Advertisement

UD:27  

தன் அறையில் அத்தனையையும் பேக் செய்து முடித்த விக்கிக்கு மனம் ஒருநிலையில்லாது தவித்ததுஉள்ளுக்குள்ளோ கோபம் எரிமலை போல் கனன்று கொண்டிருக்கஇன்னும் ஒருதரம் மீண்டும் அவளை கண்டால், இருக்கும் கோபவத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாது செய்துவிடுவோம் என்று எண்ணியவனுக்கு தன்னை குறித்து அத்தனை அவமானமாக இருந்தது

 

சை….’ என்று காற்றில் கையை உதற்றியவன் இருகைகளாலும் தன் தலையை கோதியபடி படுக்கையில் அமர்ந்து, கைவிரல்களை கோர்த்து கால் முடியில் கைகளை ஊன்றியபடி தலைகுனிந்திருந்தவனின் உள்ளம், ‘தப்பு பண்ணிட்டேன் டிஉன்ன காதலிச்சு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்இனி என் வாழ்க்கைல உன்ன பார்க்கவே கூடாதுஎன் காதலுக்கு தகுதியானவ நீ இல்ல கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்டல… சே…என்று எண்ணியவனுக்கு ஏதோ அந்த அறையிலிருப்பது மூச்சு முட்டுவதை போல் இருந்தது… மீண்டும் மீண்டும் கனிமொழியின் எண்ணம் அவனை ஆழி பேரலையாய் அவனை மூழ்கி கொல்ல பார்த்தது… அந்த கணமான சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் திணறியவன் எழுந்து வெளியே வந்தான் மனதை திசை திருப்ப

 

என்ன பண்ணுறா இவ…’ தூணை இடது கையால் கட்டி கொண்டு, வலது கை விரல் நகங்களை கடித்துக் கொண்டிருந்த மணையாளை பார்த்து சுவர் ஓராமாய் பதுங்கி நின்றிருந்தான் கவியழகன்….

 

படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்த விக்கி, சுவர் ஓரமாய் புருவம் சுருங்க கூர் பார்வையுடன் நின்றிருந்தவனை கண்டு துணுக்குற்று, சத்தமிடாது அவன் அருகில் சென்று அவன் பார்வை நிலைத்திருக்கும் திசையை நோக்கி தன் பார்வையை செலுத்தினான்

 

அங்கு நின்றிருந்த பூங்குழலியை கண்டு, நண்பனின் புறம் திரும்பி அவன் தோள் தொட, தீவிரமாக மணையாளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தவனுக்கு தோளில் பட்ட ஸ்பரிசத்தில் தூக்கிவாரி போட, அதிர்ந்து திரும்பி பார்த்தவன் விக்கியை கண்டதும் ஒரு நம்மதி பெருமூச்சை விட்டான் நெஞ்சில் கை வைத்து

 

என்னடா தாலி கட்டுன பொண்டாட்டிய இப்படி திருட்டுதனமா சைட் அடிச்சுட்டு இருக்கவெட்கமா இல்ல தூ…” என பாக்கவாட்டில் துப்ப கவியோ கடுப்பாகி போனான்

 

டேய்….” என ஏதோ கெட்ட வார்த்தையில் திட்ட வந்தவன் கொலுசு சத்தம் கேட்கவும் திறந்த வாயை பட்டென மூடிவிட்டு, அவசரமாக திரும்பி பூங்குழலியை பார்த்தான்

 

விக்கியோ மீண்டும் அவன் தோள் சுரண்ட, “ம்பச்ச்டேய் கொஞ்சம் மூடிட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க விடுஅவ ஏதோ பிளான் பண்ணுற என்னனுட்டு தெரியலசோ கொஞ்ச நேரம் என்னை டிஸ்டர்ப் பண்ணாத…” என்று மெல்லிய குரலில் நண்பனிடம்  கோபமாக கெஞ்சி விட்டு, தன் பார்வையை மனைவியின் புறம் செலுத்தினான்

 

விக்கியோ, “பாவம் அந்த புள்ள இவ்வளவு பெரிய வீட்டுல தனியா  என்ன பண்ணுறதுன்னு தெரியாம இருக்குஏன் இப்படி எல்லாத்தையும் தப்பாவே பார்க்குற… ” என நண்பனை குற்றம் சாட்ட, திரும்பி பார்த்து ஒரு முறைப்பை பதிலாக தந்ததவன் வேறேதுவும் பதில் பேசவில்லை

 

விக்கியும் ஒருமுறை பூங்குழலியை பார்க்க, அவளோ இப்பொழுது சேலை முந்தானையை திருகியபடியும், உதட்டை கடித்தும் பின் பார்வையை சுற்றி சுழல விட்டும் மெதுவாக சமையலறையை நோக்கி நடந்தாள்

 

சாதாரணமாக இருந்தால் விக்கிக்கு எதுவும் வேறுபாடாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அவளது தயக்கம் திருட்டு முழி அவனை உன்னித்து கவனிக்க செய்ததுஅதே எண்ணத்தில் தான் கவியும் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

சமையலறை வரை சென்றவள், நகத்தை கடித்தபடி போலாமா வேண்டாமாம்ம்ம்….” என்று ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்

 

சில நொடிகளுக்கு பின், “போவோம்என்ன நடக்குதுன்னுட்டுத்தேன் ஒருகை பார்த்துடுவோமே…” என்று முனுமுனுத்தவள் இப்பொழுது சற்று தைரியம் வர, நிமிர்ந்த நடையுடன் சமையலறையினுள் நுழைந்தாள்

 

அவளை தொடர்ந்து கவியும், விக்கியும் சமையலறை வாசலில் யாரும் பார்க்காத வண்ணம் மறைந்து நின்றனர்…. என்ன நடக்க போகிறது என்று பார்க்கும் ஆர்வம் இருவருக்கும்

 

சமையலறைக்குள் இரண்டடி தைரியமாக எடுத்து வைத்தவள் பின் தயங்கி தயங்கி நுழைய, காயத்ரியும் சைந்தவியும் சமையல் செய்யும் ஒருவரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்பூங்குழலி வந்ததை எவரும் கவனிக்காது இருந்தது அவளுக்கு இன்னும் சங்கடமாக இருந்தது

 

என்ன இவீக கண்டுக்கவே மாட்டீகிராகஎப்படி கூப்பிடவளைய சத்தம் குடுப்போமாசேநீ  என்ன புள்ள உங்புருஷனையா கூப்பிடுதபேசாம வாய திறந்தே கூப்பிட்டுருஅத்தேன் மருவாதையும் கூடபோதா குறைக்கு தப்பு வேற பண்ணியிருக்கசும்மா வெளாட்டுக்கு மவன கொற சொன்னாலே வாரி வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாக, இப்ப நீ பண்ணிருக்க இருக்க சோலிக்கு சும்மா இருப்பாகளா…? தகிரியமா பேசு புள்ளஇந்த வூட்டுலத்தேன் நீ வாழ்ந்தாகணும்…’ என தனக்குள் யோசித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீர் எடுக்க திரும்பிய சைந்தவி அறை வாயிலில் பூங்குழலி நின்றிருப்பதை பார்த்து புருவம் சுருக்கினாள்

 

இவ இங்குட்டு என்ன பண்ணுதா...?’ என்னும் தோரணையில் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து ஏளனமாக ஒரு பார்வையை குழலியின் மேல் படர விட்டாள்

 

இதை தலை குனிந்து தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த குழலி கவனிக்ககாமல் விட்டது சைந்தவியின் நல்ல நேரம்தான்ஆனால் மறைவில் நின்றிருந்த ஆண்கள் இருவரும் இதை கண்டதும் ஒரே எண்ணம் தோன்ற ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….

 

மச்சான்…. இந்த வீட்டுல உன் மண்ட நசுங்க போறது உறதி…”என்று அவன் தோளை பலமாக இறுக்கி பிடித்தான் விக்கி

 

அதில் லேசாக வலி எடுக்க, அவனை முறைத்துக் கொண்டே அவன் கையை தட்டிவிட்டவன், “மண்ட நங்குறதுக்கு முன்னாடி என் கைய நசுக்காத டா நாயே…” என்று மெல்லிய குரலில் பல்லை கடித்துக் கொண்டு கூற,

 

சாரி மச்சான்…” என கடமைக்கு கூறிவிட்டு உள்ளே கவனத்தை செலுத்தியவனை முறைத்த, கவி

 

எல்லாம் நமக்குன்னு கரெக்டா வந்து சேருறாங்கசே…” என முனுமுனுத்தபடி தலையை சமையலறை புறம் திருப்பினான்

 

பூங்குழலியை ஒரு பார்வை பார்த்த சைந்தவி, திரும்பி முழங்கையால் அருகில் இருந்த தன் அன்னையை இடித்து சைகையில் பின்னால் நிற்கும் பூங்குழலியை சுட்டிக்காட்டினாள்

 

மகளின் சைக்கை புரிந்து, திரும்பி பார்த்த காயத்ரி தலை குனிந்து நிற்கும் பூங்குழலியை தன் பார்வையால் அளந்தார் கோபமாக….

 

பின், “என்னடி மா ராசாத்தி…. என்ன காத்து இங்குட்டு வீசுது…?” என்று நக்காலக கேட்க, தன் சிந்தனையில் இருந்தவள் தீடிரென கேட்ட கனீர் குரலில் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் காய்த்ரி அவளை முறைத்துக் கொண்டிருப்பதை கண்டு, என்ன பதில் சொல்லவது இல்லை என்ன பேசுவது என ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்க, காயத்ரியே மேலே தொடர்ந்தாள்

 

மகாராணிக்கு ஏதாச்சும் வேண்ணுமா…? எதுவா இருந்தாலும் சொல்லுங்க நாங்க செஞ்சு குடுக்கோம்….” என்று முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு கேட்க,

 

மெல்லிய குரலில் தயங்கி, “இல்ல அத்தநாங் ஏதாச்சும் உதவி பண்…”என முடிக்கும் முன் காயத்ரி,

 

ஆத்திஎனக்கு எதுக்குமா வம்புஉன்னைய வேல செய்ய சொல்லிப்புட்டு, பொறவு உன்ற ஜெயசீலன் மாமன் பஞ்சாயத்த கூட்டவாவேண்ணா டி ராசாத்திநீ ஒண்ணும் பண்ண வேண்ணாம்…”என்று கழுத்தை தோள் பட்டையில் இடித்துத் சொல்ல, பூங்குழலிக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது….

 

ஆனால் அதை காயத்ரி கண்டுக்கொள்ளவே இல்லைதிரும்பி தன் வேலையை பார்த்துக் கொண்டே சைந்தவியிடம், “ஒனக்கு ஒண்ணு தெரியுமாஇந்த மகாராணி சிறுசா இருக்கும் போதே நினைச்சேன்இதைய எம்மவன் தலைல கட்டிட கூடாது , பாவம் அவங் வாழ்க்க நல்லா இருக்கோணும்ன்னு, ஆனா விதிய யாராலா மத்த முடியும்இதைய கூட வச்சுக்கிட்டு நாங் மல்லு கட்டணும்னு இருக்கு ம்ம்ம்ஒரு நல்லா பொண்ணா  வூட்டுக்கு மருமக கிடைக்கணும்னா அதுக்கெல்லாம் ஒரு குடுப்பன வேண்ணும்….”என்று அலப்பாக சொல்லவும், அவ்வளவு தான் பொறுமை எனக்கில்லை என்றானது பூங்குழலிக்கு,

 

என்ன மாமியாரேரொம்பத்தேன் பேசுதீகஅப்படி என்ன நாங் நல்லா பொண்ணா இல்லாம போயிட்டோம் உங்க கண்ணுக்கு…?” என்று குரலை உயர்த்தி நிமிர்ந்து நின்றவள்,தயக்கத்தில் திருகி கொண்டிருந்த முந்தானையை இப்பொழுது இழுத்து, இடுப்பில் சொருகி கொண்டவள், காயத்ரியுடன் வாய் சண்டையில் இறங்க தயாரானாள் குழலி

 

மச்சான்இதுதான் மாமியார் மருமக சண்ட போலம்ம்ம்உனக்கு இனி நல்லா டைம்பாஸ் ஆகும்…. என்ஜாய் டா நண்பா…” என்று கவியழினை வார, அவனை திரும்பி பார்த்து முறைத்தவன்

 

ஏன் டா முறைக்குற…? உண்மையத்தானே சொன்னேன்வைஃப்க்கு சப்போர்ட் பண்ணுறதா இல்ல அம்மாக்கு சப்போர்ட் பண்ணுறதான்னு தெரியாம உன் மண்டை நடுவுல உருள போகுது…” என்று தன் வேதனையை குழலியின் அட்டகாசத்தில் மறந்து நக்கலாக சிரித்து வைக்க,

 

ரொம்ப சிரிக்காத நாயேநான் எதுக்கு அந்த திமிர் பிடிச்சவளுக்கு சப்போர்ட் பண்ணனும்…? நான் என் அம்மா சைட் தான்…” என்று அசால்ட்டாக கூறவும்,

 

அடப்பாவிஅந்த புள்ள பாவம் டா…”

 

யாரு இவளா…? கொஞ்சம் ஏமாந்தா ஊரையே வித்துருவா டா லூசுஅப்புறம் இன்னொரு விஷயம்பியூசர்ல உனக்கு இந்த நிலம வர சான்ஸஸ் அதிகம் ராசாசோ கொஞ்சம் அடக்கி வாசி… ” என்றுவிட்டு திரும்பிவிட, விக்கியின் முகத்தில் சட்டென இருள் சூழ்ந்தது

 

சேஅவள நினைக்காத டாஉலகத்துல இவ மட்டும் தான் பொண்ணாதகுதியில்லாத இடத்துல அன்பு செலுத்துறது முட்டாள்தனம்…’என்று மீண்டும் மீண்டும் மனதில் உருப்போட்டுக் கொண்டவன், முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நண்பனுடன் சமையலறையை நோட்டம் விட்டான்

 

அதற்குள் இருவருக்கும் வாய் சண்டை முற்றியிருந்தது…”இங்குட்டு பாருங்க மாமியாரேசும்மா என்னையவே கொற சொல்லுறதைய நிப்பாட்டுகஎன்னமோ நாந் மட்டும்த்தேன் பொய் சொல்லி கண்ணாலம் கட்டிக்கிட்ட மாதிரி கத்துறீகஆமா நாங் சொன்னது பொய்த்தேன்இப்ப என்னாங்கிறீங்க அதுக்கு...?” என கேள்வி கேட்டபடி காய்த்ரியை பார்த்து கையை மடக்கி  கோபத்தில் உண்மையை போட்டுடைக்க, சமையலறையில் இருந்த மூன்று பெண்மணிகளும் அதிர்ந்து சிலையேன நின்றுவிட்டனர் அவளது வார்த்தையில்

 

ஆனால் வெளியே கவியழகனோ சற்று நிம்மதியாக உணர்ந்தான்அன்னையும் தங்கையும் எங்கு தன்னை தவறாக எண்ணி இருப்பார்களோ என்று மனவருந்தியவனுக்கு இப்பொழுது இவள் வாயால் உண்மை வரவும் சற்று ஆசுவாசமானான்

 

ஆனால் விக்கியோ, “டேய் மச்சான்அப்ப உண்மையா நீ ஒண்ணும் பண்ணலையா…?” என தீவிரமான முகத்துடன் கேட்க, “ஏதாச்சும் கேவலமா சொல்லிட போறேன்என்னைய பார்த்தா அப்படியா தெரியுது…” என்றவனை பார்த்து நக்கல் சிரிப்பொன்றை சிந்திய விக்கி,

 

மச்சான்எனக்கு தெரிஞ்சு நீ கேப்ல கெடா வெட்டுறவன்அப்புறம் எப்படி டா நம்பாம இருக்க முடியும்…?”என அவனிடம் நியாயம் கேட்க, கவி தன் நெற்றியில் அரைந்து கொண்டான் தன் நிலையை எண்ணி

 

அப்பொழுது அனைவரையும் கண்ட பூங்குழலி, “என்னத்துக்கு இப்படி முழிச்சு முழிச்சு பார்க்குதீக…? ஆமா நாங் பொய் சொன்னேன் தான்ஆனா அம்புட்டும் பொய்யில்ல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கு…”என்று எங்கோ பார்த்து சொல்ல,

 

அப்படி என்ன உண்மை மேடம்…?” என சைந்தவி எகத்தாலமாக கேட்கவும், அதில் கடுப்பான குழலி என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல்,

 

அன்னைக்கு வேண்ணா தப்பா நடந்துக்காம இருந்திருக்கலாம்ஆனா உங்க மவன், உன்ற நொண்ணன் ஒண்ணும் அம்புட்டு நல்லவிய கிடையாதுஅதுக்கும் முந்தி கரும்பு காட்டுக்குள்ள என்னைய இழுத்துட்டு போய் என்ன பண்ணாகன்னுட்டு தெரியுமா….?” என்று ஒரு ஆவேசத்தில்  கேட்டு விட, காயத்ரியின் கண்கள் இன்னும் விரிந்து, அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்  இவள் என்ன சொல்கிறாள் என ஏதோ புரிந்து

 

அவரது ரியாஷனை உற்று பார்த்த பின்தான் பூங்குழலி தான் சொல்லவந்தது எவ்வாறு அர்த்தம் ஆகியுள்ளது என்று புரிந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்….

Advertisement