Advertisement

அத்தியாயம் – 10 

“ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள… எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல…” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.. கௌதமனின் நெருங்கிய தோழன்..

“ஹாய்… நிரஞ்சன்.. வா டா வா.. இப்போதான் வழி தெரிஞ்சதா உனக்கு??”

“ சார டா.. கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ட்ரைனிங் வேற போட்டாங்க.. அப்புறம் எப்படி இருக்கு கல்யாண வாழ்கை..”

“ஜோரா இருக்கு… நீ தானே சீனியர்.. சொல்லு சஞ்சனா எப்படி இருக்கா ?? எப்போ டெலிவரி..??”

“இன்னும் ரெண்டு மாசம் இருக்கு நிரஞ்சன்.. அப்புறம் சொல்லு டா என்ன விசயமா வர சொன்ன..”

கௌதமனும் தனக்கு வந்த போன் அழைப்புகள் பற்றி கூறினான்..

“இது வழக்கம் போல வர மிரட்டல்ன்னு நினைச்சேன் டா.. ஆனா அப்படி இல்லைன்னு தோணுது.. யாரோ பாலோ பண்றது போலவே இருக்கு.. அன்னிக்கு கூட ஒரு கார் மோத வர மாதிரி வந்துட்டு போகுது.. அகைன் போன் கால்.. சும்மான்னு விடவும் முடியல நிரஞ்சா.”

“ஹ்ம்ம்” என்று சற்று நேரம் யோசித்தவன்

“கெளதம் நீ சொல்றது போல பார்த்தா பேசுறவன் திருநெல்வேலி இல்ல தூத்துக்குடி எரியவா இருக்கணும்.. அந்த சைட் யாருக்கும் கேஸ் அட்டென்ட் பண்ணியா?? ” என்று கேட்டான்..

“ஹ்ம்ம் இல்லையே டா.. எத்தனையோ கேஸ் பாக்குறேன் சிலதுக்கு என் ஜூனியர்ஸ் போறாங்க..”

“ஓகே ஓகே.. இல்ல நீ அட்டென்ட் பண்ண கேஸ்ல ஆப்போசிட் பார்ட்டிக்கு எதுவும் சிவியரான தீர்ப்பு வந்ததா ?? ”

“ஹேய் நிரஞ்சன் என்ன கேள்வி டா இது… அப்படி எத்தனையோ தீர்ப்பு வந்திருக்கு.. என்னோட வேலையே அது தானே டா. எனக்கு என்னவோ இப்படி மிரட்டுறவன் வெளி ஆளா இருக்க முடியாதுன்னு தோணுது.. என் பெர்சனல் நம்பர் ஒரு சிலருக்கு தான் தெரியும். அப்படி இருக்கும் போது இவன் எப்படி கால் பண்ண முடியும். ஒவ்வொரு விசயமும் பார்த்த மாதிரி சொல்றான்..”

“ஓகே கெளதம்.. புரியுது.. எதுக்கும் யசோதராகிட்டையும் சொல்லி வச்சிட்டு என்ன..”

“ஹூப்ஸ்….. அவளுக்கு அல்ரெடி நிறைய டென்சன்.. ஆனா இதையும் மறைக்க முடியாது.. சொல்லணும். ”

“ஓகே கெளதம்.. இன்னொரு டைம் இதே போல கால் வந்தா, அடுத்த நிமிஷம் சொல்லு பார்த்துக்கலாம்..”என்று அவன் கிளம்ப

“தேங்க்ஸ் டா.. இங்க வந்ததுக்கு.. கோர்ட்ல பார்த்து பேசிருப்பேன் பட் தேவையில்லாம அதுவும் ஒரு டாக் ஆகும்.”

“அதானே… நானும் சஞ்சுவும் ஒருநாள் உங்க வீட்டுக்கு வரோம் டா.. முறை அது தானே.. புது ஜோடிய வந்து பார்க்கணும் இல்லையா” என்றுவிட்டு மேலும் சில நொடிகள் பேசிவிட்டு கிளம்பினான் நிரஞ்சன்..

அவன் கிளம்பவும் யசோதரா அழைக்கவும் சரியாக இருந்தது..

“சொல்லு யசோ… ”

“ஹா… கிளம்பிட்டேன் மா.. கொஞ்சம் இம்பார்டன்ட் வொர்க் இப்போதான் முடிஞ்சது…”

“ஓகே.. நீ ரெடியா இரு.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றவன் அடுத்து சென்ற இடம் யசோதராவின் பேக்டரி..

“இப்போ தெளிவா இருக்க போலவே யசோ??” என்றபடி கார் கதவினை திறந்துவிட்டான்..

“ஹ்ம்ம் மார்னிங்கே தெளிஞ்சுட்டேன் கெளதம்… ”

“குட்… தெட்ஸ் மை யசோ..”

“சித்தி பார்க்க வந்தாங்க கெளதம்.. அவங்கட்ட பேசினது மனசுக்கு கொஞ்சம் தெளிவா இருந்தது…”

“ம்ம் நல்லது.” என்றவன் புன்ன்கைதுக் கொண்டான்..

“என்ன சிரிப்பு… ??”

“உறவுகள் இது தான் யசோ, சில நேரம் கசக்கும், சில நேரம் இனிக்கும்.. சோ எது எப்படியோ அதை அப்படி ஏத்துக்கணும். கசப்பையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா கண்ணனுக்கு முன்ன இருக்க இனிப்பு கூட நமக்கு தெரியாது.. ”

“ஊப்ஸ் கெளதம்.. ஐம் ரியலி தேர்ஸ்டி…”

“கார்ல கிஸ் பண்ணா இன்னும் ரொமான்ட்டிக்கா இருக்கும் யசோ” என்று கண்ணடித்தவனை இரண்டு அடி போட்டாள் மனைவி..

“ஹேய் யசோ ஐ னோ யு சேஞ் தி டாபிக்.. பட் ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ. உன் பக்கம் எப்படி சில காரணங்கள் இருக்குமோ அதே போல அவங்க பக்கமும் இருக்கும். சோ தேவையில்லாமல் இனியும் விலகி நிக்காத டா..     ”

“ஹ்ம்ம் வக்கீல் இல்லையா அதான் பாயிண்டா பேசுறிங்க.. என் வலி எனக்கு தான் தெரியும்… ”

“வக்கீல் தான்.. நீதானே இந்த வக்கீல் வேணும்னு சொன்ன” என்றவன் அவளை இழுத்து வைத்து இதழ் அணைத்தான்..

“ம்ம்ச் கெளதம் என்ன இது..?? ” என்று தள்ளி அமர்ந்தவள் அவனை முறைக்க தொடங்கி சிரிப்பில் முடித்தாள்..

“பேசிட்டு இருக்கும் போது இப்படி பண்ணாதிங்கன்னு சொன்னேன்ல கெளதம் ”

“ஏன் ??”

“கான்சன்ட்ரேசன் மிஸ் ஆகுதா இல்லியா” என்றவள் கலகலத்து சிரித்தாள்..

அவளது சிரிப்பை பார்த்தவன் “ எல்லாம் சரிதான் கொஞ்சம் நான் சொன்னதையும் யோசனை பண்ணு… ” என்றான்..

“ஹ்ம்ம் விடாகண்டன் ஆச்சே நீங்க… ” என்றவளுக்கு அவன் கூறுவதிலும் உண்மை இருப்பது போலவே தோன்றியது..

ஆனால் அதை வெளிக்காட்டாமல் “அவங்க எல்லாம் வந்திருப்பாங்களா கெளதம் ” என்றாள்..

“இல்லை யசோ எப்படியும் எழு மணிக்கு மேல தான் வருவாங்க..” என்றவனுக்குமே மனதின் உள்ளே பழைய நியாபகங்கள் எட்டி பார்க்க, அவனையும் அறியாமல் முகம் கருத்தது..

“கெளதம் ப்ளீஸ் டோன்ட் திங் அபௌட் யுவர் பாஸ்ட்.. நடந்தது யாராலையும் மாத்த முடியாது.. பிரியா அப்படி பண்ணினதுக்கு நீங்க என்ன செய்ய முடியும் கெளதம்?? முதல்லையே உங்ககிட்ட எல்லாம் சொல்லிருக்கணும் தானே.. அதை விட்டு கழுத்துல தாலி ஏறின பிறகு அப்படி பண்ணா என்ன அர்த்தம்??” என்றவளுக்கு மறைக்க முயன்றும் கோவம் எட்டி பார்த்தது..

அவளும் இருந்தாள் தானே கௌதமன் பிரியா திருமணத்தில்.. நடந்ததை எல்லாம் பார்த்தாள் தானே.. அப்படி ஒரு சம்பவம் நடந்த அடுத்த நொடி கெளதமன் முகத்தை தானே பார்த்தாள்.. அவன் முகத்தில் தோன்றிய அத்தனை பாவங்களும் அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ அவள் மறக்கமாட்டாள்..

அன்று ஆரம்பித்த குற்ற உணர்வு அவளுக்கு இன்னும் மறையவில்லை மறக்கவில்லை.. மனதை நீரிய உணர்வுகளை அவளும் தான் எத்தனை நாள் தாங்குவாள்.. என்னால் தானோ?? என்னால் தானோ?? என்ற கேள்விக்கு அவளிடமே பதில் இல்லையே..

பிரியாவை பற்றி அவளுக்கு தெரியாது.. ஆனால் கெளதமனை பற்றி நன்றாய் மிக மிக நன்றாய் தெரியுமே… அன்று அவன் நின்றிருந்த கோலம், அப்பப்பா… நெஞ்சில் மறக்குமா என்ன??

அவனுக்கு சமாதானம் சொன்னவள் எண்ணிலடங்கா வேதனையோடு அவன் கரம் பற்றினாள்..

“ஹே என்ன யசோ எனக்கு சொல்லிட்டு, இப்போ நீ பீல் பண்ற??”

“ இல்லை கெளதம்.. அன்னிக்கு நீங்க நின்னு இருந்தது இன்னும், இன்னும் என் மனசில அப்படியே இருக்கு.. கையில மாலையோட, அதிர்ச்சியா, அடுத்து என்ன செய்றதுன்னே தெரியாம நீங்க நின்னு இருந்தது… ஐயோ…. கெளதம் எல்லாமே என்னால தானே… நான்.. நான் மட்டும் அன்னிக்கே உங்களுக்கு சரின்னு சொல்லி இருந்தா…”

“ஸ்ஸ்… யசோ என்ன இது ?? நீ எதுக்கும் இவ்வளோ இமோசன் ஆகமாட்டியே.. உன் மேல எந்த தப்பும் இல்லை புரியுதா.. நமக்குள்ள நடந்தது இப்போ வரைக்கும் யாருக்கும் தெரியாது. நீ சொன்ன முடியாதுன்னு சொன்னது உன்னோட பதில். அதுக்கும் பிரியா அப்படி பண்ணதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ”

“இல்லை கெளதம் அது… ”

“அது இதெல்லாம் எதுவும் இல்லை யசோ.. இனிமே இத நினைச்சு நீ வருத்தப்படவோ கில்டியா பீல் பண்ணவோ கூடாது” என்று அவன் கண்டிப்பாய் கூற அறை மனதாய் தலையாட்டினாள்..

இப்படியாக இவர்கள் இருவரும் பேசியபடி வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே பிரியாவின் அப்பா முரளியும், அம்மா ராகினியும் வந்தனர்.. யசோதரா உள்ளிருக்கும் படபடப்பை வெளிக்காட்டாது வரவேற்றாள்.. அம்பிகா அனைத்திலும் மருமகளுக்கு துணையாய் நிற்க சிறிது நேரத்திலேயே தானாய் ஒரு நிமிர்வு வந்து ஒட்டிக்கொண்டது யசோவிற்கு.. கௌதமனின் பார்வையில் அனைத்தும் விழுந்தபடி தான் இருந்தது..

வந்தவர்கள் பொதுவாய் நலம் விசாரித்துவிட்டு யசோதராவிடம் தங்கள் திருமண பரிசாக ஒரு நகை பெட்டியை கொடுக்க, அவளோ தயக்கமாய் கௌதமன் முகம் பார்த்தாள்..

“வாங்கிக்கோ யசோதரா.. நீ எங்களுக்கு பொண்ணு மாதிரி தான்” என்று ராகினி கூறும் பொழுதே அவர் கண்கள் கலங்க முரளி

“என்ன ராகினி இது ” என்று லேசாய் கடிய தன்னை சமன் செய்துகொண்டார் ராகினி..

யசோதரா மறுபேச்சு இல்லாமல் அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டாள்..

“எங்க கெளதம் நீங்க அப்படியே இருந்துடுவிங்களோன்னு நாங்க புலம்பாத நாள் இல்லை.. நல்ல முடிவு எடுத்து இருக்கீங்க” என்று முரளி கௌதமனிடம் கூற அவன் பதில் கூறாமல் புன்னகை மட்டும் பூத்தான்..

ராகினிக்கு கௌதமன் யசோதராவை ஒன்றாய் பார்க்க பார்க்க, பிரியாவின் நினைவு வந்தது..

இப்படிப்பட்ட ஒருவன் தனக்கு கணவனாய் அமைய கொடுத்துவைத்திருக்க வேண்டும். ஆனால் பாவி மகள் அனைத்தையும் கெடுத்துவிட்டாளே.. அவள் செய்த வேலை, அதுவும் கழுத்தில் தாலி ஏறிய சிறிது நேரத்தில், யாராலும் மறக்க முடியாதே.. அம்பிகாவின் கரங்களை பற்றிக்கொண்டு

“என்னை மன்னிச்சுடுங்க அம்பிகா.. இப்போவும் கூட எனக்கு மனசு ஆறல.. ” என்று மன்னிப்பு கேட்டார்..

“என்ன ராகினி இது.. பாக்கும் போதெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்.. விடுங்கம்மா.. நாங்க அதை எல்லாம் தாண்டி வந்துட்டோம்.. நீங்களும் கொஞ்சம் கொஞ்சமா மறக்க பாருங்க..”

பெண்கள் இப்படி பேச, ஆண்களோ வெளி விசயங்களை பேச தொடங்கினர்.. இடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தது யசோ தான்.. கணவனையும், மாமியாரையும் மாற்றி மாற்றி பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

அவள் மனதிற்குள்ளும் பழைய எண்ணங்கள் தான்.. கௌதமன் தன்னிடம் காதலை கூறியது, அவள் மறுத்தது, அவன் தந்தை கடைசி நொடிகளில் இருந்தது, அவர் கேட்டதற்காய் அவன் திருமணத்திற்கு சம்மதித்தது.. பின் நடந்த அனைத்து அனர்த்தங்களும் ஒவ்வொன்றாய் ஊர்வலம் போனது அவள் மனதில்..

அவளது நிலையை கவனித்த கௌதமன் பிறர் பேச்சு கெடாமல் அவள் கரங்களை பற்றி அழுத்தினான்..

“ம்ம் ” என்று திகைத்து விழித்தவள், அவன் பார்வையில் என்ன கண்டாளோ முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டாள்..

பிறகு மேலும் சிறிது நேரம் அவர்கள் பேசிவிட்டு செல்ல, அதன் பிறகே யசோவிற்கு நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது..

யசோதரா கெளதமனது வாழ்வும் அதன் போக்கில் பயணிக்க, இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அதை விட பிணைப்பே அதிகமாய் இருந்தது..

யசோதரா முழுக்க முழுக்க அவனோடு பொருந்திவிட்டாள்.. அம்பிகாவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சி.. இப்படித்தானே மகன் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று ஆசைகொண்டார்.. இப்படி ஒரு வாழ்வை தன் மகனுக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் பொருட்டு தன் நட்பு வட்டத்தோடு சேர்ந்து ஆன்மீக சுற்றுலா கிளம்பி சென்றுவிட்டார்..

வீட்டின் அனைத்து பொறுப்புகளும் யசோதராவின் தலையில் விழ, முதலில் சற்று திணறினாலும் பின் சமாளித்துக்கொள்ள பழகிக்கொண்டாள் கௌதமனின் உதவியோடு..

இருவருக்குமே அவரவர் வேலைகள் சரியாய் இருக்க, வீட்டில் இருக்கும் பொழுதுகளே தனிமை தந்தது அதுவும் கௌதமனுக்கு எதுவும் அழைப்புகள் வராமல் இருக்க வேண்டும், இல்லை யசோதராவிற்கு ஏதாவது மீட்டிங்குகள் இல்லாமல் இருக்க வேண்டும்..

என்னதான் தன் பொறுப்பை எல்லாம் சித்தாராவிடம் ஒப்படைத்தாலும், முழுமையாய் எதிலிருந்து அவளால் விலக முடியவில்லை.. அதற்கு காரணம் ஒன்று வேத மூர்த்தி, இன்னொன்று சித்தாராவே.. எதற்கெடுத்தாலும் அக்கா அக்கா என்று வந்து நிற்பவளை ஒரு நேரத்திற்கு மேல் ஒதுக்கி வைக்க முடியவில்லை இவளால்..

சித்தாரா விசாகனது உறவு கூட சற்று முன்னேறியுள்ளது என்றே கூற வேண்டும்.. யசோவிடம் தோன்றாத இலகு தன்மை விசகானுக்கு சித்தாரவிடம் தோன்றியது…

“சித்து இந்த ட்ரஸ் உனக்கு நல்லாவே இல்லை” என்று கூறுவான் அவளும் உடனே மாற்றிக்கொண்டு வந்து நிற்ப்பாள்..

கலைவாணிக்கு மகன் இந்த அளவு மாறியதே பெரும் நிம்மதியை கொடுத்தது.. ஒருவேளை யசோதரா இப்படி எல்லாம் நடந்துகொண்டது நன்மைக்கே தானோ என்று கூட தோன்றியது அவருக்கு..

இப்படியாக அனைவரின் வாழ்வும் ஒரு சீராய் சென்று கொண்டிருக்க, வழக்கம் போல யசோதரா ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தாள்.. தான் வந்து அழைத்து போகிறேன் என்று கௌதமன் கூறியதற்கும் மறுத்துவிட்டாள்..

மனதில் இருக்கும் மகிழ்ச்சியோ என்னவோ தன்னை பின் தொடர்ந்த காரை கவனிக்க மறந்து ஒரு வளைவில் திரும்ப முயன்றாள் அடுத்து என்ன நடந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.. கண் விழித்து பார்க்கும் பொழுது கையிலும் காலிலும் கட்டுபோட்டு மருத்துவமனையில் இருந்தாள்..

“அவங்க கண்ணு முழிச்சிட்டாங்க” என்று நர்ஸ் கூறுவது அவளுக்கு எங்கோ கேட்பது போல இருந்தது.. அடுத்தநொடி புயலென உள்ளே நுழைந்தான் கௌதமன்..

“யசோ ” என்ற குரலில் உயிர்ப்பே இல்லை அவனுக்கு.. அடிபட்டது என்னவோ அவளுக்கு தான் ஆனால் வலித்தது அவனுக்கு போல.. முகத்தில் அத்தனை வலி நிரம்பி வழிந்தது.. உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை தன் பார்வையை ஓட்டினான்..

ஆனால் அவளுக்கோ அவன் முகம் பார்த்ததுமே பலம் வந்தது போல இருந்தது..

“யூ ஆர் நாட் எ டாக்டர் கெளதம்” என்று மெல்ல அவள் மெல்ல நக்கலாய் கூற, அவனோ முறைக்க, சரியாய் அங்கே டாக்டரும் வந்தார். வந்தவர் யசோதராவை பரிசோதிக்க, கௌதமனோ இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தான்..

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க கெளதம் ” என்று அவர் கூற

“இல்லை டாக்டர் எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை ”  என்று  என்னவோ அவர் இருப்பது இவனுக்கு எவ்வித தொந்திரவும் இல்லையென்பது போல கூறினான்..

அவரும் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை தொடங்க யசோதரா தான் தன் கணவனை முறைத்தாள்.. அதற்கெல்லாம் அவன் அசருவான என்ன கையை கட்டிக்கொண்டு இடுத்தமாய் நின்றிருந்தான்..

பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து டாக்டர் “ சின்ன சின்ன பிராக்ட்சர்ஸ் இருக்கு கெளதம்.. கம்ப்ளீட்டா இவங்க டென் டேஸ் நல்ல ரெஸ்ட்ல இருக்கணும். சோ ப்ளீஸ் டேக் கேர் ஆப் ஹேர்.. இன்னும் மூணு நாள் இங்க இருக்கட்டும்.” என்று அவனிடம் கூற அவனோ குற்றவாளி கூண்டில் இருப்பவரிடம் கேள்வி கேட்டபது போல அவரை ஒருவழி படுத்தி எடுத்துவிட்டான்..

அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் மருத்துவர் திணறாமல் பதில் கூறினாலும் யசோவினால் அதை தாங்க முடியவில்லை.. மெல்ல

“கெளதம் இதெல்லாம் டிஸ்சார்ஜ் ஆகும் போது கேட்டுக்கலாம்..” என்று கூற அதன் பிறகே அவன் மருத்துவரை விட்டான்.. அவர் வெளியே சென்ற அடுத்த நொடி தேன்மொழி, வேத மூர்த்தி, சித்தாரா, விசாகன் என அனைவரும் உள்ளே நுழைய இவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை..

ஆனால் கௌதமனோ ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.. இறுகிய முகத்துடன் அப்படியேதான் நின்றிருந்தான்.. யசோதராவிற்கு விபத்து என்று கேட்டதுமே அவன் பட்ட பாடு அவனே அறிவான்..

ஒரு நொடியில் மனதில் என்னென்னவோ தோன்றி மறைய அவனது உணர்வுகள் எல்லாம் அமிலத்தில் ஊறவைத்தது போல துடித்தது.. கையிலும் காலிலும் அடிபட்டு ரெத்த கறைகளுடன் அவளை காணவே அவனுக்கு திராணி இல்லை.

அதெல்லாம் யசோ கண் விழிக்கும் வரைதான். கண் விழித்தாள் என்று நர்ஸ் வந்து கூறவுமே அவனுக்கு கோவம் தான் தலைக்கேறியது.. எத்தனை முறை கூறினான் வந்து அழைத்து போகிறேன் என்று கேட்டாளா அவள்…

அவனது உணர்வுகளை அடக்கி நின்றிருந்தான்..

விஷயம் கேள்விப்பட்ட அம்பிகாவோ உடனே தன் பயணத்தை ரத்து செய்து வருவதாய் கூறினார். ஆனால் தேன்மொழியும் வேதாவும் தான் வேண்டாம் தாங்கள் பார்த்துகொள்கிறோம் என்று சமாதானம் கூறினர்.

கௌதமனோ மருத்துவமனைக்கு வந்து யாரிடமும் பேசவில்லை. சிலை போல் அமர்ந்திருந்தான்.. பிறகு மருத்துவரிடம் கேள்விகள் கேட்டான் அவ்வளவே..

“என்ன யசோ மா எத்தனை வருசமா வண்டி ஓட்டுற பார்த்து வர கூடாதா டா ” என்று தேன்மொழி விழிகளில் நீரோடு கேட்க

“இல்லை சித்தி, ஒரு செகண்ட் பின்னால வந்த கார் இடிக்க வர மாதிரி இருந்தது, நான் சுதாரிச்சு வண்டி திருப்பக்குள்ள நானே எதிலோ இடிச்சுட்டேன் போல” என்று விளக்கம் கூறினாள்..

அவளால் எழுந்து அமர கூட முடியவில்லை..

“ரொம்ப வலிக்குதா க்கா ” என்று சித்தாரா வினவ தன் சிறு புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாய் தந்தாள் யசோ..

“யசோ டிஸ்சார்ஜ் ஆகவும் நேரா நம்ம வீட்டுக்கு போலாம் டா.. உடம்பெல்லாம் சரியாகி, அம்பிகாக்கா வரவும் பிறகு அங்க போலாம்” என்று வேத மூர்த்தி கூற அவளோ மறுப்பாய் கூறுமுன் கௌதமன்

“சரி மாமா” என்றுவிட்டான்..

அவன் கூறியதை கேட்டு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியானாலும் சம்பந்தபட்டவளுக்கு இதில் துளியும் சம்மதம் இல்லை.. அதிலும் அவன் அவளை கேட்காமல் பதில் கூறியது முற்றிலும் பிடிக்கவில்லை..

வந்ததில் இருந்து வேறு அவன் முகம் திருப்பி நின்றிருந்தது அவளை உறுத்த, அவனது உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதும் அவளுக்கு புரிந்தது.. ஆனாலும் அவள் யசோதரா ஆகிற்றே சொன்னதை உடனே கேட்பாளா என்ன ??

“இல்லை சித்தப்பா.. வேணாம்.. அங்க அத்தை வேற இல்லை.. இவர் தனியா” என்று கூறி முடிக்கும் முன்னே பட்டென்று கதவை சாத்திவிட்டு வெளியேறினான் கௌதமன்..

விசாகனோ நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்தாலும் யசோவின் உடல் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்..

“என்ன யசோ பாரு கெளதம் கோவிச்சுட்டு போறதை”

“இல்லை சித்தி.. எனக்கு என்ன படுத்தே இருக்கணும். அதை எங்க இருந்தா என்ன ?? ப்ளீஸ் சித்தி இதுல கம்ப்பல் பண்ணாதிங்க.” எனவும்

“இங்க பார் யசோ.. எல்லா விசயத்திலும் உன் பேச்சை கேட்டிட்டு  இருக்க முடியாது. ஒன்னு நீ அங்க வா, இல்லை நாங்க எல்லாம் கெளதம் வீட்டுக்கு வரோம். எல்லா விசயத்திலும் வீம்பு பண்றதை முதல்ல நிறுத்து ” என்று தேன்மொழி சற்றே அதட்டலும் கண்டிப்புமாய் கூற திகைத்துத்தான் போனாள் யசோதரா..

முதன் முறையாய் தேன்மொழி இப்படி கண்டிப்பாய் பேச பதில் கூற முடியாமல் மௌனித்து போனாள் யசோ..

அவள் மௌனத்தையே சம்மதமாய் ஏற்று அங்கே அவளது அரை, அவளது தற்போதைய உடல் நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டது..

கௌதமனோ இரவெல்லாம் மருத்துவமனையில் தான் இருந்தான், விடிந்ததும் தேன்மொழி வந்துவிடுவார், இவன் கிளம்பி சென்றுவிட்டு கோர்ட்டிற்கு செல்லுமுன் ஒருதரம் வந்து செல்லுவான். பிறகு மதியம் ஒரு தரம் என்று கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வந்துவிடுவான்..

அவள் எழுந்து அமர, உண்ண, ரெஸ்ட் ரூம் செல்ல என்று அனைத்திற்கும் உதவுனான். ஒரு அன்னையாய் கணவனாய் பார்த்துகொண்டான் தான். ஆனால் ஒருவார்த்தை கூட அவன் பேசவில்லை அவளிடம்..

முதல் இரண்டு நாட்கள் அவளும் அமைதியாய் இருந்தால் தான் மூன்றாவது நாள் தாங்கமுடியாமல் கேட்டேவிட்டாள்..

இரவு ரெஸ்ட் ரூம் போகவேண்டும் என்று கூறவும் அவனும் அவளை பார்த்து மெல்ல பிடித்து இடுப்பில் கைவைத்து அணைத்தார் போல கூட்டி சென்றான்.. கணவனது அருகாமை அவனது பேச்சிற்காக ஏங்க வைத்தது..

“என்கிட்டே பேசமாட்டிங்களா கௌதம் ??” என்று அவன் முகம் பார்த்து ஏக்கமும் காதலுமாய் அவள் கேட்ட அடுத்த நொடி

“வலிச்சாலும் பரவாயில்ல பொறுத்துக்கோ ” என்று கூறியவன் அவளை இறுக அணைத்திருந்தான்..

“ஸ்ஸ்… கெளதம்” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை..

ஒருநொடி தான்.. ஒரே ஒருநொடி தான்.. சட்டென்று விடுவித்தவன் அவளை ரெஸ்ட் ரூமில் அனுப்பிவிட்டு நிற்க அவனது அலைபேசி அலறியது…   

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement