UD:20(2)

சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது…

 

“ஐயோ… மஹா சொதப்பிட்டியே… இப்ப என்ன பண்ணுறது…?”நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு எடுத்து வருவது என்று யோசிக்க… ஒன்றும் தோன்றாமல், ‘அடிக்க வந்தா பேசாம காலில் விழுந்துறலாம்… ‘

 

ஒரு முடிவுடன் அறையை விட்டு வெளியே எட்டிப் பார்க்க, ஹாலில் எங்கும் அவனை காணாததால்,”ஒரு வேலை ரூம்க்குள்ள  இருக்குது போல காண்டாமிருகம்…“என்றெண்ணியவள், மற்றோரு அறைக்கு செல்ல திரும்புகையில்,

 

பால்கனியில் நின்றிருந்தவனை கண்டு கண்கள் பளப்பளக்க, ‘ஐ…. காண்டாமிருகம் அங்க தான் இருக்கு… அவன் பார்க்குறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் எடுத்துட்டு நம்ம ரூம்க்கு ஓடிரலாம் மஹா…’மனதில் அவசரமாக கணக்கு போட்டாள்.

 

பின் சத்தம் எழா வண்ணம், பூனை போல் மெல்ல அடிமேல் அடி வைத்து அவனது அறைக்குள் நுழைந்தவள் வேகமாக சென்று முதலில் இரண்டு பாக்கை (bag) எடுத்துக் கொண்டு வெளியே வந்து  அவனை பார்க்க…. நந்தன் இன்னும் அதே இடத்தில் அதே நிலையில் இருப்பதை கண்டு நிம்மதி அடைந்தாள்.

 

முன்பு போல் சத்தம் எழுப்பாமல் தன் அறைக்குள் நுழைந்து இரண்டு பேக்கையும் வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்து, அவன் மீது ஒரு கண் வைத்தார் போல் அவனது அறைக்குள் நுழைந்து மீதம் இருந்த பேக்கையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் அவசரமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்…

 

“அப்பாடா… தப்பிச்சோம் காண்டாமிருகம் கிட்ட இருந்து… சூப்பர் மஹா…”தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டவள், பின் உடையை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தாள்…

 

பால்கனியில் நின்று இருந்தவன் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

 

மனதில் எழுந்த கோபமும், தன்னிடம் சிக்காமல் தப்பித்து சென்றவளின் மேல் வந்த எரிச்சலில் பால்கனிக்கு வந்து நின்றான். மனதில் எழுந்த பெரும் அலைபுறுதலும், வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு  என்ன தீர்வென்று  தெரியாமல் தவித்தான் நந்தன்.

 

இனி வாழ்வில் அடுத்து என்ன என்று யோசிக்க ஏதோ வெறுமையாக தெரிந்தது அவனுக்கு. தந்தைக்காகவும், தாய்க்காகவும் இத்திருமணம் பந்ததில் நுழைந்தாயிற்று ‘இனி….’ என்ற கேள்விக்கு தான் அவனிடம் பதில் இல்லை…

 

வாழ்கையில் அடுத்து என்ன….? எப்படி இருக்க போகிறது….? என்று யோசனை அவன் மண்டையில் சுழல ஆரம்பித்தது…. இந்த வாழ்கையில் விரும்பம் இருந்தும் இல்லாத நிலை இது இன்னும் எத்தனை தினங்களுக்கு ஓடும்….? இவளுடனான வாழ்க்கையின் அடுத்த நிலைதான் என்ன…? என்று கேள்விகள் தாங்கிய நிலையில் நின்று இருந்தான்……

 

மனதில் தோன்றிய காதலை உணர்ந்தும் உணராத நிலையில் இருப்பவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் வெறித்தப் பார்வையுடன் நின்றிருந்தான்…

 

காதலை உணர்ந்து அதை தான் அவளுடன் பகிரும் போதும், தன்னவளால் தான் காதலிக்க படும் போது  அதில் வரும் நிறைவை அவன் மனமோ எதிர்ப்பார்க்க… இவை எதையும் உணராமல் இருப்பவனை என் செய்ய முடியும்…?

 

அவன் தன் காதலை உணரும் போது அதை அவளிடம் கூறுவானா அல்ல அவளது காதலை அவன் உணரும் போது இப்பந்ததை விட்டு விலக நினைப்பானா…???

 

மனதில் ஏதோ தோன்ற, மெல்ல கழுத்தை மட்டும் திருப்பி பார்த்தவன். முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து மென்மையாக மாற, உதட்டில் புன்னகை வந்து அமர்ந்தது.

