UD:29 (2)

“அது எல்லாம் தேவை இல்ல பாப்பா… நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்…” என்றவர் பின், “சரி நேரம் ஆச்சு பாப்பா… வா கீழ போலாம்…”என்று எழப் போக,

 

“நீங்க போங்க அத்தை… நான் கொஞ்ச நேரம் கிழிச்சு வரேன்…” அவளுக்கு சிறிது யோசிக்க வேண்டும் என்று எண்ணினாள்.

 

“இல்ல பாப்பா… ஏற்கனவே ரொம்ப நேரம் ஆச்சு…. உடம்புக்கு முடியாம போயிர போகுது…. ” என்றவரை மறுத்து பேசியவள்,

 

“பிளீஸ் அத்தை… கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு… கீழ ரூம்ல அவங்க இருப்பாங்க… சோ பிளீஸ்…” கெஞ்சி கேட்டவள் நந்தனை பற்றி பேசும் போது முகம் அஷ்ட கோணலாக போக, அதை கண்டு சிரித்துக் கொண்டே,

 

“சரி… சீக்கிரம் கீழ போயிரு… ரொம்ப நேரம் இங்க இருக்காதே…”என்று கூறிவிட்டு எழுந்து செல்ல,

 

அவருக்கு சிறு தலை அசைபில் சரி என்று கூறி விடைக் கொடுத்தாள்.

 

வித்யா கிளம்புவதை  பார்த்து நந்தன் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவன் அறை நோக்கி ஒரு துள்ளலுடன் சென்றான் மனநிறைவுடன்.

 

சிறிது நேரம் மழையை வெறித்துப் பார்த்த மஹா, ஒரு முடிவுடன் அவள் அறைக்கு சென்றாள்.

 

அறைக்கு வந்தவன் சந்தோஷத்தில் ஒரு குதியாட்டம் போட எண்ணிய மனதை அடக்கி… பால்கனிக்கு சென்றவன் மழையை ஆசையாக பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.

 

“சாரி டி கொசுக்குட்டி…. தெரியாம தப்பு பண்ணிட்டேன் அதுவும் நிறைய தப்பு… இப்ப எல்லாம் தெரிஞ்சுருச்சு இல்ல… இனி பாரு இந்த GMவோட வேலைய…” இடது கையால் மீசையை முறுக்கி விட்டு சிரித்துக் கொண்டான்.

 

“எப்படியும் இப்ப வந்தவுடனே கொஞ்ச மாட்ட… திமிரு புடிச்சவ… வேண்ணும்னே வீம்பு பண்ணுவா… நம்மள பார்த்தா சீன் போடுவா… அதுக்கு பேசாம தூங்கிட்ட மாதிரி நடிப்போம் என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்…” அவள் வருவதற்கு முன் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டவன் தன் கொசுக்குட்டிக்காக காத்துத்திருந்தான்…. அவள் வந்ததும் செய்ய போகும் காரியத்தை அறியாமல்….

 

சிறிது நேரம் கழித்து அறையினுள் நுழைந்தவள் படுக்கையில் சுகமாக உறங்கிக் கொண்டு இருக்கும் கணவனைக் கண்டு, ‘ஒருத்தி அழுந்துட்டே போனாளே…. எங்க போனா… என்ன ஆனான்னு யோசிச்சு தேடினானா பாரு…கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா… எருமை மாடு எப்படி தூங்குது பாரு… உன்னை….’ மனதில் அவனை தாளித்தவள் அவனை நோக்கி வர.

 

ஓரக்கண்ணால் அவளையே கவனித்துக் கொண்டு இருந்தவன் அவள் முகமாற்றத்தையும், ஆவேசமாக தன் அருகில் வருவதை கண்டு மனதில் கிலிப்பிடிக்க, ‘ஐயோ… கடவுளே என்னை இவ கிட்ட இருந்து காப்பாத்து..’ மனதில் அனைத்து கடவுளுக்கும் இன்ஸ்டன்டாக ஒரு வேண்டுதலை வைத்தான்…

 

அவன் அருகில் வந்தவளோ, அவன் அருகில் இருந்த மற்றோரு தலையனையை எடுத்து அவன் முகத்தின் அருகே கொண்டு சென்றவள் பின் என்ன நினைத்தாளோ “சை… யூஸ்லெஸ் காண்டாமிருகம்…” என்றவள் அதை மீண்டும் படுக்கையில் எறிந்துவிட்டு குளியலறைக்கு சென்றாள்.

