Advertisement

Ep:2

தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ,” டேய் எங்க போற???” நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின் கேள்வியில் தன் மனம் போகும் போக்கை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தான் நந்தன்…

‘இந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்னை அப்படி சொல்லிட்டு போவா, கியூட்டா இருக்கானு திமிரு….. அவள…..’ என தன் மனம் அவளை நோக்கி ஈர்க்கப் பட்டதை ஏற்க மறுத்தவன் அதை கோவம் என்னும் முகமுடியால் மறைக்க நினைத்து, தன் கை முஷ்டியை இறுக்கி காற்றில் குத்தினான்.

அப்பொழுது மீண்டும் அதே மண்டபத்தில் இருந்து,

போற போக்கில் ஒரு லுக்க விட்டு

என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே

பாரபட்சம் பாக்காம கூட

வெச்சு செஞ்சிட்டாளே

என்று அவன் மனதின் நிலையை சொல்லும் பாடல் ஒலிக்க……..

“ஐயோ….. யாரு டா அவன்……., சிச்சுவேஷன் ஸாங் (situation song) போட்டு கொல்றான்” என தன் வலது கையால் நெற்றியில் அறைந்தப்படி வாய் விட்டு புலம்பினான்.

தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்து, வலது கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டும், இடது கையால் பின்னந்தலையை கோதியும் தன்னை சமன் செய்ய முயற்சித்தவன் அதில் சிறிதளவு வெற்றியும் கண்டு தன் நண்பனைப் பார்க்க,

கிஷோரோ கண்களில் நீர் வரும் அளவுக்கு தன் சிரிப்பை அடக்க இயலாது வலது கை விரல்களை மடக்கி வாயை மறைத்த வாறு நின்று கொண்டு இருந்தான்.

நண்பன் சிரிப்பதை பார்த்தவனுக்கு சற்று தணிந்த கோவம் மீண்டும் எழும்ப, அவனை எரிக்கும் பார்வை பார்த்தான் நந்தன்.

நண்பன் தன்னை முறைப்பதை பார்த்து , ‘ஆஹாஆஆ….. இதுக்கு மேல சிரிச்சா கண்டிப்பா சேதாரம் அதிகமாக ஆயிரும் போல தெரியுது, போதும் டா கிஷோர் கண்ட்ரோல் கண்ட்ரோல்….’ என மனதில் நினைத்துக் கொண்டு,

“சாரி டா மச்சான்….. அந்த பொண்ணு பண்ணியதை பார்த்து முடியலை டா…. செம்ம கெத்துப் போ…. “என அவளை புகழ்ந்தவன், சட்டென” ஆமா… எனக்கு ஒரு சந்தேகம் மச்சான் அது என்னன்னா….. GMனா என்ன டா?” என நண்பனின் தோளில் கை போட்ட வாறு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு தன் கேள்வியை கேட்க….

நந்தனிடம் இருந்து பாசமாக இரண்டு பரிசினை பெற்றவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு “ஏன்டா என்னை அடிச்ச? சந்தேகம் கேட்டது ஒரு குத்தமா?” என தன் முதுகை தேய்த்துக் கொண்டே கேட்டவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த வைத்தான்…

“ஹம்ம்ம்…. கொசு டா….. உன்னையும் கடிச்சுரும்மேனு லைட்டா தட்டிவிட்டேன்” என நக்கலாக கூற இப்பொழுது முறைப்பது கிஷோரின் முறை ஆயிட்ரு.

“ஏண்டா….நானே அந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா இவ்வளவு வாய் பேசிட்டு, நான் கூப்பிட்டதுக்கும் நிக்காமல் போவானு கடுப்புல இருக்கேன். நீ என்னடான்னா பல்லை காட்டி சிரிச்சுட்டு நிக்குற ” என நண்பனின் மேல் பாய்ந்தான் நந்தன்..

“அச்சோ…. என்னடா இப்படி சொல்லிட்ட நான் இவ்வளவு கஸ்டப் பட்டு பல் தெரியாமல் சிரிக்க முயற்சி பண்ணினேன். அப்படி இருந்தும் தெரிஞ்சுடுச்சா???? ” என போலியாக வருத்த பட்டவனை வெற்று பார்வை பார்க்கவும்…..

“ஓகே கூல் டா மச்சான்…. வா உள்ள போலாம் டைம் ஆச்சு, கௌதம் வந்து ரொம்ப நேரம் ஆயிருக்கும்…” என நந்தனோடு மாலினுள்ளே சென்றனர்….

எளிவேட்டரில்(elevetor) ஏறியதும் ” யாரு டா அந்த பொண்ணு இப்படி பேசிட்டு …” கிஷோர் சொல்லி முடிக்கும் முன் இடைபுகுந்தான் நந்தன்.

“என்னது பேசிட்டா? டேய் அவ கத்திட்டு போனா. கொசு காது கிட்ட வந்து பறந்தா எப்படி கொய்ங்னு சத்தம் வருமோ அப்படி இருந்துச்சு. ” கிஷோரிடம் புலம்பி கொண்டே அவன் அறியா வண்ணம் அந்த மாலினை நோட்டம் விட்டான்….

“சரி…. சரி…. யாரு அந்த பொண்ணு? அவ இப்படி பே.. சாரி கத்துறா , நீயும் சரிக்கு சமமா சண்டைக்கு நிக்குற. தெரிஞ்ச பொண்ணா?” என கிஷோர் வினவ,

மாலினுள் நுழைந்தவள் எங்கேனும் தென்படுகிறாளா என்று தன் விழிகளை அலைய விட்டவன் கிஷோரின் கேள்வியில் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு “அவ யாருனு தெரியாது”, என்று பதில் உரைத்த நண்பனை ஆச்சர்யமாக பார்த்தான்.

நந்தனும் கிஷோரும் ஒரே பள்ளியில் ஏழாம் வகுப்பில் தொடங்கி கல்லூரியிலும் தொடர்ந்து இன்றுவரை நல்ல தோழர்களாக இருப்பவர்கள்.

நந்தனுக்கு பெண் தோழிகள் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி, தொழில் ரீதியாகவும் சரி அதிகம் உண்டு தான். ஆனால் யாருடனும் தேவையற்று பேசவோ அல்லது வெளியில் சுற்றும் பழக்கமோ இருந்தது கிடையாது.

ஆனால் இன்று பொது இடத்தில் யார் என்றே தெரியாத ஒரு பெண்ணிடம் சண்டைக்கு நின்றது இதுவே முதல் முறையாக தோன்றியது கிஷோர்க்கு.

கிஷோர் தன்னை பார்ப்பதை உணர்ந்து அவன் புறம் திரும்பியவன்,” என்ன டா அப்படி பார்க்குற? “

“இல்ல, நீ அந்த பொண்ணுக்கிட்ட பேசுன விதத்தை பார்த்தா உனக்கு ரொம்ப பரிச்சயமான பொண்ணு மாதிரி தெரிஞ்சது ஆனா நீ யாருனே தெரியலைனு சொல்லுற அதான் பார்த்தேன் இது நம்ம நந்தாவானு” என்று அதிசயித்து சொல்ல

இருவரும் பேசியப் படி அந்த மாலின் இரண்டாம் தளத்தில் உள்ள காபி ஷாப்பை நோக்கி நடந்துக் கொண்டு இருந்தனர்.

கிஷோர் கூறியதின் உண்மை அப்போதுதான் உறைத்தது நந்தனுக்கு…. பார்த்து 15 நிமிடங்களே ஆனா ஒரு பெண்ணிடம் இவ்வளவு உரிமையை எடுத்துக் கொண்டு சண்டைக்கு நின்றது வியப்பை அளிக்க மீண்டும் எங்கேனும் கண்ணில் தென்படுகிறாளா என விழிகள் அலைப்பாய பின் தன் நிலைமையை உணர்ந்து இது தவறு என்று புரிந்து தன் நண்பனிடம்,

“விடுடா…. அந்த கொசுக்குட்டிய பத்தி எதுக்கு பேசிக்கிட்டு தேவை இல்லாத டென்ஷன்….. இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் ஒரு மாசம் ஃபிறீயா(free ah) இருக்கனும் டா, தொடர்ந்து வேலை வேலைனு ஓடுற மாதிரி இருக்கு” நந்தன் கூறியதை கேட்டு விஷம புன்னகை புரிந்த கிஷோர் ஒரு நமட்டு சிரிப்புடன்,

“ஆமா ஆமா, கண்டிப்பா ஒரு மாசம் ஃபிறீ (free) வேண்ணும் தான்…”என்றவன் மேலும் தொடர்ந்து “ஏன் மச்சான் ஒரு மாசம் போதுமா” என யோசிப்பது போல பாவனை செய்யவும் முதுகில் மீண்டும் இரண்டு போட்டான் நந்தன்.

நந்தனிடம் இருந்து தப்பித்து திரும்பியும் பாராது நேராக ஓடியவள் ஒரு துணி கடையினுள் சென்று ஒரு கண்ணாடி தூணின் பின் தன்னை மறைத்துக் கொண்டாள்….வேகமாக ஓடி வந்ததால் சில நொடிகள் வேக மூச்செடுத்து தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டவள் மெல்ல தன் தலையை வெளியே நீட்டி தன்னை துரத்திக் கொண்டு வருகிறானா என்று பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“சே…. அவனுக்கு வேற வேலை வெட்டி இல்ல. உன்ன துரத்துறது தான் வேலையா அவனுக்கு. நிறைய படம் பார்த்து கெட்டுப் போய்ட்டடி. இதுக்கு நீ இவ்வளவு கஸ்டப் பட்டு ஓடி இருக்க தேவை இல்லை, எனர்ஜி வேஸ்ட் டைம் வேஸ்ட் டூ டூ டூ பேட்” என புலம்பிக் கொண்டே தன் தலையில் தட்டியவள் ஈரத்தை உணர்ந்து அருகில் இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தப் போது லேசாக ஈரம் சொட்டிய தலை முடியுடன் இருக்கவும் அந்த மாலிலுள்ள ரெஸ்ட் ரூம்மிற்கு சென்றாள்.

தண்ணீரால் தன் முகத்தை கழுவியவள் நிமிர்ந்து எதிரில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தை கைப்பையில் வைத்து இருந்த டிஷுவால் துடைத்தவாறே “போட்டதே பவ்டர் மட்டும்தான் அதுவும் போச்சா…. ம்ஹம்…. ” என பெருமூச்சு விட “கவலப் படாதடி நீ எல்லாம் நேச்சுரல் பியூட்டி செல்லம் ” என தன் கன்னம் கிள்ளி கொஞ்சிக் கொண்டவள் மனதில் தன்னை நந்தா சுண்டெலி, கொசுக் குட்டி என அழைத்தது நினைவிற்கு வந்தது.

“அந்த GM க்கு கண்ணு நொள்ளைப் போல என்னை பார்த்து சுண்டெலி, கொசுக் குட்டினு சொல்லுறான் மடப்பய்யன்…..” என நந்தனை திட்டிக் கொண்டே அக்கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் முன்னும் பின்னுமாக எக்கி எக்கி பார்க்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது,” ஏய்….. என்னடி பண்ணிட்டு இருக்க இங்க??????” இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்துப் பார்த்தாள் சந்தியா.

தன்போக்கில் நந்தனை திட்டிக் கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவள் திடீரென யாரோ பேசும் சத்தம் கேட்கவும் பயந்து திரும்பி பார்க்க, அங்கு சந்தியாவையும் அவள் அருகில் ரம்யாவையும் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்…..

“லூசு.. பக்கிஸ்….., ஏன்டி இப்படி கத்துறீங்க நான் பயந்துட்டேன் அந்த GM தான் வந்துட்டானோனு….” சந்தியாவை திட்டிக் கொண்டே தன்னை மீண்டும் கண்ணாடியில் பார்க்கும் பணியை தொடர்ந்தாள்.

அதை கண்டு கடுப்பான சந்தியா,’இவளுக்காக வெய்ட் பண்ணிதான் நான் இப்படி காபியாபிஷேகம் வாங்கிட்டு நிக்குறேன். இவ என்னடான்னா ஹாயா கண்ணாடியில் அழகு பார்த்துட்டு நிக்குறா… பிக் ஆப் தி எருமை(pig of the Buffalo)’ என மானசீகமாக மனதில் தன் தோழிக்கு அர்ச்சனை செய்தாள் சந்தியா.

“என்ன பார்த்தாலும் இருக்குறது தான் இருக்கும்” என சந்தியா கூறிக் கொண்டே தன் மேல் கொட்டிய காபியை துடைக்க ஆரம்பித்தாள்.

