UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.
அவன் பட்டும் படாமல் அளித்த இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல் செய்து சிந்திக்கும் திறனை நிறுத்தி போராட்டம் நடத்த….. தன் இயலாமையால் அவனுடன் சண்டைக்கு நின்றாள்…. அவன் கூறியதை கேட்டு அவள் யோசித்து பார்க்க, அவன் தன்னை நேரடியாக தொடவில்லை என்றதும் எவ்வாறு அதை எடுத்துக்கொள்வது என்றும் அவளுக்கே தெரியவில்லை.
“என்ன மேடம் இப்ப எல்லாம் கிளியர் ஆச்சா….?” முகத்தில் குறும்புமும், குரலில் நக்கலும் வழிய கேட்டவனை முறைத்து பார்த்தவள்,
“நீ என்னை ஏமாத்த பார்க்குற….யூ ஆர் எ சீட்…. எப்படி பார்த்தாலும் யூ கிஸ்டு மீ…. அதுவும் இல்லாமல் என் கையை பிடிச்சு இழுத்து இருக்க அப்ப அது என்ன?” என்று கோபத்தில் கத்த, பொறுமையாக அவளை பார்த்தவன்.
“நீ உன்னை தொட கூடாதுனு தான் சொன்ன உன் ஷாலை தொட கூடாதுனு சொல்லலை … நான் ஷாலை தான் தொட்டேன்…. அப்புறம் நான் உன் கை பிடிச்சு இழுத்தது தப்புனா நீயும் என் கைப்பிடிச்சு இழுத்த, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி…. நானும் தான் கண்டிஷன் போட்டு இருந்தேன்…. அப்படி பார்த்தா நீ பண்ணதும் தப்பு தான்….. ” அசால்ட்டாக கூறியவனின் கூற்றில் குழம்பிதான் போனாள் மஹா.
அவள் அடுத்து பேச வாய் திறக்கும் முன் அவனது ஃபோன் அலற. அதை எடுத்து பார்க்க தன் தந்தை என்றதும், எடுத்து பேசியவன், ஐந்து நிமிடத்தில் வருவதாக சொல்லி துண்டித்து விட. மஹாவின் புறம் திரும்பியவன் அவள் இன்னும் தெளியாததை கண்டு அவள் அருகில் நெருங்கி, “சும்மா யோசிச்சு ஒன்னும் இல்லாத உன் டாப் போர்ஷனை வேலை செய்ய வைக்காதே கொசுக்குட்டி…. என்னை சீண்டாத வரை உனக்கு பிரச்சினை இல்லை….. ” என நக்கலாக ஆரம்பித்தவன் இறுதியில் முகம் இறுக கூறியதில் ஒரு நொடி அவளுக்கு சிறு நடுக்கம் வந்தது உண்மை.
பின் காரை எடுத்துக் கொண்டு வந்தவன் அவளை ஏற சொல்லி தன் இருக்கையில் அமர்ந்த வாரே அவள் பக்கம் காரின் கதவை திறந்து விட, அவளோ ஏறாது முகத்தை தொங்க வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்….
“இப்ப ஏற போறியா இல்ல தூக்கி உட்கார வைக்கணுமா….” என்று அதட்ட இவன் செய்தாலும் செய்து விடுவான் என்று பயந்தவள் வேகமாக காரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
அவள் ஏறியதும் அவனை பார்த்து முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டவளின் செயலை கண்டு அவனது உதட்டில் ரகசிய புன்னகை பூக்க….. காரை பெரியவர்கள் இருக்கும் இடம் நோக்கி செலுத்தினான்.
