Advertisement

UD :20  
திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின்,  தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்’ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி… விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது….
வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான் அவளது மண்டையில் உரைத்தது, “அய்யோ… தீட்டு இல்ல… கோவிலுக்கு போக கூடாதே… வந்த வழில திரும்ப போய் அவிக கண்ணுல பட்டுட்டா… வேற வம்பே வேண்ணாம்… சே… இந்த புள்ள இங்குட்டு போச்சோ…’ என்று மனதிற்குள் புலம்பியவள் வந்த வழியே மெல்ல தன் நடையை தொடர்ந்தாள் விக்கி கண்களில் தென்படுகிறானா என்று நோட்டம் விட்டுக்கொண்டே….
” இவிக ரெண்டும் எலியும் பூனையுமா சுத்திட்டு இருந்துட்டு பொசுக்குன்னு அந்த அண்ணே லவ்ங்கிறாங்க… இவ அப்படி ஒண்ணுமே இல்லங்குறா… ஆனா இம்புட்டு நேரம் எங்க போய் தொலைஞ்சாங்களோ… புள்ள… இப்படி இந்த கோட்டிபயலு கிட்ட மாட்டிவிட்டுடியே… நீயெல்லாம் நல்லாயிருப்பியா….”என்று தன்போக்கில் புலம்பிக் கொண்டே வந்தவளின் விழியில் பட்டான் விக்கி…
தன் தலையை கோதியபடி சுற்றும் முற்றும் தேடிக் கொண்டு வந்தவனை கண்டவள் ஒரு நொடி ஒரேயொருநொடி ஸ்தம்பித்து நின்றாள், “ஆத்தி… ஆபத்து டி புள்ள… எஸ்கேப்…” என  அடுத்த நொடி மின்னல் வேகத்தில் அருகில் இருந்த கடையினுள் புகுந்துக் கொண்டாள்…
விக்கியோ தன் வில்லேஜ் பியூட்டியை மிக தீவிரமாக தேடி நடந்தவன் கனிமொழி ஒளிந்திருந்த கடையை தாண்டியதும், இதற்கு மேல் பொறுத்தால் ஆகாது என எடுத்தாள் ஓடத்தை…
தாங்கள் முதலில் நின்ற இடத்திற்கே வந்தவள், சற்று பொறுத்து மீண்டும் கண்களை அலைய விட்டாள் தோழிக்காக…
‘எங்குட்டுத்தேன் போய் தொலைஞ்ச புள்ள…’என்று உதட்டை பித்துக்கி தேடியவளுக்கு தீடிரென தோன்றியது ஓர் எண்ணம்…
‘ஒருவேல அந்த அண்ணே இந்த புள்ளைய கடத்திட்டு போயிருப்பாகளோ…’ என இடுப்பில் ஒரு கை மோவாயில் ஒரு கை என ரோட்டின் நடுவின் நின்று தேடுதலுக்கான வேட்டையை அவளது மூளைக்கு குடுத்தாள் கனி…
‘சே….சே… அப்படி கடத்திட்டு போயிருந்தா  அவரு உசுருக்கு உத்திரவாதம் கிடையாது அவளால… அப்ப அவளைய பத்தி கவல படாம அந்த அண்ணனைய பத்தித்தேன் கவல படணும்… அதுவும் இல்லாம பெரியவரும் சும்மா இருக்க மாட்டாரு… பெத்த மகனுட்டுக் கூட பார்க்க மாட்டாரே…’என்று யோசித்தவளின் கண்களில் பட்ட ஐஸ் வண்டியை  பார்த்ததும்,
‘ம்ம்ம்ம்…. எதுவா இருந்தாலும் ஒரு ஐஸ் சாப்பிட்டே யோசிப்போம்…’என்று பெரும் முடிவிள்கு பின் ஒன்றை வாங்கி சுவைத்துக் கொண்டிருக்க, எதிர்முனையில் விக்கி தன்னவளை தேடி கோவிலின் அருகில் வரை சென்றுவிட்டான்…
‘ஒருவேலை கோவிலுக்குள்ள இருப்பாளோ… எதுக்கும் தேடிப் பார்ப்போம்… ‘என இரண்டடி நடந்தவனுக்கு மதியம் நண்பன் கூறியது நினைவிற்கு வந்தது…
“ஏன் மாப்ள… இப்படி ரோட்டுல எவ்வளவு நேரம் தான் வெய்ட் பண்ணுறது… அதுக்கு பேசாம கோவில்ல வெய்ட் பண்ணலாம்ல… வெயில் வேற மண்டைய பொளக்குது…” என்று  காட்டாரு வெள்ளம் போல் வடிந்த வேர்வை முகத்தை துடைத்துக் கொண்டான் ஏசியில் உலா வந்தவன்…
“ம்பச்ச்… எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா இப்படி வந்து நிக்கணும்னு… இவளுங்க எப்ப வருவாங்கன்னு தெரியாதனால தானே பிரச்சன… கனி வீட்டுல இப்பதானே விஷேசம் நடந்திருக்கு… சோ யாரும் கோவிலுக்கு வர மாட்டாங்க…” என்றவனை பார்த்து தன் அதிர்ச்சியை காட்டிய விக்கி,
“டேய் அதான் அவங்க வரமாட்டாங்கன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு டா இங்க நிக்க வச்சு உயிர வாங்குற…” என பொறிந்தான் நண்பனிடம்
“போடாங்கு… நான் என்ன சொன்னேன்…?”
