Advertisement

UD:28
“விக்னேஷ் தம்பி கார் சாவி குடுத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்… இந்தாங்க தம்பி…” என விக்கியிடம் சாவியை நீட்ட, சைந்தவி அதிர்ந்தாள் என்றாள் கவியழகனோ அவனை பார்வையால் ஆராய்ந்தான்…
“ம்ம்ம்… தேங்க்ஸ்…” என பெற்றுக்கொண்டதும் குமார் போய்விட, விக்கி சைந்தவியின் புறம் திரும்பினான்…
அவன் பேச வாயெடுக்கும் முன், “ஏன்ணே கிளம்புதீக… ஒரு வார்த்த கூட சொல்லல… ஆமா யார கேட்டு கிளம்புதீக… இல்ல இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு பொறவு போலாம்…” என முகத்தை சுருக்கினாள்…
அவளது வார்த்தைக்கு சிறு புன்னகையை பதிலாக தந்தவன், முகம் மேலும் சுருங்குவதை கண்டு, “இல்ல சைந்து… வந்து ரொம்ப நாள் ஆச்சு… போயாகணும்… இங்க இருந்தே ரொம்ப நாள் மேனேஜ் பண்ண முடியாது டா வொர்க்கை… இது ஏற்கனவே பிளான் பண்ணது தான்… அடுத்த முறை கண்டிப்பா வரேன் இதே மாதிரி…” தன் நிலையை நிதானமாக எடுத்து கூறியவனை கவியழகன் பார்வையால் அளந்து கொண்டிருந்தான் எதோ ஒன்று சரியில்லை என்பதை போல் தோன்றியது அவனுக்கு…
“புரியுதுணே… இருந்தாலும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்ல…?” என இழுக்க, அதற்கும் புன்னகையை பதில் அளித்தான் விக்கி….
சைந்தவி தான் முகத்தை உர்ரென்ன வைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள் அன்னையிடம் கூறுவதற்காக… செல்லும் அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் நண்பனின் புறம் திரும்பி,
“மாப்ள…” என்று ஏதோ கூறும் முன் அவனது ஆராய்ச்சி பார்வை விக்கியை பேச விடாது தடை செய்தது…
அவனது திணறலையும் கவனித்த கவி, இருக்கையில் இருந்து எழுந்து, “வா மச்சான்… திங்ஸ் பேக் பண்ணலாம்… அப்புறம் ஏதாச்சும் மிஸ் பண்ணிற போற…” என்றவன் அந்த ‘மிஸ்..’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் குடுத்து சொல்ல, விக்கி
‘இவன் ஏதோ மீன் (mean) பண்ணி பேசுற மாதிரி இருக்கே…’ என எண்ணிக் கொண்டே எழ, காயத்ரி வந்து சேர்ந்தார் அவ்விடத்திற்கு…
“என்ன ராசா… சட்டுன்னு கிளம்புதீக… கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போறது…?”
“இல்ல ஆண்ட்டி… ஏற்கனவே ரொம்ப நாள் ஆச்சு… நிறைய வொர்க் அப்படியே இருக்கு…முன்னாடியே பிளான் பண்ணது தான் கிளம்பணும்னு… கரெக்டா கவியோட மேரேஜும் முஞ்சுருச்சு…. இன்னும் சொல்ல போனா நான் காலைல கிளம்புற மாதிரி தான் இருந்துச்சு முதல்ல அப்புறம் மேரேஜ் இருந்தனால அதை முடிச்சுட்டு போலாமேன்னு தள்ளி போட்டுடேன்…” என விளக்கமளிக்க,
“அத்தேன் தம்பி… இருந்ததுத்தேன் இருந்தீக கூட ஒருநாள் இருக்குறது… ராசா ஏதோ பொண்ணு பார்த்தீகளே அது என்னாச்சு…?” என கேட்கவும் அவசரமாக பார்வையை சுழற்றினான் விக்கி, சைந்தவியை தேடி…
ஆனால் அவள் அங்கு இல்லாததும் தான் நம்மதி ஆயகற்று அவனுக்கு… பின் காயத்ரியின் முகம் பார்த்தவன், “சொல்லுறேன் ஆண்ட்டி… ஆனா இப்ப இல்ல…” என்றான் சிறு புன்னகையுடன்…
“ம்ம்ம்… செரி… அப்போ சாப்புட்டுத்தேன் கிளம்பணும்…?” என கண்டிப்புடன் கூறவும்,