 

பின் தன் கழுத்தை திருப்பிக் கொண்டவன், “திருட்டு பூனை…” மெல்ல வாய் திறந்து உச்சரித்தான் மலர்ந்த முகத்துடன்.

 

அவள் முதல் முறை அவனது அறையை விட்டு வெளியே வந்து அவள் அறை நோக்கி செல்லும் போதே கவனித்து விட்டான்  தன் கொசுக்குட்டியை… ஏனோ அவளது சேட்டையை கண்டு மனம் சுனக்கம் சற்று குறைந்தது போல் மென்மையானான்…..

 

அவனுக்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது… அது அவனால் மஹாவின் மீது கோபம் கொள்ள முடியாது என்றும், மீறி வந்தால் அது அரைமணி நேரம் கூட நீடிக்காது என்றும் புரிந்துக்கொண்டான்.

 

அவள் சென்றதும் அதையே நினைத்துக் கொண்டு நின்றவன் மெல்ல தன் அறைக்கு செல்ல….. மீண்டும் ஏதேதோ எண்ணியவன்,பின் தான் விழுந்ததற்கு தன்னுடைய மனையாளின் விளக்கத்தை எண்ணிப் பார்த்தவனுக்கு சிரிப்பு வர, படுக்கையில் மல்லாந்து படுத்தவன் தன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க. அங்கு மஹா இல்லாததால் அவளது அருகமையை மனம் பெரிதும் நாடியது…

 

திருமணம் ஆன நாள் முதல் நேற்று வரை தன் கையணைப்பில் அவள் அறியாமல் தூங்குவதை ரசித்த மனம் இன்று அவள் இல்லாமல் தூக்கம் வராமல் மிகவும் தவித்து போனான்,

 

“டபுள் பெட் ரூம் இருந்ததுக்கு சிங்கில் ரூமாக இருந்து இருக்கலாம்… சை… “புலம்பியவன் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்க.

 

அவளை தன் அறைக்கு வரவழைக்க ஏதேனும் யோசனை இருக்கா என்று சிந்தனையில் இருந்தவன் எப்பொழுது உறங்கினான் என்று அறியான்…..

 

இங்கு மஹாவும் தூக்கம் வராமல், புரண்டு படுத்துக்கொண்டு இருக்க…. அதற்கு காரணம் புது இடம் என்று அவள் நினைக்க,  தான் சில நாட்களாக தஞ்சம் கொண்ட நெஞ்சம் அவளுடன் இல்லாதது தான் என்று அவள் அறியவில்லை… வெகு நேரம் புரண்டவள் பின் தன்னையே அறியாது தூக்கத்தை தொடர்ந்தாள்…..

 

காலை வழக்கம் போல் எழுந்தவன் தன் அலுவலகம் செல்ல தயாராகி  வெளியே வர, அவள் இன்னும் அறையை விட்டு வெளியே வராததை  கண்டு,

 

‘கொசுக்குட்டி இன்னும் என்ன பண்ணுது… டைம் ஆச்சு… ஒருவேலை தூங்கிட்டு இருக்காளோ… இன்னைக்கு வேலைல ஜாயின் பண்ண போறா… முதல் நாளே லேட்டா போய் நிக்க போகுது… ‘என்று யோசித்தவன் அவளை கூப்பிட்டு பார்க்கலாமா…?

 

யோசனையுடன் அறை கதவை தட்ட போக, பின் என்ன தோன்றியதோ தட்டாமல் விட்டவன்… கிட்சனில் சென்று பார்க்க எதுவும் சமைக்காமல் இருக்க, “இவ எப்ப வந்து.. சமைச்சு.. சாப்பிட்டு.. வேலைக்கு போவா…? இவளை எல்லாம் வேலைக்கு எடுத்த அந்த கம்பெனி காரணை சொல்லணும்…” அவளையும் சேர்த்து, கம்பெனியையும் திட்டிக் கொண்டே தனக்கான டீயை போட போனவன்…

 

அவள் மேல் மலர்ந்து இருந்த காதலால் மனம் கேட்கமால் அவளுக்கும் சேர்த்தே இரு கப்பில் டீயை போட்டான்…

 

கையில் டீயுடன் வந்து டைனிங் டேபிளில் அமரவும், தன் அறையில் இருந்து புயல் போல் வெளி வந்தவள், நந்தனை சிறிதும் கண்டு கொள்ளாமல் பிரிட்ஜில் முன் தினம் இருந்ததை எடுத்து அவசர அவசரமாக உண்பவளை எதிரில் அமர்ந்து இருந்தவன் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

அவன் பார்ப்பதை உணர்ந்து, வாயில் உணவை அடைத்த வாரே,”என்ன பார்க்குற…? தெரியாம தூங்கிட்டேன் ரொம்ப லேட் ஆயிடுச்சு… அம்மா மட்டும் கால்(call) பண்ணலைன்னா எந்திரிச்சே இருக்க மாட்டேன்…”பேசிக் கொண்டே உண்பவளை வெட்டவா குத்தவா என்பது போல் முறைக்க துவங்கினான் நந்தன்.