சந்தியாவை முறைக்க அவள் பக்கம் திரும்பியவள் தன் தலையில் அறைந்துக் கொண்டு ,”இங்க வந்து கூட சாப்பிட்டுட்டே இருக்கணுமா உனக்கு….சிப்ஸ் பாக்கெட்டை உள்ள வை டி பக்கி” என ரம்யாவை கடிந்துக் கொள்ள,

“இத அப்புறம் உள்ளே வைக்கலாம் முதலில் நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு. யாரு டி அந்த GM ?” கேள்வி கேட்டாலும் அவளது வாயும் கையும் தன் வேலையை செவ்வன செய்தன ரம்யாக்கு….

“ஆமால யாருடி அந்த GM நாங்க உள்ள வந்தப்ப ஏதோ சொன்னியே…” என கேள்வியும் யோசனையுமாக சந்தியா வினவினாள்.

அதற்கு அவள் திருத்திருவென விழிக்க ” ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு என்ன களவாணித்தனம் பண்ணினேனு, இல்லாட்டி கொன்றுருவோம்” என இருவரும் சீர,

“ஹே…… நான் ஒன்னும் களவாணித்தனம் பண்ணல அவன் தான் என் இடுப்பை புடிச்சான் ” என கோவத்தில் கத்தினாள்.

“என்னது…!!!!!! இடுப்பை…!!!புடிச்சுட்டானா…..??????” என இருவரும் ஒருசேர்ந்து கோரஸ்ஸாக கேள்விக் கேட்க இல்லை இல்லை கத்த,

தனது கைப்பையில் இருந்த கீ செயினை நோண்டிக் கொண்டே தலை குனிந்து ஆம் என்பது போல் தலை ஆட்டினாள்.

“என்ன ஆச்சுன்னு தெளிவாக சொல்லுடி”என சந்தியாவும்,

“யாருடி அவன்? எப்ப புடிச்சான்? எதுக்கு புடிச்சான்?” என ரம்யாவும் கேள்வி கேட்க, அவர்களை இருகைகளையும் இடையில் கை வைத்து குறுகுறுவென அவள் பார்க்க,

“சீக்கிரம் கதைய சொல்லுடி அப்புறம் எங்களை பொறுமையா சைட் அடிச்சுக்கலாம்” வாயில் சிப்சை அடைத்து கறுக்கு மொறுக்கென சத்தம் எழுப்பியவாறு சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளை இருவரும் அடிக்க துரத்தி ரெஸ்ட் ரூமை விட்டு வெளியே வந்தனர்.

“ஏண்டா உங்க இரண்டு பேருக்கும் இவ்வளவு நேரமா இங்க வரதுக்கு??? நான் வந்து அரை மணி நேரம் ஆகுது” என சலித்துக் கொண்டான் கௌதம்.

“அது…. சார்க்கு நடுவுல கொஞ்சம் கொசு தொல்லைங்க டா. அதான் லேட் ஆயிடுச்சு” என கிஷோர் நந்தனை வார,

“என்ன ஆச்சு டா நந்தா?” கௌதம் கேள்வியாக பார்க்க,

“ம்ப்ச்ச்…. அது ஒண்ணும் இல்ல விடுங்க டா, என்ன ஆர்டர் பண்ணலாம்? நீ ஏதாச்சும் சொல்லி இருக்கியா?” என பொதுவாகப் பேசி, கௌதமிடம் கேள்வியை முடித்தான் நந்தன்.

மெனு கார்டை ஆராய்ந்துக் கொண்டு இருந்தவன் தான் கேட்ட கேள்விக்கு பதில் வராததை உணர்ந்து நண்பர்களைப் பார்த்து,

“என்ன????” என வினவ,

“அதான் நாங்களும் கேட்குறோம் என்னனு?” என இருவரும் கோரஸ்ஸாக கேள்வி எழுப்பினர்.

என்னவென்று சொல்லாமல் விட மாட்டாங்க போல என நினைத்தவன் இதுவரை நடந்த அனைத்தையும் கூறி முடித்து நண்பர்களை பார்க்க,

அவர்கள் நந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் வரும் அளவு சிரித்தனர்.

அதில் எரிச்சல் அடைந்தவன், “இப்ப எதுக்கு டா இப்படி சிரிக்குறீங்க?” என்று கேட்க,

அப்பொழுதும் பதில் கூறாமல் சிரித்துக் கொண்டு இருந்தவர்களை பார்த்து,” பதில் சொல்லிட்டு சிரிங்க டா,கடுப்பேத்துறாங்களே….. சை”என சலித்துக் கொண்டவனை பார்த்து….

