Advertisement

UD:13

 யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி…

அவரோ, “நீரு பெரியவர் வீட்டு பையனோட சினேகிதன் தானே…?” என்று சந்தேகமாக மீசையை நீவியபடி கேட்க,

அவரது அந்த தோரணையில் பேய் முழி முழித்தவன், கேள்விக்கு பதிலாக ‘ஆம்..’ என்று மண்டையை ஆட்டி வைத்தான் மீசையை பார்த்த பின் வார்த்தை வருவேனா என்றிருந்தது…. அவனது மண்டையின் உருட்டலில் தெளிந்தவர், ஓர் கம்பீர முறுவலோடு

“என்ன தனியா இங்குட்டு சுத்திட்டு இருக்கீக…? வழி மாறி வந்துட்டீகளோ…?” என்று கேட்கவும், விக்கி மனதில் ‘என்னது தனியாவா….?’ என்று சந்தேகமாக தன் பக்கத்திலும், தனக்கு பின்னாலும் திரும்பி பார்க்க அடுத்த அதிர்ச்சி அவனுக்கு…

‘அடபாவிகளா… கூடதானே இருந்துச்சுங்க… எப்ப எஸ் ஆச்சுன்னு தெரியலையே…’ என்று புலம்பியபடி முறுக்கு மீசையின் புறம் திரும்பியவன், ‘அய்யோ இந்த வெள்ள மீசை வேற ஒரு மார்க்கமா பார்க்குது… ஏதாச்சும் சொல்லி சமாளி டா விக்கி…’ என்ற முடிவெடுத்து சற்று தொண்டையை செறுமி தன்னை சரி செய்தவன்,

“இல்ல அங்கிள்… இப்படியே இந்த பக்கமா ஊர சுத்தி பார்த்துட்டு வந்தேன் இந்த இடம், தோப்பு, கிளைமெட் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு அதான்… சும்மா… அப்படியே பார்த்துட்டு நிட்டுடேன்…” என்று ஏதோ வாய்க்கு வந்ததை கூற, அதை நம்பிய முறுக்கு மீசை,

“ஓஓஓஓ… அப்ப ரொம்ப நல்லதுங்க… உங்களுக்கு இதெல்லாம் தெரியாத இடம் அதிக நேர எடுத்துக்காம வெரசா வீடு போய் சேருங்க தம்பி…” என்று இலவச அறிவுரை வழங்க, அதை பல்லை இளித்து

“சரிங்க அங்கிள்…” என்று அவரை வழியனுப்பி வைத்தவன், அவர் கண்களில் இருந்து மறையவும்

“எங்க போச்சு கூட இருந்த ஜந்துங்க…” என்று சுற்றி முற்றி பார்க்கையில், கரும்பு காட்டுக்குள் உற்று பார்க்கையில் ஒரு இடைவெளியில் கனிமொழி பதுங்கி நின்று எட்டி எட்டி பார்ப்பதை கண்டுக் கொண்டவன், பல்லை கடித்தபடி அவளை நோக்கி செல்ல, மிரண்டு போனாள் கனி…

அருகில் விக்கி வந்ததும், “அய்யோ என்னத்த பண்ணுறீக… போங்க… போங்க…” என்று விரட்ட கடுப்பாகி போனவன்,

“அடிங்கு… ” என்று நாக்கை மடக்கி அவளை அடிப்பது போல் பக்கம் வர, அவனை விரட்டி கொண்டிருந்த கைகளை தனக்குள் குறுக்கி, முகத்தை சுருக்கி அவனை பார்த்து பரிதாபமாக விழித்து வைத்தாள்…

அவனோ, “வாய தொரந்த என்ன செய்வேன்னு தெரியாது…” என்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தவன், அவள் அமைதியாகவும், குரலை தனித்து

“யாரோ வராங்கன்னு தெரியுதுள்ள… நீ மட்டும் உசாரா வந்து ஒளிஞ்சுட்டு இருக்குற… பக்கத்துல இருக்குற எனக்கு ஒரு சிக்னல தர வேண்டியது தானே… அவ்வளவு சுயநலம்… ம்ம்ம்…” என்று குரலை தனித்து கடுமையை காட்டி பேச, கனியோ சுருங்கிய முகத்துடன்

