Advertisement

UD  27 (2)

கூறுக்கெட்டவளேஎன்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியேலூசுலூசு…’ என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்

 

இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது… ‘அய்யோ.. இவ தெரிஞ்சு பேசுறாளா இல்ல தெரியாமா பேசுறாளான்னு தெரியலையேசும்மா கன்னத்தை தொட்டதுக்கு ஏதோ ரேப் பண்ண ரேன்ஜுக்கு பேசுது லூசு… ‘ என்று தன்னவளை மனதில் அர்ச்சித்து கொண்டிருக்கையில் நண்பனின் சந்தேக பார்வையை கண்டும் காணாமல் தலையை திருப்பிக் கொண்டான் கவியழகன்

 

ஏய்இங்குட்டு பாருதேவையில்லாம என்ற அண்ணன பத்தி தப்பா பேசுற வேலைய வச்சுகிட்டா கொல விழும்…”என சைந்தவி மிரட்ட,

 

உண்மைய சொன்னா கொல பண்ண வருவீகளா…? செரிநான் சொன்னது உண்மையா பொய்யானுட்டு உன்ற அண்ணனையே கூப்பிட்டு கேளுஎன்னைய கரும்பு காட்டுக்குள்ள இழுத்துட்டு போனாரா இல்லையான்னுட்டு…?” என சவால் விட,

 

சுத்தம்என் மானத்தை வாங்காம விட மாட்டா இவ…” என பல்லை கடித்தான் கவி

 

உன்னைய நம்பி நான் எல்லாம் என்ற அண்ணன கேள்வி கேட்டு சங்கடத்த உண்டாக மாட்டேன்எங்களுக்கு என் அண்ணன பத்தி தெரியும்நீ உன்ற ஜோலியா பார்த்துட்டு போ…”

 

பின்ன போவாமாஇங்குட்டே நின்னு சேவகம் பண்ணுவேனுட்டு நினைச்சீகளோஉன்ற அண்ணன பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது பாப்பாநீ இன்னும் வளரணும்…” என்றவள் தலையை ஸ்டைலாக சிலுப்பிவிட்டு, திரும்பி நடக்க போனவள் நின்றாள் ஏதோ யோசனை முகத்துடன்

 

இடது கையை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து கடித்தபடி திரும்பிய குழலியின் பார்வை இப்பொழுது அங்கு நின்றிருந்த சமையல்கார பெண்ணை பார்த்து பார்வையால் அளந்தாள்

 

இங்குட்டு வா…” என்று அழைத்தவளை பார்த்து திருதிருவென விழித்தப்படி குழலியின் அருகில் வர, காயத்ரியும் சைந்தவியும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு குழலியை பார்த்தனர்

 

அவளோ அருகில் வந்தவளின் தோளில் வலது கையை மடக்கி வைத்து கொண்டு, அவளை பார்வையால் அளந்தபடி, “ஆமா நீத்தேன் இந்த வீட்டோட ஆல் இன்டியா ரேடியோவாமேஅப்படியா…? ஊருக்குள் பேசிக்குறாக…” என்று போலி ஆச்சரியத்தோடு சந்தேகமாக கேட்க, காயத்ரி சைந்தவிக்கு அப்படி ஒரு  அதிர்ச்சி, அந்த பெண்ணுக்கோ வயிற்றில் புளியை கரைத்தது போல் இருந்தது அவளது முகம்….

 

பின் இங்கு நடக்கும் விஷயத்தை எல்லாம் கலந்து ஆலோசித்து தன் கருத்து கணிப்பை நடத்தவில்லை என்றாள் அவருக்குத்தான் தூக்கம் வாராதே

 

என்ன பதில காணோம் அப்படியானுட்டு கேட்க்குத்தேன்ல…?” என்று லேசாக முகத்தை இறுக்கமாக்கி, குரலை உயர்த்தி பூங்குழலி கேட்கவோம்,

 

பயத்தில், “அதுவந்து…” என நாக்குழற, பயத்தில் வேர்த்து கைகள் நடுங்கி நின்றிருந்தார்பின்னே ஆம் என்று ஒத்துக்கொள்ளவா முடியும் ஊரில் பெரிய மனதிர் முருகவேல் அவரையே ஒருவழி ஆக்கி விட்டாள்