 

அவள் நிமிர்ந்து ‘என்ன’ என்பது போல் புருவம்  உயர்த்தி கேட்கவும் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருக்க, எழுந்து கை கழுவ செல்லும் போது,

 

“காலைல எந்திரிச்சு, புருஷனுக்கு சமைச்சு ஆஃபிஸ்க்கு அனுப்பனும்ன்னு எண்ணமே இல்லை … நீ மட்டும் இப்ப நல்லா மொக்கினியே… எனக்கு வேண்ணுமான்னு கொஞ்சமும் யோசிக்க கூட இல்ல…”அவன் கூறி முடிக்கும் முன்பே அவள் சிரிக்க தொடங்கினாள்.

 

அவள் சிரிப்பதை கேள்வியாக பார்க்க, அவன் கேள்விகள் நிறைந்த பார்வையை கண்டு, “என்ன Mr.காண்டாமிருகம் காமெடி பண்ணுறீங்க…” என்றவள் சிரித்துக்கொண்டே கையை துடைத்தபடி,

 

“நான் எல்லாம் உங்களுக்கு சமைச்சு தருவேன்னு எப்படி நினைச்சீங்க Mr.காண்டாமிருகம்…? என்னால எல்லாம் உங்களுக்கு பணிவிடை செய்ய முடியாது…. “என்று நக்கலாக பேச,

 

“ஏய்… என்னடி திமிரா… அப்ப நான் என்ன பட்டினியா ஆஃபிஸ் போகணுமா…? என்னால எல்லாம் முடியாது…” என்றவனை பார்த்து,

 

“அது உங்க கஷ்டம்… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…?” என்று அசால்ட்டாக கூறியவளை முடிந்த மட்டும் முறைத்தவன்,

 

“ரொம்ப பண்ணுற டி… கண்டிப்பா ஒரு நாள் இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நான் திருப்பி தருவேன் டி…” என்று உறுமி விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான்…

 

அவன் போவதை பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் உள்ளே சென்றதும்… ஒரு பெருமூச்சை விட்டவள், தன் நெற்றியில் அறைந்து கொள்ள, ‘இத எப்படி மறந்தேன்… சமைக்க தெரியாமல் எப்படி வண்டிய ஓட்டுறது…. இந்த காண்டாமிருகத்தை சமாளிச்சாலும் நம்ம ஸ்டோமக்கு(stomach) என்ன பண்ணுறது… ‘ மனதில் சாப்பாட்டிற்கான வழியை யோசித்துக் கொண்டு இருந்தவள் அப்பொழுது தான் மணியை பார்க்க நேரமாவதை உணர்ந்து, வேகமாக தன் தோள் பையையும், வண்டி சாவியையும் எடுத்து கொண்டு வாசல் வரை சென்றவள் சற்று தேங்கி நின்றாள்…

 

நந்தன் அலுவலகம் செல்ல தன் லேப்டாப் பாக் வுடன் வெளியே வந்தவன். மஹா வாசல் அருகே நின்று யோசித்து கொண்டு இருப்பதை கேள்வியாக பார்த்து விட்டு, கிட்சனை நோக்கி நடக்க…

 

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் தயக்கத்துடன் மெல்ல குரலை உயர்த்தி,”அது வந்து…..”என இழுக்க,

 

அவள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தவன் அவள் ஏதோ கூற வருவதை உணர்ந்து, அவள் புறம் திரும்பி நிமிர்ந்து நின்று பேண்ட் பாக்கெட்டில் தன் கைகளை விட்டு அவளை உறுத்துப் பார்த்தான்.

