Advertisement

அத்தியாயம் – 2

தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்… உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம் எதுவும் நடக்கவில்லை தான், இருந்தாலும் எதோ ஒன்று அவன் மனதை போட்டு குடைந்தது..

எதுவாய் இருக்கும் ??? ஏன் இப்படி?? என்ற கேள்விகள் போட்டு அவனை பாடாய் படுத்தியது….

சில நேரம் அனைவரும் உறங்கும் பொழுது நமக்கு மட்டும் உறக்கம் வரவில்லை எனில் அத்தனை கடுப்பாய் இருக்கும், உறங்கும் அனைவரையும் எழுப்ப தோன்றும்… ஹோ !!! என்று கத்த வேண்டும் போல் தோன்றும் அது போல் தான் அவனுக்கும் இருந்தது…

சிறிது நேரம் கண்கள் மூடி மனதை ஒருநிலை படுத்தி தியானம் செய்ய முயற்ச்சித்தான், தினமும் செய்வது தான் ஆனால் இன்று அதுவும் கைவிட்டது..

“ஓ !!!!! ஷிட்…….. ” என்று தலையணையை தூக்கி விசிறி அடித்தான்…

“வாட் ஹேப்பன் டு மீ…”

தலையில் கை வைத்து அமர்ந்தவனை அலைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தவன், அழைப்பது வேதமூர்த்தி எனவும் முகத்தில் கேள்வியை தேக்கி, பதிலை பேசியில் உரைத்தான்..

“சொல்லுங்க அங்கிள்..”

….

“என்ன ??!!!!!!!!!!!!”

……….

“போன் பண்ணி பார்த்திங்களா அங்கிள்???”

……………

“ஓ !! பிரண்ட்ஸ் வீட்டுக்கு எங்கயாவது???? ”

………

“சரி சரி நீங்க வொரி பண்ணாதிங்க, நான் வரேன்” என்று அலைபேசியை அணைத்தவன், ஒரு வேளை இதனால் தான் தன் மனம் அத்தனை பட்டதோ என்று எண்ணினான்..

ஆனாலும் இதெல்லாம் யோசிக்க நேரமில்லை அவனுக்கு வேகமாய் தன் அன்னையை அழைத்து விஷயத்தை சுருக்கமாய் சொல்லிவிட்டு, அதனினும் வேகமாய் காரை கிளம்பி நேராய் சென்று நிறுத்திய இடம் வேதமூர்த்தியின் இல்லம்..

யசோதராவை தவிர அனைவரும் இருந்தனர்…

“என்ன அங்கிள் ??” என்று கேட்கும் போதே அவரின் முகம், மன வேதனையை காட்டியது..   ஒருபக்கம் தேன்மொழி அமர்ந்து கண்களை கசக்கி கொண்டிருக்க, மறுபுறம் சித்தாரா கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்..

 “என்னாச்சு சித்தாரா??” என்று வினவவும்

“அ… அக்கா  இன்னும் வீட்டுகே வரலை.. போன் ஆப் ல இருக்கு.. ஆபீஸ்க்கும் போகல, எங்கனே தெரியலை..” என்று கூறி முடிப்பதற்குள் தேன்மொழி சத்தமாய் அழவே தொடங்கிவிட்டார்..

“ஸ்ஸ்!! என்ன ஆன்ட்டி இது.. முதல்ல அழுகைய நிறுத்துங்க.. அவ என்ன சின்ன பொண்ணா?? நல்ல விவரம் தெரிஞ்சவ தானே.. நீங்க அழ வேண்டிய அவசியமே இல்லை. மாமா எதா மீட்டிங் பிக்ஸ் பண்ணிருந்தாளா ??”

“அதெல்லாம் இல்ல கெளதம், இந்நேரத்துல மீட்டிங் என்ன இருக்க போது.. அப்படியே இருந்தாலும் நான் தான் போவேன்.. ” என்று அவரும் கலங்கி நிற்க முதலில் கௌதமனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை..