அவர் அருகில் சென்று தோளோடு அணைத்தவன், “இல்ல ஆண்ட்டி… இப்ப கிளம்புனா தான் எனக்கு சரியா இருக்கும் போய் சேர…” என்னும் போதே அவர் முகம் சுருங்கவும், விக்கி மேலே தொடர்ந்தான்
“ஆனா நைட் சாப்பாட்ட பேக் பண்ணி குடுத்துடுங்க…. உங்க சமையல மிஸ் பண்ண மாட்டேன் ஆண்ட்டி…”என ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைக்க, அவன் தலையை லேசாக கலைத்து விட்டவர்,
“என்னவோ ராசா… நீ வந்த மொத  நாள் அப்ப இருந்தாப்புல இப்ப இல்லையோன்னு தோணுது… இந்த வூட்டு பையனாவே பார்த்துட்டேனா இப்ப நீ கிளம்பும் போது சங்கடமா இருக்கு… அடிக்கடி வந்துட்டு போக இரு ராசா…” என்று கன்னம் வருடியவர் அவனுக்காக இரவு உணவை தயார் செய்ய சென்றார் மனதாங்களுடன்…
அன்னை சென்றதும் கவி, “சரி மச்சான்… எல்லாம் செக் பண்ணிக்கலாம்…” என்றழைத்தபடி அவனது அறை நோக்கி செல்ல, விக்கி
‘நடந்ததை சொல்லலாமா…. தப்பா எடுத்துப்பானா…? சே… இப்படி அவன் தங்கச்சின்னு தெரியாம பார்க்க போய் கஷ்டத்துல மாட்டிக்கிட்டேன்… எல்லாம் அவளால வந்த வினை… அவள….’ கனியை நினைத்து பல்லை கடித்தான் அடக்கப்பட்ட கோபத்தில்…
அறைக்கு வந்து தயார் நிலையில் இருந்த அவனது பைகளை எடுத்து வைத்தவனை இமைக்காமல் பார்த்திருந்த கவியழகன்,
“உனக்கும் கனிக்கும் என்ன பிரச்சினை மச்சான்…?” என நேரிடையாக கேட்டேவிட்டான்…
இந்த நேரிடையான கேள்வியில் முதலில் அதிர்ந்து திணறியவன், பின் சமாளித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “செட் ஆகாது டா… விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்…” என எங்கோ பார்த்தபடி நிமிர்ந்து நின்று கூறியவனை பார்வையால் அளவெடுத்த கவி, கைகளை கட்டிக்கொண்டு
“கனிமொழி என் தங்கச்சி விக்னேஷ்…” என்ற வார்த்தையின் உறுதியில் அதிர்ந்து நண்பனை திரும்பி பார்த்தான் விக்கி…
அவனது பார்வையில் எதை உணர்ந்தானோ என்னவோ தன் வார்த்தையில் மென்மையை கண்டு வந்தவன், “இதுவரை ஒரு அண்ணனா நான் என் தங்கச்சிக்கு எதுவும் செய்யாம இருந்திருக்கலாம் ஆனா இனி அப்படி இல்ல…” என இன்னும் நிமிர்ந்து நின்று,
“எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் அதுனால தான் என் தங்கச்சின்னு தெரிஞ்சும் எதுவும் சொல்லல… ஆனா இப்ப நீ அமைதியா செட் ஆகாது ன்னு சொன்னா என்ன அர்த்தம்…?” என கேள்வியோடு கேள்வியின் பார்வையோடு நிறுத்த…
அவன் நிலையை புரிந்துக் கொண்ட விக்கியும், “உன் தங்கச்சி என்னை விரும்பலைன்னு அர்த்தம்… உன் தங்கச்சிக்கு என் மேல் சின்னதா ஒரு எண்ணம் கூட இல்லைன்னு அர்த்தம்… நான் இத்தனை நாள் உன் தங்கச்சிய நினைச்சு சுத்துனது வேஸ்ட்னு அர்த்தம்…” என வேகமாக பதில் உரைத்தவன், படுக்கையில் தலையை தொங்க விட்டு கைகளை கோர்த்து அமர்ந்துவிட்டான்…
அவனையே சில நொடிகள் பார்த்த கவி, மெல்ல அவன் அருகில் அமர்ந்து “என்னாச்சு டா… எதை வச்சு அப்படி சொல்லுற… நீ முழுசா அவ கூட பழகவும் இல்ல பேசவும் இல்ல அப்புறம் எப்படி இதை முடிவு பண்ணின…?” என கேட்டவன் முகத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவன் பின் தலையை குனிந்துக் கொண்டவன்….