 

சாம்பல் நிற முழுக்கை சட்டையும்,அதான் கைப் பகுதியை மணிக்கட்டு வரை மடித்து இருக்க, பிளாக் பேண்டும் அணிந்து, வலதுக்கையில் ரொலெக்ஸ் வாட்ச்சும் அணிந்து இருக்க… அவன் நின்ற தோரணையில் தெரிந்த ஆளுமையில் தன்நிலை மறந்து அவனை ‘பே’ என்று  பார்த்து வைத்தாள் அவனது மனையாள்…

 

அவன் டைனிங் டேபிள் அருகில் நின்று இருக்க வாசலில் மஹா நின்று இருக்க… விழி வழி கவிதைகள் பரிமாற பட்டன… ஆனால் அவன் கோபத்திலும் அவள் ஆசையிலும்…

 

அவள் பார்ப்பதை உணர்ந்து, ‘இவளுக்கு வேற வேலையே இல்ல…’மனதில் அலுத்துக் கொண்டாலும் ஏதோ ஒன்று அவன் இதயத்தை மயிலிறகால் வருடுவது போல் உணர்ந்தான்…

 

பின் அவளுக்கு நேரமாவதை உணர்ந்து, “ஏய் கொசுக்குட்டி… இப்ப எதுக்கு கூப்பிட்டு வச்சு சைட்  அடிச்சுட்டு இருக்க…” என்று வரவழைத்த எரிச்சலுடன் கேட்க,

 

அதன் பின்னரே தன் நிலையை அறிந்து அவசரமாக, “இல்ல… இன்னைக்கு முதல் நாள் வேலைக்கு போறேன்… சோ…”என்று தயக்கத்துடன் இழுக்க…

 

“சோ…”அவள் கேட்பது தெரிந்தும் தெரியாதது போல் அவன் கேட்க,

 

அவன் அப்படி கேட்டதும் கோபம் வர,”எனக்கு விஸ் பண்ணுடா பன்னி…” என்றாலே பார்க்கலாம்

 

‘திமிரு ஜாஸ்தி ஆயிருச்சு டி உனக்கு… விஷ் கூட திமிரா கேட்குறா பாரு…’மனதில் தன்னவளின் துடுக்கு தனத்தை கண்டு சிரித்தவன், வெளியே

 

அவளை இமைக்காமல் நிதானமாக பார்த்து,”எனக்கு என்ன வேற வேலை இல்ல… “தொடர்ந்து,”போடி” என்றவன் இடது கையால் சைகை செய்துவிட்டு, கிட்சனுல் நுழைந்து கொண்டான்.

 

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றவள், பின் தன்னை நிலை படுத்திக் கொண்டு,”போடா பன்னி… நீ ஒன்னும் எனக்கு விஷ் பண்ண தேவை இல்லை… தடிமாடு…”என்று அவனுக்கு கேட்கும் படி உறக்க கத்தி விட்டு வெளியே சென்று விட்டாள்.

 

அவள் கூறியதை கேட்டு முகத்தில் புன்னகை பெரிதும் படர விட்டவன், “ராட்சச கொசுக்குட்டி… “என்றதோடு,

 

பிரிட்ஜை திறந்து ஏதேனும் உண்பதற்கு இருக்கா என்று பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது… அனைத்தையும் அவள் மனையாள் உண்டு இருக்க சற்று கடுப்பாகி தான் போனான்….

 

வெளியே சாப்பிட்டு கொள்ளலாம் என்ற முடிவோடு வெளியே வந்தவன் , தான் அவளுக்கு போட்டு வைத்து இருந்த டீ கண்ணில் பட,”பால் வேஸ்ட், டீ பௌடர் வேஸ்ட், வாட்டர் வேஸ்ட், கேஸ் வேஸ்ட் கடைசியா என் டைம் வேஸ்ட்…. “என்று அலுத்துக் கொண்டே அதை சிங்க்(sink)கில் ஊற்ற போக சற்று நிதானித்தவன் அதையே உற்று பார்த்து விட்டு,

 

ஆபத்திற்கு பாவம் இல்லை என்று எண்ணி அதை தன் வாயில் சரித்துக் கொண்டான் பசியில்…

 

பின் தன் ஆஃபிஸிற்கு செல்ல வெளியே வந்தவன் கதவை  சாற்ற போகும் முன் ஏதோ யோசனை தோன்ற மீண்டும் வீட்டினுள் சென்று சில நொடிகளில் திரும்பி வந்தவன் வீட்டை சாற்றி விட்டு பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து சேர்ந்தான்.

 

அவள் தன் கார் அருகில் நின்று இருப்பதை பார்த்து விட்டு வாய்விட்டு சிரித்தவன், பின் தன்னை நிதானித்துக் கொண்டு எதுவும் தெரியாதது போல் தன் காரின் கதவை திறந்து அதில் ஏற போக,

 

“எனக்கு டைம் ஆச்சு…. ” என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு பாவமாக கேட்ட தன் மனையாளை கண்டு,

 

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்….?” தோளை ஆட்டி அவள் கேட்டது போலவே நந்தனும் கேட்டு வைத்தான் அவளை சீண்டும் நோக்கோடு….

