“டிரஸ் மாத்துன அந்த நேரத்துல சரியா கரென்ட் வேற கட்டாகியிருக்கு… அப்போ யாரோ அவளை பின்னாடியிருந்துஹக் பண்ணிட்டாங்களாம். அடுத்த ரூம்ல தான் பவள் டிரஸ் மாத்த போயிருந்தான்…”
“அவ அழுதுட்டே வெளிய வரும் போது அந்த பையனும் இவளுக்கு முன்னாடி ஓடியிருக்கான். அதே நேரம் ஏதோசத்தம் கேட்டு பவள் அடுத்த ரூம்ல இருந்து வெளிய வந்திருக்கான்”
“அவளை கட்டிப்பிடிச்சவன் எப்படியோ எஸ்கேப் ஆகிட்டான். ஜான்சிபவள் தான் அப்படி செஞ்சுட்டான்னு நினைச்சு கம்பிளைன்ட் பண்ணியிருக்கா…”
“ஜான்சி தானே கம்பிளைன்ட் பண்ணியிருக்கணும், அந்த இன்னொரு பொண்ணு ஏன்??”
“இல்லை ராம் காலேஜ் பர்ஸ்ட் டே அன்னைக்கு அந்த பொண்ணை கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டோம். அப்புறமும் சின்ன சின்ன ப்ரோப்ளம் அந்த பொண்ணோட”
“அதை மனசுல வைச்சுட்டு அவளும் கூட சேர்ந்து கையெழுத்து போட்டிருக்கா பவள் சரியில்லைங்கற மாதிரி… அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூம் மேட்ஸ்வேற”
“சம்பவம் நடந்த அன்னைக்கு ஜான்சி அழுதிட்டே ரூமுக்கு போனவ, சூசைட் பண்ண ட்ரை பண்ணியிருக்கா… பிரியாக்கு அப்போ தான் விஷயம் தெரிஞ்சிருக்கு” என்று சொல்லி முடித்தான் ராகேஷ்.
“யார் பண்ணியிருப்பாங்கன்னு உனக்கு எதுவும் ஐடியா இருக்கா ராக்கி??” என்று கேள்வி வைத்தான் ராம்.
“தெரியலை ராம்… ஆனா இன்னொரு விஷயம் பவள் டிரஸ் மாத்த போன ரூம்ல தான்நம்ம சைதன்யா, வம்சி, வெங்கடேஷ்பேக்ஸ் எல்லாம் இருந்துச்சு”
“கேட்டு பார்த்தா உனக்கு தெரியும்… சரி விடு நீ என்ன ஏதுன்னு விசாரி, நானும் என் சைடுல இருந்து என்ன பண்ண முடியும் பார்க்கிறேன்” என்றுவிட்டு ராம் கிளம்பிவிட்டான்.
அடுத்த இரண்டு நாளில் அதை செய்தது வம்சி என்பது நிரூப்பிக்கப்பட பிரியன் விடுவிக்கப்பட்டான்.
வம்சி கையும் களவுமாகவே பிடிப்பட்டிருந்தான் அதுவும் கல்லூரி நிர்வாகத்திடமே. வம்சி எப்போதும் தன்னை நல்லவன் என்று காட்டிக்கொள்ளும் ரகம்.
அவன் வகுப்பு பெண்களிடத்தில் எந்த வம்பு தும்பும் வைத்துக் கொள்ளாதவன். ஆனா உண்மையிலேயே அவன் பெண்கள் விஷயத்தில் சற்று மோசமான ரகமே!!
மற்ற துறை பெண்களிடத்தில் தான் தன் கைவரிசையை அவன் காட்டுவது. பார்ப்பவர்களுக்கு அவன் மிக நல்லவன் போன்றே தோன்றும். ஏன் அவன் வகுப்புபெண்கள் அனைவரும் அவன் ஒரு ஜெம் என்றே சொல்லுவர்.
இதற்கு முன்பு நடந்த கல்லூரி விழாக்களில் எல்லாம் கூட இதே போல அவன் தன் வேலையை காட்டியதுண்டு. பெரும்பாலானவர்களுக்கு செய்தது யாரென்று தெரியாது.
