Advertisement

UD:31
வேகமாக திரும்பி பார்த்த கவி, முருகவேல் அவர்களது அறை வாசலில் நின்றிருப்பது தெரிந்தது… அவரை கண்டதும்,
‘அய்யோ… மானமே போச்சு… இந்த முட்டக்கண்ணிய…’ என பல்லை கடித்தபடி திரும்பி குழலியை முடிந்த மட்டும் முறைத்து வைத்தான்… அவனால் அப்போதைக்கு அதை மட்டுமே செய்ய முடிந்தது…
அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல் முருகவேலை பார்த்து, “உங்களுக்கு இப்படி ஒருநில வரும்னுட்டு நாங் எதிர்ப்பார்க்கல மாமனாரே…” என்று பாவமாக சொல்லவும், முருகவேல்
“ஏய்ய்ய்… என்ன திமிரு காட்டுதியோ… என்ற மவன அறையில இருந்து வெளிய தள்ளுத…” என்று கோபமாக அருகில் வரவும்,
“ம்பச்ச்… என்ன மாமனாரே நீரு… பக்கம்த்தேனே இருக்கேன் என்னத்துக்கு கத்துறீக… மெல்ல பேசி பழகுங்க…” என்று காதை தேய்த்தவள், “ஆங்ங்… முன்ன ஏதோ சொன்னீகலே… என்னது…?” என்று வாயில் விரல் வைத்து யோசிப்பது போல் பாவனை காட்டியவள், பின் நியாபகம் வந்தது போல் முகத்தை மாற்றி
“ஆஆஆ… நெனவு வந்துருச்சு…திமிரு காட்டுத்தேன்னுட்டு… அப்படியெல்லாம் இல்ல மாமனரே… நியாயமாத்தேன் நடந்துக்கிடுத்தேன்…பொறவு,   உங்க மவனுக்கு இருக்க எடமில்லையாம் பாவம்… ம்ம்ம்…” என பெருமூச்சு விட்டு, “ஊரு பூராவும் நெலம், காடு, தோப்புனுட்டு வாங்கி போட்டீக… இப்ப பாருங்க சொந்த மவனுக்கு இருக்க ஒரு அற இல்ல… கஷ்டந்த்தேன்…” என போலியான பரிதாபம் காட்டிவிட்டு,
“செரி செரி நின்னு மூஞ்சையே பார்த்துட்டு இருந்தா அடுத்த ஜோலி ஆயிருமா… போங்க போய் மவனுக்கு ஒரு எடம் பார்த்து குடுங்க… எனக்கு அசதியா இருக்கு… நான் ஒறங்க போத்தேன்…” என்றவள் முருகவேலின் அடக்கப்பட்ட கோபத்தையும் கவியின் குறுகுறு பார்வையையும் சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் பட்டென்று…
அதை பார்த்து மேலும் பல்லை கடித்த முருகவேல், “இவ மட்டும் ஆம்பள புள்ளையா இருந்து இருக்கணும் பொறவு தெரிஞ்சு இருக்கும் நாங் ஆருணுட்டு… சே…” என கையை முறுக்கினார் அவளை ஏதும் செய்ய முடியவில்லையே என்னும் கோபத்தில்…
“நீங்க சொல்லுற மாதிரி ஆம்பள புள்ளையா இருந்திருந்தா அவ இப்படி உங்க கிட்ட பேசிட்டு இருந்திருக்க மாட்டா… இப்பவே இப்படி ஆடுறவ அப்ப சும்மாவா இருந்திருப்பா…?” என இறுகிய முகத்துடன் கேட்டான் கவி…
மகன் சொல்ல வந்தது புரியவும் முருகவேல், “தம்பிஇஇஇ…” என அடக்கப்பட்ட கோபத்தோடு சீற,
“ப்பா பிளீஸ்… புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க…. உண்ம இதுதான்… ஒரு வேலை பையனா இருந்திருந்தா இவ எப்பவோ அருவாளோடு வந்து உங்க முன்னாடி நின்னு இருப்பா… அப்படி வந்து நின்னு இருந்தாலும் அது தப்பில்லைன்னு தான் சொல்லுவேன்… ஒருவேல நான் அவ இடத்துல இருந்திருந்தா கண்டிப்பா இத தான் செய்வேன்…” என்ற மகனை முறைத்து பார்த்தவர் வாய் திறக்கவில்லை….