அவனது எண்ணங்கள் முழுவதும் இன்று கனிமொழி பேசியதை பற்றியும் நடந்த நிகழ்வை பற்றியும் தான் சுற்றிக் கொண்டிருந்தது…
பதிலுக்காக சில நிமிடங்கள் காத்திருந்த கவி, அவன் ஏதோ நினைவில் இருப்பதை உணர்ந்து தோள் தொட, அதில் தன் யோசனையில் இருந்து கலைந்த விக்கி,
“ம்பச்ச்… விடுடா மச்சான்… காதல் எல்லாருக்கும் கை கூடாது… சிலருக்கு ஒன் சைடு… சிலருக்கு டைம் பாஸ், சிலர் உண்மைன்னு நம்பி ஏமாந்து போவாங்க…. நான் நடக்கும்னு நினைச்சேன் பட்….” என நிறுத்தியவன் இறுக கண்களை மூடிதிறந்து, ஒரு பெருமூச்சோடு
“உன் தங்கச்சிக்கு என் மேல் எந்த எண்ணமும் இல்ல டா… நான் தான் பைத்தியம் மாதிரி சுத்தியிருக்கேன்… ம்ப்ச்ச்…. விடு மச்சான்… இதுக்கு மேல என் லைஃப்ல உன் தங்கச்சிய நினைக்க கூட மாட்டேன்…” என்று முகத்தை பக்கவாட்டில் திருப்பிக்கொள்ள…
“டேய் லூசு மாதிரி பேசாத… என்ன நடந்துச்சுன்னு சொல்லு முதல்ல… அப்புறம் அவளுக்கு புடிச்சுது புடிக்கலன்னு முடிவு பண்ணலாம்…” என்ற நண்பனின் வார்த்தையில் கனிமொழி மொழிந்தது நினைவிற்கு வந்தது…
அதில் கோபம் வந்தாலும் கவியழகன் உடன் இருப்பதால் சற்று அமைதிகாத்தான்… “ஒன்னும் இல்ல… விடு மாப்ள… இப்ப அத பத்தி பேசுறது வேஸ்ட்…. உன் தங்கச்சி மனசுல நான் இல்ல… இதுவர அவளை பாதிக்குற மாதிரி நான் எதுவும் பண்ணுல சோ ….” என்று தயங்கி இழுக்க, கவியழகனுக்கு அவன் என்ன கூற வந்தான் என்பது புரிந்தது…
புரிந்ததில் கோபம் வர, வேகமாக அவன் சட்டை காலரை பற்றி , “சோ….? என்ன சொல்ல வந்த சொல்லு டா…” என்று கட்டாமாக கேட்கவும், தன் சட்டையில் இருந்த கவியின் கைகளை பற்றிய விக்கி பதில் கூறாமல் எங்கோ வெரித்தபடி நிற்கவும், கவி தனது பிடியை மேலும் இறுக்கி,
“சொல்லு டான்னு சொல்லுறேன்ல… சோ… என் தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்குறதுல பிராப்ளம் இல்லன்னு சொல்ல வர…. அப்படிதானே…?” என்று கேட்கவும், வேகமாக அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொண்ட விக்கி, நண்பனின் வார்த்தையால் வேதனை கூட,
“ஆமா டா… நான் தான் தப்பு பண்ணினேன்… உன் தங்கச்சி தெளிவா அறிவாளியா இருக்கா… நான் தான் காதல் அதுஇதுன்னு சுத்துனேன்… அவ அப்படி இல்ல… ஏன் ஒருதுளிக்கு கூட இல்ல… என்னால எந்த பிரச்சினையும் வேண்டாம்…” என்று விக்கியும் கத்தினான் கனிமொழியின் மேல் இருந்த கோபத்தில்…
புருவம் சுருங்க பார்த்த கவியழகன், “கனி என்ன சொன்னா உன்கிட்ட…?” நிதானமாக வந்தது கேள்வி கவியிடமிருந்து…