“ஆங்… நீங்கதேன் உசாரா இருந்திருக்கனும்…” என்று மெல்லிய குரலில் கூற,

“பாருடா திமிர…” என்று கோபமும் எள்ளலுமாக பேசியவன்,

“எங்க மத்த இரெண்டு லூசுங்க…?” என்று அதே மிரட்டல் தோணியில் கேட்க, தெரியாது என்னும் விதமாக உதட்டை பிதுக்கி தலையை தெரியாது என்பது போல் ஆட்ட விக்கியின் போலி கோபம் புஸ்சென்று போனது…

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, அவளது வெகுளியான முகத்தை ரசித்தபடியே கோபம் போல், “எல்லாம் ஒன்னா சேர்ந்து எஸ்கேப் ஆயிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்குறியா…?” என்று கேட்கவும், உண்மையில் கோபம் வந்து விட்டது கனிமொழிக்கு….

“ஏதிது நல்ல கதயால இருக்கு… என்னமோ நான்தேன் வேணும்னுடே பண்ணுன மாதிரி பேசுதீக… நீங்கத்தேன் சுதாரிப்பா இருந்திருக்கனும்… அதைய விட்டுபோட்டு நீங்க எங்குட்டோ பராக்கு பார்த்துட்டு நின்னதுக்கு நா எப்படி பொறுப்பாவேன்…” என்று அவளும் எகிர,

“ஹலோ ஹலோ மேடம்… நான் ஒன்னும் எங்குட்டோ பார்த்துட்டு நிக்கல… உங்கள தான் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன்…” என்று கேப்பில் தன் சைக்கிளை ஓட்ட முயற்சித்தான் வழக்காடியபடி….

“ஆங்….” என்று அவனது வார்த்தையில் விழி விரித்தவள் அவனது இந்த நேர் வார்த்தை தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காததால் திகைத்து போய் பார்த்திருக்க…

அவளது அந்த நிலை அவனது மனதில் அழகிய நிழற்படமாய் சேமிக்கப்பட்டது… சில நொடிகள் அதை ரசித்தவன் அவளை கலைக்கும் பொருட்டு, அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைக்க, அதில் கலைந்தவளின் முகம் இறுக நின்றிருந்தாள்…

“என்ன மேடம்… பதில காணும்… அப்படியே பிரீஸ் ஆயிட்டீங்க….?” என்று புருவம் உயர்த்தி கேட்க,

“நீங்க தேவையில்லாத வம்ப வெளகுடுத்து வாங்குதீக… நல்லதில்ல சொல்லிட்டேன்… ஊர சுத்தி பார்க்க வந்தா, வந்த ஜோலிய மட்டும் பாருங்க… பொறவு பிரச்சன வந்தா ஒழுங்கா உங்க ஊர் போய் சேர மாட்டீக சொல்லிப்புட்டேன்…” என்று எச்சரிக்கைவிட,

“சுண்டெலி சைஸ்ல இருந்துட்டு மிரட்டுறியா…? பயம் வரல… இன்னும் பெட்டரா டிரை பண்ணு…” என்று கிண்டலாக பேச, கனிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது…

“யாராய பார்த்து சுண்டெலிங்குறீக…?” என்று சண்டைக்கு போக, இருவரும் வாக்குவாதத்தில் இருங்கினர் ஒருபக்கம்…

மற்றொரு பக்கமோ இரு ஜீவன்கள் மோனநிலையில் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் பார்த்திருந்தனர்…

ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த கவி நொடியும் தாமதிக்காமல் பூங்குழலியின் கையை பிடித்து கரும்பு காட்டுக்குள் நுழைந்தான் அவள் என்னவென்று உணரும் முன்…

யாரும் பார்க்க வாய்பில்லை என்று உணர்ந்த பின்னரே தன் வேக நடையை நிறுத்தியவன் திரும்பி பூங்குழலியை பார்த்தான்… அவளோ அவனை முடிந்த மட்டும் முறைத்து கொண்டு நின்றிருந்தாள் தன் ஒரு கையை அவனது பிடியில் கொடுத்துவிட்டு…

“இப்ப எதுக்கு இப்படி அத்தான ஆசையா பாக்குற டி என் முட்டக்கண்ணி…?” என்று வழிந்து கொண்டே அவளை தன் பக்கமாக லேசாக சுண்டி இழுத்தான் காதல் மயக்கத்தில்…

