Advertisement

UD:26  

திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்

எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க…? ஏதாச்சும் கேட்கணுமா….?” என கேட்டவன் கண்ணாடியில்தன் சிகையை பத்தாவது முறையாக சரி செய்துக்கொண்டிருந்தான்

அதை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் கடுப்பான விக்கி, “டேய்முதல்ல அந்த நாலு முடிய நாப்பது வாட்டி சீவுறத நிறுத்து…” என்று கூறவும், கவி அதிர்ந்து

டேய்என்னடா இப்படி சொல்லிட்ட…?”

எப்படி சொல்லிட்டேன்…?” சந்தேகமாக ஒரு புருவத்தைமற்றும் ஏற்றி இறக்கி விக்கி கேட்கவும்

நாலு முடின்னுஎவ்வளவு அடர்த்தியா இருக்கு பாருஅதுவும் கருகருன்னு…” என்று மீண்டும் தன் சிகையை கோதிசரியாக இருந்த முடியை மீண்டும் சரி செய்ய, நெற்றியில்அரைந்துக் கொண்டான் விக்கி

பின் , “என்னடா ஆச்சு உனக்குஅன்னைக்கு பஞ்சாயத்துமுடிஞ்சு அப்படி மூடுஅவுட்ல இருந்தசிஸ்டர் கிட்ட நேராபார்த்து ஏன் இப்படி செஞ்சன்னு…?’ கேளுன்னுசொன்னதுக்கு, உடனே என்னை நடுரோட்டுல விட்டுட்டுபோனவன் தான் அங்க என்ன ஆச்சுன்னு சொல்லமாட்டீங்கிறஆனா திரும்ப உன்ன பார்த்ததுல இருந்து இப்பவரை ஒரு குஷி மூடுல இருக்க ஏதாச்சும் கேட்டா உடனேகோவமும் வந்துருது… ” என கேட்டதுமே கவியின் முகம்இறுகி விட்டது

என்ன டா எதுவும் சொல்லாம அமைதியா இருக்க…? கொஞ்சம் மட்டும் கோபம் போயிருச்சோ... ?” என மீண்டும்அழுத்தி கேட்க

அதெல்லாம் ஒண்ணுமில்லஎல்லார் முன்னாடியும்மானத்தை வாங்கிட்டா எப்படி டா கோவம் இல்லாமஇருக்கும்… ? அதெல்லாம் அப்படியே தான் இருக்கு…” என்றுஉரென்ன முகத்தை வைத்துக் கொண்டவனை கண்டு,

நாம இப்படி கேக்காம இருந்திருந்தா ஒருவேல மறந்துசந்தோஷமா கல்யாணம் பண்ணியிருப்பான் லூசுதனம்மாகேட்டு அவன் சந்தோஷத்த கெடுத்துட்டோமே சே…’எனவருந்தியவனுக்கு அவனது மாற்றம் மட்டும் உறுத்தலாகவேஇருந்தது

அதன்பின், நேரமாவதால் சீக்கிரம் வரும்படி வேலையாள் வந்துகாயத்ரி சொல்ல சொன்னதாக சொல்லிவிட்டு செல்ல, ஆண்கள் இருவரும் தங்கள் இணைய காண பட்டு வேட்டிசட்டையில் தோரணையுடன் வந்து நின்றினர் காயத்ரியின்முன்

நிகழ்ந்தேறிய சம்பவத்தால் கவியழகனுக்கு சற்றுஅவமானமாக தான் இருந்தது தன் அன்னையையும்தங்கையையும் காண, ஆனால் அவர்களோ எதுவும்நடக்காதது போல் நடந்துக் கொள்து தான் அவனுக்குபுரியவில்லை

அந்த பஞ்சாயத்து முடிந்து திருமணம் முடிவானதை பற்றியாரும் அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லைவிக்கியை தவிரகாரணம் அவன் கேள்வியை மட்டுமேகேட்டுக்கொண்டிருக்கிறான் அதில் அவனது முக்கிய இருகேள்வி, ஏன் பூங்குழலி அத்தை மகள் என்று கூறவில்லைஎன்று, மற்றொன்று அவளின் வீட்டிற்கு சென்ற வந்ததுஎன்னவாயிற்று என்பது தான்கேட்டு என்ன பிரோஜனம் பதில்இல்லையே

கவியழகனின் சந்தேகம் தன் திருமணத்தில் அன்னைக்கும்தங்கைக்கும் விருப்பம் இருந்திருக்குமோ என்பது தான்ஆனால் அதை இன்று இரவே பொய்யாக்க போகிறாள்தன்னவள் என்று அறியாமல் இருந்தான் கவியழகன்