மகனுக்கு உண்மை தெரிந்ததும் ஏதோ ஒரு குற்றணர்வு அவருள்… இதுவரை தவறு என்று உணர்ந்திராதவர் மகனது பார்வையில் தவறோ என்று எண்ணத்தொடங்கினார்… அதன் விளைவுதான் அவருடைய இப்பொழுதைய அமைதி…
“நீங்க பண்ணது தப்புன்னு உங்களுக்கு புரியலையா…?” என்று கேட்கவும் முருகவேல் தன் பார்வையை வேறுபுறம் திருப்பி வெரப்பாக நின்றுக்கொண்டார் பதில் கூற விருப்பமில்லை என்னும் தோரணையில்… அதை கண்டவன் பல்லை கடித்து,
“இப்ப கூட நீங்க பண்ணது தப்புன்னு உங்களுக்கு புரியலை இல்ல…? பெத்தவங்க பண்ணுற பாவம் தான் புள்ளைங்கள வந்து சேரும்… நீங்க பண்ணதுக்கு பூங்குழலி என்னை இப்படி பண்ணுறா… பண்ண பாவத்தை சரி பண்ண முயற்சி பண்ணுங்க இல்லாட்டி நீங்க கஷ்டப்படுறதோடு சேர்த்து என்னையும் கஷ்டப்பட வைக்க போறீங்க… இதுல பூங்குழலி மேல தப்பு சொல்ல யாராலையும் முடியாது… இவ, அத்த இரெண்டு பேரும் அனுபவிச்ச கஷ்டம் அப்படி… சோ அவ இப்படி தான் நடந்துக்க செய்வா நீங்க கோபப்பட்டு எந்த பிரோஜனமும் இல்ல…” என்றவன் அவ்விடம் விட்டு அகல போக, காயத்ரி படியில் நிற்பதை கண்டு, ஒரு பார்வையோடு எந்த உணர்ச்சியும் காட்டாது விடுவடுவென நடந்து மாடிப்படி ஏறி சென்று  தலையை கோதியபடி நின்றான்…
மனம் அத்தனை கலங்கி இருந்தது, அன்று பூங்குழலி நிகழ்ந்தவற்றை கூறியது இப்பொழுது நினைத்து பார்த்தாலும் மனம் அத்தனை கனத்தது… அத்தையின் மீது அளப்பரியா அன்பினை கொண்டவன் பாசத்தை மட்டுமே காட்டியவர், குழலியை விட தனக்கு முக்கியத்துவம் அளித்து தன் பக்கம் நின்றவர்… அன்றைய பொழுது அவர் பட்ட துன்பம் எத்தனை கொடுமையாக இருந்திருக்கும் என்று எண்ணி பார்த்த கவிக்கு தன்போல் கண்கள் லேசாக கலங்க தொடங்கியது…
இங்கு முருகவேலுக்கோ மகனது வார்த்தை பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியது அவருள் அதுவும் , ‘பெத்தவங்க பண்ணுற பாவம் தான் புள்ளைங்கள வந்து சேரும்…’ , ‘பண்ண பாவத்தை சரி பண்ண முயற்சி பண்ணுங்க…’ என்னும் வார்த்தை தான் அவரை மீண்டும் மீண்டும் யோசிக்க வைத்தது…
அமைதியாக, யோசனை முகத்துடன் தன் அறை நோக்கி நகர்ந்தவரின் எண்ணம் முழுவதும், ‘அப்படி என்னத்த பெரிசா பாவம் பண்ணிட்டேனாக்கும்… பணத்தோட அரும தெரியாம பேசுதான்…. நாள் முழுக்க உழைச்சவன் நாங், சொத்த சேர்த்து வச்சது நாங், அதோட அரும எனக்குத்தேன் தெரியும்… எல்லாத்தையும் சும்மா தூக்கி குடுக்க முடியுமா… என்னத்த பேசுதான் இவன் கூறுக்கெட்டவன்…’ என்று தான் யோசித்தார்…
பணத்தின் அருமையை புரிந்தவருக்கு உறவு பந்ததின் அருமையை புரிந்துகொள்ள தவறினார் என்பதே உண்மை….
