Advertisement

UD-18:
“என்ன தம்பி இது…?” என்று காயத்ரி ஆச்சரியம் கொண்டு கேட்கவும், விக்கி தன் பின்னந்தலையை கோதி, நெளிந்துக் கொண்டே
“சைந்தவிக்கு சீர் ஆண்ட்டி…” என்றவனை காயத்ரி அவனை கேள்வியாக பார்த்து,
“சீரா…? என்னத்துக்கு தம்பி சீரு…? அதில்லாம உனக்கு ஏன் ராசா வீண் செலவு…?” என்று கேட்டவரின் பேச்சில் அத்தனை நெகிழ்ச்சியும் பாசமும் இருந்தது… ஆனால் அந்த கேள்வியில் ஏனோ விக்கிக்கு முகம் சிறுத்துவிட்டது…
“ஏன் ஆண்ட்டி… நான் செய்ய கூடாதா…? நான் சும்மா பேச்சுக்கு சைந்துவ தங்கச்சினு சொல்லல ஆண்ட்டி…. எனக்கு கூட பிறந்தவங்க யாருமில்ல… சொந்தம்னு யாரும் சொல்லிக்குற அளவுக்கு இல்ல ஆண்ட்டி… ஏதாச்சும் விஷேசம்னா போய் கிப்ட் குடுத்துட்டு வந்துருவோம் அவ்வளவு தான்… இங்க இன்னைக்கு பார்த்த மாதிரி எல்லாம் நான் பார்த்தது இல்ல… நான் மனசார சைந்தவிய என் தங்கச்சியா தான் நினைக்குறேன்… அதான் முன்ன நான் செய்யமா விட்ட சீர அண்ணன் முறைல இப்ப செய்யுறேன்…. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நகையும் சேரியும்(saree) வாங்கி இருக்கேன்… உங்களுக்கு புடிச்சு இருக்கான்னு பாருங்க… அப்புறம் சைந்து கிட்டையும் கேட்டு சொல்லுங்க ஆண்ட்டி… ஏதாச்சும் பிடிக்கலைன்னா வேற வாங்கிக்கலாம்…” என்ற உணர்ச்சி வசபட்டு பேசியவனின் தலையை பாசத்தோடு தடவியவர்,
“அதையவ நீயே போய் அவகிட்ட கேளு ராசா… இத அம்புட்டும் நீத்தேன் வாங்கியாந்தேன்னுட்டு தெரிஞ்சா புள்ள ரொம்ப சந்தோஷ படும்…” என்ற காய்திரியை பார்த்து சங்கடமாய் சிரித்தவன், சமாளிக்கும் பொருட்டு
“இல்ல ஆண்ட்டி நீங்களே கேட்டு சொல்லுங்க… நான் ஒளிச்சுக்குறேன்… அவ எப்படி ரியாக்ட் பண்ணுறான்னு பார்க்கணும்…” என்றவனை காயத்ரி சந்தேகமான பார்வையால் ஊடுருவ, அதை எதிர்க்கொள்ள முடியாது திணறியவன் தலையையும் பார்வையும் வேறு புறம் திருப்பி கொண்டான்…
இதற்கு மேல் அவரது பார்வையின் கணத்தை தாக்குபிடிக்க முடியாது என உணர்ந்தவன், சட்டென எழுந்து நின்று ” சரி ஆண்ட்டி நான் ரூம்க்கு போறேன்… பிரெஸ் ஷப் ஆயிட்டு வரேன்…” என்று நழுவ முயன்றவனின் காதை பிடித்து திருகவும்,
“ஸ்ஸ்ஸ்…. ஆஆஆ… ஆண்ட்டி வலிக்குது விடுங்க விடுங்க பிளீஸ்…” என கத்தியவன் அவரது கையில் இருந்து தன் காதை விடுவித்து கொள்ள போராடினான் அவரிடம் கெஞ்சியபடி…
“அப்ப நெசத்த சொல்லுவே… நானும் பாக்குத்தேன் வந்த அன்னைக்கு இருந்த துடுக்குதனம் கொஞ்ச நாளாவே இல்லையே… அந்த கிறுக்கி ஏதாச்சும் சொல்லுச்சா…? அத்தேன் அது கூட பேச மாட்டீங்கியோ…?” என காயத்ரி கேள்விகளை தொடுக்க என்ன சொல்லவது இப்படி தப்பிப்பது என்று தெரியாமல் முழித்தவனின் முழியே அவனை ஏதோ இருக்கு என்று மாட்டிவிட்டது…
“உங்முழியே செரியில்ல… என்னவே ஆச்சு… இப்ப சொல்ல போறியா இல்லையா…?” என்று மிரட்டவும், வழிக்கு வந்தான் விக்கி….