துளி அளவு கூட யசோதராவை தவறாய் நினைக்க முடியவில்லை அவனால்.. ஆனாலும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனாள் அனைவரையும் இப்படி பதற விட்டு என்று கேள்வி தோன்றும் பொழுதே, அக்கேள்விக்கு சொந்தக்காரி உள்ளே நுழைந்தாள்..

“யசோம்மா ” “அக்கா  ” என்று அனைவரும் அவளருகே செல்ல கௌதமன் ஒதுங்கியே நின்றான்.. அவளும் அவனை கண்டுகொள்ள வில்லை..         

“என்ன யசோம்மா எங்க போன??”

“இல்லை சித்தப்பா காலையில அவங்களை ரிசார்ட்ல தங்க வச்சிட்டு வரும் பொது  சித்தி ஒரு வேலை சொன்னாங்க அதை முடிக்க நேரம் ஆகிடுச்சு, அடுத்து பாக்டரில இருந்து போன் வரவும் அங்க போயிட்டு வீட்டுக்கு வர வழியில என் ஸ்கூல் பிரன்ட பார்த்தேன், பேசிட்டே இருந்ததில நேரம் போனதே தெரியல.”

“அதெல்லாம் சரி தான் யசோ, ஒரு போன் பண்ணி சொல்ல என்ன வந்தது. எத்தனை முறை நாங்களும் போட்டு போட்டு பார்த்துட்டு பயந்துட்டோம்”

“ஐயோ சித்தி போன்ல சுத்தமா சார்ஜ் இல்லை… இல்லாட்டி நான் சொல்லிருக்க மாட்டேனா??” என்று ஆளுக்கு தக்கன போல் பதில் கூறி அனைவரின் வாயையும் அடைத்துவிட்டாள் யசோதரா…

ஆனால் ஒருவன் மட்டும் நீ கூறும் எதையும் நான் நம்பமாட்டேன் என்பதுபோல் நின்றிருந்தான். ஆனால் அவனை எல்லாம் பொருட்படுத்துவாளா யசோ?? ஒரு பார்வை கூட அவன்புரம் திரும்பவில்லை.. அவள் கொடா கண்டி என்றால் அவன் விடாகண்டன் ஆகிற்றே,

“சித்தாரா அப்பா அம்மாவை கூட்டிட்டு போ.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா தூங்கட்டும்.  போங்க அங்கிள், ஆன்ட்டி நீங்களும் போங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க” எனவும் அனைவரும் கலைந்து சென்றனர்.. யசோதராவும் நகர போக

“நான் உன்னை போக சொல்லல யசோதரா ” என்ற குரல் தடுத்து நிறுத்தியது..

“உங்க விசாரணை எல்லாம் கோர்ட் ஓட இருக்கட்டும் கௌதம் என்கிட்டே வேண்டாம்.”

“அப்போ குற்றவாளின்னு ஒத்துக்கிற.”

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ்… ”

“உனக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ் யாருமே இல்லைன்னு தெரியும், இதுல ஸ்கூல் பிரன்ட பார்த்த, நேரம் போனதே தெரியாம பேசின.. இதை நாங்க நம்பனும்..”

அவனை ஒரு நொடி திகைத்து பார்த்தவள் “நம்ப வேண்டியவங்க நம்பிட்டாங்க.. போதுமா.” என்று அவனிடமிருந்து விலகி போனவளை கை பிடித்து நிறுத்தினான்..

“டோன்ட் டூ திஸ் அகைன் ” என்றவனின் குரலில் அப்பட்டமாய் கோவம் தெரிந்தது..

“நான் என்ன பண்ணா உங்களுக்கு என்ன ???” சீறினாள்..

“எனக்கு ஒண்ணுமில்லைமா, நடு ராத்திரில என் தூக்கம் தானே போகுது.. நாளைக்கு ஹியரிங் வேற இருக்கு அதுக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தேன்.. என் வேலை கெடுதே” முழு பொய் என்று அவனுக்கும் தெரியும்..

“ஓகே.. இனிமே சித்தப்பா கிட்ட சொல்லிடுறேன் உங்களை கூப்பிடவேண்டாம்ன்னு   ” தோளை குலுக்கி சென்றுவிட்டாள்..