 

அவள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு, எழுந்து அமர்ந்தவன் தன் நெஞ்சில் கைவைத்து, “பாவி…கோவமா இருப்பான்னு நினைச்சா கொலைவெறில இருக்கா… ” பெருமூச்சு விட்டவன், “இதை தான் கொலையும் செய்வாள் பத்தினின்னு பெரியவங்க சொன்னாங்களா… டேய் நந்தா… உன் உயிர்க்கு  உத்தரவாதம் கிடையாது இவளால…. எது பண்ணாலும் சீக்கிரம் பண்ணு…” என்று புலம்பிக் கொண்டு இருந்தவன் அவள் வரும் அரவம் கேட்க, மீண்டும் படுக்கையில் விழுந்து தன் நடிப்பை தொடங்கினான்.

 

குளியலறை விட்டு வெளியே வந்தவள், இரவு உடைக்கு மாறி இருந்தாள். மீண்டும் அவன் அருகில் வரவும், ‘ஆஆ… திரும்பவும் எதுக்கு வரா… ஒருவேலை முன்ன கட்டி இருந்த புடவை கொலை பண்ண வசதியா இல்லைன்னு நைட் டிரெஸ்க்கு மாறிட்டு வந்து இருக்கா போல கொசுக்குட்டி…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பிடிக்கும்ன்னு சொல்லிட்டு இப்படி பண்ணுறா…’ அவள் அருகில் வருவதற்குள் அவன் மனதில் அனைத்தையும் நினைத்து முடித்திருந்தான்.

 

அவன் அருகில் வந்தவள், அவனையே சிறிது நேரம் பார்த்திருக்க, அவனை மேலும் நெருங்கி வந்தவள் தீவிரமான முகத்துடன் கீழ் உதட்டை கடித்தபடி அவன் அருகே குனிந்து, வலது கையை நந்தனின் முகத்தருகே கொண்டு சென்றவள் அவன் மீசையை மெதுவாக பிடித்து திருகிவிட, பெண்ணவளின் ஸ்பரிசம் பட்டு அவனது உடல் சிலிர்த்து எழுந்தது.

 

அதில் பயந்து வெடுக்கென்று தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவள், அவனிடம் எந்த அசைவையும் காணாமல் மீண்டும் அதே போல் இருபக்கமும் திருகி விட்டவள், ஆசை தீர அவனை சில நிமிடங்கள் பார்த்து தன்னுடைய வாட்டர் டேப்பை திறந்து விட்டாள்.

 

பின் அவன் புரண்டு படுக்க, அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்று பால்கனிக்கு சென்று தஞ்சம் புகுந்தாள்.

 

அவள் அருகில் வரவும் கண்களை முடிக்கொண்டவன், தனது மீசையின் மீது அவளது விரல் படவும் சிலிர்த்துக் கொண்டது நந்தனுக்கு… பின் மீண்டும் அவள் அவ்வாறே செய்ய நந்தன், ‘அடியேய் கொசுக்குட்டி மனசுக்குள் இவ்வளவு ஆசைய வச்சுகிட்டு தான் கொலை முயற்சில இறங்குனீயா… ‘ மனதில் நினைத்தவன் வெளியே அசையாமல் அவளது வெண்டைபிஞ்சு விரல்களுக்கு தன்னுடைய மீசை தந்துவிட்டு படுத்து இருந்தான்.

 

பின் அவள் அவ்விடத்தை விட்டு நகர்வது போல் தெரியாததால் வேண்டும் என்றே லேசாக புரண்டு படுத்தவன், அவள் அவசரமாக பால்கனிக்கு செல்வதை பார்த்து, ‘எவ்வளவு நேரம் தான் அசையாம தூங்குற மாதிரி நடிக்க முடியும்… கொசுக்குட்டி என்ன பண்ணாலும் நம்மளை டார்ச்சர் பண்ணுற மாதிரி தான் பண்ணுறா…  ‘தனக்குள் புலம்பி கொண்டான்.

 

அவள் திருகிய மீசையை ஆசையாக தொட்டு பார்த்தவன், மனதிற்குள் எண்ணியதை சீக்கிரம்  செயலாற முடிவெடுத்தான். அவன் எடுக்க போகும் முடிவு அவனுக்கு சாதகமாக அமையுமா அல்ல அதுவே அவன் வாழ்வின் பெரிய தவறாக அமையுமா…?

 

பால்கனியில் சிறிது நேரம் நின்றவள் உடல் சோர்வும், அழுததினால் கண்கள் எரிய, தூங்குவதற்காக அறையினுள் நுழைந்தாள்.

 

அதுவரை அவளுக்காக காத்திருந்தவன் அவள் படுக்கையில் அவனை பார்த்தவாறு சில நிமிடங்கள் இருக்க. பின் மெதுவாக தன் தூக்கத்தை தொடர்ந்தாள். அவள் தூங்கியதை உறுதி செய்து கொண்டவன் அவளை சிறிது நேரம் ரசித்துவிட்டு தன் தூக்கத்தை தொடர முயற்சித்தவன் சிறிது நேரத்தில் மீண்டும் புரண்டு படுத்தான்.

 

ஏதோ உள்ளுணர்வு தூண்ட கண் விழித்து பார்த்தவன் மஹா ஆழ்ந்து உறங்குவதை கண்டு… அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவளை மெதுவாக இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான். அதன் பின் ஒரு நிறைவை உணர்ந்து வெகு நாட்கள் கழித்து தன் தூக்கத்தை சுகமாக தொடர்ந்தான்.  

 

தன் கண்களை திறக்க முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் கண்களை மூடி மறுபக்கம் திரும்பி படுத்தவள்… ஒற்றை கண்ணை திறந்து பார்க்க அவ்விடம் காலியாக இருந்தது…

 

‘இந்த காண்டாமிருகம் எங்க போச்சு…’ யோசித்துக் கொண்டே மேலும் சிறிது நேரம் படுத்து இருந்தவள் அவன் வருவது போல் தெரியாததால், பக்கவாட்டில் இருந்த கடிகாரத்தை பார்க்க அது நேரம் 8 என காட்டியது.

 

படுக்கையை விட்டு பதறி அடித்துக்​கொண்டு எழுந்தவள், தான் பார்த்தது பிரம்மையா இல்லையா என்று உறுதி செய்து கொள்ள கண்களை நன்கு கசக்கிவிட்டு மீண்டும் கடிகாரத்தை பார்க்க, அது அப்பொதும் எட்டு என்றே காட்ட, அவசரமாக குளியலறைக்கு சென்று குளித்து, உடை மாற்றி விட்டு கீழே ஓடி செல்ல, “சை… எவ்வளவு பெரிய வீடு அவசரத்துக்கு எவ்வளவு தூரம் ஓட வேண்டி இருக்கு… சின்ன வீடா இருந்தா எவ்வளவு வசதியாக இருந்து இருக்கும்…”புலம்பிய படியே ஓடியவள்,

 

டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்து இருப்பதை பார்த்து, ‘போச்சு இன்னைக்கும் திட்டு வாங்கணுமா… சே… இவன் கொஞ்சம் எழுப்பி விட்டிருந்தா இவ்வளவும் வந்து இருக்குமா…’ மனதில் புலம்பிய படி மூச்சு வாங்க சென்று நின்றவளை துளைக்கும் பார்வையில் அளவிட்டார் நீலுஅம்மாள்…

 

சிவந்து வீங்கிய கண்களும், சோர்ந்த முகம், அவசரமாக வந்ததால் சரியாக தலைவாராமல் இருக்க, ஓடி வந்ததில்  வேகமாக மூச்சு வாங்க,ஆங்காங்கே வேர்த்து இருக்க நழுங்கிய புடவையில் நின்று இருந்தவளை அளவிடும் பார்வையில் பார்த்திருந்தார்,

 

மற்றுமொரு ஒரு ஜோடி விழிகள் அவளை கண்களால் கபழிகரம் செய்து கொண்டு இருந்தது.

 

நீலுஅம்மாள், “நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்… இந்த வீட்டுக்குன்னு சில விதிமுறை இருக்கு… அதை கடைபிடிச்சே ஆகணும்னு…ஆனா மேடம் அது எல்லாம் சொன்ன கேட்க மாட்டாங்களோ…” கம்பீரத்தில் ஆரம்பித்தவர் நக்கலில் முடிக்க,

 

“இல்ல பாட்டி… உடம்புக்கு லேசா முடியல… அதான் தெரியாம தூங்கிட்டேன்…”மெல்லிய குரலில் கூறியவளை கூர்ந்து பார்க்க,

 

“அச்சச்சோ… என்ன ஆச்சு மா…” என்று கார்த்திகா பதற்றத்துடன் கேட்டுக் கொண்டே அவள் அருகில் வர,

 

நீலுஅம்மாள் ,“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி பதற்ற…?” என கேள்வி கேட்க, அவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானார் கார்த்திகா…

 

“நேத்து நல்லா தானே இருந்த… திடீர்னு எப்படி உடம்பு சரி இல்லாமல் போகும்…” இப்பொழுது மஹாவின் புறம் தன் பார்வையை செல்லுத்தினார்.

 

“நேத்து மழை பெஞ்சது… அதில்…”அவள் சொல்லி முடிக்கும் முன், அவரது குரல் இடை புகுந்தது….

 

“ஆமா… மேடம் தான் மழை வந்ததும் அதை தாங்கி பிடிக்க போனாங்க… அதில் நினைஞ்சு உடம்புக்கு சுகம் இல்லாமல் போச்சு….” அவர் சொல்லி முடிக்கும் முன் டைனிங் டேபிளில் இருந்த மூவறை தவிர அனைவரும் சிரிக்க,

 

மஹா நந்தனை பார்க்க, அவனும் எதோ சிரிப்பை அடக்குவது போல் வாய் மீது இடது கையை வைத்து மறைந்திருக்க,அவளை அவன் கண்டு கொள்ளவே இல்லாதது போல் அருகில் இருந்த வர்ஷுவுடன் பேசிக் கொண்டு இருந்தான். ஏனோ அவளுக்கு கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கும் நிலையில் இருந்தது.

 

“ஆச்சி எனக்கு பசிக்குது… இப்பாவச்சும் நான் சாப்பிடலாமா…” நந்தன் கேட்டவுடன் பதறிய நீலுஅம்மாள்…

 

“போ… போய் சீக்கிரம் பரிமாறு… நீ ஒய்யாரமா தூங்கி எந்திருச்சு வர வரைக்கும் என் பேரன் பசியோட இருக்க வேண்டி இருக்கு… ” எரிச்சலுடன், அவளை பரிமாற சொல்லி விட்டு தன் உணவில் கவனமானார்.

 

மஹா எதுவும் கூறாமல் தலை கவிழ்ந்த படியே நகர்ந்து நந்தனின் அருகில் வந்தவள் அவனுக்கு வேண்டியதை பரிமாறும் போது, அவளை ஓர விழியில் பார்த்தவனை அவள் சற்றும் கண்டு கொள்வதை போல் தெரியாததால் தன் உணவில் கவனம் செலுத்தினான்.

 

அவனுக்கு சட்டினி தேவைபட, அவன் இயல்பு போல் எடுக்க பாத்திரத்தின் புறம் கையை நீட்ட அதே சமயம் அவளும் கை நீட்ட, இருவரது விரல்களும் உரசிக் கொண்ட நொடி நேரத்தில், அவள் தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

 

அவன் அதிர்ந்து அவள் முகம் பார்க்க அப்பொழுதும் அவள் அவனை கண்டு கொள்ளவில்லை…

 

பின் நந்தன் அவசரமாக உண்டு விட்டு எழுந்துக் கொள்ள ,”ஏன் ராசா… அதுக்குள்ள எந்திரிச்சுட்ட… ” என்று நீலு பாட்டி கேட்கவும்,

 

“இல்ல ஆச்சி… ஒரு அவசர வேலை மணி இப்பவே 9 ஆக போகுது… 9.30 மணிக்கு கிளம்புனாதான் வீடு போய் சேர கரெக்டா இருக்கும்… எனக்கும் நிறைய வேலை இருக்கு… “என்று அவசரமாக பதில் அளித்துவிட்டு மஹாவின் புறம் திரும்பி,

 

“ஸ்ரீ…” என்று அழைக்க,

 

‘என்ன’வென்று திரும்பி அவன் முகத்தை பார்த்தவளை, “சீக்கிரம் சாப்பிட்டு… ரெடி ஆகு… திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிரு…. அரைமணி நேரத்தில் கிளம்பணும்…” என்று தோரனையாக சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு செல்லும் முன் தன் அன்னையிடமும் பேசி விட்டு சென்றான்.

 

‘ஆடர் போடுறதை பாரு… காண்டாமிருகம்… இவனுக்கு நான் என்ன வேலைக்காரியா…? ராஸ்கல் போடா பன்னி…’மனதிற்குள் திட்டியவள் வெளியே எதுவும் கூறாமல் அமைதியின் சிகரமாக நின்று இருந்தாள்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிக் கொண்டு  காரில் சென்னையை நோக்கி பயணமாயினர் நந்தனும், மஹாவும்…

 

கார் அவர்களின் குடியிருப்பிற்கு செல்லாமல் நந்தனின் வீட்டில் சென்று நின்றது… காரில் ஏறியதும்  மூன்று மணி நேர பயணமும் மஹாவிற்கு  உறக்கத்திலே சென்று விட நந்தன் அவளை எந்த தடையும் இன்றி பார்த்துக்(சைட் அடித்துக்) கொண்டே வந்தான்…

 

கார் நின்றதும் மஹாவின் புறம் திரும்பியவன், “ஸ்ரீ…” மென்மையாக அழைத்து அவளை எழுப்பினான்…  

 

தூக்கம் கலைந்தவள் எங்கு இருக்கிறோம் என்றே பாராமல் காரை விட்டு தள்ளாடியபடி நடக்க துவங்கியவள்… இரண்டு அடி எடுத்து வைத்த பின்னே தன்னை சுற்றி பார்த்து அது தங்கள் குடியிருப்பு இல்லை என்று உணர்ந்து, திரும்பி நந்தனை பார்த்தாள்…

 

காரை விட்டு முழுவதுமாக இறங்காமல், ஒரு காலை காரின் உள்ளும் மற்றோரு காலை தரையில் ஊன்றி நின்றவன். ஒரு கையை காரின் மேல் பகுதியிலும் மற்றோரு கையை கார் கதவின் மேல் வைத்துக் கொண்டு ஸ்டைலாக நின்று இருந்தவனை கண்டு ஒரு நொடி தடுமாறியவள், தலை குனிந்து கண்களை மட்டும் உயர்த்தி அவனை பார்க்க…

 

‘பிராடு கொசுக்குட்டி… திருட்டு தனமா சைட் அடிக்குற… ‘மனதில் எண்ணியவன் வெளியே முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு…

 

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நீ இங்க வெய்ட் பண்ணு, நான் வேலை முடிஞ்சதும் உன்னை வந்து கூட்டிட்டு போறேன்… “என்றவன் அவளது பதிலை எதிர்பாராமல் அசுர வேகத்தில் காரை கிளப்பிக் கொண்டு சென்று இருந்தான்…

 

அவனது செயலிலும் பேச்சிலும் மஹாவிற்கு என்னவோ போல் ஆயிற்று…

 

தங்கள் அறைக்கு வந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்த படுத்திக் கொண்டவள் வேறு உடைக்கு மாறி விட்டு வெளியே வர… மயக்கமாக வந்தது மஹாவிற்கு… இருந்தும் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்க விரும்பாமல் பால்கனிக்கு சென்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவளுக்கு நந்தனும் வர்ஷுவுமே நினைவில் நின்று அவளை மிகவும் இம்சை செய்தது…

 

“திமிரு பிடிச்சவன்… பன்னி… இவன் கிட்ட எப்படி பேசுறது, என்னனு பேசுறது….?” என்று யோசிக்க தொடங்கினாள்….

 

சற்று நேரத்தில் கால்கள் துவள, அங்கு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து வெகு நேரம் அதையே யோசித்துக் கொண்டு இருந்தவள்… மெதுவாக எம்பி  அதில் ஆட முயற்சிக்க… முடியாமல் போகவும் மீண்டும் சாதாரணமாக அமர்ந்துக் கொண்டாள்…

 

அப்பொழுது தீடிரென அதிர்ந்து, ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றிக் கொண்டாள் மஹா…
கண்டிஷன்ஸ் தொடரும் …….