Advertisement

UD:30

“இங்கேறு டி… ஒழுங்கா அடக்கமா இருந்து பழகு… என்ற மவன் வாழ்க்க உன்னால கெட்டுச்சு…பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன்…” என தயாராகி வந்தவளின் கையில் சொம்பை திணித்து விட்டு எச்சரிக்கை விடுத்தார் காயத்ரி…

அவளோ அவரது பேச்சிற்கு உதட்டை ஒருபக்கமாக சுளித்து, “ரொம்பத்தேன்… உங்க மவன ஒன்னும் பண்ணமா பொன்னு போல பாத்துகிடுத்தேன் மாமியாரே… ரொம்ப வெசன படாதீக…” என தலையை சிலுப்பிக் கொண்டு கவியழகனின் அறையை நோக்கி நடக்க தொடங்கினாள் குழலி…

அவளை உறுத்து பார்த்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு ‘அய்யோ…’ என்றிருந்தது… அவளது நடையில் துளியளவும் முதலிரவுக்கு செல்லும்  பெண்ணுக்குறிய எந்த அறிகுறியும் இல்லை… ஏதோ போருக்கு போவது போல் பால் சொம்பை எடுத்து செல்லது போல் தான் இருந்தது…

மகனது வாழ்க்கையை பற்றிய கவலையுடன் சமையலறையை நோக்கி சென்ற காயத்ரிக்கு எதுவோ சரியில்லை எதுவோ நடத்த போகிறாள் என்று தோன்றியது மனதிற்கு….

இங்கு அறைக்குள் நுழைய வலது காலை எடுத்து வைப்பதா அல்லது இடது காலை வைப்பதா என்று சில நொடிகள் யோசித்துக் கொண்டிருந்தாள் குழலி…

‘ம்ம்ம்… வூட்டுக்குள்ள நுழையும் போதே இதைய யோசிக்கல இப்ப மட்டும் என்னத்துக்கு யோசிக்குத… ஏதோ ஒன்னு வை…’என யோசித்தவள் மறுநொடி,’ ஆனா நாம வாழ போற அறையாச்சே வாழ்க்க முழுசும் இங்குட்டுத்தேன் இந்த லூசு பயலோடுத்தேன் குப்ப கொட்டணும் எதுக்கு ரிஸ்க்கு எடுக்குற புள்ள…?’என்று யோசித்தவள் பின் ஒரு முடிவோடு வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்று கதவை தாள் போட்டவள் திரும்பி அறையை சுற்றி ஒரு நோட்டமிட்டாள்….

“எங்க லூச காணோம்… நமக்கு பயந்து ஓடிருச்சா…?” என்று முனுமுனுத்தப்படி விழிகளை அழையவிட்டவள், படுக்கையின் அருகில் இருந்த மேஜையில் பால் சொம்பை வைத்துவிட்டு பால்கனியை பார்த்தபடி திரும்பியவள் அதிர்ந்து போனாள் தன் பின்னாள் நின்றிருந்த கவியழகனை கண்டு…

நெஞ்சில் கைவைத்து பெருமூச்சை எடுத்து விட்டவள், நிமிர்ந்து அவனை முறைத்து பார்த்தபடி, “லூசு… அறிவில்ல… இப்படித்தேன் பண்ணுவீகளா… சே…” என்று கத்தவும், பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என இத்தனை நேரம் உருப்போட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவளது திமிர் பேச்சில் கோபம் சுர்ரென வந்தது சடுதியில்…

அவளை பார்த்து பல்லை கடித்தவன் அவள் சுதாரிக்கும் முன், அவளை தன் கைகளின்  பூஜத்தால் கழுத்தோடு வலைத்து பிடித்து நங்கு நங்கென்று தொடர்ந்து பல கொட்டுகளை தர, குழலி,

“ஆஆஆஆஆ…. விடுடா லூசு… விடு… ஆஆஆ… வலிக்குது கூமுட்ட பயலே… விடு….” என அலறியபடி அவன் அளித்த கொட்டுகளை வாங்கிக் கொண்டே அவனது கையிடுக்கில் இருந்து விடுப்பட முயன்றுக் கொண்டிருந்தாள்….

முயன்றாளே ஒழிய ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை…பத்து பதினைந்து கொட்டுக்களை அவனிடம் இருந்து வாங்கிய பின்னரே குழலியை விடுவித்தான் கவி….