“சொல்லுறேன் ஆண்ட்டி ஆனா காதை விடுங்க பிளீஸ்…” என முகத்தை சுருக்கி கெஞ்சவும், பெரிய மனது பண்ணி விடுதலை அளித்தார் காயத்ரி…
காதை தேய்த்துக் கொண்ட விக்கி, அவரை மெல்ல விழியுயர்த்தி ஓர் பார்வை பார்த்து விட்டு மீண்டும் பார்வையை எங்கோ வைத்துப்படி மெல்லிய குரலில்,
“அது ஆண்ட்டி… நான் சைந்தவிய என் தங்கையா தான் பார்க்குறேன்… ஆனா அங்கிள்க்கு நான் சைந்து கூட பழகுறது பிடிக்கல போல… அவரு அப்படி சந்தேகமா பார்க்குறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஆண்ட்டி… தங்கச்சியா பார்க்குற என்னை அந்த பார்வை….” சொல்லாமல் தலையை கோதிக் கொண்டவனுக்கு வார்த்தை வராது தவித்தான்…
அவனது வார்த்தை மேலும் குற்றணர்வில் ஆழ்த்தியது முருகவேலை… அதிலும் மகனது கண்டன பார்வையை அவரால் எதிர்க்கொள்ளவே முடியவில்லை… வந்த முதல் நாள் மகன் கூறிய வார்த்தை இப்பொழுது நினைவில் வந்து அவர் தலையை குனிய செய்தது தானாக…
“அய்யா ராசா… நீரு எதையும் தப்பா எடுத்துக்காதீக… அவரு கொஞ்சம் அப்படித்தேன்… உங் அன்பு அவருக்கு தெரியாதுல அத்தேன் அப்படி பார்க்குறாக… நீரு மனசுல எதையும் வச்சுக்காதீக தம்பி…” என்று அவசரமாக சமாதானம் செய்ய முயன்றவரை பார்த்து சினேகமாக புன்னகைத்த விக்கி…
“ஆண்ட்டி… எனக்கு புரியுது… இது வில்லேஜ்… இங்க அப்படிதான் இருப்பாங்க… அதான் நான் என்னை மாத்திக்கிட்டேன்… ஒரு அண்ணனா சைந்தவி மேல் அதிக பாசமும் உரிமையும் எனக்கு இருக்கு… அதை யாராலும் மாத்த முடியாது, தடுக்கவும் முடியாது… நான் மாறலைன்னா அங்கிள் தான் நிம்மதி இல்லாம இருப்பாங்க… எதுக்கு தேவையில்லாத கஷ்டம்… சொல்லுங்க… நீங்க எதை பத்தியும் கவலை படாதீங்க… இதை எல்லாம் சைந்து கிட்ட காட்டுங்க… ஏதாச்சும் பிடிக்கலைன்னா வேற வாங்கலாம்….”என காயத்ரிக்கு ஆறுதல் கூறியவன், பின் முகத்தை பாவமாக மாற்றி
“இப்படியே பேசி பேசி சோறு போட மறந்துறாதீங்க ஆண்ட்டி… வயித்துக்குள் பயங்கரமா சத்தம் கேட்குது…” என்று வயிற்றை தடவ, அவனது முக பாவனையை கண்டு சிரித்த காயத்ரி,
“உன்னைய…” என்று செல்லமாக அவன் காதை திருகி விட்டு, “போய் குளிச்சுட்டு வா ராசா…. கீர வட செஞ்சு தாரேன்…” என்க,
“சூப்பர் ஆண்டடி… அப்படியே கூட கெட்டி சட்னியும்…” என்று சைட்டு டிஸ் சொல்லியவனை பார்த்து போலியாக முறைக்க…
“என்ன ஆண்ட்டி முறைக்குறீங்க…? தொட்டுக்க சட்னி இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சு கேட்டேன்… தப்பா…?” என முகத்தை சுருக்க,
“போவே போய் குளிச்சுட்டு வெரசா வா… சும்மா பேசிக்கிட்டு இருந்த சட்டினியும் இருக்காது வடையும் இருக்காதுவே…” என்று அவனை துரத்தி விட்டார் சிரித்தபடி…
“வாவ்…. சூப்பர் ஆண்ட்டி….சீக்கிரம் வந்துரேன்…” என்று துள்ளிக்கொண்டு வெளியேறியவன் பேயை பார்த்தார் போல் பேய் முழியுடன் பேஸ்த்தடிச்சு நின்றி விட்டான் அறை வாசலில்….