“என்ன சொன்ன…?” என சந்தேகமாக பார்த்து கேட்க, ஒரு பெருமூச்சை விட்ட கவி,
“அவங்க கோவிக்கு வர மாட்டாங்கன்னு…” என்று முடிக்கும் முன் இடைபுகுந்தான் விக்கி
“டேய் வெங்காயம்… அததானே நாணும் சொன்னேன்…” என்றவன் முதுகில் ஒன்று போட்ட கவி,
“சொல்லி முடிக்குறதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு… அவங்க கோவிலுக்கு தான் வர மாட்டாங்க… ஆனா ஊர் சுத்த வருவாங்க அப்ப பார்த்துக்கலாம்…” என்றவனை சந்தேகமாக பார்த்த விக்கி,
“எப்படி இவ்வளவு காண்பிடன்டா சொல்லுற…?”
“ஏனா அங்க மேட்(made) அப்படி…” என்று நண்பன் கூற தான் அதை ஆமோதித்து சிரித்தது நினைவிற்கு வந்து மீண்டும் இதழில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது விக்கிக்கு…
கோவிலுக்கு செல்லாமல் மீண்டும் வந்த வழியே நடந்தபடி தேடியவன் முதலில் கனிமொழியுடன் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கே வந்து சேர்ந்தான்…
“நம்ம ஆளு வீட்டுக்கு ஓடிருச்சு போல…” என்று முணுமுணுத்தபடி முகத்தில் தோன்றிய சிறு வருத்ததுடன் தன் ஃபோனை எடுத்து நண்பனுக்கு அழைக்க போகும் சமயம் அவனது கண்ணில் பட்டாள் கனிமொழி…
அவளது தோற்றம் செயல் அனைத்தையும் கண்டவன் முதலில் அதிர்ந்து, பின் தெளிந்து வாய்விட்டு சிரிக்க தோன்றியதை இடம் அறிந்து கடினப்பட்டு அடக்கியவன் அவளது சிறுபிள்ளைதனத்தை வெகுவாக ரசித்தான்…
ஏனோ அவனது வாழ்க்கை அவளால் வண்ணமயம் ஆனது போல் ஒரு தோற்றம்… இதயம் முழுக்க தன்னவளே நிறைந்திருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது… ஆனால் அவன் உணராத ஒன்று அவளால் தான் வாழ்க்கையின் சந்தோஷத்தை இழந்து வர்ணங்கள் அழிந்து துன்ப பட போகிறோம் என்பதை யார் அவனுக்கு புரிய வைப்பது…?
முகம் முழுக்க சந்தோஷத்துடன், இதழில் தவழ்ந்த புன்னகையுமாய் அவளின் விழியில் படாதவாறு மறைந்து நின்று கொண்டான் சைட் அடிப்பதற்கு வசதியாய்…
தலையில் இருந்த முக்காடை சரி செய்தபடி, ஐஸ்ஸை சுவைத்துக் கொண்டிருந்தவள் விழிகள் மட்டும் தோழியை தேடி அழைந்தது…
‘இவ இங்குட்டுத்தேன் இருப்பாளோ… ஒருவேல வூட்டுக்கு போயிருந்தா நம்ம மண்டைக்கு சேதாரமில்ல ஆனா அவ இங்குட்டு இருந்துட்டு நாங்மட்டும் வூட்டுக்கு போனா இவளும் நம்மைய அடிப்பா, ஆச்சி அய்தையும் வசவு பாடியே காதை நாசம் பண்ணிருவாக…’ என்று எண்ணி வருந்தியவளின் முகமும் வாடியது ஐஸ்ஸை உண்டுக்கொண்டே,
‘அதுக்கு பேசாம இங்குட்டு கொஞ்ச நேரம் காத்திருந்து பாப்போம் அவ வந்துட்டா அப்படியே வூட்டுக்கு போயிருவோம் இல்லாட்டி பொழுது சாய போற நேரத்துக்கு வூட்டுக்கு போவோம் இப்படியும் அவ அதுவர இங்குட்டு இருக்க மாட்டா வூட்டுக்கு போயிருவா… அப்ப யாராச்சும் ஏதாச்சும் கேட்டா சமாளிச்சகலாம்… ‘என்ற முடிவெடுத்த பின்னரே அவளது முகம் தெளிந்தது ….
