் மெல்ல குறைந்து மியூட்க்கு இடம் மாறியது…
மனைவி கத்தியதை நிறுத்தியதும், “அவ்வளவுதானா…?” என கேட்டவனின் கேள்வி சுத்தமாக குழலிக்கு விளங்கவில்லை…

Advertisement