துணிந்துகம்பிளைன்ட் செய்யவும் பயம். அதனால் இவ்வளவு நாட்கள் அவன் தப்பித்து வந்திருந்தான்.
ஸ்போர்ட்ஸ் டே அன்று ஜான்சியின் அறைக்கு அடுத்திருந்த அறைக்கு உடை மாற்ற முதலில் வந்திருந்த வம்சி ஜான்சி அடுத்த அறைக்குள் நுழையசெல்லும் முன் அந்த அறைக்குள் புகுந்திருந்தான்.
உள்ளே வந்தவள் டேபிளுக்கு அடியில் சென்று ஒளிந்திருந்த அவனை கண்டுக்கொண்டிருக்கவில்லை. கதவை அடைத்துவிட்டு அவள் உடையை மாற்றும் வேலையை கவனிக்க இவன் நைசாக எழுந்துச் சென்று விளக்கணைத்திருந்தான்.
அதன் பின்பு நடந்த களேபரத்தில் தான் அவள் பிரியனை தவறாக எண்ணியிருந்தாள். ஜான்சி தற்கொலைக்கு முயன்றிருக்காவிட்டால் விஷயம் வெளியில் தெரிந்திருக்காது.
அவள்தூக்க மாத்திரையை விழுங்கியிருக்க விஷயம் ஹாஸ்டல் வார்டனுக்கு தெரிந்து அவள் பெற்றோர் வரை சென்றிருக்க அதன் பின் தான் கம்பிளைன்ட் செய்திருந்தனர்.
ஜான்சியை அவள் பெற்றோர் சொந்த ஊருக்கே அழைத்து சென்றிருந்தனர்.
சம்பவம் நடந்து அதில் மாட்டாமல் இருந்ததில் வம்சிக்கு இன்னமும் குளிரெடுத்து போயிருந்தது. அவன் செய்த செயலுக்கு தான் பிரியன் உள்ளே சென்றுவிட்டானே, உள்ளுக்குள் கொஞ்சம் சந்தோசம் தான் வம்சிக்கு.
அடுத்து இரண்டு நாளில் கல்லூரியில் செமினார் ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்த வம்சிக்கு அடுத்த வாய்ப்பாக அவன் கல்லூரி பெண்ணொருத்தி தனியாக அவன் வசம் சிக்கினாள்.
அதில் நடந்த கலாட்டாவில் தான் அவன் நிர்வாகத்திடமே சிக்கியிருந்தான். அந்த பெண் அவன் கல்லூரியில் படிக்கும் பெண்ணே அல்ல, செமினாருக்காக வேறு காலேஜில் இருந்து வந்த பெண்ணவள்.
அவள் நேராக நிர்வாகத்திடமே சென்று கம்பிளைன்ட் செய்ய வம்சி வசமாக சிக்கியிருந்தான். நிர்வாகத்திற்கு ஸ்போர்ட்ஸ் டே அன்று நடந்தது கூட இவன் கைங்கர்யமாக இருக்குமோ என்ற யோசனை.
அதை மெய்பிப்பது போல சைதன்யாவின் வாக்கு மூலம் அன்றே கிடைத்தது. சைதன்யா தானாய் வந்தானோ அல்லது யார் சொல்லி வந்தானோ ஸ்போர்ட்ஸ் டே அன்றுவம்சி உடை மாற்ற அறைக்கு சென்றதை தான் பார்த்ததாகவும் அவன் சென்ற சில மணித்துளிக்கு பின் தான் பிரியன் சென்றதாகவும் சொல்லவும் வம்சியிடம் விசாரணை நடந்தது.
வம்சியும் தான் தான் செய்தது என்று ஒப்புக்கொள்ள பிரியன் வெளியில் வந்திருந்தான். அவனைடிஸ்மிஸ் கேன்சல் செய்து அவனை மீண்டும் சேர்த்திருந்தனர்.
கல்லூரி நிர்வாகம் ஜான்சி வீட்டினரிடம் நடந்த விஷயத்தை தெளிவுப்படுத்தியிருன்தனர், வதனாவை கூப்பிட்டுகண்டித்து அனுப்பினர்.