பின் அனைவரும் வேறோரு கடைக்கு செல்ல, நந்தன் மஹாவை பார்த்து கண்ஜாடையில் தனியாக ‘வா’ என்று அழைத்ததற்கு முடியாது என்று மறுப்பாக தலை அசைக்க…. ‘வரவில்லை என்றால்’ என வாய் அசைவில் கூறியவன் பாதியில் நிறுத்தி தன் உதட்டை இடதுகை பெருவிரலால் யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் தேய்த்து காட்டாவும்….. அதை புரிந்துக்கொண்டவள் அவனை முடிந்த மட்டும் முறைத்தவள், வேறு வழியின்றி அனைவரையும் விட்டு சற்றே விலகி வர, நந்தனும் மற்றவர்கள் அரியா வண்ணம் சற்றே பின்னடைந்து அவள் அருகில் வந்து,
“ஒழுங்கா ஒரு மோதிரத்தை ஓகே பண்ணு… சும்மா எனக்கு இது பிடிக்கலை, அது பிடிக்கவில்லைனு சொன்ன… உன்னை நசுக்கிருவேன் கொசுக்குட்டி…” புன்னகை முகமாக அடிக் குரலில் அவளை மிரட்டி விட்டு சென்றுவிட,
அவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்…. மனம் விரும்பி சந்தோஷத்துடன் செய்யும் சிறு காரியம் கூட மனநிறைவை தரும். ஆனால் தன்னுடைய திருமணம் என்ற ஈடுபாடே இல்லாமல் இருப்பவளிடம் எதை காட்டிலும் திருப்தியாகாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இதை வெளிபடையாக யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பவளை புரிந்து கொள்ள வேண்டியவனோ மிரட்டி விட்டு செல்ல செயலற்று போனாள் மஹா.
சிறிது நேரத்தில் பல வகை மோதிரங்களை மஹா, நந்தனின் முன்பு வரிசை படுத்த. ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தவன் ஒரு மோதிரத்தை எடுத்து இது எவ்வாறு இருக்கு என்று மஹாவிடம் கேட்க…. பிடிக்கவில்லை என்றால் தேவையற்ற சண்டை வரும் என்று நினைத்து அதை நிமிர்ந்தும் பார்க்காமல் நன்றாக உள்ளது என கூறி அதையே வாங்கி கொள்ளலாம் என்றவளை வினோதமாக பார்த்து வைத்தான்.
பின் வேறோரு மோதிரத்தை காட்டி கேட்க, அதற்கும் அவள் அதே பதிலை கூற, அவன் வேறேதும் பேசாது அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்…. ஏனினில் அவன் காட்டியது தட்டையான பெரிய வடிவில் நான்கு முத்துக்கள் பதித்த மோதிரம். அது அவளது கட்டை விரலுக்கு அணிந்தால் கூட பெரியதாக தெரியும்.
அவளது பதிலில் சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க. எதற்கு சிரிக்கின்றார்கள் என்று அறியாமல் அவள் நிமிர்ந்து பார்க்க, ” என்ன மருமகளே இப்பவே தலையாட்டி பொம்மை மாதிரி அவன் சொல்லுறது எல்லாம் தலை ஆட்டுற என்ன ஏதுன்னு கூட பார்க்காம….. நீ இப்படி இருந்தா அவன் அடங்காம போயிடுவான்….நீ கொஞ்சம் மாறுவது நல்லது மா…. ” என்று பத்தா மஹாவிற்கு அறிவுரை கூறுவது போல் தன் மகனை வாரினார்…..
“ஏன்பா உங்களுக்கு…. நீங்க அம்மா கிட்ட அடிமை சாசனம் எழுதி குடுத்த மாதிரி என்னையும் மாத்த பார்க்குறீங்களே இது நியாயமா? ” என்று நந்தன் குறைபடுவது போல பாவனை செய்யவும் அவ்விடம் சிரிப்பலையில் நிறைந்தது.
அனைவருக்கும் அங்கு மகிழ்ச்சியில் திளைக்க, ஒரு ஜீவன் மட்டும் தான் மாட்டிக் கொண்டு மானம் போனதை எண்ணி, உள்ளுக்குள் அதற்கு காரணம் ஆனவனை வறுத்துக் கொண்டு, வெளியே முகத்தை சிரித்தவாறே வைத்து இருந்தாள்.
அவளது சிரிப்பில் உயிர் இல்லை என்பதை புரிந்து கொண்ட நந்தன். பெரியவர்களிடம் தாங்கள் முடிவு செய்து விட்டு கூறுவதாகவும், அதுவரை சற்று ஓய்வாக அமர்ந்து இருக்குமாறு கூற…. அவர்களும் புரிந்துக்கொண்டு சிறியவர்களுக்கு தனிமை குடுத்து சற்று விலகி நின்று நிச்சயதார்த்ததிற்கு தேவையானவற்றை பற்றி பேச தொடங்கினர்.
நந்தன் மோதிரத்தை பார்வையிட்ட வாரே மேலும் சில டிசைன்களை எடுத்து வருமாறு கூறி தங்களுக்கு தனிமையை உருவாக்கி கொண்டவன் மஹாவின் புறம் திரும்பி,
“என்ன பிரச்சினை ஸ்ரீ …” என்று மென்மையாக கேட்க,
“எதுவும் இல்லையே….” தன் குழப்பத்தை, விருப்பமின்மையை வெளி காட்டாது மறைத்தவளை பார்த்து….
“இல்ல ஸ்ரீ… உன் மனசுல ஏதோ இருக்கு. அதை என்னனு சொல்லு…. நீ சொன்ன கண்டிஷன்க்கு ஓகே சொல்லிட்டேன்…. அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க?” தன்மையாகவே அவளிடம் உறையாட,
அவனது ‘ ஸ்ரீ‘ என்ற பிரத்தியேக அழைப்பில், ஏதோ ஒன்று அவன்பால் உருகுவதை உணர்ந்தாள் மஹா. அவளுக்கு என்ன வேண்டும் என்றே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தந்தைக்காக இத்திருமணம் என்று முடிவு செய்தாக பட்டது. தன் அனைத்து கண்டிஷன்ஸ்க்கும் நந்தன் ஒப்புக் கொண்டும் விட்டான் பின் ஏன் இந்த தடுமாற்றம், விருப்பமின்மை என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“எனக்கும் தெரியலை ‘யாது’…. ஒரு மாதிரி இருக்கு…. எதுலையும் இன்டிரஸ்ட்டு இல்ல… விருப்பம் இல்லாமல் பார்க்குற அனைத்தும் பிடித்தமின்மையா இருக்கு…. ” என்று தன் மனதில் உள்ளதை பாதி மறைத்தும் மறைக்காமலும் சொல்ல,
அவள் கூறியதில் ஓர் அளவிற்கு புரிந்து கொண்டதாக நினைதத்தவன் அவளது யாது என்ற அழைப்பை உணர தவறினான். அவளும் தன் உள்ளதை முழுவதும் உரைதிருந்தாள் பின் நாட்களில் அவள் வாயில் வர போகும் வார்த்தையை தவிர்க்க அவன் செயல் பட்டு இருப்பானோ என்னவோ.
“லுக் அட் மீ ஸ்ரீ…” மிகவும் மென்மையாக பேசியவனை நிமிர்ந்து பார்க்க ஏனோ அவள் மனம் படபடத்தது.
“என்னை பாரு ஸ்ரீ…. சொல்லுறேன்ல என்னை பாரேன்…..” குரலில் உறுதியை காட்டி பேசினாலும் மென்மையாகவே பேசினான்.
மெல்ல தலை நிமிர்ந்து அவனது விழிகளை பார்த்தவளுக்கு உலகம் மறந்தது. விழிகளில் மென்மையும், அரவனைப்பையும் உணர்ந்தவள் எதுவும் கூறாது அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, ” மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத….. உன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது…..நடந்துக்கவும் மாட்டேன்…. இது உன்னோட கல்யாணம்… நம்ம கல்யாணம் அது மட்டும் மனசுல வச்சுகோ… நீ நிம்மதி இல்லாமல், விருப்பம் இல்லாமல் இருக்குறது அத்தைக்கும், மாமாக்கும் தெரிஞ்சா எப்படி சந்தோஷமா இருப்பாங்க….?”