கௌதம்,”எப்ப இருந்து டா இந்த சோஷியல் சர்வீஸ் பண்ண ஆரம்பிச்ச?”

கிஷோர் ,” உனக்கு இது எல்லாம் தேவையா???”என்று

இருவரும் கேட்ட கேள்வியில் உச்சக் கட்ட கோபத்திற்கு சென்றவன்,

“டேய்ய்ய்……” என கத்த,

“சரி சரி கோபப் படாத, விடு மச்சான் நல்லதுக்கே காலம் இல்ல” என கிஷோர் சமாதானம் கூறவும் வெய்டர் வரவும் சரியாக இருக்க தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்து விட்டு ப்ராஜெக்ட் பற்றி பேச துவங்கினர்.

அப்பொழுது அதே கடையினுள் அவளும் நுழைவதை பார்த்த கிஷோர், “டேய்… உன் கொசுக்குட்டி டா” என கூறி முடிக்கும் முன் நந்தன் திரும்பிப் பார்த்ததை கிஷோர் கவனிக்க தவறவில்லை.

தன்னை அறியாமல் முக மலர்ச்சியுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் தன் தோழிகளுடன் பேசியதை கேட்டு தன் மயக்கம் கலைந்தான் நந்தன்.

தனக்கும் நந்தனுக்கும் நடந்த வாக்குவாதங்களை கூறிக்கொண்டே அந்த மாலில் உள்ள ஒரு காபி ஷாப்பினுள் சென்று ஒரு டேபிளில் அமர்ந்து தங்களுக்கு தேவையானதை ஆடர் செய்து விட்டு மீண்டும் கதையை தொடர்ந்தாள்.

அவள் கூறி முடிக்கவும் அவர்கள் ஆர்டர் செய்த சண்ட்வ்விச் வரவும் சரியாக இருந்தது. ஒரு துண்டு சண்ட்வ்விச்யை கையில் எடுத்தவள்” திரும்பவும் அவன் என் கையில் கிடைச்சா….. மவனே… சண்ட்வ்விச் சண்ட்வ்விச் தான், சாஸ் சாஸ் தான்…..”

நடிகர் ராஜ்கிரண் உண்பது போல் உண்பவளைப் பார்த்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மெல்லிய குரலில் “பாவம் பையன்” என முணுமுணுத்துக் கொண்டனர்.

“என்னடி சொன்னீங்க???” தன் நினைவில் இருந்தவள் தோழிகள் பேசியதை கவனிக்க தவறினாள்.

அது அவர்களுக்கு நல்ல நேரமாக போயிற்று கடவுளின் ஆசியில்.

“ஒன்னும் இல்லடி. எப்படி அவன் இடுப்பை பிடிக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நீ சாப்பிடு ” என இருவரும் சாமாளிக்க,

“ம்ம்ம்ம்ம்ம்ம்….” என உதட்டை பிதுக்கி தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

தங்கள் அருகில் இருந்த டேபிளில் அமர்ந்து இருந்த மூவரையும் கவனியாது தோழிகள் மூவரும் பேசிக் கொண்டு இருந்ததை கேட்ட கிஷோரும் கௌதமும் சிரிப்பை அடக்க முயற்சி செய்துக் கொண்டும், நந்தன் தன் வலது கையை தலையில் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருந்தனர்.

மேலும் அரைமணி நேரம் கடந்த நிலையில், நந்தன் கையில் இருந்த கண்ணாடி குவளை உடைப்பட்டது.

இங்கு மேலும் இருந்தால் தன்னால் பிரச்சினை வந்து விடும் என எண்ணி அவசரமாக அந்த மாலினை விட்டு வெளியேறினான் நந்தன்.

உண்மையை அறியாமல் சென்றது அவன் தவறா? அல்ல அவளது விதியின் தவறா?

உன்பின்னால் சென்ற

கால்களை நண்பன் குரல் தடுக்க

மனதினை தடுக்க முடியவில்லை என்னால்

உன்னைத் தேடி அலைபாயும்

கண்கள் சொல்லும்

நான் அறியா என் மனதின் நிலையை

உன் மனதும் அறியாது

என் நிலையும் உணராது

நான் செல்ல

செல்ல கோபம் கொண்டது விதி என்மேல்

கண்டிசன்ஸ் தொடரும்….

Advertisement