அவன் விட்டதும் துள்ளிக் கொண்டு விலகி நின்றவள் பறபறவென தன் தலையை தேய்த்தவள் முகம் சுருங்க அவனை முறைத்தப்படி, “லூசா டா நீ… என்னத்துக்குவே இப்படி கொட்டுன….?” என கேட்கவும்,

கவி, “திரும்புவும் திமிராவா பேசுற… உன்ன..” என மீண்டும் அவளை அடிக்க பக்கம் வர, சுதாரித்துக் கொண்டாள் குழலி…

படுக்கையின் மறுபுறத்தில் ஓடிப்போய் நின்றுக் கொண்டாள் முன்ஜாக்கிரதையாக… “இங்குட்டு பாரு… சும்மா கை ஓங்குற வேலைய வச்சுக்காதா… பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன்… “என்று விரல் நீட்டி மிரட்டியவளின் மற்றொரு கை தலையை தேய்ப்பதை நிறுத்தவில்லை அடி சற்று பலம் தான் போல…

“என்னடி பண்ணுவ… வாய் வாய்… வெறும் வாய் மட்டும் தான்… இனி வாய தொரந்த அவ்வளவுதான் மண்டைய ஒடைச்சுருவேன் ஜாக்கிரத… ஆளையும் சைஸ்சையும் பாரு… வாய் மட்டும் எட்டுருக்கு நீலுது… என்னடி திமிரு உனக்கு அப்படி… பொட்ட புள்ள மாதிரியா இருக்க… அவுத்துவிட்ட கழுத மாதிரி சுத்துற…” என கவி கடுப்பில் கத்திக் கொண்டே போக,

“ஏய்ய்… என்ன நீ ரொம்பத்தேன் பேசுறீக… ஆமா நாங் அப்படித்தேன்… இப்ப என்ன வந்தது உமக்கு… உன்னைய ஆரு எங்கூட பேச சொன்னது … உன்ற ஜோலிய பார்த்துட்டு போக வேண்டியத்தானே…” என்று இவளும் எகிற,

“அடிங்கு… வாய தொரந்த கொன்னுருவேன்… ஒழுங்கா இங்க வா…” அவளை மீண்டும் அடிக்க எண்ணி பிடிக்க போக, கவியின் கையில் அகப்படாமல் நூலிடைவேலியில் தப்பித்து அலங்கார கண்ணாடி மேசையின் முன் சென்று நின்றாள்…

“எதுக்கு…? நீரு திரும்பவும் கொட்டவா…? நெனப்புத்தேன்… மொத என்னைய கொட்டுனதுக்கு மன்னிப்பு கேளுங்க…”என்று கைகளை கட்டிக் கொண்டு தோரணையாக கேட்க, அவளை பார்த்து எள்ளலாக சிரித்தவன்,

“நான் எதுக்கு மேடம் மன்னிப்பு கேட்கணும்… நீ தான் என்கிட்ட கேட்கணும்… நான் செய்யாத தப்புக்கு என்னை பஞ்சாயத்துல நிக்க வச்சுதுக்கு… வீட்டுல அப்பா அம்மா ‘வ மரியாத இல்லாம பேசுறதுக்கு… என் காதல அசிங்க படுத்துனதுக்கு…” என்று முகம் இறுக பேசியவனை பார்த்து இப்பொழுது குழலி தலையை குனிந்துக் கொண்டாள்  குற்றணர்வில்…

“என்ன மேடம் அமைதியா தலையை குனிஞ்சு நின்னா என்ன அர்த்தம்…?” என்று நக்கலாக கேட்டபடி அவள் அருகில் செல்ல முயல, சட்டென சுதாரித்து கொண்டவள், கண்ணாடி முன்னிருந்த சீப்பை கையில் எடுத்துக் கொண்டு கவியை அடிக்க குறிப்பார்த்தாள் நொடியில்…

“பக்கம் வந்தீகன்னா அம்புட்டுத்தேன்… எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு…” என்று மிரட்டவும், அவளையும் அவள் கையில் இருந்த சீப்பையும் மாறி மாறி பார்த்தவன், ஒரு கேலி புன்னகையுடன்

“பக்கம் வந்தா என்ன பண்ணுவியாம்…?” என்றபடி ஓரடி எடுத்து வைக்க அவன் மீது பாய்ந்தது குழலியின் கையிலிருந்த சீப்பு…

வாய் வார்த்தைக்கு மிரட்டுவாள் என்று நினைத்தவன் உண்மையில் தன்மீது சீப்பை எரிந்ததும் கோபம் வர, “முட்டக்கண்ணி உன்ன…..” என பல்லை கடித்தபடி மேலும் ஓரடி எடுத்து வைக்க இப்பொழுது அவன் மீது விழுந்தது பௌடர் டப்பா…

அடுத்து அவள் தாக்குதலை தடுக்கவேண்டும் என்ற முனைப்போடு நெருங்கியவன் அவள் கையில் சட்டென குடிந்த எண்ணை பாட்டிலை கண்டு தேங்கி நின்று விட்டான்…

அது சற்று கனம் என்றாலும் எண்ணை கீழே கொட்டினாலும் பிரச்சினை, தன் மேல் கொட்டினாலும் பிரச்சினை என்று புரிந்தவன் பல்லை கடித்தபடி சற்றே அமைதி காத்தான்…

அவனது அமைதியை கண்டவள், வெற்றி புன்னகையுடன் “பக்கம் வரணும்னுட்டு நினைச்சீகன்னா அம்புட்டுத்தேன் சொல்லிட்டேன்… ” என்று பாட்டிலின் மூடியில் கையை வைத்துக் கொண்டு மிரட்ட, கவி

“நீ எல்லாம் என்ன பிறவி டி… இப்படி உயிர வாங்குற…”என்று எரிந்து விழ,

குழலி முன்பு போல் இல்லாது இப்பொழுது சட்டென, “கண்டிப்பா மனுச பிறவித்தேன்… உங்களைய மாதிரி இல்ல… கோழிக் கூட சாப்பிடாத, அதோட ருசி தெரியாத வேற்று கிரகவாசி இல்ல நாங்…” என,

“பைத்தியம்… நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க…?”

“நாங் செரியாத்தேன் சொல்லுத்தேன்… நீரெல்லாம் என்னைய மனுச ஜன்மம் இல்லன்னுட்டு சொல்லுதீக… உமக்கு மொத அந்த தகுதியே இல்ல… நீரெல்லாம் என்னத்துக்குவே வெளிநாட்டுல போய் வேல பார்த்து கிழிச்சீக… வெளிய சொல்லிறாதீக வெட்ககேடு…” என அருவருப்பான முகபாவனையை காட்டினாள் கோபமாக…

கோழியை இனி ருசி பார்க்க முடியாதே என்னும் கவலை அவளுள், அது இப்பொழுது வெளிப்படுக்கிறது… உடன் தன்னை அவனது அன்னையிடம் சொன்ன வார்த்தையும் சேர்ந்து விட, அனைத்தையும் ஒன்று சேர்த்து விட்டாள்…

ஆனால் கவியழகனுக்கு தான் மண்டை காய்ந்து போனது அவளது செயல் மற்றும் வார்த்தையில்… அசைவம் உண்ணாததிற்கும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கும் என்ன சம்மந்தமென்றே புரியவில்லை அவனுக்கு….

“உன்னைய நாலு அஞ்சு கொட்டோடு விட்டிருக்கவே கூடாது டி….” என்றவன் முகத்தை தீவிரமாக்க,

குழலிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் உதட்டை சுழித்து புருவம் சுருங்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்… கவியும் அவளையே விழியோடு விழியகலாமல் பார்த்திருந்தவன் நொடி பொழுதில் அவள் மேல் பாய்ந்து, கையிலிருந்த எண்ணை பாட்டிலை பிடிங்கினான் அவளுடன் மல்லுக் கட்டி…

“விடு டா லூசு… எரும… விடு…” என பெண்ணவள் எத்தனை போராடியும் கட்டுக்கோப்பாக உடம்பை வளர்த்து வைத்தவன் முன் கோழி குஞ்சு போல் இருந்தவளுக்கு வேகு நேரம் போராட முடியாமல் தோற்று, பாட்டில் அவனது கைக்கு இடம் மாறியது…