அதில் சற்றே நிலை தடுமாறியவள், ஓரடி அவனை நோக்கி முன் செல்ல.. சுதாரித்து இடைவெளி விட்டு நின்ற குழலி, “ஒழுங்கு மருவாதையா என்ற கைய விடு… இல்ல என்ன பண்ணுவேன்னுட்டு எனக்கே தெரியாது…” என்று கத்தினாள் கோபத்தில்…

“ஷ்ஷ்ஷ்… ஏன்டி கத்துற…? யாராச்சும் பார்த்தா பிரச்சன ஆயிரும்… மெதுவா பேசு…”

“அட அட… துரைக்கு அம்புட்டு பயம் இருக்குதோ… பொறவு என்னத்துக்குவே என்னைய இழுத்துட்டு வந்தீக…?” என்று ஒற்றை கையை இடுப்பில் வைத்து கொண்டு முறைப்புடன் கேட்க, அவளது கேள்வியும் நின்றிருந்த தோரணையும் அவள் புறம் சென்ற அவனது பார்வையை மாற்றியது…

“உன்ன கட்டிக்கணும் தான் இழுத்துட்டு வந்தேன்…” என்று குறும்பாக கூறியவன் ஒற்றை கண்ணை சிமிட்டி, “என்ன கட்டிக்கலாமா முட்டக்கண்ணி…?” என்று கேட்கவும், பெண்ணவளின் உள்ளுக்குள் ரயில் வண்டி ஒன்று ஓடியது அவளையும் அறியாது…

‘என்ன இவிக இப்படி எல்லாம் பேசுதாக… கட்டிக்குறதுனா கண்ணாலம் கட்டிக்குறது பத்தி சொல்லுதாகளா இல்ல கட்டிப்புடிக்குறத பத்தி சொல்லுதாகளா…?’ என்று பெரும் கேள்வி எழ, யோசனை முகத்துடன் முழித்துக் கொண்டு இருந்தாள் அவனை பார்த்து…

அவளை மேலும் நெருங்கி நின்றவன், மெல்லிய குழைந்த குரலில் “என்னடி பயங்கரமா யோசிக்குற….? கட்டிக்குறதா வேண்டாமானு யோசிக்குறியா…?” என்று கேட்கவும் சட்டென தன் யோசனையில் இருந்து வெளிவந்தவள், அருகில் இருப்பவனை கண்டு கண்கள் விரிய அதிர்ந்து, வேகமாக விலகி நின்று

“எங்கிட்ட இந்த மாதிரி பேசுற ஜோலிய வச்சுக்காதீக… நான் ஆருன்னுட்டு தெரியாம எங்கிட்ட வம்பு வச்சுக்கிட்டா பொறவு உன்ற ஆத்தாக்கு நீ ஆருன்னுட்டு தெரியாத அளவுக்கு ஆக்கிபுடுவேன்… ஜாக்கிரத…” என்று எச்சரித்துவிட்டு திரும்பி நடக்க போனவளை வேகமாக அருகில் இழுத்தான் ஆவேசமாக…

அதில் நிலை தடுமாறியவள் அவன் நெஞ்சத்தில் மோதி நின்றாள் அவளையும் மீறிய தடுமாற்றத்தில்… அவனும் இவ்வாறு தன்மேல் மோதி நிற்பாள் என்று அறியாததால், இந்த திடீர் மோதல் மின்சாரத்தை உண்டாகியது அவனுள்…

அவன் மேல் மோதி நின்றவளுக்கோ இனம் காண முடியாத உணர்வலைகள் உள்ளுக்குள்… வாழ்வில் முதன் முறையாக தன்னுள் சஞ்சலத்தை உண்டாக்கியவனின் மீது கோபமும் ஈர்ப்பும் ஒருங்கே எழுந்தது உள்ளுக்குள்…

அதிலும் தான் பழிதீர்க்க நினைக்கும் ஒருவரின் மகன் என்பதே அவளது கோபத்தை மேலும் அதிக படுத்த அது அவன் மீது பாய தயாராகியது அவளையும் மீறி… சில நொடிகளில் அவனிடம் இருந்து விலகியவள்…