 

அதுமட்டுமின்றி அவளது வரலாறு தான் ஊர் அறிந்த விஷயம் ஆயிற்றேஎங்கு சிக்கிக் கொள்வோமோ என்ற பயம் அதிலும் காயத்ரி, சைந்தவி தன்னை முறைத்துக் கொண்டிருப்பது இன்னைக்கு உன்ற ஜோலி தீந்துச்சு டி…’ என எண்ண வைத்தது

 

அவளது முழியை சில நொடிகள் அமைதியாக பார்த்துவிட்டு, அவளிடம் இருந்து விலகி நின்றவள் இடுப்பில் ஒருகையை வைத்துக் கொண்டு, “இம்புட்டு நாள் நீ பண்ண சேவை போதும்….” என்று சொல்லி முடிக்கும் முன் பதறி விட்டார் அந்த சமையல்கார பெண்

 

ஆத்திநாங் பண்ணது தப்புத்தேன் பாப்பாஎன்னைய…” என முழுதாக மன்னிப்பு கேட்க விடவில்லை பூங்குழலி

 

என்னவேஎன்ன சொன்னபாப்பா…? ஏன் எங்கைல ஒரு குச்சி முட்டாய குடுத்து விடுறதுஆளையும் மொகறையும் பாரு…”என கோபமாக கேட்கவுமே சைந்தவி லேசாக சிரித்துவிட்டாள் அதில் இன்னும் கடுப்பான குழலி,” நான் இந்த வீட்டோட மருமகஇனி இந்த வீடு , சொத்து, ஏன் இங்குட்டு இருக்க ஆளுங்க கூட எனக்கு சொந்தமானதுஇனி இங்குட்டு நான் என்ன சொல்லுத்தேனோ அதையத்தேன் செய்யணும்புரிஞ்சுதா…?” என குரலை உயர்த்தி பேசியவள் ஓரகண்ணில் காயத்ரி சைந்தவி இருவரையும் பார்த்துவிட்டு மிதப்பான பார்வையில்,

 

இனி நான் பேசும் போது குறுக்க பேச கூடாதுபுரிஞ்சுதா…?” என குரல் உயர்த்தி கேட்கவும் அப்பெண் வேகமாக மண்டையை சரிஎன்பதை போல் ஆட்டமேலே தொடர்ந்தாள் பூங்குழலி,

 

இனி இந்த ஆல் இன்டியா ரேடியோ ஜோலிய விட்டுறணும்னு சொன்னேன்இங்குட்டு வந்தா உன்ற ஜோலிய மட்டுந்தேன் பார்க்கணும்உங்காதுலையோ இல்ல கண்முன்னாடியோ எது நடந்தாலும் உன்ற கருத்துல அது பதியவே கூடாதுஎதாச்சும் ஒரு விஷயம்…. அது மேச மேல இருந்து குண்டுசி விழுந்துச்சுன்னு கூட எந்த சேதியும் இனி இந்த வீட்டு வாசபடிய தாண்ட  கூடாதுஎன்னவே புரிஞ்சுதா…?” என பேசியவளிடம் அத்தனை ஆளுமைஅதை அங்கு அறையில் இருந்த மூவரோடு வெளியே நின்றிருந்த ஆண்கள் இருவருக்கும் தெளிவாக தெரிந்தது

 

பின் அவளது மாமியாரின் புறம் திரும்பியவள், “இங்குட்டு பாருங்க மாமியாரேநான் பண்ணது தப்புத்தேன் அதுக்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதுஅன்னைக்கு கைய புடிச்சு இழுக்காட்டியும் அதுக்கு முந்த என்ற கைய உங்க அரும மவன் இழுத்தது நெசம்ஆக அம்புட்டும் சரியா போச்சுஇனி என்னைய அதைய சொல்லி மெரட்டணும் திட்டணும்னு நினைச்சீக பொறவு நாங் சும்மா இருக்க மாட்டேன்சொல்லிப்புட்டேன்… ” என்று தன் தவறை ஒரு தோரணையுடன் தெரிவித்தவள் சைந்தவியின் புறம் திரும்பி,

 

என்ன என் ஐத்த மகளே இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா ஜோலி ஆகுமாவெரசா சமையல முடிச்சுட்டு சொல்லுவேபசில வயத்துக்குள் பூன பானைய உருட்டுறாப்புல்ல இருக்கும்ம்ம்வெரசா பண்ணு அம்புட்டையும்…” என்று அதிகாரம் பண்ணிவிட்டு தலையை சிலுப்பியவள், நிமிரந்த நடையுடன் சமையலறையை விட்டு வெளியேறினாள்

 

பூங்குழலி வெளியே வர போகிறாள் என்றதும் ஆண்கள் இருவரும் அவசரமாக தாங்கள் நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்து மறைந்துக் கொண்டனர்

 

இவர்கள் நிற்பதை கவனிக்காமல் அவர்களை தாண்டி சென்றாள் பூங்குழலிஅவள் சென்றதும், விக்கி சிஸ்டர் ஒரு ஃபாரம்ல தான் இருக்காகேர்புல் மச்சான்இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதுன்னுட்டு தெரியலம்ம்ம்…”என்று செல்லும் பூங்குழலியை பார்த்தபடி சொல்ல, கவியழகன் அதற்கு எவ்வித பதிலும் சொல்லாது தன்னவளையே பார்த்திருந்தான்

 

பார்க்கலாம் டிநீ என்னதான் பண்ணுறன்னு…’என்று எண்ணியவன் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை

 

சமையலறையில் சைந்தவி, “என்ன ஆத்தா இதுஇப்படி அதிகாரம் பண்ணிட்டு போறாநீயும் சும்மா நின்னுட்டு இருக்கவ…” என்று கோபமாக சிணுங்க,

 

விடு புள்ள பார்த்துக்கலாம்இப்பத்தேனே வந்திருக்காஅத்தேன் துள்ளுதாஎத்தன நாளைக்குத்தேன் முடியும் இது அம்புட்டும் ஒரு நாள் அடங்கும் அப்ப பார்த்துக்குத்தேன்….என்றவர் சமையல்கார பெண்ணின் புறம் திரும்பி,

 

கோபமான பார்வையில், “அப்ப இத்தன நாள் இதையத்தேன் பண்ணிட்டு இருந்திருக்கவ…?” என கேட்கவும்,

 

இல்ல ஆத்தாஇனி இப்படி ஆகாதுஅதுக்கு நாங் உத்தரவாதம் தாரேன்…. என்னைய மன்னிச்சுருக….” என்று கைக்கூப்பியவளை கோபமாக பார்த்து வைத்தார் காயத்ரி

 

ம்ம்ம்…. இப்பவே உன்னைய விரட்டிவுடுவேன்… ஆனா உங்புள்ள முகத்துக்காண்டி பார்க்குத்தேன்…. இனி ஒருதரம் இப்படி எங்காதல விழட்டும் பொறவு தெரியும் சங்கதி…” என்று எச்சரித்தவர், “ஜோலிய பாரு…” என்று அதட்ட,

 

மன்னிச்சுருங்க ஆத்தா….இனி இத போல நடக்காது ஆத்தா…என்றவர் அதன் பின் வேலையை தவிர வேற எந்த இடத்திலும் அவள் அனாவசியமாக பேசவும் இல்லை நிமிரந்து பார்க்கவுமில்லை...

 

வெளியே ஆண்கள் தங்கள் யோசனையில் இருக்கையில் விக்கியின் அலைபேசி அலறி தன் இருப்பை காட்டியது

 

அதை உயிர்ப்பித்தவன், “ம்ம்ம்… “

 

“…..”

 

ஓகே ஃபைன்நான் பார்த்துக்குறேன்நீங்க கிளம்புங்க…. ” என பணிந்துவிட்டு, அழைப்பை துண்டித்தான் ஒரு பெருமூச்சுடன்

 

சோபாவில் முகம் இறுக, எங்கோ இளக்கில்லாமல் வெறித்தபடி சிந்தனையில் இருந்தவனின் அருகில் சென்று அமர்ந்தான் விக்னேஷ்

 

பூங்குழலியை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தவனின் தோள் தொட்ட விக்கி, “என்னடாயோசனை எல்லாம் பலமா இருக்கு….?”

 

வேற எத பத்தி நான் யோசிக்க போறேன்எல்லாம் அந்த வாயாடிய தான் என்ன பண்ணுறதுன்னு யோசிக்குறேன்….” என சலுப்பாக பதிலுறைத்தவனை தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்த விக்கியை,

 

என்ன டா மச்சான்சொல்லு… ” என்று ஊக்குவிக்க, அவனை பார்த்து சினேகமாக ஒரு புன்னகையை உதிர்த்து,

 

இதுக்கு மேல சிஸ்டர் கூட சண்டைய வளர்க்காத டாஎனக்கு தெரிஞ்சு இந்த வீட்டுல சிஸ்டர்க்கு சப்போர்ட்ன்னு சொல்லிக்க நீ மட்டும் தான்சிஸ்டர் கொஞ்சம் வாலு தான் ஆனா நல்ல டைப்ன்னு தோணுது…” என்றவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்து,

 

கொஞ்சம்வாலா…?” என்று இழுத்து கேட்டுவிட்டு, “ஏன்டாஇப்படி அபத்தமா பேசுறா…?” என நண்பனை அடிக்க போகவும்,

 

ஓகே ஒகே தப்பு தான் தப்பு தான் கொஞ்சம் இல்ல ரொம்ப வாலு தான்…” என உண்மையை ஒப்புக்கொண்டு,

இதுக்குமேல உங்க லைப் நீங்க வாழணும்பழிவாங்கணும்னு சுத்திட்டு இருக்காதீங்கஅது ரெண்டு பேருக்கும் நல்லது இல்லசிஸ்டர் தப்பே பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தப்ப பக்குவமா எடுத்து சொல்லு அதுதான் நல்லதுஎன்னதான் அத்த மகளா இருந்தாலும் உங்க அப்பா எதோ எதிர் நாட்டு எதிரி மாதிரி பார்த்துட்டு சுத்துராங்கஆண்ட்டி சைந்துவும் பெருசா பாண்டிங் இருக்குற மாதிரி இல்ல சோ நீதான் பார்த்துக்கணும்…” என்று நீளமாக தீவிரமான முகத்துடன் பேச, அவனையே புருவம் சுருங்க பார்த்திருந்தான் கவியழகன்

 

அவனது பார்வையை உணர்ந்து, “ஏன்டா எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் உன் ரியாக்ஷனே சரியில்லையே…?” என கேட்கவும்,

 

அதான் டா நானும் யோசிக்குறேன்உன்கிட்ட ஏதோ சரியில்லன்னுரொம்ப பேசுறஅதுவும் சீரியஸா பேசுறஅதுதான் இடிக்குது…” என அவனை பார்வையால் அளந்தபடி தடையை தடவவும் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் விக்கி

 

ஏனோ கனிமொழியின் நினைவில் அவனது இதயம் ஒரு பக்கம் கனத்தாலும், மறுபுறம் கோபம் அவன் நரம்புகளை புடைக்க செய்தது

 

அப்பொழுது அங்கு வந்த சைந்தவி, “என்ன பண்ணுதாக என்ற அண்ணனுங்க ரெண்டு பேரும்தங்கச்சி கஷ்டப்பட்டு சமைக்குத்தேனே ஏதாச்சும் உதவி பண்ணுவோம்முட்டு இருக்கா…”என்று குற்றப்பத்திரிகை வாசித்தபடி வந்தவள், அவர்களுக்கு எதிர் இருக்கையில் சோர்வாக அமர, கவி

 

ஆமா சுடுதண்ணி காய வச்சு இருப்பஅதுக்கு சமைச்சேன்னு பெரும வேற…”என்று கிண்டல் அடிக்கவும் விக்கி கண்ணிற்கு எட்டாத ஒரு சிறு புன்னகையை சிந்த

 

கவியின் வார்த்தையில் வெகுண்ட சைந்தவி, “அண்ணே…. ” என பல்லை கடித்து உறுமியபடி எழுந்து நின்று அவனை முறைத்தவள் அடுத்து பேச இல்லை திட்ட முற்ப்பட்ட பொழுது அங்கு வந்தான் குமார்

 

சின்ன அய்யா…” என பவ்யமாக அழைக்க, அனைவரது பார்வையும் அவனிடம் திரும்பியது

 

கவி, “சொல்லு குமாருஎன்ன விஷயம்…?”

தொடரும்

 

Advertisement