Advertisement

அத்தியாயம் – 20

“ப்ரோ, இப்போ புரியுது நீங்க ஏன் அண்ணியை கடத்த பிளான் போட்டிங்கன்னு.. அவ்வளோ ரணகளத்திளையும் குதூகலாமா இருந்திருக்கிங்க ” என்று கோகுல் கிடைத்த வாய்ப்பை விடாமல் சராமாரியாய் கௌதமை வாரிக்கொண்டிருந்தான்..

கௌதமனோ நீ என்ன கூறினாலும் அதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல, தன் மேடிட்ட வயிற்றின் மீது வண்ண வண்ணமாய் அழகழகாய் அணிவகுத்து நிற்கும் வளையல்கள் நிரம்பிய மென் கரத்தை வைத்து அமர்ந்திருந்த யசோதராவை பார்த்துக் கொண்டிருந்தான்…

ஆம் அன்று காலையில் தான் யசோதராவின் வளைகாப்பு முடிந்து இருந்தது.. ஐந்து அல்லது ஏழாவது மாதம் வளைகாப்பு நடந்த தேன்மொழி கேட்டதற்கு கெளதமன் சம்மதிக்கவே இல்லை.. ஒன்பதாவது மாதத்தில் செய்தால் போதும் என்றுவிட்டான்..

யசோதராவோ கணவனை ஒரு பார்வை பார்ப்பதும், தன் தங்கைகளோடு மறுபக்கம் பேசுவதுமாய் அமர்ந்திருந்தாள்..

“ப்ரோ போதும் ப்ரோ தாங்க முடியல.. கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்க” என்று கோகுல் கெளதமனை கைகளை பிடித்து இழுக்க

“டேய், ஏன் டா நீ வேணும்னா வசுவ பாரு.. நான் வேணாம்னு சொல்லவே போறது இல்லை.. என்னை ஏன் தொல்லை பண்ற?? ” என்று சிடுசிடுத்தான்..

“ஹ்ம்ம்!!! நல்ல பொண்ணை பார்த்து கட்டி வச்சிங்க எனக்கு… பார்த்துட்டாலும் ” என்று சலித்துக்கொண்டான் கோகுல்..

“என்ன கோகுல் கல்யாணம் ஆகி அஞ்சு மாசத்துல இப்படி ஒரு சலிப்பு ??” என்றபடி விசாகன் வர

“அத ஏன் சகல கேக்குறிங்க.. இவளுக்கு என் மேல லவ் இருக்கா இல்லையான்னே தெரியலை.. ஆனாலும் பாசமா தான் இருக்கா ” என்று கூற கௌதமனுக்கு சிரிப்பு வந்து விட்டது..

“என்ன கெளதம், கோகுல் பீல் பண்றார் நீங்க சிரிக்கிறிங்க??”

“அது ஒன்னும் இல்ல விசா, இப்போ கூட யசோ கிட்ட நீ கெளதமை லவ் பண்றியான்னு கேளுங்களேன் உடனே டக்குனு இல்லைன்னு தான் சொல்லுவா…  அப்போ அவ தங்கச்சி வசு எப்படி இருப்பா.. அதான் சிரிச்சேன்…”

“அப்போ நீங்களும் அவுட்டா.. ஹப்பாடி இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்று கோகுல் நிம்மதி பெருமூச்சு விட கெளதமனின் மனமோ ஒன்பது மாதங்களுக்கு பின்னே சென்றது…

அன்று அவனது வழக்கு வெற்றிபெற்று, பின் மருத்துவமனைக்கு சென்று கோகுலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்பிகாவிடம் அனைத்தையும் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை..

உடல் கழுவி உடை மாற்றி படுத்தபின்பும் கூட இருவருக்கும் நடுவில் மௌனமே ஆட்சி செய்தது.. ஆனாலும் அது எத்தனை நேரம் இருந்துவிடும் அதுவும் இப்படிப்பட்ட ஒரு ஜோடிகக்கு..

“யசோ…. ” “ கெளதம் ” என்று இருவரும் ஒரே நேரத்தில அழைக்க, இருவரின் இதழ்களிலுமே புன்னகை..

“ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் நிம்மதியா தூங்க போறேன் யசோ ” என்றவன் அவளை இறுக அணைத்துகொண்டான்…

அவளுக்குமே அப்படித் தானே… ஆனாலும் அவளுக்கு தன் கணவனிடம் பேசவும் கூறவும் கேட்கவும் ஆயிரம் விஷயங்கள் இருந்தன.. ஆனாலும் கண்கள் மூடி நிர்மலமான முகத்துடன் உறங்கும் தன் கணவனை எழுப்பிட மனமில்லை அவளுக்கு..

“நீயும் தூங்கு யசோ ” என்று கண்கள் திறக்காமல் மொழிந்தவன், அவளையும் உறங்கச் செய்தான்..

அதிகாலை நேரம், எப்பொழுதுமே கௌதமனுக்கு பிடித்தமான பொழுது, பறவைகளின் கீச் கீச் ஒலியும், அதற்கு போட்டியை ஆதவனின் வர்ண ஜாலங்களும் அவன் மனதை வசீகரிக்கும்..

எப்பொழுதுமே தோட்டத்தில் செய்திதாளோடு கழிக்கும் அப்பொழுதை இன்று ஏனோ தன் மனைவியோடு பால்கணியில், கையில் காப்பி கோப்பையோடு கழித்துக் கொண்டிருந்தான்..

அவளோ “உங்கட்ட ஒன்னு சொல்லணும் கெளதம் ” என்றபடி அவனை பின்னோடு அணைத்து நின்றவள், அவன் கையில் இருந்த கோப்பையில் காபி பருகினாள்..

“உனக்கும் ஒரு கப் கொண்டு வந்து குடிச்சா என்ன ??”  வேண்டுமென்றே சீண்டும் குரலில் அவன் கூற

“இதுவும் என் கப் தான் ” என்றபடி மீண்டும் பருகினாள்..

“பட் திஸ் ஒன் இஸ் மைன் “ என்றபடி அவளை முன்னே இழுத்தவன் அவளது இதழை பருக, அவளோ அவனது நெஞ்சில் கை வைத்து  தள்ளி

“நான் ஒன்னு சொல்லணும் சொன்னேன்ல…”  கெளதம் என்றபடி லேசாய் சிணுங்க

“அட டா என்ன இது சிணுங்கள் எல்லாம் பலமா இருக்கே, அப்போ விசயமும் பெருசு போலவே.” என்று அவளது கண்களை ஊடுருவ,

அவளோ அவனது கையில் இருந்த கோப்பையை வாங்கி அருகில் வைத்துவிட்டு, அவனது கரங்களை பிடித்து தன் வயிற்றில் வைத்தாள் அவனையே பார்த்தபடி….

“என்ன யசோ வயிறு வலியா ??” என்று அவன் கேட்டானே பார்க்கவேண்டும்… அவளுக்கு சப்பென்று ஆகிவிட்டது..

“ம்ம்ச்… நீங்க எல்லாம் என்ன தான் வக்கீலோ..”

“வக்கீல் தான் மா டாக்டர் இல்ல.. சொல்லு வயித்துல என்ன?? ஜூனியர் இருக்காங்களா” என்று அவனும் புன்னகையோடு கேட்க..

“ஹேய்… அப்போ தெரிஞ்சுகிட்டே தான் அப்படி கேட்டிங்களா ??” என்று அவன் மார்பில் குத்த அவனோ அவளை இறுக அணைத்துக்கொண்டான்..

“எப்படி தெரியும் கெளதம்…??”

“அதையும் நீ தான் சொல்லேன்… ”

“நோ.. நீங்க தான் சொல்லணும்…”

“நேத்து நைட் நீ இதே போல பண்ண என் கையை பிடிச்சு உன் வயித்துல வச்சுத்தான் தூங்குன… என்ன டா என் பொண்டாட்டி இப்படி செய்ய மாட்டாளேன்னு பார்த்தா, மேடம் ரிப்போர்ட் டேபிள் மேல தான் இருந்தது..” என்று தோளை குலுக்கினான்.. 

“ஓ!! அப்போ நேத்தே தெரியும்.. ஏன் என்கிட்டே கேட்கல கெளதம்.. சோ மீன் யு ஆர்… ”

“அப்படி இல்ல யசோ.. நீ என்கிட்டே சொல்லனும்னு இருக்கும் போதும் நானே கண்டுபிடிச்சேன்னு சொல்லி உன்கிட்ட கேட்டா, உனக்கு சப்புன்னு ஆகிடாது அதான்..” என்று கூறி சிரித்தவனை முறைத்தாள்..

அவனது சிரிப்பு அவளையும் தொற்றிக்கொண்டதோ என்னவோ முறைப்பில் ஆரம்பித்து சிரிப்பில் முடித்தாள்..

“இப்படி ஒரு லைப் தான் நான் ஆசைப்பட்டேன் யசோ… ”

“ஹ்ம்ம்… கொஞ்சம் சீக்கிரமே நடந்திருக்க வேண்டியது.. நாலு வருஷம் லேட்டாகிடுச்சு… உங்களுக்கு இன்னும் அந்த வருத்தம் இருக்கா கெளதம் ???”

“நாலு வருஷம்.. ம்ம்.. வருத்தம்னு இல்லை யசோ.. சில கசப்பான விஷயங்கள் தான் நமக்குள்ள நிறைய புரிதலை கொடுத்திருக்கு.. நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணதுமே நீ சரின்னு சொல்லிருந்தா நம்ம லைப் இவ்வளோ சுவாரசியமா இருந்திருக்காது..”

“அதுவம் உண்மை தான் கெளதம்.. பட் எனக்கு தோணுது நம்ம நாலு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டமோன்னு..”

“ஹா ஹா… ஆமா யசோ.. அப்போவே கல்யாணம் நடந்திருந்தா இப்போ நீ ரெண்டாவது பிள்ளைக்கு கன்சீவ் ஆகிருப்ப” என்று கூறி அவளது மனநிலையை  மாற்றினான்..

இப்படி இவர்கள் பொழுது கழிய, யசோ கர்ப்பமாய் இருக்கும் விஷயம் அனைவர்க்கும் தெரிய வர, வீட்டில் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்.. 

அம்பிகாவிற்கு தான் மனம் குளிர்ந்து போனது.. மகனது வாழ்வு தனியாகவே கழிந்து விடுமோ என்று இருந்தவருக்கு, அடுத்த தலைமுறை வரும் செய்து இனிப்பாய் தானே இருக்கும்..

யசோதராவை தழுவிக்கொண்டார்…

“என்ன சொல்றதுன்னே தெரியலை யசோம்மா.. ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றவர் தன் பரிசாய் மருமகளுக்கு கைகளில் பொன் வளையல் அணிவித்தார்..

விஷயமறிந்து வந்த வேத மூர்த்தியும், தேன்மொழியும் தங்கள் பங்கிற்கு பரிசினை வழங்க, விசாகனும் சித்தாராவும் வந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்..

வசுவிற்கு தான் முதலில் என்ன செய்வது என்று புரியவில்லை.. தன் உடன் பிறந்தவளை இறுக தழுவிக்கொண்டாள்..

“ரொம்ப சந்தோசமா இருக்கு கா… ” என்றவளுக்கு வார்த்தைகள் வரவில்லை..

தேன்மொழி “யசோம்மா, கொஞ்ச நாள் வந்து அங்க இருக்கியா டா..” என்று அழைக்க அவளோ கணவன் முகம் நோக்கினாள்..

“இப்போவே என்ன அத்தை, இனி வீட்ல விசேசம்னா வந்து தானே ஆகணும்” என்று சித்தாரா விசாகனை கண் காட்ட அடுத்து அவர்களின் திருமண நாள் குறிக்கப்பட்டது..

நாட்கள் அழகாய் கழிய, மருத்துவமனையில் இருந்து கோகுல் கௌதமனின் வீட்டிற்கு வந்தான்..

“அண்ணி… அண்ணா வாழ்த்துக்கள்.. என்னை சித்தப்பா ஆக்கினதுக்கு..” என்று ஆர்ப்பாட்டமாய் சிரிக்க வசுவோ

“இவனை சுட்டது தப்பே இல்லை” என்று  எண்ணினாள்..

அடுத்த நொடியே இருமல் வந்தவன் போல் நடித்த கோகுல் கொஞ்சம் தண்ணி என்று வசுவை நோக்க முகம் திருப்பிக்கொண்டாள்..

“ஹ்ம்ம் நாட்ல யாருக்கும் நன்றி இல்லடா சாமி.,.” என்று இருக்கையில் சாய்ந்தவன்

“அப்புறம் ப்ரோ, சித்தாரா விசாகனுக்கு நாள் குறிச்சாச்சு, அடுத்து எல்லாரும் ஆவலா எதிர் பார்க்கிறது என் கல்யாணத்தை தான்.. சோ அதுக்கும் ரெடி பண்ணா நல்லாருக்கும் ” என்றான்

“டேய் இப்போதானே ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த.. ” என்று அம்பிகா கூற

“என்ன பெரியம்மா நீங்க, முதல்ல தோண்டனும், பிறகு கட்டனும்… எப்படியும் தோண்டவே நாள் ஆகும்.. அதுக்குள்ள நான் சரியாகிடுவேன்” எனவும் அங்கே சிரிப்பலை பரவியது..

ஆனால் வசுவோ எதோ தீவிர யோசனையில் இருந்தாள்..

அவரவர் தங்கள் வேலையை பார்க்க செல்ல கோகுலும் அவளும் தான் தனித்து இருந்தனர்..

“என்ன மிஸ். கடியரசி… யார கடிக்கலாம்னு தீவிர யோசனையா ??”

அவனை முறைத்தவள் பதில் பேசவில்லை..

“இது நான் ஜூஸ் குடிக்கிற நேரம்…. ”

“அது ஹாஸ்பிட்டல்ல… ”

“ஓ இப்படினா நான் அங்கேயே இருந்திருக்கலாம் ”

“இருந்திருக்க வேண்டியது தானே.. ”

“ஹ்ம்ம் ஹாஸ்பிட்டலையே இவ்வளோ கவனிக்கிறாளே, வீட்டுக்கு வந்தா நல்லா கவனிப்பன்னு நம்பி வந்தேன்..பச்சை தண்ணி கூட குடுக்கலை ” என்று அவன் கூறிய பாவத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“என்ன சிரிப்பு… ”

“என்னோட சிரிப்பு… ”

“அது தெரியுது.. இதுக்கு என்ன அர்த்தம்..”

“ஹூப்ஸ்….. போதும் கோகுல்… எப்போ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்….”

“என்ன கல்யாணமா ???? அப்போ லவ் எல்லாம் யார் பண்ணுவா ???”

“ம்ம்ச் அதெல்லாம் பண்ணனுமா ???”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான்… வீட்ல பேசுவோம்….”

“நீங்க பேசுனது எல்லாம் எங்களுக்கும் கேட்டுச்சு ”என்றபடி மொத்த குடும்பமும் வந்து சேர்ந்தது..

“அதானே மூக்கு வேர்த்திடுமே..” என்று கோகுல் கூற, இதெல்லாம் உன் வேலை தானே என்று வசு சித்தாராவை நோக்கினாள்..

“நான் ஒன்னும் பண்ணல வசு.. நீங்க பேசினது தான் எல்லாருக்குமே கேட்டுச்சே..” என்று கூற அப்பொழுதே அம்பிகா கோகுலின் பெற்றோரிடம் பேசினார்.. நல்லது ஒன்று நடந்தால் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்குமாம்..

விசாகனின் தந்தை வெளிநாட்டில் இருந்து வர சில மாதங்கள் ஆகும் என்றதும், அவர் வரும் வரை காத்திருந்தே ஒரே நாளில், ஒரே மேடையில், சித்தாரா விசாகன், கோகுல் வசுந்தரா திருமணம் சீரும் சிறப்புமாய் நடந்தது.. 

யசோவை கௌதமன் கணவனாய் மட்டுமல்ல ஒரு தாயாகவும் மாறி கவனிக்க தொடங்கிவிட்டான்..

இது போதாதென்று அம்பிகா, தேன்மொழி வேறு.. கேட்கவா வேண்டும்..

ஆனால் கலைவாணி தான் மகிழ்ச்சியாய் இல்லை.. காரணம் அவரது குணமே..

சித்தாரா தான் மருமகளாய் வரவேண்டும் என்று அடம் பிடித்தவர், அது நடந்த பிறகும் தன் அதிகாரத்தை காட்ட, சித்தாராவோ முதலில் பொறுத்து போனவள் பிறகு முகம் வாட

மனைவியின் மனக்கவலை விசாகனை பாதிக்க

“ம்மா ஏன் மா இப்படி பண்றீங்க?? கொஞ்சமாவது எங்க விருப்பத்துக்கு விடுங்கம்மா” என்று குரல் உயர்த்த நாளடைவில் தனி குடித்தனத்தில் வந்து நின்றது.. இதில் என்ன வேடிக்கை என்றால் வேதமூர்த்தியும், விசாகனின் தந்தையும் இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்ததே..

இங்கே இப்படியென்றால், வசுவும் கோகுலும் நாளொரு சண்டை பொழுதொரு வம்பு தான்.. ஆனாலும் இருவரின் அன்பையும் உணர்ந்தே இருந்தனர்.. என்?? எதற்கு?? என்று கேள்விகள் இல்லா காதல்..

அதிலும் வசுந்தராவை எவ்வகையில் சேர்ப்பது என்ற குழப்பமே கோகுலுக்கு பெரும் கவலை.. பஞ்சா?? பாறையா?? என்ற பட்டிமன்றமே அவனுள் தினமும் நடக்கும்..

“ஹலோ ப்ரோ… என்ன உட்காந்த இடத்துலேயே கனவா ???” என்று கௌதமன் தோளை பிடித்து கோகுல் உலுக்கவும் தான் தன் எண்ணவோட்டத்தில் இருந்து வெளியே வந்தான்..

அதே நேரம் “ஹே !! சாரி கைஸ் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று தன் எட்டு மாத குழந்தை அனன்யாவை  தூக்கியபடி வந்தனர் நிரஞ்சனும் சஞ்சனாவும்..

இளமை பட்டாளம் ஜோடி ஜோடியாய் ஒன்று கூடினால் அங்கே மகிழ்ச்சிக்கும், அரட்டைக்கும் பஞ்சமிருக்குமா…

ஆனால் இதிலெல்லாம் ஒட்டாமல் ஒதுங்கி இருந்தது கலைவாணி தான்.. ஏனோ அவரது பார்வை நொடிக்கு ஒரு முறை யசோதராவை தழுவி மீண்டது..

கௌதமனும் இதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்…

இருக்காத பின்னே, எந்த ஒரு விசயமாய் இருந்தாலும் தன் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டோ, இல்லை ஒரு பார்வையில் சம்மதம் பெற்றோ செய்யும் யசோதராவை பார்க்க பார்க்க கலைவாணிக்கு தான் என்ன தவறு செய்தோம், எதை இழந்தோம் என்று புரிந்தது..

வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஏற்கனவே சென்றிருந்தபடியால் வீட்டினர் மட்டும் இருக்கவே அம்பிகா அனைவரையும் உண்ண அழைத்தார்..

முதலில் தேன்மொழி வந்து யசோவை அழைக்க அவளோ அனைவரோடும் சேர்ந்து உண்ணுகிறேன் என்று கூற

கலைவாணியோ “வயித்துபுள்ள காரி எல்லார் முன்னாலையும் சாப்பிட கூடாது.. ஒருத்தர் கண் மாதிரி இன்னொருத்தர் கண் இருக்காது.. போ, போயி முன்னாடி சாப்டு.. ” என்று கூற யாருமே இதை எதிர் பார்க்கவில்லை..

அத்தனை ஏன் யசோதரா கூட இதை எதிர் பார்க்கவில்லை.. ஆனாலும் எதுவும் வெளிக்காட்டாமல் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாய் கொடுத்து சென்றுவிட்டாள்..

“சித்தி… ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.. பட்டு சேலை கட்டி எப்படியோ இருக்கு” என்று நழுவ பார்த்தவளை உண்ண வைத்தே விட்டனர் மூன்று பெண்மணிகளும்..

அவள் உண்டு உடை மாற்றி வரும் பொழுது கௌதமன் மட்டுமே அறையில் இருந்தான்..

“என்ன ஒருத்தரையும் காணோம்… ” என்றபடி வந்தவளை வாஞ்சையாய் பார்த்தான்..

“நான் ஒருத்தன் இருக்கேனே… ”

“நான் உங்களை கேட்கல… ”

“நான் மட்டும் போதும் யசோ உனக்கு…. ” என்றபடி அவளது மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான்..

“ஹ்ம்ம் இப்போவே போட்டிக்கு வந்தாச்சா ??”

“அப்படி ஏன் சொல்ற ??”

“வேற எப்படி சொல்ல ??”

“நான் என் ஜூனியர் கூட பேச படுத்தேன்… ”

“ஹ்ம்ம் நம்பிட்டேன்…. ”

“அது சரி, உன் கலைவாணி அத்தை எப்போ இருந்து பாசமலரா மாறினாங்க ??”

“அதை நான் உங்கட்ட கேட்கணும்?? உங்கட்ட வந்து தனியா எதுவோ பேசிட்டு இருந்தாங்க ??”

“ஹ்ம்ம் அது வா…எல்லாம் விசாகன் சித்தாரா விஷயம் தான்.. தனியா இருக்கும் போது தான் உறவுகளோட அருமை புரியுது போல.. விசாகிட்ட பேச சொன்னாங்க ” என்று அவன் கூறிய அடுத்த நொடி

“அதெல்லாம் நீங்க பேச கூடாது கெளதம்.. இப்போவே சொல்லிட்டேன் இதுல நீங்க தலையிடவே கூடாது..” என்றாள் வேகமாய்..

“ஸ்ஸ்… மெல்ல.. இப்போ ஏன் இவ்வளோ வேகம்..?? கூட இருந்தே சண்டை போட்டு இருக்கிறதுக்கு தனியா இருக்கிறதே நல்லது.. என்னிக்கு இருந்தாலும் விசா உங்க மகன்ங்கிறது மாறாது.. நீங்க கவலை படாம இருங்கன்னு சொன்னேன் போதுமா..” என்றவன் நகண்டு படுத்துக்கொண்டான்..

“சரி சரி.. ரொம்பத்தான் சீன் போடதிங்க வக்கீல் சர்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கிளம்பிடுவேன்.. ”

“கிளம்பு கிளம்பு… ”

“ச்சே.. பொண்டாட்டி கிளம்புராளேன்னு கொஞ்சாமாவது பீல் பண்றிங்களா ??”

“ஆமா இங்க இருந்து கிளம்புனா ஒரு பதினைஞ்சு நிமிசத்துல அங்க வந்திடுவேன்.. இதுக்கு ஏன் பீலிங்க்ஸ்.. அப்படியே நீ மட்டும் எதோ உருகுற மாதிரி தான்…”

“சரிதான் போங்க… ”

“என் ஜூனியர் வரவும் சொல்வேன் இப்போவர உங்கம்மா என்னை லவ்வே பண்ணலன்னு..”

“அப்போ பேரன் பேத்திக்கு கூட நீங்க இதையே தான் சொல்ல வேண்டியது வரும்…”

“வீட்டுக்கு வெளிய நான் போர்ட் கூட மாட்டுவேன், என் பொண்டாட்டி என்னை லவ்வெல்லாம் பண்ணல, ஆனாலும் என்னை பிடிச்சிருக்காம்ன்னு… ”

“அப்படியா கெளதம்.. நான் உங்களை லவ் பண்ணலையா ?? ” என்று அவள் மெல்ல புன்னகைத்து கேட்க அவனுமே சிரித்துக்கொண்டான்..

“பாவம் கோகுல், இப்போ இதே புலம்பல் தான் அவன்கிட்டயும்.. வசு என்னைய லவ் பண்ராளான்னே தெரியலன்னு சொல்லிட்டு இருந்தான்…”

“ஹா ஹா…. இதுல இருந்து என்ன தெரியுது, அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்க தெரியலைன்னு”

“நா உன்னை புரிஞ்சு நடந்துக்கலையா ?? யசோ ” என்றான் அவளை போலவே மெல்ல புன்னகைத்து கேட்க, அவளும் சிரித்துக்கொண்டாள்.. 

“யசோ…. கெளதம் ” என்று அம்பிகாவின் அழைப்பு கேட்க வெளியே வந்தனர் இருவரும்..

“நல்ல நேரம் முடியுற முன்னமே கிளம்பனும் யசோ” என்று தேன்மொழி கூற..

கௌதமனோ “அத்தை நாளைக்கு கூட இதே நல்ல நேரம் வரும்…” என்றான்..

“அது நாள் முழுக்க வந்துட்டு தான் கெளதம் இருக்கும்.. ஆனா பொண்ணுக்கு வளைகாப்பு இன்னிக்கு தானே ” என்று வேத மூர்த்தி கூற

யசோதராவோ தன் கணவன் முகம் பார்த்து நின்றாள்..    

கௌதமனோ சரி கிளம்பு என்பது போல கண்கள் மூடி திறக்க, சரியென்று அவளும் கிளம்ப தயாரானாள்.. 

கோகுல் வசுவிடம் “இப்போவே சொல்லிட்டேன், உனக்கெல்லாம் டெல்லில தான் டெலிவெரி” என்று கூற

அவளோ பதிலுக்கு எதுவோ கிண்டலாய் பதில் அளிக்க,

“அண்ணி, உங்க தங்கச்சி உங்களைவிட மோசம்..” என்றான்..

“கோகுல் இதுக்கு தான் நல்லா யோசிச்சு முடிவு எடுன்னு சொன்னேன்.. நீ கேட்கல. உதாரணத்துக்கு நான் ஒருத்தன் போதாதாடா, நீயும் சேர்ந்துட்ட” என்று கௌதமன் கேலி பேச இப்பொழுது யசோ, வசு இருவருமே தங்கள் கணவன்மார்களை முறைக்க தொடங்கினர்..

“சரி சரி… கேலி, கிண்டல், முறைப்பு எல்லாம் போதும்.. எல்லாம் சேர்ந்து ஒரு செல்பி எடுப்போம்” என்று விசாகனும், சித்தாராவும், ஒரு செல்பி ஸ்டிக்கோடு வர அனைவரின் புன்னகை நிறைந்த முகத்தையும் அவ்வலைபேசி கேமெரா பதிவு செய்துக்கொண்டது…

            அதே புன்னகையோடு நாமும் விடை பெறுவோம்….!!!!!

                                    நன்றி!!   

 

 

 

 

 

 

 

Advertisement