“சீசீ… விடுல என்னய… கூறுகெட்டவனை… ஒரு பொட்டபுள்ள கிட்ட இப்படி நடந்துக்க அசிங்கமா இல்ல…? பட்டணத்துல, வெளிநாட்டுல நீர் பண்ணுற கருமத்த இங்குட்டு எங்கிட்ட காட்டுனா மயங்கிருவேன்னுட்டு  நினைச்சியோ… இல்ல உன்ற அப்பாரு சொல்லி அனுப்சாரா இப்படி எல்லாம் பண்ணி என்னைய ஏமாத்த… உங்தில்லாலங்கடி வேலய இங்குட்டு காட்டாத நான் அதுக்கெல்லாம் அசருற ஆளு இல்லலே… வகுந்துடுவேன் வகுந்து…” என்று மூச்செரிக்க கோபமாக பேசியவள், அவனிடம் இருந்து விடுபட முயன்று கையை உருவ போராடி கொண்டிருந்தவளின் கை பிடியை மேலும் இறுக்கியவன்…

“என்னடி ரொம்ப பேசுற… ஏதோ தெரியாம நடந்துருச்சு அதுக்கு இந்த துள்ளு துள்ளுற…” என்று கூறவும் அவனை பார்த்து இகழச்சியாக ஒரு புன்னகையை புரிந்தவள் பதில் பேசாது கருமமே கண்ணாக தன் கையை விடுவித்து கொள்ள போராடி கொண்டிருந்தாள் குழலி…

அவளது அந்த புன்னகை அவனை மேலும் வெறி ஏத்த, வேண்டுமென்றே அவளை மேலும் தன்னொடு சேர்த்து எழுக்க, குழலி “ஏய் என்னல பண்ணுத…? விடுல…” என்று போராடியவளுக்கு அவளை குறித்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது…

ஏன் இவனிடம் தன் முழு எதிர்ப்பை காட்ட முடியவில்லை என்று… இதுபோல் ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு அவள் எதிர் கொள்ளவில்லை என்றாலும் ஏனோ அவன் தன் இதயத்தில் கால் தடம் பதிக்க தொடங்கி விட்டான் என்பதால் தாம் பலகீனம் ஆகிவிட்டோம் என்ற எண்ணமே அவன் மீது கோபத்தை கிளறியது…

“ம்ம்ம்… கட்டி புடிக்கலாம்னு இருக்கேன்… நீ என்ன சொல்லுற..” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க, அதில் தன் இதயம் நழுவுவதை கண்டவள்,

“ச்சீ… விடுடா எடுப்பட்ட பயலே… இப்ப என்னய விடல பொறவு கத்தி ஊர கூட்டி உன்னையும் உன் அய்யனையும் அசிங்க படுத்திடுவேன்… விடுடா…” என்றவளை பார்த்து விஷமமாக சிரித்தவன்,

“அப்படியா எங்க கத்து பார்க்கலாம்… ?” என்று உசுப்பி விட, அவனை பார்த்து முறைத்தவள் கத்த வாய் திறக்கவும், அவசரமாக தன் வலது கைக்கொண்டு அவளது வாயை பொத்தினான் அவளது கன்னங்களோடு சேர்த்து…

‘பாவி… ராட்சசி… சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா உண்மையாவே கத்திருவா போல… முட்டக்கண்ணி…’ என்று உள்ளுக்குள் அலறியவன் வெளியே தன் கெத்தை விடாது…

“எங்க இப்ப கத்து பார்க்கலாம்…” என்று கூறவும், அவனிடம் இருந்து விடுபட தலையை இடமும் வலமுமாக ஆட்டி திணற, கவி மேலும் தொடர்ந்தான் காதல் மயக்கத்தில்,

“இப்ப நீ அமைதியா இல்லைன்னா கைய வச்சு மூடுன உன் வாய, அப்புறம் என் வாயால மூட வேண்டி இருக்கும் பரவாயில்லையா…?” என்று கேட்டதும் அவளது விழிகள் அதிர்ந்து விரிந்தது பெரிதாக…

அவளது விழி விரிந்த அழகில் மயங்கியவன் அவளது விழிகளுக்குள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக் கொண்டிருந்தான் ஓர் மோன நிலையில்…