காயத்ரியோ, ‘கடவுளே… அம்புட்டும் நல்லதா நடக்கோணும்… திரும்பவும் அத்தையும் வசுவும் இந்த வூட்டுக்குள்ள வரணும்… ‘ என வேண்டுதலை வைத்தார் அவசரமாக…
பூங்குழலியோ மூடிய காதவின் மேல் பல்லியை ஒட்டிநின்றிருந்தாள் வெளியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டபடி இல்லை இல்லை ஒட்டுக்கேட்டப்படி…
சற்று நேரத்தில் யாருடைய பேச்சு சத்தமும் கேட்காது போகவும், “அம்புட்டுத்தானோ… ஒன்னும் கேட்க மாட்டீங்குதுதே…” என்று லேசாக முனுமுனுத்தவள் காதை மேலும் கதவின் மேல் அழுத்தியவளுக்கு ஒன்றும் கேட்கவில்லை…
இருவரும் சென்றுவிட்டனர் என்று உணர்ந்துக் கொண்டவள் ஒரு பெருமூச்சுடன் விலகி மெல்ல நடந்து, படுக்கையில் பொத்தென்று கவிழ்ந்து படுத்தாள்…
பெண்ணவளின் உள்ளம் முழுவதும் கணவனின் பின்பம்… சிறிது நேரத்திற்கு முன் அவனிடம் உருகி கரைந்த நொடிகளை நினைவிற்கு கொண்டு வர முயன்றாள் கண்களை மூடி…. அந்தோ பரிதாபம் ஒன்றுமே நினைவிற்கு வரவில்லை… அருகில் தெரிந்த அவனது காதல் ததும்பிய விழிகளை தவிர…
‘சே… இவீக ரொம்ப மோசம்… எனக்கு தெரியாம சட்டுன்னு இப்படி பண்ணாகன்னா நாங் எப்படி அதைய உணருவேன்… ஒருவார்த்த சொல்லிப்புட்டு பண்ணிருக்கலாம்… ம்ம்ம்…’என்று எண்ணியவளுக்கு அத்தனை வெட்கமாக இருந்தது, அதை மறைக்கும் பொருட்டு தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டாள் லேசாக சிணுங்கிபடி…
மனம் விரும்பியவன், கணவனின் முதல் பரிசு அவளை மேலும் மேலும் நாணம் கொள்ள வைத்தது முதல்முறையாக…. இன்று இந்த  அறைக்கு வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் வரிசையாக யோசித்துக் கொண்டே வந்தவள், சட்டென தலையை நிமிர்த்தி
“புள்ள… லேசா இழுத்த அந்த வேட்டிய இன்னும் கொஞ்சம் இழுத்து இருந்தா அவிக என்ன பண்ணியிருப்பாக…?” என்று வாயில் விரல் வைத்து யோசித்தவள், வேஷ்டி கையோடு வந்திருந்தாள் என்னாவியிருக்கும் என்று யோசிக்க,
“ஆத்தி… பெரிய வம்பால ஆயிருக்கும்… நம்மளைய ஒருவழி ஆக்கி இருப்பாக…” என மிரண்டு விழித்தவள் பின்னரே, ” சே… கூறுக்கெட்டவளே… ஏம்ல கோட்டித்தனமா யோசிக்குத…” என்று தன்நெற்றியில் அரைந்து கொண்டவள், அடுத்து கவியழகன் முருகவேலிடம் பேசியது நினைவில் வந்தது…
அவனது புரிதலில் மனம் சிலிர்க்க, அவனது வார்த்தையில் மேலும் மேலும் அவன்பால் காதலில் விழுந்தாள்… அவனது நினைவில் படுக்கையின் ஒருமூளையில் இருந்து இன்னொரு மூளைக்கு புரண்டு கொண்டிருந்தவளுக்கு கணவனை காண வேண்டும் போல் இருந்தது…