கோவிலில் வைத்து நடக்கவிருக்கும் திருமணத்திற்கு வீட்டில்செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்துவிட்டுஅனைவரும் கோவிலை நோக்கி பயணமானது கவியழகனின்குடும்பம்

இங்கு பூங்குழலியின் வீட்டில், அப்படி யொரு நிசப்தம்…. தன்அறையில் மணபெண் அலங்காரத்தில் இருந்தவளுக்குகண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் விழவா என்னும்நிலையில் இருந்தது

அப்பொழுது அறையினுள் நுழைந்த வசுந்தராவை கண்டுஆவலாக எழுந்தவள், அவர் அருகில் வந்து கையை பிடித்து, “ம்மா…” என குரல் உடைந்து அழைக்க, வசுந்தரா சட்டெனஅவள் கையை தட்டிவட்டார் மகளை ஏறேடுத்தும்பார்க்காமல்

அதில் பேதையவளின் மனம் இன்னும் சுனங்கி போனதுவலியில்அதை உதட்டை கடித்து பொருத்துக் கொண்டவள்அன்னையின் முகத்தையே ஏக்கமாக பார்த்திருந்தாள்,தன்னிடம் பேச மாட்டாரா என்று

ஆனால் வசுந்தரா, அதே அறையில் குழலியின் வலியைஉணர்ந்து முகம் கசங்க நின்றிருந்த கனிமொழியிடம் ஒருபெட்டியை நீட்டியவர்….

இதைய போட்டு விட்டுட்டுறு கனிஇந்த கண்ணாலம்முடிஞ்ச கையோடு என் கடமையும் முடிஞ்சுதுநெலம், கடைஅம்புட்டு அவ பேருலத்தேன் இருக்குநான் உசுரோடுஇருக்குறவர மட்டும் அதைய நான் பார்த்துகிடுத்தேன்னுசொல்லிடு…. அதையும் குடுத்துட்டா என்ற ஆத்தாக்கு கஞ்சுதண்ணி ஊத்த என்னால முடியா போயிரும்அதுக்கு மட்டும்அனுமதி குடுக்க சொல்லு….” என்று சொல்லவும் கனி,

அத்த என்ன பேசுதீக…?”என்று பதறி அவர் அருகில் வரும்முன் அறையை விட்டு வெளியேறினார் வசுந்தரா

ஒருநாளில் வாழ்க்கை வெறுத்து போகுமா…. ஆம் வெறுத்துபோகும் என்பதற்கு சாட்சியாக நிற்கிறாள் பூங்குழலிபஞ்சாயத்து முடிந்து வந்ததில் இருந்து வசுந்தரா செல்லதாயிஇருவரும் முகங்குடுத்து பேசவில்லை பூங்குழலியிடம்ஜெயசீலன் வந்து ஆறுதலாக இரண்டொரு வார்த்தை பேசவும்சற்று ஆறுதல் அடைந்த பூங்குழலி அதன்பின் அறைக்குள்முடங்கி கொண்டாள்

அவள் உண்ணவில்லை என்ற கவலையும் வசுந்தராசெல்லதாயிக்கு எழவில்லைஅத்தனை கோபம்இருவருக்கும், கனிமொழி மட்டுமே விக்கியிடம் இருந்துவிடை பெற்று வந்தவள் தன் வீட்டிற்கும் செல்லாதுபூங்குழலியுடனே தங்கிவிட்டாள் அவள் நிலை பார்த்து

கோவிலுக்கு கிளம்பும் நேரம் வரவும், ஜெயசீலன் தன்குடும்பத்துடன் வந்து விட, “நேரமாகுது கிளம்பலாம்என்னவசு இப்படி நிதானமா இருக்கஅம்புட்டும் தயாரா…?” எனகேட்க, அவரோ பதில் ஏதும் கூறாது ஒரு பெருமூச்சுடன்முகத்தை திருப்பிக் கொண்டார்

அதை பார்த்தவர், இது வேலைக்கு ஆகாது என உணர்ந்து , “என்ன வசு இது நான் அம்புட்டு சொல்லியும் இப்ப இப்படியேநின்னுட்டு இருக்கவம்ம்ம்…” என முகத்தில் அதிருப்தியைகாட்டியபடி, பெருங்குரலில்

கனி…”என அழைக்க,

காதில் கேட்ட அழைப்பில் பதறி அடித்து ஓடிவந்தவளைப்பார்த்து, “பூங்குழலி தயாரா…. இல்ல இனித்தேன் தயார்பண்ணனுமா…?” என முகத்தை இறுமாக வைத்துக் கொண்டுகேட்க,

ரெடி பண்ணிட்டேன் ப்பா… ” என கனி பவ்வியமாக பதில்அளிக்கவும், தன் இறுக்கத்தை சற்று தளர்த்தினார்ஜெயசீலன்

செரிபோய் அழைச்சுட்டு வாகோவிலுக்கு போகணும்அதுக்கு முன்ன ஆத்தாகிட்டயும் ஆச்சிகிட்டயும் கால்லவிழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்போவெரசா போய்அழைச்சுட்டு வா…” என, கனி சரியென தலையை ஆட்டிவிட்டுஉள்ளே செல்லவும்,

வசுந்தரா தனக்கும் இதுக்கும் எவ்வித சம்மதமும் இல்லைஎன்பதை போல் சென்று கோவிலுக்கு செல்லவிருந்தவண்டியில் அமர்ந்துக் கொண்டார்அதை பார்த்தஜெயசீலனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தாலும்இருக்கும் சூழ்நிலையை புரிந்து அமைதியாக கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தார்

கனி வந்து சொல்லவும் அமைதியாக, எழுந்து வெளியேவந்தவளின் விழிகள் அன்னையை தேட அவரில்லை என்றதும்ஒரு விரக்தி புன்னகையை சிந்தியவள், இறுகிய முகத்துடன்நின்றிருந்த செல்லதாயிடம் சென்று எதுவும் கூறாதுஅமைதியாக அவரது முகத்தை பார்த்துவிட்டு காலில்விழுந்தாள் ஆசி பெற

வாய் திறந்து எதுவும் மொழியவில்லை என்றாலும் தலையைதடவி தன் ஆசிர்வாதத்தை வழங்க, அதையும் அமைதியானமுகத்துடன் பெற்றுக் கொண்டாள் பூங்குழலிபின் ஜெயசீலன்அவரது மனைவியிடம் ஆசி வாங்கியதும் அனைவரும்கோவிலை நோக்கி புறப்பட்டனர்

பூங்குழலியின் மனது அத்தனை வலியுடன் தன் அனைத்துஇன்பமான நினைவுகளையும் ஒருநாளில் தன்னை வெறுக்கும்அன்னை பாட்டியையும் நினைத்துக் கொண்டே வந்தவளுக்குதன்னுடைய இப்பொழுதைய துன்பதிற்கு காரணமானமுருகவேல் மீது திரும்பியது அவளது கோபம் முழுவதும்

மாமனாரே இதுக்கு அம்புட்டுக்கும் சேர்த்து வைச்சுசெய்யுத்தேன் பாருங்க…’ என கருவிக் கொண்டாள்உள்ளுக்குள்

கோவிலை வந்த தடைந்ததும் அடுத்து நடக்க வேண்டியவேலைகள் அனைத்தும் வேகமாக நடந்தேரியதுதிருமணம்கோவில் வைத்து முடித்துவிட்டு வரவேற்பு அருகில் இருந்தமண்டபத்தில் வைத்திருந்தனர்அது கிராமம் என்றதாலும்பெரியவர் வீட்டு வீஷேசம் என்பதால் அனைத்தும் சிரமம் இன்றிஅமைந்து விட்டிருந்தது

ஜெயசீலன் குடும்பம் மட்டும் மண்டபத்தில் தேங்கி விட, தாலிகட்டு மட்டும் கோவில் நடக்கவிருந்ததால் அனைவரும் அங்குகுழுமியிருந்தனர்பெண்கள் இருவருக்கும் நடுவில்அமைதியின் மறு உருவமாக தலை கவிழ்ந்து நின்றிருந்தபூங்குழலியை சற்று தொலைவில் விக்கியுடன் பேசிக்கொண்டிருந்த கவியழகனுக்கு என்னவோ போல் இருந்தது

நியாத்துக்கு நான்தான் சோகமா இருக்கணும்இப்படிஆயிருச்சேன்னுஇவ நினைச்ச மாதிரி தானே எல்லாம்நடக்குது அப்புறம் ஏன் டல்லா இருக்கா… ‘ என யோசித்தபடிநெஞ்சை நீவிக் கொண்டு நொடிக்கொரு முறை பூங்குழலியைபார்வையால் அளந்தவனுக்கு மனம் தாளவில்லை அவளதுவாடிய முகத்தை பார்க்க

அடேய்நீ சைட் அடிக்குறதுன்னா சொல்லிட்டு பண்ணுநான் லூசு மாதிரி இங்க பேசிட்டு இருக்க மாட்டேன்ல…” எனவிக்கி முறைத்துக் கொண்டு கூறவும், கவி நண்பனை பார்த்துபல் இளித்து வைக்கவும் அவனது அலைபேசி சிணுங்கவும்சரியாக இருந்தது