ஏனோ அவனது அந்த பார்வையில் குழலியும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்க தொடங்கினாள் தன்னையும் அறியாமல்… சில பல நொடிகள் கடந்து நிலையில் தன் உணர்வுக்கு வந்தவன் மெல்ல அவளது வாயை பொத்தி இருந்த கையை விலக்கி அவளது பட்டு கன்னத்தை வருட தொடங்கினான் ஆசையில்…

சிறுவயதில் அவளது கொழு கொழு கன்னத்தை வருடி கிள்ளி பார்க்க வேண்டும் என்ற ஆவல் பல வருடங்கள் கழித்து, இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டான் கவி…

அவனது மென்மையான வருடலில் தன்னை தொலைத்தவள், மெல்ல கண்கள் கிறங்க தன்னை அறியாமல் அவனது வருடலில் அவனுடன் இணங்க தொடங்கினாள்… அதை புரிந்து கொண்ட கவி, காதல் உருக “குழலி…” என்ற அழைப்போடு அவளது கன்னத்தோடு சேர்த்து இதழையும் தன் பெருவிரலால் வருடி அதை நோக்கி குனிந்தான் அந்த ரோஜா இதழ்களை தன்வசம் ஆகும் முனைப்பில்…

ஆனால் பூங்குழலியோ, அவனது வருடலில் மயங்கி நின்றவள் அவனது விழிப்பில் தன்னை மீட்டுக்கொண்டாள்… அடுத்து என்ன செய்ய வருகிறான் என்று யூகித்தவளுக்கு உடல் நடுங்க, சடாரென அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளினாள் தன் மொத்த பலத்தையும் கூட்டி…

ஒருவித மயக்க நிலையில் இருந்தவன் குழலி இவ்வாறு செய்வாள் என்று எதிர்ப்பார்க்காததால் அவனது பிடி இலகுவாக, இரண்டடி பின் சென்றான் தட்டுத்தடுமாறி…

அவனிடம் இருந்து தன் கையை விடுவித்து கொண்டவள் நொடியும் தாமதிக்காது அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கரும்பு காட்டை விட்டு வெளியே ஓடினாள்…

“குழலி நில்லு பிளீஸ்…” என்று அவள் பின் ஓடியவனுக்கு ஏனோ தாம் சற்று அதிகபடியாக நடந்து கொண்டோமோ என்ற குற்றணர்வு எழுந்தது…

“குழலி சாரி மா… ஏதோ நினைப்புல அப்படி நடந்துக்கிட்டேன்… ஓடதா நில்லு பிளீஸ்…” என்று கெஞ்சியபடி அவளை தொடர்ந்தான்…

ஆனால் பூங்குழலியோ எதையும் காதில் வாங்காமல் ஓடினாள் கோபத்தில்,  வெளியே ஒற்றையடி பாதைக்கு வந்து நின்றவளுக்கு அப்பொழுது தான் கனிமொழியின் நினைவு வந்தது…

“ச்சை… கூறுகெட்டவ எங்குட்டு போய் தொலைச்சா…” என்று முனுமுனுத்தபடி சுற்றும் முற்றும் பார்க்கையிலேயே இவள் நின்றிருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி கரும்பு காட்டுக்குள் இருந்து விக்கியும் கனிமொழியும் சண்டையிட்டுக் கொண்டே வருவதை கண்டவளுக்கு கோபம் இன்னும் எகிறியது….

பூங்குழலியை கண்ட கனி, வேகமாக அவள் அருகில் வந்து வாய் திறக்கும் முன், குழலி “ஏட்டி… கொஞ்சமாச்சும் அறிவிருக்கா… வாலே போலாம்…” என்று கோபமாக கத்திவிட்டு அவளது கைபிடித்து வேகமாக நடக்க தொடங்கினாள்….

