Advertisement

UD: 21  
“குழலி… கண் முழிச்சு பாருடி… குழலி… குழலி….” என்று கன்னம் தட்டியவனுக்கு படபடப்பாக வந்தது, ஏதேனும் விபரிதம் ஆகி விடுமோ என…
ஆனால் கவியழகன் எத்தனை அழைத்தும் உலுக்கியும், கன்னத்தில் தட்டி பார்த்தும் அவளிடம் இருந்து சிறு அசைவு கூடயில்லை… மனசோர்வில் மயங்கியவளுக்கு, மயக்கத்திலும் தன்னவனின் நினைவு போல அதை கலைத்து கண்விளிக்க மனம் வராதது போல் சரிந்திருந்தாள்….
சிறிது நேரம் முயற்ச்சித்து பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து சிறு அசைவு கூட இல்லை என்றதும் இனி நேரம் கடத்தாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவதை சரியென, ஒருகையை அவளது கழுத்தின் கீழ் செலுத்தி மெல்ல உயர்த்திய சமயம்….
“ஹக்…” என்ற சத்தத்துடன் சிறிது இறுமினாள் குழலி, சீராக மூச்சுவிட முயன்றபடி…
அப்பொழுது தான் கவிக்கு ஒன்று விளங்கியது… அவளது கழுத்து பகுதியை அளுத்தி பிடித்ததால் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கி இருக்க வேண்டும் என்று… அதில் கோபம் கண்மண் தெரியாமல் மீண்டும் உருவெடுக்க, தன்னவளை மீண்டும் தரையில் படுக்க வைத்தவன் வேகமாக எழுந்து சற்று தள்ளி சுருண்டு கிடந்த ராசுவை ஓங்கிய மிதிக்க தொடங்கினான்…
கோவில் வைத்து பூங்குழலியை எப்படியாவது தன் காதலை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்று எண்ணி இருந்த ராசுவின் எண்ணத்தில் கவியும் விக்கியும் மண்ணை போட்டுவிட, வேறு வழி இல்லாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் ராசு…
அதன் பின் குழலியை தனிமையில் சந்திக்க கழுகு போல் காத்திருந்தவன் காலை கனிமொழி மட்டும் காலேஜ் செல்வதை கண்டவனுக்கு முகம் அத்தனை பிரகாசமாக மாறியது…
எப்படியேணும் தனியாக வெளியே வருவாள் அப்பொழுது பிடித்து வைத்து தன் காதலை அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும் இல்லையென்றால் அத்துமீறி நடந்துவிட்டால் வேறு வழியில்லாது தன்னை திருமணம் முடித்துத்தான் ஆக வேண்டும் என்று விபரிதமாக எண்ணி அவளது வீட்டின் அருகில் காவல் கிடந்தான் ராசு…
இத்தனைக்கும் அவனது காதல் தெய்வீகமானதா என்றால் இல்லையென்று தான் கூற வேண்டும்… திமிராக சுற்றிக் கொண்டிருந்த பூங்குழலியென்றால் அந்த ஊரில் உள்ள இளவட்டங்களுக்கு சற்று பயம் தான்… ஏனெனில் யாரையும் தன் அருகில் நெருங்க விடமாட்டாள் அத்தனை எளிதில்… தன்னிடம் வம்பு செய்பவனின் மண்டையை உடைப்பாள் அல்லது உடலுக்கு ஏதேனும் சேதாரம் விளைவிப்பாள்… அப்படி பட்டவளை திருமணம் முடித்தால் அனைவரது பார்வையில் தாம் உயிர்ந்து விடுவோம் என்ற எண்ணம் அந்த ராசுவிற்கு… அது குறுக்கு வழியாக இருந்தாலும் அதை செய்வது என்ற முடிவுக்கே வந்திருந்தான் விரக்தியில்… ஏனெனில் வாங்கி அடிகளும் அவமானங்களும் அப்படி…
அன்று அவன் எதிர் பார்த்தது போல் பூங்குழலியும் தூக்கு சட்டியை தூக்கிக் கொண்டு வர, தோப்பின் அருகில் செல்லவும் இதுவே சிறந்த இடமென்று அவள் கத்தி விடாமல் இருக்க வாயை பொத்தியவன் அவளை இழுத்து செல்ல வசதியாக கழுத்தையும் பிடித்து விட்டான் அவன் அறியாது…