அவளது முகத்தில் தோன்றிய அனைத்து பாவனைகளையும் கண்கொட்டாமல் பார்த்திருந்தான் விக்கி… இப்பொழுதைய அவனது தலையாய கடமை… அதுவாகவே இருந்தது…
சில நிமிடங்கள் கழிந்த நிலையில் ரெண்டாவது ஐஸ்ஸை ருசிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் இரெண்டும் அகழ விரிந்தது வியப்பிலும் கோவத்திலும்…
கனியையே புன்னகையுடன் பார்த்திருந்த விக்கி, திடீரென விரிந்த அவள் விழிகளை கண்டு, ‘எதுக்கு இப்ப இப்படி முழிச்சு பார்க்குறா… ?’ என்று சந்தேகமாக அவள் பார்த்திருந்த திசையை திரும்பிப் பார்க்க,
அப்பொழுது தான் ஒரு கடையின் பக்கவாட்டு இடுக்கில் இருந்து பூங்குழலி தலையை குனிந்தவாரு நடந்து வருவதை கண்டு சிரித்தவன் மீண்டும் கனியின் விழியிலும் முகத்திலும் தோன்றிய பாவனைகளை ரசிக்க தொடங்கினான்….
‘பாதகத்தி… நானு இங்குட்டு தலமறைவா அரமணிநேரமா காத்துகெடக்கேன் நீ வெட்கத்துல தல குனிஞ்சு வாரியோ… பக்கி பன்னி… இரு இந்தா வாரேன்…’ என வீர்கொண்டு சீரினாள் பூங்குழலியை நோக்கி…
அவள் வேகமாக செல்வதை பார்த்து விக்கியின் கால்களும் அவள் செல்லும் திசையை நோக்கியே சென்றது தன்னைப்போல்…
தலைகுனிந்து பல வித யோசனையுடன் கையில் இருந்த காஜலின் அட்டையை நோண்டியபடி வந்தவள் எதன்மீதோ மோதி நின்றாள் சுற்று புறம் மறந்து…
“ஷ்ஷ்ஷ்…” என சட்டென விலகி நின்றவள் தலை நிமிர்ந்து பார்க்க, கனிமொழி இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு அவளை பார்த்து முறைத்தபடி நின்றிருந்தாள் கோபமாக…
“ஏய்… புள்ள…. நீயா…? நாணும் வேற யாரோனுட்டு நினைச்சேன்…” என்றவளை அதே கோப பார்வையுடன்,
“ஆமா நானேத்தேன்…” என்று தன் நெஞ்சில் அடித்து சொல்லியவள், “இங்குட்டு ஒருத்தி உசுரோடு இருக்காளா இல்லையாணுட்டு கூட யோசிக்காம எங்கல போன…” வார்த்தையில் அத்தனை உஷ்ணம் தெரித்தது கனிக்கு…
பின்னே இவள் விட்டு சென்றதால் தானே விக்கியிடம் தனியாக மாட்டிக்கொள்ள நேர்ந்தது…அதன்  கோபம் அவளிடம் அளவிற்கு அதிகமாகவே உண்டானது அவளையும் மீறி…
“ம்பச்ச்… என்ன புள்ள உளற…” என எரிச்சலாக மொழிந்தவள், ஏற்கனவே கவியின் செயலால் இன்னதென்று புரியாது குழம்பி தவித்து இருப்பவளிடம் வந்து கத்தவும் குழலியும் தன் எரிச்சலை காட்டினாள் கனியிடம்…
சரியாக அந்நேரம் விக்கியும் அருகில் வந்திருக்க, பூங்குழலியின் கேள்வியில் கனியின் முகம் சுருங்குவதை கண்டவன் வாய் பொத்தி சிரித்து வைத்தான் வேண்டுமென்றே அவளை சீண்டும் நோக்கோடு…
அதை கண்டு மேலும் கடுப்பாக, “நாங் உளறுறேனா…” என்று உதட்டை சுழித்தவள், கவியழகன் வருவதை பார்த்து எங்கு மீண்டும் எங்காவது ஓடிவிடுவாளோ என்று பயந்து, அவளது கையை பிடித்து கொண்டாள் முன்னெச்சரிக்கையாக…
“வாடி… வூட்டுக்கு போய் உன்னைய கவனிச்சுக்குதேன்…”என்றவள் அவளை இழுத்துக் கொண்டு நகர்ந்தவளுக்கு அப்பொழுதைக்கு அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் மட்டுமே…