குழலியை சமாதானம் செய்ய முற்பட்ட கவி, பக்கவாட்டி விக்கியும் கனியும் வருவதை கவனித்து சற்று அமைதியானவன், குழலி கோபமாக செல்வதை பார்த்து இயலாமையுடன் தன் தலையை கோதியபடி அவள் செல்லும் பாதையையே பார்த்திருந்தான் கவியழகன்…

என்ன நடக்கிறது என்று எதுவும் அறியாமல், விக்கியோ திகைத்து முழித்தபடி நின்றிருந்தான் செல்லும் தன் வில்லேஜ் பியூட்டியை பார்த்து…

பெண்கள் இருவரும் இவர்களின் கண் பார்வையில் இருந்து மறைந்த பின்னரே ஒருவருக்கொருவர் நினைவிற்கு வந்தனர்… அதில் திரும்பி பார்த்த விக்கி,

“என்ன மாப்ள பண்ணின சிஸ்டர…?” என்று சந்தேகமாக கேட்க, தலையை கோதி முகத்தை திருப்பிக் கொண்ட கவி மெல்லிய குரலில்,

“ஒன்னும் பண்ணலையே…” என்க,

“டேய் பொய் சொல்லாத நாயே… சிஸ்டர் கோபமா போறதை பார்த்தா நீ ஏதோ வேண்டாத வேலை செஞ்ச மாதிரி இருக்கு…” என்று அவனை துறவ, வேகமாக அவன் புறம் திரும்பியவன்,

“டேய் உண்மையா நான் ஒன்னுமே பண்ணல… நம்பு டா…” என்றவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்து,

“யாரு… உன்னைய நான் நம்பனும்மாக்கும்…? நீ போற ஸ்பீடே சரியில்ல… ஒழுங்கா சொல்லிரு…” என்றதும் முகத்தை சுருக்கி பேந்த பேந்த முழித்த கவி,

“உண்மையா ஒன்னும் பண்ணல டா… சும்மா இப்படி கன்னத்தை தொட்டேன்… அதுக்கு கோவிச்சுகிட்டு போயிட்டா…” என்று அவன் இடது கன்னத்தை லேசாக தட்டி காண்பிக்க, அவனது கையை தட்டிவிட்டான் விக்கி…

“கருமம் புடிச்சவனே… அதுக்கு எதுக்கு என் கன்னத்த தட்டுற…? உண்மையா அது மட்டும் தானா…?” என்று மீண்டும் சந்தேகமாக கேட்க, அவனை முறைத்து பார்த்தான் கவி…

“சரி சரி முறைக்காத… நம்புறேன் நம்புறேன்… ” என்று சமரசம் ஆனவன்,

“வாடா… அடுத்து யாராச்சும் வரதுக்குள்ள இடத்த காலி பண்ணுவோம்…” என்ற நண்பனோடு நடக்க தொடங்கினான் அமைதியாக…

அவனது சிந்தனைகள் யாவும் பூங்குழலியே நிறைந்திருந்தாள், ‘கண்டிப்பா அவ மனசுல நான் இருக்கேன்… ஆனா ஏன் மறைக்கனும்…? ஒருவேலை பார்த்த இரண்டு நாள்ல காதல் வந்துருச்சுன்னு சொன்னா ஒருமாதிரி நினைப்பேன்னு நினைச்சுட்டாளா…? இது புதுசா வந்த உணர்வு இல்லையே…’ என்று யோசித்தவனுக்கு புரியவில்லை இவன் அறிந்த வயதில் வந்த ஈர்ப்பு இப்பொழுது காதலாக வளர்ந்துள்ளது ஆனால் பெண்ணவளுக்கு அப்படி இல்லை என்பதை உணர தவறினான் ஒருபக்கம்…

அதுமட்டுமின்றி தந்தையின் மீது வெறுப்புடன் இருப்பவள் தன்னை எப்படி ஏற்பாள் என்றும் நினைக்க தவறினான்… விக்கியும் தன்னவளோடு பேசியதும் சண்டையிட்டது என்று நினைத்துக் கொண்டே வர, நண்பனின் அமைதியை கவனிக்கவில்லை…

ஆனால் சிறிது நேரத்தில் அதை கவனித்த கவி, அவனை யோசனையாக பார்த்து, ” மச்சான் டேய்..” என்றழைக்க,

“ம்ம்ம்….”

“உனக்கு கோபமா இல்ல…?”

“எதுக்கு…?”