“யசோதரான்னு பேர் வச்சதுக்கு யசோராங்கின்னு வச்சிருக்கணும்” என்று கூறிக்கொண்டே அவனும் தன் வீடு நோக்கி சென்றான்..

அவன் கார் சென்று மறையும் வரை பால்கனியில் நின்று பார்த்தவள், உதட்டில் மாறாத சிரிப்போடு வந்து கட்டிலில் விழுந்தாள்.. வீட்டிற்கு வர பிடிக்காமல் அங்கே இங்கே என்று சுற்றி வந்தவளுக்கு அத்தனை நேரம் இருந்த பாரம் எல்லாம் காணமல் போனது போல் இருந்தது..

சிலரோடான உறவு மட்டும் புரியாத புதிராகவே இருக்கும், பிடிக்கும் என்று கூற முடியாது இல்லை என்றும் விலகவும் முடியாது.. சில நேரம் தோளில் சாய தோன்றும், பல நேரம் குத்தி கிழிக்க தோன்றும்.. அப்படிப்பட்ட வெறுப்பிற்கும் விருப்பிற்க்கும் நடுவில் இருப்பது தான் யசோதரா கௌதமனது உறவு…

இருவரும் வார்த்தைகளில் மற்றொருவரை தாக்க சிறிதும் தயங்கமாட்டார்கள். ஆனால் ஒன்றேன்றால் முதலில் வந்து நிற்பதும் அவர்கள் தான்..

“பண்றதை எல்லாம் பண்ணிட்டு எவ்வளோ கூலா பேசிட்டு இருக்கா.. ஊர் இருக்க நிலைமைல அசால்டா இந்நேரம் வரா.. எல்லாம் அங்கிளை சொல்லணும் அவர் குடுக்கும் இடம் தான்” என்று கடிந்தபடி வீட்டை அடைந்தவனும் நிம்மதியாய் உறக்கத்தில் ஆழ்ந்தான்..

மறுநாள் பொழுது வழக்கம் போல் விடிந்திருக்க, வசுந்தரா வந்ததற்கான அடையாளமாய் அவளது பேச்சு குரல் கேட்டது.. வசுந்தரா, யாரோடும் அத்துனை நெருக்கம் காட்டாத, ஒட்டாத ரகம்.. யசோதராவோடு மட்டும் தேவைக்கு பேசுவாள், பிறரிடம் அதுவும் இல்லை, ஆனால் மனதில் அன்பிருக்கும் ..

அடம் பிடித்து சிறியதிலே விடுதியில் சேர்ந்தவள் இன்று வரை அதை தான் தொடர்கிறாள்.. ஆனால் ஆட்களை எடை போடுவதில் கில்லாடி..

“ஏன் வசு இப்படி இருக்கிறாய்” என்று யசோதரா கேட்டால்,

“நீயும் இவங்ககிட்ட இருந்து எவ்வளோ முடியுமோ அவ்வளோ விலகி இருக்கா, அதான் நல்லது..” என்று அறிவுரை கூறுவாள்..

இப்படிப்பட்டவள், வந்த உடனே ஆரம்பித்தது வேதமூர்த்தியிடம் தான் “சித்தப்பா, அக்காக்கு எப்போ மாப்பிள்ள பார்க்க போறீங்க?? ” என்ற கேள்வியை கேட்டு யசோதராவே அசந்துவிட்டாள்…

“வசு!!!!!!!!”

தேன்மொழியும், தேவமூர்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. சித்தாரா தொங்க போட்ட தலையை நிமிர்த்தவே இல்லை..

“என்னக்கா?? நான் சித்தப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன்… சித்துக்கு பார்த்திட்டாங்க தானே.. நியாயமா பார்த்தா முதல்ல உனக்கு தான் பார்த்திருக்கணும்.” என்றவளின் பேச்சில் யசோ மேலே எதுவும் பேசவில்லை..

“வசுகுட்டி, முதல்ல சாப்பிடு டா.. அப்புறம் இதெல்லாம் பேசலாம்.” என்று தேன்மொழி கூற

“இல்லை சித்தி, இப்போதானே சித்தப்பா அக்கா எல்லாம் இருப்பாங்க.. அதுவும் இல்லாம சித்தப்பா இப்போ எல்லாம் பிசினஸ்ல எதுனாலும் அக்கா கிட்ட கேட்டு தான் செய்றார்,அப்புறம் ஏன் இதை மட்டும் சொல்லாம திடீர்னு பண்ணனும்…”

“வசு… போதும்… இப்படிதான் பேசுவியா ?? சித்தப்பா சித்தி மனசு என்ன கஷ்டப்படும்.. இங்க பாரு உனக்கு எப்படியோ தெரியாது ஆனா நான்  அவங்க எது செய்தாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்னு நம்புறேன்.. இதுக்கு மேல இதை பத்தி பேசின பார்த்துக்கோ.. ஊருக்கு வந்தோமா சந்தோசமா இருந்தோமான்னு பாரு..” என்று யசோதரா சத்தம் போடவுமே

“ம்ம்ச் அக்கா… எனக்கு கேக்க தோணிச்சு நான் கேட்டேன் அவ்வளோ தான்.” என்று விட்டு தட்டில் இருந்த பணியாரத்தை விழுங்கினாள்..

வேத மூர்த்தி மனைவி தன் மகள் முகத்தை பார்த்தவர் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்.. சிறிது நேரத்திற்கு முன்பு வரைக்கூட சித்தாரா திருமண விஷயத்தை பற்றி அத்தனை பெரியதாய் எண்ணவில்லை யசோதரா..

அவளுக்கு பிடித்திருக்கிறது, மாப்பிள்ளை வீட்டிலும் சம்மதம் கூறிய பிறகு வேற என்ன இருக்கிறது ஏற்பாடுகள் செய்வது சரிதானே என்றே தோன்றியது..

இதற்கும் தன் திருமணத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்று அவள் சிறிது கூட நினைக்கவில்லை.. ஆனால் இப்பொழுது தெளிவாய் தெரிகிறது எதுவோ உள்ளது என்று.. தானாய் ஏதாவது பேச போய் அது பெரியவர்களின் மனதை காயப்படுத்தும் என்று வாய் மூடிக்கொண்டாள் யசோதரா..

ஆனாலும் குளத்தில் கல் விழுந்தால் அது குழம்பித்தானே ஆகவேண்டும்.. அதே குழப்பத்தோடு என்னவாய் இருக்கும் என்ற கேள்வியோடு அலுவலகம் சென்றால் அங்கே அவளுக்காய் விசாகன் காத்திருந்தான்..

“ஊப்ஸ்…. இவன் வேற இருக்கிற டென்சன்ல…. ”என்று எண்ணிக்கொண்டே

“என்ன விசுத்தான்” என்றால் சலிப்பாய்..

“உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா யசோ” என்றான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்..

“ஷ்…. போதும் விசுத்தான்… ஏற்கனவே வீட்டில ஆயிரம் தலைவலி. இதுல நீங்க வேற ஆரம்பிக்காதிங்க. வேலை நிறைய இருக்கு… ”

“ப்ளீஸ் யசோ நான் நம்ம லைப்காக கேட்கிறேன்…  ”

“என்ன ?? நம்ம லைப்பா..?? என் லைப் எப்பவுமே என்கிட்டே தான் இருக்கும் விசுத்தான்.. ஒருவேளை, நல்லா கேட்டுகோங்க ஒருவேளை நம்மளுக்கு கல்யாணமே ஆனாலும் என் வாழ்க்கை என் கைல தான்.. அதை தூக்கி உங்ககிட்ட குடுத்துட மாட்டேன்.. நீங்கன்னு இல்லை அந்த இடத்தில யார் இருந்தாலும் சரிதான்..”

“சரி சரி யசோ.. ஆனா ப்ளீஸ் திங் அபௌட் மீ… கொஞ்சம் கூட நீ ஏன் என்னை புரிஞ்சுக்க மாற்ற”

“ஓ !!! காட்… சரி சொல்லுங்க நான் என்ன செய்யணும்.. கமான் குவிக்.”

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் யசோ.. நான்.. நான் உன்னை எதுவும் தொல்லை செய்ய மாட்டேன்.. உன் விருப்ப படி நீ இருக்கலாம் சரியா… நான் உன்னை ரொம்ப ஹேப்பியா வச்சுப்பேன் யசோ ” என்று பேசிக்கொண்டே போனான்..

“ஹா !!! போதும் போதும்…… இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் விசுத்தான்.. அப்புறம் இன்னொன்னு என் சந்தோசம் எப்போவுமே என்கையில தான் இருக்கும்.. யூ கோ அண்ட் டூ வாட்டெவர் யூ வான்ட், ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ நவ்” என்று எரிந்து விழுந்தவளை பாவமாய் பார்த்து வைத்தான் அவன்..

“கடவுளே இன்னும் என்ன ????” என்பது போல் பதிலுக்கு பார்த்தாள் அவள்..

“நம்ம, நம்ம வேற எங்கயாவது போயிடலாமா யசோ. நிம்மதியா வாழலாம்.. யாரும் யாருமே நமக்கு வேண்டாம். என்னை நம்பி என்கூட வந்திடு யசோ”

இவன் என்ன பைத்தியமா என்றே தோன்றியது அவளுக்கு..

“இங்க பாருங்க விசுத்தான், எனக்கு ஏற்கனவே நிறைய டென்சன் இருக்கு.. இதுல நீங்க வேற என் கழுத்தருக்காதிங்க ப்ளீஸ், லீவ் மீ.. அப்புறம் இன்னொன்னு இதை பத்தி என்கிட்டே பேசி எந்த யூசும் இல்லை இப்போவும் சரி இனி எப்போவும் சரி  யு மே கோ நவ்.. ”   எனவும் வேறு வழியில்லாமல் வந்த வழி சென்றான் விசாகன்..

அவன் சென்ற பிறகு தான் அவளுக்கு மூச்சுக்கூட இயல்பாய் விட முடிந்தது… தன்னையே ஆசுவாசப்படுத்தியவள், வேத மூர்த்தியின் அழைப்பு வரவும்

“சொல்லுங்க சித்தப்பா ”  என்றாள்

“ஹலோ…. யசோம்மா நம்ம திருச்சி லேண்ட் விஷயமா கெளதம் கிட்ட ஒரு டாக்குமென்ட் இருக்கும் அதை வரும் போது வாங்கிட்டு வந்திடுமா” எனவும்

அடுத்த தலைவலியா என்று நினைத்தாள்..

“ஹ்ம்ம் சரிங்க சித்தப்பா… ” என்று மட்டுமே கூற முடிந்தது அவளாள்…

சரி அவன் எங்கிருக்கிறான் என்று கேட்க அவனுக்கு அழைத்தால் கெளதமனது அலைபேசி எடுக்கப்படவே இல்லை..

“ஊரில் இருக்கும் கேசெல்லாம் இவன் வாதாடுற மாதிரி சீன் போடுவான்.. கேட்டா ஆ ஊன்னு சொல்லுவான்”என்று கடிந்த நேரம் அவனே அழைத்துவிட்டான்..

“ஹலோ கெளதம் ”

பதில் வராமல் இருமல் சத்தமே வந்தது….

“ஹ்ம்ம்ஹும் சொல்லு யசோ திட்டியாச்சா?? யப்பா புரை போச்சு ”

“ம்ம்ச் உங்களை திட்டறது தான் எனக்கு வேலை பாருங்க.. ”     

“சரி எதுக்கு கால் பண்ண ???”

கூறினாள்….

“ஓகே.. கம் டூ மை ஆபீஸ்..”

“இப்போவே சொல்லிட்டேன் எனக்கு ரொம்ப தலைவலி… ”

“ஐம் எ லாயர்.. நாட் டாக்டர்….  ”

“ஷ்.. இதுக்கு தான் சொன்னேன் டோன்ட் மேக் மீ டென்ஸ்ட்”

“ஓகே கூல்.. கம் சூன் எனக்கு வேலை இருக்கு..  ”என்று வைத்துவிட்டான்..

வேண்டா வெறுப்பாய் கிளம்பி சென்றாள்.. விதி அங்கேயும் அவளை கடுப்பேற்றியது கௌதமனின் ரூபத்தில்..

அவள் சென்ற நேரம், எதோ அரசியல் கட்சியின் வட்டத்தின் மச்சினன் என்று ஒருவர் பார்க்க வந்திருந்ததால், மனதிற்குள் ஏக அர்ச்சனைகளை செய்தபடி காத்திருந்தாள் யசோதரா..

ஒருவழியாய் வந்தவர்கள் சென்று அவள் உள்ளே நுழைய மீண்டும் இருமியபடி தன் தலையை தானே தட்டி நீர் அருந்தினான் கௌதமன்..

“நான் வருவேன்னு முன்னமே தெரியும் தானே இப்படிதான் வெயிட் பண்ண வைக்கிறதா ??”

“அவர் இன்னிக்கு வரேன்னு நேத்தே அப்பாயின்மென்ட் வாங்கிட்டார்… ”

“ஊப்ஸ்…… ரொம்பத்தான்.”

“எனக்கு எல்லா கிளைன்ட்சும் ஒண்ணுதான்… ”

“ஓ !!! காட்.. உங்க சொற்பொழிவை கேட்க வரல.. கிவ் மீ தட் டாக்குமென்ட்”

அவன் எடுத்து கொடுக்கவும் வாங்கிகொண்டு, போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல் கிளம்பிவிட்டாள்..

“ஹ்ம்ம் ராங்கி…இவ கொஞ்சம் நேரம் இருந்தாலே பிபி ஏறும் போலவே.” என்று மொழிந்த படி தன் வேலையை கவனித்தான்..

இப்படியாக யசோதரா கௌதமன் இருவரது வாழ்வுமே தொழிலை சுற்றி, செக்கு மாடு போல சுழன்று கொண்டே தான் இருந்தது. அவர்களது விருப்பு வெறுப்பிற்கு இடம் கொடாமல், தான் எடுத்த வேலையில் வெற்றி காண்பது மட்டுமே கடமை என்று இருவரும் தங்கள் நாட்களை நகற்ற

விசாகன் என்பவன் ஒருவன் இருப்பது கூட யசோதராவிற்கு மறந்து போனது எனலாம்.

வீட்டில் எந்த மாற்றமும் இல்லை… சித்தாராவின் மாப்பிள்ளை யார் என்று தெரிந்துகொள்ள இருந்த ஆர்வம் கூட வசுந்தராவின் பேச்சுக்கு பயந்து அடங்கி போனது.. யாராக இருந்தாலும் அவள் மனதிற்கு பிடித்தவன்..

விரும்பியவர்களையே திருமணம் செய்ய ஒரு கொடுப்பினை வேண்டும், அது அவளுக்கு கிடைத்திருக்கிறது என்றே தோன்றியது யாசோதராவிற்கு.. ஆனாலும் ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு எப்படி எதுவும் தெரியாமல் இருப்பது??

தொழில் அனைத்தும் தெரிந்தவள் சொந்த வீட்டில் நடப்பது தெரியாமல் போனால் எப்படி இருக்கும்..

மனதில் எழும் குழப்பங்கள் தீர கோவிலுக்கு சென்றாள் யசோதரா..

அங்கே போனால் கௌதமனின் அன்னை அவளுக்கு முன்னே அங்கிருந்தார்..

“ஹாய் அம்பிகா ஆன்ட்டி… ” என்றவளின் பார்வை சுற்றிலும் பார்த்தது, அவனிருந்தால் இப்படியே கிளம்பிட எண்ணி..

“என்ன யசோம்மா எப்படிருக்க ?? நான் மட்டும் தான் வந்தேன்”  

“கண்டுபிடிச்சுட்டாங்களே” என்று எண்ணியவள் “ஐம் பைன் ஆன்ட்டி, என்ன இவளோ தூரம் வந்திருகிங்க ?? உங்க வீட்டு பக்கமே கோவில் இருக்கே?” என்று வினவினாள்..

“கோவில் இருக்கு மா, ஆனா வாரதுக்கு ஒருமுறை இங்க வரலைனா எப்படியோ இருக்கும், அதுவும் இல்லாம இது முன்ன நாங்க இருந்த ஏரியா அதான்.”

“ஓ !! சரிங்க ஆன்ட்டி, நான் தரிசனம் பண்ணிட்டு வந்திடுறேன்.. உங்களுக்கு லேட்டானா நீங்க கிளம்புங்க ஆன்ட்டி”

“இல்லமா நானும் இப்போதான் வந்தேன்.. தரிசனம் ஆச்சு.. நீ போயிட்டு வா, நான் இருக்கேன்..”

“சரி ஆன்ட்டி ” என்றவள் அன்னை காளிகாம்பாளை மனமார வேண்டிவிட்டு வந்தாள்.. ஏனோ அவளுக்கு அங்கே நின்று அன்னையிடம் மனதில் இருப்பதை எல்லாம் கூறிச்சென்றால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்பிக்கை..

அம்பிகா இருந்த இடம் நோக்கி வந்தவள் “என்ன ஆன்ட்டி கையில நோட்டோட வந்திருக்கிங்க ??” என்று வினவவும்

“இது நோட் இல்லை யசோ, கௌதமோட ஜாதகம்..”

“ஜாதகமா??? அது எதுக்கு ஆன்ட்டி.”

“அவனும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருப்பான் டா.. நானும் என் கடமையை முடிக்கணுமே.. அதான் அவனுக்கு பொண்ணு பார்க்க தரகர் கிட்ட சொல்லணும். அதுக்கு முன்ன அம்பாள் கிட்ட வச்சு வேண்டிக்கலாம்னு எடுத்து  வந்தேன்…”

”ஓ !! வக்கீலுக்கு கால் கட்டா…” என்று எண்ணியவள் படக்கென்று எதுவோ நினைவு வர

“இது.. இதுக்கு உங்க மகன் சம்மதிச்சாரா??” என்று கேட்க

“ஹ்ம்ம் ஆயிரம் கண்டிசன் போட்டிருக்கான் மா.. எனக்கு அவன் சொன்னதை எல்லாம் கேட்டு மூச்சு வாங்கிடுச்சு… ”

“அவருக்கு வாங்கலியா ??”

“அவன் வாதாடுறவானாச்சே.. எப்படி மூச்சு வாங்கும்.. எல்லாம் நமக்கு தான்” என்று கூறி சிரித்தார் அவர்..

“அப்படி என்ன கண்டிசன் ஆன்ட்டி??”

“ஹ்ம்ம் பொண்ணு கொஞ்சம் படிச்சிருந்தா போதும், சுமாரா இருந்தா போதும், மிடில் கிளாஸ் போதும்.. இப்படி ஏகப்பட்ட போதும் சொல்லிருக்கான்”

இதை கேட்டதும், இவனுக்கென்ன குறை ஏன் இப்படி என்ற கேள்வியும் அவளிடம் சேர்ந்துக்கொண்டது.. ஆனால் அதை கேட்டு அந்த அன்னையின் மனதை கவலையுற செய்யாமல் இருவரும் மேலும் சில நேரம் பேசிவிட்டு தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்..

ஐந்து நிமிடம் ஆகியிருக்காது, வசுந்தாராவின் அழைப்பு வர “என்ன வசு ”என்றாள் யசோ..

“அக்கா, இந்த சித்து வெயின் கட் பண்ணிட்டா கா… ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்.. சீக்கிரம் வா” எனவும் முதலில் தான் என்ன கேட்கிறோம் என்றே அவளுக்கு விளங்கவில்லை..

பின்னே சுதாரித்து வண்டியை ஓரமாய் நிறுத்தியவள் “சித்து என்.. என்ன சொல்ற?? ” என்றால் பதற்றமாய்..

பதிலுக்கு என்ன கூறினாளோ வசுந்தரா, உடனே வருகிறேன் என்று கூறி மின்னலென காரை செலுத்தினாள் யசோதரா…

 

 

 

 

Advertisement