“ஹலோ…மை டியர் வில்லேஜ் பியூட்டி… ஒண்ணுக்கு ரெண்டு ஐஸ் சாப்பிட்டு இருக்க உடம்புக்கு ஏதாச்சும் வந்துர போகுது வீட்டுக்கு போனதும் ஹாட் வாட்டர் குடி…” என்று அக்கறையுடன் கூற, கனிமொழியோ குழலியை பார்த்து திருட்டு முழி முழித்து வைக்க,இப்பொழுது முறைப்பது பூங்குழலியின் முறையாயிற்று…
“புள்ள… நெசத்துக்கும் என்ன நடந்துச்சுனுட்டு நான் சொல்லுத்தேன் கேட்டுட்டு பொறவு மொறச்சு பாரு புள்ள…” என சமாதானம் செய்ய முயல்கயில்,
“போடி.. துரோகி…” என்ற குழலி அவளது பிடியில் இருந்து கையை வெடுக்கென்று உருவிக்கொண்டு, வேகமாக  வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்…
கனிமொழியோ திரும்பி விக்கியை பார்த்து கோபமாக புஸு புஸுவென்று மூச்சு விட்டவள், அவன் எதிரில் வந்து இடுப்பில் இருகையை வைத்துக்கொண்டு, “உன்னைய யாரு இப்ப நான் ஐஸ் தின்னத சொல்ல சொன்னா…?” என கேட்க,
“இல்ல பேபி மா… ஒரு அக்கறைல சொன்னேன் ஏன் என்ன ஆச்சு…?” என்று புரியாது கேட்க, கனிமொழிக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது அவனது அழைப்பில்…
“பேபி கீபின்னு பெனாதுன்னனு வை கொன்னுறுவேன்… உங் அக்கறைல தீய வைக்க…” என்று பொருமியவள் அவன் எதிர்பார்க்காத நேரம், அவன் உயரத்திற்கு எம்பி, ஓங்கி ஒரு கொட்டை வைத்தவள் அடுத்த நொடி மின்னல் வேகத்தில் தன் ஓடத்தை தொடங்கிருந்தாள்…
விக்கியோ, “ஸ்ஸ்ஸ்… ஆஆஆ… ராட்சஷி…எப்ப பாரு பி.டி உஷா ரேன்ஜுக்கு ஓடுது…” என்று லேசாக அலறியவன் கொட்டு வாங்கிய இடத்தை நன்கு பரபரவென்று தேய்த்துக் கொண்டான் ஓடும் அவளையே பார்த்தபடி…
அனைத்தையும் அருகில் இருந்து பார்த்த கவியழகன், கனிமொழி ஓடியதும், அவனது மண்டையை பார்த்து, “லைட்டா தான் சேதாரம் ஆயிருக்கு சோ பிராப்ளம் இல்ல மச்சான்…” என்று கூலாக கூற, அவனை முறைத்து பார்த்த விக்கி
“டேய் நாயே… உனக்கே இது ஓவரா இல்ல… நீ நல்லா குஜால்ட்டியா இருந்துட்டு என் நிலமைய பார்த்து நக்கல் பண்ணுறியா…?” என்று மண்டையை தேய்த்தபடி கேட்க,
“ம்ப்ச்ச்… விடுடா… காதல்ன்னுட்டு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தான்… ஆமா அவங்க கிட்ட வம்பு பண்ண அந்த பரதேசி எங்க டா…?” என்று பேசியபடி தங்கள் வண்டியை நோக்கி நடந்தனர்…
“அவன் நம்மளோட ஒரு பார்வைக்கே ஓடிட்டான் டா… யாரா இருக்கும்…? சொந்தமா இருக்குமோ…? ஏன்னா உரிமையா பேசுனானே…” என விக்கி சந்தேகமாக வினவ,
தன் தாடையை தேய்த்தபடி வண்டியில் அமர்ந்தவன், “தெரில மச்சான்…. யாருன்னுட்டு விசாரிக்கணும்… சரி ஏறு கிளம்புவோம்…” என்றதும் இருவரும் தங்கள் இணையின் எண்ணங்களோடு பயணித்தபடி தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்…
