Advertisement

அத்தியாயம் – 15

 

“ஹலோ  ப்ரோ, அங்க இருந்து வந்துட்டோம், எல்லாமே நம்ம ப்ளான் படிதான் நடக்குது…”

….

“எஸ், அண்ணி அந்த ராஜேஷ் போட்டோ பார்த்ததுமே ஷாக் ஆகிட்டாங்க.. அப்போ அந்த பூபதி பாண்டியன் முகத்தை பார்க்கணுமே, வெற்றி சிரிப்பு தான்…  ”

….

“தெரியலை ப்ரோ, நான் அங்கிள் கூட வெளிய வந்துட்டேன், என்ன பேசினாங்கன்னு தெரியல.. ”  

…..

“இல்ல ப்ரோ அங்கிளுக்கு எதுவும் தெரியாது.. ஆனா திரும்பி வரும் பொது அண்ணி டல்லா இருக்கவும் என்ன ஏதுன்னு விசாரிச்சாரு..  ”

“அண்ணி வீட்டுக்கு கிளம்புவாங்கன்னு தான் நினைக்கிறேன்.. ”

“ஓகே ப்ரோ ” என்று கௌதமனிடம் அனைத்தையும் கூறி முடித்து போனை வாய்த்த கோகுலுக்கு அப்பொழுது தான் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது..

மெல்ல யசோவின் அறை கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தான். கண்கள் மூடி தன் இருக்கையில் அமர்ந்த நிலையில் இருந்தாள்.. அவளது மனதிற்குள் ஏதேதோ நியாபகங்கள் எல்லாம் வந்து அலை மோதியபடி இருந்தன..

முகமோ பெரும் கவலையை தனக்குள்ளே பூட்டி வைக்க முடியாமல் தவிக்கும் உணர்வுகளை வெளிபடுத்தியது… என்ன முயன்றும் அவளால் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து வெளியே வர முடியவேயில்லை..

கல்லூரி காலம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் பொழுது ஒரு இனிய உணர்வை தரும்.. ஆனால் கல்லூரி காலமே நம் யசோதராவிற்கு நினைத்ததை விட இனியதாய் தான் இருந்தது..

அவள் நினைத்த படிப்பு. அதுவும் நினைத்த கல்லூரியில், மகிழ்சிக்கு பஞ்சம் இருக்குமா என்ன ??

அப்படி கல்லூரியில் உற்ற தோழனாய், நலம் விரும்பியாய், உண்மையான நட்பாய் கிடைத்தவன் தான் ராஜேஷ்..

நட்பிற்கு ஆண் பெண் பேதம் எல்லாம் இல்லை.. உண்மையான நட்பென்றால் அது காலம் கடந்தும் நிற்கும் அல்லவா ?? அப்படிதான் யசோதராவும் எண்ணினாள்.. ஆனால் அவளது எண்ணத்தை பொய் ஆக்குவது போல அடுத்தடுத்து சில விஷயங்கள் நடந்தது..

நாட்கள் ஆக ஆக ராஜேஷ் இவளிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.. நண்பன் தானே என்று பெரிதாய் எண்ணவில்லை யசோவும்..

அவனது பார்வையிலும்,. பேச்சிலும் வித்தியாசம்காணவும் முதலில் குழம்பித்தான் போனாள்.. ஆனாலும் தன் நண்பன் மேல் முழுதாய் சந்தேகம் கொள்ளவும் முடியவில்லை.

அவளது எண்ணத்தை அடியோடு அழிக்க, கல்லூரி முழுவதும் தானும் யசோதராவும் விரும்புவதாகவும், படிப்பு முடிந்து சில காலம்  கழித்து இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் செய்தியை பரப்பி இருந்தான் ராஜேஷ்..

இது போதாது என்று ஒரு நாள் ராஜேஷ் வந்தான் கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தி…

அவ்வளவு தான் யசோதரா பத்திரகாளி ஆகிவிட்டாள்..

அவனை அழைத்து என்ன பேசினாளோ அடுத்து அவள் இருந்த திசைக்கே அவன் வரவில்லை..

இப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்த சமயம் தான் கௌதமன் யசோவை திருமணம் செய்ய கேட்டது.. எல்லாம் சேர்ந்து யசோதராவிற்கு இன்னும் மனதை இறுக செய்தது..

ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் தன் நட்பு இப்படி பொய்த்து போனதே என்ற கவலை வெகு நாட்களுக்கு இருந்தது.. அவன் எப்படி பழகியிருந்தாலும் இவள் உற்ற தோழனாய் தானே நினைத்தாள்..

அப்படி நினைத்தவனை இன்று புகைப் படத்தில், மாலையணிவித்து  காணவும் துடித்து தான்  போனாள்                                     

    என்ன முயன்றும் அவளால் தன் உணர்வுகளை சமன் செய்ய முடியவில்லை இங்கிருந்தால் வேலைக்கு ஆகாது என்றெண்ணி வீட்டிற்கு கிளம்ப கண் திறந்தவள், அவளையே பார்த்திருந்த கோகுலை காணவும் என்னவென்பது போல பார்த்தாள்..

“என்ன அண்ணி எதுவும் பிரச்சனைய ??” 

“அ.. அது… அதெல்லாம் ஒன்னும் இல்லை கோகுல்.. வீட்டுக்கு போகலாம்.. என்று கூறவும் இருவரும் கிளம்பி தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.. ”

அதே நேரம், கௌதமன் முன் நிரஞ்சன் நின்றிருந்தான் முகம் கொள்ளா புன்னகையோடு..

“ஹேய் கெளதம், இங்க பார் மும்பை போலீஸ்ல இருந்து பேக்ஸ் வந்திருக்கு.. அந்த கேசவை எங்க பார்த்தாலும் அவனை அரஸ்ட் பண்ணவோ தேவை பட்டா, சூட் பண்ணி அரஸ்ட் பண்ணவோ நவ் ஐ ஹேவ் ரைட்ஸ்… ”

“தட்ஸ் கிரேட்.. இதை தான் நானும் எதிர்பார்த்தேன்.. நெக்ஸ்ட் வீக் இந்த கேசோட பைனல் ஹியரிங் டா.. அதுக்குள்ள அவனை பிடிக்கணும்.. அப்போதான் எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும்..”

“எஸ், கெளதம் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.. நமக்கு வந்த தகவல் படி இன்னிக்கோ இல்லை நாளைக்கோ அவன் இங்க வருவான்.. பட் அது நமக்கு தெரியாத மாதிரியே அவனை ப்ரீயா மூவ் பண்ண விடனும்.. ”

“ஓகே டா.. அதெல்லாம் உன் வேலை.. பட் கடைசி நேரம் வரைக்கும் மோகனை நம்ம கண் பார்வையிலேயே வச்சிருக்கணும்.. மத்தபடி இந்த கேசவை மட்டும் கோர்ட்ல ப்ரோடியுஸ் பண்ணிட்டா அப்புறம் நான் பார்த்துக்கிறேன்..    ” 

“ஓகே டா… யசோ, பூபதி பாண்டியனை பார்த்துட்டாங்களா?? ராஜேஷ் பத்தி எதுவும் தெரியவந்ததா ??”

“எஸ் டா.. எல்லாமே நம்ம பிளான் படி தான் நடக்குது. ஆனா இதுக்கு நடுவுல என் பொண்டாட்டியும், உன் வீட்டம்மாவும் எதோ பண்றாங்க..” என்றான் கௌதமன் ஒரு மெல்லிய புன்னகையோடு..

“ஹ்ம்ம்…கொள்ளைக்காரன், கொலைகாரனை கூட நம்ம ஈஸியா சமாளிக்கிறோம், இவங்களை சமாளிக்க முழிக்க வேண்டியதா இருக்கே டா..” என்று நெற்றியை சுருக்கினான் நிரஞ்சன்..

“விடு மச்சி.. எப்படியும் இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியும்.. அதுக்கு சில ஏற்பாடுகள்  மட்டும் செய்யணும் ” 

“ஓ !! நீ பேசாம எங்க டிபார்ட்மென்ட்ல ஜாயின் பண்ணிடு டா..” என்று நண்பனை கேலி பேசினான் நிரஞ்சன்..

“ஹா ஹா குட் ஜோக்.. ஓகே டா.. நம்ம ரொம்ப நேரம் இப்படி பேசுறது நல்லது இல்லை.. சி யு சூன்.. ” என்று இருவரும் கை குலுக்கி விடை பெற்றனர்..

டேய் நான்சொல்றதை கேட்கவே கூடாதுன்னு இருக்கியா நீ??” என்று ஏகப்பட்ட கோவத்தில் அலைபேசியின் கத்திக்கொண்டு இருந்தார் பூபதி பாண்டியன்..

பதிலுக்கு அந்த பக்கத்தில் இருந்து என்ன வந்ததோ,

“இங்க பார் முடிஞ்சா நான் சொல்ற மாதிரி செய்.. இல்லைனா பேசாம இரு.. நீயா எதையாவது செய்யாத.. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது.. வெண்ண திரண்டு வர நேரத்துல தாழி உடைஞ்ச மாதிரி ஆகிடும் “ என்றவர் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு வைத்தார்..

அவரது மனதில் பல கணக்குகள்..

“இந்த யசோதரா மட்டும் நம்ம சொல்றதை கேட்டு நடந்துட்டா எல்லாமே நல்லதா முடியும்.. ஆனா நடக்கணுமே..” என்று யோசிக்கும் பொழுதே மாரி வந்தான்..

“என்னடா மாரி, போன விஷயம் என்னாச்சு ?? ”    

“அய்யா.. எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.. யாருக்கும் வெளிய தெரிய வராதுங்கய்யா..ஆனா ??”

“என்ன டா ஆனா ஆவன்னான்னு ??”

“இதை கொஞ்சம் பாருங்கய்யா..” என்று அவர் கையில் ஒரு காகிதத்தை கொடுக்க, அதை கண்ட அவரோ பதறிவிட்டார்..

“டேய் இந்த விஷயம் எப்படி டா வெளிய தெரிஞ்சது..”

“அதான் தெரியலைங்கய்யா ”

“ச்சே.. என்ன பதில் டா இது கூறு கெட்டவனே.. தெரியலைன்னு சொல்லவா டா உன்னை வேலைக்கு வச்சிருக்கேன்.. ஒரு மணி நேரம் தான் உனக்கு டைம். என்னன்னு விசாரி..”

“ம்ம் சரிங்கய்யா ” என்று அவன் விடைபெற  பூபதி பாண்டியன் மீண்டும்  யாருக்கோ அலைபேசியில் அழைத்தார்..

“நல்லா கேட்டுக்கோ, விஷயம் வெளிய தெரிஞ்சு போச்சு.. நம்ம கொஞ்சம் பொறுமையா போறது நல்லது..”

….

“எல்லாம் சரிதான்.. ஹ்ம்ம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்.. இன்னும் ஒரே வாரம் தான்..”

“சரி நேர்ல பாப்போம் ” என்று போனை வைத்தவர் முகத்தில் எண்ணிலடங்கா சிந்தனை ரேகைகள்..

“ஹே !! யசோ… என்ன சீக்கிரமே வந்துட்ட…” என்று ஒன்றுமே தெரியாதவன் போல அறைக்குள் நுழைந்தான் கௌதமன்..

அவனது முகத்தை ஏறிட்டு பார்த்தவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனது கைகளை பிடித்து இழுத்து தன்னருகே அமரச்செய்து அவன் தோள்களில் சாய்ந்துக்கொண்டாள்..

“அட என்ன யசோ வரவேற்பு எல்லாம் பலமா இருக்கே.. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நான் முன்னமே வந்திருப்பேனே” என்று அவன் சிரிக்க அவளோ உச்சு கொட்டினாள்..

“என்ன யசோ என்னாச்சு.. லுக்கிங் டல் ”

“அந்த பூபதி பாண்டியனை பார்த்தேன்.. ”     

“ஓ !! மீட்டிங்கா ???”

“ம்ம் ”

“அதுக்கு ஏன் டல்லா இருக்க ??”

“அங்க ராஜேஷ் போட்டோவை பார்த்தேன்…. ”

“ராஜேஷ் ?? ஹூ இஸ் ஹீ ??”

“ம்ம்ச், ராஜேஷ் தெரியாதா ?? நான் தான் சொல்லிருக்கேன்ல.. காலேஜ்ல எனக்கு பெஸ்ட் பிரின்ட்ன்னு..”

“ஓ!! அந்த ராஜேஷா ??அவன் கூட உன்னை ப்ரொபோஸ் பண்ணி நீ கூட அவன காய்ச்சி எடுத்தியே ??”

“ம்ம்…. ”

“சரி அவன் போட்டோவ அங்க ஏன் பாத்த ??”

“அந்த ராஜேஷோட அப்பா தான் பூபதி பாண்டியன்.. ”

“ஓ !!”

“அவன் உயிரோட இல்லை கெளதம்.. ” என்று கூறும் பொழுதே அவளது கண்கள் கலங்கின..

“என்ன யசோ சொல்ற.??” என்றான் வேண்டுமென்றே முகத்தில் அதிர்ச்சியை காட்டி..

“ம்ம்ச் சும்மா நடிக்காதிங்க கெளதம்.. அந்த பூபதிபாண்டியன் பத்தி நீங்க விசாரிக்கும் போதே உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சு இருக்கும் தானே..” என்றாள் கோவமாய்  

“ம்ம் தெரியும்.. ”

“பின்ன ஏன் என்கிட்டே சொல்லல?? ”

“அந்த ராஜேஷ் தான் இந்த ராஜேஷ்னு எனக்கு எப்படி மா தெரியும்??  ”

“ம்ம் ”

“சரி வருத்தபடாத,. இத்தனை வருஷம் கழிச்சு அவனை இப்படி ஒரு கோலத்துல பாக்குறது கஷ்டமா தான் இருக்கும்..   ”

“ம்ம்..அன்னிக்கு அவன்கிட்ட நான் ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன் கெளதம். இப்போ நினைச்சா அதை நான் கூலா கேண்டில் பண்ணிருக்கணும்னு தோணுது   ”

“எல்லாமே அப்படிதான் யசோ சில விஷயங்கள் அப்போதைக்கு சீரியஸா இருக்கும் .. பிறகு நினைச்சு பார்த்தா உப்பு சப்பில்லாம இருக்கும்..”

“ஹ்ம்ம் புரியுது… ”

“ஆமா எப்படி இறந்தாணு கேட்டியா ??”

“ம்ம்ச் உங்க விசாரணையை இங்கயும் ஆரம்பிச்சுடிங்களா ??”

“நான் எதார்த்தமா தான் கேட்டேன் யசோ ” என்றான் பாவமாய் முகத்தை வைத்து..

“நீங்க கோவமா இருக்கும் போது கூட நம்பிடுவேன், ஆனா இப்படி பாவமா முகத்தை வைக்கும் போது தான் சந்தேகமா இருக்கு..”

“ஹா ஹா டல் மூட்ல கூட என் பொண்டாட்டி ஷார்ப்பா தான்யா இருக்கா.. ”

“ஹ்ம்ம் விசயத்துக்கு வாங்க கெளதம்.. சோ நீங்க என்னை வச்சு அந்த பூபதி பாண்டியனை கார்னர் பண்ண நினைக்கறிங்க அப்படிதானே.. ??”

“நல்ல ஜோக் யசோ.. நான் அப்படி நினைச்சிருந்தா, இன்னிக்கு நடந்த மீட்டிங் எப்பவோ நடந்திருக்கும், இந்த கேஸும் முடிஞ்சிருக்கும்.” என்றவன் மேலே எதுவும் பேசவில்லை

“நீங்க என்ன சொன்னாலும் இதெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது கெளதம்.. ”

“இந்த விசயத்துல இருந்து தள்ளி இருன்னு உனக்கு அன்னிக்கே சொன்னேன்ல யசோ.. ” என்றவனின் குரல் இறுகி இருந்தது.

“ஆபத்துல மாட்டி இருக்கிறது என் புருஷன் ” என்றவளது குரலில் உஷ்ணம் தெரித்தது..

அவளது வார்த்தையில் சற்றே கௌதமனின் கோவம் அடங்கி இருந்தாலும் யசோதரா ஏதாவது செய்து அது மேலும் இப்பிரச்சனையை பெரிதாக்க கூடாதே, அதுவும் இல்லாமல் அவளுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிட கூடாதே என்று எண்ணினான்..

ஆனாலும் அவனுக்கு நன்றாய் தெரியும் யசோதரா இவ்விசயத்தில் தன் பேச்சை கேட்கமாட்டாள் என்று, ஆனாலும் சொல்வதும் அவளை காப்பதும் அவனது கடமை அல்லவா ??

“வேணாம் யசோ ” என்று அவன் கூறும் பொழுதே தேன்மொழியும் வசுந்தராவும் வந்திருக்கும் சத்தம் கேட்க

இருவரும் ஒரு முறை மாறி மாறி பார்த்து முறைத்துவிட்டு வந்தவர்கள் பார்க்க சென்றனர்..

“சித்தி… வசு,” என்றபடி அவர்களிடம் சென்று அமர்ந்தவள் மறந்தும் கணவன் பக்கம் திரும்பவில்லை..

“என்ன தேனு எதுவும் விசேசமா ??” என்று சரியாய் அம்பிகா கணித்து கேட்க

“ஆமாண்ணி, விசாகன் சித்துவ கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லிட்டார் ” என்று மகிழ்ச்சியாய் அவர் கூற, அம்மகிழ்ச்சி அனைவருக்கும் ஒட்டிக்கொண்டது.

“சித்தி, ரொம்ப நல்ல விஷயம். சித்துக்கு இப்போதான் சந்தோசமா, நிம்மதியா இருக்கும்.. அவளையும் கூட்டிட்டு வந்திருக்காலமே..”

“அவளும் தான் கிளம்பினா யசோ, நாங்கதான் வீட்டுல இருன்னு விட்டு வந்தோம்.. இதுக்கு முழுக்க முழுக்க கெளதமுக்கும், வசுக்கும்  தான் தேங்க்ஸ் சொல்லணும் ” என்றார் கண்கள் பணிக்க

“சித்தி ”” அத்தை ” என்று ஒருசேர கூறினார் அவ்விறுவரும்..

“என்ன சித்தி சொல்றிங்க ??” என்று புரியாமல் விழித்தவள் யசோதரா தான்..

”ஆமா யசோ கெளதமும், வசுவும் தான் விசாகன் கிட்ட பேசினாங்க. அப்புறம் தான் ஒரு தெளிவுக்கு வந்து இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னாப்ல.. ” எனவும் தன் கணவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள் யசோதரா..

“அன்னிக்கு நான் பேசலாம்னு நினைச்சதுக்கே வேணாம் அது இதுன்னு சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரும் பேசிருக்காங்க” என்று நினைத்தவளின் பார்வையை சரியாய் புரிந்துக்கொண்டான் கௌதமன்..

“அத்தை இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. விசாகனுக்கு மனசில சில குழப்பங்கள், அவ்வளோ தான்.. மத்தபடி அவர் என்னிக்கோ சித்துவை விரும்ப ஆரம்பிச்சுட்டார்..”

இப்படியாக மேலும் சில நேரம் பேச்சு வளர, கோகுலும் அங்கே வந்து சேர்ந்தான்.. அவனது முகமே கௌதமனிடம் எதுவோ தனிமையில் பேச நினைக்கிறான் என்பது உணர்த்த, சில நேரம் கழித்து அண்ணன் தம்பி இருவரும் தனியே எழுந்து சென்றனர்..

யசோவின் பார்வை அவர்களை தொடர்ந்தாலும், அமைதியாய் அமர்ந்திருந்தாள்..

தனியே சென்றதும் கோகுல் “ப்ரோ அந்த மோகன் பயங்கரமான ஆளா இருக்கான்.. இப்போவே அவனை அரெஸ்ட் பண்றது தான் நல்லது” என்று கூற

“இல்லை கோகுல். அவன் மேல சந்தேகம் இல்லைன்னு அவனை ப்ரீயா மூவ் பண்ண விட்டாதான் அந்த கேசவ் நம்ம கையில கிடைப்பான்.. இப்போ இவனை பிடிச்சா தென் அவன் நமக்கு கிடைக்க மாட்டான்.. என்னோட கேஸுக்கு அந்த கேசவ் ரொம்ப முக்கியம் ”

மோகன் வேறு யாருமில்லை, கௌதமனிடம் சமீபத்தில் ஜூனியராய் சேர்ந்தவன் தான். முதலில் அவன் மீது எவ்வித சந்தேகமும் இல்லை கௌதமனுக்கு..

ஒருநாள் யாருடனோ ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தான், அந்நேரம் பார்த்து கௌதமன் வர, வேகமாய் போனை வைத்துவிட்டான்.. இன்னொரு நாள் கெளதமன் ஏற்றுக்கொண்டிருக்கும் நில மோசடி வழக்கை பற்றி தேவையே இல்லாமல் நிறைய கேள்விகள் கேட்பதும், கௌதமன் மேற்கொண்டு என்ன செய்ய போகிறான் என்பதை அறிய அவன் செய்த வேலைகள் கௌதமனுக்கு வித்தியாசமாய் பட அவனை சற்றே கண்காணிக்குமாரு ஸ்டீபனிடம் கூறியிருந்தான்..

அதன் பொருட்டே பிரபு என்று ஒருவன் வந்து, கௌதமனிடம் ஒரு கடிதம் கொடுத்தும், அதை கௌதமன் அலட்சியமாய் தூக்கி எறிந்த பின் ஸ்டீபன் எடுத்து கௌதமனிடம் பையில் வைத்துவிட்டு நகர்ந்ததும் உடனே மோகன் அதை எடுத்து படித்ததும் என்று எதுவும் கௌதமன் கண்ணனுக்கு தப்பவில்லை..

அந்த பிரபுவே கௌதமனின் ஏற்பாடு என்று மோகன் அறியாமல் போனது தான் அவனது விதியோ என்னவோ ??

அவன் மீதிருந்த சந்தேகம் உறுதியாகவுமே நிரஞ்சனிடம் மோகனின் புகைப்படத்தை கட்டி அவனை கண்காணிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டான் கௌதமன்..

இதில் தெரியவேண்டியது மூன்று விசயங்கள், பூபதிபாண்டியனுக்கும் அந்த கேசவிற்கும் என்ன சம்பந்தம் ??

பிரியாவின் மரணத்திற்கும் இதற்கும் எதுவும் தொடர்பு உண்டா ??

போனில் அடிக்கடி மிரட்டல் விடுவது யார் ??

இம்மூன்றிற்கும் விடை கிடைத்து விட்டால்   போதும்  அனைத்தும் முடிந்துவிடும்..

ஆனால் கோகுலோ, “அண்ணா அன்னிக்கு தோட்டத்துல தீ வச்சது அந்த மோகன்னு தெரிஞ்சும் அவனை சும்மாவாது ரெண்டு தட்டு தட்டனும் போல இருக்குண்ணா” என்று கூற

“ஹா ஹா ரெண்டு என்ன டா நாலு தாட்டே தட்டலாம். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. ஆனா இப்போ அதைவிட முக்கியமா இன்னொரு விஷயம்” என்று கௌதமன் அவ்விசயத்தை பற்றி கூற கூற கோகுலின் முகம் அதிர்ச்சியை காட்டியது..

கோகுலை போலவே இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தது இன்னொருவரும் கூட..

அது வசுந்தரா..

எதேர்ச்சியாய் அப்பக்கம் வந்தவள் இவர்களின் பேச்சு சுவாரசியமாய் இருக்கவும் அங்கேயே நின்றாள்.. ஆனால் கடைசியாய் கௌதமன் கூறிய விஷயம் கேட்டு அதிர்ந்தே நின்றுவிட்டாள்..

அறையின் பக்கவாட்டு கண்ணாடியில் வசுந்தராவின் பிம்பத்தை கண்டும் காணாது போல நின்றிருந்தான் கௌதமன்..

அவளோ வந்த சுவடே தெரியாமல் திரும்பி செல்ல, கோகுலிடம் மேலும் ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டு சென்றான்..

இரவு முழுக்க கௌதமன் வீடு திரும்பவில்லை, எப்பொழுது வந்தானோ யாரு அறியவில்லை. அவனோடு சண்டையிட காத்திருந்த யசோதரா கண் விழிக்கும் போது கௌதமன் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தான்..

எங்கே போவான் எப்படியும் இங்கேதானே வந்தாக வேண்டும் என்ற முடிவோடு அவளும் தன் வேலையை பார்க்க கிளம்ப இருவரின் பொழுதுகளும் மௌனமாய் விடைபெற்றது..

தன் வேலையாக வெளிய சென்றுவிட்டு அப்பொழுது தான் கோர்ட் வளாகத்தில் நுழைந்த கௌதமனுக்கு வேதமூர்த்தியிடமிருந்து அழைப்பு வரவும் எடுத்து காதில் வைத்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான்..

பின்னே, யசோதரா கடத்தப்பட்டாள் என்ற செய்தி கௌதமனுக்கு அதிர்ச்சியை தானே கொடுக்கும்…

 

Advertisement