“எதுக்கா…? அதுசரி… சார்க்கு என்னாச்சு…?” என்று சந்தேகமாக கேட்க, விக்கியோ ஒன்றும் புரியாது, புருவம் சுருங்க

“என்னாச்சு…?” என்று அவனையே மீண்டும் கேள்வி கேட்டு வைத்தான்…

“டேய்…” என்று எகிறிய கவியை,

“கூல் மாப்ள… நீ என்ன கேட்குறன்னு எனக்கு புரியல…” என்று கூறவும்

“ம்ம்ம்… எப்படி சாருக்கு புரியும்… அதான் கரும்பு காட்டுக்குள் என்னமோ நடத்தி இருக்க போல்…?”என்று கண்ணடித்து பேச,

“டேய் எரும… ரொம்ப யோசிக்காத… ஒன்னும் நடக்கல…ஒரு முறுக்கு மீச கிட்ட மொத்து வாங்காம தப்பிச்சேன் அவ்வளவு தான்…” என்றவனை அதிர்ந்து பார்த்த கவி,

“என்னடா சொல்லுற… அப்ப நீ ஒளிஞ்சுக்கலையா…? பின்ன எப்படி டா தங்கச்சியோட வந்த…?”  என்று கேட்கவும் வெறியான விக்கி,

“வேணாம் ஏதாச்சும் கேவலமா சொல்லிற போறேன்… உனக்கு சந்தேகம் வந்ததும் ஒரு சிக்னல் காட்டிட்டு போக வேண்டியது தானே அப்படியே அம்போனு விட்டுட்டு போற… அந்த ஆளு கிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு திரும்பி உங்களை தேடுனா என் வில்லேஜ் பியூட்டி கண்ணுல பட்டுச்சு… சரி இதுதான் சான்ஸ்ன்னு கோவமா சண்டை போடுற சாக்குல கொஞ்ச நேரம் பேசினேன் அவ்வளவு தான்… ஏதோ அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் உன்னை உயிரோடு விடுறேன்… பொழச்சு போ…” என்றவனை பார்த்து கேலியாக சிரித்தவன் அவனை பின்தொடர்ந்து அமைதியாக காரை நோக்கி நடந்தான் கவி…

கனிமொழி எத்தனை கேட்டும் வாயை திறக்காத பூங்குழலி, “என்னபுள்ள வேணும் உனக்கு…? ஒன்னும் நடக்கல போதுமா… இனி அவிக கூட பேச்சே எதுவும் எடுக்க கூடாது… வெளங்குச்சா…?” என்று காளியாக மாறி கேட்கவளை பார்த்து திருதிருத்தவள், மனதில்

‘நான் எப்ப புள்ள பேசி எடுக்க செஞ்சென் அவிக கூட…? நீதேன் வம்பு வளர்க்க… ஆத்தி… நான் இப்படி நினைச்சேன்னுட்டு தெரிஞ்சா ஆஞ்சு புடுவாளே… என்னத்துக்கு வம்பு மண்டைய ஆட்டி வைப்போம்…’ என்று எண்ணியவள் வேகமாக ‘சரி..’ என்பதை போல் ஆட்டி வைத்தாள்…

அதன் பின் வீட்டை நோக்கி நடக்க தொடங்கியவளின் நினைவுகள் முழுவதும் கவியழகனே… வீட்டை அடைந்தவள் ஏதும் பேசாது நேராக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு படுக்கையில் விழுந்தவளுக்கு அப்பொழுது தான் மூச்சே சீராக வந்தது…

அவளையே கவனித்துக் கொண்டு இருந்த கனிமொழி அவள் அறைக்குள் சென்றதும் லேசாக சிரித்து, ‘ம்ஹீம்… கவி அண்ணே ஏதோ பண்ணியிருக்கு… அதேன் மேடம் சூடா இருக்காக… பார்க்கலாம் என்ன நடக்க போகுதுன்னு…’ என்று எண்ணிக்கொண்டிருக்க, அவளது பின்னந்தலையில் அடிவிழவும் சுயத்திற்கு வந்தவள் மண்டையை தேய்த்தபடி திரும்பி பார்க்க, செல்லதாயி இவளை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்…

அவரை கண்டதும் பல்லை காட்டி இளித்த கனியை கண்டு, “ஏம்லே கோட்டி கணக்கா இளிக்குறவ…?” என்று கேட்டதும் வாயை இழுத்து மூடியவள், “ஒன்னுமில்ல ஆச்சி… சும்மாத்தேன்…” என்று இழுக்க,

“என்னது சும்மாதேன்னா…? கிறுக்கு.. கிறுக்கு… போலே போய் ஜோலிய பாரு… நடுவூட்டுல நின்னு இளிச்சுட்டு இருக்காவ… வூட்டுல விஷேசத்த வச்சுக்கிட்டு ஊரு சுத்திக்கிட்டு இருக்கிய சிறுக்கி ரெண்டு பேரும்… போய் ஆத்தாக்கு ஒத்தாச பண்ணுல…”என்று திட்டிய படி அவளை தொரத்த, மோவாயை தோளில் இடித்து கொண்டு,

“வர வர இந்த கிழவி தொல்ல தாங்கல… நிம்மதியா சிரிக்க கூட முடியல வூட்டுல நின்னு…”என்று முனுமுனுத்தபடி செல்ல, செல்லதாயி

“கூறுக்கெட்டவலே நடுவூட்டுல நின்னு தனியா சிரிச்சா… என்னவே சொல்லுவாக…?” என்ற கேள்வியோடு தன் வேலையை பார்க்க சென்றார்…

கனிமொழியோ, பேய் முழி முழித்து, “கிழவிக்கு பாம்பு காதுத்தேன்… ” என்றபடி தன் வீட்டை நோக்கி நடையை கட்டினாள்…

தங்கள் தொழிற்சாலைக்கு வந்தும் அலுவலக அறைக்கு சென்ற இருவரையும் வரவேற்றார் முருகவேல்…

“நல்லாதா போச்சு தம்பி…நீரே வந்துட்டீக… இப்பதேன் உங்களைய கூப்பிடலாம்ன்னுட்டு இருந்தேன்… ” என்ற தந்தையை பார்த்து கவி,

“என்னப்பா என்ன விஷயம்…?” என்றபடி இருக்கையில் அமர, அங்கு ஏற்கனவே இருந்த நபரை ஒரு பார்வை பார்த்து விட்டு, தந்தையின் புறம் தன் கவனத்தை திருப்பினான்…

“அது ஒன்னுமில்ல தம்பி… நீர் கேட்ட மாதிரி பொறுப்பு எல்லாத்தையும் உன்ற பேருக்கு மாத்திரலாம்ன்னுட்டு பேப்பர் அம்புட்டையும் தயார் பண்ணி வச்சிருக்கேன்… இன்னைக்கு நல்ல நாளும் கூட, அதேன் எல்லாத்தையும் இன்னைக்கு உங் கைக்கு மாத்திரலாம்னுட்டு நம்ம வக்கீல கூப்பிட்டு இருக்கேன்… எல்லாம் தயாரா இருக்கு நாம ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு கிளம்பலாமா…?” என்று அங்கிருந்தவரை கை காட்டி கேட்க, கவியழகன் அவரை பார்த்து ஒரு அறிமுக புன்னகையை சிந்த, அவரும் பதிலுக்கு அதை பிரதிபளித்தார் ஒரு புன்னகையுடன்…

“சரி ப்பா… கிளம்பலாம்… அப்ப ஆக வேண்டியதை பாத்து பண்ணிடலாம்… அம்மா கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்…” என்று ஃபோனை எடுத்து காயத்ரிக்கு அழைத்து விஷயத்தை கூற,

“ரொம்ப சந்தோஷம் ராசா… இனி எல்லாம் நல்ல படியா நடந்தா போதும்யா… நீர் எல்லாத்தையும் பார்த்துப்பீகனு நம்பிக்கை இருக்கு ராசா… நான் கடவுள் கிட்ட வேண்டிக்குதேன்…” என்று அன்னையிடம் வாழ்த்தை பெற்றதும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு சென்றனர் நல்ல நேரம் முடிவதற்குள்…

அங்கு அனைத்தையும் நண்பனுடன் ஒருமுறை சரி பார்த்ததும், அவனை ஓர் பார்வை பார்த்துவிட்டு அத்தனை பொறுப்புகளையும் தன் பெயருக்கு மாறிக்கொண்டான் சட்டப்படி…

இனி மகன் செய்ய போகும் மாற்றமும், பூங்குழலியால் நிகழ போகும் சதிதிட்டத்திலும் சிக்கி தவிக்க போவதை உணராமல், மகன் பொறுப்பை ஏற்று அனைத்து பேப்பரிலும் கையொப்பம் இடுவதை கண்டு நிறைவாய் புன்னகைத்துக் கொண்டிருந்தார் முருகவேல்…

தொடரும்….

Advertisement