தீடிரென பூங்குழலி ஒருபக்கமாக சரியவும் பதறி கீழே படுக்க வைத்தவனுக்கு என்ன செய்வதென்று தான் புரியவில்லை…
சற்று யோசித்தவன், ‘எப்படியும் இவ நம்மள ஒத்துக்க மாட்டா… பேசுறது வீண்த்தேன் அதுக்கு நம்ம இவளைய முடிச்சுடலாம்… பொறவு கண்ணாலம் பண்ணித்தேன் ஆகணும்… அதுக்கு பொறவு நம்ம லவ்வ சொல்லி புரிய வைப்போம்…’ என்று கிறுக்குதனமாக எண்ணியவன்…
அவளது கன்னத்தை தொட போகும் சமயம் , பின் மண்டையில் சுளீரென்ற ஓர் வலியை உணர்ந்தவன் அப்பொழது தான் நான் ஓர் ஓரமாக விழுந்து கிடப்பதை கண்டான்…
அதற்கும் மேல், தன் முன் இடது கையால் வலது கையில் புதிதாக குடிபுகுந்த காப்பை ஏற்றி விட்டபடி, புதிதாக வெடியிருந்த முறுக்கு மீசையை மேலும் முறுக்கி விட்டபடி புருவம் சுருங்க, கோப பார்வையை வீசிக் கொண்டிருந்த கவியழகனை கண்டு ராசு, ‘உன் ஜோலி முடிஞ்சுது டேய்…’ என்ற எண்ணும் போதே அவனை அடிக்க தொடங்கினான் கவியழகன்…
சில நிமிடங்கள் கழிந்து அவனை விட்டு விலகி, அவனை பார்க்க முன்பு போலவே தான் இருந்தான் எந்த மாற்றமும் இன்றி… காரணம் அனைத்தும் உள்குத்து… பூங்குழலிக்கு எந்த பிரச்சினையும் வந்து விட கூடாதென்ற என்ற எண்ணம் கவியழகனுக்கு…
அவனை அடித்து சற்று ஓய்த்த பின் குழலியிடம் சென்று அவளை எழுப்ப நீண்ட நேரம் கழித்து சிரிம பட்டு மூச்சுவிட முயன்றவளை கண்டு மிக சற்றே தணிந்திருந்த கோபம் மீண்டும் தலைத்தூக்கியது கவியழகனுக்கு…
முன்பு அவனிடம் வாங்கிய அடியையே தாங்கிக் கொள்ள முடியாமல் வலியில் சுருண்டு அனத்திக் கொண்டிருந்தவன், மீண்டும் கவி வந்து அடிக்கவும்,
“ஆஆஆ… அய்யோ…. உடுல உடுல வலி தாங்கல… தெரியாம பண்ணிப்புட்டேன் உடுல… ஆஆஆ… எங்கை…” என்று அலறியவனின் கை கவியிடம் சிக்கி, உடைய ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது…
“தெரியாம பண்ணிட்டியா… நீ என்ன சின்ன புள்ளையா இல்ல இது தான் சின்ன விஷயமா… தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி எஸ்கேப் ஆக…” என்று அவன் கையை பிடித்து திருகினான்…
“ஆஆஆஆ…. உடுல… சத்தியாம நாங் அவளைய எங்காதல புரிய வைக்கத்தேன் இழுத்துட்டு வந்தேன்…” என்று விளக்கம் கொடுக்க முயல,
“காதல புரிய வைக்க நினைச்சியா…? எப்படி இப்படியா…” என மயங்கி யிருந்தவளை சுட்டி காட்டி கேட்டுக்கொண்டே பிடித்திருந்த கையை மேலும் திருகினான்…
“ஆஆஆஆ… அய்யய்ய… உடுல… என்னல பெருசா தப்பு பண்ணிட்டேன்…” என்று கேட்டபடி திமிறி கையை விடுவித்துக் கொண்டவனின் குரல் இப்பொழுது வலியோடு சேர்த்து கோபமும் வெளி வந்தது…
அவனது கேள்வியில் ஆத்திரம் அதிகமாக அவனை நோக்கி மீண்டும் முன்னேற போனவனை கைநீட்டி தடுத்தவன், “இதுக்கு மேல என்னைய அடிச்ச பொறவு கொல கேசுத்தேன் டி…” என்று வாங்கிய அடியை மறந்து மிரட்டவும்,
“அடிங்கு…. ” என்று நாக்கை மடித்து, மீண்டும் அடிக்க போனவனின் காலை பிடித்துக் கொண்டான் ராசு…