அதை உயிர்பித்து காதிற்கு குடுத்தவன், மெல்ல நகர்ந்துபக்கவாட்டிற்கு சென்று நின்றான்…. சிறிது நேரத்தில்அழைப்பை துண்டித்தவன் காதில் விழுந்தது சிலர் பேசியவார்த்தைகள்

ஆனாலும் இந்த கண்ணாலம் நடக்கும்னுட்டு நானுநினைக்கவே இல்லயா….” என்று கோவில் பக்கவாட்டு சுவர்ஓரமாய் நின்று பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவரின்வார்த்தையே கவியழகன் காதில் விழுந்தது

அதில் காதை தீட்டி கேட்க ஆரம்பித்தான் அவர்களின் பேச்சுகுரலில், “ஏன்யா அப்படி சொல்லுதேபெரியவர் வூட்டு வாரிசுஇப்படி பண்ண போய் இந்த கண்ணாலம் முடிவாயிருக்குஇதுல என்ன இருக்கு…?” என்றதும் கவியழகனுக்குஅவமானம் தாளவில்லை

அதில் பூங்குழலியின் மீது சற்று முன் தோன்றிய இறக்கம்இப்பொழுது கோபமாக மாற, அவமானத்தில் கை முஸ்டியைஇறுக்கி சுவற்றில் ஓங்கி குத்தியவன் அவளை நினைத்துபல்லை கடித்தான் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையேஎன்ற கோபத்தில்

அப்பொழுது, “தப்பா பேசாதவஅந்த தம்பி ரொம்பதங்கமான மாதிரியாக்கும்இந்த புள்ள அந்த பையனுக்குஉரிம இருக்குற அத்த மகபேசுறதுக்காக அழைச்சுஇருப்பாகஇந்த கூறுக்கெட்ட ராசு பயலால வந்தவெனைத்தேன் அன்னைக்கு நடந்த அம்புட்டும்… ” என்றுஇன்னொருவர் கவிக்கு பரிந்து பேச,

அட ஆமாயாஅந்த பையனுக்கு ஆசை இல்லாமலா கட்டிக்கிடுதியான்னுட்டு கேட்கவும் சட்டுன்னுஒத்துக்குச்சுதப்பு பண்ணுறவன் எதுக்குவே வெட்ட வெளிலநின்னு பேசணும்…? அந்த பையன் ஊருக்கு வந்து எம்புட்டுநாள்ல ஒருநாளாச்சும் எந்த பொண்ணு கூடயாச்சும் பேசிபார்த்திருக்கியாஅந்த புள்ள கிட்ட மட்டும் பேசி இரண்டுமூணு மொற நான் பார்த்திருக்கேன்…” என்று ஒருவர் பேச, இப்பொழுது கவிக்கு ஆச்சரியமாக இருந்தது

நம் ஒழுக்கமே நம்மை மற்றவரிடம் அடையாளம் காட்டும்என்பதற்கு சான்றாய் அவனுக்கு அந்த காட்சி அமைந்தது

ஆமாலஅந்த புள்ள கூட மொத தாம் தூம்னுட்டு குதிச்சுதுகண்ணாலம் பத்தி பேசவும் பொட்டி பாம்பா அடங்கிருச்சுஇதுலையே தெரியலையா அந்த புள்ளைக்கும் ஆச தானுட்டு… ” என்க,

ஆமாயா…. அதுவும் மன்னிப்பு கேட்க சொல்லுச்சேஅப்பகூட பதறி அந்த பையன இல்ல பெரியவரத்தேன்சொன்னேனுட்டு சொல்லுச்சுநாலு பேத்துக்கு முன்னாடி ஆசபட்டவன விட்டு கொடுக்கலையே அந்த புள்ள…”

மற்றொருவர், “அதெல்லாம் செரித்தேன்மாமகன்ந்தேனேஎன்னத்துக்குவே அந்த அலும்பு பண்ணும்…?” என சந்தேகமாககேட்கவும்,

வேற என்னத்துக்கு அம்புட்டும் பெரியவர பலிவாங்கத்தேன்அவ ஆத்தா ரொம்ப கஷ்டப்பட்டாகல பெரியவரால…. அத்தேன் இப்படி பண்ணியிருக்கு.போல. கெட்டிகாரபுள்ளத்தேன்… “என கூறி சிரிக்க அனைவரும் அதைஆமோதித்து சிரித்தனர்….

கவியழகனுக்கு தந்தையை பற்றி பேசியது கஷ்டமாகஇருந்தாலும் பூங்குழலியின் சாதுர்யம் அவனையும் சிரிக்கவைத்தது அன்றைய நிகழ்வில் ஒரு இதழ் புன்னகையோடு….

அப்பொழுது விக்கி வந்து அய்யர் அழைப்பதாக சொல்லிஅழைக்க, கோபம் இளகிய மனதுடன் சன்னதி முன் வந்துநின்றான் பூங்குழலியின் நினைவோடுஅதே சமயம் கலங்கியவிழிகளுடன் மனம் கனக்க ஏதோ ஒரு சுமையாய் வந்துநின்றாள் பூங்குழலி

அவளது முகத்தை கண்டவன், துறுதுறுவென அலைப்பாயும்அவளது விழிகள் இப்பொழுது கலங்கி ஓரிடத்தில் வெறித்த பார்வையுடன், நிர்மாலமான முகத்துடன் இருப்பவளை புருவம்சுருங்க பார்த்தவனுக்கு அப்பொழுது தான் அன்று இரவுஅவளது வீட்டில் நிகழ்ந்தது நினைவிற்கு வந்தது

அதில் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, அமைதியாக கடவுளைபார்த்து நன்றான் எல்லாம் சரியாக வேண்டும் எனஅடுத்துஅய்யர் மாங்கல்யத்தை தர, இருகரம் கூப்பி கடவுளை மனதாரவேண்டி, அதை கையில் பெற்று தன்னவளின் முன் திரும்பிநின்றான் அவளை தனதாக்கி கொள்ள

தலை கவிழ்ந்து நின்றிருந்தவள் முன் மாங்கல்யம் இருப்பதைகண்டவள் மனம் ஏன்னென்று காரணம் அறியாமலேயே அவளதுவிழிகள் தன்போல் உயர்ந்து அவனது விழிகளை காணவும்,அதற்காகவே காத்திருந்தார் போல் அவளது சங்கு கழுத்தில்பொன் தாலியால் மூன்று முடிச்சுட்டு ஊரார் உறவினர்கள் முன், தன் சரிபாதி என அறிவித்தான் அவளது விழிகளைபார்த்தபடியே

விழிகள் நான்கும் ஒன்றொடு ஒன்று உரசி நிற்க, அய்யர் அடுத்தகுங்குமம் வைக்க சொல்லி அழைக்கவும்தான் கலைந்தனர்இருவரும்…. மீண்டும் தன் தலையை குனிந்துக் கொண்டபூங்குழலிக்கு இப்பொழுது எண்ணம் முழுவதும் கவியழினேஆக்கிரமித்து இருந்தான்

இவர்கள் இருவரையும் கண்ட அனைவருக்கும் இதுபஞ்சாயத்தில் பேசி முடிவான திருமணம் போல் அல்லாது, இருவர் மனமொத்த திருமணம் முடித்ததை போல் இருந்ததுசிலருக்கு இது காதல் திருமணம் தான் என்பதில்உறுதியாகினர்ஆக யாரும் கவியழகன் பூங்குழலியின் மீதுதவறான எண்ணம் எழவில்லை என்பதே ஆச்சரியம்

அதில் ஒருவர் மட்டுமே தனித்திருந்தார் வெறுப்போடு.பூங்குழலியின் மீது அத்தனை துவேஷம் கொண்டிருந்தார்முருகவேல்தன் மகன் திருமணத்தில் தான் யாரோ போல்நிற்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை

தந்தை என்னும் முறைக்கு கைகளை பின்னால்கட்டிக்கொண்டு விரைப்பாக நின்றிருந்தார் காய்த்ரியுடன்மறந்தும் வசுந்தராவை அவர் திரும்பியும் பார்க்கவில்லைவசுந்தராவும் செல்லதாயும் கூட அங்கு முருகவேல் என்னும்ஒரு ஜீவன் இருப்பதாக கருதவில்லை

முருகவேலுக்கு அதுவும் ஒருவித எரிச்சலை உண்டாகியது…. ‘பொண்ணையா பெத்த விட்டுயிருக்காதிமிர் பிடிச்சபொட்ட கழுத…’ என மனதில் பூங்குழலியை எண்ணி கண்கள்சிவக்க தன் மொத்த கோவத்தையும் கையை முறுக்கியபடிநின்று அதை தனக்குள் அடக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்

அதன் பின் கவியழகன் பூங்குழலி இருவரும் கோவிலை சுற்றிவந்து சாமியை வணங்கியவர்கள் மண்டபத்தில் தங்கள்வரவேற்பில் பொம்மைகளை போல் நின்றனர் இருவேறுமனநிலையில்

விக்கியோ பட்டுப்புடவையில் அழகு பதுமையென குழலியின்அருகில் நின்றிருந்தவளை டெலிப்பதி மூலம் தொடர்ப்புகொள்ள பெறும் முயற்ச்சியில் இருந்தான்

கனிமொழிக்கும் அவனது பார்வையும் தன் கவனத்தை ஈர்க்கும்அவன் செயல்களும் புரிந்தே இருந்ததுஇதயத்தில்உண்டான் ஒரு வித ஈர்ப்பு அவனை திரும்பி பார் என்றுஉந்தியது உள்ளுக்குள்…. இருந்தும் ஒருவித பயம்உருவாகுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை

அதனால் அமைதியாக தன் வேலையில் கவனமாக இருந்தாள்அவன் புறம் திரும்பாது… ‘என்ன இவபார்க்கவேமாட்டீங்கிறாஅன்னைக்கு நைட் நல்லாதானே இருந்தாகிளம்பும் போது…’ என அவளையே பார்வையால் விழுங்கியடிதலை கோதிக் கொண்டவன்,

அன்னைக்கு நைட்ல நிறைய பேருக்கு பேய் புடிச்சு இருக்கும்போல.அமாவாசை கூட இல்ல அப்புறம் எப்படி…? ம்ம்ம்…’ எனயோசித்தவன் விழிகளை வேறுபுறம் சுழற்றியாவதுஇருந்திருக்கலாம் ஆனால் ஈர்ப்பு விசை போல்கனிமொழியின் மீதே படிந்திருந்தது அவனது பார்வைஇருக்கும் இடம் தெரியாமல்

அப்பொழுது அவன் அருகில், கைகள் இரண்டையும்பின்பக்கமாக கோர்த்துக் கொண்டு கண்கள் சுருங்க, இறுகியமுகத்துடன் விக்கியை கூர்ந்து பார்த்திருந்தார் ஜெயசீலன்

தன்னவளின் மாற்றத்தை புரியாது தனக்குள்யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அருகில் யாரோ தன்னைமுறைப்பது போல் தோன்ற, அப்பொழுது தான் விழிகளைமட்டும் நகர்த்தி பக்கவாட்டில் நிற்க்கும் உருவதைகவனித்தான் விக்கி, இத்தனைக்கும் முகம் கனிமொழி இருந்ததிசையை நோக்கிதான் இருந்தது

அருகில் தன்னையே பார்த்திருந்த ஜெயசீலனை கண்டு, எச்சிலை கூட்டி விழுங்கியவன் விழிகளை தாழ்த்திமனதினுள், ‘செத்தடா மவனேஇப்படியா லூசு மாதிரிபார்த்து மாட்டிப்பஅய்யோ அய்யனார் மாதிரி நிக்குறாரேமாமனாருகாப்பாத்த யாரும் வர மாட்டங்களா…’ உள்ளுக்குள் ஒரு ஒப்பாரியை வைத்தவன் இப்பொழுது மெல்லஅவர் புறம் திரும்பினான் தயக்கத்துடன்

அசைவேனா என்னும் விதத்தில் ஜெயசீலனும் விக்கியையேபார்த்திருந்தார் இறுகிய முகத்துடன்….

மெல்ல அவரை பார்த்த விக்கி, ஒரு போலீஸ் சலியூட் வைத்து , “வணக்கம் அங்கிள்…” என்று பல்லை காட்டியவன், அருகில்நின்றிருந்த ஜெயசீலனை விட்டு அடிமேல் அடி வைத்துபின்னோக்கி நகர்ந்தபடி,

சும்மா தான் அங்கிள் பார்த்துட்டு இருந்தேன் ஜோடிபொறுத்தம் செம்ம…. இல்ல அங்கிள்…” என சமாளிக்க முயல, அவரோ அவனுக்கு பதிளிக்கவும் இல்லை பார்வையைஅதாவது இப்பொழுது அவனது சமாளிப்பில் மாறிய அவரதுமுறைப்பையும் மாற்றிக் கொள்ளவில்லை

டேய் வாய் குடுத்து வாங்கி கட்டிக்காத…. இடத்த காலிபண்ணு டா…’என்று உள்ளுக்குள் எச்சரிக்கை மணிஅடிக்கவும் நொடியும் வீணாக்காது திரும்பியவன் ஓட்டமும்நடையுமாக அங்கிருந்து நகர்ந்து பந்தி நடக்கும் இடத்திற்குவந்து நின்றான்

வேகமாக செல்லும் அவனையே சந்தேகமாக ஒரு பார்வைபார்த்து மீசை முறுக்கிக் கொண்டவர் திரும்பி தன் மகளைபார்க்க, அவளோ இங்கு நடந்த கூத்தை கவனிக்காமல் ஏதோதீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள் தன் தோழியுடன்

வேகமாக வந்து நின்றவன் இடுப்பில் ஒரு கையும், நெஞ்சில்ஒரு கையும் வைத்து ஒரு பெருமூச்சை விட்டுபடி, “ஷ்ஷ்ப்பா…. முடியலடேய் விக்கி எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டியேஉனக்கு இது தேவையா…?” என ஒரு முணுமுணுப்புடன்தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டவன் பின்கனிமொழியின் அழகிய வதனம் நினைவிற்க்கு வரவும்,

தேவைதான்ஆனா இனி நீ பழைய விக்கியா நடந்துக்கோஅதான் உனக்கு நல்லது…” என்று முடிவெடுத்வன் அதை பின்பற்றியிருந்தால் நிறைய பின் விளைவுகளைதவிர்த்திருந்திருக்கலாம்

ஆனால் விதி அது வேறொரு திட்டத்தை அல்லவாவைத்திருந்ததுஅது இருவரது வாழ்க்கையையும் மாற்றும்என்று யார்தான் அறிந்திருக்கின்றனர்

மேடையில் நின்றிருந்த ஜோடியோ யாருக்கு வந்த விருந்தோஎன்னும் தோரணையில் நின்றிருந்தனர் என்பதே உண்மைவாழ்த்து கூறி பரிசளிக்க வந்தவர்களிடம் மட்டும் தங்கள்முகத்தில் சிறு புன்னகையை ஒட்டி வைத்துக் கொண்டனர்

அருகில் நின்றிருந்த கனி, “ஏன் புள்ள இப்படி நிக்குதகொஞ்சமாச்சும் சந்தோஷமா வச்சுக்க மொகத்தபொறவுஃபோட்டோல பாக்கும் போது கன்றாவியா இருக்கும் புள்ளபுரிஞ்சுக்கோயேன்…”என்று காதில் கிசுகிசுக்க, அவளைகுழலி ஒரு பார்வை பார்த்து வைத்தாள் முறைப்போடு

சரித்தேன் எப்படியோ போ புள்ளஓந்நல்லத்துக்குத்தேன்சொன்னேன்கேக்காட்டி பொறவு அது ஓம்பாடு…” என்றுதோளை உழுக்கிவிட்டு, மணமக்களுக்கு என போட்டிருந்தஅலங்கார இருக்கைக்கு பக்கத்தில் இருந்த சாதாரணஇருக்கையில் அவள் வைத்திருந்த  மைசூர்பாக்கை எடுத்துஉண்ண ஆரம்பித்தாள்

அவளையே முறைத்துக் கொண்டிருந்த பூங்குழலியைகலைக்கும் வண்ணம் வாழ்த்து சொல்ல ஒரு குடும்பம் வரவும்தன் தலையை ஃபோட்டோ எடுப்பவரின் பக்கம் திருப்பினாள் உள்ளுக்குள் அத்தனை கோபத்துடன்

அவர்கள் சென்றதும் மீண்டும் கனிமொழியின் புறம்திரும்பியவள் அவள் இன்னும் மைசூர்பாக்கை சுவை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு, மெல்லிய குரலில் கனி… “என்றழைக்க, உண்ணும் தீவிரத்தில் இருந்தவளுக்குதோழியின் அழைப்பு காதில் விழவில்லை

அதில் பல்லை கடித்தவள், “ஏய்புள்ள கனி…” என்றழைக்க, அப்பொழுது தான் தலையை நிமிர்த்தி பார்த்தாள் கனி , வாயில் மைசூர்பாக்குடன்…  

என்ன புள்ளகூப்பிட்டியா….?” என அருகில் வர,

ம்ம்ம்கொஞ்சம் பக்கம் வாயேன்…” என இன்னும் பக்கம்அழைக்க, கனிமொழியும் ஏதோ முக்கியமான விஷயம்என்றென்னி தீவிரமான முகத்துடன் அருகில் சென்றுஎன்னவென்று கேட்க,

என்னைய உட்டுட்டு நல்லா திங்குதலகண்டிப்பாவயித்தாலத்தேன் போகும் போடி…”என பல்லை கடித்துசாபம்விட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் நிர்மலமானபார்வையுடன்

அவள் கூறியதை கேட்டு கனித்தான் அதிர்ந்து சாபம் விட்டநல்லவளையும் கையில் இருந்த மைசூர்பாக்கையும்  பாவமாகஒரு பார்வை பார்த்தவள், பின் கோபமாக குழலியைமுறைத்துவிட்டு,

போடி கூறுக்கெட்டவளே… “என்று முணுமுணுப்புடன்கையில் இருந்ததை வேகமாக இருக்கையில் இருந்த தட்டில்வைத்துவிட்டு, உதட்டை பிதுக்கி தரையில் ஓங்கிஉதைத்தவள்,

எம்புட்டு வைத்தெரிச்சல் இவளுக்குவேண்ணும்னாஇவளும் சாப்பிட வேண்டியது தானேஎன்னத்துக்கு எனக்குசாபம் விடணும்பாவி… “என முணுமுணுத்தபடி மேடையைவிட்டு இறங்கியவள் மணபெண் அறையை நோக்கிபுலம்பியபடி சென்றாள் மைசூர்பாக்கை உண்ண முடியவில்லை என்னும் கவலையோடு சேர்த்து கோபமாக….

குழலியோ செல்லும் தன் தோழியை பார்த்து மனம் லேசாகஒரு புன்னகை புரிந்தாள் அவளது கோபத்தில்இத்தனைநேரம் இருந்த இறுக்கம் இப்பொழுது பூங்குழலியிடம்இல்லைகாரணம் என்னவென்று கேட்டாள் அது அவளுக்கேதெரியவில்லை என்பது தான் உண்மை

தன்னவன் கட்டிய தாலியினால் வந்த மணமாற்றமா அல்லதுசற்று நேரத்திற்கு முன் கனி கூறிய ஆறுதல் வார்த்தைகளாஎன்று தெரியவில்லைஆனால் அவளது தற்போதையவேண்டுதலும் எண்ணங்களும் அன்னையும் பாட்டியும் கனிகூறியது போல் சிறிது நாட்களில் அனைத்தையும் மறந்துதன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்

கவியழகனோ என்னவென்று புரியாத நிலையில் இருந்தான்…. ஆனால் அவனது கோபம்  பூங்குழலியின் மீது இருக்கத்தான்செய்ததுஊரார் முன் தன்னை தலை குனிய செய்தவளைஅவனால் சட்டென மன்னிக்கவோ நடந்ததை மறக்கவோமுடியவில்லை.. ஆனால் அதற்கும் மேல் அவள் மீது இருந்தகாதல் அவள் முகம் வாடுவதை ஏற்றக் கொள்ள முடியாமல்தவிக்க செய்தது

ஆக அவன் என்னமாதிரி நிலையில் தாம் இருக்கிறோம் என்றேபுரியாது ஒருவித குழப்பத்தில் இருந்தான்…. கோபம் எத்தனைஇருந்தும் அவளை விட்டு கொடுக்கவும் மனம் வரவில்லைஎன்பதை இத்திருமணத்திற்கு அவன் சம்மதம்தெரிவிக்கும்தான் போது அவனும் அதை உணர்ந்திருந்தான்

மேடையில் நின்றிருந்தவனுக்கு தெளிவான ஒரு முடிவையோஅல்லாது தன் நிலையை புரிந்துகொள்ளவோ அவனால்முடியவில்லைதனிமை வேண்டும் போல் இருந்ததுஅருகில்மனைவியென அழகு பதுமையாக நின்றிருந்தவளை அவனால்ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை

பூங்குழலியோ, சற்று தெளிந்திருக்க கவியழகன் முற்றிலும்குழம்பி போய் நின்றிருந்தான்அடுத்து என்ன என்றுதெரியாமல் தங்கள் வாழ்வின் அடுத்த அடியை எடுத்து வைக்கதயாராயினர் இருவரும்….

இங்கு பந்தியில் சற்று நேரம் இருந்தவன் மீண்டும்மண்டபத்திற்கு வந்த விக்கி, கனிமொழி முகத்தைசுருக்கியபடி சிணுங்களுடன் ஓரமாக இருந்த மணபெண்அறைக்குள் நுழைவதை கண்டான் எதர்ச்சையாக

சட்டென பார்வையை சுழற்றியவன் யாரும் கவனிக்காவண்ணம் தன் பாக்கெட்டில் இருந்த அவளது அலைபேசியைஎடுத்துக்கொண்டு அவள் சென்ற அறையை நோக்கி நடந்தான்அதை அவளிடம் திருப்பி தரும் நோக்கில்

அறை வாசலில் நின்று மீண்டும் பார்வையை ஒருமுறை சுற்றிஓடவிட்டவனுக்கு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதைஉறுதி செய்துகொண்டு பின் ஒரு நிம்மதி பெருமூச்சு விடப்படிஅறையினுள் நுழைந்தான் விக்னேஷ்

தொடரும்

Advertisement