அவளது திட்டப்படி கவியை வெளியேற்றி முருகவேலை வம்படியாக அழைத்து வம்பு செய்ய வேண்டும் என்று யோசித்து வைத்திருக்க, அவரே அவள் முன் சரியான நேரத்தில் தோன்றி, அவள் பேச நினைத்ததை பேசிவிட்டு உள்ளே வந்தவள் அந்த கதவின் மீதே காதை பதித்திருந்தாள் இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள….
கவியழகனின் வார்த்தைகள் அவளை வேரோடு சாய்த்தது காதலால்… முன்பு அவன் மீது கொண்டிருந்த காதல் இப்போது பல்கியிருக்க, வேகமாக படுக்கையை விட்டு எழுந்தவள் அதே வேகத்தில் கதவை திறந்துக் கொண்டு வெளியேறி, அவனை விழிகளால் தேட தொடங்கினாள்…
ஆனால் அவனை எங்கும் காணாது, ‘ஒருவேல நாங் அறைய விட்டு போகனுட்டு சொன்னதுல கோவ பட்டு வூட்ட விட்டு போயிட்டாகளோ…?’ என இடுப்பில் ஒரு கையை வைத்து வாயில் விரல் நகங்களை கடித்தபடி யோசித்து நின்றாள் குழலி…
நள்ளிரவு நேரம், சுற்றிலும் நிசப்தம் சூழ்ந்திருக்க, குழலியின் தோளில் ஒருகரம் விழவும் பதறி விட்டாள்…
“ஆத்தி…. நாங் இல்ல ஜாமி…” என துள்ளி திரும்பியவள் பயத்தில் இரண்டடி பின் சென்று நின்றாள் நெஞ்சில் கைவைத்தபடி…
அவளது இதயத்துடிப்பு வெளியே கேட்டுக்கும் அளவிற்கு பயந்திருந்தவளின் பார்வையில் அத்தனை மிரட்சி… தன் முன் நின்றிருந்த கவியழகனை கண்டவள், கோபமாக
“கூறுக்கெட்ட கூவே… மண்டைல ஏதாச்சும் இருக்கால…”என அவனை பார்த்து கத்த, அவனோ வாய்விட்டு சிரித்தபடி நின்றிருந்தான்…
“கிறுக்குபயலே… என்னத்துக்குவே இப்படி சிரிக்குறவ…?” என்று கடுப்பாக கேட்கவும்,
“ம்ம்ம்… என் முட்டக்கண்ணிக்கு வாய் மட்டும் தான்… வடிவேல் காமெடி மாதிரி… பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மென்ட் வீக்கு… ” என்று விட்டு மீண்டும் வயிறை பிடித்துக் கொண்டு சிரிக்க, குழலி வெகுண்டு விட்டாள்…
“கிறுக்கு பயலே… கிறுக்கு பயலே…” அருகில் வந்து முதுகில் இரண்டடி போட்டது தான் தாமதம்…
அவள் அருகில் வந்ததும் கவியழகன் சட்டென குனிந்து, அவளை தன் இரு கரங்களில் அள்ளியிருந்தான்… இதை சற்றும் எதிர்பார்க்காத குழலி,
“அய்யோ விடுக… ஆராச்சும் பார்த்துடுவாக விடுக… விடுக… “என்று குழந்தையை போல் கைகால்களை உதறி அடம்பிடித்தவளை ஒருமுறை சற்று மேலே உயர்த்தி தன்னோடு இறுக்கினான் கவி…
அவ்வளவுதான்… அவனது செயலில் விழிகள் விரிய அதிர்ந்து கவியின் முகத்தை பார்த்தவள் அதன்பின் அமைதியாகி போனாள் தலையை குனிந்ததபடி…