பாட்டிலை பிடுங்கியவன், இடது கையால் அவளை வளைத்துபிடித்தபடி அதை தரையில் ஓராமாக வைத்துவிட்டு நிமிர்வதற்குள் பட்டுபட்டுவென பல அடிக்கள் குழலியிடம் இருந்து வந்து விழுந்தது கவிக்கு…

அனைத்தும் பாட்டிலை வைக்கும் வரை தான், அதன் பின் நிமிர்ந்தவன் அவளது இருகைகளையும் வளைத்து பிடிக்க முயற்சிக்கும் நேரம் அவனது கையை பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தாள் தப்பிப்பதற்காக…

அவளது இச்செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத கவி, “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ… கிறுக்கி… ” என்று அலறியபடி கையை அவளிடம் இருந்து உருவி உதறிக் கொள்ள, அந்த இடைவேளையை பயன் படுத்திக் கொண்டவள் அவனை விட்டு விலகி பின் பக்கம் இருந்த கப்போர்ட்டில் முட்டி நின்றாள்…

என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்ற மனநிலையில் இல்லாமல், தன்னை அடுத்து பிடிப்பதற்குள் அவனை நிலை குழைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கப்போர்டை திறந்து உள்ளிருந்த அவனது துணிகளை எடுத்து அவன் மீது வீச தொடங்கினாள் வேகமாக…

இதை சற்றும் எதிர்பார்க்காத கவியழகன் கை உதறுவதை நிறுத்திவிட்டு அவளை தடுக்கும் முனைப்போடு முன்னோக்கி செல்ல, வெரி வந்து விட்டது குழலிக்கு

“போ … தள்ளி போ… பக்கம் வந்த மண்டைய ஒடைப்பேன்… போ…” என்று கத்தியபடி மேலும் மேலும் துணிகளை வீச, ஒருகட்டத்தில் அவனது துணிகளும் தீர்ந்துவிட்டது…

‘சை… அம்புட்டுத்தேன் டெர்ஸ் இருக்கா… பஞ்ச பையன்… இம்புட்டு சொத்து வச்சிருக்காக கூட கொஞ்சம் துணி வாங்கி வச்சாத்தேன் என்னவாம்… ‘என மனதில் புலம்பியபடி அடுத்து எதை எடுத்து வீசலாம் என்று கண்களை அலையவிட்டாள் வேகமாக…

அவளது அந்த நொடி நேர அமைதியை கவி பயன்படுத்தி கொண்டான் அசுர வேகத்தில்… வேகமாக அவள் இருகைகளையும் பின்னோடு முறுக்கி தன்னை நோக்கி இழுத்து அணைத்தான் அவளை தடுக்கும் எண்ணத்தில்….

ஆனால் இதை எதிர்ப்பார்க்காத குழலி, “ஆஆஆஆ… கை … கை… வலிக்குது விடுடா… லூசு… எரும… விடுடா…”என்று அலறியவளை சிறிதும் பொருட்டு படுத்தாமல் தள்ளிக்கொண்டு சென்றவன் மேசையில் இடித்து நிற்கும் போது தடுமாறி விழாமல் இருக்க ஒற்றை கையால் மேசையை அழுத்தி பிடித்தபடி தன்னவளையும் தன்னையும் சேர்த்து நிலை நிறுத்தி நின்றான் சடுதியில்…

அந்த தடுமாற்றதில் ஒற்றைக்கையால் தன்னை பிடித்திருந்தவனை தள்ளிவிட்டு விலக முயற்சிக்க, அவனோ  வெடுக்கென்று பிடித்து இழுக்க, அவளோடு சேர்ந்து படுக்கையில் மல்லாக்க விழுந்தான் எதிர்பாரா விதமாக…

மேசையை இடித்து நிற்கும் பொழுது அவன் கை விரல்கள் அங்கிருந்த ஐபேட்டில் பட்டுவிட, அது அவர்கள் படுக்கையில் விழந்த சமயம் பார்த்து,

நீ அணைக்கின்ற வேளையில்

உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்….

என்ற வரியில் திடுக்கிட்டவள் அவசரமாக அவனை விட்டு எழ முயல, அவனோ அவளை விடாது முழங்கைக்கு மேல் பிடித்து இழுத்தான் வேகமாக,

நீ வெடுக்கென்று ஓடினால்

உயிர்ப் பூ சருகாக உலரும்….