கேள்வியாக நிறுத்தியவன் அவள் கண்ணில் பரிதவிப்பை கண்டு “ரிலாக்ஸ் ஸ்ரீ…. எதையாச்சும் நினைச்சு குழம்பாத… நீ நீயா இரு போதும்….” அவள் தவிப்பதை பார்த்து நிலை கொள்ளாமல் அவளை சமாதானம் செய்ய விளைந்த மனம் எதனால் என்று புரிந்து கொள்ளவில்லை அவனும்.
தொழில்களில் முன்னேறி வருபவன், பலரை கண்களால் எடைபோட்டு அவர்களை அதற்கு தகுந்தார் போல் கையாலுபவன். ஒரு பெண்ணின் கண்ணில் தெரியும் தவிப்பு எதனால் என்று உணர தவரினான். அவளே தன்னுடைய தேவை என்ன என்பதை உணராமல் இருக்க, எவ்வாறு அதை அவனிடம் கூறுவாள்?
“என்ன ஸ்ரீ … நான் சொல்லுறது புரியுதா…?” என்றவனை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்‘ என்று தலையை அசைத்தாள்.
பின் இருவரும் சேர்ந்து மோதிரத்தை வாங்கி முடிக்க… அதற்கு பிறகு நந்தனும், மஹாவும் வேறு எதுவும் பேசி சீண்டிக் கொள்ளவில்லை. அனைவரும் ஒரு உணவு விடுதியில் உணவை உண்டு விட்டு,மஹாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு ராமன் குடும்பம் சென்னை நோக்கி பயணம் ஆயினர். அடுத்த நிச்சயதார்த்த வேலையை பார்க்க தொடங்கினர் இரு குடும்பமும்.
அடுத்த வார புதன்கிழமை மஹாவின் வீட்டில் வைத்து நந்தனுக்கும், மஹாவிற்கும் எளிமையான முறையில் நிச்சயம் நடந்தேறியது. காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து பத்தா குடும்பமும், நெருங்கிய உறவினர்களும் வந்துவிட. நந்தன் லைட் கிரீன் மிஸ்டு கிரீம் கலரில் ஷர்டும், சாண்டல் நிற பேண்ட்டும் அணிந்து மாப்பிள்ளைக்கே உள்ள தோரணையில் இருக்க. பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு ஆர்த்தி சுற்றி வரவேற்றனர்.
ஒரு மணி நேரம் கடந்த நிலையில் 9 மணிக்கு நிச்சய பத்திரிக்கிகையை வாசித்து அவர்களது திருமணநாள் குறிக்கப் பட்டது. பின் முறைப்படி இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி கொண்டனர். அதுவரை மஹாவை காண தவித்த அவன் விழிகள் , கூட்டத்தில் ஒருவர் பெண்ணை அழைத்து வருமாறு கூற அது அவன் காதிற்கு தேன் பாய்வது போல் உணர்ந்தான். அன்று கடையில் வைத்து அவளை கண்களால் பருகியதோட சரி அதற்கு பின் வந்த இருதினங்களும் அவன் அவளை தொடர்பு கொள்ளவில்லை.
வயலட் கலரில் தங்க ஜரிகை இட்ட பட்டு புடவை உடுத்தி, அதற்கு தகுந்த அணிகலன்கள் அணிந்து, தளர பிண்ணிய கூந்தலில் மல்லிகை பூ சரத்தை சுடி, மிதமான ஒப்பனையில் தேவதையாக வந்தவளை கண்டதும் சுற்றி இருப்போர் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகி, மஹா மட்டும் அவன் கண்ணுக்கு காட்சியளிக்க இமைக்காமல் பார்த்து இருந்தான் நந்தன்.
கூட்டத்தின் நடுவில் வந்தவள், பெரியவர்களின் அறிவுரை படி, கீழே விழுந்து வணங்கி….. மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ஒரு தாம்பூலத்தில், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, நிச்சயதார்த்த புடவை வைத்து மஹாவிற்கு கொடுக்க…. அதை வாங்கியவளை , நிச்சயதார்த்த புடவையை அணிந்து வருமாறு பெரியவர்கள் கூறவும் தனதறைக்கு சென்றாள் மஹா. அதுவரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் கருத்தில் அப்பொழுது தான் பதிந்தது அவள் தன்னை பார்க்கவே இல்லை என்பது. ஏனோ நந்தனுக்கு சுருக்கென்று இருந்தது….. ஏன் என்று தான் அவனுக்கு புரியவில்லை அது காதலால் வந்த வலி என்று எப்பொழுது உணர்வானோ… ????
பத்து நிமிடங்கள் கழிய, மஹா நிச்சயதார்த்த புடவையை அணிந்து வர. அவளுக்கும் நந்தனுக்கும் மாலையை அணிவித்து மோதிரத்தை தந்து அதை அணிவிக்க சொல்ல. நந்தன் மோதிரத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர அதை அவள் கையில் அணிவிக்க வில்லை. சிறிது நேரம் காத்திருந்து பார்த்தவள்,
‘இந்த காண்டாமிருகம் என்ன பண்ணுது… மோதிரத்தை போடாம…. நானும் எவ்வளவு நேரம் தான் நல்லா பொண்ணு மாதிரி நடிக்குறது…. லூசு… கிருக்கன்…. உயிரை வாங்குறான்….. ‘ மனதினுள் திட்டிக் கொண்டு இருந்தவள் மெல்ல தலை நிமிர்ந்தி அவனை பார்க்க,
அதற்காகவே காத்துக் கொண்டு இருந்தார் போல் அவளை பார்த்து கண்சிமிட்ட….. அவனது செயலில் அவள் அப்பட்டமாக தன் அதிர்ச்சியை விழிகளில் காட்டியவளின், மைவிழி அழகில் தொலைந்தவன்…… அவள் வெண்டைபிச்சு விரல்களில் மோதிரத்தை அணிவித்து, அவளை தன் சரிபாதி என்று அறிவிக்க, தன் மனைவி என்ற முழு உரிமையை தர காத்து இருந்தான்.
அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கவும் அவளது கையை இறுக பற்ற அதில் உணர்வு பெற்றவள்… அவனை முடிந்த மட்டும் யாரும் அறியா வண்ணம் அவனை முறைத்து வைத்தாள், அனைவரும் அவர்களது விளையாட்டை கண்டு கேலி செய்யவும்….. இருவரும் அசடுவழிந்தபடி நின்று இருந்தனர்.
பின்னர் மஹாவின் கையில் மோதிரத்தை கொடுத்து நந்தனுக்கு அணிவிக்க சொல்ல. வேண்டும் என்றே அவனுக்கு வலிக்கும் படி மோதிரத்தை போட்டு விட்டவள், முகத்தில் எதுவும் காட்டாமல் புன்சிரிப்புடன் இருந்தவனை கண்டு மஹாவிற்கு தான் சந்தேகம் எழுந்தது,
‘ உண்மையாவே வலிக்கலையா இல்ல வலிக்காத மாதிரி நடிக்குறானா ? டேய் காண்டாமிருகம் நடிக்காத டா …‘ மனதில் தீவிர யோசனையில் இருக்க, அடுத்தடுத்த சடங்குகள் அவளது தீவிர ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
நிச்சயதார்த்தம் இனிதாக நிறைவு பெற, அடுத்து பந்தி ஆரம்பம் ஆனது.
வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் கூடாரம் அமைத்து அங்கேயே விருந்துக்கும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருக்க, இருகுடும்பமும் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே என்பதால் இதுவே போதுமானதாக இருந்தது.
மஹா தன் அறையின் பால்கனியில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்க, அவளிடம் பேச எண்ணி நந்தன் அவள் அறைக்கு சென்றான் ஆவலாக. இவனை கண்டதும் அனைவரும் சத்தம் எழுப்பாமல் வெளியே சென்றுவிட. அவர்கள் சென்றதும் கதவை லேசாக சாத்தியவன் பால்கனியின் காதவில் சாய்ந்து நின்று அவள் கீழே வேடிக்கை பார்க்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான் ஓசையின்றி.