இங்கு பூங்குழலி, கனி தன்னை விட்டு ஐஸ் சாப்பிட்டாள் என்ற கோவத்தில் வேகமாக வீட்டினுள் நுழைய, தன் அன்னையும் பாட்டியும் பேசியதை கேட்டு அதிர்ந்து, கவியழகன் மீது உண்டான உணர்வழையை முற்றிலுமாக தூக்கி எறிந்தாள்… இல்லை தூக்கி எறிய முயற்சித்தாள்…
அவளுள் வந்த காதலை அவள் உணரும் முன்பே கவியழகனை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்தாள் பேதையவள் தன் அன்னைக்காக…
கனிமொழியோ இப்பொழுது குழலியின் முன் சென்று திட்டும் அடியும் வாங்குவதற்கு பதில் தன் வீட்டிற்கு சென்று நிம்மதியாக உண்டு தூங்கலாம், நாளை அவளை சமாதானம் செய்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து தன் வீட்டை நோக்கி தன் நடையை கட்டினாள் விக்கியை எப்படி தவிர்ப்பது என்று யோசித்தபடி…
அவளுள்  ஒருவித சலனத்தை உண்டாக்கி இருந்தான் தான் ஆனால் அதை வெறும் ஈர்ப்பு என்பது கனிமொழியின் எண்ணமாக இருந்தது… அதிலும் தன் குடும்பம் அதிலும் தன் தந்தையை நினைத்தால் அவளுக்கு அந்த ஈர்ப்பும் இருந்த இடம் தெரியாமல் போயிவிடும்… அதையும் தாண்டி தன்னை அவன் பாதிக்கிறான் என்பதை அவள் சிறிதும் எண்ணவில்லை… அதே இங்கு பெரிய தவறாகி போனது… அதை கொஞ்சமேன்னும் உணர்ந்திருந்தாள் பிற்காலத்தில் நிழக போகும் பல சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் ஆனால் அவளை சிந்திக்க விடாது விதி தன் வேலையை செவ்வனே செய்தது…
மறுநாள் கனிமொழி எத்தனை அழைத்தும் பூங்குழலி கடைவீதிக்கு வர மறுத்து விட, வேறு வழியில்லாது அவளும் வீட்டிலேயே தங்கி விட்டாள்… கடைவீதிக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்ததை விட, விக்கியிடம் சிக்காமல் இருப்பதை நினைத்து சந்தோஷம் கொண்டாள் அதிகமாக…
பெண்களின் எண்ணப்போக்கை அறியாது ஆண்கள் இருவரும் தங்கள் துணையின் நினைவில் மிதந்துக்கொண்டிருந்தனர் காதல் வானில்…
மறுநாள் காலேஜ் செல்ல ஏன்னோ பூங்குழலிக்கு மனம் வரவில்லை… அன்று கடைவீதி சென்று வந்ததில் இருந்து அவளது மனம் அவளது சொல் கேட்காமலே கவியிடம் சென்று நின்றது…
‘சே… என்ன புள்ள இது… அவிகள நினைக்க கூடாதுன்னுட்டு முடிவு பண்ண பொறவு என்னத்துக்கு அவிக நினைப்பு அதிகமா வருது… வேண்டாம்… இது செரியில்ல… ஆத்தாக்கு தெரிஞ்சா ரொம்ப வேதன படும்… ஒழுக்கமா இரு புள்ள…’ என்று இதையே சொல்லி சொல்லி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள போராடினாள்…
ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்… அவளால் கவியழனின் நினைவை அழிக்கவோ மறக்கவோ முடியவில்லை… சில தினங்களாக தன்முன் வலம் வந்தவன் தன்னை முழுவதும் ஆட்டி வைப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது தவித்தாள்…. மனதோடு வெகுவாக போராடியவள் ஒரு கட்டத்தில் சோர்ந்தும் போனாள்…
அதன் விளைவு, கனி “ஏன் புள்ள… ரெண்டு ஐஸ் திண்ணதுக்காக இம்புட்டு ஃபீல் பண்ணுற… உனக்கே கொஞ்சம் அதிகமாக தெரியல…?”
