Advertisement

அத்தியாயம் – 9

“உன் நகத்துக்கு வாய் இருந்தா கூட அழுதிடும் யசோ.. அதை விடேன் ” என்று அவளது கையை வாயில் இருந்து தட்டிவிட்டான் கௌதமன்..

அவனது கரம் பட்டதும் உடம்பில் ஓடிய நடுக்கத்தை உணர முடிந்தது அவளால்.. காலையில் அவனிட்ட முத்தம் இன்னும் இனித்தது. அந்த நொடியை நினைக்கும் பொழுதே அந்த ஏசி காரிலும் அவளுக்கு வியர்த்தது..

அவளது மாற்றங்களை எல்லாம் கண்டும் காணாமல் காரோட்டி கொண்டு இருந்தான் கௌதமன்.. ஆனாலும் அவள் அமைதியாய் வருவது பிடிக்காமல்

“யசோ ஏன் பேசாம வர ?? எதுவும் கோவமா ??” என்றான் வேண்டுமென்று சிரிப்பை அடக்கி.. அவனது பார்வை அவளை சீண்டினாலும் பதிலேதும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்..

“உன்னை என்னவோன்னு நினைச்சேன் யசோ.. ஒரு கிஸ்ல சாஞ்சுட்டியே” என்றவனது உடல் குலுங்கியது..

“ம்ம்ச் இப்போ என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு ” என்றவள் அவனது தோளில் இரண்டு தட்டு தட்டினாள்..

“ஓகே ஓகே ” என்றவனுக்கு இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

“ம்ம்ஹும் ம்ம்ஹும் என்ன கெளதம் நீங்களே இப்படி கிண்டல் பண்ணா எப்படி ??” என்று சிணுங்கினாள்..

“இப்படி சிணுங்கி வைக்காத டி.. காலையில என்னை சீன்டினதுக்கு தான் கிஸ் பண்ணேன்.. சிணுங்கினா என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்றாவது கரம் அவளது இடையை வளைத்தது..

“ஹா ஹா.. அதுக்கு பேர் கிஸ்ஸா வக்கீல்?? கிஸ் பண்ண சொன்னா கடிச்சு வைக்கிறிங்க ” என்று அவனை வாரினாள்..

“முதல் தடவை கிஸ் பண்றேன்ல பொண்டாட்டி போக போக சரி பண்ணிடலாம்…”

“ஹ்ம்ம் சட்டை கசங்கும் சொன்னிங்க இப்போ சாச்சு வச்சிருகிங்க??? ”

“கோட் போட்டுப்பேன்.. ”

“எல்லாத்துக்கும் ஒரு பதில் இருக்குமே உங்கட்ட… ”

“இல்லாட்டி வக்கீலா இருக்க முடியுமா என்ன ??” என்று அவன் கூறி முடிக்கும் நேரம் அவர்களது காரை தாண்டி மற்றொரு கார் வேகமாய் இடிப்பது போல வந்து சென்றது..

நொடியில் கௌதமன் சுதாரிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றே புரியவில்லை.. யசோதரா முகம் பயத்தில் வெளிறிவிட்டது..

“நத்திங் யசோ.. ட்ரக்கன் டிரைவ் போல..  இதெல்லாம் சகஜம் தானே” என்றவனுக்குமே குரல் இயல்பாய் இல்லை..

“ஸ்டுபிட்ஸ்… ச்சே மூடயே ஸ்பாயில் பண்ணிட்டாங்க” என்று சட சடத்தாள்…

“அப்போ உனக்கு மூடு  ஸ்பாயில் ஆனது தான் கோவமா ?? இடிச்சது இல்லையா ??”

“சும்மா இருங்க கௌதம்.. ” என்றவளுக்கு அவளது பேக்டரி வர கையசைத்து இறங்கி கொண்டாள்.. சில நேரம் அவள் போவதையே பார்த்தவனின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது..

ஏனெனில் அவர்களை இடிப்பது போல வந்த கார் அப்பொழுது இருந்தே இவர்களை பின் தொடர்ந்து தான் வந்தது… திடீரென்று ஏன் இடிப்பது போல வரவேண்டும் ??? இதற்கு எதுவும் வேறு அர்த்தம் இருக்குமா இல்லை சாதரணமாய் நடந்ததா ?? என்று அவன் யோசிக்கும் பொழுதே அவனது ஜூனியர் அழைக்க கவனத்தை தன் வேலையில் செலுத்தினான்..