நண்பனின் கேள்வியில், ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடி திறந்து “பிளீஸ் இதை இதோடு விடுடா… இனி இந்த பேச்சு நமக்கு நடுவுல வேண்டாம்… ஒன்னு மட்டும் உறுதி, அது எனக்கும் கனிமொழிக்கும் நடுவுல இப்ப எதுவும் இல்ல… நான் யாரோ உன் தங்கச்சி யாரோ… என் காதலும் இல்ல…. அவ்வளவு தான்… ” என்றவன் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்…
செல்லும் நண்பனை உறுத்து பார்த்தவன், பின் இதழை ஒருபக்கமாக வளைத்து ஒரு புன்னகையை சிந்தினான் விக்கியின் நிலை பார்த்து…
‘இவ்வளவு நேரம் உன் தங்கச்சி, உன் தங்கச்சின்னு சொல்லிட்டு கடைசியா கனிமொழியாம்… உனக்கும் அவளுக்கும் நடுவுல இருக்குற விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்குறான் அது பெர்சனல்னு,இதுல இவனுக்கும் கனிக்கும் நடுவுல எதுவும் இல்லன்னு டைலாக் வேற… பார்க்கலாம் ராசா இது எல்லாம் எத்தனை நாளைக்குன்னு…’ என எண்ணிக் கொண்டவனுக்கு தெரியவில்லை தோழனின் உறுதியை பற்றி…
விக்கி கீழே இறங்கும் சமயம், படியில் பூங்குழலி மேலேறி வந்துக்கொண்டிருக்க, விக்கியின் நடை தடைப்பட்டது பேச வேண்டும் என்ற நினைப்பில்…
அவனையும் அவன் கையில் இருந்த பையையும் கண்கள் இடுங்க கண்ட குழலி, ‘பையும் கையுமா எங்குட்டு கிழம்புதாக… ஒருவேல அறைய மாத்துறாகளோ…?’ என்று எண்ணுகையில் அருகில் வந்த விக்கி,
“ஹாய்… நான் விக்னேஷ்… கவியோட பிரெண்ட்… பார்த்திருப்பீங்கன்னு நினைக்குறேன்…” எப்படி ஆரம்பிப்பது என அறியாமல் அபத்தமாக பேச, தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது பூங்குழலிக்கு…
‘இம்புட்டு நாளு… கூட ஒருத்தி இருந்ததையே பார்க்காம இப்ப வந்து பேசுதாக… எல்லாம் ஒருதிணுசாத்தேன் திறியுதுங்க…’ என மனதில் அவனை கேலி பேசிக்கொண்டிருந்தவள் அவனது அடுத்த வார்த்தையில் அவனை கவனிக்க தொடங்கினாள் யோசனையுடன்…
“நான் ஊருக்கு கிளம்புறேன்….” என்று தயங்கியபடி சொல்லிவிட்டு அவளது முகத்தை பார்க்க, அதில் சட்டென தெரிந்த தீவிரம் அவனை ஆயிரம் கேள்வி கேட்டது…
அதை புரிந்தாலும் அவ்விடம் விட்டு விடைபெறும் முனைப்பில், முகத்தில் போலி புன்னகையை உருவாக்கி, “ஹாப்பி மேரிட்டு லைஃப்…”என்றவன்,
“என்ன சொல்லுறதுன்னு தெரியல… நீங்க கவியை லவ் பண்ணுறீங்கன்னு தெரியும் ஆனா அன்னைக்கு நீங்க அப்படி பண்ணியிருக்க கூடாது… ஆனா இதோ நடந்து முடிஞ்சுருச்சு… இனிமேல் அதை பத்தியோ இல்ல பழைய மாதிரி இருப்பேன்னு சொல்லிட்டு உங்க லைஃபோடு சேர்த்து அவன் லைஃபையும் ஸ்பாயில் பண்ணிறாதீங்க…” என்று ஒரு பெருமூச்சுடன், “பை…” என தலையை லேசாக ஆட்டி விடைப்பெற்றான் பூங்குழலியிடம்….