“அய்யோ… உட்டுருல… சத்தியமா அவளைய நான் விரும்புத்தேன்… அதைய புரிய வைக்க நான் ஒவ்வொரு முறையும் அவளைய நெருங்கும் போதும் ஒண்ணு என்னைய அடிச்சுட்டு ஓடிருறாரு,  இல்லாட்டி யாரு கிட்டாயச்சும் நாங் செய்யாத தப்புக்கு என்னய கோத்துவிட்டு தர்மடி வாங்க வைச்சுட்டு போறா… அம்புட்டையும் தாங்கிட்டு சூடு சொரன எதுவும் இல்லாம திரும்பவும் அவ பின்னாலத்தேன் நாங் சுத்துத்தேன்… புரிஞ்சுக்கோள…” என்றவனின் வார்த்தையில் ஏறி இருந்த கோபம் சற்று மட்டு பட்டது காரணம் அவள் இவனை படுத்தி எடுத்த விதம்…
‘முட்டக்கண்ணி… வஞ்சகம் இல்லாம உன் வேலைய காட்டி இருப்ப போல எல்லார் கிட்டையும்…’ என்று எண்ணியவனின் நினைப்பை கலைத்தது அவளது இருமல் சத்தம்…
சற்று மயக்கம் தெளிந்து இரும்பி, சீராக மூச்சுவிட முயன்றுக்கொண்டிருந்தவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
அவளது கன்னம் தட்டி, “குழலி… குழலி…. கண் முழிச்சு பாருடி…” என்றவனின் குரலுக்கு செவி சாய்த்து, லேசாக கண் விழித்து பார்த்தாள் பூங்குழலி…
கவியழகனுக்கு அப்பொழுது தான் உயிரே வந்தது… அவளை மேலும் எழுப்பி அமர வைத்தவன், “இப்ப எல்லாம் ஓகேயா…? இல்ல இன்னும் ஒரு மாதிரி இருக்கா… ஹாஸ்பிட்டல் போலாம்…?” என்று கேட்டவனை வெற்று பார்வை பார்த்தவள், பதில் ஏதும் கூறவில்லை…
“என்னடா முடியலையா… வா ஹாஸ்பிட்டல் போலாம்…” என்றவன் அவளது நெற்றியில் புரண்ட முடியை காதோரம் ஒதுக்கிவிட, அவனது கையை தட்டிவிட்டவள் முறைத்துக் கொண்டே எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்…
அவள் கையை தட்டிவிடவும், “என்னாச்சு குழலி… ?” என்ற கேள்வியுடன் எழுந்து நின்றான் அவளுடன்…
சற்று தள்ளி குத்தவைத்து அமர்ந்திருந்த ராசுவை கண்டவளுக்கு உள்ளுக்குள் அத்தனை கோபம் கணன்றது, ‘இவனைய…’ என பல்லை கடித்துக் கொண்டு,
அவனை நோக்கி முன்னேறியவளை கைபிடித்து தடுத்த கவி, “வேண்டும் விடு புள்ள… அவனை நான் ஏற்கனவே நல்லா கவனிச்சுட்டேன்…” என்று சொல்லவும் திரும்பிப் பார்த்து முறைக்க, “ஹே… அதுக்காக அவன சும்மா விடுறேன்னு சொல்லல… அவனை இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்குறேன்… நீ நல்லா இருக்கேனா வீட்டுக்கு போ… பிரச்சனை வேண்டாம்…” என்று நிதாகமாக பேசி புரிய வைக்க முயன்றான் இருக்கும் சுழலை கவனத்தில் கொண்டு…
“நீரு யாருல எங் விஷயத்துல தலயிட… உம்ம ஜோலிய பார்த்துட்டு போவீரா…”என்று திக்கிதிணறி பேசியவள் ராசுவை நோக்கி நடக்க போக, மீண்டும் பிடித்த அவளது கையை மேலும் வலுவூட்டி இழுத்து நிறுத்தயவனை ஆவேசமாக பார்த்து,
“விடு என் கைய… என்னம்மோ ரொம்ப அக்கறை இருக்குறாப்புல பேசுத… எதுக்குல இந்த நாடகம் அம்புட்டும்…? ஏன் அடுத்து ஏதாச்சும் திட்டம் வச்சு இருக்கீகளோ…?” என்று ஆவேசமாக கேட்க, கவியழகனுக்கு ஒன்றும் புரியவில்லை…
“என்ன பேசுற குழலி… ம்ப்ச்ச்… எதுவா இருந்தாலும் இப்ப நீ வீட்டுக்கு போ… யாராச்சும் இங்க இப்படி நம்மளை பார்த்தா தப்பா நினைப்பாங்க…”
“தப்பா நினைப்பாங்களா…? பாருடா… துரைக்கு அக்கறைய…. என்னைய இப்படி தப்பா பார்க்குறதுக்கு காரணமே நீங்க எல்லாரும்த்தேனே… இப்ப வந்து அக்கறை இருக்குறப்புல பேசிட்டா நாங்க நம்பணுமா…?” கோபம் இத்தனை வருடம் அவள் பட்ட துன்பத்தின் வலிகள் எல்லாம் சேர்ந்து என்ன பேசுகிறோம் யாரிடம் பேசுகிறோம் என்று புரியாமலேயே கத்த தொடங்கினாள்…
“அடிங்கு… அடிச்சு பல்லை கழட்டிருவேன் ராஸ்கல்… நானும் பொறுமையா போலாம்னு அமைதியா பேசுனா ரொம்ப தான் ஓவரா எகிருற… அப்படி என்னடி நாங்க தப்பு பண்ணினோம்… என் அக்கறைல அப்படி என்னத்தடி குத்தம் கண்டுபுடிச்ச, வாயிருக்குன்னு என்ன வேணும்ன்னா பேசுவியா…?” என்று கவியழகனும் பொறுமையை காற்றில் பறக்கவிட்டு கத்தி விட்டான்…
“என்னத்த பண்ணல…? நாங்க கஷ்டப்பட்டதுக்கு, இந்த மாதிரி பொறுக்கி எல்லாம் வந்து பிரச்சினை பண்ணுறதுக்கு காரணம் உன் அப்பாருத்தேன்…. அவரால வந்தது இந்த கஷ்டம் அம்புட்டும் …” என்று பொங்கியவளுக்கு கண்களில் கண்ணீர் அவளையும் கேளாமல் அருவியாக ஊற்றெடுத்தது வேதனையில்…
“என் அப்பாவா…? என்ன சொல்லுற குழலி…?” என்று அதிர்ந்து கேட்க, அவனை நக்கலாக பார்த்தவள்,
“ஆமா உன் அப்பாருத்தேன்… எல்லாம்,எல்லாரும் இருந்தும் நாங்க இப்ப அநாதையா இருக்க காரணம்… உன் அப்பாருத்தேன்…..” என்று கத்தியவளுக்கு பழயை நினைவில் கண்களில் கண்ணீர் வழிய உடல் நடுங்க தரையில் விழுந்தாள் தன் நிலை மறந்து…
அவளது வார்த்தையில் குழம்பி, அதிர்ந்தவன் தரையில் விழுந்து முகத்தை மூடி அழுதுக்கொண்டிருந்தவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், மெல்லிய குரலில்
“குழலி… என்ன சொல்லுற நீ…? எனக்கு ஒண்ணும் புரியல… அப்பா என்ன பண்ணாங்க… அத்தை தானே பிரச்சினை பண்ணது… இப்ப நீ என்ன புதுசா சொல்லுற…?” என்று குழம்பிய முகத்துடன் கேட்டவனை ஆவேசமாக நிமிர்ந்து பார்த்தவள்,
“என்ன சொன்னீரு..? என்ற அம்மா பிரச்சினை பண்ணாங்களா…? நீரு பார்த்தியோ… ?”
“இல்ல குழலி… அப்பா தான் சின்ன வயசுல சொன்னாங்க…” என இழுக்க, நக்கலாக சிரித்து,
“எப்படி…? சொத்தை அம்புட்டும் ஏமாத்தி புடுங்க பார்த்தான்னா…?” என்று கேட்கவும் கவியழகனின் தலை தானாக குனிந்துக் கொண்டது… உண்மை அதுதான் என்பது போல் இருக்க பெரிதாக சிரித்த குழலி,
“உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு உன் ஆத்தாவ போய் கேளு சொல்லுவாக…” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு எழ போனவளின் கையை இறுக பற்றியவன் மீண்டும் அவளை அமர்த்தி,
“நீ சொல்லு… நீ தானே அப்பா தான் காரணம்ன்னு சொன்ன அப்ப நீ தான் என்ன நடந்துச்சுனு சொல்லணும்… அம்மா கிட்ட கேட்கணுமா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன்…” என்றவன் அவள் சொல்லியாக வேண்டும் என்ற பிடிவாதம் அவன் பிடியில் உணர்ந்தாள்…
அவனையே வெற்று பார்வையை பார்த்தவள் பின் மெல்ல நடந்த அனைத்தையும் கூற தொடங்கினாள்…
…….
செல்லதாயி முருகேசன்னு பிறந்தவர்கள் தான் முருகவேலும், வசுந்தராவும்… ஆம் இருவரும் அண்ணன், தங்கை தான்… செல்லதாயி குணவதியாய் திகழ்ந்தாலும் முருகேஷன் பணத்தின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தார்…
பணத்தை சம்பாதிக்க வேண்டும் அதை பெரிதாக சேர்த்து வைக்க வேண்டும், அனைவர் முன்பும் பெருமதிப்போடு வலம் வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்… ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்னும் கருத்தை பெரிதும் நம்பினார்…
ஆனால் ஆஸ்திக்கு குடுத்த முக்கியத்துவத்தை ஆசைக்கும் அன்பிற்க்கும் தர தவறினார் என்பதே உண்மை… ஆனால் செல்லதாயி இருவருக்கும் சரிக்கு சமமான அன்பை காட்டி பண்பை புகட்ட, முருகவேலுக்கு பணத்தின் மீது இருந்த அன்பும் பண்பும் மட்டுமே அதிகமாக வளர்ந்து வந்தது தன் தந்தையை போலவே…
முருகவேலுக்கு இருப்பதியோரு வயதிருக்கும் போது முருகேஷன் ஒரு விபத்தில் எதிர்பாரா விதமாக தவறிவிட அனைத்து சொத்தும், பொறுப்புகளும் இப்பொழுது முருகவேலின் கைக்கு இடம் மாறியது…
தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார் முருகவேல்… அவர்களுக்கு இருந்த இரண்டு அரிசி மில் நான்காக உயர்ந்தது, அரிசி மண்டி, வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை மாதுளை ஏற்றுமதி என்று அதிக படுத்த அவரது குணமும் மாறி போனது முன்பை விட…
அதை எண்ணி செல்லதாயி வருந்தினாலும் மகன் நேர்மையான வழியில் தான் சம்பாதிக்கிறான்… ஒரு திருமணம் செய்து வைத்தால் குடும்பத்தின் மீது ஓர் பிடிப்பு வந்து விடும் என்று எண்ணினார்…
அப்பொழுது வசுந்தராவிற்கு வயது இருபதாக இருக்க… இப்பொழுது முருகவேலுக்கும் மணம் முடித்துவிட்டு வசுந்தராவிற்கு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணி காயத்ரியை முருகவேலுக்கு பேசினார்…
காயத்ரியின் பெற்றோர் முத்துலட்சுமி ஞானசுந்தரம்… ஞானசுந்தரம் ஒருவகையில் செல்லதாயிக்கு சொந்தம் தூரத்து உறவுமுறை… அவருக்கு விவசாயம் சரிவர அமையாததால் துணி வியாபாரம் செய்ய தொடங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேற திருச்சிக்கு இடம் பெயர்ந்தார்…
என்னதான் விவசாயம் அவருக்கு வரவில்லை என்றாலும் சொந்த ஊரில் இருப்பதையே பெரிதும் விரும்பியவர்… ஆனால் முடியாமல் போகவும் தான் பெற்ற ஒற்றை பிள்ளையாவது தன் சொந்த ஊரிலேயே வாழட்டும் என்ற எண்ணத்தோடு முருகவேலுக்கு மணம் முடித்து வைத்தார்…
செல்லதாயின் குணங்கள் அனைத்தையும் பெற்றிருந்தாள் காயத்ரி… அதோடு சற்று துடுப்பான பெண்ணும் கூட… ஆனால் திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே முருகவேலின் குணம் அறிந்து தன்னை மாற்றிக்கொண்டார்… ஒரு அண்ணியாக இல்லாமல் உற்ற தோழியாகவே இருந்தார் வசுந்தராவிற்கு…
முருகவேலுக்கு வசுந்தராவின் திருமணம் பெரும் செலவாக தோன்றியது உள்ளுக்குள்…
செல்லதாயி, “ராசா…”
“என்ன ஆத்தா…? என்ன விஷயம்…? ஒரு சோலியா வெளிய கிளம்பிட்டு இருக்கேன்… என்னன்னு வெரசா சொல்லு…” என்று கடுகுடுவென நிற்க,
“முக்கியமான விஷயந்த்தேன்… நீ உன் சோலிய முடிச்சுட்டு வா ராசா… பொறுமையா பேசுவோம்…” என்று பதமாக பேசி மகனை அனுப்பி வைத்தவர், அவரது வரவுக்காக காத்திருக்க தொடங்கினார்…
மாலை வந்த மகனிடம், “ராசா… நா ஒன்னு சொன்ன கேட்பியா…?”
கண்கள் இடுக்க அன்னையை பார்த்தவர், “என்ன ஆத்தா… ஏதோ பொடி வச்சு பேசுறாப்புல இருக்கு… என்னன்னு சொல்லு பொறவு அதைய கேட்கலாமா வேண்டாமான்னுட்டு ரோ(யோ)சன பண்ணலாம்…” என்றதுமே செல்லதாயிக்கு சுருக்கென்றது…
இருந்தும் அதை பெரிது படுத்தாமல், “ராசா நம்ம வசுந்தாவுக்கு கெழக்கால இருக்குற பத்து ஏக்கரா நிலத்த கல்யாணத்துக்கு சீதனாம குடுத்துரலாம் பா…” என்று சொல்லி முடிக்கும் முன்,
“என்ன ஆத்தா புத்திகித்தி கெட்டுப்போச்சா உமக்கு… பத்து ஏக்கரா நிலத்தை அப்படி சும்மா தூக்கி குடுக்க சொல்லுற… அவளுக்கு என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு எமக்கு தெரியும்…நீ உன்ற சோலிய பாரு போ…” என்று கத்தியவர் வீட்டை விட்டு வெளியேறினார் கோபமாக…
மகனது வார்த்தையில் திகைத்து நின்றுவிட்டார் செல்லதாயி… மகனது குணம் அறிந்து எப்படியும் திருமணத்திற்கு பிறகு எதையும் இவன் தன் மகளுக்கு  செய்ய போவதில்லை என்று தெரிந்துதான் திருமணத்திற்கு சீர் என்ற போர்வையில் பத்து ஏக்கரை மகளுக்கு தர முடிவு செய்தார் ஆனால் இப்பொழுது முருகவேலின் வார்த்தையில் மகளின் நிலை எண்ணி பெரிதும் வருத்தம் சுழ்ந்தது அவருள்…
வசுந்தராவிற்கு எதை பற்றியும் கவலையில்லை… தன் வீடு, கோவில், புதிதாக  அண்ணி எண்ணும் உறவில் கிடைத்த நட்பு என்று சிட்டாக பறந்துக் கொண்டு இருந்தவளுக்கு அண்ணன் மீது கொள்ளை பாசம் ஆனால் அதை என்றும் வெளியே காட்டிக் கொண்டது இல்லை காரணம் முருகவேல்…
வசுந்தராவிடம் அவர் நெருக்கி பழகதாதும், தங்கை எண்ணும் உரிமையை கொடுக்காததும் அண்ணனிடம் இருந்து தள்ளி நின்றே பழகியவர்… அண்ணன் எது செய்தாலும் சரி என்று நம்பிக்கை கொண்டவர்,  எட்டாம் வகுப்போடு தன் படிப்பையும் முடித்துக் கொண்டார்…
மேலும் படி என்று கூற யாரும் இல்லாததால் படிப்பை பாதியில் விட்டவருக்கு அது பெரிதாக தெரியவில்லை ஆனால் அதன் அருமை பின்நாளில் தான் யாரும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ள கூடும் என்று அப்பொழுது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை…
வீட்டை விட்டு வெளியேறிய முருகவேல், மூன்று மணி நேரம் கழித்து திரும்ப, “எங்க போய்ட்டு வரீக… எதுவுமே சொல்லாம போயிட்டீக… சாப்பாடு எடுத்து வைக்கவா…?” என காயத்ரி கேட்க,
“ம்ம்ம்… எடுத்து வை… குளிச்சிட்டு வாரேன்…” என்றவர் செல்லதாயை திரும்பியும் பாராமல் தன் அறைக்கு செல்ல,
‘கடவுளே… எம் பொண்ணு வாழ்க்கையை நீத்தேன் காப்பாத்தணும் எஞ்சாமி… அய்யோ சூதுவாது தெரியாத அந்த புள்ளைய வச்சுக்கிட்டு நாங் என்னத்த பண்ணுவேன்… புள்ளைய ஒன்னுந்தெரியாம வளர்த்துட்டேனே…’ என்று உள்ளுக்குள் மருகிக் கொண்டு இருக்கையிலேயே சாப்பாட்டு மேஜையில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்தபடியே காயத்ரியுடன் கதையளந்து கொண்டு இருந்த வசுந்தராவை பார்க்க செல்லதாயின் உள்ளம் வலித்தது….
தன் கணவர் சொத்து முழுவதையும் மகனின் பெயருக்கு மாற்றி விட்டு மகளின் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்திருந்ததை எண்ணி பெரும் துக்கம் உண்டானது செல்லதாயிக்கு…. அவர் இறப்பதற்கு ஒருவருடத்திற்கு முன்பே அதாவது மகனின் பிறந்தாள் பரிசாக சொத்தை முருகவேல் பெயருக்கு மாற்ற…
அன்று செல்லதாயி எத்தனை கூறியும் கேட்காமல் முருகேசன் எடுத்த முடிவு இன்று மகளது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நேர்ந்தது மகனது சொத்தின் மேல் இருந்த பித்து… அவரை பொருத்தவரை பணமே பிரதானமான ஒன்று…
குளித்து முடித்து வந்த முருகவேல் உணவு உண்ண அமரவும், காயத்திரி அவருக்கு பரிமாறி கொண்டிருக்க, முருகவேல் உணவை வாயில் அடைத்துக் கொண்டே “காயத்திரிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்… மாப்ள ஸ்கூல்ல வாத்தியாரா இருக்காரு… நல்ல பையன்த்தேன்… அப்பா அம்மா இல்ல அதுனால எந்த பிக்கல் பிடுங்கலும் இருக்காது… இதே ஊருத்தேன்… நாளைய மறுநாள் நிச்சயதார்த்தம்…” என்று அறிவிப்பாக சொல்ல, அதிர்ந்து போயினர் செல்லதாயும், காயத்திரியும்…
“என்னங்க என்ன சொல்லுதீக…? நாளைய மறுநாள் நிச்சயமா..? நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி வசுந்தரா கிட்ட கேக்க வேண்டாமா…?” என கேட்க,
“எதுக்கு….?” என்ற கேள்வியோடு முறைக்க, கணவனது கேள்வி அதிருப்தியை தர முகம் சுழித்தார் காயத்திரி….
அதை பார்த்த முருகவேல், “இங்க பாருடி… நான் அவ அண்ணன் எனக்கு தெரியும் என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னுட்டு… அதைய யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை… நாங் முடிவு பண்ணது பண்ணதுத்தேன்… அவள தயாரா இருக்க சொல்லு…” என்று கண்டிப்புடன் சொல்ல, காயத்திரிக்கு ஒன்றும் கூற முடியவில்லை…
செல்லதாயி பரிதவிப்புடன், “எய்யா… ராசா… மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா யாரும் இல்லைன்னு சொல்லிறீயே… சொத்து சொகம், நிலம் அதை பத்தி எல்லாம் விசாரிச்சியா…? பையன் குணமானா பையனா…? எதுக்குயா இம்புட்டு அவசரமா நிச்சயம் வைக்ககணும்…” மகள் பற்றிய கவலை அவருக்கு பெரிதும் வாட்டியது….
“இங்க பாரு ஆத்தா… நான் ஒண்ணும் கூறு இல்லாதவன் இல்ல… எல்லாம் விசாரிச்சாச்சு… எல்லாம் நல்ல பையன்தேன் உன்ற மவளுக்கு ஏத்தவந்த்தேன்… சும்மா கிடந்து வெசன படாம போய் நிச்சயித்துக்கு ஆக வேண்டியதை பாரு…” என்றதோடு முடித்துக்கொண்டார் முருகவேல்….
காயத்திரிக்கும், செல்லதாயிக்கும் என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை…வெறுமனே கையை மட்டும் பிசைந்து கொண்டு இருக்க வேண்டியதாக இருந்தது…
ஆனால் வசுந்தராவிற்கு எதை பற்றியும் கவலையில்லை… தனக்கு திருமணம் என்றதும் கனவில் மிதக்க தொடங்கினார் அண்ணன் மேல் கொண்ட நம்பிக்கையில்… நிச்சயம் செய்யும் நாளும் வந்தது…
“என்னப்பா முருகவேலு… உன் தங்கச்சிக்கு எப்படி எல்லாமோ மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைப்பன்னு பார்த்தா, இப்படி பண்ணிட்டியேப்பா….” என்று கூட்டத்தில் ஒரு நரைத்த முறுக்கு மீசை காரர் வருத்தபடுவது போல் கூற,
“என்ன குரல் ஒசருது… யாரு அப்புச்சி அது…?” என்று மீசையை முறுக்கியபடி கூட்டத்தில் பார்வையை சுழற்றியவர், மேலும் பேச தொடங்கினார்…
“ஏன் இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சலை கண்டீராம்…? மெத்த படிச்சவரு… ஸ்கூல்ல நல்ல சோலில இருக்காரு… கை நிறைய சம்பளம் வருது… நல்ல குணமானவரு வேற …. பொறவு வேற  என்ன வேணும்…” என்று கர்ஜனையாக கேட்க யாரும் வாய் திறப்பதாக இல்லை…
இதை எல்லாம் கேட்ட ராஜேந்திரனுக்கு முகம் விழுந்துவிட்டது… அப்பா அம்மா என்று யாரும் அற்ற அநாதையாக ஆசிரமத்தில் வளர்ந்த  ராஜேந்திரன் ராமருக்கு சமமானவர்…
அமைதியும், பொறுமையும் கொண்டவர்… சொத்து என்று எதுவும் இல்லையென்றாலும் படிப்பை பற்று கோளாக கொண்டு தன்னை மேம்படுத்திக் கொண்டவர்…
முருகவேல், “சரி சரி தேவையில்லாததை பேசி நேரத்தை வீணாக்காம தட்டை மாத்திக்கலாம்… ” என்று துரித படுத்த,
“அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்…. நான் பொண்ணு கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்…” என்று ராஜேந்திரன் கூற, ஒரு சலசலப்பு அனைவர் மத்தியிலும்…
“எல்லாரும் அமைதியா இருங்கப்பு… இங்க பாருங்க தம்பி, நீங்க மெத்த படிச்சவரா இருக்கலாம் ஆனா இங்க எல்லாம் இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்ன பேசிக்குற பழக்கம் எல்லாம் கிடையாது… நாங்க என்னத்த சொல்லுறோமோ அதைய தான் பொண்ணுக கேட்பாக… அதனால அடுத்து ஆக வேண்டிய வேலைய பார்க்கலாம்…
“இல்லைங்க… நான் பேசணும்னு நினைக்குறேன்…ஏனா கல்யாணம் பண்ணிக்க போறது நாங்க… இப்ப யாரோ சொன்னா மாதிரி நாளைக்கு வசுந்தராவுக்கும் ஒரு எண்ணம் வந்துர கூடாது இல்லையா.. இதுல அவங்க வாழ்க்கையும் தானே இருக்கு… அதான் பேசணும்னு சொல்லுறேன்… புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன்.. ” என்று பொறுமையாக கூற அவருடன் வந்திருந்த ஆசிரம தலைவரும்,
“ஆமா முருகவேல்… இது அவங்க வாழ்க்கை அவங்க முடிவு பண்ணட்டும்… அப்புறம் ஏதாச்சும்னா நம்மளால தான் இப்படி ஆச்சுன்னு சொல்லிட கூடாது பாரு… ” என்று சொல்லவும் நீண்ட யோசனைக்கு பின் சரியென்று ஒப்புக் கொண்டார் முருகவேல்…
ராஜேந்திரன் வார்த்தையில், செல்லதாயிக்கும் காயத்திரிக்கும் அவர் மீது ஓர் நல்ல அபிப்ராயம் எழ, அவர்களது முகம் சற்று தெளிந்தது… உறவோ சொத்தோ எதுவும் இல்லையென்றாலும் குணமானவர் என்று தோன்ற மனதில் ஒரு நிறைவு வந்தது அவர்களுக்கு…
அந்த காலத்து அரண்மனை போன்று இருந்த வீட்டின் நடு கூடத்தில் ஊர் மக்களும் முருகவேல் குடும்பமும் நிச்சயத்திற்காக கூடி இருக்க, அதையொட்டி பக்கம் இருந்த ஹாலில் தான் ராஜேந்திரனும் வசுந்தாவும் பேசுவதற்கு தனித்து விடப்பட்டனர்…
கூட்டத்தில் இருந்தவர்களுக்கு இவர்களை நன்கு பார்க்க முடியும் ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று தான் கேட்கமுடியாது எல்லாம் ஒரு பாதுகாப்பிற்கு தான்… இவ்வாறான பழக்கம் அப்பொழுது புழக்கத்தில் இல்லாததால் வந்த எச்சரிக்கை உணர்வு…
“வசுந்தரா….” மென்மையில் வந்தது வார்த்தை….
“ம்ம்ம்…” வெட்கத்தில் குழைந்தது அவளது வார்த்தை…
வசுந்தராவின் எதிரில் கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தார் ராஜேந்திரன்… அவர் எதிரிலோ அழகு பதுமையென்னும் வகையில் தலை கவிழ்ந்து வெட்கத்தில் திளைத்த வதனத்தை மறைத்தபடி நின்றிருந்தார் வசுந்தரா…
கடவுளின் முடிச்சுகள் எப்படி யென்று யாருக்குத்தான் தெரியும்… அவன் விளையாடுகிறான் நாம் விளையாட படுகிறோம்….
தொடரும்…

Advertisement