கோர்ட்டிற்கு சென்றவனுக்கு அடுத்தடுத்து வேலை இருக்கவே காலையில் நடந்த சம்பவம் கூட மறந்தே விட்டது எனலாம்..

ஒருவழியாய் அனைத்தையும் முடித்து, தனது கட்சிக்காரர்களை பார்த்து பேசி முடித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டமிட்டு, தனது ஜூனியர்களை கலந்தாலோசித்து என்று அவனது நேரம் செல்ல திடீரென்று நினைவு வந்தவனாய்

“ஸ்டீபன் என் பெர்சனல் நம்பர் யாருக்கும் குடுத்திங்களா ?? இல்லை யாராவது கேட்டாங்களா?? ” என்றான்..

“இல்லையே சர்..  ”

“ஓகே.. ”

“சர் எனி ப்ரோப்ளம்?? ”

“நத்திங் மேன்..”

அடுத்த சில நொடிகளில் கௌதமனை சந்திக்க ஆட்கள வர அவன் பொழுது இப்படி போனது..

அங்கே பேக்டரிக்கு சென்ற யசோதராவை காண வேதமூர்த்தி காத்திருந்தார்..

“யசோ வாம்மா.. உனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..”

“என்ன சித்தப்பா ???”

“நமக்கு ஒரு புது டீலிங் கிடைச்சு இருக்கு யசோம்மா… இதை நம்ம சைன் பண்ணா கோடி கணக்குல லாபம் வரும்”

“ஹ்ம்ம் இதெல்லாம் நீங்க சித்துகிட்ட தான் சித்தப்பா இனிமே டிஸ்கஸ் பண்ணனும்.. ” அவள் சாதரணமாய் தான் கூறினாள் ஆனால் அவருக்கோ உடனே முகம் வாடிவிட்டது..

“என்ன யசோம்மா… ”

“என்ன சித்தப்பா?? ”

“அவ இப்போதானே வந்திருக்கா.. அவளுக்கு பைல் எப்படி படிச்சு என்ன செய்யனும்னு கூட தெரியலை டா.. நீ தான் எல்லாம் சொல்லி குடுக்கணும்..”

“நோ நோ சித்தப்பா.. நீங்க இருக்கும் போது நான் எதுக்கு.. எனக்கே நீங்க தான் சொல்லி கொடுத்திங்க எல்லாம்..”

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே சித்தாரா அங்கே வந்து சேர்ந்தாள் விசாகனோடு.. இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாய் நின்றுகொண்டாள்..

“அக்கா எப்போக்கா வந்த ??”

“ஹாய் யசோ… ”

“இப்போதான் வந்தேன் சித்து.. ஹாய் விசுத்தான்…”

“என்ன சித்து இவ்வளோ லேட்டு…?? ”

“அதில்லப்பா கிளம்பிட்டு இருக்கும் போது அத்தையும் அத்தானும் வந்தாங்க அதான்.. டிரைவர் வேற லீவ்.. அதான் அத்தான் கூட வந்தேன்..”

“ஹ்ம்ம் சரிம்மா.. யசோ எல்லாம் வாங்க அந்த டீலிங் பத்தி கொஞ்சம் பேசி முடிவு பண்ணனும்..” என்று கூற

“இல்லை சித்தப்பா நீங்களும் சித்துவும் பேசி முடிவு பண்ணுங்க.. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்…” என்றவள் சென்றுவிட்டாள்..

சித்துவும் வேத மூர்த்தியும் அவள் போவதையே பாவமாய் பார்த்து நின்றனர்.. விசாகனோ “சரி மாமா நானும் கிளம்புறேன் ” என்றுவிட்டு யசோதராவை நோக்கி சென்றான்..

சித்தாரா அவ்விருவரையும் சில நொடிகள் பார்த்தபடி நின்றாலும் பின் தன் தந்தையோடு சென்றுவிட்டாள்..