அவனது அத்தனை வார்த்தைகளில் , ‘இந்த லூசு அந்த புள்ளைக்கிட்ட சொல்லிட்டுத்தேன் போகுதா…?’  என்று தான் எண்ணினாள்… யோசனையுடன் இருந்தவள் கனிக்கு அழைத்து விஷயத்தை கூற வேண்டும் என்று நினைக்கையில்,
“ஏய்ய்ய்…. நீ நின்னு கனவு காணுறதுக்கு படிக்கட்டு தான் இடமா… தள்ளி போ அந்த பக்கம்… போய் ஒரு மூலைல உட்கார்ந்து சாவகாசமா கனவு கணானு போ…” என்று எரிச்சலாக மொழிந்த கவி அவளை பக்கவாட்டில் தள்ளினான்…
அவனது வார்த்தையில் சிலிர்த்தெழுந்த குழலி, தன்னை தாண்டி இறங்க போனவனை முந்திக் கொண்டு அவன் முன் கைகளை இடுப்பில் வைத்தப்படி முறைத்து பார்த்தாள் உதட்டை சுழித்தப்படி…
அவளது செயலை பார்த்தவன், இப்பொழுது கைகளை கட்டிக் கொண்டு மிதப்பாக, ‘என்ன…?’ என்னும் தோரனையில் பார்வையை செலுத்தினான் பூங்குழலியின் மீது…
அதை பார்த்து பல்லை கடித்தவள், “நான் என்னத்துக்கு மூலைல போய் கனவு காணனும்…? இது என்ற வீடு… நானு எங்குட்டு வேண்ணும்னாலும் நின்னு காவு காண்பேன்… உமக்கு என்ன…?” என்று கைகளை ஆட்டி சண்டையிட, பதில் கூறாது முறைத்தப்படியே நின்றிருந்தான் கவியழகன்…
திருமணம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்துவிட, முருகவேல் மட்டும் தோப்பு வீட்டிற்கு சென்று விட்டார்… அவரது உள்ளும் அத்தனை கொதி நிலையில் இருந்தது… பகல் முழுவதும் அங்கு இருந்தவர் அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்தார் மனசோர்வுடன்…
தங்கள் அறைக்கு செல்லயிருந்தவரின் காதில் பூங்குழலியின், ‘என்ற வீடு…’ என்னும் வார்த்தை அச்சு பிசுராமல் காதில் விழ, சற்றே குறைந்திருந்த கோபம் மீண்டும் சுர்ரென எகிற, முகம் அத்தனை கடுமையை தத்தெடுத்துக் கொண்டது….
‘ஆரு வீட்டு சொத்த ஆரு உரிம கொண்டாடுறது… நீ எந்த நோக்கத்துல வந்திருக்கன்னு தெரியும்… உன்னைய சீக்கிரம் இந்த வீட்டவிட்டு தொரத்தி காட்டுத்தேன்… பொட்ட கழுத…’ என மனதில் சூழ்ழுறைத்தவர், தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறிவிட்டு வீட்டு தோட்டத்தை நோக்கி நகர்ந்தார்…
இங்கு கவியோ, “நீ எக்கேடோ கெட்டு போ… இப்ப வழிய விடு…” என அவளை மீண்டும் பக்கவாட்டில் தள்ள போக, அவனது கையை சட்டென தட்டிவிட்டவள்,
“இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத… பொறவு கைய ஒடைச்சுருவேன்… ஜாக்கிரத…” என்று விரல் நீட்டி மிரட்டியவள், வேகமாக படியிருங்கி ஹாலில் இருந்த சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டாள்…
அவள் கூறிவிட்டு சென்ற வார்த்தையில், நியாயத்திற்கு அவமானமாக எண்ண வேண்டும் ஆனால் கவியின் முகம் அத்தனை பிரகாசமாக மிளிர்ந்தது மகிழ்ச்சியில்…
‘சிக்குன டி என்ன முட்டக்கண்ணி… உன்ன என்ன பண்ணுறேன்னு மட்டும் பாரு…’ என்று எண்ணியபடி படியிருங்கி வந்தவன் ஹாலில் புருவம் சுருங்க விரல் நகத்தை கடித்தபடி,
காயத்ரி சைந்தவியிடம் விடைப்பெற்றுக் கொண்டிருந்த  விக்கியை குறுகுறுவென பார்த்திருந்த குழலியை கண்டு நக்கலாக ஒரு சிரிப்பை உதிர்த்தான் கவியழிகன்…
ஏதோ ஒன்று தோன்ற சட்டென திரும்பி கவியை கண்டவள் அவனது அந்த நக்கல் சிரிப்பை புரியாது பார்த்து, ‘ இவன் என்னத்துக்கு இப்படி கோனலா சிரிக்கான்…. சை… ரெண்டு களவாணி பையலுகளும் எங்மண்டைய காய விடுதுங்க…’ என்று புலம்பியவள் கவியை முறைத்துக்கொண்டே மோவாயை தோள்பட்டையில் இடித்துவிட்டு மீண்டும் விக்கியை பார்க்க தொடங்கினாள்…
அவளது செயலில் இப்பொழுது பற்கள் தெரிய சத்தமில்லாமல் சிரித்தவன் நண்பனின் அருகில் வந்ததும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான் கனிமொழியின் நினைவில்…
“செரி ராசா… பத்திரமா போயிட்டு வாயா… அடிக்கடி இங்குட்டு வந்துட்டு போ… உன் ஆத்தாவையும் கூட்டியா பா…” என்ற காயத்ரிக்கு வலியை மறைத்துக் கொண்டு,
“கண்டிப்பா ஆண்ட்டி… நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்க… ஆங்கிள் கிட்ட சொல்லிருங்க… ஏற்கனவே கோவமா இருக்காங்க இதுல நான் போய் இன்னும் கொஞ்சம் டென்ஷன் பண்ண விரும்பல…” என சொல்லும் போதே சைந்தவி
“எப்பவும் அவருத்தேன் மத்தவியகள கடுப்படிப்பாரு… இனி அவரு கடுப்பாக போறாரு… அனுப்பவிக்கட்டும்…” என்று ஓரகண்ணில் பூங்குழலியை சுட்டிக்காட்டி கூற, விக்கி
“ஷ்ஷ்ஷ்… என் சைந்து குட்டி நல்ல பொண்ணு… எந்த கோக்கு மாக்கு வேலையும் சண்டையும் போட கூடாது…” என்று மண்டையை பிடித்து ஆட்ட,
“ஏன்ணே… இன்னும் என்னைய நம்புத…?” என்று போலியாக ஆச்சரியம் காட்டி கேட்டவளை,
“தெரியும் நீயும் உன் அண்ணன மாதிரி கேடின்னு… இருந்தாலும் கொஞ்சம் உன் வாலை சுருட்டி வச்சுக்கோ… அப்புறம் சேதாரம் ஆச்சுன்னு அழ கூடாதுன்னு தான் அக்கறைல சொல்லுறேன்… ” என்று கிண்டல் அடிக்கவும் முகத்தை திருப்பி சிணுங்கினாள் சைந்தவி..
“ஓகே வாலு… டைமாச்சு… கிளம்புறேன்… பை…” என்றவன், நண்பனை கட்டி தழுவி காதோரம் மெல்லிய குரலில் “சாரி மாப்ள…” என்றவன் அவனை விட்டு விலகி அவனது இறுகிய முகத்தை கண்டும் காணாமல்
“ஓகே மாப்ள… பை… டேக் கேர்…” என்றதோடு, காயத்ரியின் பாதம் தொட்டு வணங்கி, “போயிட்டு வரேன் ஆண்ட்டி…” என ஆசிப்பெற்று விடைபெற போகையில் சோபாவில் அமர்ந்து அவனை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியை கண்டு ‘போய் வருகிறேன்…’ என்னும் விதமாக தலையை அசைத்துவிட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான்…
காரில் ஏறி அமர்ந்தவனுக்கு,கடைசி ஒருமுறை கனிமொழியை பார்க்க வேண்டும் போல் இருந்தது… ஆனால் முயன்று அதை கட்டுப்படுத்தியவன், “இன்னைக்கு இந்த நிமிஷத்துல இருந்து அவ உன் லைஃப்ல இல்ல… எல்லாத்தையும் இங்கையே விட்டுவிட்டு போயிரு விக்கி… இதுதான் உனக்கும் நல்லது… ” என்று ஸ்டியரிங்கை பிடித்து முறுக்க கவி அவன் புறம் குனிந்து ,
“என்னடா மச்சான் என்ன சொன்ன…?” என கேட்க,
“ஆங்…ஒன்னுமில்ல மாப்ள… கிளம்புறேன்…” என்றவன் வண்டியை ஆன் செய்ய போக, கவியோ அவனது கையை பிடித்து தடுத்து நிறுத்த,  கேள்வியாக அவன் முகத்தை பார்த்தான் விக்கி…
