Advertisement

அத்தியாயம் – 18

 

“யசோ.. கெட்டப்…” என்று வேகமாய் உலுக்கினான் கௌதமன்..

“ம்ம்ச் என்ன கெளதம் ?? போங்க…” என்று புரண்டு படுத்தாள் அவன் மனைவி..

“ம்ம்ச் எழுந்திரி யசோ.. நம்ம உடனே இங்க இருந்து கிளம்பனும்.. கமான்.. கெட்டப்    ”  என்று அவளை பிடித்து எழுப்பி அமரவைத்தவன், கையில் முக்கியமான சில கோப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு,  வேகமாய் சரளாவை தேடி போனான்..

“சரளாக்க சீக்கிரம் கிளம்புங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம இங்க இருந்து கிளம்பனும் ” என்றபடி அவரை எழுப்ப, அவரோ உடனே செயல்பட்டார்..

“என்ன தம்பி எதுவும் பிரச்சனையா ??”

“எல்லாம் போறப்போ சொல்றேன்” என்றவன் வேகமாய் யசோவை இழுத்து செல்லாத குறையாய் அழைத்து சென்று காரில் அமரவைத்தான்..

“என்ன கௌதம் ?? என்ன பிரச்சனை..?? ”

அவ்விடத்தை விட்டு சற்று தூரம் வந்த பிறகே கௌதமனுக்கு இயல்பாய் மூச்சு விட முடிந்தது..

“என்னாச்சு கெளதம்…?? ”

அவளுக்கு பதில் சொல்லாமல் கௌதமன்

“சரளாக்கா உங்க வீட்டுல சொல்லிட்டேன், பின்பக்க வாசல் திறந்து தான் இருக்கும், நீங்க சேப்டியா போயிடலாம்” என்றான்..

“இல்ல தம்பி நானும் யசோம்மா கூடவே இருக்கேனே”

“இல்லக்கா வேண்டாம்.. ப்ளீஸ்” என்றவன் காரை எத்தனை வேகமாய் ஒட்டிட முடியுமோ அத்தனை வேகமாய் ஓட்டினான்..

யசோதரா இன்னுமே புரியாத பாவனையில் தான் இருந்தாள்.. ஒரு அளவுக்கு மேல் அவளால் பொறுமையை இழுத்து பிடிக்க முடியவில்லை..

“கெளதம்… ” என்றவளை அவனது பார்வையே அடக்கியது..

சில நேர பிரயாணத்திற்கு பிறகு சரளாவை அவர் வீட்டில் இறக்கிய பின்னே தன் மனைவியின் கேள்விக்கு பதில் கூறினான்..

“பூபதி பாண்டியன், மோகன் ரெண்டு பேரும் அரெஸ்ட் ஆகிட்டாங்க… ஆனா…   ” 

“ஆனா ???… என்ன கௌதம் ??”

“அந்த கேசவ் தப்பிச்சுட்டான்… ”

அவளிடம் ஒரு அதிர்ந்த முக பாவம் மட்டும் தான்.. தேவையில்லாமல் அய்யோ என்று நெஞ்சை பிடித்து கத்தி கதறவில்லை..

“எவ்வளோ நீட் பிளான் பண்ணோம்.. லாஸ்ட் மினிட்ல.. ச்சே..” என்றபடி ஸ்டீரிங்கை குத்தினான்…

“டென்சன் ஆகாதிங்க கெளதம்.. ஹியரிங்கு இன்னும்  ரெண்டு நாள் இருக்கே..”  

“அந்த ரெண்டு நாள்ல என்ன வேணா நடக்கலாமே யசோ.. ஏற்கனவே இப்போ..” என்றவன் பேச்சை வேகமாய் நிறுத்தினான்..

“என்ன ஏற்கனவே இப்போ??? ”

“ம்ம்ச் ஒண்ணுமில்ல, முதல்ல உன்னை வேற சேப்டியான இடத்துக்கு கூட்டிட்டு போகணும்..”

“நீங்க வேற எதுவோ சொல்ல வந்திங்க கெளதம் ” என்றாள் இறுகிய குரலில்..

“ஒண்ணுமில்ல… ”

“இப்போ நீங்க சொல்லலைன்னா, அடுத்து நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது..” என்றாள் சொன்னதை செய்வேன் என்ற குரலில்..

“ம்ம்ச் கோகுல யாரோ சூட் பண்ணிட்டாங்க..” என்றான் ஒருமாதிரி குரலில்..

“என்.. என்ன சொல்றிங்க???  எங்க ?? எப்படி நடந்தது.. ”

“வீ.. வீட்டுல தான்.. மாடியில.. மத்த டீடைல்ஸ் எல்லாம் தெரியலை.. ஹாஸ்பிட்டல் போனாதான் தெரியும்” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மின்னல் வேகத்தில் காரை செலுத்தியவன், மருத்துவமனை முன் தான் நிறுத்தினான்..

இருவரும்  உள்ளே செல்லும் பொழுது வசுந்தரா தான் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்.. அவளுக்கு எதுவோ ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார் தேன்மொழி..  அம்பிகாவும், வேத மூர்த்தியும் குழம்பிய முகத்தோடும் கவலையோடும் அமர்ந்திருந்தனர்..    

இந்த அர்த்த ஜாம நேரத்தில் குடும்பமே இங்கே இருக்கிறது என்றால் கோகுலுக்கு என்ன ஆனதோ  என்னவோ?? கடவுளே எங்களுக்கு உதவி செய்ய என்று வந்தவன், அவனுக்கு எதுவும் ஆகிவிட கூடாதே என்று மனதில் வேண்டியபடி வேகமாய் எட்டு போட்டு நடந்தாள்..

யசோவை பார்த்ததுமே அனைவருமே எழுந்துவிட்டனர் “ யசோம்மா ” என்ற அழைப்போடு..

அப்பொழுதும் கூட வசு எவ்வுணர்வும் இல்லாமல் தான் இருந்தாள்..

“யசோம்மா.. எப்படி டா இருக்க?? சாப்பிட்டியா ?? ” என்று மேற்கொண்டு அது இதென்று கேள்விகள் கேட்க்க அவளோ

“நான் நல்லா தான் இருக்கேன்.. கெளதம் தான் கூடவே இருந்தாரே.. ஆனா இப்.. இப்போ என்னாச்சு ?? வசு ஏன் ஒரு மாதிரி இருக்கா ??” என்று கேள்வி கேட்க பலத்த அமைதி அங்கே..

கௌதமன் தான் முதலில் சுதாரித்து

“ஸ்…. கொஞ்சம் மெல்ல பேசுங்க ” என்றான்..

வேத மூர்த்தி “என்னனு சொல்ல, திடீர்னு வீட்டு மாடில துப்பாக்கி சத்தம், கூடவே வசு அலறல் வேற, என்னவோ ஏதோன்னு போய் பார்த்த   கோகுல் நெஞ்சுல துப்பாக்கி குண்டு பட்டு, கீழ கிடந்தான்..” என்று இன்னும் திகில் மாறாத உணர்வில் கூறினார்.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த வசு, இதை கேட்கவும் கத்தி அழ தொடங்கிவிட்டாள்..  

“எல்லாமே என்னால தான்… ஐயோ… அக்கா எல்லாமே என்னால தான் கா..” என்று நின்றிருந்த யசோதராவை கட்டிக்கொண்டு அவளது வயிற்றில் முகம் புதைத்து கதறினாள்..

”ஹே.. வசு…” என்று அனைவரும் திடுக்கிட்டனர்.. இத்தனை நேரம் அமைதியாய் வாய் திறவாமல் இருந்தவள் திடீரென்று இப்படி அழுதால் யாருக்கு தான் அதிர்ச்சி ஆகாது..

“ஹே வசும்மா.. என்ன டா இது?? இங்க பாரு.. முதல்ல இப்படி அழறதை நிறுத்து” என்று தன் தங்கையை ஒரு அன்னையாய் சமாதனம் செய்தாள்..

அவளோ மேலும் ஒட்டிக்கொண்டு அழ தொடங்கினாளே ஒழிய பதில் பேசினாள் இல்லை.. ஆளாளுக்கு மாற்றி மாற்றி அவளை சமாதனம் செய்ய அவளோ திரும்பவே இல்லை..

கௌதமன் தான் பொறுமையாய் “வசு.. என்னாச்சு?? எதுவா இருந்தாலும் எங்களுக்கு சொன்னா தானே புரியும்.. இங்க பார் கோகுலுக்கு ஒண்ணுமில்ல, ஆப்ரேசன் முடிஞ்சதும் அவன் நம்மகிட்ட எல்லாம் பேசுவான்.. சோ நீ அழாம நடந்ததை சொல்லு…” என்று கூற வசுவின் அழுகை சற்றே மட்டுப்பட்டது..

தன் கணவனின் பார்வையை உணர்ந்த யசோதரா தன் தங்கையை தன் மீது சாய்த்துக்கொண்டு அவளருகில் அமர்ந்தாள்..

“என்ன வசு, கெளதம் உன்னை ரொம்ப தைரியாமான பொண்ணுன்னு சொன்னார், இப்படி அழுதுட்டு இருக்க.. என தங்கச்சி இப்படி பயந்து அழலாம??” என்று ஆதுரமாய் கேட்க, வசுந்தராவின் அழுகை நன்றாய் மட்டுப்பட்டது..

அவள் எதுவோ கூற தொடங்க, சரியாய் அதே நேரம் இரண்டு நர்ஸ்களும், வார்டு பாய்களும் சேர்ந்து ஒருவனை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தனர். நிரஞ்சனும் மேலும் இரண்டு போலீஸ்காரர்களும் வர சற்றே அங்கே சூழ்நிலை மாறியது..

“என்ன நிரஞ்சன் என்னாச்சு ????” என்று கௌதமன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே வசு “இவன்…. இவன் தான்… கோகுல சூட் பண்ணது… அக்கா இவன் தான்.. மாமா” என்று ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவனை கை காட்டினாள்…

“என்… என்ன சொல்ற வசு…?” என்று யசோ கேட்க, அதே கேள்வியோடு கெளதமும் நிரஞ்சனும் அவள் அருகே விரைந்தனர்..

நர்ஸ்களும் வார்ட்பாயும் தங்கள் பணியை செய்ய ஸ்ட்ரச்சரை உள்ளே இழுத்து  செல்ல, அதன் பின்னே  நிரஞ்சன் தொடர்ந்தான்

“அந்த கேசவை தேடிட்டு வரும் பொது, ரோட்ல சந்தேகபடுற மாதிரி நடந்து வந்தான். கூப்பிடுட்டு என்னான்னு விசாரிக்கும் போதே ஓட ஆரம்பிச்சுட்டான், அவனை துரத்தி பிடிக்கிறகுள்ள, எதிர்ல வந்த வண்டி மேல மோதிட்டான்.. ஆனா இவன் தான் கோகுலை சுட்டான்னு அப்போ தெரியாது., ட்ரீட்மென்ட் பண்ண தான் கூட்டிட்டு வந்தோம்.. பார்த்தா எல்லாம் இங்க இருக்கீங்க” என்று நிரஞ்சம் சுருக்கமாய் நடந்ததை சொல்ல அடுத்த விளக்கம் கூற வேண்டியது வசுந்தராவின் முறையானது..

“இல்ல எனக்கு தூக்கம் வரலைன்னு மாடிக்கு போனேன், அங்க கோகுல் நின்னு இருந்தாங்க” என்று அரம்பிதவளுக்கு இப்பொழுதும் கூட நடந்ததை நினைத்தாள் உடல் நடுங்கியது..

“ என்னாச்சு…. எல்லாம் ஓகே தானே ”என்று கேட்டபடி வசுந்தரா கோகுலை கேட்டபடி அவனிடம் செல்ல,

அமைதியான காரிருள் நேரத்தில் திடீரென்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பிய கோகுல் அதிர்ந்து நின்றான்..

அதே அதிர்ந்த பாவனை தான் வசுவிடமும்… ஏனெனில் அவளது அழகிய வெண்ணிற கழுத்தில் ஒருவன் கத்தியை, மறுகையால் துப்பாக்கியை கோகுல் முன்னே நீட்டி நின்றிருந்தான்..

கண் இமைக்கும் நொடியில் நடந்த இவ்விசயத்தில் வசுந்தராவிற்கு பேச்சே வரவில்லை.. அக்குளுமையான வேளையிலும் அவளுக்கு வேர்த்து வழிந்தது..

“ஹேய்.. என்ன பண்ற ?? யார் டா நீ ??” என்றபடி கோகுல் முன்னேற

“ஒரு அடி எடுத்து வச்ச ஒரே நேரத்தில இவ கழுத்தும் அறுபடும், உன்மேலயும் தோட்டா பாயும் ” என்று ஹிந்தியில் பதில் கூறினான்..

வசுவிற்கு என்ன புரிந்ததோ கோகுலை வரவேண்டாம் என்பது போல கண்ணசைத்தாள்.. அவனுக்கோ வசு எதிராளியின் பிடியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு இதயம் விண்டு விழுந்து விடும் போல வலித்தது..

 “ஹேய் ஹூ ஆர் யு ??”

“ஏன் டா உனக்கு எவ்வளோ தைரியம், அங்க என் தம்பி ஜெயில்ல இருக்கான், நீ சொகுசா காத்து வாங்கிட்டு நிக்கிற ??” என்றான் பதிலுக்கு அவன் ஹிந்தியில்  கோவமாய் கூற, இப்பொழுது தான் கோகுலுக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது..

“அவளை விடு… உனக்கு எவ்வளோ தைரியம்  இங்கயே வருவ ” என்றபடி மேலும் முன்னேறினான் கோகுல்.. அந்த எதிராளியோ அதே நிலையில் வசுவை நிறுத்தி பின்னே இழுத்துக்கொண்டே நகர்ந்தான்..

“கோ… கோகுல் … வேண்டாம்  ” என்று அவள் திக்கி திணற, அவளது விழிகளோ ஏதாவது செய்யேன் என்பது போல கோகுலை பார்த்தது..

“வசு… வசு… நீ.. நீ எதுக்கும் கவலை படாத. அவன் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான்,. அவனுக்கான குறி நான் தான்.. சோ உனக்கு எதுவும் ஆகாது…” என்று கூறிக்கொண்டே வேகமாய் தன் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் முன் நீட்டினான் கோகுல்..

“ஏய் அவளை விடு… விடுன்னே சொல்றேன்ல…”

“முடியாது… முதல்ல என் தம்பியை வெளிய விட சொல்லு.. இப்போவே டெல்லிக்கு போன் பண்ணு.. இல்லை நடக்குறதே வேற ” என்று வசுவின் கழுத்தில் இன்னும் அழுத்தினான்..

“இங்க பார் முதல்ல அவளை விடு, நம்ம அப்புறம் பேசலாம்.,..” என்றான் தளர்வான குரலில் கோகுல்..

“என்ன போலிஸ், ஜோக் பண்றியா.. இவளை விட்ட அடுத்த நிமிசமே என்னை நீ சுடுவன்னு எனக்கு தெரியாதா?? என் தம்பி வெளிய வரணும் முதல்ல அதுக்கு ஏற்பாடு பண்ணு ” என்று கர்ஜித்தான்..

வசுவின் நிலையோ கேட்கவே வேண்டாம்.. எதற்கும் அலட்டிகொள்ளதவள் தான், ஆனால் இரு துப்பாக்கி முனைகளுக்கும் இடையில் நிற்கும் பொழுது யாராய்  இருந்தாலும் எப்படி இருக்கும்..??

“ஐயோ இவனுங்க வேற கையில் துப்பாக்கியை வச்சிட்டு ஹிந்தியில கதை பேசுறானுங்களே ” என்று எண்ணியவளுக்கு நொடி பொழுதில் எங்கிருந்து தான் அத்தனை தைரியம் வந்ததோ..

யாரும் எதிர் பாராத நேரத்தில் தன்னை பிடித்திருந்தவனின் கைகளை நறுக்கென்று கடித்துவிட்டாள்.. அவன் வலியில் கையை உதறிய நேரம் அவனிடம் இருந்து விடுபட்டு கோகுலை நோக்கி ஓடி வந்தாள்.

அவளிடம் கடி வாங்கிய அவனோ சடுதியில் சுதாரித்து துப்பாக்கியால் வசுவை நோக்கி சுட்டான். கோகுலுக்கு இவள் செய்த முட்டாள் தனம் பபுரிந்த நொடி, அவளை நோக்கி தோட்டா பறந்து வந்தது..

என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை பட்டென்று அவளை இழுத்து திருப்பியவன், தன் மீது தோட்டாவை வாங்கிகொண்டு  சரிந்தான்..

“கோ.. கோகுல்… ” என்று பதறியவளுக்கு நடந்த செயலின் வீரியம் புரிந்து சுதாரிப்பதற்குள் வந்தவன், வந்த வேலை முடிந்தது என்று எண்ணி தப்பித்துவிட்டான்..

அதற்குமேல் அங்கே நடந்தது எதுவுமே வசுவின் மனதில் ஒட்டவில்லை..  யார் வந்தார்கள், யார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் என்பது எல்லாம் அவளுக்கு கனவில் நடப்பது போல இருந்தது..

அனைத்தையும் கூறி முடிக்கும் பொழுது கூட அவளுக்கு விசும்பல் நிற்கவில்லை

“எல்லாமே என்னால தான் க்கா… நான் தான் முட்டாள் மாதிரி நடந்துக்கிட்டேன்.. என்னை காப்பாத்த போய் கோ… கோகுலுக்கு இப்படி ஆகிடுச்சே மாமா…” என்று புலம்பியவளை அனைவரும் சமாதனம் செய்தனர்..

“ஹ்ம்ம்… நல்ல வேலை இது வேற எதோ பிரச்சனை. அந்த கேசவோட ஆளா இருக்குமோன்னு நினைச்சேன் கெளதம்.. ஆனா இவனே வந்து மாட்டிக்கிட்டான்.. அவன் முழிக்கவும் மத்ததை பாப்போம்.. ” என்ற நிரஞ்சன் கூறவும் ஆப்ரேசன் முடிந்து டாக்டர் வரவும் சரியாய் இருந்தது..

“டோன்ட் வொர்ரி… பிளட் லாஸ் கொஞ்சம் ஹெவி தான். பட், கோகுல் ஓட பிளட் க்ரூப் ஹாஸ்பிட்டல்ல ஸ்டாக் இருந்தனால பிரச்சனை இல்லை.. தோளுக்கும், நெஞ்சுக்கும் நடுவில குண்டு பாஞ்சிருக்கு, சோ கொஞ்ச நாள் அவர் கையை அசைக்காம இருந்தா நல்லது.. இப்போ தூங்கட்டும், காலையில எல்லாரும் போய் பாருங்க ”  என்று கூறிவிட்டு செல்லவும்வசுந்தரா பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள்..

“மாமா, டாக்டர் கிட்ட வசுக்கு தூங்க இன்ஜக்சன் போட கேளுங்க மாமா. அத்தை, அம்மா நீங்களும் போங்க, வசுவை கூட்டிட்டு போங்க ” என்று கெளதம் கூறவும் பெரியவர்கள் கூட்டம் நகர்ந்தது..

“இப்போ சொல்லு நிரஞ்சன், என்னடா ஆச்சு.. நம்ம எல்லாமே பக்காவா தானே பிளான் பண்ணோம்…”

“அவன் தப்பிச்சிட்டான் டா.. நினைச்சாலே கடுப்பா இருக்கு.. ச்சே கடைசி நேரத்துல எப்படி இப்படின்னு தெரியலை..”

இத்தனை நேரம் கோகுலின் விஷயம் பேசும் பொழுது இருந்த தீவிரம் யசோவின் முகத்தில் இப்பொழுது இல்லை.. சாதாரணமாய் எதுவோ கதை கேட்பது போல கேட்டு நின்றிருந்தாள்..

இதை அறியாமல் இருப்பானா அவள் கணவன் ?? ஆனாலும் நிரஞ்சன் சொல்வதை சொல்லி முடிக்க காத்திருந்தான்..

“நாங்க அந்த இடத்துக்கு போய் எல்லாம் சுத்தி வளைச்சு, அவனுங்க இருந்த பிளாட் கதவை தட்ட கை வச்சா, அது படக்குன்னு திறந்திடுச்சு.. அப்போவே எதுவோ சரியில்லன்னு தோணிச்சு, உள்ள போய் பார்த்தா யாருமே இருந்ததுக்கான அடையாளம் இல்லை. எனக்கு எப்படி இருந்தது தெரியுமா டா ” என்றான் ஒரு வெற்று குரலில்..

“ஹ்ம்ம் சரி விடு நிரஞ்சன்.. அவனுங்க ரெண்டு பேர் மாட்டினது மாதிரி இவனும் கண்டிப்பா மாட்டுவான்.. ஆனா என்ன இன்னும் ரெண்டு நாள்ல ஹியரிங், அதுக்குள்ள கேசவ் சிக்கிட்டா ரொம்பவே நல்லது.. எல்லாமே முடிஞ்சிடும்.. இல்ல இந்த பூபதி பாண்டியனும், மோகனும் எதையாவது பண்ணி வெளிய வந்திடுவாங்க.. மறுபடியும் கேஸ் முதல்ல இருந்து ஆரம்பிக்கும்”

“இல்லை கெளதம், எனக்கு ரொம்பவே நம்பிக்கு இருக்கு, நீ எதுக்கும் கவலை படாத.. நீ தைரியமா கோர்ட்டுக்கு போ, கண்டிப்பா நான் அவனை எப்படியும் பிடிச்சிடுவேன்” என்று உறுதி கூறினான் நண்பன்..

“ஹ்ம்ம் சரி டா.. நம்ம முயற்சியை கடைசி வரைக்கும் விட கூடாது” என்றவன் தன் மனைவியின் பக்கம் திரும்பி

“சொல்லு யசோ, இதுல நீ என்ன பண்ணிருக்க” என்று கேட்க யசோதரா புரியாத பார்வை பார்த்தாள்.. நிரஞ்சனும் அப்படிதான்..

“என்ன கெளதம் ???”

“ம்ம்ச்.. எதுவும் தெரியாத மாதிரி நீ நிக்கும் போதே எனக்கு தெரியும் யசோ, இதுல ஏதோ ஒரு விசயம் உனக்கு தெரிஞ்சிருக்குன்னு.. ஏன்னா உன்னை கடத்தி வச்சா நீ அமைதியா இருக்கிற ஆள் இல்லைன்னு எனக்கு தெரியும்.. சொல்லு”

“டேய் என்ன டா கெளதம் ???” என்று நிரஞ்சன் எதுவோ கூற வர

“இல்ல டா ஐ நோ அபௌட் ஹேர்… இப்போ சொல்வா, அப்படி இல்லைனா சஞ்சனா கிட்ட தான் கேட்கணும் ” என்றான் ஒரு புன்னகையோடு..

“சஞ்சனாவா ????” என்று இழுத்த நிரஞ்சனின் பார்வையும் இப்பொழுது யசோவை கேள்வியாய் நோக்கியது..

இருவரின் பார்வையும் தான் பதில் கூறாமல் நகராது என்பதை உணர்ந்த யசோதரா

“மாரி… ” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள்..

“மாரி….????!!!!!!!! ”

நண்பர்கள் இருவருக்குமே ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம்..

“ம்ம்.. அவன் தான்.. எப்போவோ அவனை விலைக்கு வாங்கியாச்சு.. எப்படியும் அந்த கேசவுகு பூபதி பாண்டியன் இந்த மாரியை தான் துணை வைப்பாருன்னு தோணிச்சு, அதான் ஒருவேளை அவன் தப்பிக்க ஏதாவது பிளான் போட்டு கடைசி நேரத்தில நம்ம பிளான் சொதப்பல் ஆச்சுன்னா என்ன பண்றது.. அதான் மாரியை பார்த்து பேசினோம்..”

“ஆனா…. ” என்று கெளதம் ஏதோ கேட்க வர, நிரஞ்சன் அவனை தடுத்து நிறுத்தினான்.

“மேல சொல்லுங்க யசோ… இப்போ அந்த மாரி இருக்கிற இடத்துல தான் கேசவ் இருக்கானா ??”

“அது எனக்கு தெரியாது நிரஞ்சன். ஆனா கேசவ் தப்பிச்சா அவன் கூடவே இருந்து எங்களுக்கு தகவல் சொல்லனும்னு சொல்லிருக்கோம். சோ கண்டிப்பா அந்த மாரி கிட்ட இருந்து தகவல் வரும்..”

“ம்ம்ச், இதெல்லாம் உன்னை ஏமாத்த அந்த மாரி போட்ட நாடகமா கூட இருக்காலாமே” என்றான் கோவத்தை அடக்கிய குரலில் கெளதமன்..

“சில விசயங்களை நம்பித்தான் ஆகணும்னு நீங்க தானே கெளதம் அன்னிக்கு எனக்கு சொன்னிங்க.. மாரிகிட்ட இருந்து தகவல் வரும்.. நீங்களும் உங்களோட முயற்சியை பண்ணுங்க”

“நிரஞ்சன், இது எல்லாம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை.. நமக்கு இருக்குறதே ரெண்டு நாள் தான். அந்த மாரி சொல்ற வரைக்கும் எல்லாம் நம்ம வெய்ட் பண்ண முடியாது.. நம்ம தான் பார்க்கணும்” என்றவன் தன் மனைவி பக்கம் திரும்பி

“யசோ, நான் வர வரைக்கும் நீ இங்க இருந்து எங்கயும் போக கூடாது..இது என் மேல சத்தியம்” என்று கூறி நிரஞ்சனோடு வெளியே சென்றான்.

இவர்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் மூவர் இருந்தனர்..

கோவமாய் பேசிவிட்டு சென்ற தன் கணவனையே புன்னகையோடு பார்த்திருந்தாள் யசோதரா..

இரண்டு நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் நகர்ந்தோடியது. கோகுல் கண் விழித்து அனைவரோடும் பேசினான்.. வசுந்தாராவிற்கு அப்பொழுது தான் மனம் நிம்மதி ஆனது.. அவனை காணும் பொழுதெல்லாம் நன்றி கூறியும், சாரியும் கூறினாள்.

மாரியிடம் இருந்து எந்த தகவலும்  வந்த பாடில்லை.. யசோதராவிடம் கெளதமன் பேசவே இல்லை.. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை

வீட்டிற்கு எப்பொழுது வருகிறான், வெளியே செல்கிறான் என்று யாராலும் கூற முடியவில்லை..  யசொவோ அன்று மருத்துவமனையில் கணவனோடு பேசியதோடு சரி. அவளும் அவனோடு பேசிட முயற்சி செய்யவில்லை..

மறுநாள் விடிந்தால் அவ்வழக்கின் ஹியரிங்.. இன்னும் அந்த கேசவ் கிடைத்த பாடில்லை.. கௌதமன் எதையோ சிந்தித்தபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தான்..

யசோதராவும் உறங்கவில்லை.. மணியை பார்த்தாள், நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது..

“கெளதம் வந்து படுங்க…”

அவனிடம் எவ்வித பதிலும் இல்லை, அத்தனை ஏன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை..

“ம்ம்ச் கெளதம் எவ்வளோ நேரம் இப்படி நடப்பிங்க?? ” என்று அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள்..

“விடு யசோ…. ”

“முடியாது கெளதம்.. நீங்க இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறது எனக்கு பிடிக்கல கெளதம்… ” என்று அவனை இழுத்து வந்து கட்டிலில் அமரவைத்தாள்..

அவனோ மௌனமாகவே இருந்தான்..

“இங்க பாருங்க, என்மேல கோவம் எல்லாம் இருக்கட்டும், அதுக்காக இப்படி இருக்க வேணாம்.. நல்லா படுத்து நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்போதான் நாளைக்கு நல்ல படியா வாதாட முடியும்.. கண்டிப்பா நல்லது நடக்கும் கெளதம்…” என்றவள் கணவனை தன் மார்போடு சேர்த்தணைத்து உறங்க வைத்தாள்..

 

 

 

 

Advertisement