 

அவனது கேள்வியில் உதட்டை பிதுக்கி, பாவமாக அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு தலை குனிந்து தன் ஷாலின் நுனியை திருகியபடி  நின்றாள் அடம்பிடிக்கும் குழந்தையை போல.

 

அவளது இந்த பாவனையில் நந்தன் மொத்தமுமாய் அவளிடம் வீழ்ந்தான் மீண்டும் அந்த நொடியில்…

 

காரின் கதவை சாற்றி விட்டு,அவளை இமைக்காமல் பார்த்தப்படி அவள் அருகில் வந்தவன் தன் வலக்கரத்தை நீட்ட, அதுவரை தலை குனிந்து நின்றவள் தன் முன் அவன் நீட்டிய கையை பார்த்து முகம் பிரகாசமாக அவனை நிமிர்ந்து பார்க்க.

 

அவன் கண்களில் தெரிந்த உணர்ச்சியை கண்டு குழம்பினாலும், அவன் நீட்டிய கையை தன் கைகளால் பற்றியவளுக்கு உடல் சிலிர்த்து ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது… ஆனால் கைகளை விலக்கிக் கொள்ளவில்லை…

 

அவள் உடல் சிலிர்த்ததை அவனும் உணர, மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், வெளியே

 

“ஆல் தி பெஸ்ட் ஸ்ரீ … நீ ஆசை பட்ட மாதிரி லைப்ல ஷைன் ஆக என்னோட விஷ்ஷஸ்… “என்று கைகுலுக்கி சொல்ல,

 

அதுவரை அவன் பற்றிய கையை பார்த்துக் கொண்டு இருந்தவள்…. அவன் வாழ்த்து கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள், பதிலுக்கு

 

“ரொம்ப தேங்க்ஸ் டா காண்டாமிருகம்…”என்று சந்தோஷ மிகுதியில் கத்த,

 

அவள் கூறியதை கேட்டு போலியாக முறைக்க… அவன் முறைப்பிற்கு காரணம் தான் கூறியதை கேட்டு தான் என்று உணர்ந்து லேசாக தன் நாக்கை கடித்துக் கொண்டவள் அவனை பார்த்து இளித்து  வைத்தாள்….

 

“உன்னை…” அவளை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர, “இன்னைக்கு  தான் முதல் நாள் சோ அடிக்க கூடாது…. சாமி குத்தம் ஆயிரும்…” என்று அவசரமாக கூறியவளை கண்டு சிரித்தவன்,

 

“டைம் ஆச்சு கிளம்பு… இந்தா வீட்டோட இன்னொரு சாவி…. பார்த்து ஓட்டு… எவனையாச்சும் இடிச்சுவிட்டுட்டு போயிறாத…” அக்கறையாக பேச ஆரம்பித்தவன் கேலியில் முடிக்க,

 

அவனை முறைத்தவள் வாயில் அவலம் காட்டி விட்டு தன் வண்டியில் கிளம்ப, நான்கு அடி சென்றதும் நின்று அவனை திரும்பி பார்த்து,”Mr.காண்டாமிருகம்… உங்க ஆஃபிஸ் கேன்டினில் ஏதாச்சும் வாங்கி சாப்பிட்டுகோங்க…. என்னால எல்லாம் சமைக்க முடியாது… நான் வரேன் பாய்….”என்று கத்தி விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்.

 

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்… அவளது அக்கரை கலந்த சீண்டலை அவன் மனம் பெரிதும் விரும்பியது…

 

அவளும் தான் எவ்வாறு இப்படி இருக்கிறோம், பேசுகிறோம் என்று புரியாமல் குழம்பினாள். காரணம் அவள் சுட்டி தான் ஆனால், இவ்வளவு உரிமையுடன் யாரிடமும் இந்த அளவிற்கு அவள் சண்டையிட்டதும் இல்லை, வாயடித்ததும்  இல்லை…

 

அவன் பக்கம் தன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவதை கண்டுக் கொண்டவள்…. இந்த மாற்றத்தையும் அவள் மனம் விரும்பவே செய்தது….

 

இனி இவர்கள் வாழ்வில் நிகழ போவதை தங்கள் காதலை வார்த்தையால் உணர்வார்களா அல்ல அந்த வார்த்தைகளால் பிரிவை எதிர் கொள்வார்களா….?

கண்டிஷன்ஸ் தொடரும் …….