“கொஞ்சம் வெய்ட் பண்ணுனா கனியை கூப்பிடுறேன்… பார்த்துட்டு போறியா…?” என அவன் முகத்தை பார்த்து கேட்க, நண்பனை விழியெடுக்காது பார்த்த விக்கி, நிதானமான வார்த்தையில்
“இல்ல மாப்ள… ஒன்னு புரிஞ்சுக்கோ… லவ் பண்ணுற எல்லாரும் ஒன்னு சேர முடியாது… சரியான இடத்துல காதலை காட்டனுமே தவிர, தப்பானா இடத்துல காதலை காட்டிட்டு பதிலுக்கு காதலை எதிர்பார்க்குறது முட்டாள் தனம்… நான் முட்டாளா இருக்க விரும்பல… இது என் லைஃப் இல்லைன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டேன்…. உன் தங்கச்சியும் தெளிவா இருக்கா… தேவையில்லாம உன் தங்கச்சிய குழம்பி கஷ்டப்படுத்த வேண்டாம்… நாங்க ஒன்னு சேரணும்னு விதியில்ல… எங்களுக்கான துணை நாங்க இல்ல… இது புரிஞ்ச பின்னாடி தொல்லை பண்ணுறது தப்பு கவி… நான் முன்னாடியே சொல்லியிருக்கேன்…. விருப்பம் இல்லாட்டி தொல்லை பண்ணாம ஒதுங்கிக்குவேன்னு… அவ்வளவுதான்…” என்றவனை கவி எதுவும் சொல்லாது சில நொடிகள் பார்த்தவன், பின்
“ஓகே மச்சான்… டேக் கேர்…” என்க,
“தேங்க்ஸ் டா… ஆல் தி பெஸ்ட் பார் யுவர் மேரேஜ்…. டேக் கேர் டூ… பை டா…” என்றவன் காரை கிளப்பினான் தன் வாழ்க்கை பயணத்தை நோக்கி…
கவியழகன் செல்லும் அவனையே பார்த்திருந்தான் ஒரு இயலாமையுடன்… அவனது காதலின் ஆழம் எத்தனை என்பதை உணர்ந்திருந்தவன்… அப்படி இருக்க இப்பொழுது இவனது இந்த முடிவு எத்தகைய வலியை அவனுக்கு அளிக்கும் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை… பிரச்சினை என்னவென்று தெரிந்தால் அதை சரி செய்ய முயற்சிக்கலாம் ஆனால் அதை பகிர்ந்து கொள்ள விரும்பாத, தன் தனிப்பட்ட விஷயம் என்று கருதுபவனிடம் என்னவென்று கேட்க இயலும்…
எதுவும் செய்ய இயலாத நிமிடத்தோடு ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் தன் வீட்டிற்குள் நுழைந்தான் அடுத்து தன் மனையாள் தனக்கு வைத்திருந்த சோதனையை அறியாமல்…
விக்கியின் மனமோ கடந்த சில நாட்களை கடைசி ஒருமுறையாக எண்ணியபடி அனைத்தையும் தன் நினைவில் இருந்து அழித்துக் கொண்டே சென்றான் தன் பாதையை நோக்கி…
விக்கியை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த காயத்ரியும் சைந்தவியும் சோபாவில் அமர்ந்து தீவிர யோசனையில் இருந்த பூங்குழலியை கண்டு விழிகளால் ‘என்னவாம்….?’ என்பதை போல் பார்வையை பரிமாறி ‘தெரியவில்லை…’ என்பது போல் தோளை உழுக்கி கொண்டனர்…
சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பது போல் காயத்ரியின் வாய் அனிச்சையாக பூங்குழலியை களத்திற்கு இழுத்து விட்டது…
“மகாராணி எந்த ஊர் கோட்டைய புடிக்க யோசன பண்ணுதாகளாம்…?” என்று குழலியை ஒரு பார்வை பார்த்தபடி சைந்தவியிடம் கேட்க, சைந்தவி வாயை திறக்கும் முன் பூங்குழலியின் வாய் திறந்தது தானாக தன் நினைவிலிருந்து கலைந்து…
“என்ன மாமியாரே…? ஏதோ கேட்டாப்புல இருந்துச்சு… என்னனுட்டு தெரிச்சுக்கலாமா….?”  என்று கேட்டவள் இப்பொழுது சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்துக் கொண்டு கைபிடியில் ஒரு கையை முட்டுக்குடுத்து கேட்க, சுர்ரென்று கோபம் வந்தது காயத்ரிக்கு
