Advertisement

    அத்தியாயம் – 16

“இதெல்லாம் உங்க வேலை தானே நிரு…?? உண்மைய சொல்லுங்க ” என்று ஏக கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தாள் சஞ்சனா..

“ஸ்ஸ்,…. மெல்ல பேசு சஞ்சு… முதல்ல வந்து உட்கார்” என்று நிறைமாத கர்ப்பிணியான அவளை அமர வைத்தான் நிரஞ்சன்..

“ஏன் இப்படி பண்ணிங்க ??? இதெல்லாம் என்ன பழக்கம்.. கிரிமினல்ஸ் கூட பழகி பழகி உங்க எல்லாருக்குமே புத்தி கிரிமினலா தான் யோசிக்குமா ??” என்று மறுபடியும் ஆரம்பித்தவளை கண்டு கேலியாய் புன்னகைத்தவன்

“ஹ்ம்ம் என் பொண்டாட்டியையும் சேர்த்து கடத்துடான்னு சொன்னேன்.. வேணாம் டா பாவம் ப்ரெக்னன்டா இருக்காங்கன்னு கௌதம் சொல்லிட்டான்…. யப்பா என்ன சத்தம் ” என்று காதுகளை தேய்த்து விட்டவனை ஒரு தலையணை பறந்து வந்து தாக்கியது..

“ஹேய் சஞ்சு.. நோ வயலன்ஸ் ம்மா.. நாங்க தான் சொன்னோமே இதில தலையிட வேணாம்ன்னு.. நீங்க கேட்கலை..”

“அதுக்கு யசோவை கௌதமே கிட்னாப் பண்ணலாமா ???”

“அதை ஏன் கிட்னாப்ன்னு சொல்ற செல்லம், தன் பொண்டாட்டியை ஒரு பாதுகாப்பான இடத்துல வச்சிருக்கான்னு சொல்ல வேண்டியது தானே”

“அது யசோவா வந்திருந்தா அப்படி.. ஆள் வச்சு பண்ணா அதுக்கு பேர் கிட்னாப் தான்..” என்று மீண்டும் முறுக்கிக்கொண்டாள் சஞ்சனா..

“ம்ம்ச் இப்போ என்ன தான் செய்யணும்ன்னு சொல்ற.. யசோக்கு இப்போ சேப்டி ரொம்ப முக்கியம்.. ஆல்ரெடி ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துருக்கு.. சொன்னா புரிஞ்சுக்க பார்க்கணும் ரெண்டும் பேருமே.. உன்னை யார் அந்த டீடைல்ஸ் எல்லாம் குடுக்க சொன்னா??” என்றான் அவனுமே சற்று கோவமாய்..

“கௌதமுக்கு இதுல ஆபத்து இருக்கும்னு தெரிஞ்சும் யசோ எப்படி சும்மா இருப்பா ?? அதான் ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தோம்..”

“அதை எங்கட்ட கேட்டிருக்கணும். நாங்க ஒன்னு பண்ண போக நீங்க ஒன்னு செய்ய போகன்னு ஏடாகூடமா நடந்து இருந்தா.. சும்மா நீங்க பண்றது எல்லாம் சரிங்கிற மாதிரி பேசாத சஞ்சு” என்று அவன் வேகமாய் கூறவுமே சஞ்சனா சற்று அமைதியானாள்..

ஆனாலும் விடாமல்

“கௌதம் கம்ப்ளைன்ட் குடுக்குற மாதிரி கொடுத்திருப்பார், நீங்க விசாரிக்கிற மாதிரி எல்லாம் நாடகம் போடுவிங்க.. கடவுளே” என்று கண்களை மூடிக்கொண்டாள்.

“எல்லாமே இன்னும் ஒன் வீக் தான்.. சொல்லபோனா அது கூட இல்ல.. நாலு நாள் தான்.. இப்போவும் சொல்றேன் நீ கொஞ்சம் அமைதியா இரு சஞ்சு ” என்று விட்டு தன் வேலையை கவனிக்க சென்றான் நிரஞ்சன்..

“ஹ்ம்ம் இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சு யசோவும் வரட்டும் அப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் ” என்று கூறிக்கொண்டே தன் வேலையை கவனித்தாள் சஞ்சனா..

இங்கே இப்படி இருக்க,

அங்கே கௌதமனின் வீட்டிலோ அனைவரின் முகத்திலும் வருத்தம் நிரம்பி வழிந்தது.. தேன்மொழி ஒருபக்கம் அழுது தீர்க்க, அம்பிகா ஒருபக்கம் புலம்பி தவிக்க  சித்தாரா விசாகன் தோளில் சாய்ந்து விசும்ப, வேத மூர்த்தியோ இறுகி போய் அமர்ந்திருக்க, கலைவாணி கூட சோகமாய் இருந்தார்.. அவர் மனதில் என்ன கவலையோ..

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது  போல கௌதமன் கருத்து சிறுத்த முகத்துடன் வெறித்த பார்வையை விட்டதில் பாய்ச்சி அமர்ந்திருந்தான்.. அவன் அருகே கோகுல் வேறு..

ஆனால் இதையெல்லாம் ஒரு நாடகம் பார்ப்பது போல பார்த்தபடி இருந்தவள் வசுந்தரா.. அவளுக்கு மனதில் ஏக கடுப்பு..

“பண்றதெல்லாம் பண்ணிட்டு ரெண்டு பேரும் எப்படி ஒண்ணுமே தெரியாத போல இருக்காங்க.. இது தெரியாம எல்லாம் சோக கீதம் வாசிக்கிறாங்களே… ” என்று நினைத்தவள் கெளதமனோடு பேச ஒரு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அம்பிகா “கௌதம், நிரஞ்சன் கிட்ட இன்னொரு தரம் பேசேன் டா… இவ்வளோ நேரமாகியும் எந்த தகவலும் வரல…  கடத்திட்டு போவன் கூட  போன் பண்ணல ” என்று கூற கோகுலுக்கு புரை எரியாது..

லொக் லொக்கென்று இரு முறை இருமியவன் வசுந்தராவை பாவமாய் பார்த்து தண்ணீர் கேட்டான்.. அவனை முறைத்தபடியே அவளும் எடுத்து கொடுத்தாள்..

“இவ என்ன ஆங்ரி பேர்ட் போலவே இருக்கா.. சரியில்லையே” என்று யோசித்தபடி கௌதமன் முகம் பார்க்க

அவனோ “அம்மா எல்லா ஹையர் ஆபிசியல்ஸ் கிட்டயும் பேசிட்டேன்.. எல்லாரும் தேடிட்டு தான் இருக்காங்க… இப்போ நானும் கோகுலும் கூட அதுக்கு தான் போக போறோம் ” என்று கிளம்ப எத்தனிக்க,

கோகுலும் “யப்பா தப்பிச்சோம்“ என்று  எழ

விசாகனோ “நானும் வரேன் ” என்றபடி எழுந்தான்..

ஒரு நொடியே திடுக்கிட்டாலும் “இல்லை விசா.. இங்க எல்லாருக்கும் இப்போ நீ தான் துணையா இருக்கணும்.. பார்த்துக்கோ ” என்று  கூறிவிட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான் கௌதமன்..

“ஹப்பா அண்ணா…. நல்ல வேலை பண்ணிங்க..” என்றபடி வந்தவனை பார்த்து புன்னகை பூத்தான் கௌதமன்..

கண்கள் கட்டப்படவில்லை, நாற்காலியோடு சேர்த்து கைகள் கட்டப்படவில்லை.. பாழடைந்த பங்களா இல்லை.. கரடு முராடான ஆட்கள் இல்லை சுற்றி..

அழகான அளவான சுற்றிலும் தோட்டத்துடன் கூடிய அழகிய சிறு பங்களாவில் இருந்தாள் யசோதரா…

அக்குளிரூட்டபட்ட அறையிலும் கூட யசோவிற்கு லேசாய் வியர்த்திருந்தது.. கண்களை மெல்ல மலர்த்தியவள் தான் புதிதாய் ஒரு இடத்தில இருப்பதை கண்டு முதலில் திகைத்தாலும் பின்னே தான் காலையில் நடந்தது எல்லாம் புரிந்தது..

“ஓ !!! மை காட்…  ” என்று எழுந்து அமர்ந்தவளுக்கு தலை வலிப்பது போல இருந்தது.. ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எழுந்து தான் இருந்த அறையை விட்டு வெளியே வந்தாள்..

மறந்தும் கூட அவ்வீட்டில் ஒரு தொலைபேசியோ இல்லை வேறு தொலை தொடர்பு சாதனமோ இல்லை.. ஆனால் அதை தவிர மற்றது எல்லாம் இருந்தது.. கண்களை சுழல விட்டபடி ஒரு நிமிடம் நின்றிருந்தாள்..

“எழுந்திட்டிங்களா ம்மா.. நீங்க முளிச்சதுமே அய்யா உங்களுக்கு இதை குடுக்க சொன்னாங்க” என்றபடி சூடான பாலோடு வந்தாள் ஒரு பெண்..

திடீரென ஒரு பெண் வந்து தன் முன்னே நிற்கவும் திடுக்கிட்டு தான் போனாள் யசோ..

“யா.. யார் நீங்க??”

“நான் இந்த வீட்டில வேலை செய்றவம்மா.. அய்யாக்கு தெரியும்..” என்று சிரித்தபடி அவளது கரங்களில் பால் டம்ப்ளரை திணித்தாள் அப்பெண்மணி..

“உங்கய்யா யாரு ???” என்று அடுத்த கேள்விக்கு யசோதரா செல்ல

“அட என்னம்மா நீங்க, அய்யா சொல்லும் போது கூட நான் நம்பள, எழுந்ததுமே இப்படி கேள்வியா கேட்டா எப்படி.. முதல்ல பால குடிங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு சூடா சப்பாத்தி போட்டு தரேன்.. நல்லா சாப்டிட்டு நல்லா தூங்குங்க..” என்று சென்றவர் பிறகு இவளிடம் வரவே இல்லை..

“என்ன தைரியம்.. கடத்தி கொண்டு வந்து வச்சதும் இல்லாம..” என்று கூறிக்கொண்டே அந்த பெண்மணி இருந்த இடம் நோக்கி சென்றாள் யசோ..

“இங்க பாருங்க.. நான் யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க.. முதல்ல நீங்க யாரு?? என்னை இப்படி கடத்தின உங்க ஐயா யாருன்னு சொல்லுங்க” என்று கடினமாய் கேட்க

அவரோ அசராமல் அவள் கையில் பால் அப்படியே இருப்பதை கண்டு

“முத்தல்ல பால் குடிங்கம்மா.. சப்பாத்திக்கு பன்னீர் குருமா செய்யவா இல்லை காய்கறி குருமா போதுமா மா” என்று தன் வேலையில் இறங்கினார்..

யசோவிற்கு வந்த கோவத்தில் அப்பெண்மணியை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பாள் ஆனால் காரியம் நடக்க வேண்டுமே ஒரே மடக்கில் பாலை குடித்துவிட்டு டம்பளரை டொக்கென்று வைத்தவள் எப்படியும் தன்னை கடத்தியவன் இங்கே வருவான் என்று காத்திருக்க தொடங்கினாள்..

நேரம் கடந்ததே ஒழியே யாரும் வந்த பாடில்லை..

அவள் மனதிலோ ஆயிரம் குழப்பங்கள்.. “கடத்தினவன் எப்படி என்னை இவ்வளோ ப்ரீயா இந்த வீட்ல விட்ருக்கான்.. அதுவும் சொகுசா.. நிச்சயம் இதுல வேற எதுவோ இருக்கு” என்று நினைக்கும் பொழுதே யாரோ வருவது போல் இருக்கவும் படக்கென்று திரும்பியவள் திகைத்து நின்றாள்..

“க.. கௌ.. கௌதம்…” தன்னை கணவன் காப்பாற்ற வந்துவிட்டான் என்றே முதலில் எண்ணியவனுக்கு அவன் சாவாதனமாய் வீட்டின் கதவை பூட்டி வரவும் ஒரு நொடியில் அவளுக்கு அனைத்தும் புரிந்து போனது..

அவ்வளவுதான்  ரண பத்திரகாளியானாள்  யசோதரா…

“சோ… இட்ஸ் யூ  ” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்ற தன் மனைவியை பார்த்து புன்னகையோடு வந்தான் கௌதமன்..

“யசோ சரளாக்கா சூட பால் குடுத்தாங்களா ??”

“என்ன தைரியம் உங்களுக்கு ?? ஏன் இப்படி பண்ணிங்க ?? ” என்று அவனை நோக்கி வேகமாய்  வந்தவளை அதைவிட வேகமாய் இழுத்து அணைத்தான்..

“ஸ்ஸ் சைலென்ட்.. இங்க நீயும் நானும் மட்டும் இல்லை” என்று அடக்கினான்..

ஆனாலும் அவளது கோவமும் வேகமும் குறையவில்லை சராமாரியாய் அவனது நெஞ்சில் குத்தினாள்..

“ச்சே இப்படி தான் பண்ணுவிங்களா?? பொண்டாட்டிய கடத்துற அளவுக்கு.. நான் கொஞ்சம் கூட இதை எக்ஸ்பெக்ட் பண்ணல.. இருங்க வெளிய போகவும் உங்களை போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்றேன்…” என்று வேக வேகமாய் பேசியவளை பதில் பேசாமல் பார்த்தான்..

“என்ன?? பதில் சொல்லுங்க கௌதம்…”

“ஹ்ம்ம் முதல்ல வீட்டுக்கு பேசு.. ஆனா ஒன்னு இங்க நடந்ததை ஏதாவது மூச்சு விட்ட நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நல்லா தான் இருக்கேன். யாரும் கவலை படவேண்டாம்னு  சொல்லிட்டு  போனை வை ” என்று ஒரு போனை எடுக்கவும் அவள்  வேகமாய் பறித்துக்கொண்டாள்..

முதலில் யாருக்கு அழைப்பது என்று சந்தேகம் வர ஒரு நொடி யோசித்தாள்..அந்த ஒரு நொடியை கௌதமன் தனக்கு சாதகமாய் பயன் படுத்தினான்..

வேகமாய் அவளிடம் இருந்து போனை பறித்து தன் நம்பருக்கே அழைத்தான்.. மறுமுனை கோகுல் எடுத்து பேசினான்..

“ஹலோ… அண்ணி.. அண்ணி நீங்களா பேசுறிங்க ???” என்று சத்தமாய் கேட்டபடி ஸ்பீக்கரில் போட

கௌதமன் பேசு என்பது போல் சைகை செய்தான்..

அவனை முறைத்தபடி “ஹலோ ” என்க, பதிலுக்கு அப்பக்கம் இருந்து ஏகபட்ட குரல்கள்

“யசோம்மா…. அக்கா… யசோ   ” என்று அணைத்து குரல்களும் ஒருமித்து ஒலிக்க இவளோ பதிலுக்கு தன் கணவனை முறைத்தாள்..

“ஹலோ அண்ணி பேசுங்க இங்க நாங்க எல்லாம் இருக்கோம்.. அண்ணா போனை வைச்சிட்டு போயிட்டார் போல,. நீங்க எங்க இருக்கீங்க?? எதா அடையாளம் சொல்லுங்கண்ணி” என்று அனைவருக்கும் சேர்த்து கோகுலே பேச கௌதமன் மீதிருக்கும் அதே கோவம் கோகுல் மீதும் திரும்பியது..

அங்கோ வசுவிற்கும் இதே உணர்வு தான்..

“நான்.. நான் நல்லாதான் இருக்கேன்,.. யாரும் கவலை படவேணாம்..” என்று மென்று முழுங்கி கூற கௌதமனோ தன் மனைவியின் முக பாவங்களை அணு அணுவாய் ரசித்துக்கொண்டு இருந்தான்.. 

“அப்புறம் அண்ணி.. உங்க கூட யாரு இருக்கா ?? ஏதாவது உங்களை தொல்லை பண்றாங்களா?? எதுவா இருந்தாலும் சொல்லுங்கண்ணி.. நீங்க பயபடாம இருங்க நாங்க பாத்துக்கிறோம் ” என்று இப்பொழுதும் கோகுலின் குரலே கேட்க யசோவோ கடுப்பாகி மேற்கொண்டு எதுவோ சொல்ல வர படக்கென்று போனை அனைத்தான் அவளது கணவன்..

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனையே முறைத்தபடி அமர்ந்திருந்தாள் யசோதரா.. அவளுக்கு புரிந்தது ஏன் இப்படி கௌதமன் செய்தான் என்று ஆனாலும் மனம் ஏற்றுகொள்ள மறுத்தது..

“நீங்க பண்றது எல்லாம் பக்கா வில்லத்தனம் ” என்றான் பற்களை கடித்து..

“தேங்க்  யூ ” என்றான் புன்னகையோடு..

“ம்ம்ச் ” என்றபடி எழுந்து சென்று படுத்துகொண்டாள்..

“வாங்கய்யா… நைட்டுக்கு சாப்பிட செஞ்சு வைச்சிருக்கேன்..” என்றவரை பார்த்து

“சரளாக்கா, யசோ உங்க பொறுப்பு.. அவளுக்கு எதுவும் ஆகா கூடாது.. ஒரு நாலு நாளைக்கு.. கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் நைட் இங்க வந்திடுவேன், மத்தபடி பகல் நேரத்தில கொஞ்சம் கண்காணிப்பா இருங்க… வெளிய யாரும் சந்தேக படுறமாதிரி இருந்தா எனக்கோ இல்ல நிரஞ்சனுக்கோ உடனே போன் பண்ணுங்க”

“சரிங்கய்யா… நீங்க சொல்றபடி செய்றேன்.. அம்மாவையும் கூப்பிட்டு சாப்பிட வாங்க.. ”

“ஹா ஹா.. அவங்க இப்போ சாப்பிட மாட்டங்க.. நீங்க சாப்பிட்டு தூங்குங்க.. நாங்க அப்புறம் சாப்பிடுறோம்” என்றதும் சரளா நகர்ந்துவிட்டார்..

ஒருமுறை வீட்டை சுற்றி வந்தவன் சந்தேக படும்படி எதுவும் இல்லை என்று உறுதியானதும் ஒரு தட்டில் சரளா சமைத்து வைத்திருந்ததை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றான்.. யசோதராவோ முகம் திருப்பி படுத்திருந்தாள்..

“யசோ எழுந்திரு சாப்டலாம்… ”

அவளோ அசையவே இல்லை..

“ம்ம்ச் யசோ என்ன பழக்கம் இது.. உனக்கே புரியுதுல நான் பண்றது நல்லதுக்கு தான்னு.. பிறகென்ன பிடிவாதம்.. முதல்ல சாப்பிடலாம் ” என்று அவன் பொறுமையாய் கூறியும் அவளிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை..

“யசோதரா…… ” என்று அடுத்த நொடி அவள் அழுத்தம் திருத்தமாய் அவளது பெயரை உச்சரிக்கவும் கண்கள் திறந்தாள்..

“என்ன ??”

“வா சாப்பிடலாம்… ”

“எனக்கு வேணாம்.. ”

“இங்க பாரு காலையில இருந்து நீ காணலைன்னு வருத்தப்பட்டு சாப்பிடாம இருந்தேன்.. ஒழுங்கா சாப்பிட வா”  என்று அவன் நக்கலாய் கூறவும் இவளுக்கோ கோவம் தலைக்கேறியது..

“ இதெல்லாம் தேவையா கௌதம்?? இவ்வளோ ரிஸ்க் வேணுமா ?? எல்லாம் ஆதாரமும் பக்காவா வச்சிருக்கிங்க தானே பிறகென்ன உங்களுக்கு இவ்வளோ பயம்??” என்று கூறியவள் அவனிடம் இருந்த தட்டையும் வாங்க மறக்கவில்லை..

அவனோ பதில் கூறாமல் அவளிடம் ஆ என்று வாய் திறந்தான்..

“என்ன ???”

“ம்ம்ச் எல்லாமே சொன்னா தான் தெரியுமா ?? ஊட்டி விடு யசோ.. ஒருநாளாவது இதெல்லாம் பண்ணிருக்கியா ?? கமான்.. பசிக்கிது..” என்று அவன் வாய் திறக்க முறைத்தபடியே அவன் சொன்னதை செய்தாள்..

வயிற்றில் ஒரு வாய் உணவு விழுந்த பிறகே தெரிந்தது எத்தனை பசியென்று.. அடுத்த சில நொடிகளிலேயே தட்டில் இருந்த அனைத்தும் காலியாகிவிட யசோவிற்கு உடம்பில் தெம்பு வந்தது போல் இருந்தது..

“சொல்லுங்க கௌதம் அப்படி என்ன தான் பயம் உங்களுக்கு ?? ப்ரியாவை கொலை செய்தது போல என்னையும் பண்ணிடுவேன்னு அவன் சொன்னதை நினைச்சு பயமா?? ”

“அப்படி நடக்க வாய்ப்பே இல்லை யசோ ” என்று அவன் உறுதியாய் கூறவும் அவளுக்கு இதில் வேறு எதுவோ இருப்பது புரிந்தது..

“எப்படி இவ்வளோ உறுதியா சொல்றிங்க கௌதம் ?”

“ஹ்ம்ம் இதை வெளிய சொல்லவே கூடாதுன்னு இருந்தேன்.. பட்.. யசோ இது உன்னை தாண்டி வேற யாருக்கும் தெரியவே கூடாது..”

“என்ன கௌதம் இது ??” என்று முகம் வாடினாள்..

“ஹ்ம்ம் ப்ரியா டெத் சூசைட் தான்.. அதுக்கு காரணம்…”

“காரணம்….. ”

“அவளுக்கு வேற யாருக்கூடவோ அப்பையர் இருந்தது போல.. அவ சாகும் போது டூ மன்த் கன்சீவ்….”

“வாட்…???!!!” அதிர்ந்தே விட்டாள் யசோதரா..

“எஸ்… இது அவளுக்கே கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னதான் தெரிய வந்திருக்கு.. அவளோட பழகினவனுக்கும் இவளுக்கும் என்ன பிரச்னையோ பிரிஞ்சிருந்தாங்க போல. அவன்கிட்ட மறுபடியும் போகவும் முடியாம.  வெளிய சொல்லவும் முடியாம, இந்த கல்யாணத்தை முழுசா ஏத்துக்கவும் முடியாம அடுத்து என்ன செய்றதுன்னும் தெரியாத ஒரு குழப்பத்தில தான் அவ சூசைட் பண்ணது ”

சில நேரம் பிடித்தது யசோவிற்கு கௌதமன் கூறியதை எல்லாம் கிரகித்து கொள்ள.. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை,.. ஆனாலும் முழுதாய் தெரிந்துகொள்ள வேண்டுமே

“இது… இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் கெளதம்…”

“போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர் எனக்கு தெரிஞ்சவர். முதல்ல இந்த விசயத்தை என்கிட்டே தான் சொன்னார்.. நான் தான் இது வெளியவே தெரிய கூடாதுன்னு சொல்லிட்டேன்.. அப்புறம் ப்ரியா எனக்கு எழுதின பெர்சனல் லெட்டர்.. அவ எப்ப எழுதினதோ,  அவ இறந்த ரெண்டாவது நாள் தான் அது எனக்கு கிடைச்சது..”  என்றவனுக்கு இப்பொழுதும் கூட பழைய வேதனை எட்டி பார்த்தது..

“சா… சாரி கௌதம்” என்றாள் மெல்ல அவனது கரங்களை பிடித்து…

“ம்ம்ச் விடு யசோ… ”

“உங்க லைப்ல நடக்குற இத்தனை குழப்பத்துக்கும் நான் தானே காரணம் கெளதம்..”

“அதெல்லாம் இல்ல யசோ.. நடக்கணும்ன்னு இருக்கிறது கண்டிப்பா நடக்கும்.. யாரும் எதுக்கும் காரணம் இல்லை.. ஆனா அந்த லெட்டர் முன்னமே கிடைச்சு இருந்தா ப்ரியாக்கு ஒரு நல்லது பண்ணிருக்கலாம்..” என்றவனுக்கு என்ன நினைப்பு வந்ததோ

“முட்டாளுங்க, ப்ரியா சூசைட் பண்ண தகவலை மட்டும் வச்சு உனக்கும் அப்படி நடக்கும்ன்னு சொல்லி என்னை முட்டாளாக்க பார்த்தா நான் சும்மா விடுவேனா ??உனக்கே தெரியும் இது பல ஆயிரம் கோடி நில மோசடி கேஸ்.. எவ்வளோ அலஞ்சு திரிஞ்சு நான் எவிடென்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்னு.. இதுல முக்கியமான ஆள் ஒரே ஒருத்தன் அவனை மட்டும் கோர்ட்ல ப்ரோடியுஸ்    பண்ணிட்ட என்னோட இத்தனை நாள் உழைப்பு வீண் போகாது, அதுவும் இல்லாம இதனால் ரொம்ப பேர் பாதிக்க பட்டு இருக்காங்க யசோ. அவங்களுக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்..” என்று நீலமாய் பேசி முடிக்கவும் யசோதரா அமைதியாய் இருந்தாள்..

“என்ன யசோ அமைதியா இருக்க… ”

“ஹ்ம்ம் சாரி கௌதம்.. நான்… நான்.. நடுவில புகுந்து சொதப்ப இருந்தேனோ…”

“ஹா ஹா அதெல்லாம் இல்லைம்மா… நீ பூபதி பாண்டியனை மீட் பண்ணதுமே அவங்களோட அடுத்த பிளான் உன்னை கடத்தி வச்சிட்டு என்னை இந்த கேசில் இருந்து பின்வாங்க வைக்கிறது தான்.. போதாத குறைக்கு அந்த ராஜேஷ் செண்டிமெண்ட் வேற.. அதான் அவங்க தூக்குறதுக்கு முன்ன நாங்க உன்னை தூக்கிட்டோம்” என்று அவள் புரிந்துகொண்ட மகிழ்ச்சியில் கேலியாய் பேசினான்..

“ச்சி பேச்சை பார்.. ” என்று அவன் தோளில் சலுகையாய் இரு தட்டு தட்டினாள்..

ஒருவழியாய் கௌதமன் யசொவை சமாதானம் செய்திருக்க அங்கே கோகுல் வசுவிடம் மாட்டிக்கொண்டான்..

அவனது அறையில் எதுவோ வேலையாய் இருந்தவனை “ஒரு நிமிஷம் ” என்ற குரல் திரும்பி பார்க்க வைத்தது..

“இவ எதுக்கு இங்க வந்திருக்கா ??” என்ற யோசனையோடு “என்ன வசுந்தரா ??” ன்று வினவினான்..

“இங்க பாருங்க, எனக்கு எல்லா விசயமும் தெரியும்.. மாமாகிட்ட தனியா பேசணும்னு நினைச்சேன் பட் அவர் வீட்டுக்கே வரல. ஐ ஹோப் அக்காகிட்ட போயிருப்பார்.. சோ உங்ககிட்ட கேட்கிறேன். அக்கா எங்க இருக்கா ??வீட்டுல இருக்கவங்க கிட்ட மட்டுமாது சொல்லலாமே.. பாத்திங்கல்ல எவ்வளோ அழுகை வருத்தம்னு.. ” என்று அவள் எவ்வித அலட்டலும் இல்லாமல் அமைதியாய் அதே நேரம் நீ இதற்கு பதில் கூறித்தான் ஆகவேண்டும் என்ற அழுத்தத்தில் கேட்க

ஒரு நிமிடம் தன்னை மறந்து தான் நின்றான் கோகுல் அவளது ஆழ்ந்த பார்வையில்..

“ஹலோ!! Mr.. என்ன ப்ரீஸ் ஆகிட்டிங்க…”

“ஹா… என்ன ?? என்ன கேட்ட ?? ”

“அக்காவை கடத்தினது நீங்க தான்னு வீட்டுல இருக்கவங்க கிட்ட மட்டும் சொல்லலாம் தானேன்னு” மறுபடியும் பல்லை கடித்தவளை இம்முறை முறைத்தான் கோகுல்..

“உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா ?? நம்ம வீட்டை, வீட்டு ஆளுங்களை நிறைய பேர் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. அப்பிட் இருக்கும் பொது வீட்டில இருக்கவங்க கிட்ட சொன்ன, இவங்களோட முகமே காட்டிகுடுத்துடும்..”

“அதுக்கு இவங்க எல்லாம் கஷ்ட படுற வேதனையை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது.. எல்லாத்தையும் தெளிவா சொன்ன இவங்களும் அதுக்கு ஏத்த போல இருந்துப்பாங்க.. நான் சொல்லத்தான் போறேன் ” என்று திரும்பியவளை கைகள் பிடித்து நிறுத்தினான் கோகுல்..

“இது என்ன தெரியுமா ??” என்று அவள் முன்னே ஒரு சிறு குப்பியை காட்ட, அவனிடம் இருந்து கைகளை விடுவிக்க போராடி கொண்டே

“ம்ம்ச் என்ன இது ??”

“அண்ணிய கிட்னாப் பண்ண வாங்கின மயக்க மருந்து.. மிச்சமிருக்கு.. ஒழுங்கா இப்போ நான் சொல்றதை கேட்கல இத உனக்கு யூஸ் பண்ண வேண்டியது தான் ” என்று அசராமல் கூறினான் கோகுல்..

“இப்ப மயக்கம் போட்டாலும் எப்படியும் அடுத்து முழிக்கும் போது கண்டிப்பா சொல்லிட்டா எனன் பண்ணுவிங்க?? ” என்றாள் அவளும் அசராமல்..

“ஏய் இங்க பார், உனக்கு நிஜமாவே உங்க அக்கா வாழ்கையில் அக்கறை இருந்தா வாய மூடிட்டு சும்மா இரு.. கடைசி நேரத்தில சொதப்பி வைக்காத.. இல்லை உன்னையும் தூக்கிட்டு போய் எங்கயாது வச்சிடுவேன்” என்று கோவமாய் கத்திவிட்டு சென்றான் கோகுல்..

இவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தாலும் வீட்டில் அனைவரும் படும் வேதனையை கண்டு சும்மாவும் இருக்க முடியாமல் தவித்து நின்றாள் வசுந்தரா.. ஆனாலும் மனதின் ஓரத்தில் நான்கு நாட்களுக்கு தானே பொறுப்போம் என்ற எண்ணம் தோன்ற தன்னறை நோக்கி அவளும் நகர்ந்தாள்..

 

 

 

 

 

 

 

 

Advertisement