“யசோ… யசோ நில்லு”

“என்ன விசுத்தான்…. ”

“நல்லாருக்கியா யசோ….??” அவனது குரலே அத்தனை சிரமமாய் ஒலித்தது….

“நான் நல்லாத்தான் அத்தான் இருக்கேன்.. ”

“இல்ல.. அது..கெளதம் உன்னை நல்லா பார்த்துக்கிறாரா ??”

“எஸ்”

“நீ ஏன் யசோ இப்படி ஒரு முடிவு எடுத்த ?? என்னால இப்பவும் கூட ஜீரணிக்க முடியலை.. ஏன் யசோ இப்படி பண்ண ??”

“ஏன் ?? கல்யாணம் தப்பான விஷயமா என்ன விசுத்தான்??”

“அதில்லை யசோ.. அது வந்து….  ”

“இங்க பாருங்க விசுத்தான் என் வாழ்க்கை என்னோட முடிவு.. இந்த முடிவு தப்பாவும் போகாது, போகவும் விடமாட்டேன்..”

“ஹ்ம்ம் சரி யசோ… உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலு என்கிட்டே கேளு சரியா”

“ஹ்ம்ம்.. சரித்தான் எனக்கு நேரம் ஆச்சு..”

“நானும் கிளம்பிட்டேன் யசோ ” என்றவன் அவளை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான்..

யசோதரா தன் வேலையில் மூழ்கியிருக்க, சித்தாரா அவளை தேடி வந்தாள்..

“யசோக்கா…. ”

“என்ன சித்து??? சித்தப்பா எல்லாம் பேசிட்டாரா ?? ”

“ஆமா க்கா.. இதுல உன் சைன் வேணும்… ” என்று ஒரு பைலை நீட்ட யசோவும் படித்து பார்த்து சித்தாராவை கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்துவிட்டாள். பதில் கூறுவதற்குள் சித்தாரவிற்கு மூச்சு முட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.. 

“என்ன சித்தாரா  சித்தப்பா உனக்கு முழு விவரமும் சொன்னாரா இல்லையா ?? கேள்வி கேட்டா இப்படி முழிக்கிற ??”

“இல்லக்கா அது வந்து.. அது…  ”

“இங்க பார் இது தொழில் செய்யுற இடம்.. ஆயிர கணக்குள நம்மை நம்பி தான் வேலை செய்றாங்க.. இங்க வந்துட்டா வேலையில மட்டும் தான் முழு கவனமும் இருக்கணும்.. புரியுதா ???” என்று சற்றே கடினமாய் கூற சித்தாராவின் கண்களில் நீர் கோர்த்துவிட்டது..

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு அழற?? இங்க பார் சித்து எனக்கு தேவையில்லாம அழறது வசனம் பேசுறது எல்லாம் பிடிக்காது.. போ போய் வேலையை பார்.. கவனம் எல்லாம் செய்ற வேலையில இருக்கணும்..” என்று கூற விட்டால் போதும் என்பது போல கிளம்பிவிட்டாள் சித்து..

நாட்கள் இப்படி அவரவர் வேலைகளோடும், கடமைகளோடும் பயணிக்க யசோதரா கெளதமனது வாழ்வும் சில பல சுவாரசியங்களோடு நகர்ந்தது..

கௌதமனுக்கு யசோவின் மனதிலும் தன் மீது காதல் இருக்கிறது என்றே தோன்றியது.. ஆனால் காதலிக்கிறாயா என்று அவன் கேட்கவும் இல்லை, காதலிக்கிறேன் என்று அவள் கூறவும் இல்லை..

வாழ்வை அதனதன் போக்கில் விட்டு தங்களது இடைவெளியை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துகொண்டு இருந்தனர்…

“கெளதம்…… ”

“ம்ம் ”

அவளுக்கு ம்ம் சொன்னவனது கவனமோ கையில் இருந்த பைலில் இருந்தது.. ஒருகையால் அவளை அணைத்தபடி மறுகையால் பைலை பிடித்து பார்த்துகொண்டு இருந்தான்..