“ஏய்… என்னவே… வாய் ரொம்பத்தேன் நீளுது… மாமியாராம்ல மாமியாரு…. ஒழுங்கு மருவாதையா வாய அடக்கி மருவாத குடுத்து பேசு…” என்று சண்டைக்கு நிக்க, குழலியோ அசால்ட்டாக
“என்ன மாமியாரே இது… மாமியார மாமியாருன்னு கூப்பிடாம பெரியம்மான்னுட்டா கூப்பிட முடியும்…?” என்று குழந்தையை போல் முகத்தை வைத்து கொண்டு சந்தேகமாக கேள்வி கேட்க,
“அடிங்கு… சிறுக்கி…. இன்னொருக்க மருவாத இல்லாம பேசுன்ன நாக்க இழுத்து வச்சு அறுத்துபுடுவேன்…” என்று அவளை நோக்கி எகிறி கொண்டு செல்ல , சைந்தவி அவரை பிடித்து இழுத்து நிற்க வைத்தாள் ஒரு சிறு போராட்டத்திற்கு பிறகு…
அதற்குள் கவியழகன் உள்ளே நுழைந்துவிட, ஒரு நொடியில் சைந்தவி அன்னையை இழுத்து நிற்க வைத்திருப்பதும், அன்னை கோபமாக குழலியை முறைத்துக் கொண்டிருப்பதும், குழலி கூலாக அமர்ந்திருப்பதையும் பார்த்து நிலைமையை யூகித்துவிட்டான்…
‘இவளை… ரொம்ப பண்ணுற டி…. இரு …. உனக்கு இருக்கு இன்னைக்கு நைட்டு…’ என்று பல்லை கடித்தவனுக்கு தெரியவில்லை தனக்கான ஆப்பை அவள் தயார் செய்து வைத்திருப்பதை…
அன்னையிடம் சென்றவன், குழலியை முறைத்துக் கொண்டே, “ம்மா… அவளோடு பேசாதீங்க… திமிர் பிடிச்சவ… ஏதோ கத்திட்டு போகட்டும் கண்டுக்காம போயிருங்க…” என்றவனை பார்த்து காயத்ரி,
“கொஞ்சம் கூட மருவாதை தெரியாதவளா இருக்கா ராசா…” என்று குற்றப்பத்திரிகை வாசித்தார் மகனிடம்…
கவி,” அதான் தெரிஞ்சது ஆச்சே ம்மா… விடுங்க… இவளையெல்லாம் ஒரு மனுச ஜன்மமா கண்டுக்காதீங்க… விடுங்க… போய்… சாப்பிட எடுத்துவைங்க… பசிக்குது…” என்றவனின் வார்த்தை சரியாக பேதையின் மனதை பதம் பார்த்தது…
ஒரு நொடி அவனது வார்த்தையில் வலியை உணர்ந்து அதை கண்களில் காட்டியவள் மறுநொடியே அதை மறைத்து கொண்டு, “ஆமா மாமியாரே… பயங்கரமா பசிக்குது… வெரசா அம்புட்டையும் எடுத்து வைங்க… என் அத்த மகளே நீயும் போ மா போய் வேலைய பாரு… எப்ப பாரு வேடிக்க பார்த்துக்கிட்டு…” என்று அதிகாரம் செய்தவளை மூவரும் முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டே சென்றனர்…
பின்னே யார் இவளிடம் சண்டையிட்டு அயர்ச்சி ஆவது… அதனால் மூவரும் சாப்பாட்டு மேஜையை நோக்கி நகர்ந்தனர்… கவி மட்டும் ஒருமுறை திரும்பி பார்த்து முன்பு தன் வார்த்தையால் தோன்றிய வலி இப்பொழுதும் தெரிகிறதா என்று பார்க்க அவ்விழிகளோ யோசனையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது…
‘சே… தேவையில்லாம பேசிட்டோம்… ஹர்ட் ஆயிட்டா போல…’ என வருந்தியவனுக்கு தெரியவில்லை இப்பொழுது பேசிய வார்த்தைக்கும் சேர்த்து தன்னை வருத்தெடுக்க போகிறாள் என்று…
இங்கு பூங்குழலியின் மூளையோ படுவேகமாக முருகவேலுக்கான திட்டத்தில் ஆழ்ந்திருந்தது…  அத்தோடு கவியழகனுக்குமே சேர்த்தும் தான்….
பலிதீர்க்க எண்ணிய பேதையவள் தன் வலிக்கான முதல் அடியை எடுத்து வைக்க, சோபாவில் இருந்து எழுந்து நின்றாள் ஒரு உற்சாக புன்னகையோடு…
தொடரும்….

Advertisement