அதை பார்த்து உதட்டை வளைத்து புன்னகைத்தவன் இப்பொழது அவளை கீழே நழுவ விடுவது போல் பாவனை செய்ய, எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து அவனது கழுத்தை நொடியில் இறுக வளைத்து பிடித்திருந்தாள்…
அதற்கு அவனது புன்னகை மேலும் விரிய, அதை கண்டவள் “ம்ப்ச்ச்…. விடுங்க…” என சிணுங்கியபடி அவனது நெஞ்சில் தன் தளிர் கரங்களை கொண்டு அடிக்க…
அவளையே விழியகலாமல் மோகன புன்னகையுடன் பார்த்திருந்தான் அவளது கள்வன்… ஏனோ குழலியால் அதை எதிர்க் கொள்ள முடியாமல் பற்றியிருந்த அவனது சட்டையை இறுக்கியபடி தலை கவிழ்ந்துக் கொண்டாள் வெட்கத்தில்…
அதையும் ரசித்தவன், தனது பிடியின் இறுக்கத்தை மேலும் கூட்ட, லேசாக துடித்துவிட்டாள் குழலி… மெல்லிய குரலில்
“அத்தான்…. பிளீஸ்…”என்றவளின் குரலில் நாணத்தால் உண்டான ஒருவித நடுக்கம் இருந்தது லேசாக …
அதை புரிந்துக்கொண்ட கவி, இருக்கும் இடம் உணர்ந்து, முகத்தில் இருந்த அதே மோகன புன்னகையுடன் தங்கள் அறையை நோக்கி நடக்க தொடங்கினான்…
அவன் அறைக்கு செல்கிறான் என்றதுமே குழலியின் மனம் அதிவேகத்தில் துடிக்க, மெல்ல விழியை மட்டும் உயர்த்தி பார்க்க, அவனோ அதற்காகவே காத்திருந்தார் போல் ஒற்றை கண்ணை சிமிட்டி கள்சிரிப்பொன்றை வீசினான் பெண்ணவளின் மீது அதில் அதிர்ந்து சட்டென தலையை திருப்பிக் கொண்டாள் மனதில் செல்லமாக கணவனை திட்டியபடி…
‘பொறுக்கி அத்தான்…’என அவள் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே, அறைக்குள் நுழைந்தவன் கால்களால் கதவை மூடிவிட்டு படுக்கையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்க, குழலிக்கு தான் அவஸ்தையாகி போனது…
சில நொடிகளில் அந்த அவஸ்தை அவளது இயல்பு குணத்தை வெளிக்காட்ட தொடங்கியது இந்த உணர்ச்சிகளை கையாள தெரியாமல்… இன்னும் சொல்ல போனால் குழலி இன்னும் அந்த மனநிலைக்கு செல்லவில்லை என்பதே உண்மை…
கவியழகனை பிடிக்கும், அவனிடம் வம்பு செய்ய பிடித்திருந்தது, சற்றுமுன் அவன் கொடுத்த பரிசும் பிடித்திருந்தது, இப்படி அருகில் அவனை உணர்ந்துக் கொண்டிருப்பதும் பிடித்திருந்தது… ஆனால் அதற்கு மேல் என்று யோசிக்கையிலேயே அவளை படுக்கையில் கிடத்தி இருந்தான் கவி…
அதில் உள்ளம் அதிர்ந்தவள், அவனை தலை நிமிர்ந்து பார்க்க அவனோ கதவின் தாளை போட்டுவிட்டு மீண்டும் இவளிடம் நெருங்கும் முன் அவசரமாக படுக்கையை விட்டு எழுந்து நின்றவள் பேந்த பேந்த விழிக்க தொடங்கினாள்…
அவள் அருகில் வந்த கவி, மெல்ல மனைவியின் விரல்களை தீண்டவும் அவளது உடலில் ஒருவித நடுக்கம் வந்து போனது நொடியில்… அதை கண்டு கொண்டாலும் அமைதியாக அதே காதல் பார்வையோடு, அவளது உள்ளங்கையை பற்றி இழுக்க, அவளோ வருவேனா என்னும் விதத்தில் ஆணி அடித்தார் போல் அவனை பார்த்து விழித்தப்படி நிற்க,
அவனோ விடுவேனா என மீண்டும் அழுத்தம் கொடுத்து இழுக்க, ம்ஹும்…. வரமாட்டேன் என்னும் பிடிவாதத்தோடு கால் ஊன்றி நின்றிருந்தாள்…
அவளை உற்று பார்த்தான் கவி, புருவம் லேசாக சுருங்க, கலங்கிய முகத்தோடு, மிக லேசாக பிதுங்கிய இதழோடு நின்றிருந்தவளை கண்டு துணுக்குற்றவன்,
மெல்லிய குழைந்த குரலில், “என்னடி முட்டக்கண்ணி…?” என கேட்டதும் தான் தாமதம்…
கடந்த சில நொடிகளில், கவியிடம் என்ன பேசுவது என்று யோசித்தவள், பேச போகும் வார்த்தையின் விளைவுகளை யோசிக்காது பேச ஆரம்பித்தாள்…
“நீரு எங்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குதீக…” என்றவளை முதலில் புரியாது பார்த்தவன் அவள் சொல்ல வருவது புரிந்ததும் புருவம் சுருங்க அவளை உற்றுப்பார்த்தபடி,
“அப்படின்னா…?”
“அப்படின்னா…?” என அவனது கேள்வியை திரும்ப சொல்லியபடி விரல் நகம் கடித்து இரெண்டொரு நொடி யோசித்தவள், பின்
“அ… அது… நாங் இன்னும் உங்களைய பிடிச்சு இருக்குன்னுட்டு சொல்லவே இல்ல… அதைய பத்தி கொஞ்சங் கூட கவல இல்லாம என்னைய… என்னைய…” ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் என லூசு தனமாக பேசியவள் கூற வந்த வார்த்தையை எப்படி சொல்வது என்று தெரியாமல் நாணம் கொண்டு தயங்கி உதட்டை கடிக்க,
அவளையே ரசனையாக பார்த்திருந்தவன், அவள் தடுமாறி நின்ற அந்த நொடியை உபயோகித்து, கையை வெடுக்கென்று பற்றி இழுக்கவும் பஞ்சு பொதிப்போல் மேல் வந்து விழுந்தவளை இடையோடு சேர்த்து வளைத்தான் சட்டென…
“ஆஆஆ… விடுங்க… அய்யோ  ஏன் இப்படி பண்ணுதீக… வி… விடுங்..க… ” அவன் இழுத்ததும் திமிற ஆரம்பித்தவள் அவனது கைவிரல்கள் இடையில் விளையாட தொடங்கியதும் அவளது சிறிய போராட்டமும் நின்றது, வார்த்தையும் தடுமாறியது…
தலை கவிழ்ந்து இருந்தவள் மெல்ல விழியுயர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொள்ள, இதழோர சிற புன்னகையுடன் அவளது நாடியை பிடித்து தூக்கியவன், “என்னடி முட்டக்கண்ணி… உன்னைய…ன்னு ஏதோ சொல்ல வந்த என்னது அது…?” என்று கண் சிமிட்டி கேட்கவும், லேசாக சிணுங்கி முகத்தை திருப்பிக் கொண்டவள் மெல்லிய குரலில்,
“எ…எனக்கு உடம்பு அசதியா இருக்கு…” என்றவள் பின் தயங்கி, “தூங்கணும்…” என்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவளது முகத்தை திருப்பி பதிலேதும் கூறாமல் அவளது இதழை சிறை செய்தான் வன்மையாக…
முதல் அனுபவித்த மென்மையை இப்பொழுதும் எதிர்ப்பார்த்தவள் அவனது எதிர்பாரா வன்மையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தொலைத்து, கவியின் கழுதை சுற்றி தன் கைகளை மாலையாக்கி கொண்டாள் பெண்ணவள்…
அவளது இதழில் தன்னை புதைத்துக் கொண்டவன் சில பல நிமிடங்கள் கழித்து அவளை விட்டு விலகினான் மூச்சு வாங்கியபடி…
குழலியால் அவனது இத்தனை வேகத்தை தாங்கிக்கொள்ள முடியாது தடுமாறி விழப்போக, நொடியும் தாமதிக்காது அவளை தாங்கிப்பிடித்தவன், அவளது மூடிய விழிகளை பார்த்தபடி
“முட்டக்கண்ணி…” என்றழைக்க,
“ம்ம்ம்…” என்றவள் மெல்ல விழிதிறந்து அவனது விழிகளை பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தது…
அதை கண்டு பதறியவன், “ஏய்ய்ய்… என்னாச்சு டி… ரொம்ப ஹார்ஷா நடந்…” என கேட்கும் போதே அவனது நெஞ்சில் தலையை முட்டி நின்றாள்…
அவனது கேள்விக்கு அந்த ஒற்றை செயல் பதிலாக விளங்கியது ‘இல்லை…’என்று… அதில் இதழ் விரித்து சிரித்தவன், “என்னடி நான் நினைச்சதை விட வீக்கா இருக்கா…?” என கேலி பேச,
கழுதை சுற்றி இருந்த அவளது இடகரத்தால் அவனது வலபக்க மார்ப்பை குத்தி, தன் கன்னத்தை அவனது நெஞ்சில் பதித்துக் கொண்டாள்… ஆனால் வார்த்தை ஒன்றுக்கூட அவளிடம் இருந்து வரவில்லை…
அவளது நிலையை புரிந்துக் கொண்டவன் அவளை தோளோடு அணைத்தபடி முதுகை வருடிவிட, குழலியின் விழி கண்ணீர் அவனது சட்டையை தாண்டி உணர செய்தது…
முதலில் கவனிக்காதவன் பின் உணர்ந்து, “ஹே… எதுக்கு டி அழுகுற…?” என்று கேட்டபடி அவளது முகத்தை நிமிர்த்த பார்க்க, அவளோ மேலும் அவனது நெஞ்சில் தன் முகத்தை அழுத்திக் கொண்டாள்…
“ம்ப்ச்ச்… என்னடி இது…” என்று கேட்டவன் பின் அவளது இருபுற தோள்களை பற்றி, “புடிக்கலையா குழலி…?” என கேட்க,
“நாங் உங்களைய அம்புட்டு பேர் முன்னாடியும் அவமான படுத்தணும்னுட்டு நினைக்கல… உங்க அப்பாரு என்ற ஆத்தாகிட்ட செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்கணும்ட்டு நெனைச்சேன் அம்புட்டு பேரு முன்னாடியும்… அதுக்கு உங்களைய வச்சு அவரைய பஞ்சாயத்துக்கு இழுக்கணும் யோசிச்சுத்தேன் அப்படி பண்ணினேன்…. அப்ப உங்களுக்கும் கஷ்டமுணுட்டு யோசிக்காம விட்டுப்புட்டேன்… மன்னிச்சுருங்க அத்தான்…” என்று கலங்கிய குரலில் பேசி மன்னிப்பு வேண்டியவள், மேலும் அவனுள் புதைய முயற்சித்துக் கொண்டிருந்தாள்….
“ம்ப்ச்ச்… இப்ப எதுக்கு அது பத்தி பேசிக்கிட்டு விடு…. எனக்கும் புரியுது… முதல்ல கோவம் இருந்துச்சு தான் ஆனா அப்புறம் விஷயம் முழுசா புரியவும் கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடுச்சு… இப்ப கோபம் எதுவும் இல்ல… ஆனா…” தன்நிலையை உண்மையாக பேசியவன் கடைசியில் இழுக்க,
தலை நிமிர்ந்து பார்த்தவள், “ஆனா…?” என கேள்வியாக கணவனை பார்க்க,
“நீ பண்ணது கொஞ்சம் தப்பு தான் சோ… அதுக்கான தண்டனை கண்டிப்பா உனக்கு கிடைக்கும்… ” என்றதும் முகம் சுருக்கியவளின் மூக்கை பிடித்து ஆட்டினான் புன்னகையுடன்…
“சரி தூங்கலாம் வா… டைம் ஆகுது…” என்க, அவனை புரியாது பார்த்தவள், பின்
“இப்படித்தேன் தண்டனைய குடுக்க போறீகளா…?” என முகத்தை பாவமாகி கேட்க, வாய்விட்டு சிரித்தவன்
“கேடி முட்டக்கண்ணி டி நீ…” என்றவன் அவளை விட்டு விலகி,
“உனக்கா எப்ப தோணுதோ… அப்ப பார்த்துக்கலாம்… உன் சம்மத்தோடு முழு மனசா நடக்கணும்… புரிஞ்சுதா… இப்ப வந்து தூங்கு வா…” என பேசியபடி படுக்கையின் ஒரு மூலையில் படுக்க, புடவை முந்தானையை திருகியபடி தயங்கி நின்றவள் மெல்லிய குரலில்
“ஆனா அத்தான்… இப்ப கொஞ்ச…”என கேட்க வரும் முன் கவி,
“நான் தொட்டா நீ எதுவும் சொல்ல மாட்ட ஆனா அது உன் முழு மனசோட நடக்குறதா இருக்காது முட்டக்கண்ணி… வேண்டாம்… ஒன்னும் பிரச்சனை இல்ல… நீ முதல்ல படிச்சு முடி இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு… அதுக்கு அப்புறம் மத்ததை பார்க்கலாம்…” என்றவனை காதல் பொங்க பார்த்தவள், அவன் அருகில் வந்து படுத்திருந்தவனின் சட்டை காலரை பிடித்து இழுத்து அவனது இதழில் மின்னல் வேகத்தில் ஒரு இதழ் ஒற்றலை வைத்துவிட்டு சட்டென விலகிவிட…
“ஏய்ய்… என்ன டி இது ஏதோ உதட்டுல கொசு கடிச்ச மாதிரி… “என்று அவள் கைபிடித்து இழுக்க முயல, அவனது கைக்கு அகபடாமல் விலகி இரண்டி ஓடியவள்,
அறையின் ஓரத்தில் இருந்த தன் பையை திறந்து இலகுவாக ஒரு சேலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்…
படுக்கையில் அமர்ந்து அவளையே புன்னகையுடன் பார்த்திருக்க, மனைவி உள்ளே சென்றதும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் இடது கையால் தன் தலையை கோதியவன் அப்பொழுது தான் அறையை கவனித்தான்…
‘பாவி… படுபாவி… ரூமை எப்படி அலங்கோலம் பண்ணி வச்சுருக்கா பாரு… இவளை…’ என பல்லை கடித்தவனுக்கு அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது அவனுக்கு…
தொடரும்….

Advertisement