“ம்பச்ச்… ஏய் லூசு… அதெல்லாம் ஒண்ணுமில்ல… உடம்புக்கு என்னவோ போல இருக்கு அத்தேன் காலேஜு வரலைன்னு சொல்லுத்தேன்… நீ தொல்ல பண்ணாம போயிட்டு வா…” என்று படுக்கையில் புரண்டு குப்புற படுத்துக் கொண்டாள் குழலி…
“ம்ம்ம்… உடம்புக்கு முடியலையா இல்ல உன்ற மனசுக்கு முடியலையா… ” என கேட்கவும் விசுக்கென்று எழுந்து கனியை பார்த்து முழிக்க, அவளை பார்த்து சிரித்து வைத்தாள் கனிமொழி….
“அப்ப கவி அண்ணேத்தேன் காரணம்…” என்னும் போது அதை எதிர்த்து ஏதோ தலையை ஆட்டி பேச வந்தவளை கை நீட்டி தடுத்தாள் கனி,
“எனக்கு புரியுது புள்ள… நல்லா யோசிச்சு முடிவு பண்ணு… இது உங்வாழ்க்க… கவி அண்ணே…?” என யோசித்தவள், பின் ஒற்றை கண்ணை சிமிட்டி, “கரெக்ட் சாய்ஸ் தான் புள்ள….” என்றவள் வேகமாக அறையை விட்டு வெளியேறி, “நான் காலேஜ் போயிட்டு வாரேன் புள்ள…” என்று கத்திக்கொண்டே சென்றாள் வீட்டை தாண்டி…
ஒருவேலை விதியை அவள் முன்பே கனித்திருந்தாள் நிச்சயம் தன் தோழியை இவ்வாறு தனிமையில் விட்டு சென்றிருக்க மாட்டாள்… ஆனால் நடப்பவை நடந்து தானே தீரும்….
கனிமொழி சென்றதும் சிறிது நேரம் அவள் கூறியதை எண்ணி குழம்பியவள், ஒரு முடிவாக அவன் தனக்கு வேண்டாம் என்று தீர்மானத்தோடு எழுந்து அறையை விட்டு வெளி வந்து,  வீட்டு வேலையில் கவனத்தை திருப்பினாள்….
அவள் சொங்கி இருந்ததையும் பின் வேலையை இழுத்துப்போட்டு செய்வதையும் வசுந்தரா, செல்லதாயி புரியாது பார்த்திருந்தாலும் ஏதோ ஒன்றிருக்கிறது என்று புரிந்திருந்தனர்…
மாலை நான்கு மணி வாக்கில், செல்லதாயி பூங்குழலியிடம் ஒரு தூக்கு சட்டியை கொடுத்து கடையிலிருக்கும் வசுந்தராவிற்கு கொடுத்துவிட்டு வர சொல்ல, நடக்க போவதை அறியாமல் அவளும் கிளம்பினாள் தங்கள் கடையை நோக்கி…
சைக்கிளை எடுத்தவள், பின் மனதை மாற்றி பொடி நடையாக நடக்க தொடங்கினாள் வேடிக்கை பார்த்துக் கொண்டே… ஆனால் மனம் முழுவதும் கவியன் நினைவுகளை சுமந்துக் கொண்டு…
‘ம்ப்ச்ச்… தப்பு குழலி… அவிகள நினைக்காத… நினைக்காத….வேண்ணாம்…. நீத்தேன் கஷ்டப்படணும்…’ என்று எண்ணியபடி வந்தவளின் வாயை பொத்தி பின்பக்கமாக இழுத்தது ஓர் உருவம்…
இரெண்டு நாட்களாக மனதிற்குள்ள போராடியவளின் மூளை இந்த எதிர்பாரா தாக்குதலை சற்றும் எதிர்ப்பார்க்காததால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எவ்வித அவசர யோசனையுமின்றி அந்த உருவம் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்றாள் தன் எதிர்ப்பை, வாய் போத்திய அந்த கையை விலக முயற்ச்சித்தபடி…
அந்தோ பரிதாபம் அவளால் ஒன்றும் செய்ய இயலாது சோரந்து போனாள் சிறு மயக்கத்தோடு… தரதரவென இழுத்துக் சென்றவன் தீடிரென பூங்குழலி மயங்கவும் பதறி அவளை அப்படியே தரையில் படுக்க வைத்து அவளது முகம் பார்க்க, எந்த ஒரு அசைவும் இன்றியிருந்தாள் சிலையாக…
தொடரும்….

Advertisement