அவன் இழுத்த வேகத்தில் அவன் நெஞ்சின் பின் பொத்தென்று விழுந்தாள் படபடக்கும் இதயத்தோடு, அவனோ கண்களில் அத்தனை காதலையும் தேக்கி வைத்து அவளது முகத்தை அனுவனுவாக சரிக்க துடிதுடித்து போனாள் பேதையவள்,

இருகைகள் தீண்டாத பெண்மையை

உன் கண்கள் பந்தாடுதோ…..

அவர்கள் இருந்த ஏகாந்த நிலையை இன்னும் அதிகமாக்கும் முனைப்போடு ஒருபக்கம் பாடல் ஓடிக்கொண்டிருக்க, இங்கு கவியோ கொஞ்சம் கொஞ்சமாக தன்நிலையை இழக்க தொடங்கினான்…

தன் மேல் கிடந்தவளை லேசாக அணைத்தப்பிடித்தவன், நொடியில் அவளை புரட்டி அவள் மீது படர, குழலிக்கு தன்னை சுற்றி நடக்கும் யாவும் சிலையாகி போனது…

அவளது பார்வை மொத்தமும் கவியின் காதல் ததும்பும் விழிகளிலேயே குடியிருக்க… அவளது நிலையை புரிந்த கொண்ட கவி,

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா

என் மார்போடு வந்தாடுதோ…

என அடுத்து அடுத்து வந்த பாடலின் வரிக்கு ஏற்றார் போல் ஒரு மோகன புன்னகையுடன், அவளது கன்னம் வருடி பல வருட ஆசையே நிறைவேற்றிக் கொண்டவன், சில நாள் ஆசையாக தோன்றியதை நிறைவேற்ற மேலும் முன்னேரினான் அவள் கன்னத்தில் தன் முதல் அச்சாரத்தை பதித்து…

அவனது செயலில் விழி மூடி கிறங்கி போனவள் இவ்வுலகிலேயே இல்லாமல் போனாள்… பெண்ணவள் உணர்ந்த முதல் காதல் பரிசு அவளை கனவுலகிற்கு இழுத்து சென்றது…

இருகன்னங்களிலும் தன் அச்சாரத்தை பதித்தவன் நிமிர்ந்து தன்னவளின் வதனத்தை காண அதில் அத்தனை தேஜஸ்… தன்னவளின் மேல் கொண்ட காதல், மனைவியென்ற உரிமை, மனதை வேறு உலகிற்கு இட்டு செல்லும் பாடல் என அத்தனையாலும்  அவன் அவனாக இல்லாமல் போக… அவனது பார்வையும் கைகளும் எல்லையை மீற தூண்டியது…

இன்னது என்று வகுத்தறிய முடியாத உணர்ச்சியில் சிக்கியிருந்தவளின் உதடுகள் துடிக்க கைவிரலைகளை இறுக மடக்கிக் கொண்டு லேசாக உடல் நடுங்க தன் முன் இருந்தவளின் இதழில் கண் பதித்த கள்வன்… அவளது கன்னத்திலிருந்து இப்பொழுது தாக்குதலை அவளது இதழ்களுக்கு இடம் பெயர்க்க எண்ணி குனிந்தான் ஆர்வம் பொங்க…

சரியாக பொழுது ஐபேட்டில்,

டங்காமாரி ஊத்தாரி

புட்டுக்கின்ன நீ மாரி…

என கட் சாங்(cut song) ஒழிக்கவும், இருவருக்கும் தாங்கள் இருந்த காதல் கனவுலகம் அறுந்தவிட்டது பொசுக்கென்று…. கண்மூடி மஞ்சத்தில் இருந்தவள் பட்டென விழித்து பார்க்க தனக்கு மிக அருகில் தெரிந்த தன் கணவனின் முகத்தை கண்டு உள்ளம் படபடக்க வேகமாக இமைத்தட்டியவளுக்கு அப்பொழுது நிகழ்ந்த நிகழும் நிகழ போகும் சம்பவம் மண்டையில் உரைத்தது பட்டென்று…

கவிக்கோ, இதுதான் என்று கூற முடியாது நிலையில் இருந்தான்… ஆனால் அவளது இதழுக்கும் தன் இதழுக்கும் இருந்த நூலிடைவேலியை மட்டும் அகற்றவில்லை…

அவளது இதழில் இருந்து சிறகடிக்கும் விழிகளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஒன்று விளங்கியது… இன்னும் சில நொடிகளில் தன்நிலைக்கு மனைவி வந்து காளி அவதாரம் எடுக்க போகிறாள் என்பது….

அவ்வெண்ணம் கவிக்கு உதிக்கவே, நொடியும் தாமதிக்காது சட்டென அவளது இதழோடு தன் இதழை அவசரமாக ஆழமாக பொருத்தினான் அவளை அடுத்து யோசிக்க விடாது…

பூங்குழலிக்கு இவன் என்ன செய்கிறான் என்பதை புரிந்துக்கொள்ளவே சில நொடிகள் பிடித்து, அவனது செயலால் வந்த அதிர்ச்சியில்… அந்த நொடிகளை அழகாக பயன்படுத்திக் கொண்டான் அந்த காதல் கள்வன் என்றுதான் சொல்லவேண்டும்…

சில பல நொடிகளில் குழலியை விட்டு பிரிந்தவன், எதுவும் புரியாது பேந்த பேந்த விழித்தவளை பார்த்து மந்தகாச புன்னகையுடன் கண்ணடித்து,

“என்ன டி முட்டக்கண்ணி…” என கேட்டதும் தான் தாமதம்,  

கிறக்கத்தில் இருந்த விழிகள் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி அவனது கேள்வியில் இப்பொழுது கோபத்தை தத்தெடுத்திருந்தது…

“பொறுக்கி…” என்று பல்லை கடித்து கத்தியவள் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டாள் தன் பலம் அத்தனையும் கூட்டி…

கவியோ அவள் தள்ளியதில் விலகி படுக்கையில் மல்லாந்த விழந்தான் இளகுவாக… அவன் எண்ணியது ஈடேறிய சந்தோஷம்  அப்பட்டமாக தெரிந்தது அவன் முகத்தில்…

அவனை தள்ளியதும் வேகமாக படுக்கையை விட்டு எழுந்தவள், திரும்பி அவனை பார்த்து முறைத்தப்படி, “பொறுக்கி… பொறுக்கி… உன்னய கொல்லாம விடமாட்டேன் எரும…” என அடிக்க பாய்ந்தவளின் கையை பிடித்து கவி இழுக்க, இம்முறை சுதாரித்தவள் அவனை தொட்டு விடாது கைகளை இருபக்கமும் ஊன்றி குனிந்து நின்றவளின் முகத்திற்கு நேராக இருந்தது கவியின் குறும்பு வழிந்தோடிய விஷம முகம்…

அவனை பார்த்து அவள் முறைக்க, அவனோ ஒற்றை கண்ணை சிமிட்டி பறக்கும் முத்ததை அவளை நோக்கி வீச, அத்தனை கோபம் அவளுள் ஏன்னென்று புரியாமல்…

மனதிற்கு விரும்பியவன் தான், விருப்பத்தோடு திருமணம் புரிந்தவள் தான் ஆனால் இந்நொடி அவளுள் இருந்தது அத்தனையும் கோபம் மட்டும் …

வேகமாக அவனை விட்டு விலகி எழுந்து நின்று, இடுப்பில் இருகைகளை முட்டுக்குடுத்தவள், அவனை முறைத்தப்படி,

“ஒமுங்கு மருவாதையா வெளிய போ…” என்க, இவள் என்ன கூறுகிறாள் என்று புரியாது பார்த்தான் முதலில், பின் புரிந்ததும் புருவம் சுருங்க

“நான் எதுக்கு போகணும்…?” என கேட்க,

“நீத்தேன் போகணும்… போயே ஆகணும்… மருவாதையா போ இங்கிட்டிருந்து…” என குரலை உயர்த்த, மெல்ல படுக்கையை விட்டு எழுந்தவன், அவளை நிதானமாக பார்த்த படி ஐபேட்டில் ஓடிய பாட்டை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து,

“நான் எதுக்கு போகணும்னு காரணம் சொல்லு… அப்புறம் நான் போறதா வேண்டாமானு முடிவு பண்ணுறேன்…” என்று நெஞ்சுக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு கூற,

அவனை முதலில் முறைத்து பார்த்தவள் வேக மூச்சுசெடுத்து, தன்னை சமன் செய்ய முயற்சித்தபடி உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள் பதில் கூற விருப்பமில்லாமல்…

“சொல்லு டி… நான் எதுக்கு போகணும்…?” என அழுத்தி கேட்கவும், குழலி

“ஏன்னா நீரு எங்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுறீக… அத்தேன்… வெளிய போக சொன்னேன்…” என்றவளை கேவலமான பார்வை பார்த்து வைத்தான் கவி….

அதை கண்டு, குழலி “என்ன என்ன பார்வ வேண்டிகெடுக்கு… ஒழுங்கா வெளியே போங்க…” என்று வாசலை கை காட்டியவளை பார்த்து இப்பொழுது வாய் விட்டு பெரிதாக சிரித்தவன்,

“அடியேய் அரமென்டலு… இன்னைக்கு நான் தப்பா நடந்துக்கலைன்னா தான் தப்பாயிரும் டி என் வெளக்கெண்ண…” என்று மண்டையில் ஒரு கொட்டு வைத்தான் சைக்கிள் கேப்பில்…

“ஸ்ஸ்ஸ்… எரும… போடா வெளிய… நீ தப்பா நடந்துத்தேன் ஆகணும்னுட்டு இங்குட்டு ஆரும் சட்டம் போடல… மருவாதையா போயிரு…” என்று மண்டையை தேய்த்தபடி மீண்டும் கூற, கவியோ சிரித்தபடி

“முடியாதுன்னு சொன்ன என்ன பண்ணுவ…?” என்று புருவம் உயர்த்தி கேட்க,

குழலியோ முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு, “போக வைப்பேன்… ”

“அப்படியா…?” என ஆச்சரியப்பட்டு பார்த்தவன், “முயற்சி பண்ணி பாரு…” என்று கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாக நிற்க, குழலியோ முறைத்தபடி அவனது கையை பிடித்து இழுக்க முயற்சித்தாள் ம்ஹூம் முடியவில்லை, நெஞ்சுக்கு குறுக்காக கட்டிருந்த கைகளை கூட அவளால் பிரிக்க முடியவில்லை…

சற்று முயன்று பார்த்தவள் முடியாமல் போகவும், அவனது கை புஜத்தை பற்றி இழுக்க, ம்ஹும் அதுவும் முடியவில்லை… பின் மூச்சு வாங்க தள்ளி நின்று அவனை இமைக்காமல் பார்த்து முறைக்க, கவியோ அவளை பார்த்து நக்கலாக சிரித்து வைத்தான்….

‘அய்யனார் சிலையாட்டாம் நிக்குறத பாரு… இவனைய எப்படி நகத்துறது… விட்டுறாத புள்ள இது உன்ற மான பிரச்சன… ஒரு அடியாச்சும் இவனைய நகத்தியே ஆகணும்…’ என்று உள்ளுக்குள் உறுதி கொண்டவள், உதட்டை சுழித்தி யோசிக்க தொடங்கினாள்…

அவளையே சிரிப்புடன் பார்த்திருந்தவன், “என்ன முட்டக்கண்ணி என்னாச்சு… கண்ணை மட்டும் உருட்டுற… அவ்வளவுதானா…?” என்று அவளை கிண்டல் செய்யவும்,

வேகமாக அவன் பின் சென்றவள் அவன் முதுகில் கை வைத்து பலம் கொண்ட மட்டும் தள்ளவும் கவி சற்று தடுமாற ஆரம்பித்தான் ஆரம்பத்தில்… அதை கவனித்தவள் சந்தோஷத்தில் மேலும் தள்ள முயற்சிக்க , கவியோ இப்பொழுது உசாராகி மேலும் அழுத்தம் குடுத்து நிற்க அவ்வளவுதான் அதற்கு மேல் குழலியால் முடியவில்லை…

மூச்சுவாங்க விலகி நின்றவளுக்கு ஆயாசமாக வந்தது… இவனை அறையில் இருந்து அப்புறபடுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள்…

கவியின் அருகில் இருந்தால் தான் உருகி கரைவது உறுதி… அதை அவன் ஆயுதமாக பயன் படுத்த எண்ணுகிறான் என்று புரிந்துவிட்டது குழலிக்கு… அவனை தன்னை நெருங்க விட கூடாது என்பதில் கருத்தாக இருந்தவளுக்கு இப்பொழுது அவனை அறையை விட்டு வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற தீர்மானம் அவளுள்… உடல் பலம் இவனிடம் செல்லுபடியாகாது என்று புரிந்துக் கொண்டவள் மதியின் பலத்தை உபயோகிக்க நினைத்து யோசிக்க தொடங்கினாள்…

மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு உள்ளுக்குள் அனேக கேள்விகள் அதை அவளிடம் கேட்டால் பதில் கிட்டாது என்பதை உறுதியாக அறிந்தவன் அவளது முகத்தில் வந்து போன பாவனைகளை படிக்க முயன்றுக் கொண்டிருந்தான் சில நிமிடங்கள்…

தீவிர யோசனையில் இருந்த பூங்குழலியின் முகம் பட்டென பல்ப் போட்டார் போல் பிரகாசம் எறிந்தது அவளுக்கு தோன்றிய யோசனையில்…

அதையும் கவனித்த கவி, “என்னடி முட்டக்கண்ணி… ஏதாச்சும் யோசனை வந்துருச்சா…?” என கேட்க,

பூங்குழலியோ தன் சேலை முந்தானையை சுருட்டி உதறியவள் அதை தன் இடுப்பில் சொருகிக் கொண்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள் மிதப்பாக…

அதை கண்டு துணுக்குற்றவன், ‘என்ன இவ… ஒரு டைப்பா பண்ணுற… ஏதாச்சும் விளங்கமா யோசிக்க போறாளா…?’என்று யோசித்தவன், அவளிடம் “என்னடி லுக் எல்லாம் பலமா இருக்கு…என்ன பண்ண போ…. ஏஏஏஏ” கேள்வியை கேட்டு முடிக்கும் முன், குழலி படக்கென்று குனிந்து அவனது வேஷ்டியை கொத்தாக பற்றியதில் பதறி விட்டான் அவளது கணவன்…

அவனது அலறலை பார்த்து நக்கலாக சிரித்தவள், அவனது வேஷ்டியை பிடித்திழுக்க மேலும் பதறி விட்டான்…

“ஏய்ய்ய்… என்ன பண்ணுற… விடுடி லூசு…”

“ம்ம்ம்… பார்த்தா என் அத்தானுக்கு எப்படி தெரியுதாம்…?” என்று கேட்டவளின் வார்த்தையில் அத்தனை நக்கல்…

அவளது கேள்வியில் பல்லை கடித்தவன், “சரியான லூசா இருப்பா போல… சை…”என முனுமுனுக்கும் போதே குழலி வேஷ்டியை இழுத்தபடி அறை கதவை நோக்கி போக, எங்கு மானம் கப்பல் ஏறிவிடுமோ என்ற பயத்தில் கவி,

“ஏய்ய்ய்ய்… கிறுக்கு… விடுடி… பெல்ட் கூட போடல… லூசு… விட்டு தொல…” என கத்தியவனை பார்த்து கேலியாக சிரித்தவள்,

“நல்லாத போச்சு… அப்பத்தேன் பயம் இருக்கும்…”என்றவள் அவள் நினைத்தது போல் அவனை அறைக்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தினாள் வெற்றிகாரமாக, இருகைளையும் தட்டியபடி…

அவள் விட்டதும் அவசரமாக வேஷ்டியை சரி செய்தவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது… அவன் வாய் திறக்கும் முன், குழலி

“என்ன அத்தான் இது… எம்பொழப்பு ரொம்ப கஷ்டந்த்தேன் போல… கோழியும் சாப்பிடறதில்ல… ஒழுங்கா வேஷ்டியும் கட்ட தெரியல… இப்படி இருந்தா எப்புடி அத்தான்…?” என அறை கதவின் மீது ஒரு கையால் ஊன்றி நின்றவள் மறுகையை இடுப்பில்  வைத்துக்கொண்டு கணவனிடம் சந்தேகம் கேட்டாள் பாவமாக…

அவன் கோபத்தில் அவளுக்கு பதில் பேச வரும்முன் ,மீண்டும் குழலி “என்ன மாமனாரே… என்ன உங்க மவன் நிலம இப்படியாய் போச்சு…?”என்று பாவபடுவது போல கத்தி பேசியதில் கவியழகன் அதிர்ந்து திரும்பி பார்த்தான் தந்தையை…

தொடரும்….

Advertisement