விஷயம் என்னவென்று முழுதாய் தெரியாமல் அவளும் சேர்ந்து கம்பிளைன்ட் பண்ணச் சென்றது தவறு என்று கன்னாபின்னாவென்று அவளை திட்டி எச்சரித்தும் அனுப்பினர்.
வெளியே வந்திருந்த பிரியனுக்கு முதலில் கல்லூரிக்கு செல்லவே பிடிக்கவில்லை. கல்லூரி முழுக்க அவன் பேச்சாய் தான் இருந்திருக்கும் என்பதை அறிவான்.
பின் இதற்காகவெல்லாம் தான் ஏன் கவலைப்படவேண்டும் என்ற எண்ணம் வந்து ஒட்டிக்கொண்டது.
தவறு செய்தவனே தைரியமாய் கல்லூரிக்கு வந்து போயிருக்கும் போது தவறே செய்யாமல் நான் ஏன் தலை குனிய வேண்டும் என்ற எண்ணமே அவனை மீண்டும் கல்லூரிக்கு வரவைத்திருந்தது.
மறுநாள் வழக்கம் போல கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். எங்கிருந்தோ ஓடி வந்த ராகேஷ் “பவள்” என்றவாறே அவனை அணைத்துக் கொண்டான்.
“என்னடா பண்ணறே ராக்கி?? நான் என்னமோ இன்னைக்கு தான் காலேஜ் வர்ற மாதிரி…” என்று சிரித்தான் பிரியன்.
“நீ என்ன வேணா சொல்லிக்கோ எனக்கு இப்போ தான் ஹாப்பியா இருக்கு” என்றான் ராகேஷ்.
“டேய் நீ நேத்தே காலேஜ் வருவேன்னு எதிர்பார்த்தேன் தெரியுமா… நீ தான் வர முடியாதுன்னு சொல்லிட்ட, இன்னிக்காச்சும் வந்தியே… பவள் நீ வந்ததும் ப்ரின்சி உன்னை வந்து பார்க்கச் சொன்னார்டா”
“அங்க போயிட்டு நீ கிளாஸ்க்கு வந்திடு” என்ற ராகேஷுக்கு தலையாட்டியவன் நேரே பிரின்சிபால் அறையை நோக்கி நடந்தான்.
நடந்த விஷயத்திற்காக நிர்வாகம் சார்பாக அவனிடம் மன்னிப்பு கோரினார் அவர். பின் அவனை வகுப்புக்கு செல்லுமாறு பணிக்க அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் வகுப்புக்கு செல்லும் வழியில் இருந்த மரத்தடியின் கீழே இருந்த பெஞ்சில் யாரோஒரு பெண்அழுதுக்கொண்டிருந்தாள். அவள் யாரோவல்ல என்பது அவளருகே நெருங்கி வரும் போதே அவனுக்கு புரிந்து போனது.
வதனா தான் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். அவளை கடந்து செல்ல முடியாமல் மனம் அவனை அங்கேயே இருத்தி வைக்க புத்தியோ எல்லாம் இவளால் தான் கடந்து விடு என்று அறிவுறுத்தியது.
திரும்பி பார்த்தால் தானே என்னவென்று கேட்கத் தோன்றும் என்று எண்ணியவன் பார்வையை வேறு புறம் திருப்பி அவளை கடந்து செல்ல “ஒரு நிமிஷம்” என்ற குரல் அவனை தேக்கியது.
மெதுவாய் அவன் திரும்பி பார்க்க அவள் இப்போது அழுது வீங்கிய முகத்துடன் அவனை நோக்கி எழுந்து நின்றிருந்தாள்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று உடைந்த குரலில்சொல்லியவளிடம் மறுத்துப் பேச தோன்றாமல் அவள் முன் சென்று நின்றான்.
“சொல்லு”
“உங்களைப் பத்தி சரியா தெரிஞ்சுக்காம நானும் சேர்ந்து கம்பிளைன்ட்ல கையெழுத்து போட்டிருக்க கூடாது. சாரி கேக்குறது ரொம்பவே அபத்தம் தான், ஆனாலும் என்னை மன்னிச்சுடுங்க” என்று சொல்லி முடிக்கும் போதே கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் அதற்கு பதிலேதும் சொல்லாமல் “எதுக்கு இப்போ அழறே??” என்றான்.
“ஒண்ணுமில்லை” என்று அவள் சொன்னதிலேயே ஆயிரம் விஷயம் உள்ளதென்று தோன்ற “என்னன்னு சொல்லு??” என்றவன் அந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
“உட்காரு…” என்று அவளிடமும் சொன்னான்.
அவள் எதுவும் பேசாமல் இருக்க “உன்னை கூப்பிட்டு வார்ன் பண்ணாங்களா… அதுக்கு தான் அழறியா??”
“ஹ்ம்ம்…”
“அதுக்காக எல்லாம் யாராச்சும் அழுவாங்களா என்ன…”
“இல்லை அது… அது வந்து ஒண்ணுமில்லை” என்றாள்.
“என்னன்னு சொல்லு?? வீட்டில இருந்து பேரன்ட்ஸ் கூட்டிட்டு வரச்சொன்னாங்களா??”
“யாரும் இருந்தா தானே கூட்டிட்டு வரச் சொல்லுவாங்க…” என்ற அவள் பதிலில் ஏதோ சுருக்கென்றது அவனுக்கு.
அதைஉறுதிப்படுத்தும் பொருட்டு “அவங்க வேற ஊர்ல இருக்காங்களா??”
“யாருமே இல்லை எனக்கு… ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கிறேன்… நகரில இருக்கறப்ரியபாலாமழலைகள்இல்லம்தான் என்னை வளர்ந்தது எல்லாம்…அங்க டிப்ளமோ வரைக்கும் படிக்க வைச்சாங்க… எனக்கு மேல படிக்க ஆசை இருந்துச்சு… ஒருநல்ல மனுஷன் எனக்கு ஸ்பான்சர் பண்ணதுனால தான் இங்க வந்து படிக்கறேன்”
“என்னோட மார்க்ஸ்க்கு இங்க சீட் கிடைச்சிருச்சு… ஹாஸ்டல், காலேஜ் பீஸ் மத்த எல்லாம் அவர் தான் செய்யறார்”
“அதை சொல்லி தான் என்னை பிரின்சிபால் சத்தம் போட்டாங்க…” என்று மேலே சொல்ல வந்தவளுக்கு தன் நிலை இன்னும் அழுகையை கூட்ட கஷ்டப்பட்டு விம்மலை அடக்கினாள்.
தான் ஏன் அவனிடம் இதையெல்லாம் சொல்கிறோம் என்று தோன்றாமல் அவன் கேட்டதும் அனைத்தும் சொல்லி முடித்திருந்தாள் அவள்.அழுபவளை அப்படியேதன் மீது சாய்த்து ஆறுதல் சொல்ல அவன் கைகள் பரபரத்தது.
“ப்ளீஸ் அழாதே வதனா… நீ அழறது பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நீ எதையும் வேணும்ன்னு செய்யலையே… சார் சொன்னதுக்காக எல்லாம் நீ பீல் பண்ணாதே… நீபோய் நல்லா படி, நல்ல வேலைக்கு போ”
“தொட்டதுக்கும் அழுதா உனக்குள்ள கான்பிடன்ஸ் போய்டும். நீ உங்க இல்லத்துல இருக்கவங்களுக்கு ஒரு முன்னோடியா இருக்க வேணாமா” என்று அவன் இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்னு சாரி சொல்ல வந்தா நீங்க போய் எனக்கு சமாதானம்சொல்றீங்க… உங்களை போய் சரியா புரிஞ்சுக்காம விட்டுட்டேனே” என்று மனதார மீண்டுமொருமுறை அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
அதுவரை பேசியது போதும் எழுந்து சென்றுவிட வேண்டும் என்று தோன்றியவனுக்கு மனதில் இருந்ததை சொல்லாமல் போக முடியவில்லை.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்…” என்றுவிட்டு அவன் இடைவெளி விட அதிர்ந்து நிமிர்ந்தவள் அவனை பார்த்து விழித்தாள்.
“தெரியலை, முதல் நாள் பார்க்கும் போதே ஏதோவிதத்துல நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டே!! ஒரு வேளை அன்னைக்கு நீ என்கிட்ட காட்டின அலட்சியம் கூட என்னை இம்ப்ரெஸ் பண்ணியிருக்கலாம்”
“நான் பொண்ணுங்க கூட பேசுவேன், கலாட்டா பண்ணுவேன், அவங்க கூட பழக ஆரம்பிச்சுட்டா என்னோட நெருங்கிய தோழமையா தான் அவங்களை நினைப்பேன்”
“உன்கிட்ட அன்னைக்கு திரும்ப பேச முடியாம எல்லாம் இல்லை. உன்னைவிட அதிகம் பேரு போடான்னு சொல்லிட்டு போனவங்ககிட்ட எல்லாம் திரும்ப போய் பேசி பிரண்ட்ஷிப் ஆகியிருக்கேன்”
“உன்கிட்ட மட்டும் தான் நான் திரும்ப வந்து பேசலை. ஏன்னு தெரியலை, ஆனா பல நாள் உன்னைப் பத்தி நினைச்சிருக்கேன்…”
“ராக்கி உன்னை விரும்பறேன்னு சொன்னப்போ அன்னைக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு அவன் மேலே…” என்றுஅவன் சொல்லவும் இன்னமும் திகைப்பு அவளுக்கு.‘இது எப்போ??’ என்பதாய் இருந்தது அவள் பார்வை.
“அவன்கிட்ட இது சரி வராதுன்னு எடுத்து சொல்லி புரிய வைச்சேன். அப்புறம் தான் அவன் உன்கிட்ட அதைப்பத்தி பேசலை” என்று மீண்டுமொரு இடைவெளி விட்டான் அவன்.
“இப்போக்கூட உன் மேல எனக்கு கோபமே வரலை… நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறே?? எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லணும்ன்னு தோணிச்சு சொல்லிட்டேன்”
“உனக்கு யாருமேயில்லைன்னு எப்பவும் நினைக்க வேண்டாம், நான் எப்பவும் இருப்பேன். அந்த எண்ணம் உனக்கும் என்னைக்காச்சும் தோணுச்சுன்னாசொல்லு” என்றுவிட்டு பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து சென்றுவிட்டான் பிரியன்.
வதனாவிற்கு அவன் தன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னதே மனதிற்குள்ஓட ஆரம்பித்தது. நீயும் என்னை காதலித்தே தீர வேண்டும் என்றெல்லாம் வசனம் பேசாமல் அவன் மனதில் உள்ளதை சொல்லிச் சென்ற விதம் அவளுக்கு பிடித்தது அக்கணம்.
அவர்கள் நாட்கள் வழக்கம் போல் கடந்து செல்ல ஆரம்பித்தது. தினமும் அவர்கள் பார்த்துக் கொள்ளும் வழக்கமெல்லாம் இல்லை தான்.ஆனால் அப்படி அவளை கடந்து செல்லும் தருணம் பிரியனின் விழிகள் அவளைவிட்டு இங்குமங்கும் நகராது பின் தொடரும் அவள் சென்று மறையும் வரை.
அருகில் யார் இருந்தாலும் இல்லையென்றாலும் சற்றும் கூச்சப்படவோ வெட்கப்படவோ எல்லாம் செய்ய மாட்டான். அவன் பேராசிரியரே நின்றாலும் நின்று நிதானமாய் அவளை அவன் கண்கள் பருகும்.
அவளுக்கு தான் அவன் பார்வையில் முகம் சிவந்து போகும். இன்னமும் அவள் மனம் அவனைப்பற்றி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
அவனும் அதற்கெல்லாம் கவலை கொள்ளவில்லை. நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் என் விழியும் மனமும் உன்னையே தொடரும் என்பதான பார்வையை கொடுப்பான் அவன்…