“ம்ம்ச் கெளதம்….. ”

“என்ன யசோ ”

“என்ன கெளதம் இது எப்போ பார் எதா படிச்சிட்டே இருக்கீங்க… வர வர என்னை கண்டுக்கிறதே இல்லை… நீங்க எல்லாம் என்னை லவ் பண்ணிங்கன்னு சொல்லாதிங்க…”

“ஏன்??? ”

“முதல்ல அந்த பைலை க்ளோஸ் பண்ணிட்டு என்னை பாருங்க” அவன் மார்பில் குத்தினாள்..

“வர வர ரௌடிசம் பண்ண ஆரம்பிச்சுட்ட யசோ…” என்றபடி அவள் சொன்னதை செய்தவன்

“சொல்லுங்க மேடம் என்ன வேணும் உங்களுக்கு ”என்றான்..

“ஒரு வக்கீல் வர வர ரொம்ப வாய்தா வாங்குறார்… ”

“அட யாருமா அந்த வக்கீல் சொல்லு என்னானு விசாரிப்போம்.. ” என்று அவன் கிண்டலாய் கூற

“ச்சு உங்களுக்கு எப்ப பாரு இதே கிண்டலா போச்சு… ” என்று சலித்தாள்..

“ம்ம் சரி சரி சொல்லு என்ன விஷயம் அப்போ இருந்து என் முகத்தையே பார்த்துட்டு இருந்த?? அதான் அல்ரெடி மயங்கிட்டியே??”

“மயங்கினேனா ?? நான் என்ன கன்சீவா இருக்கேனா ???”

“ஹா ஹா !!! கூடிய சீக்கிரம் அதையும் இருக்க வச்சிடலாம்… ” என்று அவன் பார்க்க, அவனது பார்வையில் சிவந்து சிரித்தாள்..

“என்ன சிரிப்பு…. ??”

“ஒழுங்கா கிஸ் பண்ணவே தெரியலையாம்.. இதுலா கன்சீவாம்….”

“ஹ்ம்ம் அன்னிக்கு பண்ண கிஸ் அவ்வளோ பிடிச்சதோ அத பத்தியே பேசிட்டு இருக்க ??” என்றவன் அவள் எதிர் பாராத நேரத்தில் மற்றொரு முத்தத்தை அவளது இதழுக்கு பரிசாய் தந்தான்..

அவனது பார்வையில் முகம் சிவந்தவலுக்கு அவனது தீண்டலில் மூச்சு முட்டிதான் போனது.. அவனது முத்தத்தில் மூழ்கித்தான் [போனாள் அவனாய் விடுவிக்கும் வரை..

“ச்சே சரியான முரட்டு வக்கீல்… என்ன பழக்கம் இது பேசிட்டு இருக்கும் போதே கிஸ் பண்றது ”

“அடேங்கப்பா.. பிடிக்காத மாதிரி தான்..  இதுக்கு தானே அப்போ இருந்து கெளதம் கௌதமன்னு சொல்லிட்டு இருந்த” என்றவன் உல்லாசமாய் கட்டிலில் சாய்ந்தான்..

“ச்சே ” என்றபடி தன் உதட்டை துடைத்தவள் “இப்படியா கடிக்கிறது ” என்றாள்..

“அட அது கிஸ் மா… ”

“கிஸ்னா இப்படி இருக்கணும் ”  என்றவள் அவன் எதிர் பாரா நேரம் அவனது இதழுக்கு பதில் பரிசு கொடுத்தாள்.. அவனுமே சந்தோசமாய் தான் மூழ்கிபோனான் அவளாய் விலகும் வரை..

“இதெப்புடி இருக்கு வக்கீல் இது தான் கிஸ்… ” என்று புருவம் உயர்த்தினாள்..

“கிஸ்ஸா… கொசு உட்கார்ந்த மாதிரி இருக்கு” என்றவனும் மீண்டும் அவளை சிறை செய்தான் முத்தத்தால் மட்டும் அல்ல மொத்தமாயும்…

விடியலில் கண் விழிக்கவே பிடிக்கவில்லை கௌதமனுக்கு… இத்தனை நாள் மனதில் இருந்த ஏக்கம் துக்கம் எல்லாம் ஒரே நாள் உறவில் வடிந்தது போல் இருந்தது… யசோதராவை அணைத்தபடி அவளது முதுகை வருடியபடி படுத்திருந்தான்..

“ம்ம் கூசுது கௌதம் ” என்றவள் இன்னும் ஒண்டி படுத்துகொண்டாள்..

“கூச்சமா.. நேத்து அப்படி எதுவும் என் கண்ணனுக்கு தெரியலையே..” என்றான் அதிகாலையிலேயே அவளை சீண்டும் நோக்கில்..

“ஹ்ம்ம் இருட்டுல எப்படி கண்ணு தெரியும்” அவளது மார்பில் முகம் புதைதிருந்தவளின் இதழ் அசைப்பே அவனுக்கு வேறு பாசை பேசியது..

“ஹா… இப்போ வெளிச்சமா இருக்கே யசோ… பாக்கட்டுமா??”

“எதை ??”

“உன் கூச்சத்த…” என்றவன் முடித்ததை மீண்டும் தொடங்கினான்…

மகன் மருமகளின் முகத்தை பார்த்ததுமே அம்பிக்காவிற்கு மகிழ்ச்சியானது.. இருவரது வாழ்வும் இனி அழகாய் செல்லும் என்று எண்ணியபடியே இட்லியை வாயில் தள்ளிக்கொண்டு இருந்தார்..

கௌதமன் தட்டில் கவனமாய் இருக்க அவனது கவனத்தை அவன் செல் கலைத்தது.. திரையில் வந்த எண்ணை பார்த்து நொடி பொழுது யோசித்தவன் பின் எடுத்து பேசினான்..

அவன் பேசுவதை கண்ட பெண்கள் இருவரும் அவன் முகமே பார்த்திருக்க பேசி முடித்தவனோ கண்களை இறுக மூடி திறந்தவன்

“ப்ரியாவோட அப்பா அம்மா ஈவ்னிங் வராங்களாம் இங்க ” என்று கூறவும் யசோதராவின் முகம் அத்தனை நேரம் இருந்த பொழிவை இழந்தது..

அதிர்ச்சி, பயம், குழப்பம் இப்படி கலவையான உணர்வுகள் தோன்ற கௌதமனை கலக்கமாய் பார்த்தாள்..

அம்பிகாவோ என்ன கூறுவதென்றே தெரியாமல் பார்க்க

“என்ன ரெண்டு பெரும் இப்படி பாக்குறிங்க?? அவங்க ஒன்னும் நம்ம எதிரி இல்லையே.. கல்யாணத்துக்கு வர முடியலை அதான் இப்போ உங்களை பாக்க வரோம்னு சொல்றாங்க.. வேண்டாம்னு சொல்ல முடியுமா என்ன ??” என்றவன் மீண்டும் உண்ண தொடங்கினான்..

யசோதராவிற்கு அதற்குமேல் உணவு இறங்குமா என்ன ?? பெயருக்கு கொறித்துவிட்டு எழுந்துவிட்டாள்..

“இந்த ஜூஸ் குடி யசோ ” என்றபடி அருகில் நெருங்கியவனை புரியாத பார்வை பார்த்தாள்..

“என்ன யசோ… ”

“இல்ல.. அவங்க… அவங்க என்னை தப்பா நினைப்பாங்களா கெளதம்.??” 

“ச்சே அசடு.. அவங்க அப்படி பட்ட டைப் இல்ல.. இங்க பார் யசோ என் வாழ்கையில் நடந்தது எல்லாமே உனக்கு தெரியும்.. ப்ரியாக்கும் எனக்குமான கல்யாணம் நிஜம் தானே யசோ.. அப்போ அவ பேரன்ட்ஸுக்கு நம்ம மரியாதை கொடுத்து தான் ஆகணும்”

“ம்ம் சரி… ”

“இங்க பார் உன்னை இதுல தப்பா நினைக்க எதுவுமே இல்லை.. அப்படி அடுத்தவங்க நினைப்புக்கு எல்லாம் நீ மசிய மாட்டியே இப்போ என்ன ??”

“யார் என்ன நினைச்சாலும் எனக்கு ஒன்னும் இல்லைன்னு தான் எப்போவும் இருப்பேன் ஆனா என்னவோ இவங்களை பேஸ் பண்ண கொஞ்சம தயக்கம் அவ்வளோ தான்.. ”

“ஹ்ம்ம் சாயங்காலம் நானே உன்னை கூட்டிட்டு வரேன்..சோ டென்சன் வேண்டாம் ” என்று கூறியவன் அவளையும் அழைத்துக்கொண்டே சென்றான்..

பேக்டரிக்கு சென்றால் அங்கே யசோவை காண தென்மொழி வந்திருந்தார்..

“என்ன சித்தி இங்க.. ??”

“உன்னை பாக்க தான் யசோ.. வீட்டுக்கே வரல நீ.. பார்த்து நாளாச்சே அதான் இங்க வந்துட்டேன்..”

“ஏன் சித்தி வீட்டுக்கு வரலாமே..”

“இன்னொரு நாள் வரேன் யசோ” அவள் முகத்தில் என்ன கண்டாரோ

“என்ன யசோ ஏன் குழப்பமா இருக்க ” என்று வினவ

“ஹா அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தி ” என்றாள்..

“வேற எதுவும் பிரச்சனை இல்லையே… ”

“இல்.. இல்லை சித்தி.. ” என்று மறுத்தவளுக்கு அதற்குமேல் மறைக்கமுடியவில்லை

“இன்னிக்கு வீட்டுக்கு ப்ரியாவோட அப்பா அம்மா வராங்களாம் சித்தி”

சில நொடிகள் அதை கேட்டு மௌனமாய் இருந்த தேன்மொழி

“இங்க பார் யசோ இது நீ ஏற்படுத்திகிட்ட வாழ்கை.. கெளதம் பத்தி எல்லாம் தெரியும் தானே.. பிறகு ஏன் இந்த தயக்கம் எல்லாம்.. தூக்கி போடு.. நீ எப்பயும் போல தைரியமா இதையும் பேஸ் பண்ணு..” என்று ஒரு அன்னையாய் அவளுக்கு ஆறுதல் கூற அவள் மனதிற்கு இனம் புரியாத தைரியம் முளைத்தது..

மேலும் சில நேரம் பேசிவிட்டு சென்றார் தேன்மொழி..

கௌதமன் கோர்டில் அன்றைய வழக்கில் கவனம் செலுத்திவிட்டு தான் முடிக்க வேண்டிய வேலைகளையும் முடித்துவிட்டு தன் ஜூனியர்களோடு ஒரு வழக்கின் தீர்ப்பை பற்றி கலந்தாலோசித்து கொண்டு இருந்தான்..

“ஸ்டீபன் இந்த ஜட்ஜ்மென்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் பாருங்க… தென் குணா இதெல்லாம் நீங்க பாயிண்ட்ஸ் எடுங்க” என்று அவன் கூறிய நேரம் அவன் அலுவலக தொலைபேசி அலறியது..

“ஓகே கைஸ் யூ கேரி ஆன் ” என்றவன்

“ஹலோ ” என்றான்…

“என்னவே வக்கீலு… சௌக்கியமா??  ”

“யார் நீ ???”

“அட இன்னுமா நீ கண்டுபிடிக்குத?? அதே கேள்விய கேக்குத”

“டோன்ட் வெஸ்ட் மை டைம்… ”

“அடடே… உம்மா நேரமே எங்கிட்டதாவே.. என்ன சந்தோசமா இருக்குதியோ.. பேச்சுல துள்ளல் தெரியுதுவே… ” என்று அப்பக்கம் சிரிக்க கௌதமனோ கடுப்பானான்..

“இங்க பார் உனக்கு என்ன வேணும் ?? பொழுது போகாம என்கிட்ட இப்படி பேசுறயா??  ”

“ஆமாவே நேரமே போகமாட்டிக்கு.. நீ வந்து தள்ளுலே.. ஹா ஹா… உன் சந்தோசம் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளுக்கு தான்லே.”

“அதையும் பாக்குறேன்லே ” என்று எதிர்த்தரப்பை போலவே கூறியவன் பட்டென்று போனை  வைத்துவிட்டான்..

“யாரா இருக்கும் ?? இந்த குரல் இதுக்கு முன்ன கேட்டது இல்லை… யாரது…???” என்ற கேள்வி அவன் மனதில் தொக்கி நின்றது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement