Advertisement

அத்தியாயம் – 1

 

“சிவா எங்கடா இருக்கே??” என்ற குரல் சிவரூபன் காதில் விழுந்ததோ இல்லையோசங்கவியின்காதில் விழுந்து வைத்தது.

 

“அந்த தடிமாடை எதுக்கும்மா இப்போ கூப்பிடுறீங்க??” என்று கத்திக்கொண்டே வந்தாள் சிவாவின் தங்கை சங்கவி.

 

“அண்ணனுக்கு காலேஜ்க்கு மணியாச்சு இன்னும் ஆளைக் காணோம். அப்புறம் வந்ததும் குதிப்பான் நேரமாச்சுன்னு” என்றார் அம்மக்களை பெற்ற மகராசி மாலினி.

 

“க்கும்… நீயே சொல்லிக்கோ உன் புள்ளை காலேஜ் படிக்கறான்னு. அது எந்த காலேஜ்ன்னு எங்களுக்கு தானே தெரியும்…” என்று நொடித்தாள் சங்கவி.

 

அந்நேரம் சதாசிவம் சாப்பிட வந்து அமர்ந்தார். “கவிம்மா உங்கண்ணன் அந்த எருமைமாடு என்னடா செஞ்சுட்டு இருக்கான்…” என்று கேட்க மாலினி அவரை முறைத்தார்.

 

‘எம்புள்ளையை எதுவும் சொல்லாம இவரால இருக்க முடியாதே’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு கணவருக்கு காலை டிபனை பரிமாறினார்.

 

“அதுவாப்பா அண்ணன் உரசி உரசி குளிச்சுக்கிட்டு இருக்குப்பா… ஊரெல்லாம் மேஞ்சுட்டு வந்தா அழுக்கு இருக்க தானேப்பா செய்யும்…” என்று அவள் தன்பங்குக்கு ஒன்றை சொல்லி தாயின் முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

 

அப்பாவும் பெண்ணும் அதற்க்கெல்லாம் அசருபவர்களா என்ன?? சிவரூபனுக்கு வெளியில் இவர்கள் பேசுவது நன்றாகவே கேட்டது இப்போது.

 

உள்ளிருந்தே கருவிக்கொண்டானவன். குளித்து முடித்து வெளியில் வந்தவன் அவசர அவசரமாய் தயாராகி வெளியில் வர அவன் தந்தையும் சங்கவியும் காலை உணவை முடித்திருந்தனர்.

 

‘இதுக்காக தானே நான் லேட்டா வந்தது’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு “அம்மா டிபன் வைங்க நேரமாச்சு” என்றிருந்தான்.

 

“தினமும் இந்த நேரத்துல வந்து டைமாச்சுன்னு குதிச்சா நான் என்னடா செய்வேன். இப்போ தான் ஒரு ஈடு இட்லி ஊத்தினது அப்பாவுக்கும் பொண்ணுக்கும் வைச்சேன்”

 

“உனக்கு எடுத்து வைச்சது தான் அவங்க சாப்பிட்டு போறாங்க. நான் இப்போ தான் அடுத்த ஈடுக்கு ஊத்தி வைச்சிருக்கேன். ஒரு பத்து நிமிஷம் இருய்யா வெந்திடும்” என்று கூற “அம்மா அப்போ எனக்கு தோசை ஊத்தி கொடும்மா ப்ளீஸ்” என்றிருந்தான் அவரின் செல்ல மகன்.

 

“உதவாக்கரை” என்ற குரல் அவன் பின்னால் கேட்டது.

திரும்பி பார்க்காமலே புரிந்தது அழைத்தது அவன் தந்தை என்று. கொஞ்சமும் அவரை சட்டை செய்யாமல் “அம்மா தோசை” என்றவனை என்ன செய்ய என்பது போல் பார்த்தார் அவர்.

 

“ஏன்டா எருமை எழுந்துக்கறதே லேட்டு… இதுல அவ காத்திருக்க சொன்னா உன்னால காத்திருக்க முடியாதோ!! அதென்னஅவளுக்கு எக்ஸ்ட்ராவா வேலை வைக்கிறது”

 

“உங்கண்ணன்சந்திரன் இப்படியா இருக்கான். உனக்கு பின்னாடி பிறந்தவஅவளுக்கு இருக்கற பொறுப்பு கூட உனக்கு கொஞ்சமும் இல்லை” என்று காலையிலேயே அர்ச்சனை தொடங்கிவிட்டார்.

 

அப்போது வெளியில் வந்தார் மாலினி. கணவரை பார்த்து “நீங்க இன்னும் கிளம்பலையா??”

 

“ஹ்ம்ம் வேண்டுதல் எனக்கு இன்னைக்கு அர்ச்சனை பண்ணாம போனா என் நாளு நல்லா இருக்காதுன்னு ஜோசியக்காரன் சொன்னான் அந்த வேண்டுதல்” என்றவர் மனைவியை முறைத்திருந்தார்.

 

“நான் பார்த்துக்கறேன் அவனை நீங்க கிளம்புங்க முதல்ல” என்று கணவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் அவர்.

 

“நீ செல்லம் கொடுத்து கொடுத்து தான் கெடுத்து வைச்சிருக்க, அது தான் பொறுப்பே இல்லாம ஊர் மேஞ்சுட்டு வருது” என்றவர்அவனின் மரியாதையை முற்றியும் தேய்த்திருந்தார்.

 

முணுமுணுத்துக்கொண்டே அவர் கடை சாவியைஎடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

 

சதாசிவத்திற்கு மூன்று மக்கள், முதலாமவன் சிவசந்திரன் படித்து முடித்துவிட்டு நல்ல கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறான்.

 

இரண்டாமவன்நம் நாயகன் சிவரூபன் படித்துக்கொண்டிருக்கிறார். எங்கு என்றெல்லாம் கேட்கக் கூடாது, அது பின்னால் வரும்.

 

மூன்றாமவள் இவர்களின் அருமை தங்கை சங்கவி. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். சதாசிவத்திற்குசொந்தமாய் மெக்கானிக் ஷெட் ஒன்று உள்ளது.

 

அதில் வரும் வருமானத்தில் தான் அவர் குடும்பம் ஓடியது. இந்த இரண்டு வருடமாய் தான் மூத்தவன் சந்திரனின் வருமானமும் சேர்ந்து அவர்கள் குடும்பம் கொஞ்சம் நன்றாய் ஓடுகிறது.

 

மாலினி கொஞ்சம் கெட்டிப்பானவர் என்பதால் அப்படி இப்படி என்று உருட்டி வேப்பம்பட்டில்சொந்தமாய்இடம்வாங்கி வீடும் கட்டி அங்கு குடியேறிவிட்டனர். சதாசிவத்தின் கடையும் அங்கு தான் உள்ளது.

 

“சிவா இன்னும் ஒரு தோசை போட்டுக்கோடா”

“இல்லைம்மா போதும்” என்றவன் தட்டை சிங்கில் போட்டு கையை கழுவிட்டு வெளியேறினான்.

 

தன் பேக்கை எடுத்து மாட்டியவன் “சரிம்மா நான் கிளம்பறேன்” என்றவனும் கிளம்ப மதிய உணவையும் கையில் ஐம்பது ரூபாயும் திணித்தார் அவன்அன்னை.

 

“அம்மான்னா அம்மா தான்” என்று கொஞ்சிவிட்டு வெளியில் வந்திருந்தவன் ரயில் நிலையம் நோக்கி நடையை கட்டினான்.

 

அவன் படிப்பது சென்னையில் அதனால் தினமும் ரயில் பயணம் தான். உற்சாகமாய் வெளியில் வந்தவன் தன் சைக்கிளில் ஏறி மிதிக்க அடுத்த பத்து நிமிடத்தில் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான்.

 

வழமையாய் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தவருக்கு புன்னகையை கொடுத்து கையசைத்து வந்தவன் அவன் நண்பர்கள் நோக்கிச் சென்றான்.

 

“என்னடா ட்ரைன் இன்னும் வரலையா??”

 

“ஆமாடா அரக்கோணத்துல கிளம்பும் போதே லேட்டா தான் கிளம்புச்சாம். நம்ம ஜான் போன் பண்ணியிருந்தான்” என்று சிவரூபனுக்கு பதில் கொடுத்தான் அவன் நண்பன்ஜெகதீஷ்

 

“டேய்ஜக்கு இந்த வருஷத்தோட நமக்கு படிப்பு முடியுது அடுத்து நாம என்னடா செய்யப் போறோம்” என்றான்.

“ஆமா நம்ம படிப்புக்கு ராயல் என்பீல்ட் கம்பெனிக்கு ஓனராவா ஆக முடியும். அந்த வண்டிக்கு சர்வீஸ் பாக்குற இஞ்சினியரா கூட ஆக முடியாது” என்று அவர்களின் பெருமையை ரயிலேற்றினான் நண்பன்.

 

“பக்கி அப்துல்கலாம் என்னடா சொல்லியிருக்கார்…”

 

“என்னா சொன்னாரு?? உன்கிட்ட மட்டும் ஸ்பெஷல்ஆ வந்து எதுவும் சொல்லிட்டு போனாரா”

 

“எருமை… எருமை…”

 

“ஏன்டா உங்க வீட்டில உன்னை திட்டுறதை இங்க வந்து என்னை திட்டி திருப்தி பட்டுக்கறியா”

 

“அடேய் ஜெக்கி ஒழுங்கா கேளு மச்சி சொல்றதை”

 

“சொல்லும்… சொல்லித் தொலையும்….”

 

“கனவு காணுங்கள்ன்னு சொல்லி இருக்காரா இல்லையா”

 

“ஆமா சொல்லி இருக்காரு அதுக்கென்ன??” என்று ஒரு பார்வை பார்த்தான் ஜெகதீஷ்.

 

“இன்றைய கனவு நாளைய நிஜம்…” என்று அவன் இன்னமும் பில்டப் கொடுக்க “டேய்சிவா அப்படியே ஒரு அப்பு அப்பிருவேன்… சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லி முடி” என்றான் மற்றவன் கடுப்பாய்.

 

“நாம ஏன்டா அந்த ராயல் என்பீல்ட் கம்பெனிக்கு முதலாளி ஆக ஆசைப்பட கூடாது” என்றவனை ஆவென்று வாய் பிளந்து பார்த்தான் ஜெக்கி.

 

“இன்னைக்கு உனக்கு என்னடா ஆச்சு…” என்ற ஜெகதீஷ் நம்பனை மேலிருந்து கீழாய் ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

 

“திருந்திட்டியாடா?? ஏன்டா??” என்று வேறு கேட்டு வைத்தான்.

 

“அடப்பக்கி கொஞ்சம் முழுசா பேசவிடு அப்படி ஒரு கனவு தான் எங்கப்பாக்கும் இருந்துச்சு. அப்படி முதலாளி ஆக ஆசைப்பட்டு தான் எங்கப்பா இப்போ மெக்கானிக்ஷெட் வைச்சிருக்காரு”

 

“எருமை… எருமை இதுக்கு தான் இம்புட்டு அலப்பரையை கூட்டினியா… உங்கப்பா கடைய பார்த்துக்க போறேன்னு சொல்றதை விட்டு கொஞ்ச நேரத்தில பீதியை கிளப்பிவிட்டுட்ட”

 

“அவரு கடையை எல்லாம் நான் பார்த்துக்க முடியாது. ஒரு வேளை அவரு கடையை எம்பேருல எழுதி வைச்சா பார்க்கலாம்… நமக்கு வேற மெக்கானிக் ஷெட் கிடைக்காமலா போயிரும்” என்றான்சிவா தன் சட்டை காலரை தூக்கிவிட்டவாறே.

 

“சரி சரி வாட்ரைன் வருது” என்று ஜெகதீஷ் சொல்ல இருவருமாய் வேகமாய் ஏறி எல்லோரும் உள்ளே சென்றதும் எப்போதும் போல் வாசலை அடைத்து நின்றுக் கொண்டனர்.

____________________

 

“பாவை கழுதை காலேஜ் போக நேரமாச்சுன்னு இல்லாம மசமசன்னு இங்க நின்னு வானத்தை அண்ணாந்து பார்த்து பல்லுவிளக்கிட்டு நிக்குற”

 

“உன் சோட்டு பிள்ளைக எல்லாம் எப்படி இருக்கு பாரு… உங்க கூட தானே படிக்குற அந்த வனஜா, அவளைப் பாரு அங்க…”

 

“அவ அம்மாக்கு தண்ணி சேர்ந்து கொடுக்குறா… நீ எனக்கு ஒரு வேலையும் பார்க்க வேணாம் தாயி… உன் வேலையை மட்டும் பார்த்திட்டு நேரமா கிளம்பி போகலாம்ல” என்று தன் போக்கில் அவர் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருக்க நம் நாயகி அதையெல்லாம் சட்டையே செய்யாமல் வானம் பார்த்து பல் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் தினசரிகளில் இது ஒன்று. அவளுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. காலை எழுந்ததும் வெட்ட வெளியை வேடிக்கை பார்த்துக் கொண்டு பல் விளக்கி அங்கேயே நின்று காபியும் அருந்துவது அவளுக்கு மிகப் பிடிக்கும்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் அவள் ட்ரைனை பிடிக்க வேண்டும். அந்த கவலை எல்லாம் இல்லாமல் மெதுவாகவே தன்வேலைகளை செய்தாள்.

 

காலை உணவை அவள் அன்னை அவளுக்கு கட்டி வைத்துவிட்டார்.அது தான் முதல் நாளே சொல்லிவிட்டாளே ரயிலில் சென்று சாப்பிட்டு கொள்வேன் என்று அதனால் அதை எடுத்து அவள் பேகின் அருகில் வைத்தார்.

 

குளித்து முடித்து வந்தவள் தலை சீவி தன் பையின் அருகில் இருந்த டிபன் பாக்சை எடுத்து பையில் வைத்துக்கொண்டு அன்னையிடம் விடைபெற்று கிளம்பிவிட்டாள்.

 

அவள் வீட்டில் இருந்து வெளியில் வரவும் அடுத்த வீட்டில் இருந்த அவள் தோழி வனஜாவும் உடன் சேர்ந்துக்கொள்ள அடுத்த ஐந்தே நிமிடத்தில் ஸ்டேஷனுக்குள் நுழைந்திருந்தனர் இருவரும்.

 

அங்கு இவர்களின் மற்றுமொரு தோழி செல்வியும் சேர்ந்துக்கொள்ள அங்கு வந்த நின்ற ரயிலில் அவர்கள் மூவரும் ஏறினர்.

 

அன்றுரயிலில் நல்ல கூட்டமென்பதால் அவர்கள் வழமையாய் ஏறும் கம்பார்ட்மெண்டில் ஏறாமல் அதற்கு அடுத்து இருந்ததில் ஏறி இருந்தனர்.

 

நம் ஹீரோவும் அவரின் தோழர் கூட்டமும் அதில் தான் தொற்றிக் கொண்டிருந்தனர். “டேய் மச்சி அங்க பாரேன் நம்மளை மாதிரியே அவங்களும்…” என்று ராகமிழுத்தான் ஜெகதீஷ்.

 

“புதுசா இருக்காங்க மச்சி… இதுவரைக்கும் பார்த்ததில்லையே!!” என்று சிவா கேட்க “ஆமா மச்சி புதுசா தான் இருக்கு” என்றான் நண்பனும்.

 

“ஏன்டி வனஜா இது நாம வழக்கமா போற ட்ரைன் மாதிரி தெரியலையே!!” என்று சந்தேகமாய் பார்த்தவாறே தன் தோழிகளுடன் ஏறி இருந்தாள் பாவை.

 

“ஆமாடி இன்னைக்குட்ரைன் லேட் போல நாம போகணும்ன்னு நினைச்ச ட்ரைன் வர்றதுக்கு இன்னும் லேட் ஆகும். இந்த ட்ரைன் நாம வர்றதுக்கு முன்னாடியே வந்து போற ட்ரைன்டி” என்று பதில் சொன்னது செல்வி.

 

“அடியேய் இதுல வர்ற பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களே… ஏன்டி செல்வி இந்த இன்பார்மேஷன் எல்லாம் ஒழுங்கா கலெக்ட் பண்ண மாட்டியா நீ!!” என்றதுபாவையே தான்.

 

“அவ எப்படி சொல்லுவாஅவ ஆளு அந்த செங்குரங்கு நாம அடுத்தட்ரைன்ல தானே வருவான்” என்று வனஜா சொல்ல செல்வி அவளை அடிக்க கையை ஓங்கினாள்.

 

“என் ஆளு உங்களுக்கு செங்குரங்கா?? கொழுப்பாடி உங்களுக்கு”

 

“ஆமாடி இவ சொன்னது தப்பு தான் அவன் செங்குரங்கு இல்லை கருங்குரங்கு” என்று சொல்லி செல்வியிடம் பாவையும்இரண்டு அடிகள் பெற்றுக் கொண்டாள்.

“அப்புறம் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் டே!! அங்க எப்படி இருக்குமோ என்னவோ!!” என்று பாவை சொல்ல“நீங்க எந்த காலேஜ்??” என்றிருந்தான் ஜெகதீஷ்.

 

அவனை திரும்பி பார்த்து முறைத்தவளோ “ஹ்ம்ம் செத்த காலேஜ்” என்றாள்.

 

“ஓ!! நீங்க அந்த காலேஜா!! டேய் மச்சான் இவங்க எல்லாம் மியூசியம்ல இருக்கற அரிய வகை உயிரினங்கலாம்டா எப்படியோ இங்க தப்பிச்சு வந்திட்டுங்க போல” என்று கலாய்த்தான் அவன்.

 

“எருமை!! எருமை!!” என்றாள் பாவை.

 

“உங்க பேரு அதானா இனிமே நாங்க அப்படியே கூப்பிடுறோம் எருமை தோழியே!!” என்று இப்போது உடன் நக்கலடித்தவன் சிவரூபன்.

 

“பாவை கொஞ்சம் வாயை மூடுடி!! அதுககிட்ட எல்லாம் எதுக்கு பேசிக்கிட்டு இருக்க” என்று தோழியர் இருவரும் அவளை அடக்க அவளும் அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டாள்.

 

சிவாவோ சும்மாயில்லாமல் “என்ன பாவை உந்தன் பார்வை…” என்று வேண்டுமென்றே பாடவும் அவள் அவனை முறைக்கவும் தோழிகள் அவளை இழுத்துக் கொண்டு உள்ளே விரைந்தனர்.

 

அவர்கள் மூவரும் உள்ளே செல்லவும் அடுத்து வந்த ஸ்டேஷனில் இரண்டுஇருக்கைகள் காலியாகவும் பாவையும் செல்வியும் அமர்ந்தனர்.பாவை அவசர அவசரமாய் தன் காலை உணவை அங்கேயே உண்டாள். அடுத்த அரைமணியில் வண்டி சென்ட்ரல் ஸ்டேஷன்வந்திருக்க அனைவரும் இறங்கினர்.

 

வெளியில் வந்து பஸ் பிடித்து அவர்கள் கல்லூரி நுழைய அப்போது தான் கவனித்தனர், ரயிலில்அவர்களை கிண்டல் செய்த அந்த இருவரும் நுழைவதை.

 

“நீங்களும் இங்க தானா!! புதுசா ஜாயின் பண்ணி இருக்கீங்களா!! அதான் இம்புட்டு நாளா எங்க கண்ணுல சிக்கலை!! இனிமே இருக்குடி உங்களுக்கு” என்றான் ஜெகதீஷ்.

 

“நான்அப்போவே நினைச்சேன் மச்சி யூனிபார்ம் போட்டிருக்காளுக நம்ம காலேஜா இருக்கும்ன்னு நினைச்சேன், அதே தான்… சிக்குனாளுக இனி வைச்சு செய்வோம்டா” என்று சிவா விசிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

 

“என்னைப் பத்தி தெரியாம உளறிட்டு போகுதுக பக்கிக!! யாரு யாரை வைச்சு செய்யப் போறான்னு போக போக பாருங்கடா!!” என்றுசொன்ன பாவை தோழிகளுடன் தங்கள் வகுப்பறையை தேடி கண்டுப்பிடித்து உள்ளே நுழைந்திருந்தாள்….

 

 

Advertisement