Advertisement

UD: 23 (2)

இவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராததால் அவனும் நிலைதடுமாறி பின்னோடு சரிய, மஹாவை தாங்கியபடி சோஃபாவில் விழுந்தான் விட்டதை பார்த்தப்படி…

 

நொடி நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவிட, இருவரும் சற்று நிலை தடுமாறி போயினர்…

 

தன் மேல் விழுந்து கிடப்பவளை குனிந்து பார்க்கவும், தாம் விழுந்து கிடப்பவனின் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவும் சரியாக இருக்க, இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்திருந்தனர்…

 

தன் மேல் இருந்தவளின் ஸ்பரிசம் அவனை பித்தம் கொள்ள செய்ய, அவனுள் எழுந்த ஆசைகளும், அவளது மனதில் எழுந்த தடுமாற்றமும் இணைய தொடங்கின மெல்ல மெல்ல…

 

ஹார்மோன்கள் ஹார்மோனிங்கள் வாசிக்க இருவரும் தங்களை மறந்து தங்கள் அணைப்பை இறுகினர் மெதுவாக… அதில் மஹா மேலும் அவனுள் புதைவதை போல் இருக்க… அவன் ஷர்டை இறுக்கிப் பிடித்தாள்…

 

அவர்களின் அந்த ஏகாந்த சுழல் அடுத்த நிலைக்கு செல்லவிருந்த தருணம், நந்தனின் கைபேசியில் அழைப்பு வர, இருவரும் கனவுலகத்தில் இருந்து கலைந்து ஒருவரையொருவர் பார்த்து தாங்கள் இருக்கும் நிலையும் கண்டு பதறியடித்து விலகினர் அவசரமாக,

 

நந்தனிடம் இருந்து விலகுவதற்காக சற்றும் யோசிக்காமல் அவனை  முழுவதும் உரசிக்கொண்டு, பக்கவாட்டில் சரிய…. நந்தனுக்கு மூச்சு முட்டி ஏதாவது ஆகி விடும் போல் இருந்தது…

 

ஐயோ… கொல்லுறாளே… தெரிஞ்சு தான் இப்படி பண்ணுறாளா… இந்த கொசுக்குட்டியால  கண்டிரோல் போயிரும் போல இப்படி எல்லாம் பண்ணா… கடவுளே என்னை காப்பாத்து பிளீஸ்…மனதில் புலம்பியவன் அவள் பக்கவாட்டில் சரியும் வரை அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்….

 

அவள் அவனை விட்டு விலகியதும் அவன் அவசரமாக சோஃபாவை விட்டு எழுந்து நின்று தன் தலையை கோதி தன்னை சமன் செய்ய முயற்சிக்க…

 

சோஃபாவில் அமர்ந்து இருந்தவளுக்கு வெட்கம் பிடிங்கி திண்றது… அன்று ஒருநாள் அவனுடன் சேர்ந்து கீழே உருண்டு விழுந்தவள் தான் ஆனால் இன்று போல் அல்லாது அன்று அவர்களுக்கு நடுவில் சற்று இடைவெளி இருந்தது. ஆனால் இன்று மஹா அவன் மீது பல்லி போல் ஒட்டி இருந்ததாள் ஏனோ பெண்மைக்கே உரிய வெட்கம் வர, தலை கவிழ்ந்து இருந்தாள்…

 

ஏதோ ஒருவகை படபடப்பில் இருந்தவர்களுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது… அது ஒருவர் மற்றோரு ஸ்பரிசத்தை அருகில் உணர்ந்தாளோ என்னவோ….

 

தலை நிமிர்ந்து நந்தனை பார்த்தவள் அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருக்க… அவன் அகன்ற தோளிலும், ஷர்டை கிழிந்துவிடும் அளவுக்கு அவனது உடற்பயிற்சியில் முறுக்கேறிய கை முஷ்டியும் கண்டு அவனது கை வளைவுக்குள் தஞ்சும் புக தோன்றியது மஹாவிற்கு…

 

அவளது எண்ணம் போன போக்கில் அதிர்ந்தவள், வேகமாக தலையை குனிந்துக் கொண்டாள் வெட்கத்தில்,

 

பின் இங்கு இதற்கு மேல் இருப்பது சரி வராது என்று எண்ணி, மெதுவாக சோஃபாவை விட்டு எழுந்தவள் சத்தம் எழுப்பாமல் பூனை போல் பதுங்கியபடி தன் அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள் அவன் கவனிக்கும் முன்….

 

அறைகதவு சாற்றப்படும் சத்தத்தில் திரும்பி பார்த்தவன், அவள் நழுவி சென்றது எண்ணி வாய்விட்டு சிரித்தவன் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து இருகைகளாலும் தன் தலையை கோதி, “ஸ்ரீ….” என்றான் கிறக்கமாக,

 

அவளால் தன் உணர்ச்சிகள் தூண்ட படுவதை உணர்ந்தவன், என்று இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்க்கு விடிவு காலம் வருமோ என்று காத்திருக்க ஆரம்பித்தான்…

 

“சீக்கிரம் எல்லாம் சரி ஆகும் டி… அது வரை காத்திருப்பேன் டி….”மெதுவாக வாய்விட்டு கூறியவன் அவளது குறும்பு தனத்தை எண்ணி சுகமாய் முழ்கினான்…

 

அறைக்குள் வந்தவள் படுக்கையில் முகத்தை மூடியபடி கவிழ்ந்து படுத்து, என்ன இப்படி எல்லாம் நினைக்குறோம்… நாம இப்படி எல்லாம் நினைச்சோம்ன்னு அவனுக்கு தெரிஞ்சா கண்டிப்பா நம்மளை டேமேஜ் பண்ணுவான்… என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் சட்டென எழுந்து அமர்ந்து,

 

“நாம நினைச்ச மாதிரி அவனும் நினைச்சு இருப்பானா… என் மேல லவ் இருக்குமா… ?” என்று தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு வெட்கம் வர, மீண்டும் படுக்கையில் சரிந்தவள்,

 

“எப்பபாரு சண்டை போட்டுட்டே இருக்கான்… அப்புறம் எப்படி துரைக்கு லவ் ஃபீல் எல்லாம் வரும்…?” தனக்குள் யோசித்துக் கொண்டு இருந்தவள் சோர்ந்து போனாள்….

 

நந்தனோ, “அவ ஏன் இப்படி இருக்கா… நாம இவ்வளவு ஃபீல் பண்ணி தவிச்சுட்டு இருக்கோம்…  இவளுக்கு எதுவுமே தோண்ணலையா…? ” என்று சிந்தித்துக் கொண்டு இருந்தவன்,

 

“இவளுக்கு என் மேல லவ் ஃபீல் வருமா…? இவ இப்படி சண்டை கோழி மாதிரி என் கிட்ட சிலுப்பிட்டு நிக்குறா… இவளுக்கு என் கூட சண்டை போடவே நேரம் பத்தலை இதுல எங்குட்டு போய் லவ்வை ஃபீல் பண்ண போறா… ம்ம்ம்… கொசுக்குட்டி…” என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டான் நந்தன்.

 

சொல்லாத காதல் செல்லாது என்பது இருவரும் அறியவில்லை போலும்….

 

இருவர் மனதிலும் காதல் கடலளவு இருந்தும், அதை யாருக்கு உணர்த்த வேண்டுமோ அவர்களிடம் அதை பற்றி கூறாது தங்களுக்குள் வைத்து மருகி கொண்டு இருந்தனர்…

 

விதி இருவருக்கும் நடுவில் கபடி விளையாட ஆரம்பித்தது…

 

சிறிது நேரம் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து காதல் சிந்தனையில் மூழ்கிப் இருந்தவன், மெல்ல தன் தலையை​ திருப்பிப் பார்க்க, கடிகாரத்தில் மணி 7.15 என காட்ட அவசரமாக எழுந்தவன் தன் நெற்றியில் அறைந்து கொண்டு, “இந்த கொசுக்குட்டிய நினைச்சா டைம் போறதே தெரியுரது இல்ல… சை…” என புலம்பிக் கொண்டே வேகமாக ஒரு குளியலை போட்டு, மீட்டீங்கிற்கு செல்வது போல் உடை அணிந்து தயாராகி வெளியே வந்தான்.

 

வாயற்கதவு வரை சென்றவன், திரும்பி மஹாவின் அறையை ஒருமுறை பார்க்க,“சொல்லிட்டு போகலாமா…”என்று யோசித்தவன் பின் வேண்டாம் என்று முடிவெடுத்து கதவை சாற்றி விட்டு சென்று விட்டான்….

 

எப்பொழுதும் மஹா வேலையில் இருந்து வந்ததும் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு, பின் அவனுடன்னான சண்டை முடிந்ததும் அறையில் தஞ்சம் புகுந்து கொள்பவள் மீண்டும் காலை தான் வெளியே வருவாள்…

 

அதனால் அவளிடம் சொல்லி விட்டு செல்லலாமா என்ற எண்ணம் எழ… அதற்கு அவன் வேண்டாம் என்று முடிவெடுக்க அது எவ்வளவு பெரிய தவறு என்று புரியும் வேளை இருமனங்களும் காயப்பட்டு மருகும் வேலையாகி போகும் என்று சற்றும் சிந்தித்து இருந்திருக்க மாட்டான் நந்தன்….

 

காரில் சென்றுக் கொண்டு இருந்தவனுக்கு ஏனோ மனம் நெருடலாகவே இருந்தது… ஏன் என்ற அதன் காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை….

 

மனதில் நந்தனின் நினைவுகளும்., அவனுடனான காதல் கர்ப்பனைகளும்  ஓட, தனி உலகில் மிதந்துக் கொண்டு இருந்தாள் மஹா…

 

மனதில் எழுந்த காதலும், அவன் மீது விழுந்த கிடந்த போது வந்த அவனது பிரெத்தியேக வாசனையும் மஹாவை சற்று தடுமாற செய்தது… ஏனோ அவனை காண வேண்டும் என்ற ஆவல் எழ, திரும்பி தன் கைபேசியில் மணியை பார்க்க அது இரவு 9 என காட்டியது…

 

“இப்ப என்ன பண்ணிட்டு இருப்பான்… ? ம்ம்ம்…. ” தாடையில் விரலால் தட்டி, உதட்டை பிதுக்கி யோசித்துக் கொண்டு இருந்தவள்,

 

“வேற என்ன பண்ணிட்டு இருக்க போறான்…ஒன்னு சமைச்சுட்டு இருப்பான்… இல்லாட்டி சமைச்சதை அமுக்கிட்டு இருப்பான்… காண்டாமிருகம்…” என்று உதட்டை சுளித்து சலித்துக் கொண்டவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது நந்தன் பாலில் மிளகு தூளை கலந்தது….

 

“இத எப்படி மறந்த மஹா… பன்னி, தடிமாடு பால்ல பேப்பரை கலந்து என் கண்ணை கலங்க வச்சுட்டான் பிராடு…” கோபம் துளிர்த்தெல, அருகில் இருந்த தலையணையை குத்தியவள்,

 

“காண்டாமிருகம்… டேய்….நீ செஞ்ச இந்த காரியத்திற்கு உன்னை பழிவாங்காம விட மாட்ட இந்த மஹா….” என்று வீர வசனம் பேசி தன் கோபத்தை தலையணையில் காட்டினாள்….

 

அவன் தான்தான் பாலில் மிளகை கலந்தது என்று கூறிய விதமும் தோரணையையும் நினைத்தவளுக்கு கோபமாக வந்த போதும் அதற்கு அடுத்து வந்த நிகழ்வுகள் அவளை வெட்க பட செய்தன…

 

சற்று முன்பு அவள் குத்திய அதே தலையணையை எடுத்து நெஞ்சோடு கட்டிக் கொண்டாள் காதல் வெட்கத்தோடு…

 

“ஐயோ… என்னது இது ஒன்னு அவன் மேல கோவப் படு இல்லாட்டி அவனை லவ்ஸ் பண்ணு… ரெண்டும் பண்ணா எப்படி டி….?” தன் மனநிலையை எண்ணி அவளே குழம்பிப் போனாள்…

 

சிறிது நேரம் தன் மனதிற்குள் நடந்த பட்டிமன்றத்தின் ஒரு முடிவாக,“அவன் பால்ல பேப்பர் கலந்தது தப்பு சோ அவனை பழிவாங்கணும் அது நாளைக்கு பண்ணிடலாம் … அப்புறம்..” என்றவள் தன் கையில் இருந்த தலையணையை அணைத்துக் கொண்டே,

 

“இப்ப லவ்ஸ் மூட் சோ சைட் அடிக்கலாம்….” என்றவள் அவன் ஆளுமையையும், தோரணையையும், அவன் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி  மீசையை நீவி விட்டு அதை முறுக்கி விடும் விதத்தை எண்ணி உருகி வழிந்துக் கொண்டு இருந்தாள்…

 

அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலோங்க…. ஒரு முடிவுடன் கட்டிலை விட்டு இறங்கியவள் மெல்ல கதவை திறந்து வெளியே எட்டிப் பார்க்க அது அமைதியாக இருந்தது….

 

பின் மெதுவாக எதுவும் அறியாதது போல் கைகளை பின்னே கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போல் பாவனையில் பால்கனி செல்லும் போது கிட்சனை பார்க்க அது வெறுமையாக இருந்தது…

 

ஏன் இவன் இன்னைக்கு சமைக்க வரலை….என்று யோசிக்க., ‘ஒரு வேலை ஒர்க் பண்ணிட்டு இருக்கானோ என்னவோ… எப்படியும் சமைக்க வந்து தானே ஆகணும் அப்ப பார்த்துக்கலாம்…”

 

அவனை பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடிக்க… பால்கனியில் சென்று நின்றவள் அவனது நினைவில் சுகமாய் மிதந்துக் கொண்டு இருந்தாள்…

 

சிறிது நேரம் நின்று பார்த்தவள் அவன் வராததை கண்டு ஹாலிற்கு சென்று சோஃபாவில் அமர்ந்தவளுக்கு ஏனோ மனம் லேசாக பதற ஆரம்பித்தது….

 

டிவியை ஆன் செய்து அதை பார்த்துக் கொண்டு இருந்தவள் அவனது அறையை நொடிக்கொரு முறை பார்க்கவும் தவறவில்லை….

 

அரைமணிநேரம் பொறுத்து பார்த்தவளுக்கு ஏனோ மனம் நெருடலாக இருக்க… அவன் அறையையே பார்த்துக் கொண்டு இருந்தாள் விழி அகலாது… சில மணி துளிகள் பொறுத்து பார்த்தவள் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் தன் இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து அவன் அறை கதவின் முன் நின்று அதன் கைப்பிடியில் கைவைக்க போக, ஏதோ யோசனையில் கதவை திறந்து உள்ளே போகாமல் அறை கதவை தட்டினாள்…

 

மனைவியே ஆயினும் இந்த வீட்டிற்கு வந்து இத்தனை நாட்களில் அவள் ஒரு நாள் கூட அவன் அறைக்கு சென்றது இல்லை, எட்டி பார்த்ததும் இல்லை…. அதனாலோ என்னவோ மஹாவிற்கு சிறிது தயக்கமாகவே இருந்தது…

 

அறைகதவை தட்டிவிட்டு அவள் காத்திருக்க… உள்ளிருந்து எந்த ஒரு பதிலும் இல்லாமல் போக மீண்டும் பலமாக தட்டினாள்… அப்பொழுதும் பதில் அற்றுபோகவே… கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்க்க மஹாவிற்கு திக்கென்று இருந்தது…

 

யாரும் அற்ற அறையை கண்டு, கண்கள் கலங்க அவசரமாக வீடு முழுக்க தன் பார்வையை ஓட்டியவளுக்கு நந்தனை காணாமல் வேர்த்து விதிர்த்து போனாள்…

 

“ஒரு வேலை மாடிக்கு போயிருப்பானோ… ” என்று யோசித்தவளுக்கு… ஏனோ மூச்சு விட சிரமமாக இருந்தது…

 

“சை… எங்க போய் தொலைஞ்சான்… அறிவுகெட்டவன் எங்கையாச்சும் போறதுன்னா சொல்லிட்டு போக மாட்டானா… தடிமாடு…” அவனை மூச்சு வாங்க திட்டிக் கொண்டே அவனை அழைக்க ஃபோனை எடுக்கவும் கிட்சனில் பாத்திரம் விழும் சத்தம் கேட்க,

 

“அ..அந்த… பொ..”அதன் பின் வார்த்தைகள் மௌனமாயின…

மீட்டீங் முடிந்து பார்ட்டி ஹாலில் இருந்த நந்தனுக்கோ மனம் ஏதோ எடுத்துரைப்பது போல உணர்ந்தவனுக்கு அது என்ன என்பது தான் புரியவில்லை… பார்டியில் அவன் உண்ணாமல் ஒதுங்கி இருக்க… ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல் அவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு அந்த ஹோட்டலை விட்டு வீட்டை நோக்கி சென்றவனுக்கு தெரியவில்லை, அங்கு அவனுக்கு  காத்து இருக்கம் அதிர்ச்சியும் இனி தன்னவளை வார்த்தைகளாலும், செயலாலும் வருத்த போவதையும்.

கண்டிஷன்ஸ் தொடரும் …….

 

Advertisement