‘அய்யோ…. வெள்ள வேட்டி… எப்ப வந்தாரு… உள்ள பேசுனத கேட்டு இருப்பாரோ…? முழித்தவன், முகத்தை சட்டென சீர் படுத்தி, முருகவேலை பார்த்து ஒரு மரியாதை கலந்த புன்னகை சிந்தினான் சிறு வணக்கத்தோடு….
ஏனோ முருகவேலுக்கே அவனது பேய் முழியும் பின் சொன்ன வணக்கமும் சிரிப்பை வரவழைக்க பார்க்க, அதை கட்டுப்படுத்திக் கொண்டு அவனது வணக்கத்திற்கு சிறு தலையசைப்பை பதிலாக தந்துவிட்டு அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்….
உள்ளே வந்தவருக்கு மனம் ஏனோ விக்கியை தவறாக எண்ணியதை நினைத்து வருந்தம் உண்டானது தன் தவறால்… இன்று காலையில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த கோபம் இயலாமை குற்றணர்வு என மொத்ததையும் அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை ஒருநாளில்…அந்த கணம் தாங்காது, அதை பகிர்ந்துக் கொள்ள உள்ளம் தன்போல் மனைவியை தேடியது ஆறுதலுக்காக… பீரோவில் துணிகளை அடுக்கி கொண்டிருந்த மனைவியை பார்த்தும்,
“காயத்ரி…”என்று அழைத்தார் மெல்லிய குரலில்…
காயத்ரி கணவனது வரவை உணர்ந்தாலும் திரும்பி பார்க்க தோணாமல் தன் வேலையை பார்க்க… அவர் அழைக்கவும் ஒருநொடி தன் செயலை நிறுத்தியவருக்கு முருகவேலின் மீது கோபம் ஏகத்துக்கும் எகிறியது…
இருந்தும் அதை காட்டி பழக்கம் இல்லாத காயத்ரி, எப்பொழுதும் போல் அதை தனக்குள் புதைத்துக் கொள்ளாமல் இப்பொழுது அதை தன் அமைதியின் மூலம் காட்ட தொடங்கினார்…
தான் அழைத்தது கேட்கவில்லையோ என்று எண்ணிய முருகவேல், மீண்டும் “காயத்ரி….” என்று முன்பை விட சற்று குரலுயர்த்தி அழைத்தார் வலியின் போது தாயின் மடி தேடும் குழந்தையை போல்…
ஆனால் அதை உணராத காயத்ரி, எங்கு இதற்கு மேல் இங்கு நின்றால் அவரது அழைப்புக்கு செவிசாய்த்து விடுவோமோ என்று பயந்து  துணிகளை அருகில் இருந்த சேரில் (chair) வைத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினார் அவசரமாக…
மனைவி தன் புறம் திரும்புவாள் என்று அவரையே பார்த்திருக்க, அவரது இந்த ஒதுக்கம் அதிர்ச்சியை அளித்தது முருகவேலுக்கு…
விக்கிக்கு முருகவேல் ஏதும் சொல்லாமல் ஏன் சிறு முறைப்பு கூட முகத்தில் காட்டாது சென்றது பெரும் ஆச்சரியத்தையும் நிம்மதியையும் கொடுத்தது என்றால் மிகையாகாது…
‘நல்ல வேல வெள்ள வேட்டி நம்ம பேசுனத கேட்கல… கேட்டிருந்தா நம்மளை ஒண்ணு அடி மொத்தி இருப்பாரு இல்ல பார்வையால எரிச்சிருப்பாரு… தப்பிச்சுட்ட டா விக்கி…. அடுத்த வேற எதுக்காச்சும் அவரு கிட்ட மாட்டுறதுக்கு முன்னாடி இடத்தை காலி பண்ணு….’ என்று எண்ணியபடி நடந்தவன் கண்ணில் விழுந்தான் கவியழகன்…
படி இறங்கும் இடத்தில், தன் ஃபோனை பார்த்து கண்கள் கலங்க சிரித்துக்கொண்டிருந்தான்… இன்னும் சொல்ல போனால் விழுந்து விழுந்து சிரிக்காத குறை என்பார்களே அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான் கவியழகன்…
அவனை கேள்வியாக பார்த்தபடி அருகில் சென்ற விக்கி, அவன் தோளில் கை வைக்கவும், சிரித்துக்கொண்டே அவன் புறம் திரும்பிய கவி,
“மச்சான் செம்ம போ….” என்று விட்டு மீண்டும் சிரிக்க,
‘என்ன இவன் லூசாயிட்டானா…? அப்படி என்னத்த பார்த்து சிரிக்குறான்…?’ என்று யோசனையுடன் எம்பி அவன் கையில் இருந்த ஃபோனை முதலில் புரியாது பார்க்க, இரண்டொரு நொடியில் கோபத்தில் முகம் அத்தனை உஷ்ணத்தை வெளிக்கக்கியது விக்கிக்கு…
“ஏன்டா நாயே… எங்க தர்மடி விழுமோன்னு பயந்து நின்னுட்டு இருந்ததை வீடியோ எடுத்ததே மொத தப்பு இதுல கண்ணுல தண்ணீ வர அளவுக்கு சிரிப்பு வேறையா…” என்று அவனது முதுகில் தன் கை வரிசையை காட்டும் போது, அதை கவி
“மச்சான் மச்சான் ஒருநிமிஷம்…” என்று அவனை தடுத்து, “எனக்கு ஒரு டௌட் டா…” என்று யோசனையாக விக்கியின் முகத்தை பார்க்க,
“என்னன்னு நான் கேட்க மாட்டேன்… ஏன்னா நீ இப்ப இருக்குற ஷிச்சுவேஷன்கு உருபடியா எதுவும் கேட்க மாட்டனு விளங்கிருச்சு… அதுனால நீ மூட்டிட்டு இரு…” நண்பனின் வார்த்தையில் விக்கி உசாராகி அவனது கேள்வியை தவிர்க்க,
“இல்ல டா ஐ ஆம் சீரியஸ்…” என்று முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டவனை கண்டு அவன் மேல் தொடுக்க இருந்த தாக்குதலை சற்று நிறுத்தியவன்,
“என்ன டௌட்… கேட்டு தொல…” என்றபடி தங்கள் அறை நோக்கி நடக்க தொடங்கினர்…
விக்கியின் தோல் மேல் கைப்போட்டு கொண்ட கவி,” உன்ன கொஞ்ச வருஷமா தெரியும்… இதுவரை நீ இந்த அளவுக்கு ஜாலியா இருந்து நான் பார்த்ததே இல்லையே டா… நீ எப்ப இப்படி மாறுன…?” என்றவனை கேவலமான ஒரு பார்வையை அவன் மேல் படர விட்ட விக்கி,
“இது தான் உன் டௌட்டா… லூசு பயலே…” என்று ஏதோ திட்ட வரும் முன்,
“டேய்… எங்கப்பா லூசுன்னா சொல்லுற… இத அவர் கிட்ட சொல்லட்டா…?” என்றவனை கலவரமாக பார்த்த விக்கி,
“ஏன் டா உனக்கு…?தெரியாம தான் கேட்குறேன் என்ன பிரச்சன…?” என்று வடிவேலு பாணியில் கேட்டு சிரிக்க, கவியும் சிரித்தபடி மேஜை மீது சாய்ந்து நின்று கைகளை கட்டிக் கொண்டான்…
“சரி பதில் சொல்லு… நான் இத்தன வருஷம் பார்த்த விக்னேஷுக்கும் இங்க என் ஊர்ல நான் பார்க்குற விக்னேஷுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஏன்…?”
சிரித்துக் கொண்டிருந்த விக்கி, இப்பொழுது அமைதியாக நிர்மலமான முகத்துடன், “சின்ன வயசுல இப்படி தான் மாப்ள… அப்புறம் அப்பா தவறின பின்னாடி தான் கொஞ்சம் மாறினேன்… வெளியுலகிற்கு மட்டும்… உனக்கே தெரியும் அம்மா தான் அப்பாக்கு அப்புறம் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டதுன்னு… அவங்களுக்கு அப்புறம் அதை நான் பார்க்க ஆரம்பிச்சதும் எனக்கே எனக்கு டைம் ஒதுக்க நேரம் இல்லாம போச்சு… ஃபாரின்ல வேலையும் பார்த்துக்கிட்டு இங்க இந்தியால எங்க கம்பெனியையும் பார்த்துக்கிட்டு இருந்தனால நாளும் நேரமும் போறதே தெரியாம போச்சு… அப்புறம் நீ வந்த பின்னடி கொஞ்சம் பிரீத்திங் ஸ்பேஸ் கிடைச்சுது… ஒரு பிரேக் வேண்ணும்னு தான் இங்க வந்தது… பட் இங்க நான் நானா இருக்கேன் டா… நோ டென்ஷன், நோ கமிட்மென்ட்ஸ் இங்கேயே இருந்தரலாம்னு தோணுது…” என்று பெருமூச்சுவிட்டவன் இருகைகளாலும் தன் தலையை கோதியபடி படுக்கையில் சாய்ந்தான் நிம்மதியாக…
“அதான் மாமனார் வீடு இங்கன்னு ஆயிருச்சே அப்புறம் என்ன மச்சான் அடிக்கடி வந்து ரிலேக்ஸ் ஆயிக்கோ…” என்று கூறி ஒற்றை கண்ணை சிமிட்ட, நண்பனின் வார்த்தையில் அவனை திரும்பி பார்த்தவன் அவனது கண் சிமிட்டலை கண்டு முகம் லேசாக சிவக்க, இன்று சேலையில் கண்ட தன்னவளை நினைவில் கொண்டுவந்து அதில் லய்த்திருந்த சமயம்….
“அண்ணே… டேய் அண்ணே…” என்று கத்தியபடி அவர்களது அறைக்குள் ஓடி வந்து நின்றாள் சைந்தவி…
வேகமாக படியேறி ஓடிவந்ததில், மூச்சு வாங்க நின்றவளை கண்டு விக்கி, பதற்றத்துடன் படுக்கையில் இருந்து எழுந்து “என்னாச்சு  டா… ஏன் இப்படி ஓடி வர.. ஏதாச்சும் பிரச்சனையா… அங்கிள் ஏதாச்சும் திட்டுனாங்களா….?” என்று கேட்டவனின் பேச்சில் அத்தனை பரிவும் பதற்றமும் குடிக் கொண்டிருந்தது…
முதலில் அவனது கேள்வியில் கண்கள் பணிக்க விழியகலாமல் பார்த்திருந்தவள், பின் அவன் கடைசியாக கேட்ட கேள்வியில் செல்லமாக முறைக்க தொடங்கினாள்…
“ஏன்டா முறைக்குற… என்னாச்சு…?” என கேட்டவனுக்கு அப்பொழுது தான் முருகவேலை பற்றி கேட்டது நினைவிற்கு வர,  பல்லை காட்டினான் விக்கி…
“ஈஈஈ… அது ஒண்ணுமில்ல… சும்மா கேட்டு பார்த்தேன்…” என்று சமாளித்தவன், “சரி எதுக்கு இப்படி ஓடி வந்த…?” என.மீண்டும் கேட்கவும்,
“ம்ம்ம்… சும்மாத்தேன் ஓடியாந்தேன்…” என்று நீட்டி பேச, காண்டானான் விக்கி,பின் தன் தேவதையுடன் கனவில் மிதக்க இருந்தவனை கலைத்துவிட்டாளே என்னும் கடுப்பு….
“பிசாசு… கொஞ்ச நேரத்துல என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்… போ அந்த பக்கம்…” என்று அவளை ஒரு புறம் தள்ளி நிறுத்தியவன் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து மீண்டும் தன்னவளின் நினைவில் தன் நினைவை தொலைக்க தொடங்கினான்…
முதலில் விளையாட்டாய் முறைத்தவள் இப்பொழுது விக்கி பேசியதில் உண்மையில் கோபம் வர, இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை உக்கிரமாக பார்த்து வைத்தாள்… ஆனால் அய்யா அதை கவனிக்கும் மனநிலையில் தான் இல்லையே… சில பல நொடிகள் அசையாது விக்கியை முறைத்துக் கொண்டு நின்றிருக்க இது தேராது என்று புரிந்ததும் தலையை திருப்பி பார்த்தாள்… அங்கே கவி இருவரையும் கண்டு புன்னகை முகத்துடன் நின்றிருந்தான் முன்பிருந்த அதே நிலையில்…
“ஏன்ணே நானு அம்புட்டு வேகமாக ஓடியாரேன் கொஞ்சங் கூட ரியாக்க்ஷனே இல்லாம அப்படியே பிடிச்சுவச்ச பிள்ளையார் கணக்கா நின்னுட்டு இருக்கிய… உங்களுக்கு இவிக எம்புட்டோ தேவலாம்… ஏன்னுட்டு ஒரு வார்த்த கேட்டாக…” என்று குறைபடிக்க, அதற்கும் அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போக…
அதில் சின்னவளுக்கு கோபம் வந்து ஏகத்துக்கும், “என்னணே சிரிச்சுட்டே இருக்கீக…? அப்ப அம்புட்டுத்தேன் எம்மேல பாசமா…?” என்று கண்களை கசக்க தொடங்கினாள் போலியாக…
மெல்ல தங்கையின் அருகில் வந்தவன், அவள் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு, “நீ சாதரணமா ஓடி வந்த இதுல நான் கேட்க என்ன இருக்கு டா…?” என வினவியவனின் கையை தட்டி விட்டவள்,
“போ… பொய் சொல்லாதீக…” என்று முகத்தை சுருக்க,
“ம்ம்ம்… அப்ப இவன மாதிரி பதறி இருக்கணும்னு சொல்லுறியா…?” என்று படுக்கையில் அமர்ந்து இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனை காட்டி கேட்க,
“ஆமா இல்லையா பின்ன…?” என்று உதட்டை பிதுக்கி கேட்டவளின் தலையை லேசாக கொட்டியவன்,
“போடி லூசு… நீ ஏன் வந்தன்னு தெரியும் அப்புறம் ஏன் நான் பதறணும்…?” என்றவனை பார்த்து உதட்டை சுழித்தவள்,
“சும்மா பேச்சு மட்டும்த்தேன்… மத்தபடி ஒண்ணுமில்ல… ஆனா பாரு விக்கியண்ணே எனக்காக என்னனெல்லாம் வாங்கியாந்திருக்குன்னு, இப்ப கூட எனக்காக பதறுனது இவிகத்தேன்…. நீ ரு இதுவர எனக்காக ஒண்ணுமே பண்ணுல… உனக்கு பதில் இவிகளே அண்ணனா பொறந்திருக்கலாம்…” என தன் போக்கில் நீளமாக பேசியவள் பெறுமையாக விக்கியின் முகத்தை பார்க்க, அவனோ கவலையாக சைந்தவியை பார்த்திருந்தான்…
‘ஏன்…. என்னாச்சு…?’ என்று அவள் யோசிக்கையில் தான், தான் விட்ட வார்த்தைகளை உணர்ந்தாள்…
உடனே கவியை திரும்பி பார்த்தவளின் முகத்தில் அத்தனை கலக்கம்…
“சாரி அண்ணே…. ஏதோ கூறுக்கெட்டு போய் அப்படி பேசிப்புட்டேன்… நெசமா எங்மனசுல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லண்ணே…”என்று கண்கள் கலங்க பேசியவளின் தோளை ஆதரவாக அணைத்த கவி,
“ஏன் கண்ணுல டேப்’பை திருக்குற இப்ப…? நீ சொன்னதை நான் தப்பாவே எடுத்துக்கல… நான் உனக்கு எப்படி ஒரு அண்ணனோ அதே மாதிரி தான் விக்கியும்… நான் உனக்கு எதுவும் செய்யாட்டியும் விக்கி ஒரு அண்ணனா கண்டிப்பா உன்னை நல்லா பார்த்துப்பான்… அதுனால டென்ஷன் ஆகாத…” என்று சமாதானம் செய்ய மனம் குளிர்ந்து போயினர் இருவரும்…
“தேங்கஸ் அண்ணா… ஆனாலும் சாரி நான் அப்படி பேசிருக்க கூடாது…” என்று கவியிடம் மன்னிப்பை வேண்டியவள், விக்கியிடம் திரும்பி
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா அண்ணா… அம்புட்டும் ரொம்ப அழகா இருந்துச்சு… அதுலையும் அந்த சேரி(saree) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு அண்ணா…” என்று குதுகளித்து கூறியவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,
“உனக்கு பிடிச்சிருந்தா ஓகே… நீ ஹாப்பின்னா நானும் ஹாப்பி…” என்க, சில நிமிடங்கள் அண்ணன்களுடன் வம்பளத்தவள் இருவரையும் சாப்பிட அழைத்துவிட்டு கீழே சென்றவளிடம் அத்தனை துள்ளல்….பின்னே இருக்காத ஒன்றுக்கு இரண்டு அண்ணன்கள் பாச மழையை பொழிந்தாள் அவளுக்கு தான் குறை ஏது…
சைந்தவி சென்றதும்,விக்கி கவியை அணைத்துக் கொண்டான் நெகிழ்ச்சியில்…
“டேய் எரும விடுடா… நாயே விட்டு தொல… நான் கனிமொழி இல்ல விடுடா…” என்று போராடி அவனிடம் இருந்து விலகியவன் பதறி இரண்டடி தள்ளி நின்று தன் சட்டையின் காலர் பகுதியை இழுத்து மூடியபடி விக்கியை பார்த்து,
“பரதேசி… எதுக்குடா இப்படி கட்டிப்புடிச்ச… வர வர உன் போக்கே சரியில்ல… உன்கூட இருக்குறது என் கற்ப்புக்கு உத்திரவாதமே கிடையாது… ” என்று அலற, விக்கி தன் நெற்றியில் அரைந்து கொண்டான் கொடுமையே என…
“ரொம்ப பண்ணாத மாப்ள… “என்று கடுப்பாக மொழிந்தவன், பின் மென்மையான குரலில், “ரொம்ப தேங்க்ஸ் டா மாப்ள… கண்டிப்பா நான் சைந்தவிக்கு ஒரு நல்ல அண்ணனா இருப்பேன்….” என்று வாக்களித்தவனை கண்டு புன்னகைத்த கவி,
“ம்ம்ம்… தெரியும் மச்சான்… நீ அப்பாவ பத்தி கவலை படாத… அவரு யோசிக்குறதும் தப்பில்ல தான்… பொண்ண பெத்தவங்க இப்படி இருக்குறது தப்ப சொல்ல முடியாது… ஏன்னா இப்ப சொசைட்டி அப்படி இருக்கு… அண்ணா’ங்குற வார்த்தைய கொச்சை படுத்தி வச்சு இருக்காங்க… தந்தைக்கு அடுத்த ஸ்தானம் அது அதுக்கான மரியாதை இப்ப பாதி பேருட்ட இல்ல… அண்ணானு சொல்லிட்டு அடுத்த நாள் லவ்வர்’னு சொல்லுறாங்க கேட்டா டிரென்டாம்…” என்று கவி முகம் சுளித்து சலித்துக் கொள்ள…
விக்கியும், “ஆமா மாப்ள… அதுனால தான் உண்மையா அன்பு காட்டுறதுக்கு கூட இப்ப யோசிச்சு பயபட வேண்டியிருக்கு…”
“ம்ம்ம்… சரி விடுடா… வா போய் சாப்பிடலாம்… வட ஸ்மெல் இங்க வரை வருது… ” என்றவனை,
“டேய் நீ தான் டையட்ல இருக்கல்ல… அப்புறம் ஏன்டா சாப்பிடற…?”
“டேய் அது அப்ப அந்த ஊர்… இது இப்ப எங்க ஊர்…” என்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை பக்கவாட்டில் திருப்பி தூப்ப, அதை தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு முன்னேறினான் வடைக்காக…
மறுநாள், மாலை கனி வேகமாக பூங்குழலியின் வீட்டினுள் நுழைந்தாள் மூச்சு வாங்க…. பக்கத்து தெருவில் இருக்கும் அவளது வீட்டில் இருந்து தொடங்கிய அவளது ஓட்டம் இங்கு தான் நின்றது…
“அடியேய் கழுத… என்னத்துக்குவ இந்த ஓட்டம் ஓடியாந்திருக்க…” என்ற செல்லதாயின் கேள்விக்கு, கனி மனதில் ‘நமக்கு கனிமொழின்னு ஒரு பேரு இருக்குறது இந்த ஆச்சிக்கு தெரியுமா தெரியாதா…? எப்பபாரு கழுத, கூறுக்கெட்டவ, சிறுக்கினுட்டு சொல்லுது… ஒருநாள் இதைய வசமா வச்சு செய்யணும்…’என்று சபதம் பூண்டவள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றிருந்தாள்…
“என்னவே நாங் கேட்டுட்டு இருக்கேன்… பதில சொல்லாம நடுகூடத்துல நின்னு கனா கண்டுட்டு இருக்கவ கூறுக்கெட்டவளே…” என்று கத்தவும்,
‘ம்க்கும்…. அத்தேனே… அடுத்து சிறுக்கினுட்டு திட்டும்… அதுக்கு முன்ன வாய திறப்போம்…’ என எண்ணி,
“ஒண்ணுமில்ல ஆச்சி…” என மேலே சொல்லும் முன் செல்லதாயி இடைபுகுந்தார்…
“ஒண்ணுமில்லாததுக்கு எதுக்குவே இப்படி ஓடி வரவ…?” என்று இடக்காக பேசி கனியை லூசு என்பதை ஒரு பார்வை பார்த்து வைத்தார்…
“அய்யோ ஆச்சி…” என்று கை விரல்களை மடக்கி கண்களை இறுக மூடி உச்சாந்தியில் கத்தியவள், “என்னைய பேச விடுறீகளா…? கடுப்பேத்திட்டு… திருவிழாக்கு போகணும்… வெரசா போனா பொழுது சாயறதுக்குள்ள வந்துரலாம்னுட்டு நினைச்சோம்… ஆனா நான் மதியம் நல்லா ஒறங்கிட்டேன் அத்தேன் அவசரமா ரெடியாகி ஓடியாந்தேன்… போதுமா…” என்று பல்லை கடித்துக் கொண்டே ஒரு மூச்சாக சொல்லி முடித்தவள், “இனி என்னைய ஏதாச்சும் சொன்ன நான் என்ன பண்ணுவேனுட்டு எனக்கே தெரியாது…. ஜாக்கிரத…” கோபமாக ஆச்சியை எச்சரித்தவள் ஒரு முறைப்போடவே செல்லதாயியை  பார்த்துக் கொண்டு குழலியை தேடி வீட்டினுள் சென்றாள் கனிமொழி…
“இப்ப என்ன சொல்லிப்புட்டேன்னு இந்த குதி குதிக்குறவ…”என்று வாயை பிளந்தவர், தோள்பட்டையில் தன் மோவாயில் இடித்துக்கொண்டு, “போடி கூறுக்கெட்டவளே… எங்கிட்டவே குரல ஒசத்துரியா… இருடி இரு நான் யாருனுட்டு காட்டுத்தேன்…”என்றபடி தன் வேலையே பார்க்க சென்றார் செல்லதாயி…
பின் தோழிகள் இருவரும் தயாராகி, அன்னையிடம் சொல்லிவிட்டு கோவிலை நோக்கி நடக்க தொடங்கினர், கைகளை கோர்த்து கொண்டு…
இருவருக்கும் வாய் அது பாட்டில் வேலை செய்தாலும் உள்ளமும் சிந்தனையும் முழுவதும் தங்கள் நாயகர்களே சூழ்ந்திருந்தனர் அவர்களே அதை உணராமல்… கோபம் என்னும் முகமூடி பூங்குழலி அணிந்திருந்தாள் என்றால் கனியோ விரும்பமின்மை என்னும் முகமூடியை அணிந்திருந்தாள்….
“டி கனி… ஐஸ் நிக்குது பாரு… வா போவோம்…” என இருவரும் அங்கு செல்ல கால் எடுத்து வைத்த நேரம் எதிரே வந்து நின்றான் ராசு.
“என்ன புள்ள மாமன கண்டுக்வே மாட்டீங்கிற…” என்று பூங்குழலியை பார்த்து பல்லை காட்டியவனை கண்டு கோபத்தில் பல்லை கடித்தாள் குழலி…
“எதுக்குவே கண்டுக்கணும்… கோட்டித்தனமா பேசாம, வழிய விட்டு நில்லுவே…”என்று கத்திய கனியை பார்த்து முறைத்தவன்,
“ஏய்ய்ய்… பேசாமா கொஞ்சம் ஒதிங்கி நில்லு… நாங்க தனியா பேச்சிட்டு வாரோம்…” என்று சிடுசிடுத்தவன் பூங்குழலி பக்கம் திரும்பிய சமயம் ,
குழலி,”உனக்கெல்லாம் சொரனையே இருக்காதாவே… எம்புட்டு அசிங்க படுத்தினாலும் திரும்பவும் வந்து பல்ல காட்டுத…?” என ஒரு அர்ப்பபிறவியை பார்ப்பது போல் பார்த்து வைத்தவள்,
“ஒழுங்கா ஓடி போயிரு… இல்ல கல்ல கொண்டு அடிச்சு தொறத்துவேன்…. போவே கூறுக்கெட்ட குப்ப…”என்றவளின் வார்த்தையில் அத்தனை எரிச்சல்…
“உங்கிட்ட என்ன புள்ள ரோசம் வேண்டி கிடக்கு…?” என்று பல்லை காட்டியவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள் குழலி…
“வா புள்ள போவோம்…”என்று அவனை தாண்டி சென்றவளின் காதில் கனி,
“இவனைய என்ன புள்ள பண்ணுறது… எம்புட்டு திட்டுனாலும் என்ன பண்ணாலும் திரும்பும் வெக்கமே இல்லாம வந்து நிக்குத்தான்…”என்றதற்கு,
“ஆமா புள்ள… எனக்கும் கடுப்பா இருக்கு… இதுபோல எவனாச்சும் வம்பு பண்ணி இருக்கானா… நம்ம குடுக்குற கொடச்சல்ல பிச்சிக்கிட்டு ஓடத்தேன் செஞ்சிருக்காக… இவன் அடங்க மாட்டிங்கான்…” என்று பொறுமிய குழலி, ஐஸ் காரனிடம் இருவரும் ஐஸை சொல்லி அதை வாங்க கையை நீட்டிய வேலை,
வெடுக்கென்று அவளது கையை பிடித்து இழுத்துகொண்டு முன் செல்ல, குழலிக்கு அத்தனை ஆவேசமும் கோபமும் ஒருங்கே எழுந்தது எரிமலையின் சீற்றத்தோடு…
தொடரும்…

Advertisement